பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Selvasivagurunathan m, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:23, 25 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகளும் பாராட்டுகளும்[தொகு]

அருமையான தங்கள் கட்டுரைகளைக் கண்டு மகிழ்ந்தேன். தங்கள் பணி தொடர என் வாழ்த்துகள். ஏதேனும் ஐயமிருப்பின் என்னைக் கேளுங்கள், என்னால் இயன்றவரை உதவுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 12:58, 3 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தங்கள் தொடர் பங்களிப்புகள் கண்டு மகிழ்கிறேன். தங்கள் விக்கிப்பணி சிறக்க வாழ்த்துகிறேன். அன்புடன்..--இரவி 16:33, 4 பெப்ரவரி 2012 (UTC)

இயந்திரவியல், தானுந்து தலைப்புகள் பட்டியல்[தொகு]

நீங்கல் சோடாபாட்டிலின் பேச்சு பக்கத்தில் கூறியதை பார்த்தேன். உங்கள் துறை சார் கட்டுரைகளை எழுதி உதவுமாறு வேண்டுகிறேன்.

மேலும் ஏதாவது பேச்சுப்பககத்தில் மட்டும் நீங்கள் கருத்துரைக்க விரும்பினால் உங்கள் கையேழுத்தை இட வேண்டுகிறேன். --தென்காசி சுப்பிரமணியன் 16:04, 7 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நல்லது. உங்களின் ஆலோசனையின்படி செய்கிறேன். உங்களின் கோரிக்கையின்படி தேவைப்படும் கட்டுரைகளை எழுத முனைகிறேன். --Selvasivagurunathan m 06:14, 8 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அருமையான கட்டுரைகள் எழுதி அசத்துகிற உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 12:38, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Selvasivagurunathan மேலும் பல பதக்கங்கள் பெற வாழ்த்துகள் --P.M.Puniyameen 12:49, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி! என் மதிப்பிற்குரிய நண்பர்களாகிய உங்களின் உதவிகள் எனக்கு பெரிய துணை. உங்கள் அனைவரின் அயராத உழைப்பு என்னை வியக்க வைத்து என்னை ஊக்குவிக்கவும் செய்கின்றன. --Selvasivagurunathan mஉரையாடுக

அன்புள்ள செல்வ சிவகுருநாதன், மனந்திறந்த தங்கள் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றிகள்.என்றும் அன்புடன்--P.M.Puniyameen 01:07, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வணக்கம் செல்வசிவகுருநாதன். பயனர் பக்கத்தில் உங்கள் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். குறுகிய காலத்தில் நிறைய நல்ல பங்களிப்புகளைத் தந்துள்ளீர்கள். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி--இரவி 12:07, 3 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இயந்திரவியல் கட்டுரை தொகுத்தல்[தொகு]

என்னுடன் இணைந்து இயந்திரவியல் கட்டுரைகளை தொகுக்க உள்ளதற்கு மிக்க நன்றி. உங்களுக்கு தெரிந்த இயந்திரவியல் கட்டுரை தலைப்பை தரவும்.

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் பொறியியல் -ஐப் பார்க்க வேண்டுகிறேன். கடைசியில் உள்ள ஆங்கில விக்கி இணைப்புகளிலும் பல தலைப்புக்ள் உள்ளன.--செல்வா 04:59, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மணல் தொட்டி[தொகு]

நீங்கள் கேட்ட மணல்தொட்டி இங்கு உள்ளது. நீங்கள் பயனர் சோடாபாட்டிலிடம் கேட்டதைப் பார்த்தே நானும் மணல் தொட்டி ஆரம்பித்தேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:57, 3 பெப்ரவரி 2012 (UTC)

