பயனர் பேச்சு:Sathyayoga

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Sathyayoga, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:08, 10 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஐயம்[தொகு]

அய்யா! தொகுக்கப்பெறும் கட்டுரைகளில் புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை எப்படி இணைப்பது?

விக்கிப்பீடியாவில் பங்களிக்க வந்துள்ள உங்களை நட்புடன் வரவேற்கின்றேன். படிமங்கள் தரவேற்றம் பக்கத்தைப் பார்த்தால் புகைப்படங்களை எப்படித் தரவேற்றம் செய்து, கட்டுரைகளில் இணைக்கலாம் என்பதனை அறியலாம். கட்டுரைகளில் ஆதாரங்களை இணைத்தல் தொடர்பாக மேற்கோள் சுட்டுதலுக்கான உதவிப் பக்கத்தைப் பாருங்கள். புரியாமல் இருப்பின் தயங்காது கேளுங்கள்.--கலை (பேச்சு) 09:47, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

ஒரு கட்டுரையின் தொகு பக்கத்தை அழுத்தி, உள்ளாகச் சென்று எவ்வாறு ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பார்த்தீர்கள் என்றால் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.--கலை (பேச்சு) 09:51, 11 சனவரி 2013 (UTC)[பதிலளி]

தமிழ்ப் பேச்சாளர்கள்[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் ஒரு தலைப்பின் கீழ் எழுதப்பட வேண்டும். பகுப்புகளுக்குள் கட்டுரை எழுத அனுமதிக்கப்படுவதில்லை. நீங்கள் பகுப்பு:தமிழ்ப் பேச்சாளர்கள் என்ற பகுப்பில் எழுதிய தகவலை தயவு கூர்ந்து தனிக் கட்டுரையாக பட்டுக்கோட்டை ராஜப்பா என்ற தலைப்பின் கீழ் எழுதுங்கள். கட்டுரையின் இறுதியில் தமிழ்ப் பேச்சாளர்கள் என்ற பகுப்பைச் சேருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:01, 7 பெப்ரவரி 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Sathyayoga!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 05:42, 24 பெப்ரவரி 2013 (UTC)

October 2019[தொகு]

Information icon வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. நன்றி. நந்தகுமார் (பேச்சு) 02:42, 27 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sathyayoga&oldid=2824732" இலிருந்து மீள்விக்கப்பட்டது