பயனர் பேச்சு:Ragunathan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Ragunathan!

வாருங்கள் Ragunathan, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

வருக! --செல்வா 12:13, 19 ஆகஸ்ட் 2009 (UTC)

பொருளியல்[தொகு]

ரகுநாதன், பொருளியல் பகுதியில் நீங்கள் எழுதி வரும் கட்டுரைகளுக்கு நன்றி. உங்கள் கட்டுரைகள் வெறுமனே ஒரு வரியுடன் வரைவிலக்கணம் மட்டுமே தருகிறீர்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். குறைந்தது இரண்டு பந்திகளாவது விளக்கமாகத் தாருங்கள். விளக்கம் சேர்க்கப்படாவிட்டால் இக்கட்டுரைகள் நீக்கப்படவேண்டி வரலாம். கட்டுரைகளில் அதன் ஆங்கிலச் சொல்லையும் அடைப்புக்குறிக்குள் தாருங்கள். ஆங்கில விக்கியில் அத்தலைப்பில் உள்ள கட்டுரைகளில் இருந்து தேவையானவற்றை எடுத்து மொழிபெயர்த்து உதவலாம். நன்றி.--Kanags \பேச்சு 06:55, 23 ஆகஸ்ட் 2009 (UTC)

நன்றி kanags அவர்களே. புதிதாகப் பங்களிப்பதால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியதாக உள்ளது. உங்களை போன்ற அனுபவம் மிக்க பயனர்கள் இவ்வாறான உதவிக் குறிப்புகள் கொடுத்தால் என்னால் உற்சாகமாக பங்களிக்க முடியும். --Ragunathan 07:14, 23 ஆகஸ்ட் 2009 (UTC)

தங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி ரகுநாதன். ஐயங்களைத் தயங்காமல் கேளுங்கள். பொதுவான சந்தேங்கங்களை ஆலமரத்தடியில் கேட்பின் பார்க்கும் எவரும் பதிலளிக்க இயலும். நீங்களும் ஈரோட்டுக்காரர் என்பதை அறிய மகிழ்ச்சி.--சிவக்குமார் \பேச்சு 11:08, 23 ஆகஸ்ட் 2009 (UTC)

மிக்க மகிழ்ச்சி kanags. தமிழால் இணைகிறோம். மகிழ்ச்சி. பொருளடக்கம் எனும் வார்புருவை எப்படி துவக்குவது. command என்ன என்று கூற முடியுமா? இதை ஏன் இங்கே கேட்கிறேன் என்றால் ஆலமரத்தடியில் அனுபவம் வாய்ந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள். அங்கெ நமக்கென்ன வேலை என்றுதான் :) என்னுடையது சிறிய ஐயங்களே.--Ragunathan 08:06, 23 ஆகஸ்ட் 2009 (UTC)

நீங்கள் == எனும் syntax பயன்படுத்தி உபதலைப்புகளை உருவாக்கும்போது மூன்று உபதலைப்புகளை மேலிடும்போது தானாகவே பொருளடக்கம் உருவாக்கப்படுகிறது. நீங்கள் ஏதும் செய்ய வேண்டுவதில்லை. பார்க்க: உபதலைப்புகள்

--மணியன் 09:11, 23 ஆகஸ்ட் 2009 (UTC)

இம்மாதிரியான உரையாடல்களில் கோலன் குறிகள் மூலம் பத்திகளை சற்று தள்ளி துவங்கச் செய்யலாம்.இது தெளிவான உரையாடல் இழையைக் காட்டும்.தவிர கருத்து மாறும்போது == சின்டாக்ஸ் பயன்படுத்தி sectionகளை ஏற்படுத்தலாம்.--மணியன் 09:18, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
ரகுநாதன், நீங்கள் எழுதிய கட்டுரைகளுக்கு இணையான ஆங்கிலச் சொற்களைத் தருகிறீர்களா?--Kanags \பேச்சு 21:43, 23 ஆகஸ்ட் 2009 (UTC)
கனகு, நான் எழுதிய கட்டுரைகளில் ஆங்கங்கே ஆங்கிலச் சொற்களையும் குறிப்பிடுகிறேன். அனைத்து சொற்களிலும் ஆங்கில சொல் சேர்த்தால் அது ஒரு தமிங்கில கட்டுரை ஆகிவிடும் என்று அஞ்சுகிறேன்.--Ragunathan 05:32, 24 ஆகஸ்ட் 2009 (UTC)
இந்த கூகுள்-மொழிப்பெயர்ப்பு மென்கலக்கருவியைப் பயன்படுத்திப் பார்த்தேன். மொழிபெயர்ப்பு ஆகவில்லை. காட்டாக budget என்ற கட்டுரையை மொழிபெயர்க்க கொடுத்தேன். ஆனால் ஆங்கிலத்திலேயேதான் வருகிறது. என்ன செய்வது?