தங்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களை இங்கே படியெடுத்து (copy) ஒட்டலாம். விக்கிப்பீடியாவில் எந்தப் பக்கத்தையும் யாரும் தொகுக்கலாம் என்றாலும் பிற பயனர்களின் பயனர் பக்கங்களை மட்டும் தொகுப்பதில்லை என்பதை தமிழ்விக்கிப்பீடியாவில் அனைவரும் கடைப்பிடிக்கிறோம். தாங்கள் கேட்டுக் கொண்டபடியால் தங்கள் பயனர் பக்கத்தைத் தொகுத்திருக்கிறேன். நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 09:02, 3 பெப்ரவரி 2012 (UTC)

பயனர் வெளி[தொகு]

நீங்கள் சோடாபாட்டிலின் பக்கத்தில் கீழ்க்காணும் கேள்வியைக் கேட்டிருந்ததைப் பார்த்தேன்.

'பயனர்வெளி' என்பதன் அர்த்தம் என்ன? தமிழ் wiktionary 'யிலும் விளக்கம் இல்லை. (நீங்கள் பதிலளித்தால் அங்கும் இற்றைபடுத்துகிறேன்)--Selvasivagurunathan mஉரையாடுக
உங்கள் பயனர் பக்கம் பயனர்:Selvasivagurunathan m, பயனர் பேச்சு:Selvasivagurunathan m என்பது உங்கள் பயனர் பக்கத்தின் பேச்சுப்பக்கம். நீங்கள் விரும்பினால் பயனர்:Selvasivagurunathan m/முயற்சி-1 என்று பெயரிட்டு அங்கே "மணல்தொட்டி" போல உங்கள் சோதனைகளைச் செய்து பார்க்கலாம்.பயனருக்கான பக்கமும் அதன் உள்பக்கங்களும், பயனர்வெளி--செல்வா 11:37, 3 பெப்ரவரி 2012 (UTC)
Wikipedia:Namespace என்னும் பக்கத்ததப் பாருங்கள்.--செல்வா 11:42, 3 பெப்ரவரி 2012 (UTC)
ஓ! நீங்கள் என் பயனர் பேச்சுப் பக்கத்தில் இட்டிருந்த நன்றி நவிலலுக்கு மகிழ்ச்சி! ஆம் விக்கிப்பீடியா ஒரு பெருங்கடல் போன்றது. அறிவுச் செய்திகள், கட்டுரைகள் போக,மிக ஏராளமான துணைக்கருவிகள், வசதிகள், கொள்கைகள், நிரல்கள், என்று என்னெனமோ உள்ளன. ஒவ்வொன்றும் யார் யாரோ தன்னலம் இல்லாமல் நம் அனைவரின் பொதுப் பயன்பாட்டுக்காகப் பகிர்ந்து வைத்ததே! --செல்வா 01:45, 4 பெப்ரவரி 2012 (UTC)

வணக்கம் தாங்கள் இரா முத்துசாமி அவர்களுக்கு உருவாக்கியதைப் போன்ற வார்ப்புரு என் பெயரில் உருவாக்கித் தந்து உதவ முடியுமா? --Parvathisri 16:59, 19 பெப்ரவரி 2012 (UTC)

ஐயா மிக மிக மிக நன்றி. ஒரு (பல)வேண்டுகோள்.

  • இந்த icon-லிருந்து (முகப்பு) பயனர் பக்கம் சொடுக்கினால் வருவதில்லை.
  • மேலும் முகப்பு பக்கம் உருவாக்க முடியவில்லை.
  • படிமங்களுக்கு இணைப்பை எவ்வாறு தருவது எனத் தெரியவில்லை.
  • அதற்கும் தாங்களே உதவிடுங்கள்.--Parvathisri 06:58, 20 பெப்ரவரி 2012 (UTC)

உங்களுக்கு ஏற்பட்ட ஐயம் எனக்கும் ஒருமுறை வந்தது. என் பேச்சுப்பக்கத்தில் இருந்து கொண்டே என் பேச்சுப் பக்கத்திற்கான இணைப்பு செயல்படவில்லையே என குழம்பிக் கொண்டிருந்தேன். பிறகு தான் மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து கொண்டே மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழி கேட்கிறோமே என உணர்ந்தேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:05, 20 பெப்ரவரி 2012 (UTC)

