பயனர் பேச்சு:Selva15469

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Selva15469, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- மதனாகரன் (பேச்சு) 01:30, 8 நவம்பர் 2019 (UTC)

November 2019[தொகு]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:05, 21 நவம்பர் 2019 (UTC)

பி. ஜே. வட்லிங்[தொகு]

வணக்கம். தாங்கள் ஆகாஷ் எனும் பயனராக இருக்கலாம் என நினைக்கிறேன். விக்கியில் நல்லமுறையில் பங்களித்தால் தங்களை வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். பி. ஜே. வட்லிங் எனும் கட்டுரையில் குச்சக் காப்பாளர் என்று தானே தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. பின்பு ஏன் நீங்கள் மறுபடியும் இழப்புக் கவனிப்பாளர் என எழுதியுள்ளீர்கள். (மறுபடியும் முதல்ல இருந்தா என எனக்குத் தோன்றியது) நன்றி.ஸ்ரீ (✉) 17:03, 23 நவம்பர் 2019 (UTC)

November 2019[தொகு]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தினால், நீங்கள் தடை செய்யப்படலாம். Gowtham Sampath (பேச்சு) 03:28, 26 நவம்பர் 2019 (UTC)

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். Gowtham Sampath ([[பயனர் பேச்சு:|பேச்சு]]) 03:44, 26 நவம்பர் 2019 (UTC)

@Gowtham Sampath:, தகவல் பெட்டிகளில் flagicon வேலை செய்யவில்லை. மேலும் அவை பழைய நடைமுறையில் உள்ளன. எனவே ஆங்கில விக்கியில் உள்ளது போல் புதுப்பித்துள்ளேன். இதில் என்ன தவறு உள்ளது? Selva15469 (பேச்சு) 15:31, 28 நவம்பர் 2019 (UTC)

அது தற்காலிகமாக தான் வேலை செய்யவில்லை, அதை சரி செய்வதற்கான வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் மாற்றம் செய்யாதீர்கள். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:35, 28 நவம்பர் 2019 (UTC)
விக்கிப்பீடியாவில் பழைய வார்ப்புரு முறைகளை ஏன் பின்பற்ற வேண்டும்? ஆங்கில விக்கிப்பீடியாவில் வளர்ச்சிக்கேற்ப நவீன முறைகளில் புதுப்பித்து விட்டனர். எனவே தமிழிலும் அவ்வாறு புதுப்பிப்பதே நன்று. இனி முடிவு உங்களுடையதே. நன்றி. Selva15469 (பேச்சு) 15:37, 28 நவம்பர் 2019 (UTC)

அழைப்பு[தொகு]

பகுப்பு:துடுப்பாட்ட சொல்லியல் என்பதில் தங்களால் பங்களிக்க இயலுமா?. இங்கு பல முக்கிய துடுப்பாட்டக் கட்டுரைகள் தமிழில் எழுதப்படாமல் உள்ளது.முதலில் அதற்கான தமிழ்ச் சொற்களை நாம் முதலில் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இது முடிய சற்று காலம் எடுக்கும் எனவே பொறுமையாக இதில் முடிவெடுத்தல் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். நன்றிஸ்ரீ (✉) 16:09, 28 நவம்பர் 2019 (UTC)

என்னால் முடிந்தவரை பங்களித்து வருகிறேன். நான் துடுப்பாட்டக்காரர்கள் தொடர்பான வார்ப்புருவை தற்போதைய முறைக்கேற்ப புதுப்பித்துள்ளேன். ஆனால் ஒரு நிர்வாகி அதை காரணமின்றி பழைய முறைக்கு மீளமைத்து வருகிறார். எனது தொகுப்பில் பிழைகளோ நாசவேலைகளோ இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியே எனது விருப்பம் ஆகும். எனவே இதில் தாங்கள் உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Selva15469 (பேச்சு) 00:58, 29 நவம்பர் 2019 (UTC)

November 2019[தொகு]

Information icon தயவு செய்து விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தல் வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு எதிரானதும், அனுமதிக்கப்படாததும் ஆகும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக் கூடாது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.

கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:39, 29 நவம்பர் 2019 (UTC)
country என்ற வார்ப்புரு இந்தியா என்ற சொல்லை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. எனவே Infobox:cricketer வார்ப்புருவில் இணைப்பு ஏற்படுத்துவதில் சிக்கல் எழுகிறது. இதை கருத்தில் கொண்டே ஆங்கில மற்றும் ஏனைய விக்கிமொழிப் பக்கங்களிலும் வழக்கமானன Indian என்பதற்கு மாற்றாக India என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நானும் இந்தியா தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் பட்டியல் என்று தலைப்பை நகர்த்தினேன். தவறு இருப்பின் மன்னிக்கவும். நன்றி. Selva15469 (பேச்சு) 03:57, 29 நவம்பர் 2019 (UTC)

கருத்து[தொகு]

@Kanags:, தங்களைப் போன்ற அதிகார அத்துமீறலில் ஈடுபடுபவர்களை விக்கிப்பீடியா நிர்வாகம் கண்டிக்காமல் இருப்பது முறைகேடானது. நான் பழைய வார்ப்புருவை மேம்படுத்தியதில் என்ன தவறு உள்ளது? ஏன் தொடர்ந்து மீளமைத்து வருகிறீர்கள்? இங்கு நேரத்தை வீணடிப்பதில் பயனில்லை என்று உணர்ந்துகொண்டேன். தங்களைப் போன்ற நிர்வாகிகள் இருக்கும்வரை தமிழ் விக்கிப்பீடியாவை யாரும் காப்பாற்ற இயலாது போலிருக்கிறது. எனவே இங்கிருந்து விடைபெறுகிறேன். @ஞா. ஸ்ரீதர்:, நண்பரே தாங்களும் இந்த கட்டற்ற கலைக்களஞ்சியம் என்று கூறப்படும் நிர்வாகிகள் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விலகிவிடுவதே நல்லது என்று தோன்றுகிறது. Selva15469 (பேச்சு) 07:39, 29 நவம்பர் 2019 (UTC)
(மேற்கண்ட எனது தவறான கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டேன்.Selva15469 (பேச்சு) 12:52, 30 நவம்பர் 2019 (UTC))

நீங்கள் எவ்வித விளக்கமும் இல்லாமல் வார்ப்புருவை மாற்றியிருக்கிறீர்கள். இதனால் இவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள ஏராளமான கட்டுரைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மிகச் சிக்கலான வார்ப்புருக்கள் ஆங்கில விக்கிப்பீடியாவில் கூட காக்கப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 07:42, 29 நவம்பர் 2019 (UTC)
@Kanags:, பழைய வார்ப்புரு காரணமாக தகவல் பெட்டிகளில் சிறிய, தடிப்பற்ற எழுத்துக்களும் புகைப்படங்களின் அளவு சிறியதாகவும் தெரிகின்றன. மேலும் flagicon பல நாட்களாக வேலை செய்யவில்லை. பழைய வார்ப்புருவை ஆங்கில விக்கியில் 2013ஆம் ஆண்டே புதிய முறையில் மாற்றியமைத்து விட்டனர். ஆனால் இங்கு பல ஆண்டுகள் கடந்தும் பழைய வார்ப்புருவே தொடர்கிறது. எனவே நான் உருவாக்கியுள்ள புதிய வார்ப்புருவை சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். இதுவே தாங்கள் நடுநிலையான நிர்வாகி என்பதை உணர்த்தும். இல்லையென்றால் இங்கு பங்களிக்க வரும் என்னைப்போன்ற சாமானிய பயனர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். இந்த விவகாரத்தில் ஏனைய நிர்வாகிகளும் தலையிட்டு தீர்வு எட்டும்படி வேண்டுகிறேன். @Info-farmer:, @AntanO: Selva15469 (பேச்சு) 08:08, 29 நவம்பர் 2019 (UTC)
உங்கள் புதிய வார்ப்புரு தொடர்பாக: நான் ஒரு கட்டுரையில் பொருத்திப் பார்த்தேன். தகவல் சட்டம் பெரிதாக உள்ளது. படமும் தேவையில்லாமல் பெரியதாக உள்ளது. "வாழ்நாள் புள்ளிவிவரங்கள்" அமைப்பு சரியாக அமையவில்லை. பழையதே நன்று. தனிப்பட்ட தகவல்களில் பிறந்த நாள், இடம் எதுவும் தெரியவில்லை. பார்க்க: வார்ப்புரு பேச்சு:Infobox cricketer/sandbox--Kanags \உரையாடுக 09:22, 29 நவம்பர் 2019 (UTC)
@Kanags:, கட்டுரையின் தகவல் பெட்டியில் | birth_date =, | birth_place = ஆகிய labelகளைக் கொடுத்தால் மட்டுமே பிறந்த நாள், இடம் ஆகிய தகவல்கள் தெரியும். தற்போது அனைத்து கட்டுரைகளிலும் இவ்வாறு மாற்றுவது கடினம். ஆனால் தங்களைப் போன்ற நிர்வாகிகள் முயன்றால் நிச்சயம் மாற்ற முடியும். தற்போது ஆங்கில விக்கிப் பக்கங்கள் அனைத்திலும் மேற்கண்ட labelகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே தமிழ் விக்கியில் இல்லாத ஒரு துடுப்பாட்டக்காரர் குறித்த பக்கத்தை அதன் ஆங்கில பக்கத்தைப் படியெடுத்து உருவாக்கும் போது பழைய வார்ப்புரு காரணமாக பிறந்த நாள், இடம் குறித்த தகவல்கள் தெரியாது அல்லவா? எனவே இந்த முரண்பாடுகளைத் தவிர்க்க புதிய வார்ப்புருவே சரியான தீர்வாக அமையும். மேலும் புகைப்பட அளவு ஆங்கில விக்கியைப் பின்பற்றியே உள்ளது. தகவல் சட்டத்தின் அகலத்தைக் குறைத்துள்ளேன். திருத்தப்பட்ட வார்ப்புருவின் எடுத்துக்காட்டு- பார்க்க: வார்ப்புரு பேச்சு:Infobox cricketer/sandbox Selva15469 (பேச்சு) 10:54, 29 நவம்பர் 2019 (UTC)
நிறையத் திருத்தங்கள் செய்ய வேண்டும். ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் மாற்றம் செய்வது இயலாத காரியம். நான் கவனிக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:00, 29 நவம்பர் 2019 (UTC)
@Kanags:, நன்றி. மாற்றுவது இயலாத காரியம் இல்லை. முயன்றால் இயலும். இல்லையென்றால் புதிதாக கட்டுரைகள் உருவாக்கும்போது நான் மேற்கூறியது போல சிக்கல் எழும். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் இருந்து படியெடுத்து நான் உருவாக்கிய மிட்செல் சான்ட்னர் குறித்த கட்டுரையில் பழைய வார்ப்புரு காரணமாக பிறந்த நாள், இடம் ஆகியவை தெரியவில்லை. எனவே கூடிய விரைவில் இதற்கு தீர்வு எட்டுவதே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நன்மை பயக்கும் என்று நினைக்கிறேன். Selva15469 (பேச்சு) 11:58, 29 நவம்பர் 2019 (UTC)

