பயனர் பேச்சு:P.M.Puniyameen/தொகுப்பு 2

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

5000 இலக்கை அடைவு. ஒரு பதிவுக்காக...[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் நான் இணைந்து இன்றுடன் 10 மாதங்கள் 16 நாட்களாகின்றன. விக்கியில் இணைந்த சில மாதங்களில் ஓராண்டு பூர்த்தியாகும்போது ஐயாயிரம் கட்டுரைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று என்னுள் ஓர் இலக்கை ஏற்படுத்திக் கொண்டேன். இன்றைய தினம் ( செப்டெம்பர் 30 2011) அவ்விலக்கினை அடைய முடிந்தது. (புகழனைத்தும் படைத்தவனுக்கே). தமிழ் விக்கிப்பீடியா 8ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இன்றைய தினத்தன்று என்னுடைய இலக்கை அடைய முடிந்தமையையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றேன். எனது இப்பணியில் இணைந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து விக்கிப் பயனர்களுக்கும் மற்றும் என்னுடைய அலுவலக கணனி தட்டெழுத்தாளர்களுக்கும், என் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது கட்டுரை உருவாக்கத்தின்போது தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அடிக்கடி தொடர்பு கொண்டு தலைப்புத் திருத்தங்களில் அதிகளவில் ஒத்துழைப்பை நல்கிய சோடாபாட்டிலுக்கு இவ்விடத்தில் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னால் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் விக்கி வரையறைகளுக்கு உட்பட்டவை. ஆங்கில விக்கியாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. கட்டுரைகள் குறித்து கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும், அதனை பெரிதுபடுத்த விரும்பவில்லை. விக்கியுடன் நான் இணைந்து ஓராண்டு நிறைவடையும் சந்தர்ப்பத்தில் எத்தனை கட்டுரைகளை ஆரம்பிக்க முடியுமோ அத்தனை கட்டுரைகளையும் ஆரம்பிப்பேன். தற்போது ஆரம்பித்துள்ள இந்த வேகப்பயணம், தேகாரோக்கிய நிலையில் நான் இருந்தால்நவம்பர் 13 2011ம் திகதி வரை தொடரும். நவம்பர் 14 2011 ம் திகதியுடன் என் வேகப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இலங்கை பாடத்திட்டத்துடன் தொடர்பான கல்வியியல் ஆக்கங்களையும், அரசியல் ஆக்கங்களையும், இலக்கிய ஆக்கங்களையும் எழுத முடிவெடுத்துள்ளேன். விக்கியில் ஆக்கங்கள் தரமும் பேணப்பட வேண்டும். அதேநேரம், தமிழ் விக்கியில் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வேண்டும் என்ற நிலையில் உறுதியாக இருப்பேன்.

இருப்பினும் பதிவுக்காக ஒரு சிறு கருத்தினை தெரிவித்தே ஆக வேண்டும். மூவாயிரம் கட்டுரைகளை ஆரம்பிக்கும் வரை மிகவும் உளத்திருப்தியுடன் செயல்பட்டுவந்தேன். பிந்திய கட்டுரைகளை எழுதும்போது அதிகமான மனவுளைச்சல்களுக்கு உட்பட்டேன். தமிழ் விக்கிப்பீடியா செயல்பாடு சுயேட்சையானது. ஒரு பயனரை ஊக்குவிக்கும்போது அவரிடம் பலதை எதிர்பார்க்கலாம். அதேநேரம், மனவுளைச்சல்களை உருவாக்கும்போது ஒரு சுயேட்சையான பணியில் தடைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இதனை அனைத்துப் பயனர்களும், நிர்வாக நிலையிலுள்ளவர்களும், அதிகார நிலையிலுள்ளவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய தாழ்மையான ஆசை. எவ்வளவுதான் கருத்துக்களைத் தெரிவித்தாலும் ஒரு பயனரின் மனம் புண்படாத வகையில் நடந்து கொள்ளும் போதே சுயாதீனப் பங்களிப்பாளர்களைக் கொண்ட தமிழ் விக்கிப் பீடியாவை கட்டியெழுப்ப முடியும். நானொரு நிர்வாக அணுக்கத்தைப் பெற்றவனாக அல்லாவிட்டாலும் கூட ஒரு பங்களிப்பாளன் என்ற வகையில் இதனைத் தெரிவிக்கும் உரிமை எனக்குண்டு எனக்கருதுகின்றேன்.

விக்கி ஒரு கூட்டுக் குடும்பம் எந்த நிலையிலும் விக்கிக்குடும்பம் அன்பினாலேயே எதையும் சாதிக்கவேண்டும். அதிகாரத்தால் அல்ல.

விக்கிக்குடும்பத்தில் என்றும் அன்புடனே இருக்க ஆசைப்படும் நான் --P.M.Puniyameen 13:01, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

புன்னியாமீன், ஐயாயிரம் கட்டுரைகளை விக்கியில் தொடங்கிய உங்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்து! பிற பணிகளுக்கு நடுவே தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கும் சிறப்பான விதத்தில் பங்களித்துள்ளீர்கள். தங்கள் பணி தொடர்க!--பவுல்-Paul 13:18, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி பவுல் லியோன் வறுவேல் அவர்களே! தங்களைப் போன்ற நல்லிதயங்களின் ஆசீர்வாதமிருப்பின் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்--P.M.Puniyameen 13:29, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
புன்னியாமீன், மிகக் குறுகிய காலத்தில் ஐயாயிரம் கட்டுரைகளை எழுதி முடித்து பெரும் சாதனை புரிந்திருக்கிறீர்கள். தமிழ் விக்கியின் பல்வேறு இலக்குகளையும் அடைய உறுதுணை புரிந்திருக்கிறீர்கள். அவ்வகையில் உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் வேறு பணிகளில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள். உங்கள் உடல் சுகத்தையும் கவனித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.--Kanags \உரையாடுக 13:39, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தங்கள் வாழ்த்துக்கும், அன்பான அறிவுரைக்கும் மிக்க நன்றி Kanags. பல நோய்களுடன் வாழ்பவன் நான். நோய்களைப் பற்றியே கூடுதலாக சிந்தித்தால் ஒன்றுமே செய்யமுடியாது போய் விடும். உண்மையிலே விக்கி ஈடுபாடு ஓரளவுக்கு மன ஆறுதலைத் தருகின்றது. எனவே உள்ளவரை இயலுமானவற்றைச் செய்வேன்.--P.M.Puniyameen 14:14, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • தாங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்கிற உங்கள் எண்ணம் தங்களை இன்று 5000 கட்டுரைகளைப் பதிவிட வைத்து ஒரு உயர்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, செயல்பாடுகள் போன்றவை என்னைப் பலமுறை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. எப்படி தங்களால் மட்டும் இப்படி விரைவாக, குறிப்பிட்ட இலக்கை எட்ட முடிகிறது என்று இன்னும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறேன்... என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தங்களுடைய நோய், கவலை தீர்ந்திட தங்கள் முயற்சிகள் உங்களுக்கு உதவக்கூடும்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:52, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
உண்மைதான் தேனி.எம்.சுப்பிரமணி, நோய், கவலை தீர்ந்திட விக்கி மற்றும் இலக்கிய முயற்சிகள் பெரிதளவுக்கு உதவுகின்றன. தங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துக்கும், அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்--P.M.Puniyameen 15:08, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • ஐயாயிரம் கட்டுரைகள் எனும் மிகநீண்ட இலக்குப் புள்ளியில் நீங்கள் காலடிபதிப்பதில் மட்டில்லா மகிழ்ச்சி. வேகமாக, மிகவேகமாக செயற்படுதல் மிகச்சிலருக்குத்தான் கொடையாகத் தரப்பட்டது. உங்கள் வேகத்தில் மலைத்துவிட்டேன். உங்கள் உடல் சுகத்துக்கும் இவ்வேளையில் பிராத்திக்கின்றேன். வாழ்த்துகின்றோர் வரிசையில் நானும் வந்து நிற்கின்றேன். வாழ்த்துக்கள் மிக. அன்புடன்--சஞ்சீவி சிவகுமார் 15:59, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]
தமிழ் விக்கிப்பீடியா பற்றிய முதல் விளக்கத்தை எனக்குத் தந்து, ஆரம்ப ஆக்கங்களை நெறிப்படுத்திய ஆசானே நீங்கள் தான். எனவே எனது வெற்றிகளின் முக்கியபங்கு என்றைறைக்கும் தங்களுக்கே உரியவை. தங்களைப் போன்ற நல்லிதயங்களின் ஆதரவும், ஆசீர்வாதங்களுமிருப்பின இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம். சஞ்சீவி சிவகுமார் மிக்க நன்றி--P.M.Puniyameen 16:24, 30 செப்டெம்பர் 2011 (UTC)[பதிலளி]

