பயனர் பேச்சு:P.M.Puniyameen/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், P.M.Puniyameen, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


--தேனி.எம்.சுப்பிரமணி. 05:48, 14 நவம்பர் 2010 (UTC)

வணக்கம் புன்னியாமீன் அவர்களே, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சிறு கருத்து. விக்கிப்பீடியா கொள்கைப்படி தன்னைப்பற்றிய ஒரு கட்டுரையில் அவரே எழுதுவது இங்கு தவிர்க்கப்படுகிறது. அப்படியான ஒரு கட்டுரை நடுநிலையானதாக இருக்க முடியாது என்ற ஒரே காரணத்துக்காகவே இந்நடைமுறை. பீ. எம். புன்னியாமீன் என்ற கட்டுரையில் நீங்கள் சேர்க்கும் பகுதிகள் அழிக்கப்படலாம். நன்றி.--Kanags \உரையாடுக 11:52, 14 நவம்பர் 2010 (UTC)

தலைப்பு பற்றிய கருத்து[தொகு]

வணக்கம், விக்கியில் உங்கள் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. நபர்கள் பற்றிய கட்டுரைகளில் தலைப்பு விக்கிப்பீடியா முறையில் முதலெழுத்துக்களுக்கு இடையில் ஒரு இடவெளி விடுவது முறை. அதன் படி, எஸ்.எம்.ஏ.ஹசன் பற்றிய கட்டுரைத் தலைப்பு எஸ். எம். ஏ. ஹசன் என்றவாறு இருக்க வேண்டும். மற்றும் நீங்கள் எழுதும் கட்டுரைகளை உங்கள் பயனர் பெயரிலேயே புகுபதிகை செய்து தொடங்கலாமே. (இது கட்டாயமில்லை). விக்கியில் கட்டுரை ஒன்றைத் தொகுக்கும் போது நீங்கள் உங்கள் பயனர் பெயரில் புகுபதிகை செய்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் பயனர் பெயரில் புகுபதிகை செய்யும் போது மேலே வலது பக்க மூலையில் உங்கள் பயனர் பெயர் மற்றும் சில அவசியமான menu க்கள் இருக்கும். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 08:31, 22 நவம்பர் 2010 (UTC)

வணக்கம் புண்ணியமீன். பயனர் பெயர் உங்கள் பதிவேற்றத்தின் போது வரவில்லை எனக் கேட்டீர்கள்(தொலைபேசி உரையாடலின் போது). பதிவை நிறைவேற்றும் போது புகுபதிகை நிலையை உறுதிசெய்து கொள்ளவும்.--சஞ்சீவி சிவகுமார் 10:12, 22 நவம்பர் 2010 (UTC)

வணக்கம்,Kanags, சஞ்சீவி சிவகுமார் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன் PM.Puniyameen

தலைப்பு[தொகு]

கட்டுரையின் தலைப்பு பெயர்ச்சொல்லாக இருத்தல் வேண்டும். அதற்கு குறிப்பான பெயரிருக்கும் போது, பண்புகளை விளக்கும் பெயர் வைக்க வேண்டியதில்லை. எனவே உங்கள் கட்டுரையை மகிந்த ராஜபக்ச துறைமுகம் என்று மாற்றியுள்ளேன்.--சோடாபாட்டில் 14:54, 25 நவம்பர் 2010 (UTC)

நன்றி சோடாபாட்டில்.- நான் ஒரு புதிய பயனர், தங்கள் ஆலோசனைகள் எதிர் காலத்தில் உரமாக அமையும் -P.M. Puniyameen

தலைப்பு குறித்து தேடுபவர்களுக்கும் வசதியாக தலைப்பு அமைக்கப்படுவது முக்கியம். எனவே சோடாபாட்டில் மாற்றியுள்ள முறையே சரி. நீங்கள் உரைப்பகுதியில் கருத்தை எழுதிய பின் கையொப்ப குறியீட்டை அழுத்தி உங்கள் பெயரையும் நேரத்தையும் இலகுவில் பதியலாம்.--சஞ்சீவி சிவகுமார் 15:45, 25 நவம்பர் 2010 (UTC)

தமிழ் விக்கியில் எனது பங்களிப்புகள்[தொகு]

உங்கள் வேண்டுகோளுக்கு அமைய தமிழ்விக்கியில் தொடங்கிய கட்டுரைகள்இணைப்பைச் சீர்செய்துள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் 23:25, 26 நவம்பர் 2010 (UTC)

மிக்க நன்றி சிவகுமார். விக்கியில் கற்க இன்னும் எவ்வளவோ உள்ளன. படிப்படியாக கற்க வேண்டும். விக்கி குறித்து விரிவாகக் கற்க யாதாவது தமிழ் மொழி நூல்கள் இருப்பின் அதனைப்பெற்றுத்தர யாராவது உதவுவீர்களா?--puniyameen 02:33, 27 நவம்பர் 2010 (UTC)

தமிழ் விக்கிக்கு நல்வரவு. விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு), மற்றும் விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல் ஆகிய பக்கங்களில் மேலும் தகவல்களை நீங்கள் பெற முடியும். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய ஒரு அறிமுக நூலை பயனர்தேனி.எம்.சுப்பிரமணி அவர்கள் எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ்நாட்டில் வெளிவந்துள்ளது. --Natkeeran 05:22, 27 நவம்பர் 2010 (UTC)

எனது கருத்து[தொகு]

விக்கிபீடியர்கள் என்ற வகையில் தங்கள் அனைவரும் வழங்கும் ஆதரவிற்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். விக்கிபீடியாவில் புதிய பயனர்களை வரவேற்று அவர்களுக்குப் போதிய அறிவுரைகளை வழங்கி வழிநடத்தும் பாணி மிகவும் என்னைக் கவர்ந்தது. எனது அனுபவப்படி விக்கிபீடியாவில் புதிய பயனர்களை வரவேற்று வழிநடாத்துவதைப் போல வேறெங்கும் நான் காணவில்லை. தங்கள் அனைவரினதும் ஆர்வம் என்னைத் தொடர்ந்தும் எழுதத் தூண்டுகின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிச்சயமாக எழுதுவேன்.

தமிழ் விக்கியைப் பற்றி பூரணமான அறிவைப் பெற வேண்டும் என்றும், விக்கிக்கு மேலும் பல பயனர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் எனக்கு ஆசையுண்டு. முதலில் ஓரளவு நான் கற்றுக் கொண்ட பின்பு புதிய பயனர்களை அறிமுகம் செய்ய நடவடிக்கையை மேற்கொள்வேன்.

இலங்கையில் இணையத்தள பாவனை வெகு குறைவு. 'ஸ்ரீலங்கா டெலிகொம்' புள்ளி விபரப்படி 8.3 வீதமே 2010 நவம்பர் வரை இணையப்பாவனையுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு புரோட்பேன்ட் இணைய வசதிகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இன்னும் சில ஆண்டுகளில் இணையப்பாவனை அதிகரித்த கணிசமான வாய்ப்புகள் உள்ளன. இந்தாண்டு வரவுசெலவு திட்டத்தில்கூட இணையப்பாவனைக் கட்டணங்கள் 50வீதத்தால் குறைப்பதற்கான சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இலங்கையில் இணைப்பாவனை வெகு விரைவாக அதிகரிக்கப்படலாம் என கருத இடமுண்டு.

அச்சமயம் தமிழ் இணையப்பாவனையாளர் மத்தியில் தமிழ்விக்கியைப் பற்றி அறிமுகம் செய்வது ஒரு தார்மீகப் பொறுப்பாகும் எனக் கருதுகின்றேன். முதலில் நான் கற்ற பின்பு அச்சு ஊடகங்களிலும், வசதிப்படுமிடத்து இலங்கை வானொலி, மற்றும் தொலைக்காட்சிகளிலும் விக்கி பற்றிய விரிவான அறிமுகத்தினை வழங்க ஆர்வம் கொண்டுள்ளேன்.--puniyameen 07:53, 28 நவம்பர் 2010 (UTC)

தங்கள் ஆர்வம் எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கிய மைய நீரோட்டத்தில் இருக்கும் தங்களைப் போன்றோரின் பங்களிப்பால் விக்கி இன்னும் பன்மடங்கு வளரும். ஊடகங்களிலும், பொதுமக்களிடத்திலும் விக்கியினை அறிமுகம் செய்ய பல்லூடகக் கோப்புகள் சிலவற்றை விக்கி சமூகத்தினர் உருவாக்கி வைத்துள்ளனர். நீங்கள் அறிமுகம் செய்யும் போது அவை உங்களுக்கு உதவியாக இருக்கும்--சோடாபாட்டில் 09:35, 28 நவம்பர் 2010 (UTC)

நலம் பெற வாழ்த்துக்கள்[தொகு]

புன்னியாமின் தனது கண் சத்திரசிகிச்சை காரணமாக உடனடியாக விக்கியில் பங்களிப்புச் செய்ய முடியாதிருப்பதாகத் தெரிவித்தார். அவர் விரைவில் நலம்பெற வாழ்த்துகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 06:15, 5 திசம்பர் 2010 (UTC)

புன்னியாமீன் அவர்களின் சிகிச்சை வெற்றிபெற்று விரைவில் நலமே திரும்ப வாழ்த்துகிறேன்.--Kanags \உரையாடுக 06:18, 5 திசம்பர் 2010 (UTC)

விக்கிபீடியாவில் வேகமாக எழுதத் தொடங்கிய போதிலும்கூட, கடந்த வாரம் என் கண்ணில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைக் காரணமாக டாக்டரின் ஆலோசனைப்படி கணினிப் பாவனையை ஓரிரு வாரங்களுக்கு குறைக்க வேண்டிய நிலையிலுள்ளேன். பூரண குணம் கண்டதும் நான் தொடர்ந்தும் எழுதுவேன். எனது நலனில் அக்கறை கொண்டு சுகப் பிரார்த்தனை செய்த விக்கி அன்பர்களுக்கு என மனமார்ந்த நன்றிகள். --P.M.Puniyameen 06:08, 7 திசம்பர் 2010 (UTC)

காரணத்தை அறியலாமா?[தொகு]

விக்கியில் புதிய கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய முடியாதுள்ளது.. இப்பக்கத்தைத் தொகுக்க தங்களுக்கு அனுமதி இல்லை. இப்பக்கம் தொகுக்கப்படுவதை தவிர்ப்பதற்காக பூட்டப்பட்டுள்ளது என வருகிறது.. காரணத்தை அறியலாமா?--P.M.Puniyameen 07:16, 11 திசம்பர் 2010 (UTC)

சோதித்துப் பார்த்தேன். உங்கள் கணக்கில் எந்த பிரச்சனையும் உள்ளது போலத் தெரியவில்லை. எந்தப் பக்கத்தை தொகுத்தால் இந்த செய்தி வருகிறது என்று சொல்லுங்களே. குறிப்பிட்ட பக்கங்கள் காக்கக்பட்டிருக்கலாம் (வேறு யாரேனும் உள்ளடகங்களை நீக்கியிருந்தால்). எந்தப் பக்கத்தில் இது போன்று நிகழ்ந்தது என்று சொல்லுங்கள் சோதித்துப் பார்க்கிறேன்.--சோடாபாட்டில் 07:21, 11 திசம்பர் 2010 (UTC)

பயனர் பேச்சு:P.M.Puniyameen பக்கத்திலிருந்து ஆரம்பிக்கக்பிக்க முயன்றேன். அப் பக்கத்தில் இது நிகழ்ந்தது. --P.M.Puniyameen 07:32, 11 திசம்பர் 2010 (UTC)

ஒருமுறை லாகவுட் செய்து விட்டு மீண்டும் லாகின் செய்த பின் முயன்று பாருங்கள். தொடர்ந்து இந்த நிலை நீடிப்பின் இப்ப்க்கத்தில் உள்ள பொத்தானை ஒரு முழை அழுத்தி விட்டு சோதித்துப் பாருங்கள்.--சோடாபாட்டில் 07:37, 11 திசம்பர் 2010 (UTC)

சோடாபாட்டில் - லாகவுட் செய்து விட்டு மீண்டும் லாகின் செய்த பின் முயன்று பார்த்தேன் மாற்றம் இல்லை. நீங்கள் குறிப்பிட்ட பொத்தானை அழுத்தியும் சோதித்துப் பார்த்தேன். மாற்றம் இல்லை.தொடர்ந்து என்ன செய்யலாம்?--P.M.Puniyameen 07:58, 11 திசம்பர் 2010 (UTC)

எனக்கும் புதிராக உள்ளது. எங்கு பிரச்சனை உள்ளது என்பதைக் கண்டறிய மேலும் சில சோதனை செய்து பார்க்க வேண்டுகிறேன். கீழே ஒரு சிவப்பிணைப்பை கொடுத்துள்ளேன். அதில் ஏதாவது சேமித்து ஒரு பக்கத்தை உருவாக்க முடிகிறதா என்று சோதித்துப் பாருங்கள். முடியவில்லையெனில் லாகவுட் செய்து விட்டு ஐபி முகவரியாக இதே சிவப்பிணைப்பில் சோதனைப் பக்கத்தை உருவாக்கப் பாருங்கள். மேலும், உருவாக்குவதில் மட்டும் பிரச்சனையா தொகுப்பதில் பிரச்சனையா என்பதை அறிய ஏற்கனவே நீங்கள் உருவாக்கிய கட்டுரை ஒன்றை சோதனை முறையில் தொகுத்து சேமித்துப் பாருங்கள்.
பயனர்:P.M.Puniyameen/சோதனை
--சோடாபாட்டில் 08:12, 11 திசம்பர் 2010 (UTC)


இதில் சேமிக்க முடிகிறதே. பிரச்சனை இதில் இல்லை எனவே உங்கள் பேச்சுப்பக்கம் வார்ப்புரு மூலம் சேமிக்க முயலுவதில் தான் பிரச்சனை என நினைக்கிறேன். இக்கட்டுரையின் தலைப்பையே ஒரு சிவப்பிணைப்பாக கீழே இடுகிறேன். இதன் மூலம் சேமிக்க முடிகிறதா என்று சோதித்துப் பாருங்கள்

சி - வெட்டுப் புள்ளி

இதில் வெற்றி கிட்டினால் நான் மேற்சொன்னது உறுதியாகிறது. இனி இது போன்று ஒரு சிவப்பிணைப்பை உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, பயனர் பக்கத்திலோ உருவாக்கி அதிலிருந்து கட்டுரைகளை சேமியுங்கள். இந்த வார்ப்புருவில் என்ன சிக்கல் என்று நான் ஆராய்ந்து பார்க்கிறேன். அதுவரை இந்த சிவப்பிணைப்பு முறையினையே பின்பற்றுங்கள்.

தங்கள் குறிப்பிட்டபடி முயன்றேன். கட்டுரை பதிவாகியது. சிவப்பிணைப்பை பேச்சுப் பக்கத்திலோ, பயனர் பக்கத்திலோ எவ்வாறு உருவாக்குவது என்று எனக்குத் தெரியாது. தயவு செய்து நிலமையை சீர்செய்து தரவும். கணனி நுணுக்கங்கள் எனக்குத் தெரியாது.-மிக்க நன்றி--P.M.Puniyameen 09:02, 11 திசம்பர் 2010 (UTC)

சிவப்பிணைப்பை உருவாக்க தலைப்பினை இரு சதுர அடைப்புகளிடையே ([[ ]]) எழுதி சேமிக்க வேண்டும். உள்ளிணைப்புகள் கொடுப்பது போன்றே. ஏற்கனவே உள்ள ஒரு கட்டுரைக்கும் உள்ளிணைப்பு கொடுத்தால் நீல இணைப்பாக வரும். இல்லாத தலைப்புக்கு (உருவாக்க நினைக்கும் தலைப்புக்கு) உள்ளிணைப்பு கொடுத்தால் சிவப்பாக உருவாகும். எ.கா. கீழே உள்ள சதுர இணைப்புகளிடையே “உருவாக்க நினைக்கும் தலைப்பு” என்பதற்கு பதில் கட்டுரைத் தலைப்பினை இடுங்கள் தேவையான சிவப்பிணைப்பு உருவாகி விடும்.

சி. பன்னீர் செல்வம்

--சோடாபாட்டில் 09:14, 11 திசம்பர் 2010 (UTC)

உங்கள் கருத்துக்களை எதிர்ப்பார்க்கின்றேன்.[தொகு]

விக்கிப்பீடியாவில் ஒரு புதிய பயனர் என்ற அடிப்படையில் சில புதிய கட்டுரைகளை தொடங்கியுள்ளேன். இக்கட்டுரைகள் பற்றி ஒரு மீளாய்வினை நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

எழுத்துத்துறையில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நான் ஈடுபாடுகாட்டி வந்த போதிலும்கூட, விக்கி ஊடகத்துக்கு நான் புதியவன். எனவே, என்னுள் எழும் சில வினாக்களை இங்கு நான் முன்வைப்பது என்னை நான் சரிசெய்து கொள்வதற்காகவே.

 • என் கட்டுரை விக்கி நெறிமுறைகளுக்கு உட்பட்டனவாக இருக்கின்றனவா? இல்லாவிடின் நான் எத்தகைய மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
 • என்னால் தொடங்கப்படும் கட்டுரைகள் விக்கிக்கேற்ற வகையில் தரமானவையாக இருக்கின்றனவா? தரம் குறைவாகக் காணப்படின் அதை எவ்வழியில் மேலும் தரப்படுத்தலாம்.
 • கூற வரும் விடயத்தை எளிமையாக கூற எத்தனிப்பது என் தனிப்பட்ட எழுத்துநடை. இந்த அடிப்படையில் விக்கியில் நான் தொடங்கியுள்ள கட்டுரைகளின் நடை மிக எளிமையாக இருக்கின்றதா?

அல்லது இந்நடையில் நான் யாதாவது மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமா?

விக்கியில் எழுதுவது மனநிறைவைத் தருகின்றது.