பார்வதிஸ்ரீ,
இதில் முதல் 2 'மிக' நன்றி ... கார்த்திகேயனுக்கு உரித்தானது! அவர்தான் எனக்கு உருவாக்கித் தந்தார். நான் உங்களுக்கு உதவினேன்.
படிமம் எனும் பக்கத்தின் உபயோகம் எனக்கு சரிவர தெரியவில்லை. என் ஊகம்:
1 . நாம் ஏற்கனவே ஒரு படிமத்தை பதிவேற்றியபிறகு, அதை ஒரு கட்டுரையில் புகுத்தினால் எப்படி தோன்றும் என்பதை சோதிக்க இப்பக்கத்தை உபயோகிக்கலாம்.
2 . நாம் பதிவேற்றிய படிமங்களில் சில படிமங்கள் நம்மால் எக்கட்டுரையிலும் புகுத்தப்படாமல் இருக்கக்கூடும். அப்படிமங்களின் பட்டியலை இங்கு வைக்கலாம். பின்னொருகாலத்தில் உபயோகப்படலாம்.
(ஒரு பயனர் தனது ஒளிப்படத்தை அங்கே வைத்திருந்தார். வைக்கலாம், ஏனெனில் அவரின் பயனர்வெளிப் பக்கம் தானே!)--மா. செல்வசிவகுருநாதன் 10:27, 20 பெப்ரவரி 2012 (UTC)
தங்களின் உதவியால் ஓரளவு அமைத்துள்ளேன். நான் கார்த்தியின் பக்கத்தைப் பார்த்தவுடனே கேட்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவருடைய நேரம் கருதித் தயங்கினேன். ஆம் அவருக்கும் நன்றிகள். விக்கி காமன்சில் நான் பதிவேற்ற்றிய படங்கள் 500 மேற்படுவதனால் அதன் இனைப்பினை மட்டும் கொடுத்துள்ளேன். எனது பக்கங்களை ஒரு முறை பார்வையிட்டு ஆலோசனைகள் தெரிவிக்கவும். நன்றி.--Parvathisri 10:57, 20 பெப்ரவரி 2012 (UTC)
கட்டுரைகளைத் தொக்குக்கும் போது parvathisri இனைப்பைப் பயன்படுத்தவும் பயனர் வெளிப்பக்கத்தில் உலாவும் போது icon வழியாகச் செல்வது எளிதாக இருக்கும் எனவும் நினைத்தே அவ்வாறு அமைத்தேன். பயன்படுத்திப் பார்த்து விட்டு ஏதேனும் இடர் ஏற்படின் மாற்றிவிடலாம் என இருக்கிறேன். மணல் தொட்டி மற்றும் கருவிகளைப் பயன்படுத்த உதவியமைக்கு மிக்க நன்றி. ஓய்வாக இருக்கும்போது பயன்படுத்துகிறேன்.
தாங்கள் வெளியூர் செல்வதாகக் குறிப்பிட்டிருந்ததால் தங்களுக்குத் தொல்லை தர விருப்பமில்லை. தங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.--Parvathisri 18:15, 21 பெப்ரவரி 2012 (UTC)

அலைபாயுதே கண்ணா பாடல்[தொகு]

ஐயா, பாடலில் பிழைகளைத் திருத்தியுள்ளேன். அருஞ்சொற்பொருளிலும் சொற்களை இணைத்துள்ளேன். ஒரு முறை பார்த்துவிடுங்கள். நன்றி--Parvathisri 14:50, 24 பெப்ரவரி 2012 (UTC)

பதக்கமும் நிருவாகிகளும்[தொகு]

நீங்கள் சோடாபாட்டிலின் பேச்சுப்பக்கத்தில் கேட்டிருந்த ஐயத்திற்கு அங்கு விடை அளித்துள்ளேன். மேலும் நிருவாகிகள் பொறுப்புகள் பற்றி அறிய இரண்டு பக்கங்களைப் பரிந்துரைக்கின்றேன் (ஆங்கிலம் அதன் முழுமை பெறாத தமிழாக்கம்):