இலக்குப் பயணம்[தொகு]

(என்னுடைய தனிப்பட்ட திட்டமிடலின் வசதி கருதி…. இலக்குப் பயணத்தை நோக்கிச் செல்கையில் ஏற்படக் கூடிய சோர்வு நிலையின் போது, 'அறிவித்து விட்டேனே' என்ற எண்ணம் தோன்ற வேண்டும். அப்போது மீண்டும் உத்வேகமடைய ஒரு சிறு ‘டானிக்’கே இப் பதிவு).

  • அறிவித்தல் தரும் நாள்: 2011 அக்டோபர் 11
  • அறிவித்தல் தரும் நாளன்று என்னால் ஆரம்பிக்கப்பட்டிருந்த கட்டுரைகளின் எண்ணிக்கை: 5520
  • 2011 நவம்பர் 13ம் திகதி வரை இப்பதிவு மீள் திருத்தம் பெறும்
  • தமிழ்விக்கிப்பீடியாவில் நான் இணைந்தது 2010 நவம்பர் 14ம் திகதியாகும். ஓராண்டு நிறைவடையும் நேரத்தில் அதாவது 2011 நவம்பர் 13ம் திகதி தேகாரோக்கிய நிலையில் இருந்தால்..... என்னால் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரைகள் 6666 ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயற்பட்டு வருகின்றேன்.
  • அதேநேரம், 2011 நவம்பர் 13ம் திகதிக்கு முன் தமிழ் விக்கிப்பீடியா 60வது இடத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பது மற்றுமொரு எதிர்பார்க்கை. தற்போது 60வது இடத்திலுள்ள விக்கிப்பீடியர்கள் கட்டுரைகளை ஆக்கும் வேகம் சற்று அதிகமானதே. இதனால் இதனை சரிவரத் திட்டமிடுவது கடினமானது. எனினும் எமது பயனர்கள் ஒத்துழைப்பு நல்கினால் 60 என்ற இலக்கு பெரிதல்ல.
  • என் கட்டுரைகள் விக்கிப்பீடியா வரையறைகளுக்குட்பட்டவை. இவ்வரையறைக்கு உட்படாத கட்டுரைகள் இருப்பின் தயவுசெய்து முன்கூட்டியே நீக்கிவிடும்படி அதிகார, நிர்வாக தரத்திலுள்ள அன்பர்களிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏனெனில், எனது பயணம் ஓர் இலக்கை நோக்கிச் செல்வதினால் இவ்விலக்கை அடைந்த பின்பு கட்டுரைகள் நீக்கப்படுமாயின் அது எனக்கு சிரமத்தைத் தரலாம். எனவே, இம்முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அவ்வாறு நீக்கப்படுமிடத்து அதனை என்னால் ஈடுசெய்யக் கூடியதாக இருக்கும்.
  • விக்கிப்பீடியா உள்ளடக்கம் தளையற்றது: இதனை எவரும் தொகுக்கவும், பகிரவும் இயலும் என்ற விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைக்கிணங்க, காப்புரிமை சட்டங்களை மதித்து இக்கட்டுரைகளை ஆரம்பித்துள்ளேன். எந்தத் தொகுப்பாளரும், எந்த உள்ளடக்கத்திற்கும் உரிமையாளர் அல்லர்; என்றடிப்படையை ஏற்றுக் கொண்டே கட்டுரைகளை எழுதி வருகின்றேன். இதனாலேயே ஆரம்பித்த கட்டுரைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன்.
  • விக்கிப்பீடியர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும் என்பதும், நீங்கள் உடன்படாதிருக்கும்போதும் சக விக்கிப்பீடியரை மதிக்கவும், பண்புடன் நடந்து கொள்ளவும் வேண்டப்படுகிறீர்கள் என்பதும், தனிப்பட்ட தாக்குதல்களை தவிருங்கள் என்பதும் விக்கியின் அடிப்படைக் கோட்பாடு என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்வோமாக. எனவே எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாகவே பகிர்ந்துகொள்வோம். வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளும்போது நிச்சயமாக மனக்கிலேசங்கள் தவிர்க்கப்படும். --P.M.Puniyameen 09:05, 11 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

60 வது இடத்தில் தமிழ்விக்கிப்பீடியா[தொகு]

என் இலக்குப் பயணத்தில் இன்றைய தினம் 2011 அக்டோபர் 23 ஒரு முக்கிய அடைவினை பெற முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். அனைத்துப் பயனர்களின் பங்களிப்புடன் தமிழ்விக்கிப்பீடியா இன்று 60வது இடத்தினை எட்டிப் பிடித்துள்ளது. இதனை நாங்கள் கூட்டிணைப்பாக செயல்பட்டு பாதுகாப்போம்.--P.M.Puniyameen 07:30, 23 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

2011 அக்டோபர் 1 முதல், 2011 நவம்பர் 13 வரை[தொகு]

* 2011 நவம்பர் 13, (6326 - 7500) மொத்தக் கட்டுரைகள் - 75

விக்கியில் இணைந்து ஓராண்டு பூர்த்தியாகும் இன்று 2011 நவம்பர் 13, 7500 இலக்கை அடைந்து விட்டேன். எனவே இப்பட்டியல் இனித் தொடராது. --P.M.Puniyameen 16:31, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்களும், கருத்துக்களும்[தொகு]

தங்கள் இலக்குப் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். ஆன பங்களிப்புகளை நல்கவும் சித்தமாயுள்ளேன். பயனர்கள் தங்களுக்கே இலக்குகளை வரைந்து அதை நோக்கி முனைவது சிறப்பான திட்டம். வளரட்டும் பணி.--சஞ்சீவி சிவகுமார் 09:57, 11 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி சஞ்சீவி சிவகுமார், ஆரம்பத்தில் என் இலக்கு 5000. அதனை செப்டெம்பர் 30 2011 இல் அடைந்து விட்டேன். 4000 கட்டுரையில் இருந்த போது 5555 என மனதுக்குள் இலக்கு வைத்துக் கொண்டேன். அதனை இன்று அடைந்து விடலாம். எனவே என் இலக்கின் விரிவாக்கம் 6666. சற்று கடினம் தான். முயன்று பார்ப்போம். --P.M.Puniyameen 10:48, 11 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

6000 கட்டுரைகள், ஒரு பதிவுக்காக[தொகு]