விக்கிப்பீடியர்கள் எமது கட்டுரைகளை முறைப்படுத்தி ஆலோசனைகளைக் கூறுவது ஆரோக்கியமானதாக உள்ளன. எந்த விடயத்தையும் திருப்தியாக மேற்கொள்ள வேண்டுமாயின் கருத்துப் பரிமாற்றங்கள் அவசியம் எனக் கருதுபவன் நான். எனவே, இதுவரை தொடங்கப்பட்ட என் கட்டுரைகள் தொடர்பாக தங்களது மேலான கருத்துக்களை எதிர்ப்பார்த்து நிற்கின்றேன்.

எதிர்காலத்தில் தொடங்கக் கூடிய கட்டுரைகளை தங்கள் ஆலோசனைகளுக்கமைய மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டுமாயின் மாற்றங்களை மேற்கொண்டு எழுதலாம் அல்லவா? --P.M.Puniyameen 05:06, 25 திசம்பர் 2010 (UTC)

உங்கள் எழுத்து நடை அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது. படித்தவுடன் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. நடையிலும் மொழியாளுமையிலும் உங்கள் எழுத்தில் மாற்றம் சொல்லுமளவுக்கு எனக்கு சரக்கு பத்தாதென்பதால் :-) விக்கியாக்கத்தில் மட்டும் நீங்கள் செய்யக் கூடிய சிறு மாற்றங்களைக் கீழே குறிப்பிடுகிறேன்.
 • பிறப்பு ஆண்டுகளை அடைப்புகளுக்குள் தருதல், எ,கா (பிறப்பு:1938 - இறப்பு:1999)
 • உள்ளிணைப்புகள்: ஒரு கட்டுரை எழுதியவுடன் அவற்றிலிருந்து பிற கட்டுரைகளுக்கு முடிந்த வரை கூடிய இணைப்புகள் தருதல் போன்றவை. (இலங்கை எழுத்தாளர் கட்டுரைகளில் அவர்கள் படைப்புகள் வெளியாகும் வீரகேசரி போன்ற இதழ்களைக் குறிப்பிடும் போது இணைப்புகள் வேண்டுகிறேன். சிவப்பிணைப்பாக இருந்தாலும் பிற்காலத்தில் கட்டுரை எழுதப்பட்டும் என்ற வாய்ப்பு உள்ளதென்றால் இணைப்பாக்கி விடுங்கள்).
 • பிற விக்கி இணைப்புகள் - கட்டுரையின் இறுதியில் பிற மொழி விக்கிகளில் உள்ள கட்டுரைகளின் இணைப்புகளைத் தருவது நல்ல பழக்கம். உங்கள் உலகக் கிண்ணம் கட்டுரைகளில் தற்போது மணியனும் கனக்ஸும் இதனை இணைத்து வருகிறார்கள். அனைத்து விக்கிகளுக்கும் தர வேண்டும் என்பது அவசியமில்லை, ஆங்கில விக்கி இணைப்பை மட்டும் தந்து விட்டால், விக்கிப்பீடியா தானியங்கிகள் பிற மொழிகளுக்கு இணைத்து விடும்.

--சோடாபாட்டில் 05:34, 25 திசம்பர் 2010 (UTC)

சோடாபாட்டில்

தங்கள் கருத்துக்கு நன்றி

 • தங்கள் ஆலோசனைப்படி என் எழுத்துநடையில் மாற்றங்களை மேற்கொள்ளத் தேவையில்லை எனக் கருதுகின்றேன். பிறந்த திகதி, பிறந்த ஆண்டு என்பவற்றை இனி சரியாக குறிப்பிட முடியும்.
 • வெளியிணைப்புகளை இணைக்கும் விடயமாக தாங்கள் குறிப்பிட்ட கருத்துகள் சற்று மயக்கத்தை ஏற்படுத்துகின்றது. அதாவது குறித்த எழுத்தாளரின் ஆக்கங்கள் வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளின் பெயர்களை சேர்ப்பதா? அல்லது குறித்த எழுத்தாளர் தொடர்பாக என்னால் எழுதப்பட்ட மூலக் கட்டுரை பிரசுரமான பத்திரிகையின் பெயரை சேர்ப்பதா? இது குறித்து சற்று விளக்கம் பெற விரும்புகின்றேன்.
 • கணினி அறிவு என்னைப் பொறுத்தமட்டில் அனுபவ அறிவே. இதனால் படிமங்களை சேர்க்கும் முறை எனக்குத் தெரியாது. தற்போது என்னால் எழுதப்படக்கூடிய கட்டுரைகளுக்கு விக்கிப் பயனர் சிவக்குமார் அவர்களேää என்னால் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் படிமங்களை சேர்க்கின்றார். நிச்சயமாக இது குறித்து நான் கற்றுக் கொள்வேன். சிவக்குமார் இது விடயமாக எனக்கு உதவுவதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும்ää என் கண் சத்திரசிகிச்சைக் காரணமாக தூர இடங்களுக்கு போக்குவரத்து உசிதமல்ல என டாக்டர் குறிப்பிட்டுள்ளதினால் பூரண குணம் கண்ட பின்பு அவரை சந்தித்து அது விடயமாக கற்றுக் கொள்வேன்.

சோடாபாட்டில் எதிர்வரும் தினங்களில் முதுமானிப்பட்டப் பரீட்சை எழுதுவதாக அறிந்தேன். அவரின் பரீட்சை வெற்றிகரமாக அமைய பிரார்த்தித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 06:22, 26 திசம்பர் 2010 (UTC)

புன்னியாமீன், உங்கள் கட்டுரைகள் அனைத்தும் சிறந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. சில கட்டுரைகளில் ஒரு சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். அவற்றை அப்பக்கங்களின் வரலாற்றில் சென்று பார்த்தால் புரியும். உ+ம்: [1] என்ற திருத்தத்தைப் பாருங்கள். மேலும், முஹம்மத் போன்ற பெயர்களை முகம்மது என எழுதலாம் என்பது என் கருத்து. சோடாபாட்டில் சொன்ன கருத்து உள் இணைப்புகள் குறித்து. அதாவது, வீரகேசரி, தினக்குரல் போன்ற பக்கங்கள் விக்கியில் உள்ள படியால் அவற்றைப் பற்றி உங்கள் கட்டுரைகளில் எழுதும் போது உள்ள் இணைப்புகள் [[வீரகேசரி]], [[தினக்குரல்]] என்றவாறு எழுதினால் அக்கட்டுரைகளுக்கு உள்ளிணைப்புகள் கொடுக்கப்படும். ஒரு கட்டுரையில், ஒரு பக்கத்துக்கு ஒரு இணைப்பு மட்டும் கொடுத்தால் போதும். உ+ம்: வீரகேசரி இட்ரண்டு முறை ஒரு கட்டுரையில் எழுதப்பட்டிருந்தால், ஒரு முறை மட்டும் உள்ளிணைப்புக் கொடுத்தால் போதும். உதவி தேவைப்படின், ஒத்தசைப் பக்கத்தில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 08:59, 26 திசம்பர் 2010 (UTC)

Kanags தங்கள் கருத்துக்கு நன்றி. இயலுமானவரை அக்கருத்துக்களின்படி எழுதுவதற்கு எத்தனிக்கின்றேன். தங்களால் தெரிவிக்கப்பட்ட ஒரு கருத்து தொடர்பாக ஒரு சிறிய விளக்கத்தைத் தர வேண்டிய கடமை எனக்குண்டு. அதாவது முஸ்லிம்கள் தமது பெயர்களை அரபு பெயர்களைக் கொண்டே வைப்பர். அரபு மொழியை தமிழில் எழுதும்போது வடமொழி எழுத்துக்கள் அதிகமாக இடம்பெறக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. மேலும்ää அரபு மொழியில் வைக்கப்படும் பெயரில் கருத்துக்கள் உண்டு. அரபு மொழியில் உரிய உச்சரிப்புடன் அப்பெயர்களைப் பயன்படுத்தும்போதே உரிய கருத்து புலப்படும். உதாரணமாக தங்கள் குறிப்பிட்டபடி முஹம்மத் எனும் போது இதில் அராபிய உச்சரிப்பு இணைந்துள்ளது. மாறாக முகம்மது என உச்சரிக்கும்போது உரிய கருத்து மாற்றமடைகின்றது. எனவே இது விடயமாக சற்று கருத்து பரிமாற்றங்களையும் செய்துகொள்வது பயன்மிக்கதாக அமையும் எனக் கருதுகின்றேன். குறிப்பாக பெயர்களை பிரஸ்தாபிக்கையிலேயே இத்தகைய இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

தங்களால் கூறப்பட்ட ஓர் ஆலோசனைக்கமைய பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் என்பதை ஆண்டை வைத்து மாற்றியமைத்தேன். விக்கிப்பீடியாவில் கற்பதற்கு பல விடயங்கள் காணப்படுகின்றன. தினந்தோறும் ஒருசில விடயங்களையாவது கற்றுக்கொள்ள நான் முயற்சித்து வருகின்றேன். நான் குறித்த திருத்தத்தை மேற்கொண்ட பிறகு தலைப்புகளில் மாற்றங்களைக் கொள்ளும் அதிகாரம் நிருவாகிகளுக்குண்டு எனத் தெரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட நிலையில் நான் உரிய மாற்றத்தை செய்தது சரியா பிழையா? இதை பற்றியும் சற்று தெரிந்துகொள்ள விரும்புகின்றேன்.

குறிப்பாக மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மரபு முறையில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதாக இருந்தாலும்ää விக்கப்பீடியா சட்டங்களுக்கமைய நான் செய்தது தவறாகவே எனக்குப் படுகின்றது. இது குறித்து விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியுமா? மேலும்ää நாங்கள் புதிய பயனர்கள் என்ற வகையில் யாதாவது ஒரு தவறு இடம்பெற்றுவிட்டால் அதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம். இதனையும் அறிய விரும்புகின்றேன். --P.M.Puniyameen 03:27, 28 திசம்பர் 2010 (UTC)

புன்னியாமீன், தலைப்புகளில் மாற்றங்களைக் கொள்ளும் அதிகாரம் நிருவாகிகளுக்குண்டு என்ற உங்கள் கணிப்பு தவறானது. அந்த அதிகாரம் அனைவருக்கும் உண்டு. சர்ச்சைக்குரிய இடங்களில் அப்பக்கங்களின் உரையாடல் பகுதியில் கருத்தைச் சொல்லி மாற்றம் செய்யலாம். நிர்வாகிகளுக்கு முறையற்ற தலைப்பு ஒன்றை நீக்கவோ, கட்டுரை ஒன்றை நீக்கவோ மட்டுமே அதிகாரம் உண்டு. எனவே நீங்கள் தலைப்பு மாற்றியது சரியானதே. முறையான உரையாடலின் பின்னரே தலைப்பை மாற்றியிருக்கிறீர்கள். மேலும், முஹம்மது போன்ற சொற்களில் தேவையற்ற கிரந்தச் சொற்களைத் தவிர்க்கலாம் என்பதே என் கருத்து. ஆனால் நீங்கள் சொல்லிம் கருத்தும் ஏற்கக்கூடியதே. நான் படிக்கும் காலத்தில் வெளிவந்த திரைப்படம்: முகமது பின் துக்ளக். முஹமது பின் துக்ளக் இல்லை. இலங்கையிலும் இத்திரைப்படம் வெளியானது என்றே நினைக்கிறேன். தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பாலானோர் முகமது என்றே எழுதுகிறார்கள் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 14:13, 30 திசம்பர் 2010 (UTC)

Kanags தங்கள் கருத்துக்கு நன்றி. முஹம்மது, முகமது என்ற வார்த்தைப் பிரயோகங்களை விவாதமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. இருப்பினும், இது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் சில உலமாக்களுடன் (மார்க்க அறிஞர்களுடன்) தொடர்பு கொண்டுள்ளேன். விளக்கம் கிடைத்த பின்பு தெளிவான கருத்தினைத் தருவேன். உரிய விடயம் குறித்து ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்றுக் கொள்வது எழுத்தாளர்கள் என்ற வகையில் எமது கடமையல்லவா? மீண்டும் தெளிவாகக் கூறுகின்றேன். இது விவாதத்திற்கல்ல. விளக்கத்திற்கு மாத்திரமே. --P.M.Puniyameen 06:09, 31 திசம்பர் 2010 (UTC)

சூரிய கிரகனம்[தொகு]

சூரிய கிரகனம் பற்றிய செய்தியை விக்கிசெய்திகளில் செய்தி மூலத்துடன் பதிக்கலாமே? -- மாஹிர் 08:20, 4 சனவரி 2011 (UTC)

மாஹிர் என் பேச்சுப் பக்கத்திற்கு அனுப்பிய இச் செய்தியை சூரிய கிரகணம் பக்கத்திற்கு நான் அனுப்பியுள்ளேன். செய்தியைக் கருத்தில் கொள்வது சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்பிராயமும் கூட இதனை Kanags பக்கத்திற்கு அனுப்பலாமே.--P.M.Puniyameen 09:19, 4 சனவரி 2011 (UTC)

கிரந்தப் பயன்பாடு[தொகு]

கூடிய மட்டிலும் குறைந்த அளவு கிரந்தம் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றது. விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு என்னும் பக்கத்தைப் பார்க்கவும். நல்ல சீரான தமிழில் எளிமையுடன் எழுத வேண்டும் என்பது குறிக்கோள். சாக் நிக்கலோசு என்றால் பெரிய குறைபாடு அல்ல. கடையில் வரும் சு என்னும் எழுத்து குற்றியலுகரமாக ஒலித்து ஏறத்தாழ காற்றொலி சகர மெய் ஒலி போலவே இருக்கும். மேலும் Jack என்றே எழுதினாலும் பிரான்சு நாட்டவர் ஃழாக் என்பது போலவும், இடாய்ச்சுலாந்தினர் (செருமானியர்) யாக் என்றே ஒலிப்பர். அவர்களால் ஆங்கிலத்தில் வரும் Jack என்பது போல ஒலிக்க முடியாது (அவர்களின் மொழிப்படி). தமிழில் சாக் (chaak) என்பது (jaak) என்பதற்கு போதிய நெருக்கம் உடையது. ஆங்கிலத்தில் வரும் jack என்பதின் எகர-அகர கலப்பு உயிரொலி வேண்டின் சேஅக் என்றும் எழுதலாம். கூடியமட்டிலும் தமிழ் எழுத்துகளில் எழுதுவது எளிமையானது. மூச்சுச் சிக்கனம் தருவது. தமிழ் மரபும் ஆகும். வடவெழுத்து ஒரீஇ என்னும் விதியும் உள்ளது (கூடிய மட்டிலும் பின்பற்ற முயலுதல் இங்கு பரிந்துரை).--செல்வா 04:28, 6 சனவரி 2011 (UTC)

மிக்க நன்றி செல்வா. சாதாரண எழுத்துத் துறைக்கும், விக்கி எழுத்து முறைக்கும் பல வித்தியாசமுள்ளதை அறிகின்றேன். படிப்படியாக கற்க வேண்டும். முயற்சிப்பேன் .நன்றி--P.M.Puniyameen 04:54, 6 சனவரி 2011 (UTC)
நன்றி. இன்னொன்றையும் சொல்ல அனுமதிக்க வேண்டும். தமிழில் முயற்சிப்பேன் என்பது பரவலாகக் காணப்படும் பிழையான பயன்பாடு. முயற்சி என்பது முயல் என்னும் வினையின் பெயர்ச்சொல் வடிவம். முயல்வேன். முயற்சி செய்வேன் என்பன நல்ல வழக்குகள். பயில் என்னும் வினையின் பெயர்ச்சொல் வடிவு பயிற்சி, ஆனால் பயிற்சிப்பேன், தளர்ச்சிப்பேன், வளர்ச்சிப்பேன் என்றெல்லலம் சொல்வதில்லை என்பதை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன் (தளர், வளர் பயில் முதலியன வினைச்சொல் வடிவங்கள்). உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லித் திருத்துங்கள் என வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 05:12, 6 சனவரி 2011 (UTC)

நன்றி செல்வா, படிப்படியாக கற்க முயற்சி செய்வேன் --P.M.Puniyameen 06:08, 6 சனவரி 2011 (UTC)

2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்[தொகு]

வணக்கம் P.M.Puniyameen/தொகுப்பு 1:

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.

--Natkeeran 17:21, 8 சனவரி 2011 (UTC)

வணக்கம் நக்கீரன் தங்கள் கருத்துக்கு நன்றி. 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கையை வாசித்தேன். சிறப்பாக உள்ளது. ஆனாலும், அறிக்கை பற்றி முழுமையான கருத்தினைத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நான் இல்லை. ஏனெனில், சுமார் இரண்டு மாதங்களுக்குள் தான் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி தெரிந்து, பங்களிப்பு செய்து வருகின்றேன். நிச்சயமாக எதிர்காலத்தில் இதுபோன்ற விடயத்தில் பூரண பங்களிப்பைத் தருவேன்.

2011ம் ஆண்டு திட்டம் பற்றி வினவி இருந்தீர்கள். இலங்கையை மையமாகக் கொண்டு கருத்துத் தெரிவிப்பதாயின் இலங்கையின் விக்கிப்பீடியா பற்றி தெளிவு குறைவு. விக்கிப்பீடியாவைப் பற்றி தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் இலங்கையில் கூடுதலாக மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

குறிப்பாக 2007 - 2008ம் ஆண்டுகளிலேயே இலங்கையில் புரோட்பேன்ட் இணையத்தள சேவை அறிமுகமானது. இதற்கு முன்னைய காலங்களில் தரவிறக்கம் செய்யப்படும் அளவுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருந்ததினால் இலங்கையில் இணையப்பாவனை அதிகரிக்கவில்லை. தற்போது தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கிலும் புரோட்பேன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, இணையப் பாவனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்ரீலங்கா ரெலிகொம் புரோட்பேன்ட் இணையத்தை அறிமுகப்படுத்தும் அதேநேரத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இணைய இணைப்புகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 28ம் திகதி சிவக்குமார் மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விக்கி பற்றி மேற்கொள்ளப்பட்ட அறிமுகப் பட்டறையே முதல் பட்டறையாக இருக்கின்றது.