--செல்வா 16:34, 25 பெப்ரவரி 2012 (UTC)

மேலும் விக்கிப்பீடியா:ஐந்து தூண்கள் என்பதே நம் வழிகாட்டி. பொறுப்புடனும் அக்கறையுடனும் இவற்றை நாம் பின்பற்றினால் நல்ல வளர்ச்சி அடைவோம்.--செல்வா 16:37, 25 பெப்ரவரி 2012 (UTC)

ஐயம்[தொகு]

வணக்கம் செல்வகுருநாதன், தாங்கள் siva என்ற கட்டுரையை பயனர்:siva என நகர்த்தியுள்ளீர்கள்.. அந்த பயனர்:siva 2007 ஆம் ஆண்டு கணக்கு உருவாக்கியுள்ளார்.. மேலும் அந்த சிவாதான் இந்த சிவா என நமக்கு தெரியாதல்லவா? சரிபார்க்கவும்.. நன்றி.--shanmugam 14:44, 27 பெப்ரவரி 2012 (UTC)

மங்களம் பாடுதல்[தொகு]

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Selvasivagurunathan m. உங்களுக்கான புதிய தகவல்கள் VasuVR இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


பழுதுநீக்கல் கோரிக்கை![தொகு]

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Selvasivagurunathan m. உங்களுக்கான புதிய தகவல்கள் Aswn இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


எது சரி?[தொகு]

ஆலமரத்தில் "மக்கள் தொகை" பற்றி நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு விடை அளித்திருக்கின்றேன்.--செல்வா (பேச்சு) 15:11, 5 மார்ச் 2012 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செல்வசிவகுருநாதன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி--இரவி (பேச்சு) 14:54, 6 மார்ச் 2012 (UTC)

வரும் சனிக்கிழமை (மார்ச் 10) இரவு 9 மணிக்குள் என்னைப் பற்றிய விவரங்களை தந்து விடுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:43, 7 மார்ச் 2012 (UTC)

தங்கள் அறிமுகத்தையும் படத்தையும் கண்டு மகிழ்ந்தேன். விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் சேர்த்து உள்ளேன். முதற்பக்கத்தில் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை இடம் பெறும். அப்புறம், என் விக்கிப்பீடியா பங்களிப்பு பற்றிய உங்கள் வாழ்த்துக்கும் நன்றி :) முன்பு எல்லாம் யாருமே இல்லாத தேநீர் கடையில் யாருக்குடா தே ஆத்துறோம்னு இருக்கும்.. இப்போது உங்களைப் போன்ற பலரும் இணைந்து பங்களிப்பது புதிய உற்சாகத்தை அளிக்கிறது. நன்றி. --இரவி (பேச்சு) 21:42, 11 மார்ச் 2012 (UTC)

எல்லா பக்கங்களையும் உரை திருத்துவது போலவே தங்களைப் பற்றிய அறிமுகக் குறிப்பையும் உரை திருத்தினேன். இது நம் கடமை அல்லவோ? நன்றி எதற்கு :) நாம் எல்லாரும் விக்கியில் செய்ய ஆசைப்படுவதை முழுநேரமாகச் செய்தாலும் கூட நேரம் போதாது. எனவே, கிடைக்கும் நேரத்தில் ஒரு சில பணிகளில் மட்டும் ஈடுபடுவது புரிந்து கொள்ளத்தக்கதே. நன்றி--இரவி (பேச்சு) 07:14, 14 மார்ச் 2012 (UTC)

மகபாரதத்தில் பாண்டியன்[தொகு]