இன்று (2011 அக்டோபர் 19), 6000 கட்டுரைகளை நான் நிறைவு செய்துள்ளேன். இந்த 6000 கட்டுரைகளுள் கடைசி 1000 கட்டுரைகளை ஆரம்பிக்க எனக்கு 19 நாட்கள் (2011 அக்டோபர் 1 - 2011 அக்டோபர் 19) எடுத்தன (நாளொன்றுக்கு 52.63 கட்டுரைகள்). 19 நாட்களுக்கு முன்பு ( செப்டெம்பர் 30 2011) 5000 கட்டுரைகளை நிறைவு செய்யும் நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்த Kanags, பவுல்-Paul,தேனி.எம்.சுப்பிரமணி., சஞ்சீவி சிவகுமார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் கட்டுரைகளை எழுதும் போது தலைப்புகளை சரி பார்த்து திருத்தமிட்டுத் தந்ததுடன், ஊக்கத்தையும் தந்த சோடாபாட்டில் அவர்களுக்கு என் விசேட நன்றிகள்.--P.M.Puniyameen 14:03, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

ஆறாயிரம் வாழ்த்துகள்..[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தனியொருவராக 6000 கட்டுரைகளை உள்ளீடு செய்த தங்களின் பங்களிப்புகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தொடரட்டும் தங்களது தமிழ் விக்கிப் பணி... வாழ்த்துக்கள்... --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:39, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தேனி.எம்.சுப்பிரமணி--P.M.Puniyameen 17:06, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]


சாதனையாளர் பதக்கம்
புன்னியாமீன் அவர்களே!
பதினொன்றே மாதங்களில் ஆறாயிரம் கட்டுரைகளைத் தந்து மிகப் பெரும் சாதனை படைத்த உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன்! உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துகள்!!!

--Kanags \உரையாடுக 21:41, 19 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி Kanags --P.M.Puniyameen 00:06, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள், புன்னியாமீன் அவர்களே. நாம் தொலைபேசியில் உரையாடிய போது 2011 நவம்பர் மாதத்துக்குள் ஐயாயிரம் கட்டுரைகளை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் இருப்பதாகக் கூறினீர்கள். நவம்பருக்கு 12 நாட்கள் இருக்கும் போதே ஆறாயிரம் கட்டுரைகளை முடித்துள்ளீர்கள். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வர எண்ணியிருக்கிறேன். அப்போது பேசுவோம், இன்ஷா அல்லாஹ்.--பாஹிம் 00:15, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி பாஹிம் --P.M.Puniyameen 02:59, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் புன்னியாமீன், தனி ஒருவராக மிகக் குறுகிய காலத்தில் ஆறாயிரம் கட்டுரைகளை தமிழ் விக்கியில் அளித்து உலகளவில் வரிசையெண்ணில் ஏற்றம் காண உதவிடும் உங்கள் நல்முயற்சியை பாராட்ட ஆறாயிரம் வார்த்தைகளும் பற்றாது. வாழ்த்துக்கள் !! வளர்க நும் பணி !!--மணியன் 00:46, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி மணியன்--P.M.Puniyameen 02:59, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் புன்னியாமின். வாழ்த்துக்கள். ஆறாயிரம் எனும் மற்றொரு எல்லையைத் தாண்டி தமிழ் விக்கிக்குப் பலம் சேர்த்த உங்களுக்கு பல பதக்கங்கள் தரத்தகும். --சஞ்சீவி சிவகுமார் 16:57, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி சிவகுமார் நன்றி. பல பதக்கங்களா? ஐயோ தங்கம் விலையேறி விட்டது உங்களுக்குத் தெரியாதா? அது மட்டுமல்ல. வாழ்த்துக்கள் என்று இரண்டு வரிகளை கனணிப்படுத்தவே நேரமில்லாத இந்த இயந்திர மயமான காலகட்டத்தில் இப்படி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லக் கூடாது.--P.M.Puniyameen 17:53, 20 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

I'm intrigued. I see you have picked on two Englisman in Derbyshire (e.g. Berties Corbett) and generously translated them in to ta:wikipedia. Is there a reason for choosing Bertie? Victuallers 15:02, 24 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

Mr Victuallers, I thank for your information. I am creating tamil articles for all English Cricketers in the category. I have done the same for other country cricketers too. I intend to expand them in the future.--P.M.Puniyameen 16:19, 24 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

6500 கட்டுரைகள், ஒரு பதிவுக்காக[தொகு]

இன்று (2011 அக்டோபர் 28), 6500 கட்டுரைகளை நான் நிறைவு செய்துள்ளேன். இந்த 6500 கட்டுரைகளுள் கடைசி 500 கட்டுரைகளை ஆரம்பிக்க எனக்கு 8 நாட்கள் (2011 அக்டோபர் 20 - 2011 அக்டோபர் 28) எடுத்தன. 8 நாட்களுக்கு முன்பு (அக்டோபர் 19 2011) 6000 கட்டுரைகளை நிறைவு செய்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்த தேனி.எம்.சுப்பிரமணி., Kanags, பாஹிம், மணியன்,சஞ்சீவி சிவகுமார் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் கட்டுரைகளை எழுதும் போது தலைப்புகளை சரி பார்த்து திருத்தமிட்டுத் தந்ததுடன், ஊக்கத்தையும் தந்த சோடாபாட்டில் அவர்களுக்கு என் விசேட நன்றிகள். 60 வது இடத்தில் உள்ள தமிழ் விக்கி, இன்றைய தினம் (2011 அக்டோபர் 28) 40,000 கட்டுரைகளை எட்டிப்பிடித்துள்ளது. இந்த முக்கிய மைல்கல்லை அடைவுக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்--P.M.Puniyameen 17:40, 28 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் புன்னியாமீன், உங்கள் தொடர் பங்களிப்புகளினால் தம்ழி விக்கிப்பீடியா ஒரு நல்ல திரமான நிலையை எட்டிப் பிடித்துள்ளது. மேலும், நீங்கள் கேட்டுக் கொண்டவாறு அறிவழகன் கட்டுரையை நீக்கி அதற்குப் பதிலாக நீங்கள் கடைசியாக எழுதிய மார்க் டேல் கட்டுரையை இணைத்திருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 06:22, 29 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி Kanags, மார்க் டேல் கட்டுரை இருந்த இடத்தில் டீன் டாஸ் பற்றிய புதிய கட்டுரையை சேர்த்து விட்டேன். இப்போது 6500 சரியாகிவிட்டது.--P.M.Puniyameen 06:41, 29 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ்விக்கிப்பீடியாவின் 6666 கட்டுரைகள்[தொகு]

தமிழ்விக்கிப்பீடியாவின் 6666 கட்டுரைகளை எழுத வேண்டும் என்று எனக்குள் வகுத்துக் கொண்ட இலக்குப் பயணத்தை இன்று (2011 அக்டோபர் 31) நான் அடைந்துள்ளேன்.இதற்கு முதற்கண் படைத்தவனுக்கு நன்றி கூறும் அதேநேரத்தில் இப்பயணத்தில் வெற்றிபெற உழைத்த தங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இறுதிக் கட்டத்தில் என்வேகப் பயணத்துக்கு சோடாபாட்டில் அவர்களின் ஒத்துழைப்பு எனக்கு பெரும் உதவியாக இருந்தது. இவ்விடத்தில் அவருக்கு என் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு வருடத்தில் 6666 கட்டுரைகள் என்பது கடினமான இலக்குத்தான். இருப்பினும் விடாமுயற்சியினால் இந்த இலக்கை நான் எதிர்பார்த்ததைவிட 13 தினங்களுக்கு முன்பாக அடைய முடிந்தது. தமிழ்விக்கியில் நான் இணைந்து ஓராண்டு நிறைவடைய இன்னும் 13 தினங்கள் உள்ளன. எனவே இந்த 13 தினங்களிலும் ஆரம்பிக்கக்கூடிய கட்டுரைகளை உச்சஅளவில் எழுதி என் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் எனக் கருதுகின்றேன். இதன் பிறகு வரக்கூடிய ஆண்டுகளுள் என்னால் ஓராண்டில் இத்தனை கட்டுரைகளை எழுதி முடிக்க முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனவே முன்வைத்த காலை பின்வைக்காது ஓராண்டுக்குள் ஓர் உச்ச இலக்கை அடைய ஆசைப்படுகின்றேன். நவம்பர் 14 இலிலிருந்து என் வேக நடைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சாதாரணமாக எழுதிவரலாம் என எண்ணுகின்றேன்.--P.M.Puniyameen 14:11, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகளும், கருத்துகளும்[தொகு]