விக்கியைப் பற்றி ஊடகங்களிலும்ää குறிப்பாக பல்கலைக்கழக மட்டத்திலும் அறிமுகப்படுத்துவதுடன்ää விக்கியின் பயன்கள் பற்றி எடுத்துக்கூறி இலங்கையர்கள் மத்தியில் இதனை 2011ம் ஆண்டில் பிரபலப்படுத்தலாம் எனக் கருதுகின்றேன். இதனைக் கருத்திற் கொண்டு இலங்கை அச்சு ஊடகங்களில் சில கட்டுரைகளை எழுதவுள்ளதுடன்ää தொலைக்காட்சிகளிலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என எண்ணியுள்ளேன். இது தவிரää இலங்கையில் விக்கி அறிமுகம் தொடர்பாக இலங்கையில் வேறு வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டால் சிறப்புடையதாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

இரண்டு மாத அனுபவத்தில் விக்கியில் எனக்கு குறையாகபட்ட ஒரு விடயத்தையும் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். அதாவது நாளொன்றுக்கு குறைந்தது பத்து புதிய ஆக்கங்களாவது தமிழ் விக்கியில் தரவேற்றம் செய்யப்படுகின்றன. ஒரு புதிய பயனருக்கு இக்கட்டுரைகளை இனம்கண்டு கொள்வதில் சிக்கல்கள் இருக்கலாம். எனவே, மாதத்தில் பதிவாக்கக்கூடிய புதிய கட்டுரைகளை குறைந்தது தலைப்புகளை மட்டுமாவது ஒரே பார்வையில் பார்த்துக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

மேலும்ää தினம்தோறும் பதிவேற்றம் செய்யப்படக்கூடிய பத்து அல்லது பதினைந்து கட்டுரைகளின் தலைப்புகளை முகப்புப் பக்கத்தில் சேர்த்தால் அது கூடிய பயனுள்ளதாக இருக்குமென கருதுகின்றேன். இதற்கு விக்கி வழிமுறைகளில் இடம் உள்ளதோ யான் அறியேன். அவ்வாறிருக்குமிடத்து 2011ம் ஆண்டில் ஒரு அறிமுக நிகழ்வாக இதனை மேற்கொள்ளலாமே.

நேரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் விக்கிக்கான என் பங்களிப்பு நிச்சயம் தொடரும். அதேநேரம்ää இலங்கையில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்வதில் என்னால் ஆன பங்களிப்பினை நல்குவேன். மிக்கநன்றி

--P.M.Puniyameen 06:18, 9 சனவரி 2011 (UTC)

புன்னியாமீன், தங்களின் மேற்படி கருத்து இங்கு இடப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 09:05, 9 சனவரி 2011 (UTC)
புன்னியாமீன், நீங்கள் சொல்லும் வசதி முதல் பக்கத்தில் “புதியன” (விக்கிப்பீடியாவுக்கு வருக அறிவிப்பின் கீழ்) என்ற தொடுப்பில் உள்ளது. அதன் மூலம் அண்மையில் பதிவேறிய 500 கட்டுரைகளை (புதியதிலிருந்து - பழையது வரிசையில் காணலாம்). மேலும் இந்த இணைப்பிலும் காணலாம்--சோடாபாட்டில்உரையாடுக 08:59, 10 சனவரி 2011 (UTC)
சோடாபாட்டில் வழிகாட்டலுக்கு நன்றி--P.M.Puniyameen 13:03, 10 சனவரி 2011 (UTC)

சிக்கல்[தொகு]

புன்னியாமீன் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் (?) http://ultrafilter.org/r/ta/20t6 (இலங்கைத் தமிழ்க் கவிதை நூற்பட்டியல்), http://ultrafilter.org/r/ta/20tb (இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ் நூல்களின் பட்டியல்) இவ்விரண்டு பக்கங்களையும் உங்கள் பயனர் பேச்சுக்கு நகர்த்துகிறேன். கட்டுரை முடிந்தவுடன் கூறவும். அவற்றைப் பொது வெளிக்கு நகர்த்தி விடலாம். ஏனெனில் இது போன்ற வெற்றுப் பக்கங்கள் இருப்பது விக்கி கொள்கைகளுக்கு ஒப்பானதன்று. நீங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தொடர்ந்து அங்கு எழுதுங்கள். முடித்தவுடன் நானே கூட பொதுவெளிக்கு நகர்த்தி விடுகிறேன்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 13:03, 9 சனவரி 2011 (UTC)
சூர்ய பிரகாசு இன்று ஆரம்பிக்கப்பட்ட நான்கு கட்டுரைகள் குறித்து 3000 மேற்பட்ட இலங்கை நூல்கள் என்னிடமுள்ளன. அவற்றை ஒரேமுறையில் எழுதுவது சிரமம். பல வாரங்கள் செல்லலாம். அவ்வாறு செய்தாலும் முழுமையாக்க முடியாது. பல பயனர்கள் பங்களிப்பார்கள் என்ற எண்ணத்திலே இதனைப் பொதுவாக தரவேற்றம் செய்தேன். விக்கி கொள்கைகளுக்கு ஒப்பான முறையிலே நடந்து கொள்ள விரும்புகின்றேன். ஆனாலும் தொழிநுட்ப அறிவு குறைவு காரணமாக என்ன செய்வதென்று புரிய வில்லை. நல்லதைச் செய்வீர்களென எதிர் பார்கின்றேன்.--P.M.Puniyameen 14:02, 9 சனவரி 2011 (UTC)

இப்பட்டியல்களை ஆரம்பித்தமைக்கு நன்றி புன்னியாமீன். நானும் அவ்வப்போது இப்பட்டியல்களில் பங்களிப்பேன். பட்டியல்கள் பின்னர் நீளுமானால் பத்தாண்டுகள் அடிப்படையில் பட்டியலைப் பிரிக்கலாம்.--Kanags \உரையாடுக 22:52, 9 சனவரி 2011 (UTC)

நேர்காணல் வாழ்த்துக்கள்[தொகு]

சுவிசு வானொலியில் உங்களின் நேர்காணல் முழுவதையும் கேட்டேன். விரிவாகவும் அதேவேளை நேர்மையாகவும் கூறியுள்ளீர்கள். உள்ளதை உள்ளப்படியே கூறும் உங்கள் நேர்மை மகிழ்வைத் தருகிறது. குறைந்த காலத்தில் கூடிய பங்களிப்பையும் செய்துள்ளீர்கள். உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்! --HK Arun 06:52, 17 சனவரி 2011 (UTC)

உங்கள் வானொலி நேர்காணலை இணையதளச் சுட்டி மூலம் கேட்டேன். விக்கிப்பீடியா குறித்த உங்களது உள்வாங்கல் மிகச்சிறப்பாக வெளியானது. உங்களது விக்கிப் பங்களிப்புகளும் ஊடகத்தில் பரப்புரைகளும் தமிழ் விக்கிப்பீடியாவினை வளர்த்தெடுக்க பெரிதும் உதவும். சிறப்பான உங்கள் பங்களிப்புகளை தொடர்ந்து நல்கிட வேண்டுகிறேன். வாழ்த்துகள் !!--மணியன் 09:33, 17 சனவரி 2011 (UTC)

உங்கள் பங்களிப்புகளும் பரப்புரை முயற்சிகளும் மகிழச் செய்கின்றன. வாழ்த்துகள். விரிவான கருத்துகளை இயன்ற அளவு விரைவில் தருகிறேன். --இரவி 08:12, 20 சனவரி 2011 (UTC)

தலைப்பிடுதல்[தொகு]

புன்னியாமீன், கட்டுரைகளுக்குத் தலைப்பிடும் போது தலைப்பின் இறுதியில் நிறுத்தல் புள்ளி வராமல் தலைப்பிடுங்கள். இது விக்கி செய்திகளுக்கும் பொருந்தும். நன்றி.--Kanags \உரையாடுக 11:27, 2 பெப்ரவரி 2011 (UTC)

இலங்கைத் தமிழ் நூல்கள் வார்ப்புரு[தொகு]

புன்னியாமீன், இலங்கைத் தமிழ் நூல்களுக்கான வார்ப்புரு இங்கே உள்ளது. தேவைக்கு ஏற்ப பிரதான தலைப்புகளையோ, உபதலைப்புகளையோ உருவாக்கிக்கொள்ளலாம். வடிவமைப்பை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஏதேனும் உதவி அல்லது மாற்றம் செய்யவேண்டும் எனில் தயங்காமல் கூறுங்கள். --HK Arun 12:48, 2 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி அருண். இலங்கைத் தமிழ் நூல்கள் வார்ப்புரு மிகச் சிறப்பாக உள்ளது. மாற்றங்களை படிப்படியாகச் செய்து கொள்வோம். பேச்சுப்பக்கத்தில் கடைசியாக உள்ள எனது குறிப்பின் படி மாற்றத்தைச் செய்தால் கூடிய பயன் மிக்கதாக இருக்கும் எனக் கருதுகின்றேன். அவசரமில்லை படிப்படியாக செய்து கொளவோம். மீண்டும் என் நன்றிகள்--P.M.Puniyameen 13:11, 2 பெப்ரவரி 2011 (UTC)

அன்பு புன்னியாமீன், மிகவும் சிறப்பாக வார்ப்புருவை மேம்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள்! --HK Arun 09:31, 3 பெப்ரவரி 2011 (UTC) --09:30, 3 பெப்ரவரி 2011 (UTC)

மிக அவசியமான பணி ஒன்றி விக்கியில் ஆரம்பித்தமைக்கு புன்னியாமீன் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அனைவரும் இணைந்து இப்பட்டியல்களை இற்றைப்படுத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 09:48, 3 பெப்ரவரி 2011 (UTC)

தம்பி அருண் - வார்ப்புருவில் விசேடமாக நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லாம் நீங்கள் செய்ததே. நான் கொப்பி, பேஸ்ட் செய்தது மட்டும் தான். கணனி பற்றி எந்தவித ஆரம்ப அறிவும் என்னிடமில்லை. அனைத்தும் அனுபவத்தால் கற்றவையே. எனவே கொப்பி, பேஸ்ட் செய்யும் போது யாதாவது தவறுகள் ஏற்பட்டு விட்டதோ யான் அறியேன். ஓய்வு கிடைக்கும் போது மீளப் பரிசீலித்து சரி செய்து விடுங்கள். மிக்க நன்றி.--P.M.Puniyameen 11:04, 3 பெப்ரவரி 2011 (UTC)

Kanags எப்படியும் இந்த வாரம் முடிவதற்குள் அனைத்து தலைப்புக்களுக்குமுரிய சில நூல்களையாவது சேர்த்து விடுவேன். ஆனாலும் தொடர்ந்தும் பதிவேற்றம் செய்கையில் நேரம் கிடைக்கும் போதே செய்ய முடியும். இந்தப் பணி நீண்டகாலம் தொடரக் கூடியது. இலங்கைப் பயனர்களும், புலம்பெயர்ந்த இலங்கைப் பயனர்களும், ஒத்துழைப்பார்கள் எனின் இம்முயற்சி சிறப்பு நிலையை அடையும். மிக்க நன்றி. --P.M.Puniyameen 11:07, 3 பெப்ரவரி 2011 (UTC)
வார்ப்புரு சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.தூய விஞ்ஞானங்கள் என்பதை விஞ்ஞானம்/அறிவியல் என அமைப்பதுதான் இலகுவாயிருக்கும்.இல்லாவிடின் பிரயோக விஞ்ஞானம்,தூய விஞ்ஞானம் என வகைப்படுத்த வேண்டி ஏற்படும். இது நடைமுறையில் சிரமமாயிருக்கலாம்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 11:08, 3 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி சிவகுமார் பட்டியலை பூரணப்படுத்திச் செல்லும் போது அவசியத்தைக் கருத்திற் கொண்டு வார்ப்புருவில் சில சில மாற்றங்களை செய்து கொள்வோம். --P.M.Puniyameen 11:40, 3 பெப்ரவரி 2011 (UTC)

புன்னியாமீன், நீங்கள் உருவாக்கிய நூல் பட்டியல்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது இரண்டு நூல்களையாவது சேருங்கள். மீதம் பின்னர் மெதுவாகத் தொகுக்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 07:13, 4 பெப்ரவரி 2011 (UTC)

Kanags சகல பிரிவுகளுக்குமான நூல் விபரங்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனாலும் நான் வாழும் பகுதியில் கடுமையான மழை, மண்சரிவு காரணமாக மின்சாரம் அடிக்கடி தடைப்படுகின்றது. மின்சாரம் சீரானவுடன் முதல் வேலையாக இதனையே செய்வேன். --P.M.Puniyameen 08:14, 4 பெப்ரவரி 2011 (UTC)

விக்கித் திட்டம் இலங்கைத் தமிழ் நூல்கள்[தொகு]

அன்புடன் புன்னியாமீன், 19ம் நூற்றாண்டின் மத்தியப் பகுதிகள் முதல் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் முனைப்பாக ஈடுப்பட்டு வருகிறீர்கள். அதேவேளை 19ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்களின் தகவல்களையும் தேடி ஆவணப்படுத்த முடியலாம். அத்துடன் நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றும் எதிர்காலத்தில் எழுதப்படப்போகும் நூல்கள் என இப்பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். எனவே இந்த இலங்கைத் தமிழ் நூல்களின் பட்டியலை ஆவணப்படுத்தும் திட்டம் ஒரு நீண்டக்கால திட்டமாக தொடரக்கூடியது என்பதால் இதற்கென ஒரு விக்கித்திட்டப் பகுதியை உருவாக்கியுள்ளேன். இத்திட்டம் தொடர்பான நோக்கம், தகவல்கள் மற்றும் பேச்சுகள் ஒரே இடத்தில் இடம்பெறச்செய்தல் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். இது எனது கருத்து மட்டுமே. சிறீதரன் வலைவாசல் அமைக்கும் கருத்தை முன்வைத்துள்ளார். உங்கள் கருத்துகளை அறிய ஆவல். --HK Arun 17:27, 4 பெப்ரவரி 2011 (UTC)

அருண் இலங்கை தமிழ் நூல் பட்டியல் குறித்து என்னால் ஆரம்பிக்கப்பட்ட பகுதிக்கு நீங்களும் மற்றும் சில பயனர்களும் காட்டிவரும் ஆர்வம் என்னை தெம்படையச் செய்கின்றது. இது விடயமாக நீங்கள் காட்டிவரும் அதிக ஆர்வத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கையில் தமிழ்மொழி மூலமாக வெளிவந்த நூல்பட்டியல்களை தயாரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை யாரும் நிறைவுபடுத்தவில்லை. அச்சு ஊடகங்களில் இம்முயற்சியை மேற்கொள்ளும்போது அதை தொடராக மேற்கொள்வது கடினமான ஒன்று. விக்கிப்பீடியா போன்று ஒரு பொது ஊடகத்தில் இம்முயற்சியை மேற்கொள்கையில் கூடிய பயன் அளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே தொடங்கினேன். நிச்சயமாக இலங்கையில் எத்தனை தமிழ் நூல்கள் வெளிவந்துள்ளன என்ற விபரம் யாருக்குமே தெரியாது. ஒவ்வொரு ஆய்வாளர்களும் இது பற்றி ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளையே முன்வைத்து வருகின்றனர். இலத்திரனியல் ஊடகங்கள் வளர்ச்சி கண்டுள்ள இக்காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் தன்னார்வப் பயனர்களைக் கொண்டதுமான விக்கியில் ஆரம்பிக்கும்போது இந்த முயற்சி நீண்டகாலம் தொடர்ந்து ஓரளவாவது நிறைவைக் காணும் என்பது எனது எதிர்பார்ப்பு.

வெட்கத்தைவிட்டு உண்மையைக் கூறுவதானால் நீங்கள் குறிப்பிட்ட விக்கித்திட்டப் பகுதியைப் பற்றியோ சிறீதரன் குறிப்பிட்ட வலைவாசல் பற்றியோ இதன் நன்மை தீமைகளை என்னால் சரியாகத் தீர்மானித்துக் கொள்ள முடியாதுள்ளது. விக்கியில் நான் பல கட்டுரைகளை ஆரம்பித்தாலும்கூட, இன்னும் புதியவனே. கற்பதற்கு எத்தனையோ விடயங்கள் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் நேத்ரா தமிழ் அலைவரிசை (தொலைக்காட்சி சேவை) விக்கிப்பீடியா தொடர்பாக நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியொன்றுக்கு ஒரு தயாரிப்பாளரின் தனிப்பட்ட அழைப்பு எனக்கு வந்திருந்தது. நேரடி ஒளிபரப்பாக அந்நிகழ்ச்சி அமையவிருந்ததினால் நேயர்களின் கேள்விகளுக்கும் பதிலை வழங்க வேண்டியிருக்கும். அந்தளவிற்கு விக்கி பற்றி ஆழமாக நான் இன்னும் தெரிந்து கொள்ளாமையினால் அத்திட்டத்தை சற்று பின்தள்ளி வைக்கும்படி தயாரிப்பாளரிடம் குறிப்பிட்டேன். உண்மையிலேயே கற்க எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. எமது தனிப்பட்ட வேலைப்பளுக்களுக்கு மத்தியில் நேரம் பெரிதும் தடையாக உள்ளது. எனக்குக் கிடைக்கும் ஓய்வுகளை முழுமையாக விக்கிக்கெனவே ஒதுக்கி வருகின்றேன்.