மலையத்துவச பாண்டியன் (பாரதம்). இந்த பாண்டிய மன்னன் அசுவத்தாமனால் கொல்லப்பட்டானாம். இவன் எத்தனாவது நாள் குருசேத்திரப் போரில் இறந்தான் என்று பாரதம் கூறுகிறது என்று உங்களால் கூற முடியுமா? மேலும் துரோனரை கொல்ல உதவினான் என்பது எனக்கொருவர் கூறியது. அதை புத்தகங்களில் கண்டதில்லை. அது சரிதானா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:30, 15 மார்ச் 2012 (UTC)

வணக்கம்

இரண்டு மலையத்துவச பாண்டியர்கள் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார்கள். மேலே மகாபாரதப் போரில் கலந்து கொண்ட மலையத்துவச பாண்டியன் காசி நாட்டு அரசனின் மகன். இவனது மனைவி வைதற்பி. இவனது மகன்கள் பிரதீபன்,இத்ம வாகன்; பாரதப் போரில் பதினேழாம் போரில் தான் அசுவத்தாமன் படைகலம் ஏற்கிறான். மறுநாள் பதினெட்டாம் நாள் போரிலே மலையத்துவசன் அசுவத்தாமனால் கொல்லப்பட்டான். தனது தந்தை துரோனரைக் கொல்ல இவன் உதவியதாகக் கூறப்படுகிறது.( அபிதான சிந்தாமனி. ஆனால் எவ்வாறு என விளக்கப்படவில்லை. இவன் தமிழகத் தென்னாட்டு பாண்டியன் அல்லன்.

தென்னாட்டில் மணவூரை ஆண்டு கொண்டிருந்த குலசேகரப் பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் ம்கன் மலையத்துவச பாண்டியன். இவன் பதினாயிரம் பெண்களை மணந்தும் மகன் இன்மையால் சூர்ய குலத் தோன்றலாகிய சூரசேனன் என்ற மன்னனின் மகள் காஞ்சன மாலையை மணந்தான். இவனுடைய மகளே மதுரை மீனாட்சி என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:46, 15 மார்ச் 2012 (UTC)

உதவி தேவை[தொகு]

வணக்கம் திரு.-மா. செல்வசிவகுருநாதன் ,

நான் சண்முகநாதன் என்ற கட்டுரையை தொடங்கியுள்ளேன். அதில் பலதகவல்களை இணைக்க உள்ளேன்,ஆனால் சில பயனர்கள் இந்த கட்டுரை விக்கி பீடிய விற்கு தேவையான ஒன்றா? என்று கேட்டுள்ளார்கள், நீங்கள் சற்று உதவ முடிமா? என்னுடைய மின் அஞ்சல் முகவரி karthim02@gmail.com, உங்களது பதிலுக்காக காத்திருப்பேன், நன்றி கார்த்தி (பேச்சு)

வருத்தம் வேண்டாம், கார்த்தி... தரமான கட்டுரைகள் விக்கியில் இருக்கவேண்டும் என்பதே சக பயனர்களின் நோக்கம். முக்கியமான தகவல்கள் அனைத்தும் விக்கியில் இருக்கவேண்டும் என்பது அனைவரின் இலட்சியம். அதை நோக்கி அனைவரும் பணிபுரிந்து வருகிறோம்.
நீங்கள் எழுதிய கட்டுரை முக்கியமற்றது என யாரும் கருதவில்லை. அதில் அவரைக் குறித்து மேலும் தகவல்கள் இணைத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கருதுகிறார்கள். அக்கட்டுரை முழுமைபெறும் என அவர்கள் கருதுகிறார்கள். எனவே அவரைப்பற்றி மேலும் பல தகவல்களைச் சேருங்கள். உதாரணமாக அவரின் கல்வித்தகுதி, எந்தவகையில் அவரின் பணிகள் அரசு மற்றும் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது என்பன குறித்த தகவல்கள். நீங்கள் அத்தகவல்களை தந்தால்... நான் கட்டுரை நடையையும் மாற்றி உதவுகிறேன்.
உங்களுக்கு மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன். எந்த வகையான உதவியும் நீங்கள் கேட்கலாம், எவரிடமும்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:05, 17 மார்ச் 2012 (UTC)

