பயனர் பேச்சு:S.jayaselvan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், S.jayaselvan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Semmal50 (பேச்சு) 08:08, 4 ஏப்ரல் 2017 (UTC)

கவனிக்க[தொகு]

வணக்கம், சிறந்த கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு நன்றிகளும் பாராட்டுகளும். ஒரு சில பரிந்துரைகள்: உங்கள் கட்டுரைகளில் நான் செய்துள்ள திருத்தங்களைக் கவனித்து, இனிமேல் எழுதப்போகும் கட்டுரைகளை விக்கி நடையில் எழுதப் பாருங்கள். அச்சு ஊடகங்கள், நூல்களில் இருந்து மேற்கோள்கள் தரும்போது அந்நூல்கள் எந்த ஆண்டு வெளியிடப்பட்டவை, வெளியீட்டாளர் யார் போன்ற விபரங்களையும் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 23:49, 12 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம், S.jayaselvan!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 03:16, 15 ஏப்ரல் 2017 (UTC)

உங்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டல்களைக் கவனித்து கட்டுரைத் தொகுப்பில் ஈடுபடுவது நல்லது. கட்டுரைகள் குறிப்பிடத்தக்கமை கொண்டிருக்க வேண்டும். இல்லாதவிடத்து நீக்கப்படலாம். நன்றி.--AntanO 02:40, 19 ஏப்ரல் 2017 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், S.jayaselvan!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 03:44, 11 மே 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க[தொகு]

உங்கள் கட்டுரையில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை உள்வாங்கி புதிய கட்டுரைகளை எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:05, 13 மே 2017 (UTC

மீண்டும் உங்கள் கவனத்திற்காக[தொகு]

வணக்கம் ஜெயசீலன். ப.முத்துக்குமாரசாமி,'இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க்கவிஞர்கள்'- பழனியப்பா பிரதர்ஸ்-2004. -இந்நூலை ஆதாரமாக் கொண்டு இதுவரை தமிழறிஞர்கள் குறித்த பல கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்கள் பங்களிப்புகளுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டும் நன்றியும்.

கட்டுரையின் உள்ளடக்கங்கள் நன்றாக உள்ளன. எனினும், உங்கள் பேச்சுப் பக்கத்தில் உங்களது கட்டுரைகளில் பிற பயனர்களால் விக்கி நடைமுறைக்கு ஏற்ப செய்யப்படும் மாற்றங்களைக் கவனிக்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டும், உங்களது மனசை ப. கீரன் கட்டுரையிலும் அதே அடிப்படை மாற்றங்கள் தேவைப்படுவது சற்றே வருத்தத்தைத் தருகிறது. தயவுசெய்து இக்கட்டுரையின் மாற்றங்களைக் கவனிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அம்முயற்சி உங்களது அடுத்தடுத்த கட்டுரைகளை விக்கியின் தரத்தில் மிளிரச் செய்யும்; வளமான கட்டுரைகளை உருவாக்கும் உங்களது பங்களிப்புகளால் தமிழ் விக்கிப்பீடியாவும் வளமாகும்.

நீங்கள் கவனிக்க வேண்டிய எளிய மாற்றங்கள்:
  • ஒரு பத்தியை ஆரம்பிக்கும்போது, பொதுவாக நாம் கட்டுரைகளில் இடைவெளி விட்டு வாக்கியத்தைத் தொடங்குவது போல விக்கிக் கட்டுரைகளில் இடைவெளி விட்டுத் தொடங்க வேண்டாம். (இங்கு காண்க)
  • மிகையான அடைமொழிகளையும் உரிச்சொற்களையோ தவிர்க்கலாம்.
  • விக்கியில் அனைவரும் சமமே. ஆதலால் எந்த நபருக்கும் சிறப்பு காரணமாக ”அவர்கள்” என்று இணைப்பதும் வேண்டாம்.
ஆலோசனைகளை வளர்முகமாக எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:16, 22 மே 2017 (UTC)[பதிலளி]
ஜெயசெல்வன், இரு சொற்களுக்கிடையில் கட்டாயம் ஒரு இடைவெளி இருக்க வேண்டும். உ+ம்: //இவர்,மாவட்ட//, //நூல்,முதற்குறள்//, //கு.கோதண்டபாணி//.--Kanags \உரையாடுக 10:31, 25 மே 2017 (UTC)[பதிலளி]

ஜெயசெல்வன், மீண்டும் நீங்கள் உங்களது கட்டுரைகளில் தவிர்க்க வேண்டிய விடயங்களை இங்கு சுட்ட விரும்புகிறேன்.