எனவே, தங்கள் வினாவிற்கு என்ன பதிலை வழங்குவதென என்னால் புரியவில்லை. அனுபவமிக்க பயனர்களின் கருத்துக்களையும் அறிந்துகொள்ள முனைவோம். அதன் பின்பு இது பற்றி நீங்களும் சிறீதரன் மற்றும் சில பயனர்களும் இணைந்து ஒரு முடிவுக்கு வர முடியுமென கருதுகின்றேன்.

இவ்விடத்தில் எனது சில கருத்துக்களை மாத்திரம் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

 • இத்திட்டம் தொடர வேண்டும்.
 • இதில் காணப்படக்கூடிய தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும்.
 • விக்கி உள்ள வரை இம்முயற்சி பரந்துவிரிய வேண்டும். இதுவே எனது அவா.

அருண் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது மட்டுமே. இன்னும் நூல்கள்கூட சரியாக பதிவேற்றப்படவில்லை. இவ்வாரத்தினுள் 1000 நூல்களையாவது பதிவேற்றம் செய்யலாம் என திட்டமிட்டுள்ளேன். அதற்கும் எமது பிரதேச காலநிலை இடம்தருமா என்பது சந்தேகம். இன்னும் ஒரு வாரம் வரை எமது முயற்சிகளைப் பார்த்த பின்பு என்ன செய்வதென்ற முடிவுக்கு வாருங்கள். மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள். --P.M.Puniyameen 03:38, 5 பெப்ரவரி 2011 (UTC)

இடமளித்தல் ஏற்புடையதா?[தொகு]

அன்புடன் புன்னியாமீன், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பேச்சு புழக்கத்தில் இருந்து, கற்கும் கல்வி வரை எமது பயன்பாட்டில் இருக்கும் சொற்களான "விஞ்ஞானம்", "இரசாயனவியல்" போன்ற சொற்கள் (தூயத்தமிழ் அல்ல எனும் கருத்துடையோர்களால்) மாற்றப்படுகிறது. இவ்வாறு மாற்றப்படுவதால், இலங்கையில் உள்ளோர் "விஞ்ஞானம்", "இரசாயனவியல்" என்று தேடும் போது எவ்வாறு கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். இவ்வாறான மாற்றங்கள் எவ்வாறு இலங்கையருக்கு பயன்படப்போகிறது என்பதை கருத்தில் கொண்டு அனுமதியுங்கள். --HK Arun 15:37, 11 பெப்ரவரி 2011 (UTC)

விக்கிப்பீடியர் அறிமுகம்[தொகு]

தாங்கள் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் பொருட்டு தங்கள் புகைப்படம் மற்றும் விக்கிப்பீடியா பங்களிப்புகளை முக்கியப்படுத்தி அதற்கான குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பீ. எம். புன்னியாமீன் பக்கத்தில் கொடுக்கலாமே...?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:11, 12 பெப்ரவரி 2011 (UTC)

தம்பி தேனி. எம். சுப்பிரமணி, என்னைப் பற்றி நீங்கள் வைத்துள்ள அபிப்பிராயம் குறித்து என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். விக்கியைப் பொருத்தமட்டில் நான் ஒரு குழந்தை. விக்கிப்பீடியாவில் நான் இணைந்து இன்றுடன் 2 மாதங்கள் 28 நாட்கள் தான் ஆகின்றன. விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெற இன்னும் எனக்குத் தகுதியில்லை என்றே நான் நினைக்கின்றேன். --P.M.Puniyameen 13:54, 12 பெப்ரவரி 2011 (UTC)
 • விக்கிப்பீடியாவில் பயனுள்ள பங்களிப்புகளைச் செய்யும் நல்ல பங்களிப்பாளர்கள் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவர்களே... இதில் விக்கிப்பீடியாவில் இணைந்த நாள் முக்கியமில்லை. அதற்கான கால அளவும் முக்கியமில்லை. தங்கள் பங்களிப்புகள்தான் முக்கியம். தங்கள் பங்களிப்புகளைக் கொண்டு பார்க்கும் போது தாங்கள் விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் தற்போதே இடம் பெற வேண்டிய நிலையில் இருப்பவர்தான்... --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:13, 12 பெப்ரவரி 2011 (UTC)
தேனியாரின் கருத்தை ஏற்கிறேன். தங்கள் அயராத பங்களிப்பு என்னை வியக்க வைக்கிறது. தொடருங்கள் உங்கள் தமிழ்ப்பணியை. --பரிதிமதி 16:40, 14 பெப்ரவரி 2011 (UTC)
ஆமோதிக்கிறேன்.--Kanags \உரையாடுக 20:05, 14 பெப்ரவரி 2011 (UTC)
 • தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!

--சூர்ய பிரகாசு.ச.அ. 15:40, 23 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி சூர்ய பிரகாசு--P.M.Puniyameen 15:56, 23 பெப்ரவரி 2011 (UTC)

உங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன்.விக்கியில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 16:18, 24 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி சஞ்சீவி சிவகுமார். என்னுடைய விக்கிப்பணிகளுக்கு தங்கள் உதவிகளும், ஆலோசனைகளும் மூல காரணம்
--P.M.Puniyameen 16:22, 24 பெப்ரவரி 2011 (UTC)

தமிழ்[தொகு]

உங்கள் கட்டுரையில் சில சொற்களை தமிழ் ஆக்கியுள்ளேன். பேச்சு நடையில் நிறைய மற்ற மொழி கலப்புகள் வரும். கட்டுரைகளில் முடிந்தவரையில் அவற்றை தவிர்க்கபாருங்கள் --குறும்பன் 01:25, 18 பெப்ரவரி 2011 (UTC)

தங்கள் கருத்துக்கு நன்றி குறும்பன். வடமொழி சொற்களை இயலுமானவரை தவிர்க்க முயன்றாலும் எம்மை அறியாமல் அவை வந்துவிடுகின்றன. காரணம் நான் வாழும் சூழலின் தாக்கமே. இலங்கையில் கண்டி பிரதேசத்தில் நான் வாழ்ந்து வருகின்றேன். எமது பிரதேசத்தில் எமது அன்றாட பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் சிங்கள மக்களுடனே இருக்கின்றன. வெளியில் சென்று பழகுமிடத்து அதிகமான இடங்களில் அதிகமான நேரம் சிங்கள மொழியையே கதைக்க வேண்டிய நிலை எமக்கு. வீட்டிலிருக்கும்போது தான் தமிழ்மொழி மூலமாக கதைக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிங்கள மொழியில் பெருமளவிற்கு வடமொழிச் சொற்களின் பாதிப்பு காணப்படுகின்றது. அது மட்டுமல்ல எமது பிரதேசத்தில் வாழக்கூடிய முஸ்லிம் மக்களிடையேயும் பேச்சுமொழியில் வடமொழிச் சொற்களின் தாக்கம் அதிகமுண்டு. எனவே, இது போன்றதொரு பின்னணியில் எழுதும்போது எமக்கு இத்தகைய பாதிப்புகள் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகின்றது. மிகவும் பிரயத்தனம்பட்டு தவிர்க்க எத்தனித்தாலும் எங்கோ ஒரு இடத்தில் அவை வந்தே விடுகின்றன. எனவே, இத்தகைய தவறுகளை திருத்துவதில் எவ்வித தவறுமில்லை. --P.M.Puniyameen 06:43, 18 பெப்ரவரி 2011 (UTC)

புன்னியாமீன் எனது நடையிலும் நிறைய பிறமொழி கலப்புகள் உண்டு. எனது கட்டுரைகளிலும் பிறமொழிச்சொற்களை காணலாம். எது தமிழ் எது தமிழ் அல்ல என்பதில் எனக்கு பெருங்குழப்பம் உண்டு. வடமொழின்னு நினைச்சது தமிழாக இருக்கும், தமிழ்ன்னு நினைச்சது வடமொழியாக இருக்கும் :(. உங்கள் சூழலில் நீங்கள் வடமொழியை பெருமளவு தவிர்த்து எழுதுவது பாராட்டப்படவேண்டிய ஒன்று. --குறும்பன் 16:37, 18 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி குறும்பன்--P.M.Puniyameen 16:55, 18 பெப்ரவரி 2011 (UTC)

சந்திப்பு[தொகு]

புன்னியாமீன் அவர்களே! விக்கிபீடியாவில் உங்களுடைய ஆக்கங்களையும் கருத்துக்களையும் நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் விக்கிப்பீடியாவுக்கு வருவதற்கு முன்பே நான் உங்களுடைய எழுத்துப் பணிகளைப் பார்த்துள்ளேன். உங்களுக்கு நெருக்கமான (வெலிகமையில் உள்ள) எழுத்தாளர் ஒருவரையும் நன்கறிவேன். நான் அடுத்த வாரம் இலங்கைக்கு வர எண்ணியுள்ளேன். அப்போது விக்கிப்பீடியாவில் மேலும் சிறப்பாகப் பணியாற்றுவது பற்றி உங்களுடன் கலந்துரையாடலாம் என நினைக்கிறேன்.--பாஹிம் 13:59, 20 பெப்ரவரி 2011 (UTC)

மிக்க நன்றி பாஹிம். இலங்கை வரும்போது இன்சா அல்லாஹ் கட்டாயமாக சந்தியுங்கள். என் கையடக்க தொலைபேசி 0094-776337258.
சந்திப்போம் பாஹிம் --P.M.Puniyameen 14:10, 20 பெப்ரவரி 2011 (UTC)

விக்கி இடை இணைப்புகள்[தொகு]

வணக்கம் புன்னியாமீன், பல நாட்டுத் துடுப்பாட்ட வீரர்கள் பற்றிய கட்டுரைகளைத் தொடங்கி எழுதிக்கொண்டு வருகிறீர்கள். ஒரு சிறு வேண்டுகோள். உங்கள் கட்டுரைகளின் இறுதியில் அந்தக் கட்டுரையின் ஆங்கிலக் கட்டுரைத் தலைப்பின் இணைப்பையும் தவறாமல் சேருங்கள். உ+ம்: [[en:Hamish Bennett]]. ஆங்கிலக் கட்டுரையில் தானியங்கிகள் தமிழ்க்கட்டுரைக்கான இணைப்பைச் சேர்த்து விடும். இது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் ஆங்கில விக்கியில் தமிழ்க் கட்டுரைக்கு இணைப்பு இல்லாவிட்டால் வேறு யாரும் இதே கட்டுரையை வேறு பெயரில் தமிழில் தொடங்க வாய்ப்புண்டு. நன்றி.--Kanags \உரையாடுக 03:21, 27 பெப்ரவரி 2011 (UTC)
அதே போல செய்கிறேன் Kanags, வேறு திருத்தங்கள் தேவையெனில் தயவுசெய்து கூறுங்கள். ஒரு வாரத்துக்குள் சகல துடுப்பாட்ட வீரர்களையும் எழுதி முடிப்பது திட்டம்--P.M.Puniyameen 03:31, 27 பெப்ரவரி 2011 (UTC)

பதக்கம்[தொகு]

Tireless Contributor Barnstar.gif விக்கிப் புயல் பதக்கம்
உங்கள் பங்களிப்புகளின் வேகத்தையும் வீச்சினையும் கண்டு வியந்து இந்த பதக்கத்தை வழங்குகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:10, 27 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில், இன்னும் சாதிக்க எவ்வளவோ உண்டு. கிடைக்கும் ஓய்வினைப் பயன்படுத்தி எழுதுவோம்--P.M.Puniyameen 14:28, 27 பெப்ரவரி 2011 (UTC)

அன்புடன் புன்னியாமீன், நீங்கள் பதக்கம் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கள் சிறப்பானதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேவேளை இதுவரை இலங்கையில் இருந்து யாரும் எழுதாத படைப்புகள் உங்கள் எழுத்தில் வரவேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். நன்றி --HK Arun 03:16, 28 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி அருண். இலங்கையில் இருந்து யாரும் எழுதாத படைப்புகள் என் எழுத்தில் வரவேண்டும் என எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தீர்கள். நான் அவ்வளவு பெரியவனல்ல. இருப்பினும் அருண், எத்தகைய ஆக்கங்களை எழுதினால் கூடியபயன் மிக்கதாக இருக்கும் எனக் கருதுகின்றீர்கள். கூறுமிடத்து முயற்சி செய்யலாம். --P.M.Puniyameen 04:16, 28 பெப்ரவரி 2011 (UTC)

நீங்கள் பன்முக எழுத்தாளராக மட்டுமல்லாமல், பல்வேறு துறைசார்ந்த ஒரு தெளிந்த போக்கு இருப்பதனை நான் உங்கள் எழுத்து நடையில் காண்கிறேன். கிரிக்கெட் போன்றவிடயங்களை எழுதவேண்டாம் எனக் கூறவில்லை. ஆனால் அவை ஒரு பொழுதுப்போக்கு அம்சம் கொண்டவை என்பதால், அதனையும் விட உங்கள் பெறுமதிமிக்க நேரத்தை இலங்கை அரசியல் சட்டங்கள், கல்வி சார்ந்த விடயங்கள்; தமிழ், முஸ்லீம், சிங்கள மொழி மற்றும் பண்பாட்டுக் கூறுகள் போன்றவைகளுக்கு முன்னுரிமை கொடுத்தல் பலருக்கு பயன்மிக்கதாக அமையும். குறிப்பாக தமிழ் பேசும் எம் அடுத்தத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு, இலங்கையின் அனைத்து துறைகளும் குறித்த ஒரு தெளிவான பார்வை கிட்டும் வகையில் உங்கள் படைப்புகளை வழங்கினால் அதனால் கிடைக்கும் பயன் பெறுமதிமிக்கதாக இருக்கும் என கருதிகிறேன். --HK Arun 04:37, 28 பெப்ரவரி 2011 (UTC)

அருண், யாதாவது ஒரு பணியை ஆரம்பித்தால் அதை எப்படியும் முடித்து விட்டுத்தான் அடுத்த பக்கத்தைப் பார்ப்பேன். இது என் பலமோ, பலவீனமோ யானறியேன். துடுப்பாட்டம், கால்பந்தாட்டம் இரண்டும் சிறுவயது முதல் நான் அதிகம் நேசிக்கும் துறைகள். இலங்கையில் தமிழ் மொழிமூலமாக துடுப்பாட்டம் பற்றி நான் தான் முதலில் ஒரு புத்தகத்தை எழுதிவெளியிட்டேன். அப்புத்தகம் 3 பதிப்புகள் கண்டன. அதிலிருந்து தமிழ் மொழிமூலமாக விளையாட்டு பற்றி எழுத ஆரம்பித்தேன். 1995 முதல் இன்று வரை அனைத்து தேசியபத்திரிகைகளிலும் போல எழுதிவருகின்றேன். அருண் நீங்கள் குறிப்பிட்ட விடயம் எனக்குப் புரிகின்றது. நிச்சயமாக எதிர் காலத்தில் விக்கியில் என் எழுத்து நடையை மாற்றிக் கொள்வேன். குறிப்பாக தமிழ் பேசும் எம் அடுத்தத் தலைமுறையினரை கருத்தில் கொண்டு அம்மாற்றம் இடம் பெறும். மீண்டும் தங்கள் கருத்துக்கு நன்றி --P.M.Puniyameen 05:31, 28 பெப்ரவரி 2011 (UTC)
புன்னியாமீன், உங்கள் துரித பங்களிப்புகளுக்கு ஒரு பதக்கம் போதாது. இன்னும் பல பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். மேலும், அருணின் கருத்துக் குறித்து: விக்கிப்பீடியா ஒரு பல்கலைக்களஞ்சியம், இதில் அனைவருக்கும் தேவையான அனைத்துத் தகவல்களும் இடம்பெற வேண்டும் என்பதே குறிக்கோள். அது திரைப்படமாக இருக்கட்டும், அல்லது விளையாட்டாக இருக்கட்டும். அனைத்தும் தேவையானதே என்பதே எனது கருத்து.--Kanags \உரையாடுக 10:39, 28 பெப்ரவரி 2011 (UTC)
நன்றி Kanags--P.M.Puniyameen 10:49, 28 பெப்ரவரி 2011 (UTC)
புன்னியாமீன், நீங்கள் இலங்கையில் கல்விதுறை சார்ந்த பணியில் இருந்ததனாலும், இலங்கை குறித்த பல்வேறு நூல்கள் எழுதியவர் என்பதனாலும் எனது விருப்பை ஒரு வேண்டுகோளாக கூறியுள்ளேனே தவிர, இதனைத்தான் எழுத வேண்டும் என்றோ, இதனை எழுதுங்கள் என்றோ வலியுறுத்திக்கூறவில்லை. அதேவேளை கிரிக்கெட் தொடர்பான கட்டுரைகளை எழுதவேண்டாம் என்றும் நான் கூறவில்லை. மேலும் எது தேவை தேவையில்லை என்றும் என்னால் கூறப்படவில்லை. எனது வேண்டுகோள் அவ்வாறான ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள். நன்றி! --HK Arun 11:04, 28 பெப்ரவரி 2011 (UTC)

அருண், மன்னிப்புக் கோருமளவுக்கு நீங்கள் தவறாக ஒன்றையும் எழுதவில்லையே. நாங்கள் ஒரே விக்கி குடும்பத்தினர். எம்முள் தாராளமாக கருத்துக்களைப் பரிமாரிக் கொள்ளலாம். நான் விரும்புவதும் அதையே --P.M.Puniyameen 11:28, 28 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி புன்னியாமீன் --HK Arun 14:48, 28 பெப்ரவரி 2011 (UTC)

புன்னியாமீன், உங்கள் வேகம் வியக்க வைக்கிறது. இம்மென்றால் இருநாறு, அம்மென்றால் அறுநாறு என்னும் ஆசுகவிகளைப்போல தமிழ் விக்கியை தாக்கியுள்ள ஓர் சுழற்காற்றாக இருக்கிறீர்கள். உங்கள் எளிமையும் திறந்த மனப்போக்கும் மிகுந்த பாராட்டிற்குரியது. பதக்கம் எல்லாம் உங்களால் பெருமைப்படும். கருமமே கண்ணாக செயல்படும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் !!--மணியன் 03:22, 1 மார்ச் 2011 (UTC)

மிக்க நன்றி மணியன், இயலுமானதைச் செய்கின்றேன். அவ்வளவுதான்--P.M.Puniyameen 03:48, 1 மார்ச் 2011 (UTC)


வணக்கம் புன்னியாமீன். தங்களுக்குக் கிடைத்த பதக்கத்தை இன்றுதான் கவனித்தேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். விக்கி உலகம் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறது. உங்களைப் போன்ற எழுதுவதற்காக இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை வியக்காமல் இருக்கமுடியாது. --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:44, 11 மார்ச் 2011 (UTC)

 • இத்துணை முனைப்போடும் ஆர்வத்தோடும் விக்கியின் வளர்ச்சியைப் பேணும் புன்னியாமீனுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஓங்குக உங்கள் தமிழ்ப்பணி!