வாழ்த்துக்கள் புன்னியாமீன். உங்களிடம் உள்ள எண்ணி, எண்ணியதை முடிக்கும் திறன் வியக்கவைக்கிறது. ஒரு வருடத்தினுள் இத்தனை கட்டுரைகளை முடித்திருக்கிறீர்கள் என்பது பெருமையாயுள்ளது. ஏன் அந்த இலக்கை மற்றொரு தொடுகையாக 7500 ஐ நோக்கி (7777 என்பது கடினமாயிருக்கும் என்பதால்) நகரக்கூடாது. உங்களால் முடியும். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 15:57, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி சஞ்சீவி சிவகுமார் 7500 முடியும்...!!! ஆனால் 13 தினங்களுக்குள்....??? வேறு சில தனிப்பட்ட பணிகள் இருப்பதினால்....சற்று சிரமமாகலாம். இயலுமான வரை முயற்சிப்போம்--P.M.Puniyameen 17:01, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  • சஞ்சீவி சிவகுமார், தங்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கையை தமிழ்விக்கிப்பீடியாவில் இன்று பூர்த்தி செய்ய முடிந்ததை தங்களுக்கு மகிழ்வுடன் அறியத் தருகின்றேன். எதிர்பாராத விதமாக கடந்த வாரம் மின்னல் தாக்குதலினால் என் இணைய இணைப்பும், தொலைபேசி இணைப்பும் செயலிழந்தமையினால் பெரிதும் சிரமத்துக்குள்ளானேன். புரோட்பேன்ட் இணைப்பைப் போல கம்பியில்லா டொங்கல் இணைப்புகளில் வேலை செய்வது கடினம். தரவிரக்கம் செய்ய அதிக நேரமாகின்றது. மேலும் மழை, மின்வெட்டு. அதிகாலையில் எழுந்து இரவு வரை முழுமையாக உழைத்தமையினாலேயே தங்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடிந்தது. சிலநேரங்களில் தங்களால் இலக்கு நிர்ணயிக்கப்படாதுவிடின் என் கட்டுரைகள் 7000 அளவில் நின்றிருக்கும். எப்படியோ நடப்பதெல்லாம் நன்மைக்கென்பார்கள். அது போல சில தற்காலிக பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மனநிறைவாகவுள்ளது. மிக்கநன்றி.--P.M.Puniyameen 16:08, 13 நவம்பர் 2011 (UTC)
  • நீங்கள் மனந்தளராமல் எழுதவேண்டும் எனும் ஒரே நோக்கமே எனது கட்டுரை எண்ணிக்கை நிருணயத்தில் பின்னணியாயிருந்தது. சிலவேளை உங்களை சிரமப்படுத்திவிட்டேனோ என்ற உணர்வும் எனக்குள் எழுந்ததுண்டு. இடையில் இணைய இணைப்பும், தொலைபேசி இணைப்பும் செயலிழந்தமை. ஆயினும் தளராமல் இலக்கை அடைந்த உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். நாளை விக்கிக்கு வந்த முதலாம் ஆண்டைக் கொண்டாடும் உங்களுக்கு என் முற்கூட்டிய வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 16:16, 13 நவம்பர் 2011 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் தனக்கென ஒரு இலக்கு அமைத்துக் கொண்டு, அதை அடைய தாங்கள் எடுக்கும் முயற்சிகள், அதன் பிறகு அதற்கான வெற்றிகள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். தங்கள் மகிழ்ச்சியில் தமிழ் விக்கிப்பீடியாவும் மகிழ்ச்சி கொள்கிறது. தாங்கள் என் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில்

“நவம்பர் 14ம் திகதிக்கு பின்பு விக்கியுடனான எனது ஈடுபாடு எந்தளவில் இருக்குமென்பதை என்னால் சரிவர தீர்மானிக்க முடியவில்லை. என்னால் ஆரம்பிக்கப்பட்ட சில கட்டுரைகள் பூரணப்படுத்த வேண்டியுள்ளது. அவற்றைப் பூரணப்படுத்துவதில் கூடிய கரிசனை காட்டுவேன். தொடர்ந்தும் என் பங்களிப்பை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தங்களது கருத்துகள் தான் தீர்மானிக்கப் போகின்றன.”

என்கிற தங்கள் வாக்கியங்களில்

//என்னால் ஆரம்பிக்கப்பட்ட சில கட்டுரைகள் பூரணப்படுத்த வேண்டியுள்ளது. அவற்றைப் பூரணப்படுத்துவதில் கூடிய கரிசனை காட்டுவேன்.//

என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுக்கு, மேலும் விரிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும் என கருதும் கட்டுரைகள் அனைத்தையும் முழுமைப்படுத்தி அவற்றை முதற்பக்கக் கட்டுரைகளாகவும், சிறப்புக் கட்டுரைகளாகவும் உருவாக்கிட என் அன்பு வாழ்த்துக்கள்.

அடுத்து தங்கள் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து என்னைப் போன்றவர்கள் தீர்மானித்துச் சொல்வது....? தங்கள் பங்களிப்புகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதும் தாங்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என்பதும்தான் எங்கள் விருப்பம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:28, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி தேனி.எம்.சுப்பிரமணி., தங்கள் எதிர்பார்ப்பின் படியே நடந்து கொள்வேன்--P.M.Puniyameen 17:03, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
புன்னியாமீன், உங்கள் தேகநிலையையும் கருத்தில் கொள்ளாமல் அயராமல் எழுதி ஓராண்டு முடிவதற்குள் 6,666 கட்டுரைகளை எழுதிப் பெரும் சாதனை படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். பல கோணங்களிலும் உங்கள் பங்களிப்புகள் தமிழ் விக்கியில் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். நன்றி.--Kanags \உரையாடுக 20:10, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி Kanags, உள்ள வரை செய்யக்கூடியதைச் செய்வோம்--P.M.Puniyameen 01:40, 1 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
தங்கள் சாதனை அரிதானதும் பெருமை கொள்ளக்கூடியதுமாகும். உடல்நலக்குறைவு, பயணங்கள் என தடைகளை எல்லாம் கடந்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளது மற்ற பங்களிப்பாளர்களுக்கு ஒரு உந்துவிசையாக இருக்கும். நிச்சயமாக தமிழ் விக்கிப்பீடியாவிற்கான தங்கள் பங்களிப்பு அதன் வரலாற்றின் முக்கிய மைல்கல்லாக என்றென்றும் விளங்கும். உங்களால் 60ம் இடத்தைப் பிடித்த தமிழ் விக்கி தொடர்ந்து முன்னேற்றம் காண உங்கள்பங்களிப்புகளைத் தொடருங்கள். முக்கியமாக உங்களது நடப்பு நிகழ்வுகளுக்கான கட்டுரைகள் அண்மைக்காலத்தில் சிறப்பாகவும் உடனடியாகவும் அமைந்திருந்தன. வரும் ஆண்டில் அவ்வகையான கட்டுரைகளில் குவியப்படுத்தி எழுதுங்கள் என வேண்டுகிறேன்.--மணியன் 01:00, 1 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி மணியன், தேகநிலை இடம் தந்தால், தங்கள் எதிர்பார்ப்பின் படியே நடந்து கொள்வேன்--P.M.Puniyameen 01:44, 1 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என இலக்கு வைத்து ஈடுபாட்டுடன் உழைத்தமைக்கு என் நன்றியும் வாழ்த்துகளும். கிரிக்கெட், இதழ்கள் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைகளை ஒரு தரவுத்தளம் அமைத்து தானியங்கி மூலம் ஏற்றி இருந்தால் மனித உழைப்பு வெகுவாக குறைந்திருக்கும். இது குறித்து உங்களுக்கு நான் முன்பு சுட்டிக்காட்டினாலும் உதவ முடியாமைக்கு வருந்துகிறேன். இனி வரும் காலத்தில், இதே போன்று ஒரு வார்ப்புருவுக்குள் அடங்கக்கூடிய தகவல் கட்டுரைகளைப் பெரு வாரியாகப் பதிவேற்ற எண்ணினால், தயவு செய்து ஆலமரத்தடியில் தெரிவித்து மற்ற பயனர்களின் பங்களிப்பை வேண்டி தானியங்கியாகச் செய்ய வேண்டுகிறேன். ஒரு துறையின் அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்யும் அதே நேரத்தில் பல பயனர்களும் வெகுவாகத் தேடிப் படிக்கக்கூடிய தலைப்புகளுக்கும் முன்னுரிமை கொடுத்து விரிவாக சில கட்டுரைகளை எழுதினால் நன்றாக இருக்கும். இவை என் வேண்டுகோள் மட்டுமே. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் உங்கள் பங்களிப்புகள் சிறக்க என் வாழ்த்துகள்--இரவி 08:08, 2 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி. இரவி, நீங்கள் கூறும் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன். ஆனாலும் கனணியை நான் கற்க வில்லை. எனவே தொழில்நுட்ப அறிவு எனக்கு இல்லை. தானியங்கியாகச் செயற்படுவது குறித்து நான் அதிகமாகக் கற்க வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் சிந்திப்போம்--P.M.Puniyameen 08:57, 2 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

