உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:NithyaSathiyaraj

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், NithyaSathiyaraj, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி (பேச்சு) 02:24, 20 ஆகத்து 2020 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

[தொகு]

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

[தொகு]

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கி மாரத்தான் 2022
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

[தொகு]
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் நிர்வாகியாக பல்வேறு துப்புரவு மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வருவதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

கட்டுரையாக்க அடிப்படைகள்

[தொகு]

வணக்கம், NithyaSathiyaraj!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--~AntanO4task (பேச்சு) 09:03, 2 சனவரி 2024 (UTC)[பதிலளி]

மூன்று வரிக்குக் குறைவான கட்டுரைகள் நீக்கப்படும். இது இங்குள்ள நடைமுறை. --AntanO (பேச்சு) 14:02, 3 சனவரி 2024 (UTC)[பதிலளி]

இதுபோன்ற விதிமுறைகள் எந்தப் பக்கத்தில் உள்ளது என அறியத் தாருங்கள் NithyaSathiyaraj (பேச்சு) 13:15, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
மூன்று வரிக்கு (வாக்கியங்கம்) அதிகமான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் (3 வரிக்குக் (வாக்கியங்கம்) குறைவான கட்டுரைகள் நீக்கப்படும்) என மேலே குறிப்புள்ளது. ~AntanO4task (பேச்சு) 18:31, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

கணக்குகள் தொடர்பில் விளக்கம் விளக்கம்

[தொகு]

இந்த கருத்திடுதல், கையொப்ப மாற்றம் பற்றி விளக்கம் தரவும். காரணமின்றி ஒருவர் இரு கணக்குகளை வைத்திருக்க முடியாது. @Neyakkoo: ~AntanO4task (பேச்சு) 18:38, 12 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

இருவரும் ஒரே கணினியைப் பயன்படுத்துவதால், இது நிகழ்ந்தது. இனிமேல் இது நிகழாது. NithyaSathiyaraj (பேச்சு) 12:47, 13 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

100 விக்கி நாட்கள்

[தொகு]

அன்புடையீர், என்னுடைய தொகுப்புகளின் நாளின் முதல் தொகுப்பினைத் தவிர்த்து பிற தொகுப்புகளில் 100 விக்கிநாட்கள் வார்ப்புருவினை இடுவதைத் தவிர்க்கவும். நன்றி. சத்திரத்தான் (பேச்சு) 01:41, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

சரி நேயக்கோ (பேச்சு) 02:37, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

தொடர்ந்து இணைந்து செயற்படுகின்றமைக்கு நன்றி. நம்மைப் போல, வெவ்வேறு தலைப்புகளில் செயற்படுபவர்களின் பதிவுகளை, அவ்வப்போது பாருங்கள். நீங்கள் தொடங்கிய கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில், பிறர் எண்ணங்களை வெளிப்படுத்துவர். எனவே, தொடர்ந்து கவனியுங்கள். உங்கள் எண்ணங்களையும் அதே பக்கத்தில் தெரிவியுங்கள். இதுபோன்ற கலந்துரையாடல்களே விக்கி சமூகத்தினை வளர்க்கும். தாவர வாழிடக் கட்டுரைகளில் அடுத்து சாயிர் எழுத வேண்டுகிறேன். இது தேவைப்படும் கட்டுரை: துன்பேர்சியா கிரிகோரீ உழவன் (உரை) 03:15, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நன்றி... தங்களது வழிகாட்டல் எனக்கு இன்னும் ஊக்கமாக உள்ளது. நான் கற்றுக்கொண்டு, என் மாணவர்களுக்கும் கற்பித்து, வழிகாட்டுவேன். தொடர்ந்து கட்டுரை மேம்படுத்தும் வழிமுறைகளைக் கூறுங்கள். தங்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் கவனித்து வருகின்றேன். நன்றி NithyaSathiyaraj (பேச்சு) 11:58, 10 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
சாயிர் தகவற்பெட்டியைச் சீராக்கியுள்ளேன். இப்பொழுது அப்பெட்டி தெரியும். உழவன் (உரை) 07:52, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
நன்றி NithyaSathiyaraj (பேச்சு) 13:25, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