துடுப்பாட்டக்காரர்களின் கட்டுரைகள்[தொகு]

துடுப்பாட்டக்காரர்களின் கட்டுரைகளைத் துரித கதியில் உருவாக்குவது குறித்து மகிழ்ச்சி. வலது புறத்தில் தோன்றும் பெட்டியில் அனைத்துலக தரவுகளில் 'ஏ-தர' என்பதற்குப் பதிலாக 'பட்டியல் அ துடுப்பாட்டம்|பட்டியல் அ' என இணைத்தால் நன்று. --சிவகோசரன் 09:50, 28 பெப்ரவரி 2011 (UTC)

நன்றி சிவகோசரன் - பட்டியல் அ மாற்றியுள்ளேன். வார்ப்புரு அளவு பெரிதாகுமா?--P.M.Puniyameen 11:00, 28 பெப்ரவரி 2011 (UTC)
அளவு பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. [[பட்டியல் அ துடுப்பாட்டம்|ஏ-தர]] எனலாம்.--Kanags \உரையாடுக 11:40, 28 பெப்ரவரி 2011 (UTC)

இன்னுமொரு பாராட்டு[தொகு]

விக்கியில் நீங்கள் போடும் வீறுநடைக்கு இன்னுமொரு பாராட்டு.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:04, 14 மார்ச் 2011 (UTC)

மிக்க நன்றி சிவகுமார்--P.M.Puniyameen 10:15, 17 மார்ச் 2011 (UTC)

500 கட்டுரைகள்[தொகு]

புன்னியாமீன், நாங்கு மாதங்களுக்கு முன்னர் தமிழ் விக்கியில் இணைந்து இடையறாது பங்கு பற்றி குறுகிய காலத்துள் ஐநூறு கட்டுரைகளை எழுதி பேராக்கம் தந்திருக்கிறீர்கள். மிக விரைவில் ஆயிரம் கட்டுரைகளை எட்டுவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. வாழ்க உங்கள் நல்லுள்ளம், நற்பணி! வாழ்த்துக்களுடன்,--Kanags \உரையாடுக 08:43, 17 மார்ச் 2011 (UTC)

மிக்க நன்றி Kanags. தங்களதும், எமது விக்கி குடும்பத்தினரதும்; ஆசிர்வாதங்களும், வழிகாட்டல்களும் கிடைக்கும் அதேநேரத்தில் என் உடல் நிலையும் திருப்திகரமாக இருக்குமிடத்து (இன்சா அல்லாஹ்) தங்கள் குறிப்பிட்ட இலக்கை மேலும் நான்கு மாதங்களுக்குள் அடைவதே என் இலக்கு. பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். --P.M.Puniyameen 10:14, 17 மார்ச் 2011 (UTC)

ஐந்நூறு கட்டுரைகளா! அதற்குள்ளா!! புன்னியாமீன்!!! (உங்களைக் கண்டால் எனக்குப் பொறாமையாக உள்ளது!) பொது அறிவுப் பகுதியை வளப்படுத்துவதிலும் கிரிக்கெட் பற்றிய தகவல்களைப் புதுப்பிப்பதிலும் நீங்கள் கவனம் செலுத்துவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. --பரிதிமதி 16:24, 17 மார்ச் 2011 (UTC)

மிக்க நன்றி பரிதிமதி--P.M.Puniyameen 16:26, 17 மார்ச் 2011 (UTC)
விக்கியில் உங்கள் வேக சாதனையை யாரும் முறியடிக்க முடியாது. நீங்கள் நலமோங்கி நீடுவாழ்க.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:12, 17 மார்ச் 2011 (UTC)

நன்றி சிவக்குமார் யாருக்கும் முறியடிக்க முடியாதென நினைப்பது தவறு. நிச்சயமாக எமது பயனர்களால் முடியும். கடந்த சில வாரங்களாக நான் வேகமாக சில கட்டுரைகளை ஆரம்பிக்க என் சுகயீனமும் ஒரு காரணமாயிற்று. என் காலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சத்திரசிகிச்சை காரணமாக கட்டாய படுக்கை ஓய்வுபெற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. எனவே, மன ஆறுதலுக்காகவும் காலில் அசைவுகளை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவும் கட்டிலில் இருந்தபடியே இந்த கட்டுரைகளை லெப்டொப் மூலமாக தரவேற்றம் செய்தேன். எனவே, அதிகம் சிந்திக்காது துடுப்பாட்ட வீரர்களின் தகவல்களை ஆங்கில விக்கியிலிருந்து தொகுப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. சற்று வேகமாக எண்ணிக்கை அதிகரிக்க இதுவே காரணம். மேலும், சிந்தித்து தகவல்களைத் திரட்டி சில கட்டுரைகளை பதிவாக்கம் செய்ய வேண்டும். உடல்நலம் தேறிய பின்பு அதனை செய்வேன். துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பாக தற்போது நான் பதிவேற்றம் செய்துவரும் கட்டுரைகளும் விக்கிப்பீடியாவிற்கு அவசியமானதென்றே கருதுகின்றேன். இதனை முடித்த பின்பு தமிழ்மொழி மூலமாக 19ம் நூற்றாண்டு முதல் இலங்கையில் வெளிவந்த தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பற்றி (நான் மேற்கொண்ட ஆய்வு) எழுத உத்தேசித்துள்ளேன். இதற்கு மேலும் சில ஆய்வுகள் தேவைப்படுவதினாலேயே சற்று தாமதித்து வருகின்றேன். அதேபோல இலங்கையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களின் பதிவுகளையும் விரைவில் தொடர்வேன். மிக்கநன்றி--P.M.Puniyameen 01:41, 18 மார்ச் 2011 (UTC)

உங்களைப் போன்ற பல் துறை அறிவும் அனுபவமும் கிடைத்திருப்பது தமிழ் விக்கி செய்த பேறு. குறுகிய காலத்தில் 500 கட்டுரைகளை எழுதியமை கண்டு மகிழ்கிறேன். ஒரே ஒரு வேண்டுகோள்: நூல்கள் தொடர்பான பட்டியல் கட்டுரைகளில் "கட்டுரை உருவாக்கத்தில் உள்ளது" என்பது போன்ற வார்ப்புருவையும் பத்தாண்டுகளுக்கான பல வெற்றுப் பகுதிகளையும் இட்டுள்ளீர்கள். நீண்ட நாட்கள் இவ்வாறு காட்சி அளித்தால் நன்றாக இராது என்பதால், இக்கட்டுரைகளில் கூடுதல் கவனம் செலுத்தி வளர்க்கலாம். அல்லது, வெற்றுப் பகுதிகளையும் வார்ப்புருக்களையும் நீக்கலாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி 09:52, 22 மார்ச் 2011 (UTC)

தங்கள் கருத்துக்கு நன்றி இரவி. இலங்கைத் தமிழ் நூல்களின் விபரம் நீண்ட காலங்களாக தொகுத்தாலும் நிறைவடையாது. மேலும் என் காலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சத்திரசிகிச்சை காரணமாக கட்டாய படுக்கை ஓய்வுபெற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது. காலில் அசைவுகளை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக கட்டிலில் இருந்தபடியே கட்டுரைகளை மடிக் கணனி மூலமாக தரவேற்றம் செய்துவருகின்றேன். இதனால் நூல் விபரங்களை திரட்டி ஒழுங்கமைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கால் குணமடைந்து சாதாரண நிலைக்குத் திரும்பியதும் தொடர்ந்தும் அப்பக்கங்களில் கவனத்தைச் செலுத்துவேன். இம்முயற்சியில் ஏனைய பயனர்களும் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையில் வார்ப்புருவை வைத்திருப்பது நல்லது எனக் கருதினேன். விக்கி நடைமுறைகளுக்கு முரணாக இருப்பின் குறிப்பிட்ட விடயங்களை நீக்கி விட்டு நேரம் கிடைக்கும் போது கட்டுரைகளைத் தொடரலாம். இதுகுறித்த தங்கள் முடிவினை எதிர்பார்க்கின்றேன். --P.M.Puniyameen 11:43, 22 மார்ச் 2011 (UTC)

படுக்கையில் இருந்தாவறே பங்களிக்கும் உங்களின் ஆர்வம் வியக்க வைக்கிறது !! விரைவில் முழு நலம் அடைய வாழ்த்துகள். வார்ப்புருக்கள் தொடர்பில் என்னுடைய முடிவு எல்லாம் ஒன்றும் இல்லை :) புதிய கட்டுரைகளை எழுதிக் கொண்டு செல்லும் போது இதிலும் ஒரு கவனம் செலுத்த வேண்டுகிறேன். அவ்வளவு தான். தகவலைத் திரட்ட நாட்கள் தேவைப்படும் என்பது புரிந்து கொள்ளத்தக்கது. மாதக்கணக்கில் இவ்வார்ப்புருக்கள் இடம்பெறுமானால், பிறகு வார்ப்புருவையும் வெற்றுப் பகுதிகளையும் நீக்கி விடுவது நல்லது. இல்லாவிட்டால், கட்டுரை ஒரு முழுமையற்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்--இரவி 18:05, 22 மார்ச் 2011 (UTC)

நல்லது இரவி. இவ்வார்ப்புருவும் வெற்றுப் பகுதிகளும் இடம் பெறும்போது கட்டுரை ஒரு முழுமையற்ற தோற்றத்தையே கொண்டிருக்கும். உண்மைதான். படிப்படியாக கட்டுரைகளைச் சீர் செய்வதுடன் வார்ப்புருவையும், வெற்றுப் பகுதிகளையும் நீக்கி விடுகின்றேன். பின்பு கட்டுரையைத் தொடரலாம்.--P.M.Puniyameen 09:06, 23 மார்ச் 2011 (UTC)


வாழ்த்துக்கள் புன்னியாமீன்.--Kalaiarasy 14:20, 22 மார்ச் 2011 (UTC)
மிக்க நன்றி Kalaiarasy--P.M.Puniyameen 14:23, 22 மார்ச் 2011 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
உங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதன் மூலம் இந்தப் பதக்கத்திற்கே பெருமை கிடைத்திருக்கிறது புன்னியாமீன். நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கிடைத்த அரிய சொத்து என்று கூறிக் கொள்வதில் மகிழ்கிறேன். சூர்ய பிரகாசு.ச.அ. 16:47, 17 மார்ச் 2011 (UTC)
 • பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் கூறிவிட்டீர்கள் சூர்ய பிரகாசு. என்னைப்பற்றி என் விக்கிக்குடும்பத்தினர் வைத்துள்ள அபிப்பிராயத்துக்கு என் நன்றிகள் கோடி. இந்த நம்பிக்கையை நான் கடைசிவரை பாதுகாத்துக்கொள்வேன்.--P.M.Puniyameen 16:59, 17 மார்ச் 2011 (UTC)
 • தங்களது பயனர்ப் பக்கத்திலிருந்த பழைய குதிக்கும் விக்கிப்பீடியா இலச்சினையை மாற்றிப் புதிய இலச்சினையை இட்டேன். (உங்கள் மின்னஞ்சலைப் பார்த்தபின்னரே செய்தேன்!) :)

--சூர்ய பிரகாசு.ச.அ. 12:25, 18 மார்ச் 2011 (UTC)

நன்றி சூர்ய பிரகாசு--P.M.Puniyameen 12:29, 18 மார்ச் 2011 (UTC)

முக்கால்புள்ளி[தொகு]

பின்னியாமீன், கட்டுரைகளின் துவக்கத்தில் குறிப்பிடப்படும் பெயர்களின் இறுதியில் முக்கால்புள்ளி (:), இடத்தேவையில்லை. ஒரு அடைப்பு அல்லது கால்புள்ளி அடுத்து வருவதால் முக்கால்புள்ளியும் அங்கு வேண்டாம் என நினைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 06:16, 21 மார்ச் 2011 (UTC)

அதன்படியே செய்கிறேன் சோடாபாட்டில். நன்றி --P.M.Puniyameen 06:19, 21 மார்ச் 2011 (UTC)

பிறந்தநாள் குழுமம்[தொகு]

Nuvola apps cookie.svg வணக்கம்! P.M.Puniyameen/தொகுப்பு 1 அவர்களே! பிறந்தநாள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் சந்தேகம் எழுந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்! நன்றி!

--சூர்ய பிரகாசு.ச.அ. 18:31, 23 மார்ச் 2011 (UTC)

அரபுப் பெயர் உச்சரிப்புகள்[தொகு]

தமிழகத்தில் அகமது முகம்மது என்று தான் எழுதுகிறோம். நீங்கள் பெயர்களில் அகமட், முகமட் என்று எழுதுவதால் ஒருவேளை இலங்கையில் இவ்வாறுதான் எழுதுகிறார்களா என்று அறிய ஆவல். -- மாகிர் 16:13, 27 மார்ச் 2011 (UTC)

மாகிர் இலங்கையில் அகமட், முகமட் என்று தான் குறிப்பாக முஸ்லிம்கள் எழுதுகிறார்கள். உதாரணமாக என்பெயர் கூட பீர்மொஹம்மட் புன்னியாமீன் என்றுதான் எழுதப்படுகிறது. இருப்பினும் தங்கள் திருத்தத்தை நான் வரவேற்கிறேன்.--P.M.Puniyameen 16:32, 27 மார்ச் 2011 (UTC)

பங்களிப்புக்கான வார்ப்புரு[தொகு]

 • தங்கள் பயனர் பக்கத்தில் பங்களிப்புகள் குறித்த பல தகவல் அறிவதற்கான வசதியுடைய வார்ப்புருவைப் பயன்படுத்தலாமே? அந்த வார்ப்புருக்கான குறியீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்திப் பாருங்கள். நல்ல பயனுள்ள வார்ப்புரு.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:03, 29 மார்ச் 2011 (UTC)

 • நன்றி தேனி. இதனைத்தான் இப்போது பயன்படுத்துகின்றேன்--P.M.Puniyameen 16:31, 29 மார்ச் 2011 (UTC)

ஒரு மாதத்தில் 513 கட்டுரைகள்[தொகு]

மார்ச்சு 1, 2011 முதல் மார்ச்சு 31 , 2011 வரை 513 கட்டுரைகள் வடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 06:29, 1 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி சிவகுமார். என்னுடைய விக்கிப்பங்களிப்புக்களுக்கு தங்கள் உதவிகளும் ஆலோசனைகளுமே மூல காரணம். விக்கியையைப் பொருத்தளவில் நீங்கள் என் குரு. அதே போல எமது விக்கி குடும்பத்தினரது அன்பான வழிகாட்டல்களும், ஆலோசனைகளுமே என் வேகமான பங்களிப்புக்களுக்குக் காரணம். பெயர் குறிப்பிடாது விட்டாலும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இவ்விடத்தில் சமர்ப்பிக்கின்றேன்--P.M.Puniyameen 06:45, 1 ஏப்ரல் 2011 (UTC)

பதக்கம்[தொகு]

Tireless Contributor Barnstar.gif களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
குறுகிய காலத்தில் அதிகளவு எண்ணிக்கையிலான கட்டுரைகளைத் தந்ததற்கும் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதற்கும் மேலும் தங்கள் பணி சிறப்புடன் தொடரவும் எனது வாழ்த்துக்கள்! சி. செந்தி 14:10, 1 ஏப்ரல் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

 • மிக்க மகிழ்ச்சி செந்தி. எமது விக்கி குடும்பத்தினரது அன்பான வழிகாட்டல்களும், ஆலோசனைகளுமே என் வேகமான பங்களிப்புக்களுக்கு மூல காரணம். விக்கி குடும்பத்தினரது ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். --P.M.Puniyameen 14:20, 1 ஏப்ரல் 2011 (UTC)

என் மனமார்ந்த நன்றிகள்[தொகு]

தமிழ் விக்கியில் குறுகிய காலத்துக்குள் ஆயிரம் கட்டுரைகளை தொடங்கி வைக்கும் வாய்ப்பு ஏற்பட்டமைக்கு முதற்கண் இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்ததாக விக்கி குடும்பத்தினர் காட்டிய ஆதரவுகளுக்கும், ஒத்துழைப்புக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஏனைய ஊடகங்களில் ஆயிரக்கணக்கான ஆக்கங்களை எழுதியபோதிலும்கூட, விக்கியில் எழுதும்போது ஒரு தனி நடையை பின்பற்ற வேண்டியுள்ளது. விக்கியில் எம்மால் எழுதப்படும் கட்டுரைகளுக்கு எம்மால் உரிமைக்கோர முடியாது. ஏனெனில், அக்கட்டுரைகளை பல பயனர்கள் சிறப்பான முறையில் திருத்தங்களை செய்து அக்கட்டுரையின் தரத்தை மேன்மைப்படுத்துவர். இந்த அடிப்படையில் என்னால் ஆரம்பிக்கப்பட்ட பல கட்டுரைகளை பல பயனர்கள் சிறப்பான முறையில் மெருகூட்டியுள்ளனர் இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

குறிப்பாக விக்கியில் கட்டுரைகள் எழுதும்போது என்னுள் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சஞ்சீவி சிவகுமார், Kanags ஸ்ரீதரன், சோடாபாட்டில், HK அருண், தேனி.எம்.சுப்பிரமணி. ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வேன். எப்படிப்பட்ட நிலையிலும் எத்தகைய பிரச்சினைகளை வினவினாலும் மிகவும் சிறப்பான முறையில் பதில் வழங்கி என்னை வழிநடத்திய இவர்களுக்கு இவ்விடத்தில் என் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவையனைத்துக்கும் புறம்பாக எனது அலுவலக பணிகளின் ஓய்வு நேரத்தில் கணினியில் நான் ஆரம்பிக்கவுள்ள கட்டுரைகளை தமிழில் டைப் செய்து தரும் எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களுக்கும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். ஆயிரம் கட்டுரைகளை ஆரம்பிப்பதற்கு இவ்விருவரும் தந்த ஒத்தாசை விசாலமானவை.