6666 சிறப்பு[தொகு]

புன்னியாமீன் அவர்களே, நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் 6666 கட்டுரைகளை இதுவரை எழுதியிருப்பதில் மகிழ்ச்சி. எனினும் இந்த 6666 எண்ணிக்கை எனக்கு திருக்குர்ஆனில் 6666 வசனங்களே இருப்பதை நினைவூட்டுகிறது. அத்துடன் நீங்கள் ஒரு முஸ்லிமாக இருக்கிறீர்கள். இங்கு இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகள் மிகக் குறைவாகவே உள்ளன. உங்களைப் போன்ற அனுபவம் மிக்க ஒரு எழுத்தாளர் இவை பற்றி வெகுவாக எழுதலாம். உண்மையில், நீங்கள் கிரிக்கட் போன்றவற்றைப் பற்றி அவ்வளவாக எழுதிக்கொண்டிருந்தபோதே எனக்குள் ஒரு சிறு மன வருத்தம் ஏற்பட்டது. அதாவது, நீங்கள் இந்த முயற்சியை இஸ்லாம் பற்றிய விடயங்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அது. எனவே, இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் நிறைய நல்ல கட்டுரைகளை நீங்கள் ஆக்க வேண்டும் என ஒரு முஸ்லிம் சகோதரன் என்ற அடிப்படையில் இஸ்லாம் தந்த உரிமையில் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.--பாஹிம் 16:42, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஹிம், இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் மாத்திரமல்ல கல்வியியல், அரசறிவியல், பொதுவிடயங்கள் சார்ந்த கட்டுரைகளையும் எதிர்பார்க்கலாம் ஆனால்....வேகமாக அல்ல மெதுவாக--P.M.Puniyameen 17:12, 31 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  • புன்னியாமீன், நீங்கள் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைக்காக உங்களுக்கும் உடன் உழைப்பாளர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு உங்கள் சேவை என்றும் தேவை.--பவுல்-Paul 02:28, 1 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி பவுல்-Paul அவர்களே.--P.M.Puniyameen 02:42, 1 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

புன்னியாமீன்! இலக்கை அடைவதற்கான உங்கள் முயற்சிக்கும், அதனை குறித்த கால எல்லைக்கு முன்பாகவே அடைந்ததற்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அடுத்து எப்படி செயல்படலாம் என்பதுபற்றி மின்னஞ்சலில் கேட்டிருந்தீர்கள். அதனை மற்றவர்கள் தீர்மானிப்பது கடினம். நீங்களே உங்களுக்கு ஏற்றவாறு தீர்மானித்து செயல்படுத்தலே சிறப்பாக அமையும் என எண்ணுகின்றேன். நீங்களே கூறியிருந்தபடி, ஏற்கனவே எழுதப்பட்டிருந்த கட்டுரைகளை மேம்படுத்தலும் சிறப்பானதுதான். உங்கள் பங்களிப்பு எவ்வாறு அமையினும், தொடர்ந்தும் விக்கிப்பீடியாவில் சிறப்பாகப் பங்களித்து வெற்றியீட்ட எனது வாழ்த்துக்கள். --கலை 08:24, 2 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி கலை--P.M.Puniyameen 08:35, 2 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • பாராட்டுகள்! மிக்க மகிழ்ச்சி! தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். மேலும் தங்கள் சேவை சிறக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..இது ஒட்டு மொத்த விக்கி உலகிலேயே சாதனையா என்று அறியவேண்டும். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 09:02, 2 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி செந்தி, ---P.M.Puniyameen 09:06, 2 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

7000 கட்டுரைகள், ஒரு பதிவுக்காக[தொகு]

இன்று (2011 நவம்பர் 6), 7000 கட்டுரைகளை நான் நிறைவு செய்துள்ளேன். இந்த 7000 கட்டுரைகளுள் கடைசி 1000 கட்டுரைகளை ஆரம்பிக்க எனக்கு 18 நாட்கள் (2011 அக்டோபர் 20 - 2011, நவம்பர் 6), எடுத்தன. (நாளொன்றுக்கு 55.55 கட்டுரைகள்). 10 நாட்களுக்கு முன்பு (2011 அக்டோபர் 28) 6500 கட்டுரைகளை நிறைவு செய்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்த Kanags க்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் தமிழ்விக்கிப்பீடியாவின் 6666 கட்டுரைகளை எழுத வேண்டும் என்று எனக்குள் வகுத்துக் கொண்ட இலக்குப் பயணத்தை (2011 அக்டோபர் 31) அன்று நான் அடைந்த நேரத்தில் சஞ்சீவி சிவகுமார், தேனி.எம்.சுப்பிரமணி., Kanags, மணியன், இரவி, பாஹிம்,பவுல்-Paul, கலை, செந்தி ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் மின் அஞ்சல் மூலம் வாழ்த்துத் தெரிவித்த நற்கீரனுக்கும் என் நன்றிகள். மேலும் கட்டுரைகளை எழுதும் போது தலைப்புகளை சரி பார்த்து திருத்தமிட்டுத் தந்ததுடன், ஊக்கத்தையும் தந்த சோடாபாட்டில் அவர்களுக்கு என் விசேட நன்றிகள்.--P.M.Puniyameen 14:35, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகளும், கருத்துகளும்[தொகு]

உங்களது முயற்சிக்குப் பாராட்டுக்கள். உங்களுக்குப் பெருநாள் வாழ்த்துக்கள். வல்ல இறைவன் உங்களுக்கும் எனக்கும் நல்லருள் புரிவானாக.--பாஹிம் 13:21, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி பாஹிம். தியாகப் பெருநாள் கொண்டாடும் தங்களுக்கும் எனது மனமார்ந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்.--P.M.Puniyameen 14:51, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் புன்னியாமீன். முயற்சிப் பயணத்தின் இடையில் உங்கள் இணைய இணைப்பில் சிறுதடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் (மின்னல் தக்கத்தால்) மாற்றுவழிகள் மூலம் முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தீர்கள். தளராமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 15:04, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் அயரா முயற்சிக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.--Kanags \உரையாடுக 20:29, 6 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்களுக்கு தெரியுமா அறிவிப்பு திட்டம்[தொகு]




