பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தமிழிலக்கியம்/செயல் திட்ட வேலை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பணி 1 Y ஆயிற்று[தொகு]

பார்வதி ஸ்ரீதரன்,
'உங்களுக்குத் தெரியுமா'வில் காட்சிப்படுத்த ஒரு நாளைக்கு 3 வீதம் ஏழு நாட்களுக்கு தேவையான 21 துணுக்குகளை தயார் செய்ய வேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 8 மே 2013 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று காண்க வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா

மிக்க நன்றி. வலைவாசலின் முகப்புப் பக்கத்தில், மே 10 அன்று 'உங்களுக்குத் தெரியுமா' காட்சிப்படுத்தப்பட்டது. அந்தந்த கிழமைகளில் அவைகளுக்கென பகிரப்பட்ட துணுக்குகள் பார்வைக்குத் தெரியும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:08, 10 மே 2013 (UTC)[பதிலளி]

கருத்து அறிதல் 1 Y ஆயிற்று[தொகு]

பார்வதி ஸ்ரீதரன்,
பொதுவாக 10 அல்லது 12 கட்டுரைகளை தெரிவு செய்து, அக்கட்டுரைகள் சீரற்ற முறையில் (random) காட்சிக்கு வருமாறு வலைவாசல்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் இலக்கியம் என்பது பெருங்கடலாக இருக்கிறது. எனவே 30 கட்டுரைகளை தெரிவு செய்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டுரை, காட்சிக்கு வருமாறு செய்ய திட்டமிட்டுள்ளேன். அதாவது - இலக்கியவாதிகள் என 30 கட்டுரைகளும், சிறப்புக் கட்டுரைகள் என 30 கட்டுரைகளும் நாம் தெரிவு செய்ய வேண்டும். வலைவாசல் பக்கத்தின் இடப்பக்கம் சிறப்புக் கட்டுரையும், வலப்பக்கம் இலக்கியவாதிகள் பற்றிய கட்டுரையும் காட்சிக்கு வரும். தங்களின் கருத்தைத் தெரிவிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:35, 8 மே 2013 (UTC)[பதிலளி]

நல்ல யோசனை சிவகுரு. இன்று நான் கட்டுரைத் தெரிவைத் தொடங்குகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:06, 9 மே 2013 (UTC)[பதிலளி]

ஒப்புதலுக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:05, 11 மே 2013 (UTC)[பதிலளி]

கருத்து அறிதல் 2 Y ஆயிற்று[தொகு]

பார்வதி ஸ்ரீதரன்,
தமிழ் இலக்கியம் என தலைப்பிடுவதா அல்லது தமிழிலக்கியம் என தலைப்பிடுவதா? எது சிறப்பாக இருக்கும்? உங்களின் கருத்தை சொல்லவும்; உறுதிப்படுத்தவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:12, 9 மே 2013 (UTC)[பதிலளி]

  • தமிழிலக்கியம் என்பதே சரி

உறுதிப்படுத்தியமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:07, 11 மே 2013 (UTC)[பதிலளி]

பணி 2[தொகு]

பார்வதி ஸ்ரீதரன்,

  • தலா 22 கட்டுரைகளை இங்கு பரிந்துரை செய்யுங்கள். இக்கட்டுரைகளுக்கு துணைப் பக்கங்களை இப்போதைக்கு உருவாக்க வேண்டாம்; சற்று பொறுக்கவும்.
  • மீதமுள்ள தலா 7 கட்டுரைகளை கனக்சு பரிந்துரை செய்வார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:42, 9 மே 2013 (UTC)[பதிலளி]
  • தலா 1 கட்டுரையை நான் தெரிவுசெய்து பரிந்துரைத்துள்ளேன். (பாரதியார், திருக்குறள்)

முக்கிய குறிப்பு: தமிழ்த் தாயின் இரண்டாவது குழந்தை இலங்கை; இதைக் கருத்திற்கொண்டு தலா 7 கட்டுரைகளை (25%) பரிந்துரைக்க கனக்சு அவர்களை வேண்டினேன். அவர் இலக்கியவாதிகள் 7 பேரை தெரிவு செய்து பரிந்துரைத்துள்ளார்.