சீனப் பகுதிகள்

[தொகு]

கடந்த வாரம் முடிவெடுத்தபடி, இதுவரை உருவாக்கிய சீனப்பகுதிகளையும், உருவாக்க வேண்டிய சீனப்பகுதிகளையும் 'இவற்றையும் காணவும்' பகுதியில் காணலாம். எ-கா: தென்சீனா சிவப்பாக இருந்தால் அதை உருவாக்க வேண்டும். மீதமுள்ள இரண்டினையும் எழுதுங்கள். உழவன் (உரை) 07:56, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தற்பொழுது வடகிழக்கு சீனா எனும் கட்டுரையைத் தாங்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க ஏற்கனவே தனியாக எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து எடுத்துத் தொடங்கியுள்ளேன். அதில் மேலும் மேம்படுத்தும் நுட்பங்களைக் கற்றுத் தாருங்கள். நன்றி! NithyaSathiyaraj (பேச்சு) 13:34, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
இந்த வாரக்கூடலில் பிறரோடு இணைந்து கற்போம். உழவன் (உரை) 15:55, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி NithyaSathiyaraj (பேச்சு) 14:25, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பிற வாழ்விடங்கள்

[தொகு]

கட்டுரைகளுக்குரியதை கோர்வையாக முடிக்க எண்ணுகிறேன். தொடர்ந்து கீழ்கண்டவைகளை முடிக்கக் கோருகிறேன். அவ்வப்போது இணைக்கிறேன். ஆங்கில விக்கியின் தரவுகளை முழுமையாக தமிழ் படுத்துங்கள்.

  1. கெர்மாடெக் தீவுகள் en:Kermadec Islands

--உழவன் (உரை)

நன்றி. தேர்தல் காரணமாக, எனக்கும் பதட்டம், பணியடர்வு தான். சுருக்கமாக எழுதுங்கள். பின்னர் விரிவு படுத்திக் கொள்ளலாம். 100 நாட்கள் முடிய, இன்னும் 14நாட்களே உள்ளன. இன்றோடு சேர்த்து 15 கட்டுரைகள் மட்டுமே. தொடர்ந்து இணைந்து இருங்கள். சோலனம் என்பதன் அறிமுக இடங்கள் முழுமையாக உள்ளன. பிறப்பிடங்கள் குறித்து இதன் வரலாற்றுப் பக்கத்தில் காணவும். மாற்றங்களை ஏற்படுத்தும் போது, சுருக்கம் என்ற கட்டத்துக்குள் தரும் குறிப்பு அங்கு இருக்கும். உழவன் (உரை) 00:55, 26 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

பகுப்பாக்கம்

[தொகு]

சரியான பகுப்பு(கள்) இணைக்கப்பட்டிருத்தல். காண்க: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம், விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும் ~AntanO4task (பேச்சு) 13:54, 24 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நன்றி. தெளிவாகப் புரிந்துகொள்ளப் பல கட்டுரைகளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அறிந்து பகுப்பு இடுவேன். NithyaSathiyaraj (பேச்சு) 14:52, 26 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், NithyaSathiyaraj!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 09:24, 30 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

April 2024

[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் நோட்டத் தொகுப்புகளாக அமைந்திருந்தமையால், நீக்கப்பட்டுள்ளன. நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 05:30, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு

[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,68,346 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

தொடர்-தொகுப்பு 2024

[தொகு]

வணக்கம்!

தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில், தொடர்-தொகுப்பு நிகழ்வு (Edit-a-thon) ஒன்றினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு நகரில், செப்டம்பர் 28, 29 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம்!

நிகழ்வில் கலந்துகொள்வதற்கு இந்த இணைப்பின் வழியாகச் சென்று விண்ணப்பியுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:NithyaSathiyaraj&oldid=4059519" இலிருந்து மீள்விக்கப்பட்டது