அடியேனின் பணிவான வேண்டுகோள்[தொகு]

தயவு செய்து (சொற்களைப் புணர்த்தும்போது) ஒன்று என்ற நிலைமொழியோடு வருமொழி முதலில் உயிர்வர, “ஓர்“ எனவும், வருமொழி முதல் எழுத்து உயிர்மெய்யாக வர “ஒரு“ எனவும் எழுதவும். இது அடியேனின் பணிவான வேண்டுகோள். --கலைமகன் பைரூஸ் 04:29, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி கலைமகன் பைரூஸ், திருத்தமிருப்பின் திருத்திவிடுங்கள்--P.M.Puniyameen 05:40, 11 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஓராண்டு நிறைவில் தமிழ்விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகள்[தொகு]

இன்று நவம்பர் 13 2011 தமிழ்விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகளை நான் பதிவாக்கிவிட்டேன். புகழனைத்தும் படைத்தவனுக்கே. இந்த முயற்சியில் ஒத்துழைத்த விக்கிப்பீடியர்களுக்கும், வெளிவாரியாக எனது அலுவலர்களுக்கும், மற்றும் ஆலோசனைகளைத் தந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். கடைசியாக எழுதப்பட்ட சுமார் 3000 கட்டுரைகளிலும் கட்டுரைத் தலைப்புகளை சரிபார்த்து தமிழ் உச்சரிப்புக்கேற்ப மாற்றித் தந்த சோடாபாட்டில் அவர்களுக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

7500 என்பது சாதாரண இலக்கல்ல. இந்த இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. சிலநேரங்களில் இப்படியொரு முயற்சி தேவையா? என நான் சிந்தித்த சந்தர்ப்பங்களும் உள. மனச்சோர்வடைந்த நேரங்களில் வாழ்த்துக்களையும் மனத்தெம்பினையூட்டும் ஆறுதல்களையும் தந்த சில நிர்வாகிகளுக்கும் பயனர்களுக்கும் இவ்விடத்தில் நன்றிகூர்வது என் கடமையாகவே கருதுகின்றேன். குறிப்பாக அதி வேகமாக நான் செயல்பட ஆரம்பித்த நேரத்தில் என்னை உற்சாகப்படுத்திய Kanags, பவுல்-Paul,தேனி.எம்.சுப்பிரமணி., சஞ்சீவி சிவகுமார், பாஹிம், மணியன், இரவி, கலை, செந்தி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தப் பயணத்தில் என் கட்டுரையாக்க முயற்சிகளை ஒரு பதிவுக்காக கீழே தந்துள்ளேன்.

  • தமிழ்விக்கிப்பீடியாவில் நான் இணைந்த திகதி நவம்பர் 14 2010
  • முதலில் எழுதிய கட்டுரை நவம்பர் 21 2010
  • ஓராண்டு நவம்பர் 14 2010 முதல் நவம்பர் 13, 2011 வரை (365 நாட்கள்) நிறைவில் எனது அடைவு 7500 கட்டுரைகள். (நாளொன்றுக்கான சராசரி கட்டுரையாக்கம்: 20.55, மாதமொன்றுக்கான சராசரி கட்டுரையாக்கம்: 625)
  • முதல் 500 கட்டுரைகளுக்கும் எடுத்த காலம் - நவம்பர் 14 2010 - மார்ச்சு 16 2011

நான் ஆயிரங்களைத் தொட்ட கால எல்லை

இந்த ஓராண்டில்...

குறுகிய காலங்களில் கட்டுரையாக்கம்

தமிழ்விக்கிப்பீடியாவில் அறிமுகம் செய்யும் பொருட்டு ஊடகங்களில் என்னால் எழுதப்பட்ட கட்டுரைகளும், வழங்கப்பட்ட நேர்காணல்களும்

  • சனவரி 11, 2011 - தட்ஸ்தமிழ் (இணைய இதழ்) -விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம் எனும் தலைப்பில் என் கட்டுரையொன்று இடம்பெற்றது.
  • சனவரி 11, 2011 - தேசம்நெற் (இணைய இதழ்) விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம் எனும் தலைப்பில் என் கட்டுரையொன்று இடம்பெற்றது.
  • சனவரி 11, 2011 - இலங்கைநெற் (இணைய இதழ்) விக்கிப்பீடியா கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம் எனும் தலைப்பில் என் கட்டுரையொன்று இடம்பெற்றது.
  • சனவரி 11, 2011 - புன்னியாமீன் (வலைப்பூ) விக்கிப்பீடியா எமது சொத்து எனும் தலைப்பில் என் கட்டுரையொன்று இடம்பெற்றது.
  • சூலை 2011, ஆகஸ்ட் 2011 ஞானம் இதழ்களில் தமிழ்விக்கிப்பீடியா ஓர் ஆய்வு எனும் தலைப்பில் விரிவான ஆய்வுக் கட்டுரையொன்று இடம்பெற்றது. (இவ் ஆய்வுக்கட்டுரை இரண்டு இதழ்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றன.)
  • சனவரி 16 2011 - ஆங்கில விக்கிப்பீடியாவில் 10வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிச்சர்லாந்து கனல்-கே அரச வானொலியில் எனது ஒரு மணி நேர நேர்காணலொன்று ஒலிபரப்பானது.
  • சூன் 22, 2011 - இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற எனது நேரடி நேர்காணலில் தமிழ்விக்கிப்பீடியா தொடர்பாகவும் கூடுதலான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

என்னால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் விக்கி அறிமுக நிகழ்வு

ஏனைய திட்டங்கள்

  • இலங்கையில் பாடசாலைகளுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் களப்பணி ஆய்வுத்திட்டமொன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்தேன். விக்கியின் ஈடுபாட்டு நிலையை உறுதிப்படுத்தக்கூடிய ஆள் அடையாள அட்டை அல்லது உறுதிப்படுத்தல் கடிதம் இல்லாமை காரணமாக அத்திட்டத்தை பின்போட அல்லது கைவிட வேண்டிய நிலையேற்பட்டது.
  • அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் தமிழ்விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்யும் பொருட்டு இலங்கையிலுள்ள 2650 தமிழ்மொழிப் பாடசாலைகளுக்கு தனிப்பட்ட செலவில் தமிழ்விக்கிப்பீடியா விபரங்களையும் கடிதங்களையும் அனுப்பி வைத்தேன்.