கருத்து அறிதல் 3 Y ஆயிற்று[தொகு]

தினந்தோறும் ஒரு திருக்குறள் எனும் கணக்கில்... 31 குறள்களை தெரிவு செய்து காட்சிப்படுத்தலாம். குறளுடன் அதன் பொருளினையும் தரலாம். 'குறளும் பொருளும்' எனும் தலைப்பின்கீழ் இதனைத் தரலாம். என்ன சொல்கிறீர்கள்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:32, 9 மே 2013 (UTC) 👍 விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:57, 9 மே 2013 (UTC)[பதிலளி]

ஒப்புதலுக்கு நன்றி; இப்பணியினை கடைசியாக வைத்துக்கொள்ளலாம். 60 கட்டுரைகளை முதலில் முடிப்போம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:23, 10 மே 2013 (UTC)[பதிலளி]

கருத்து அறிதல் 4[தொகு]

பார்வதி ஸ்ரீதரன்,
தமிழிலக்கியம் குறித்து பிற மொழி அறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை நாளுக்கு ஒன்றென மொத்தம் 7 கருத்துகளை காட்சிப்படுத்தலாம். இதனை ‘தமிழிலக்கியத்தின் மீதான உலகத்தின் பார்வை’ எனும் தலைப்பின்கீழ் காட்டலாம். தங்களின் எண்ணமென்ன? (தேவைப்படும் தகவல்களைத் திரட்ட மற்ற பயனர்களின் உதவியினைக் கோரி இங்கு வேண்டுகோள் வைத்துள்ளேன்.) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:05, 10 மே 2013 (UTC)[பதிலளி]

இந்தப் பணியினையும் கடைசியாக செய்யலாம். வேறு எப்படியெல்லாம் மற்ற தகவல்களை காட்சிப்படுத்தலாம் என்பதனை சிந்தியுங்கள்; என்னுடன் பகிருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக வலைவாசலின் முகப்பில் சேர்க்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:10, 11 மே 2013 (UTC)[பதிலளி]

பணி 3 Y ஆயிற்று[தொகு]

இலக்கியவாதிகளை காட்சிப்படுத்த உதவும் வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள் எனும் பக்கத்தை உருவாகிவிட்டேன். கனக்சு மற்றும் என்னுடைய பரிந்துரைக் கட்டுரைகளை இந்தப் பக்கத்தில் சேர்த்துவிட்டேன். உங்களின் பரிந்துரைகளை பட்டியலிட்ட பின்னர் (பணி 2இல் தெரிவித்தபடிக்கு) எனக்குச் சொல்லவும். வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள் எனும் பக்கத்தில் அக்கட்டுரைகளை எப்படி சேர்க்கவேண்டும் என்பதனை முறையாக சொல்கிறேன்; பிறகு அப்பணியினை நீங்கள் செய்து முடித்து விடலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:03, 11 மே 2013 (UTC)[பதிலளி]

தங்களின் பணியினை நீங்கள் எளிதாக செய்யவேண்டும் என்பதனைக் கருத்தில்கொண்டு இங்கு விளக்கியுள்ளேன்...வலைவாசல்:தமிழிலக்கியம்/இலக்கியவாதிகள் எனும் முக்கிய துணைப் பக்கத்தை திறக்கவும்....

படி 1[தொகு]

படி 2[தொகு]

படி 3[தொகு]

படி 4[தொகு]

தங்களின் பணிச்சுமையைக் குறைக்கும் பொருட்டு இதனை நான் செய்து முடித்து, மே 19 அன்று வலைவாசல் பக்கத்தில் காட்சிப்படுத்திவிட்டேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:26, 19 மே 2013 (UTC)[பதிலளி]