  • இடைவெளி தேவைப்படும் இடங்கள்:

நீங்கள் தொடங்கிய தத்துவப்பிரகாசம் கட்டுரையின் ஒரு பகுதி:

\\இந்நூல் 337 விருத்தங்களை உடையது.முதல் 304 பாடல்கள் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,பிற பாடல்கள் அறுசீர் விருத்தம்.பாடல்கள் பெரும்பாலும் செம்மையான எளிய நடையுடையன.\\

இடைவெளிகளுடன் : \\இந்நூல் 337 விருத்தங்களை உடையது. முதல் 304 பாடல்கள் எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், பிற பாடல்கள் அறுசீர் விருத்தம். பாடல்கள் பெரும்பாலும் செம்மையான எளிய நடையுடையன.\\

உங்களது அடுத்துவரப்போகும் கட்டுரைகளில் இதனைக் கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:47, 3 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஜெயசெல்வன், இந்த இடைவெளி விட்டு எழுதவேண்டிய அவசியத்தை மீண்டும் உங்களுக்குச் சுட்ட விரும்புகிறேன். நீங்கள் அடுத்து உருவாக்கிய சந்திரசேகர கவிராச பண்டிதர் கட்டுரையிலும் அதே இடைவெளிச் சிக்கலைக் காண நேர்ந்தது வருத்தமாக உள்ளது. எங்களால் உங்களுக்குப் புரியுமாறு விளக்க இயலவில்லையா அல்லது விளங்கியும் நீங்கள் செவிமடுப்பதில்லையா என்ற குழப்பம் எழுகிறது. அருமையான தமிழ் அறிஞர்கள் குறித்த கட்டுரைகளில் இத்தகைய நிறுத்தக்குறிப் பிழைகள் காணப்படுவது சங்கடமாக உள்ளது. சுட்டிக்காட்டப்படும் விஷயத்தைப் புரிந்துகொண்டு, வரும் கட்டுரைகளில் தவிர்ப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:40, 5 சூன் 2017 (UTC)[பதிலளி]

நீங்கள் இன்று தொடங்கிய அஷ்டாவதானம் சபாபதி முதலியார் கட்டுரையில் நிறைய இலக்கண வழுக்கள் உள்ளன. தமிழறிஞர்கள், புலவர்கள் பற்றிய கட்டுரைகளில் இவ்வாறு இலக்கணத் தவறுகள் வருவது அழகாக இல்லை. அருள்கூர்ந்து திருத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 02:40, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

December 2017[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 02:45, 17 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

Information icon Please do not add original research or novel syntheses of published material to articles. Please cite a reliable source for all of your contributions. Thank you. AntanO (பேச்சு) 02:48, 17 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

December 2020[தொகு]

தகவற் படவுரு வணக்கம், நீங்கள் ஒரு பக்கத்தில் தலைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்ப்புக்குரியதாகக் கருதப்படக்கூடிய உள்ளடக்கத்தை நீக்குவதற்கு, தமிழ் விக்கிப்பீடியா தணிக்கைசெய்யப்பட்டதன்று. கட்டுரையின் உள்ளடக்கத்துடன் நேரடியாக ஒத்துப்போகும் எந்தத் தகவலையும் அருள்கூர்ந்து நீக்கவோ தணிக்கைசெய்யவோ வேண்டாம். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 15:25, 10 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

குறுங்கட்டுரை[தொகு]

@S.jayaselvan:, வணக்கம்

மிகச் சிறிய (3 வரிகளுக்கு குறைவாக) கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். 3 வரிகளுக்கு குறைவான உள்ளடக்கங்களைக்கொண்ட கட்டுரைகள் நீக்கப்படும்.நீங்கள் தொடங்கிய திருமுல்லைவாயில் அந்தாதி 3 வரிகளுக்கு குறைவான உள்ளடக்கங்களைக்கொண்டு உள்ளது அதை விரிவாக எழுதி கட்டுரை வளர்ச்சியில் பங்களிக்கலாம்.புதிய கட்டுரைகள் கலைக்களஞ்சிய நடைமுறையிலும், தகுந்த மேற்கோள்களைச் சுட்டி தகவல்களைக் தாருங்கள்.நன்றி -- நன்றி Almighty34 (பேச்சு) 06:37, 17 மார்ச் 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:S.jayaselvan&oldid=3184727" இலிருந்து மீள்விக்கப்பட்டது