@Kanags:, ஏற்கனவே உள்ள பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உள்ளிட்ட பல்வேறு பக்கங்களில் நான் மேற்கூறிய labelகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதன் விளைவாக அவர்களின் பிறந்த நாள், இடம் குறித்த தகவல்கள் தெரியாமல் இருப்பதைக் கவனிக்கவும. எனவே அதுபோன்ற பக்கங்களை விடுத்து மற்ற பக்கங்களில் உள்ள labelகளைத் திருத்துவது சற்று எளிதான பணியாக அமையும் அல்லவா? Selva15469 (பேச்சு) 11:23, 29 நவம்பர் 2019 (UTC)

தற்காலிக ஏற்பாடு[தொகு]

@Gowtham Sampath:, @Kanags:- நான் விளைவுகளை அறியாமல் பழைய வார்ப்புருவை புதிய முறைக்கேற்ப மாற்றியதால் பல கட்டுரைகளில் பிறந்த நாள், இடம் தெரியாமல் போனது. இதனால் நிர்வாகிகள் அதை பழையபடி மீளமைத்தனர். அவர்களின் செயல் நியாயமானதே. ஆனால் இது தெரியாமல் நான் தேவையற்ற தொகுத்தல் போரில் ஈடுபட்டேன். அத்துடன் நிர்வாகிகளையும் கண்டித்தேன். எனவே குறிப்பிட்ட இரு நிர்வாகிகளிடம் என் தவறுக்கு மன்னிப்பு வேண்டுகிறேன். தற்போது தற்காலிக ஏற்பாடாக தகவற்பெட்டி துடுப்பாட்டக்காரர் என்ற புதிய வார்ப்புருவை உருவாக்கியுள்ளேன். பழைய வார்ப்புருவை பயன்படுத்தியுள்ள கட்டுரைகளில் labelகளை திருத்தம் செய்யும்வரை இது தற்காலிக ஏற்பாடாக அமையும். இதன்மூலம் ஆங்கில விக்கியில் உள்ள புதிய வார்ப்புருவை பயன்படுத்தியுள்ள பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்ற பல்வேறு கட்டுரைகளின் தகவல் பெட்டியில் பிறந்த நாள், இடம் தெரியாமல் இருக்கும் பிழையைத் தவிர்க்கலாம். Selva15469 (பேச்சு) 12:38, 30 நவம்பர் 2019 (UTC)

December 2019[தொகு]

Information icon தயவு செய்து விக்கிபீடியாவின் பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தல் வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு எதிரானதும், அனுமதிக்கப்படாததும் ஆகும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக ஏனைய பயனருடன் உரையாடல் இன்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக் கூடாது. உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி.

கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:10, 10 திசம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Selva15469&oldid=2873340" இருந்து மீள்விக்கப்பட்டது