ஒரு உதவி...[தொகு]

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Selvasivagurunathan m. உங்களுக்கான புதிய தகவல்கள் Sodabottle இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
--மதனாஹரன் (பேச்சு) 12:47, 18 மார்ச் 2012 (UTC)

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத்திட்டம்[தொகு]





வாழ்த்துகள்[தொகு]

சற்று முன்கூட்டியே உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் இட்டுள்ளேன். கட்டுரையாக்கம் மட்டுமல்லாது, மற்ற பயனர்களையும் அரவணைத்து உதவும் தங்கள் பன்முக விக்கிப் பங்களிப்பு சிறப்பானது. தொடர்ந்து செயல்பட என் உளமார்ந்த வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 03:59, 26 மார்ச் 2012 (UTC)

முதற்பக்கத்தில் தங்கள் அறிமுகத்தைப் பார்த்தேன். வாழ்த்துக்கள்! --மதனாஹரன் (பேச்சு) 12:22, 26 மார்ச் 2012 (UTC)
தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி. தங்களின் தமிழ்ப்பணி மேன்மேலும் சிறக்க இறைவனை (குறையொன்றுமில்லாத கோவிந்தனை) வேண்டுகிறேன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:44, 27 மார்ச் 2012 (UTC)
செல்வகுருநாதன், தங்களைப் பற்றிய முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. உங்கள் சிறப்பான பங்களிப்புகளுக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:23, 30 மார்ச் 2012 (UTC)
உங்களைப் பற்றிய முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 11:29, 31 மார்ச் 2012 (UTC)
செல்வசிவகுருநாதன், உங்கள் அறிமுகத்தை இரண்டு நாட்களுக்கு முன்புதான் தமிழ் விக்கிப்பீடியாவில் முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன்!! உங்கள் பணி மேன்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்! பெயருடன் இப்பொழுது உங்கள் முகத்தையும் இணைத்துப் பார்க்கையில் அறிமுகம் சிறப்படைகின்றது. --செல்வா (பேச்சு) 16:11, 15 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்திய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்! உங்கள் அனைவரின் உதவிகள், வழிகாட்டல்கள் மற்றும் ஊக்கப்படுத்தல் எனது மனதை நிறைவு செய்கின்றன.என்னால் முடிந்த அளவிற்கு இங்கு என்றென்றும் பணிபுரிவேன்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:16, 29 ஏப்ரல் 2012 (UTC)

Article request[தொகு]

Hi! Do you take article requests?

If so, would it be alright if you made a Tamil article on en:Peel District School Board?

It has a Tamil website, at http://www.peelschools.org/tamil/home/

Thanks, WhisperToMe (பேச்சு) 06:02, 20 ஏப்ரல் 2012 (UTC)

Created. --மதனாஹரன் (பேச்சு) 10:01, 20 ஏப்ரல் 2012 (UTC)
Thank you so much! WhisperToMe (பேச்சு) 13:17, 20 ஏப்ரல் 2012 (UTC)

உரை திருத்தம்[தொகு]

மிகவும் நுணுக்கமான முறையில் உரை திருத்தி வருகிறீர்கள். மேலோட்டமான பார்வைக்கு (அறிவுக்கு) பிழைகள் தெரிவதில்லை. மிக்க நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:26, 29 ஏப்ரல் 2012 (UTC)

  • நீங்கள் எல்லாம் விக்கியில் நிறைய எழுதுபவர்கள்; எனவே தட்டச்சு செய்யும்போது சிறுசிறு எழுத்துப்பிழைகள் வரக்கூடும். இங்கு அனைவருமே ஆழ்ந்த பார்வை பார்ப்பவர்கள் என்றே நான் கருதுகிறேன்.
  • பொதுவாக இங்கு நான் அனைத்து புதிய கட்டுரைகளையும் முழுவதுமாக படிப்பேன்; எங்காவது மொழிரீதியான முன்னேற்றம் தேவைப்படும்போது திருத்தம் செய்கிறேன். (பள்ளிப் பருவத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்திய அனுபவம் இங்கும் கை கொடுக்கிறது!)
  • தற்போதைய எனது சூழ்நிலையில் இச்சிறு பணியை மட்டுமே இங்கு என்னால் செய்ய இயல்கிறது.
நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:11, 1 மே 2012 (UTC)[பதிலளி]