இவை அனைத்தையும் புரிய பிரதான நோக்கம் தமிழ் விக்கியை வளர்ப்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

இரண்டாம் ஆண்டில் மீண்டும் சந்திப்போம்--P.M.Puniyameen 17:35, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

7500 கட்டுரைகள் எனும் இலக்கு[தொகு]

7500 கட்டுரைகள் எனும் இலக்கை ஒரு வருடத்தில் அடைந்த உங்கள் வெற்றியில் வாழ்த்துகிறேன். நீங்கள் மனந்தளராமல் எழுதவேண்டும் எனும் ஒரே நோக்கமே எனது கட்டுரை எண்ணிக்கை நிருணயத்தில் பின்னணியாயிருந்தது. சிலவேளை உங்களை சிரமப்படுத்திவிட்டேனோ என்ற உணர்வும் எனக்குள் எழுந்ததுண்டு. இடையில் இணைய இணைப்பும், தொலைபேசி இணைப்பும் செயலிழந்தமை. ஆயினும் தளராமல் இலக்கை அடைந்த உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். நாளை விக்கிக்கு வந்த முதலாம் ஆண்டைக் கொண்டாடும் உங்களுக்கு என் முற்கூட்டிய வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 16:16, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள்[தொகு]

ஒரு வருடத்திற்குள் 7500 கட்டுரைகள் எனும் இலக்குடன் களமிரங்கிய தங்களுக்குக் கிடைத்த வெற்றி தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரை எண்ணிக்கை அதிகரிப்புக்கும், விக்கிப்பீடியாக்களின் தரப்பட்டியலில் முன்னேற்றம் காணவும் உதவியது. வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:53, 13 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியில் 7500 கட்டுரைகளைத் தனியொருவரே சேர்ப்பதென்பது எளிதன்று. நீங்கள் அதனைச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.--பாஹிம் 01:07, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் புன்னியாமீன்.--Kanags \உரையாடுக 07:06, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் பங்களிப்பு மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துகள்... -- கி. கார்த்திகேயன் 07:11, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சஞ்சீவிசிவகுமார், தேனி.எம்.சுப்பிரமணி, பாஹிம்,Kanags, கி. கார்த்திகேயன் தங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்--P.M.Puniyameen 08:35, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை 11:19, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி கலை--P.M.Puniyameen 11:21, 14 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
முக்கியமான கேள்வி

சில சமயம் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உள்ள புதியன என்ற இணைப்பை அழுத்தினால் நீங்கள் கடைசியாக இயற்றிய கட்டுரைகளின் பட்டியல் வருகிறது. அது எப்படி..?--தென்காசி சுப்பிரமணியன் 15:49, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

முக்கியமான பதில்

தானியங்கியும் பாவம்தான் தென்காசி சுப்பிரமணியன். வேகமாக ஓடியதால் சடுதியாக பிரேக் போட்டுக்கொள்ள முடியாதுள்ளது. மெல்ல மெல்ல பிரேக் போட்டு விடுவோம்--P.M.Puniyameen 17:13, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

/* விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை - கண்டி */[தொகு]

நீங்கள் பேசிக்கொண்ட கண்டி விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை குறிப்பை ஆலமரத்தடியில் போட்டுள்ளேன். அதன் மேலதிக ஒழுங்கமைப்பு பற்றி தெரிவிக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் 23:52, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சிவகுமார் கண்டியில் விக்கி அறிமுகப் பட்டறையை சனவரி மாதத்தில் நடத்தக்கூடியதாக இருக்கும். இது நவம்பர் மாத இறுதிப் பகுதி ஆகையால் இலங்கைப் பாடசாலைகளில் ஆண்டிறுதிப் பரீட்சை நடைபெறும் காலமாகும். தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதுடன், இப்பட்டறையை ஒழுங்குசெய்துள்ள பாடசாலையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான இணைப்பு மத்திய நிலையமாக தொழில்படுவதால் டிசம்பர் மாதத்திலும் முடியாதுள்ளது. எனவே தற்போதைக்குத் திட்டமிடலில் சில சிரமங்கள் உள்ளன. டிசம்பர் மாத இறுதியில் இது சம்பந்தமான விரிவான திட்டமிடல் ஏற்பாடுகளை அறியத் தருவேன். --P.M.Puniyameen 05:25, 23 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மனநிறைவுக்காக இந்தப் பதிவு: இன்று 7777[தொகு]

இன்று நவம்பர் 26 2011 இல் என்னால் 7777 கட்டுரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பதிவாக்கத்துக்கு 1 ஆண்டு 12 நாட்கள் எடுத்தன. ஒத்துழைத்த அனைவருக்கு இதயம்கனிந்த நன்றிகள். --P.M.Puniyameen 15:16, 26 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் எழுந்து, விக்கிப்பீடியாவில் பல்துலக்கி, விக்கிப்பீடியாவில் தேநீர் அருந்தி, விக்கிப்பீடியாவில் குளித்து, விக்கிப்பீடியாவில் காலை உணவு உண்டு, .... விக்கிப்பீடியாவில் மதிய உணவு உண்டு, .... விக்கிப்பீடியாவில் இரவு உணவு உண்டு, விக்கிப்பீடியாவிலேயே நீங்கள் உறங்கிவிடுவீர்களோ? வெளிப்படையாகச் சொல்கிறேன்... உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. பாராட்டும் தகுதி இல்லை; நன்றி சொல்கிறேன்! உங்களின் தொண்டு அளப்பரிய தொண்டு!! வாழ்க வளமுடன்!!! --பயனர்:Selvasivagurunathan mஉரையாடுக
அன்புள்ள செல்வ சிவகுருநாதன், மனந்திறந்த தங்கள் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றிகள்.என்றும் அன்புடன்--P.M.Puniyameen 01:08, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் புன்னியாமீன். கூடவே செல்வ சிவகுருநாதனின் உருக்கமான பாராட்டுக்களும் என்னைப் பாதித்தன. நான் வழக்கமாக சொல்வது போல உங்களால் தான் இது முடிகிறது புன்னியாமீன். இது இயற்கை தந்த வரம். சஞ்சீவி சிவகுமார்--192.248.66.3 03:59, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
எனது வெற்றிகளின் முக்கியபங்கு என்றைறைக்கும் தங்களுக்கே உரியவை சஞ்சீவி சிவகுமார். தங்களைப் போன்ற நல்லிதயங்களின் ஆதரவும், ஆசீர்வாதங்களுமிருப்பின இன்னும் சாதிக்கலாம். மிக்க நன்றி--P.M.Puniyameen 15:23, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

விரிவாக்கம் செய்தமைக்கு நன்றி![தொகு]

நான் தொடங்கிய அனுருத்த ரத்வத்தை கட்டுரையை விரிவாக்கம் செய்தமைக்கு நன்றி. (கண்டி ஈபீஐ யில் கலைமுதற்றேர்வு எனது அரசியல் ஆசிரியராகவிருந்த நீங்களே இப்பணியைச் செய்தமையால் நிறைந்த திருப்தி எனக்குள். -தொடரட்டும் உங்கள் பணி!) --கலைமகன் பைரூஸ் 01:32, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மனநிறைவுக்காக இந்தப் பதிவு: இன்று 8000[தொகு]

இன்று திசம்பர் 4 2011 இல் என்னால் 8000 கட்டுரைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பதிவாக்கத்துக்கு 1 ஆண்டு 20 நாட்கள் எடுத்தன. ஒத்துழைத்த அனைவருக்கு இதயம்கனிந்த நன்றிகள்.

நான் ஆயிரங்களைத் தொட்ட கால எல்லை

விசேட நன்றிகள்

கடைசியாக எழுதப்பட்ட சுமார் 3500 கட்டுரைகளிலும் கட்டுரைத் தலைப்புகளை சரிபார்த்து தமிழ் உச்சரிப்புக்கேற்ப மாற்றித் தந்த சோடாபாட்டில் அவர்களுக்கு எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மனமார்ந்த நன்றிகள்.