மேலும், என் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களை 'உரையாடல்' பகுதியிலும் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்து ஆலோசனைகளை வழங்கிய விக்கி குடும்பத்தில் அனைத்து பயனர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்திலும் இறைவன் நாடினால் என் பணி விக்கியுடன் தொடரும். இதேபோல தங்களால் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன்.

--P.M.Puniyameen 16:26, 6 ஏப்ரல் 2011 (UTC)

வாழ்த்துக்கள்[தொகு]

ஆயிரவர் பதக்கம்

மிகவும் குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்தும் நல்ல பயனுள்ள கட்டுரைகளை எழுதித் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என்பது எனது நம்பிக்கை. ---மயூரநாதன் 18:28, 6 ஏப்ரல் 2011 (UTC)

உங்கள் அறிமுகம் நேற்று நிகழ்ந்ததுப் போல் உள்ளது. அதற்குள் ஆயிரம் கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியுள்ளீர்கள். ஆயிரம் பேர் எழுதும் ஆர்வம் கொண்டு வந்தாலும், எழுத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு சிலரின் வருகையால் கிடைக்கும் பெறுபேறுகள் எத்தகையது என்பதற்கு நீங்கள் ஒரு முன்சான்று. அதேவேளை எழுதும் ஆக்கங்கள் காலம் கடந்தும் பலருக்கு பயன்படும் வகையில் உங்கள் பங்களிப்பு விக்கிப்பீடியாவில் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன். --HK Arun 18:45, 6 ஏப்ரல் 2011 (UTC)

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மயூரநாதன், அருண். நிச்சயமாக எதிர்காலத்திலும் (இன்சாஅல்லாஹ்) என் பணி தொடரும். எதிர்காலத்தில் மாணவர்களின் நலன்கருதிய கல்வியியல் விடயங்களையும், அருண் குறிப்பிட்டதைப் போல காலம் கடந்தும் பலருக்கு பயன்படும் வகையில் கட்டுரைகளையும் தருவேன்.--P.M.Puniyameen 04:35, 7 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீன், இடையறாது தமிழ் விக்கிக்காக உழைத்து இன்றளவில் 1026 கட்டுரைகளை உருவாக்கியமைக்காக உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் ஆயிரவர் என்னும் பட்டம் தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்க உங்கள் நற்பணி! அன்புடன் --Kanags \உரையாடுக 08:51, 7 ஏப்ரல் 2011 (UTC)

மிக்க நன்றி Kanags. உடன் பங்களிப்பாளன் என்ற வகையில் தங்களால் வழங்கப்பட்ட ஆயிரவர் பதக்கத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 09:01, 7 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீன் நானா, ஆயிரவர் பதக்கம் நீங்கள் பெறுவதில் மிச்சம் சந்தோஷம். பதக்கம் பத்தில் ஆலமரத்தடியில் நான் பேசினேன் [2] இந்த பதக்கம் ஒரு மைல்கல் பதக்கம். இந்த பதக்கத்தில் ஒரு அர்த்தம் இருக்கு. நீங்கள் எத்தனையோ பட்டங்கள் பாராட்டு எல்லாம் பெற்றவர். உங்களுக்கு கனகுஸ் பதக்கம் கொடுத்திருக்கிறார். கனகுஸ்ஸுக்கு அதை கொடுக்கும் தகுதி இருக்குது. அல்லாவின் புகழால் நீங்கள் இன்னும் இன்னும் எழுதோணும். - மொஹமட்

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பு எங்கள் பலம். இன்னும் வளரட்டும்..--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:08, 7 ஏப்ரல் 2011 (UTC)

பதக்கம்[தொகு]

WikiDefender Barnstar Hires.png


விக்கிப்பதக்கத் தக்கவைப்பாளர் பதக்கம்
பதக்கங்களைத் தக்கவைத்துக் கொண்டதற்கு வாழ்த்துகள் புன்னியாமீன். உங்களை மனமார வாழ்த்துகிறேன்.

இப்பதக்கம் உங்களுக்கு உதவி செய்த மௌலவீ இரமீஸ்தீன் அவர்களுக்கும் இல்முன் நிசா ஹிலால் அவர்களுக்கும் சேர்த்து அளிக்கப்படுகிறது. அவர்களையும் விக்கிப்பீடியாவில் கணக்கு தொடங்கச் சொல்லிப் பங்களிக்க நீங்கள் ஊக்குவிக்கலாமே! சூர்ய பிரகாசு.ச.அ. 18:43, 6 ஏப்ரல் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

புன்னியாமீன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய கட்டுரைகளை எழுத ஆரப்பித்தமைக்கு நன்றிகள். அவசியம் தேவையான பதிவுகள். இக்கட்டுரைகளை எழுத ஆரம்பிக்க முன்னர் சில கருத்துகள்: பல எம்பிக்கள் 2010 மட்டுமல்லாமல் ஏற்கனவே சில முறை தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே அந்தத் தகவல்களும் சேர்க்கப்பட வேண்டும். அநேகமான எம்பிக்கள் பற்றிய கட்டுரைகள் ஏற்கனவே ஆங்கில விக்கியில் உள்ளன. அவற்றில் பல 2010 ஆம் ஆண்டு முடிவுகளுக்கேற்ப இற்றைப்படுத்தப்படாமல் உள்ளன. ஆனால் பழைய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இப்போது எழுதப்படா விட்டால் பின்னர் எப்போதும் எழுதப்படப் போவதில்லை:).--Kanags \உரையாடுக 12:47, 17 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி Kanags, 225 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும் தொடர்ந்தும் படிப்படியாக எழுதும் எண்ணம் உண்டு. பழைய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முனைகின்றேன்--P.M.Puniyameen 12:57, 17 ஏப்ரல் 2011 (UTC)

புன்னியாமீன், நீங்கள் எழுதிவரும் இக்கட்டுரைகள் சிறப்பானவை. ஆனால், எத்தனையாவது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிக்கல் எழுகிறது. தமிழ் விக்கியில் செல்வம் அடைக்கலநாதன் ஏழாவது நாடளுமன்ற உறுப்பினர் எனத் தந்துள்ளீர்கள். ஆனால், ஆங்கில விக்கியில் அவ்வாறு இல்லை, 11, 12, 13, 14 ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர் என்று தரப்பட்டுள்ளது. (அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்) மேலும் ஏழாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய இணைப்பு உங்களுக்கு உதவக்கூடும். ஆங்கில விக்கியிணைப்பு --சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 17:35, 18 ஏப்ரல் 2011 (UTC)

எத்தனையாவது நாடாளுமன்றம்[தொகு]

சூர்ய பிரகாசு, இலங்கையில் எத்தனையாவது நாடாளுமன்றம் என்ற விடயத்தில் சிக்கல் ஏற்படுவது இயல்பு. விரைவில் இது பற்றி விரிவான கட்டுரையொன்றை விக்கியில் இன்ஸாஅல்லாஹ் எழுதுகின்றேன். இலங்கை பெப்ரவரி 04, 1948இல் சுதந்திரமடைந்தது. 1947ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியவர்களே சுதந்திரத்தின் பின்பு நாடாளுமன்றத்தில் இருந்தனர். இது இலங்கையின் முதலாவது நாடாளுமன்றமாக கணிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்ற காலத்தினை அடிப்படையாகக் கொண்டே நாடாளுமன்றம் தீர்மானிக்கப்படுகின்றது.

 • முதலாவது நாடாளுமன்றம் தேர்தல் நடந்த காலம் 23.08.1947 - 20.09.1947
 • இரண்டாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் 24.05.1952 - 30.05.1952
 • மூன்றாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 05.04.1956 - 10.04.1956
 • நான்காவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 19.03.1960
 • ஐந்தாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 20.07.1960
 • ஆறாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 22.03.1965
 • ஏழாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடந்த காலம் - 27.05.1970

ஏழாவது நாடாளுமன்ற ஆட்சிக் காலத்தில் மே 22, 1972இல் இலங்கை குடியரசாகியது. குடியரசானதன் பின்பு டொமினியன் அந்தஸ்து நிலையிலிருந்த இலங்கை இறைமைமிக்க நாடாகியது. இந்த அடிப்படையில் குடியரசு ஆனதன் பின்பு முழுமையாக சுதந்திரமடைந்த குடியரசு இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சிக் காலம் கணிக்கப்படுவின்றது. இந்த அடிப்படையில் நோக்குமிடத்து

 • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முதலாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 21.07.1977 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 8வது நாடாளுமன்றம்.)
 • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இரண்டாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 15.02.1989 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 9வது நாடாளுமன்றம்.)
 • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மூன்றாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 16.08.1994 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 10வது நாடாளுமன்றம்.)
 • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 10.10.2000 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 11வது நாடாளுமன்றம்.)
 • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 05.12.2001 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 12வது நாடாளுமன்றம்.)
 • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 02.04.2004 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 13வது நாடாளுமன்றம்.)
 • இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் 08.04.2010, 20.04.2010 நடைபெற்றது. (இது இலங்கை என்றடிப்படையில் 14வது நாடாளுமன்றம்.)
  • மேற்குறிப்பிட்ட அடிப்படையில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது நாடாளுமன்றம் என்பதே சரியானது. ஆங்கில விக்கியில் இக்காலம் குறித்து சில கருத்துமுரண்பாடுகள் உள்ளன. இலங்கை சுதந்திரமடைந்தது என்பதை விட இலங்கை குடியரசானதினூடாகவே முழுமையான இறைமையைப் பெற்றுக் கொண்டது குடியரசின் ஏழாவது பாராளுமன்றம் என்ற வார்த்தையை சேர்த்தால் மேலும் திருத்தமாக இருக்குமெனக் கருதுகின்றேன். என் கட்டுரை தொடரில் இவ்வார்த்தையை இணைத்துவிடுவேன். --P.M.Puniyameen 03:29, 19 ஏப்ரல் 2011 (UTC)


பாராட்டுகள், தானியங்கியாக கட்டுரைகளைச் செய்யலாமா?[தொகு]

ஒரே நாளில் 200க்கு மேற்பட்ட கட்டுரைகளைத் தந்தமை கண்டு மகிழ்ந்தேன். இதற்கு முன் நிரோ என்னும் இளைஞர் ஒரே நாளில் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை ஏற்றி உள்ளார். ஆனால், அவை பல நாள் உழைத்து ஒரே நாளில் பதிவேற்றப்பட்டவை. உங்கள் கட்டுரைகள் யாவும் ஒரே நாளிலேயே எழுதப்பட்டவை என்று நினைக்கிறேன். என் மனமார்ந்த பாராட்டுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரே துறையில் அமைந்த அடிப்படைக் கட்டுரைகளை இயற்றி வருவதால், இவற்றை இன்னும் திறம்பட செய்ய இயலுமா என்று எண்ணுகிறேன். எடுத்துக்காட்டுக்கு: கிரிக்கெட் வீரர்களின் புள்ளி விவரங்கள், நாடு, ஆடிய காலம் போன்ற அடிப்படைத் தகவல்களை வைத்துத் தானியங்கியாகவே கட்டுரைகளை ஏற்ற முடியும். இதனால் ஒரே மாதிரியான தகவல்களைத் திரும்பத் திரும்ப அச்சிடும் உழைப்பு மிஞ்சும். இது குறித்து சுந்தர், மாகிர் போன்றோர் உதவ இயலும். தாங்கள் தற்போது கட்டுரைகளை உருவாக்கும் முறையைப் பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும். நன்றி--இரவி 13:24, 20 ஏப்ரல் 2011 (UTC)

இரவி, கட்டுரைகள் யாவும் நேற்றும் இன்றும் எழுதப்பட்டவை. எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது, மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும் இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். இன்னும் அவர்களின் பணிதொடர்ந்நு கொண்டிருக்கின்றது. தானியங்கியாக கட்டுரைகளைச் செய்யஆசை ஆனால் போதிய கணனி அறிவு இல்லை. அதுதான் சிக்கல்--P.M.Puniyameen 13:55, 20 ஏப்ரல் 2011 (UTC)
நல்லதொரு குடும்பம் (விக்கிப்)பல்கலைக்கழகம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறீர்கள். மெளலவி ரமீஸ்தீன், திருமதி இல்முன் நிஸா, மற்றும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். -- மாகிர் 02:55, 21 ஏப்ரல் 2011 (UTC)
 • நன்றி மாகிர் --P.M.Puniyameen 05:07, 25 ஏப்ரல் 2011 (UTC)

நன்றிகள்[தொகு]

ஏப்ரல் 20. 2011 இலங்கை நேரப்படி அதிகாலை 5.40 முதல், நள்ளிரவு 1.30 மணிவரை சுமார் 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக 300 கட்டுரைகளை தரவேற்றம் செய்த நேரத்தில் நான் எதிர்பாராத விதமாக உலகலாவிய ரீதியில் பல பயனர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், மின்னஞ்சல் மூலமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து மனதைரியத்தைத் தந்து ஊக்கப்படுத்தினர். அதே போல ஆலமரத்தடி மற்றும் எனது பேச்சுப் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அனைவருக்கும் இவ்விடத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். "வாழ்த்துக்களை எதிர்பார்த்து என் இலக்குப் பயணத்தை ஆரம்பிக்கவில்லை'. இருப்பினும் தொடர்ச்சியாக ஒரே மூச்சில் வேலை செய்ததினால் உடல், மன சோர்வு ஏற்பட்ட நிலையில் இந்த வாழ்த்துக்கள் ஒரு புதுத் தெம்பினைத் தந்தன. 200 பதிவுகளுடன் நிறுத்திக் கொள்ள இருந்த நேரத்தில் பயனர் சிவகுமார் தொலைப்பேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு இயலுமான வரை தொடரும் படி தைரியத்தைத் தந்தார். அவரின் அன்புக் கட்டளை இல்லாதிருப்பின் 200உடன் நிறுத்தியிருப்பேன். அவர் அலுவலக விடயமாக ஒரு கூட்டத்தில் இருந்த போதும் கூட அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எண்ணிக்கையை கேட்டுக்கொண்டேயிருந்தார். எனது இந்த இலக்குப் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்டதொன்றல்ல. 19ம் திகதி காலை விக்கிப்பீடியாவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எனது அலுவலக கணனி இயக்குனர்கள் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டால் என்ன என என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அதன் பின்பே என் சிந்தனையில் இத்திட்டம் உதித்தது. பின்பு சோடா கெனக்ஸ் சிவகுமார் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தேன். சிவகுமார் அதை விக்கியிலும் அறிவித்து விட்டார். அதன் பின்பே அனைத்துத் திட்டங்களையும் தீட்டி 20ம் திகதி இலக்குப் பயணத்திற்கு ஆயத்தமானேன். விக்கி செய்தி வந்தபின்பே கட்டுரைகளை டைப் பண்ண ஆரம்பித்தோம். ஏனவே 300கட்டுரைகளும் 19ம் திகதி மாலையிலும் 20ம் திகதி காலை முதல் மாலை வரையிலும் டைப் பண்ணப்பட்டவையே. இதற்காக 3 கனணிகளை பயன்படுத்தினோம். எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களும் மற்றும் என் மகன் சஜீர் அகமது, மகள் பாத்திமா சம்ஹா ஆகியோருடன் இணைந்து என் மனைவி மஸீதா புன்னியாமீனும் இப்பணிக்கு முழுமையான பங்களிப்பை நல்கினர். இவ்வாறே எமது கூட்டு முயற்சி நடைபெற்றது. அனைத்தும் என்னால் நேரடியாக வழிகாட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் 300 கட்டுரைகளும் என்னாலே தரவேற்றம் செய்யப்பட்டன. ஒத்துழைத்த ஆதரவு தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விசேடமாக கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்படும் போது உடனுக்குடன் திருத்தங்கள் செய்த சோடாவுக்கும் கெனக்சுக்கும் எனது விசேட நன்றிகள். --P.M.Puniyameen 12:22, 21 ஏப்ரல் 2011 (UTC)

இரண்டாயிரமவர்[தொகு]

குறுகிய காலத்தில் இரண்டாயிரம் கட்டுரைகளைத் தாண்ட உள்ள தங்கள் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது. தங்களுக்கு என் பணிவன்பான வாழ்த்துகள்! நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 19:01, 24 ஏப்ரல் 2011 (UTC)

இன்றுவரை (விஜய தஹநாயக்க வரை) 1554 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் புன்னியாமீன். மிக விரைவில் இரண்டாயிரவர் பட்டியலில் இடம்பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்--Kanags \உரையாடுக 22:58, 24 ஏப்ரல் 2011 (UTC)
தங்கள் முன்கூட்டிய வாழ்த்துக்களுக்கு நன்றி டாக்டர் கார்த்திகேயன். Kanags குறிப்பிட்டதைப் போல இன்னும் இரண்டாயிரம் இலக்கை அடையவில்லை. மிக விரைவில் இரண்டாயிரவர் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வேன். பிரார்த்தித்துக்கொள்ளுங்கள்--P.M.Puniyameen 05:05, 25 ஏப்ரல் 2011 (UTC)
விரைவில் இரண்டாயிரமவர் எனும் இலக்கினையும் தாண்டி நிற்க வாழ்த்துபவர்களோடு நானும் இணைகிறேன். வாழ்த்துக்கள் கோடி.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 05:34, 25 ஏப்ரல் 2011 (UTC)
 • நன்றி சிவகுமார்--P.M.Puniyameen 06:03, 25 ஏப்ரல் 2011 (UTC)

பதக்கம்[தொகு]

Real Life Barnstar.jpg மெய்வாழ்வுப் பதக்கம்
ஒரே நாளில் 300 கட்டுரைகள் தந்த உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன் ஐயா! உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள். எந்த வகையில் உதவி தேவைப்படினும் உதவ அணியமாக உள்ளேன் !!!

சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 14:27, 26 ஏப்ரல் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

உங்கள் அன்புக்கு நன்றி சூர்ய பிரகாசு. முதலில் தேர்வில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகள் --P.M.Puniyameen 14:38, 26 ஏப்ரல் 2011 (UTC)
தங்கள் வாழ்த்துக்கு நன்றி. இதுவரை நான் கண்டிராச் சாதனை இது. வாழ்க!

--சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 14:51, 26 ஏப்ரல் 2011 (UTC)

Heartiest Congratulations[தொகு]

The India Barnstar presented to User:P.M.Puniyameen as a token of recognition of his contributions.

Dear Mr Puniyameen,

I'm User:AshLin on English Wikipedia. I read about your sincere dedication in the message shown below circulated on Wikimedia India mailing list:

<quote>Hi,

Tamil Wikipedia added another 1,000+ articles in the last 3 weeks.

Behind this is a remarkable story of 1 user who created 300 articles organically in 20 hours.

P.M.Puniyameen ( http://ta.wikipedia.org/wiki/user:P.M.Puniyameen ) from Srilanka is a retired academician, prolific writer and independent journalist. He started contributing to Tamil Wikipedia from November 2010. In the short span of 5 months he has added 2000+ articles.

He set himself a target creating 200 articles on 20th April but ended up creating 300 articles in 20 hours. He was helped by his wife, daughter and two colleagues in typing the articles which were mainly info based articles on cricketers, small magazines. Earlier, he even created articles from his bed when he was in a medical rest.

Thought of sharing this story as it is inspiring to see people working with so much dedication, mobilising people and resources for Wikipedia.

Regards,

Ravi</quote>


Accordingly, I award you this barnstar as a symbol of recognition of your contribution. AshLin 18:24, 28 ஏப்ரல் 2011 (UTC)

Dear Mr AshLin
THANK YOU VERY MUCH FOR YOUR AWARD
--P.M.Puniyameen 02:35, 29 ஏப்ரல் 2011 (UTC)
வாழ்த்துக்கள் புன்னியாமீன். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம்.--Kanags \உரையாடுக 20:56, 28 ஏப்ரல் 2011 (UTC)
உங்கள் உழைப்பும் ஈடுபாடும் பரந்துபட்டு அங்கீகரிக்கப்படுவதில் அகம் மகிழ்கிறேன். என்றும் அன்புடன் --சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 04:13, 29 ஏப்ரல் 2011 (UTC)
உங்கள் உழைப்பு தமிழ் விக்கிப்பீடியாவைக் கடந்தும் அங்கீகாரம் பெறுவதையிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 05:01, 29 ஏப்ரல் 2011 (UTC)
 • ஸ்ரீதரன் (Kanags), சிவகுமார், மயூரநாதன் தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்--P.M.Puniyameen 06:44, 29 ஏப்ரல் 2011 (UTC)
தங்களது சாதனையைப் பற்றி ஐரோப்பிய விக்கியர் ஜெரார்ட் எழுதிய வலைப்பதிவு கட்டுரை--சோடாபாட்டில்உரையாடுக 08:01, 2 மே 2011 (UTC)
 • சோடாபாட்டில், தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. --P.M.Puniyameen 08:26, 2 மே 2011 (UTC)
அட, எதிர்பாராத ஓர் சேர்நிகழ்வு..இப்போதுதான் நான் உங்களைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவில் பதிந்துவிட்டு உங்களுக்குத் தகவல் கூற வந்தேன். ஆனால் ஜெரார்ட் எங்களை முந்திக்கொண்டு விட்டார். வாழ்த்துகள் !!--மணியன் 08:48, 2 மே 2011 (UTC)
 • உங்கள் அன்புக்கு நன்றி மணியன்--P.M.Puniyameen 08:55, 2 மே 2011 (UTC)

விக்கிபாசா பயனர் கருத்துக்கான அழைப்பு[தொகு]

வணக்கம் திரு. புன்னியாமீன் அவர்களே,

தமிழ்விக்கியின் வளர்ச்சியில் தங்களின் பங்கினை மிகவும் பாராட்டுகிறோம்.
பன்மொழி விக்கிப்பீடியா தகவல்களை மேம்படுத்தும் நோக்காக விக்கிபாசா என்ற கருவியை மைக்ரோசாஃப்ட் இந்திய ஆய்வகம் வெளியிட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இக்கருவி மீடியாவிக்கியிலும் ஒரு திறந்த வெளி கருவியாக வெளியிடப்பட்டுள்ளது. விக்கிபாசா அளவில் பெரிதான ஆங்கில விக்கிப்பீடியாவை அடிப்படையாகக் கொண்டு, மைக்ரோசாஃப்ட் மொழிபெயற்பி ஆதரிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகிறது. இக்கருவியினைப் பற்றிய மேலும் விவரங்கள் விக்கிபாசா தளத்தில் பார்கலாம். விக்கிபாசாவிற்காக ஓரு திட்ட பக்கமும் உள்ளது.
நல்ல மொழிபெயர்ப்பி ஏதுமில்லாத சூழ்நிலையில் இக்கருவியை எப்படி மிகவும் பயனுள்ளதாகச் செய்யமுடியும் என்பதை அறிந்துகொள்ளவும், இக்கருவியை விக்கி சமூக ஆர்வலர்கள் பயன்படுத்த அதிலிருக்கவேண்டிய குறைந்தபட்ச அம்சங்கள் எவை என்பதை புரிந்துகொள்வதற்காகவும், தமிழில் தற்போது விக்கிபாசா ஒரு சோதனை திட்டமாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தாங்களும் இக்கருவியை பயன்படுத்தி, தங்கள் கருத்துக்களைவும் பயன்பாடுகள், குறைபாடுகள், எண்ணங்கள் மற்றும் காண விரும்பும் முன்னேற்றங்கள் ஆகியவற்றையும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
WBMSRI@microsoft.com என்ற முகவரியிலும் தாங்கள் எங்களை தொடர்புகொள்ளலாம்.

நன்றி, விக்கிபாசா குழு WikiBhasha.MSR 09:57, 3 மே 2011 (UTC)

  • விக்கிபாசாவை பயன்படுத்தக்கூடிய கணனியறிவு எனக்கில்லை. இருப்பினும் பன்மொழி விக்கிப்பீடியா தகவல்களை மேம்படுத்தும் நோக்காக விக்கிபாசா பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றேன். நான் இலங்கையில் கண்டியில் வசிப்பவன். இது விடயமாக உதவியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரை தொடர்புபடுத்தித் தர முடியுமாக இருப்பின் பேருதவியாக இருக்கும். அது சிங்கள மொழி விக்கிப்பீடியாராக இருப்பினும் சரியே. இது குறித்து தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.--P.M.Puniyameen 11:38, 3 மே 2011 (UTC)

ஒரு மாதத்தில் 1000 பதிவுகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் ஏப்ரல் 6, 2011 முதல் மே 5, 2011 வரை ஒரு மாதத்தில் ஒரு தனிப் பயனர் என்ற வகையில் 1000 பதிவுகளை மேற்கொள்ள முடிந்ததை மனநிறைவுடன் அறியத்தருகின்றேன். அதே நேரம் நவம்பர் 14, 2010ல் புதிய பயனராக இணைந்த என்னால் 6 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்பு 2000 பதிவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. அண்மைக் காலங்களாக என் கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்படும் போது தலைப்புகளில் தமிழ் உச்சரிப்புப் பிழை ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் உடனுக்குடன் திருத்தங்களை மேற்கொண்ட சோடாபாட்டில், Kanags ஸ்ரீதரன், 'சஞ்சீவி சிவகுமார், ஆகியோருக்கும் HK அருண், தேனி.எம்.சுப்பிரமணி.' ஆகியோருக்கும் என் நன்றிகளை இதய அடித்தளத்திலிருந்து தெரிவித்துக் கொள்கின்றேன். என் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களை 'உரையாடல்' பகுதியிலும் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்து ஆலோசனைகளை வழங்கிய விக்கி குடும்பத்தில் அனைத்து பயனர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவையனைத்துக்கும் புறம்பாக எனது அலுவலக பணிகளின் ஓய்வு நேரத்தில் கணினியில் நான் ஆரம்பிக்கவுள்ள கட்டுரைகளை தமிழில் டைப் செய்து தரும் எனது அலுவலகத்தில் பணிபுரியும் மௌலவி ரமீஸ்தீன் அவர்களுக்கும், திருமதி இல்முன் நிஸா ஹிலால் அவர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

ஒரு புதிய சவாலை ஏற்றுக்கொள்வோமா?[தொகு]

கடந்த கால பல ஆண்டறிக்கைகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியா 68வது இடத்திலே இருந்து வந்துள்ளது. எமக்கு இத்தடைக்கல்லை தாண்டுவது பெரிதுபோல் பட்டாலும் அதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு முன்னேறிச் சென்றுள்ளோம். தமிழ் விக்கியின் 10வது ஆண்டு நிறைவடையும் போது ஏனைய பயனர்களின் உத்வேகத்தோடு குறைந்த பட்சம் தமிழ் விக்கியின் இடத்தை 50வது இடத்துக்காவது கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளை எமது மனங்களில் பதித்துக் கொண்டால் என்ன? ஆங்கில விக்கியினை சரிவரப் பயன்படுத்துவதனூடாகவும் எமது அனைத்து பயனர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதினூடாகவும் இந்த இலக்கை அடைவது பெரிய காரியம் அல்ல. நாம் அனைவரும் கரம் கோர்த்து இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்வோமா?

இது கால வரை என்னுடன் ஒத்துழைத்த விக்கி குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்

என்றும் உங்கள்

 • புன்னியாமீன். --P.M.Puniyameen 13:24, 5 மே 2011 (UTC)
ஏற்றுக்கொள்வோம் புன்னியாமீன். 50 என்றால் சற்றே மலைப்பாக இருந்தாலும் அடையத்தக்கதே.--சோடாபாட்டில்உரையாடுக 14:52, 5 மே 2011 (UTC)

ஈராயிரவர்[தொகு]

Iraayiravar.jpg

புன்னியாமீன், தமிழ் விக்கியில் நவம்பர் 2010 இல் இணைந்து இற்றைவரையில் 2025 கட்டுரைகள் எழுதி ஒரு மாபெரும் சாதனை படைத்துள்ளீர்கள். எனது பாராட்டுக்கள். அத்துடன் அனைத்துத் தமிழ் விக்கிபீடியர்கள் சார்பிலும் இந்த ஈராயிரவர் என்னும் பட்டம் அளித்துக் கௌரவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன். அன்புடன்--Kanags \உரையாடுக 06:40, 8 மே 2011 (UTC)

 • மிக்க நன்றி Kanags, இறைவன் நாடினால் (இன்சா அல்லாஹ்) இனி மௌனமாக என் பயணம் தொடரும் --P.M.Puniyameen 07:18, 8 மே 2011 (UTC)

2500 கட்டுரைகள்[தொகு]

நவம்பர் 14, 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு புதிய பயனராக இணைந்த நான் இன்று சூன் 4, 2010 இல் 2500வது கட்டுரையை ஆரம்பித்துவைக்க முடிந்தமையிட்டு மனநிறைவடைகின்றேன். புகழனைத்தும் படைத்தவனுக்கே. இச்சந்தர்ப்பத்தில் இந்தப் பயணத்தில் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிவரும் மூத்த விக்கி பயனர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும், கடந்த மாதத்தில் எனக்கு ஏற்பட்ட சில மனத்தாக்கங்கள் காரணமாக விக்கியில் எழுதும் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது நிறுத்திக்கொள்ள வேண்டும் என நான் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் நான் மனவேதனைப்பட்ட விடயம் குறித்து விளக்கங்களையும், மன தைரியத்தையும் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்குத் தந்து என்னை தொடர்ந்தும் எழுத ஊக்கவித்த சோடாபாட்டிலுக்கு இவ்விடத்தில் என் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சோடாபாட்டில், இன் இந்நடவடிக்கை உண்மையிலேயே பல புரியாத விடயங்களை எனக்குப் புரிய வைத்தது.

அதேநேரம், தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளையும், விக்கி செய்திகளில் செய்திகளையும் நான் எழுதி வரும்போது யாதாவது தவறுகள் ஏற்படுமிடத்து அவற்றை உடனுக்குடன் சுட்டிக்காட்டி திருத்தங்களை மேற்கொள்வதுடன் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்புகொண்டு விளக்கங்களை தரும் Kanags ஸ்ரீதரன்க்கும், சஞ்சீவி சிவகுமார்க்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது தொழில் ரீதியாக ஆண்டுதோறும் சூன், சூலை மாதங்கள் மிகவும் வேலைப்பளு அதிகரித்த மாதங்களாகும். இதனை உணர்ந்து ஏற்கனவே என்னால் வழங்கப்பட்ட அறிவுரைகள், ஆலோசனைகளுக் கிணங்க சுமார் 250க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தமிழில் தட்டச்சு செய்து முன்கூட்டியே ஆயத்த நிலையில் வைத்திருக்கும் எனது அலுவலக தமிழ் கணினி எழுத்துக் கோர்ப்பாளர்களான மௌலவி எஸ். எம். ரமீஸ்தீன் மற்றும் திருமதி இல்முன் நிசா ஹிலால் ஆகியோருக்கும் என் விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இவர்களது ஓய்வுநேரத்தைப் பயன்படுத்தி இவர்கள் செய்த இச்செயற்பாட்டினால் நெருக்கடிமிக்க இவ்விரு மாதங்களிலும் தடங்கலின்றி கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய முடியுமாக இருக்குமென கருதுகின்றேன். இருவராலும் தட்டச்சு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை விக்கி நடைக்கேற்ப மாற்றி அதை எடிட் பண்ணி பதிவேற்றம் செய்வதே இவ்விரு மாதங்களிலும் எனது பணியாக இருக்கும்.

மீண்டும் இப்பயணத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னுடன் ஒத்துழைத்த அனைவருக்கும் இதயபூர்வ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

--P.M.Puniyameen 06:49, 4 சூன் 2011 (UTC)


வாழ்த்துகள் புன்னியாமீன். உங்களோடு சேர்ந்து பங்களித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்... :) உங்கள் பணி தொடர வாழ்த்துகள். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 06:54, 4 சூன் 2011 (UTC)
 • தங்கள் வாழ்த்துக்கு நன்றி சூர்யபிரகாசு.--P.M.Puniyameen 06:57, 4 சூன் 2011 (UTC)
மூவாயிரம் கட்டுரை எனும் இலக்கை விரைவில் அடைய எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்..--சஞ்சீவி சிவகுமார் 08:51, 4 சூன் 2011 (UTC)
 • வாழ்த்துக்கு நன்றி சஞ்சீவி சிவகுமார் --P.M.Puniyameen 10:05, 4 சூன் 2011 (UTC)

நிருவாக அணுக்கம்[தொகு]

நிருவாக அணுக்கம் பெற வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:02, 16 சூன் 2011 (UTC)

தகவல்பெட்டி வழு[தொகு]

நீங்கள் குறிப்பிட்ட தகவல்பெட்டியில் வரும் வழுவினைப் போக்க அதில் பின்வரும் வரியினை சேர்க்க வேண்டும்

| living =yes

இப்போது திருத்தி அமைத்துள்ளேன்

--சோடாபாட்டில்உரையாடுக 17:13, 18 சூன் 2011 (UTC)

நன்றி சோடாபாட்டில்--P.M.Puniyameen 17:37, 18 சூன் 2011 (UTC)

இன்றா நாளையா 3000 இலக்கு[தொகு]

3000 இலக்கை அண்மித்துள்ள உங்களுக்கு என் உற்சாகப்படுத்தல்.--சஞ்சீவி சிவகுமார் 07:07, 22 சூன் 2011 (UTC)

தம்பி இலக்கு இன்னும் சில மணி நேரத்துக்குள்....--P.M.Puniyameen 07:14, 22 சூன் 2011 (UTC)

இதுவரை 2976 கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள். விரைவில் மூவாயிரத்தைத் தொட இருக்கும் தங்களுக்கு என் வணக்கங்கள்! நன்றி!--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:28, 22 சூன் 2011 (UTC)

நன்றி கார்த்திகேயன்--P.M.Puniyameen 08:11, 22 சூன் 2011 (UTC)

3000 கட்டுரைகள்[தொகு]

தமிழ்விக்கிப்பீடியாவில் பயனராக இணைந்து இன்றுடன் 7 மாதங்கள் 8 தினங்களாகின்றன. இந்த குறுகிய காலகட்டத்தில் 3000 கட்டுரைகளை ஆரம்பித்து வைக்க முடிந்தமையிட்டு முதற்கண் படைத்தவனுக்கும், அடுத்ததாக என் கட்டுரைகளில் திருத்தங்களைச் செய்து வருவதுடன், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கிய விக்கி குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அண்மைக் காலங்களாக என் கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்படும் போது தலைப்புகளில் தமிழ் உச்சரிப்புப் பிழை ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் உடனுக்குடன் திருத்தங்களை தினந்தோறும் செய்துவரும் சோடாபாட்டில், Kanags ஸ்ரீதரன், சஞ்சீவி சிவகுமார் ஆகியோருக்கு என் விசேட நன்றிகள்.--P.M.Puniyameen 10:45, 22 சூன் 2011 (UTC)