பாராட்டுகள் - மின்னூலகம்[தொகு]

இரகுனாதன், மிக அருமையான, பயனுடைய ஒரு கட்டுரையை (மின்னூலகம்) எழுதியுள்ளீர்கள். உங்கள் பங்களிப்பு நல்லூக்கம் தருகின்றது. நன்றி.--செல்வா 14:23, 15 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா அவர்களே. விடிய விடிய மொழிபெயர்த்த அயர்ச்சி உங்கள் வாழ்த்துகளினால் ஓடிவிட்டது. உங்கள் பாராட்டுக்கள் மேலும் பல புதிய பங்களிப்புகள் செய்ய எனைத் தூண்டுகிறது.-:)

நீங்கள் பயனுள்ள தலைப்புகளில் விரிவான கட்டுரைகளை அழகு தமிழில் எழுதுவது கண்டு மகிழ்கிறேன். நன்றி--ரவி 08:41, 28 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி ரவி அவர்களே. உங்கள் பாராட்டுகள் மேலும் பல பங்களிப்பு செய்ய ஊக்கம் அளிக்கிறது. மேலும் அதை முதல் பக்க கட்டுரை ஆக்கிய விக்கிப்பீடியா நிர்வாகிகளுக்கு நன்றி.--Ragunathan 10:27, 29 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

ரகுநாதன், இன்றுதான் உங்கள் "மின்னூலகம்" கட்டுரையைப் பார்த்தேன். மிகவும் பயனுள்ள கட்டுரை. மேலும் இதுபோன்ற கட்டுரைகளை எழுதித் தமிழ் விக்கிப்பீடியாவை வளம்படுத்துங்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 19:58, 29 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி மயூரநாதன் அவர்களே. உங்களை போன்ற விக்கி முன்னோடிகள் வழிகாட்டுதல் மற்றும் வாழ்த்துகளால் மேலும் பல பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரிக்கிறது.--Ragunathan 20:17, 29 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

அடிக்குறிப்பிடுதல்[தொகு]

நீங்கள் அடிக்குறிப்பிடுதல் குறித்து கேட்டிருந்தீர்கள். இச்சுட்டி பயனளிக்கும் என்று நினைக்கிறேன். இதனையும் காண்க. உங்கள் உசாத்துணைகள் (references) கட்டுரையின் கூற்றுக்கு சான்றாக அந்த வரியின் முடிவில் இடப்பட வேண்டும். அதன் format முதல் சுட்டியில் உள்ளது. அவ்வாறு refer செய்யப்பட்ட இணைப்புகள்/புத்தகங்கள் பட்டியல் விக்கியில் ஏற்கெனவே வடிவமைத்துள்ள வார்ப்புரு மூலம் மேற்கோள்கள் பத்தியில் காட்டப்படுகின்றன. <references/> என்று இட்டால் ஒன்றன்பின் ஒன்றாக காட்டப்படும். பெரிய பட்டியல் இருந்தால் பக்கத்தின் நீளம் கருதி இரண்டு அல்லது மூன்று நெடுவரிசை (column) களில் காட்ட {{Reflist|2}} அல்லது {{Reflist|3}} என இடலாம்.இதன் நிரலியில் தான் உங்கள் விருப்பம் என்றால் வார்ப்புரு:Reflist சென்று தொகு பொத்தானை அழுத்தி பார்க்கலாம். --மணியன் 05:47, 23 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி திரு.மணியன் அவர்களே. உங்கள் விளக்கம் மூலம் தெளிவு பெற்றேன். அதை பின்பற்றி மின்னூலகம் கட்டுரையில் அடிக்குறிப்பு இட்டுள்ளேன்.--Ragunathan 09:05, 23 செப்டெம்பர் 2009 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா? அல்லது விக்கிபீடியா?[தொகு]

ரவி ஒரு ஐயம்...விக்கிப்பீடியா என்று எழுதவா இல்லை விக்கிபீடியா என்று எழுதலாமா? ஏனெனில் ஆங்கில எழுத்துகளான wikipedia என்று தட்டச்சினால் விக்கிபீடியா என்று வருகிறது. ஆனால் பகர ஒற்று வர வேண்டுமெனில் மற்றொரு p சேர்க்க வேண்டியுள்ளது. கூகுளில் தேட விக்கிபீடியா என்றே வருகிறது. ஆனால் விக்கி தளத்தில் பகர ஒற்று வருகிறது. சில பயனர்கள் சேர்த்து எழுதுகிறார்கள். சிலர் ஒற்று சேர்ப்பதில்லை. எது சரி?--Ragunathan 09:49, 1 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