நான் ஒவ்வொரு மைல் கற்களைத் தாண்டி வரும் போதும், என்னை உற்சாகப்படுத்தி என் மனநிலை தளர்ந்து விடாது வாழ்த்துக்களைத் தெரிவித்து ஊக்கம் தரும் Kanags, பவுல்-Paul,தேனி.எம்.சுப்பிரமணி., சஞ்சீவி சிவகுமார், பாஹிம், மணியன், கலை, செந்தி, செல்வ சிவகுருநாதன், கி. கார்த்திகேயன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இன்சா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்--P.M.Puniyameen 18:05, 4 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகளும், கருத்துகளும்[தொகு]

புன்னியாமீன், எட்டாயிரம் கட்டுரைகளை எழுதி எவரும் எட்ட முடியாத (இப்போதைக்கு:) ஒரு சாதனையைப் படைத்திருக்கிறீர்கள். நாம் 50,000 கட்டுரைகளை எட்டிப் பிடித்து ஆங்கில விக்கியின் முதற்பக்கத்தில் தமிழ் விக்கியையும் இணைக்கும் காலம் மிக விரைவில் வரும். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 20:11, 4 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்கநன்றி Kanags, தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதே எனதும் நீண்டநாளைய ஆசை. எமது விக்கிப்பீடியர்கள் பூரண ஒத்துழைப்பு தருவார்களாயின் 2012ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை எட்ட முடியும். விக்கிப்பீடியா என்பது ஒரு கூட்டு முயற்சி. விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு சுயேட்சையாக இணைந்துள்ள அனைவரும் கைகோர்த்து செயற்பட்டால் இலக்குகளை அடைவது கடினமானதல்ல. --P.M.Puniyameen 03:15, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மீண்டும் வாழ்த்துக்கள். எட்டாயிரம் கட்டுரைகள் ஒரு தனி மனிதனால் என எண்ணும்போதே மலைப்பாயுள்ளது. வாழ்த்துக்கள் புன்னியாமீன். --சஞ்சீவி சிவகுமார் 23:55, 4 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

தங்கள் வாழ்த்துக்கு மிக்கநன்றி சஞ்சீவி சிவகுமார், எனது இந்தப் பயணத்தில் ஒவ்வொரு கட்டங்களை நான் தாண்டிவரும்போது மிகவும் அவதானமாக உடனுக்குடன் வாழ்த்துக்களைத் தெரிவித்து தைரியப்படுத்தி வருவதில் தங்கள் ஆர்வத்தை நான் நேசிக்கின்றேன். சுயேட்சையாக செயற்படும் விக்கிப்பயனர்களுக்கு வாழ்த்துக்கள், பதக்கங்கள் என்பன ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கக்கூடிய டானிக்குகளே. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்துவரும் பலருக்கு இதற்காக ஓரிரு நிமிடங்களை ஒதுக்க நேரமில்லாத நிலையில் தங்களது இச்செய்கை உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. --P.M.Puniyameen 04:30, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

“இதனை இதனால் இவன் செய்வானென் ராய்ந்து, அதனை அவன்கண்விடல்“ என்பதற்கேற்ப, சரியான ஒருவரிடம் சிக்கிக்கொண்டுள்ளது தமிழ்விக்கி. ஆம், நீங்கள்தான் உயிர்மூச்சாகக் கொண்டு விக்கியில் பங்களிக்கிறீர்கள்!! எண்ணாயிரம் என்பதை எண்ணுங்கால்.....!!!! உங்கள் உயரிய பணிதொடரவும் உங்கள் வாழ்வுநீளவும் இறையிடம் ஏந்துகிறேன் கரங்கள்! --கலைமகன் பைரூஸ் 03:21, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி கலைமகன் பைரூஸ் --P.M.Puniyameen 04:45, 5 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

திரு.புன்னியாமீன் அவர்களுக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள். உங்களுடை கட்டுரை எண்ணிக்கையை தற்போது தான் பார்த்தேன் வியப்பாக இருந்தது எனக்கும் ஊக்கம் அளித்தது. என்னுடை பங்களிப்பை அதிகரிக்க முயற்சிக்கிறேன். --ப.ரகுநாதன்

தங்கள் வாழ்த்துக்கு மிக்கநன்றி ப.ரகுநாதன், என்னுடைய பங்களிப்பை அதிகரிக்க முயற்சிக்கிறேன் என்ற தங்கள் வார்த்தையை நான் மதிக்கின்றேன். தமிழ் விக்கிக்குத் தேவை தங்களைப் போல ஊக்கமுள்ளவர்களே. என்னால் எந்த உதவி தேவையோ தொடர்பு கொள்ளுங்கள். முடிந்ததைச் செய்கின்றேன்--P.M.Puniyameen 05:14, 8 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மின்னஞ்சல்[தொகு]

வணக்கம், உங்கள் மின்னஞ்சல் கடவுச்சொல்லை மிகப் பாதுகாப்பான ஒன்றாக மாற்றிக் கொள்ளவும். அங்கு இருந்து எரித அங்ஞல்கள் வருவதால் உங்கள் மின்னஞ்சல்/கணிக்கு வைரசு வந்திருக்கலாம் அல்லது யாராவது hack செய்து இருக்கலாம். உங்கள் மின்னஞ்சலில் செல்ல முடியவில்லை. அதனாலேயே இங்கு குறிப்பிடவேண்டியதாயிற்று. --Natkeeran 19:43, 22 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

Natkeeran வணக்கம், தங்கள் தகவலுக்கு மிக்கநன்றி. கடந்த சில மாதங்களாக எனது மின்னஞ்சலில் இந்தப் பிரச்சினை இருந்துவருகின்றது. இதை எவ்வாறு தீர்க்க வேண்டுமென பலரிடம் அலோசனை வேண்டியும் எனக்கு முறையான ஆலோசனைக் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் விக்கிப்பீடியாவில் என் புதிய மின்னஞ்சலை கடந்த வாரம் மாற்றம் செய்தேன். நீங்கள் குறிப்பிட்டது போல கடவுச் சொல்லை இன்று மாற்றியுள்ளேன். இதன் பின்பாவது சரிவருமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இம்மாற்றத்திலும் சரிவராவிடின் யாகூவில் புதிய மின்னஞ்சல் முகவரியை பெறவே நாடியுள்ளேன். மேலும், இந்த மின்னஞ்சல் பிரச்சினையினால் கடந்த சில மாதங்களாக சில முக்கியமான தொடர்புகளை என்னால் இழக்க வேண்டியிருந்தது.

அத்துடன், எனது புதிய மின்னஞ்சல் முகவரியை கீழே இணைத்துள்ளேன்.

pmpuniyameen@gmail.com

மீண்டும் இதனைச் சுட்டிக் காட்டி ஆலோசனைகளைத் தந்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 05:10, 23 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]


பொதுவாக ஜிமெயில் சற்றுக் கூடிய பாதுகாப்பானது. நீங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் அமைப்புக்குள் (mail settings) சென்று Always use https என்பதைத் தெரிவு செய்து கொள்ளவும். இது கூடிய பாதுகாப்பைத் தரும்.
Browser connection:
	Always use https
	Don't always use https

இடைக்கிட ஜிமெயின் அடியில் உள்ள Last account activity: ...Details என்ற தொடரின் details என்பததைத் செடுக்கி, பிற இடங்களில் உள்பதிகை செய்து இருந்தால் அவற்றில் இருந்து வெளியேறிக் கொள்ளல் நன்று.

எல்லாவற்றுக்கும் லேலாக நல்ல கடவுச்சொல் அமைத்துக் கொள்ள வேண்டும். எண்கள், எழுத்துக்கள், சின்னங்கள் கலந்தாக நீண்டதாக இருக்க வேண்டும். நன்றி. --Natkeeran 03:49, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்கநன்றி Natkeeran. தாங்கள் குறிப்பிட்டது போலவே செய்கின்றேன். மேலதிகமாக யாதேனும் சிக்கல் ஏற்பட்டால் தங்களது உதவியையே நாடிநிற்பேன். --P.M.Puniyameen 05:28, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]


Greetings[தொகு]

The Tamil Wikipedia has reached 1,000,000 page edits... Congrats --Naveenpf 05:41, 26 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

Naveenpf தமிழ் விக்கிப்பீடியாவின் மொத்தத் தொகுப்புக்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியுள்ளது எனும் போது 2003 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வரும் அனைத்து தமிழ் விக்கிப்பீடியா பயனர்களினாலும் மொத்தமாக மேற்கொள்ளப்பட்டவையே. --P.M.Puniyameen 07:30, 26 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]