மூவாயிரவருக்கான பதக்கம்
வாழ்த்துகள் புன்னியாமீன். 7 மாதங்களில் 3000!!!!!!!!!!!!! கட்டுரைகள்! நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை! --சோடாபாட்டில்உரையாடுக 11:38, 22 சூன் 2011 (UTC)
 • தங்கள் வாழ்த்துக்கு நன்றி சோடாபாட்டில். இந்தப் பயணத்தில் தங்களுக்கும் பங்குண்டு.--P.M.Puniyameen 11:43, 22 சூன் 2011 (UTC)
புன்னியாமீன், ஒன்றரை மாதங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதி, ஏழு மாதங்களில் மூவாயிரம் கட்டுரைகளை எட்டிய மிகப்பெரும் சாதனை புரிந்தமைக்காக அனைத்து விக்கிப்பீடியர்கள் சார்பிலும் இந்த சிறப்புச் சான்றை வழங்குவதில் பெருமையடைகிறேன். மென் மேலும் சாதனைகள் குவிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.--Kanags \உரையாடுக 12:26, 22 சூன் 2011 (UTC)
 • தங்கள் வாழ்த்துக்கு நன்றி Kanags. இந்தப் பயணத்தில் தங்களுக்கும் பங்குண்டு. --P.M.Puniyameen 12:32, 22 சூன் 2011 (UTC)
மூவாயிரம் கட்டுரைகளைக் குறுகிய காலத்தில் வழங்கிய தங்களின் சாதனைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். தமிழ் விக்கியைத் தாங்கும் தூண்களில் ஒன்றாகத் தொடரட்டும் தங்கள் பணி.--செந்தி//உரையாடுக// 13:39, 22 சூன் 2011 (UTC)
 • உங்கள் அன்புக்கு நன்றி செந்தி --P.M.Puniyameen 13:46, 22 சூன் 2011 (UTC)

முத்தமிழ் செழிக்க மூவாயிரம் கட்டுரை தந்த நீவிர் ஆயிரம் பிறைகட்கும் அதிகம் கண்டு இன்னும் பல்லாயிரம் கட்டுரைகளை எழுத அளவற்ற அருளாளன் அருள்வதாகுக! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:38, 23 சூன் 2011 (UTC)

 • மிக்க நன்றி கார்த்தி, என்னால் இயலுமான வரை என் பங்களிப்புத் தொடரும்--P.M.Puniyameen 07:01, 23 சூன் 2011 (UTC)
 • உடனே பாராட்ட, வாழ்த்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 3000ஐ தாண்டிய உங்கள் பங்களிப்பு இன்னும் வளரட்டும். "ஓயாத புயல் என்றும் அதிசயமே" வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 09:58, 24 சூன் 2011 (UTC)
தங்கள் வாழ்த்துக்கு நன்றி சிவகுமார். எனக்கு விக்கியை அறிமுகப்படுத்திய ஆசான் நீங்கள் தானே. இந்தப் பயணத்தில் தங்களுக்கும் பங்குண்டு. --P.M.Puniyameen 17:47, 27 சூன் 2011 (UTC)
 • மிகவும் குறுகிய காலத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வழங்கிட ஏற்றவகையில் உங்களுக்கு எல்லா வளங்களும், வசதிகளும் கிடைக்கட்டும். --- மயூரநாதன் 17:27, 27 சூன் 2011 (UTC)
மிக்க நன்றி ஐயா, தங்கள் ஆசீர்வாதம் எனக்குப் பெரும் பலம். பதக்கங்களை விட தங்கள் ஆசீர்வாதமே மேல்--P.M.Puniyameen 17:42, 27 சூன் 2011 (UTC)
 • ஒன்றா... இரண்டா... மூன்றாயிரம்...! ஏழு மாத காலத்தில் எட்ட முடியாத சாதனை!! நினைத்துப் பார்க்க முடியவில்லை... உங்கள் வேகத்தை.... தமிழ் விக்கிப்பீடியாவிற்கு நீங்கள்...காட்டும் ஆர்வம் என்னை மட்டுமில்லை... அனைத்துப் பயனர்களையும் ஆச்சர்யப்பட வைக்கிறது...! உங்களால் மட்டும் எப்படி முடிகிறது? என்று எங்களனைவரையும் வியக்க வைக்கிறது!! தொடரட்டும் உங்கள் பங்களிப்புகள்!!! தொடர்ந்து உங்களுடன் நாங்கள்...எங்களால் முடிந்தவரை வந்து கொண்டிருக்கிறோம்... வாழ்த்துக்கள்--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:37, 27 சூன் 2011 (UTC)
நன்றி தேனி. "உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?".......கேள்விக்குப் பதிலைச் சொல்லவா? நிச்சயமாக தங்களைப் போன்ற நல்லிதயங்களின் ஆசீர்வாதங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை. --P.M.Puniyameen 17:57, 27 சூன் 2011 (UTC)

நிர்வாக அணுக்கம் - நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:37, 28 சூன் 2011 (UTC)

பரிசில் - பரிசு (கள்)[தொகு]

எது சரி? உங்கள் கட்டுரைகளில் பரிசில் என்று உள்ளது. அது சரியான சொல்லா அல்லது தவறானாதா? u பதில் i ஐ அழுத்திவிட்டீர்களா? (எழுத்துப்பெயர்ப்பாக இருந்தால்), d பதில் s ஐ அழுத்திவிட்டீர்களா? (தமிழ் 99 ஆக இருந்தால்)--குறும்பன் 17:02, 30 சூன் 2011 (UTC)

குறும்பன், பரிசில் என்ற சொல் இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.--Kanags \உரையாடுக 09:18, 1 சூலை 2011 (UTC)
தமிழ்நாட்டிலும் அரிதான பயன்பாட்டில் உள்ளது. (எப்பவாது இலக்கியச் சூழலில் தென்படும்)--சோடாபாட்டில்உரையாடுக 09:19, 1 சூலை 2011 (UTC)

ஓர் அன்பான வேண்டுகோள்[தொகு]

அராஃபத், கனகு, கார்த்திக் பாலா, குறும்பன், மயூரநாதன், நற்கீரன், ரவி, மணியன்‎, சந்தோசு குரு, சிவகுமார், சோடாபாட்டில், சுந்தர், டெரன்சு, உமாபதி, கலை, கோபி, செல்வா, ஜெ. மயூரேசன், பரிதிமதி, சஞ்சீவி சிவகுமார், சூர்யபிரகாசு.ச.அ., மாகிர், தேனி.எம்.சுப்பிரமணி

தமிழ் விக்கிப்பீடியா நிர்வாக அணுக்கமுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்

என்னால் இது காலம் வரை எழுதப்பட்ட கட்டுரைகள் அல்லது இனிவரும் காலங்களில் என்னால் எழுதப்படக்கூடிய கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணாக இருப்பின் அல்லது தரமற்றவை அவசியமற்றவை எனக் கருதப்படுமிடத்து தயவுசெய்து அவற்றை நீக்கிவிடும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு தெளிவான மனநிலையில் இந்த அன்பு வேண்டு கோளை விடுக்கின்றேன். என்னால் எழுதப்பட்ட விக்கி செய்திகளுக்கும் இதுபொருந்தும்

அவ்வாறு நீக்கப்படுமிடத்து அதுபற்றி எவ்விதத்திலும் நான் மனவேதனையடையவோ தவறாக எண்ணவோ மாட்டேன். இது உறுதி. தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிமட்டுமே எனது குறிக்கோள்.

மிக்க நன்றி

புன்னியாமீன் 01 - 07- 2011

--P.M.Puniyameen 04:08, 1 சூலை 2011 (UTC)

புன்னியாமீன். மேம்படுத்துதல் மற்றும் விக்கியாக்கம் என்பன நான் ஆரம்பித்த கட்டுரைகள் உட்பட பல கட்டுரைகளுக்கு செய்யப்படவேண்டிய ஒன்றே. சகல பயனர்களுக்கும் இப்பணி இயல்வதாகும். எ.கா: நான் ஆரம்பித்த மடக்கை கட்டுரை. அதன் மிகுதிப் பகுதியை ஆங்கில விக்கியைத் துணைக் கொண்டு மேலும் விரிவுபடுத்தித் தாருங்கள் என ஒரு கணிதத் துறை விரிவுரையாளரை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டேன். ஏனேனில் இதற்கு மேல் விரிவுபடுத்த எனது கணித அறிவு போதாது. கூட்டுமதிநுட்பத்தின் பலமும் பலவீனமும் இது தான். எனவே கலக்கம் இன்றி உங்கள் கட்டுரைகளைத் தொடருங்கள். திருத்தம் ஏதுமிருப்பின் பயனர்கள் கருத்துரைப்பர். --சஞ்சீவி சிவகுமார் 04:45, 1 சூலை 2011 (UTC)

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சஞ்சீவி சிவகுமார். எழுதவேண்டும் என அமரும் போது பழைய மனநிலை வர மறுக்கின்றது. சரிசெய்து கொள்ள சற்றுக் கடினமாகவே உள்ளது. முயற்சிப்போம். --P.M.Puniyameen 05:06, 1 சூலை 2011 (UTC)

விக்கி நுட்பம்[தொகு]

புன்னியாமீன், விக்கி நுட்பம் குறித்து நானும் ஓரளவே அறிவேன். சுந்தர், மாகிர், லாசிக்விக்கி போன்றோர் உதவக்கூடும்--இரவி 05:59, 1 சூலை 2011 (UTC)

நன்றி இரவி விக்கி நுட்பம் குறித்தும், இதில் பங்கேற்பவர் குறித்தும் அறிய விரும்புகின்றேன். எதிர்காலத்தில் என்னால் நிகழ்த்தப்படவுள்ள ஆய்வுகளுக்கு உதவுவதாக அமையலாம்.

கட்டுரைகள் நீக்கம்[தொகு]

புன்னியாமீன், தங்கள் கட்டுரைகளில் தரம் இல்லாவிட்டால் பல இடங்களில் நிருவாகிகளுக்குச் செய்தி இட்டுள்ளீர்கள். இது குறித்து ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தெளிவாக விசமம், கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமற்றவை என்ற எண்ணக்கூடியவையையே நிருவாகிகள் அவ்வப்போது நீக்கி துப்புரவுப் பணியைச் செய்து வருகின்றனர். ஏற்கனவே உள்ள, அல்லது ஒரே மாதிரியாக வரக்கூடிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை நீக்குவதா வேண்டாமா என்று எந்த ஒரு நிருவாகியும் தன்னிச்சையாக முடிவெடுப்பதில்லை. இது போன்று தெளிவு தேவைப்படும் நேரங்கள், மாற்றுக் கருத்துள்ள நேரங்களில் நீக்கல் வாக்கெடுப்பு நடத்தி சமூகத்தின் கருத்துக்கு ஏற்பவே நிருவாகிகள் செயற்பட முடியும். படிமங்களுக்கும் கூட இது பொருந்தும். நிருவாகிகள் எண்ணினால் எதை வேண்டுமானால் நீக்கலாம் என்ற தோற்றப்பாடு வருகிறதோ என்று அஞ்சியதால் இதைத் தெளிவுபடுத்துகிறேன்--இரவி 06:03, 1 சூலை 2011 (UTC)

இரவி, என்னால் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகளை சுயமாக என்னால் மதிப்பீடு செய்து கொள்ளவே ஆசைப்படுகின்றேன். பிரச்சனை என்று ஒன்று வந்த பின்பு தொடர்ந்தும் நேரம், காலம், சிரமம் போன்றவற்றை ஒரு பொது நோக்கில் செலவிட முன்பு ஒரு அளவீட்டினையும், திட்டத்தினையும் எனக்குள் வைத்துக்கொள்வது மனக்கிலேசங்களுக்கு நிவாரணமாக அமையும் அல்லவா? இதற்காகவே மேற்குறித்த அன்பு வேண்டுகோளை விடுத்தேன். நிர்வாகிகளுக்கு அதிகாரம் இல்லாவிட்டால் அதிகார வழிமுறைகளுக்கு என் வேண்டுகோளை விடுக்கின்றேன். பொறுத்திருந்து பார்ப்போம். இனி எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு பிரச்சினை உருவாவதை விரும்பவில்லை. இதற்கே இந்த முன்னேற்பாடு. --P.M.Puniyameen 08:39, 1 சூலை 2011 (UTC)
புன்னியாமீன், உங்கள் கட்டுரைகள் ஒன்றேனும் விக்கிக்கு தகுதியில்லாதவையாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. விக்கியில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் தொகுப்புகள் அனைத்தும் நாள்தோறும் கவனிக்கப்படுகின்றன. தகுதியில்லாத குப்பைகள் மட்டுமே உடனடியாக அழிக்கப்படுகின்றன. அண்மையில் கூகுள் கருவி கொண்டு எழுதப்பட்ட சில கட்டுரைகளும் பலரின் ஆலோசனைகளை அடுத்தே நீக்கியிருந்தோம். மேலும் சில கட்டுரைகள் ஒரு மாதம் காலம் கொடுத்து அழிக்கப்படுகின்றன (முன்னர் இக்காலக்கெடு ஒரு வாரகாலம் மட்டுமே இருந்தது). உங்கள் கட்டுரைகளை நீங்கள் சுய மதிப்பீடு செய்து அவற்றை மேம்படுத்தி உதவலாம். எனவே உங்கள் பங்களிப்புகளை வழக்கம் போலத் தொடருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 09:11, 1 சூலை 2011 (UTC)

உங்களுடைய தகவலுக்கு[தொகு]

தாங்கள் எழுதிய சுனீட்டா சிங் என்ற கட்டுரையை சுனிதா சிங் என்ற தலைப்புக்கு (இந்தி எழுத்துப்பெயர்ப்புக்கேற்ப) நகர்த்தியுள்ளேன்.--சிவக்குமார் \பேச்சு 15:36, 21 சூலை 2011 (UTC)

மிக்க நன்றி சிவக்குமார். தாராளமாகத் தவறுகளைத் திருத்தலாம். இதுவே என் விருப்பும் கூட. நன்றி --P.M.Puniyameen 16:19, 21 சூலை 2011 (UTC)

புன்னியாமீன், லண்டன் வன்முறைகள் பற்றிய உங்கள் தொகுப்பு நன்றாக உள்ளது.--Kanags \உரையாடுக 21:32, 10 ஆகத்து 2011 (UTC)

நன்றி Kanags, கலவரம் தொடர்வதால் கட்டுரையை முடிக்க முடியாதுள்ளது.--P.M.Puniyameen 08:10, 11 ஆகத்து 2011 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]

WCI banner.png

Hi P.M.Puniyameen,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், P.M.Puniyameen. உங்களுக்கான புதிய தகவல்கள் Surya Prakash.S.A. இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


அங்கேயும் பாருங்கள்[தொகு]

புன்னியமீன் ஆசிரியருக்கு, உங்கள் பல்லாயிரம் மாணவர்களின் ஒருவன் நான். விக்கிபீடியாவில் டி20 ஒன்றையே ஆடிவிட்டீர்கள். நீங்கள் விக்கிபுத்தகத்திலும் பங்களிக்கலாமே!, நன்றி. --மொஹமட் சமீர் 10:50, 27 ஆகத்து 2011 (UTC)

மிக்க நன்றி தம்பி, தமிழ் விக்கியில் ஒரு இலக்கை நோக்கி நான் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் நவம்பர் 14க்கு முன் என் இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதன் பின்பு நிச்சயமாக தங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வேன். நீங்கள் என் மாணவர்களின் ஒருவராக இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்கின்றேன். --P.M.Puniyameen 11:16, 27 ஆகத்து 2011 (UTC)

வாழ்த்துக்கள்[தொகு]

மற்றொரு மைல்கல்லை அடைந்தமைக்கு பாராட்டுக்கள். தளராவளர் பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 00:01, 31 ஆகத்து 2011 (UTC)

மிக்க நன்றி தம்பி--P.M.Puniyameen 00:15, 31 ஆகத்து 2011 (UTC)

ரமலான் வாழ்த்துகள்[தொகு]

என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:50, 31 ஆகத்து 2011 (UTC)

மிக்க நன்றி தேனி.எம்.சுப்பிரமணி--P.M.Puniyameen 00:53, 31 ஆகத்து 2011 (UTC)
Supplicating Pilgrim at Masjid Al Haram. Mecca, Saudi Arabia.jpg அஸ்ஸலாமு அலைக்கும் P.M.Puniyameen/தொகுப்பு 1 அவர்களே , எனது இனிய நோம்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
--சமீர்உரையாடுக!
மிக்க நன்றி சமீர்--P.M.Puniyameen 13:53, 31 ஆகத்து 2011 (UTC)

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்=[தொகு]

எனது இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், சார்ந்தோருக்கும்.--கலைமகன் பைரூஸ் 12:56, 31 ஆகத்து 2011 (UTC)
மிக்க நன்றி பைரூஸ்--P.M.Puniyameen 13:51, 31 ஆகத்து 2011 (UTC)

தமிழ் விக்கி நூல்களுக்கு அழைப்பு[தொகு]

Wikibooks-logo.svg
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவைகள்

 1. தாங்கள் விரும்பும் நூல்கள் (விக்கி மூலத்தின் அடுக்கில் கீழ் செல்ல முடியாத நூல்கள், முக்கியமாக பொது காப்புரிமையாக்கப்பட்ட நூல்களை) தமிழ் விக்கி நூல்களில் இருக்கின்றனவா என தேடித் பாருங்கள்.
 2. ஒரு வேளை அங்கு இல்லை என்றால் அந்த புத்தகத்தை ஆரம்பித்து வையுங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தை ஆரம்பித்து வையுங்கள்.


தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.

--Pitchaimuthu2050 06:21, 24 செப்டெம்பர் 2011 (UTC)--