2010 செயத்திட்டம்[தொகு]

அண்மையில் இணைந்து அருமையாக தமிழ் விக்கிப்பீடியா பற்றி பல கட்டுரைகளை ஆக்கி உதவினீர்கள். நன்றி.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 03:06, 26 டிசம்பர் 2009 (UTC)

நன்றி நக்கீரன். தமிழ் விக்கிப்பீடியாவை அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தியே சிந்திக்க வைக்கிறது. அவர்களது தேடலுக்கு ஏற்றவாறு நாம் இன்னும் பல கட்டுரைகளை எழுத வேண்டும். அவ்வாறு சிறுவர்களிடம் இருந்து தமிழ் விக்கி மீதான எண்ணத்தை விதைக்கும் போதுதான் அவர்களும் இதில் பங்களிக்கவும், எதாவது மேலதிகத் தகவல் தேவையா தேடு விக்கிப் பீடியாவை என்ற எண்ணம் வரும். அவர்கள் உயர் கல்வி, ஆராய்ச்சி போன்ற படிப்புகளுக்கு வரும் போதும் தமிழ் விக்கியை வளப்படுத்துவார்கள்.
கோவையில் அண்மையில் நான், ரவிசங்கர், சிவா மூவரும் சந்தித்தபோது பள்ளி மாணவர்களின் அறிவியல்,வரலாறு தொடர்புடைய பாடத் திட்டங்களுக்கு ஏற்ப கட்டுரைகளை எழுதலாம் என்ற எண்ணத்தை பகிர்ந்து கொண்டனரó. இது நல்லதுதான். அந்தக் கட்டுரைகள் அப்படியே பாடப் புத்தகங்களில் இருப்பதை மட்டும் கூறாமல் அதை விளக்கும் வகையில் மேலதிகத் தகவல்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இலங்கை பாடத் திட்டத்திற்கு ஏற்பவும் அது அமைதல் நலம். --Ragunathan 14:06, 30 டிசம்பர் 2009 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:50, 18 பெப்ரவரி 2010 (UTC)

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு[தொகு]

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா? நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:19, 21 பெப்ரவரி 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்[தொகு]

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC).


நன்றி ..... வரைவு என்னும் சொல்லை எனது தம்பிகள் தான் விளம்பினார்கள். அவர்களுக்குதான் எனது நன்றிகள்.

நானும் சில சொற்கள் தமிழ் அல்ல என்பதை (வாக்கியம்) என்பதை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

உங்களின் வலை பூ பக்கம் சென்றேன். என்னால் அனைத்தையும் படிக்க முடிக்க முடியவில்லை என்றாலும் , சிலவற்றை பார்க்க முடிந்தது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

நன்றி

-- மகிழ்நன் 04:03, 7 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி மகிழ்நன் :)--Ragunathan 07:38, 7 ஏப்ரல் 2010 (UTC)

கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.[தொகு]

வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)

அடையாள அட்டைக்கான தகவல்கள்[தொகு]

ரகுநாதன்,

  • வணக்கம். நீங்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றீர்களா? உங்களுக்கு அடையாள அட்டை கிடைத்துள்ளதா? இல்லையெனில், கீழுள்ள படி செய்யுங்கள்.
  • கீழ்க்காணப்படும் URL -ஐ ஒற்றி புதிய URL-இல் ஒட்டவும்; பின்னர் Enter செய்தால் ஒரு பக்கம் வரும். அதில் உங்களைப் பற்றிய சில தகவல்கள் கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை உள்ளிட்டு விட்டு Update செய்யவும்.
  • http://www.wctc2010.org/idcards/updatedetails.php?a=bWVtYmVyIHVwZGF0ZSBpbmZvMTI3Njg0ODgyMg%3D%3D&z=Mjc0Nl8xMjc2ODQ4ODIy
  • மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். --பரிதிமதி 18:12, 18 ஜூன் 2010 (UTC)
மன்னிக்கவும், ரகுநாதன். ரகுநாத் என்று உள்ளிடப்பட்டதற்காக. மாற்ற முடியுமா என்று பார்க்கிறேன். முடியும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. --பரிதிமதி 09:08, 19 ஜூன் 2010 (UTC)

From Hindi wikipedia[தொகு]

Humble Thanks for the recognition. -Hemant wikikosh 10:31, 2 ஜூலை 2010 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]



இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் Ragunathan,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ragunathan&oldid=837565" இலிருந்து மீள்விக்கப்பட்டது