குறுந்தட்டு திட்டம்[தொகு]

வணக்கம். செல்வசிவகுருநாதன். விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள்‎ இத்திட்டத்தில் என்னாலான சிறு பங்களிப்பு செய்து வருகிறேன். இத்திட்டத்தில் பங்கு கொண்டு கட்டுரைகளைத் தாங்கள் உரை திருத்தம் செய்து உதவ முன்வரவேண்டும் என்ற வேண்டுகோள் இடுகிறேன்.

செய்ய வேண்டிய வேலைகள் விக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் என்ற பக்கத்தில் உள்ளன. இதில் உள்ள கட்டுரைகளில் ஐந்து வேலைகள் செய்ய வேண்டும்

  1. இற்றை / விரிவாக்கம் - இதில் நிறைய நேரம் செலவழிக்க வேண்டாம். தகவல்கள் 2012 க்கு ஏற்றவாறு இற்றையாக இருந்தால் போதும். மற்றபடி இப்போதுள்ள உள்ளட்டக்கங்களே போதுமானவை
  2. விக்கியாக்கம் - விக்கி நடைக்கேற்ப உள்ளதா, தகவல்சட்டம், வெளி இணைப்புகள், போன்றவை முறியாமல் உள்ளனவா என்று சோதித்தல்
  3. உரை திருத்தம் சுற்று 1 - இலக்கணப் பிழை அகற்றல் + எழுத்துப்பிழை அகற்றல்
  4. உரை திருத்தம் சுற்று 2 - இலக்கணப் பிழை அகற்றல் + எழுத்துப்பிழை அகற்றல்; சுற்று 1 செய்தவர் தவிர இன்னொருவர் செய்ய வேண்டும்.

சில கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் எண் காலத்தில் உங்கள் பெயரை இட்டு விடுங்கள் - நீங்கள் அதைத் தெரிவு செய்திருக்கிறீர்கள் என்பதை பிறர் அறிந்து கொள்ளும் விதமாக. -- -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:09, 6 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:31, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:51, 26 மே 2012 (UTC) +1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:25, 30 மே 2012 (UTC)[பதிலளி]


தாங்கள் வழங்கிய பதக்கத்திற்கும் தங்கள் விக்கியன்புக்கும் மிக்க நன்றி சிவகுரு.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:28, 4 சூலை 2012 (UTC)[பதிலளி]

தங்கள் கைபேசி எண்[தொகு]

தங்கள் கைபேசி எண்ணை எனது msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:01, 24 சூலை 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:55, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

கைப்பேசி மின்ன்ஞ்சலை எல்லாம் இனி இந்த பொது வெளியில் பகிரவேண்டாம். சிக்கல்கள் பல வரும் போல் தெரிகிறது.

சிவகுரு, நீங்கள் கேட்ட கொடை விழா பற்றி ஏற்கனவே தேனியார் எழுதிவிட்டார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:23, 3 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்[தொகு]

100, 200, 400, 800, 1500, 5000, 10000 மீ ஓட்டப்பந்தயங்களை எவ்வாறு அழைப்பது? ஓடுதல், விரைவோட்டம் என இரண்டு 2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்கட்டுரையில் உள்ளது. விரைவோட்டம் என்பதை 100மீக்கும் மற்றவற்றை ஓடுதலிலும் குறிக்கலாமா? --குறும்பன் (பேச்சு) 02:04, 10 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகளையும் முக்கிய முடிவுகளையும் உடனுக்குடன் இற்றைப்படுத்திய தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணியன் (பேச்சு) 06:28, 14 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது