பயனர் பேச்சு:NaanCoder

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், NaanCoder, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


--பாஹிம் 01:44, 19 நவம்பர் 2011 (UTC)

நல்லது நல்லது... --NaanCoder 01:54, 19 நவம்பர் 2011 (UTC)

டெக்கோ[தொகு]

ஏன் இந்த கொலை வெறி :-).

அப்புறம் global login பண்ண முடியலையா? புகுபதிகை பண்ணும்போதே “global login" ன்னு ஒரு தெரிவு வரணுமே--சோடாபாட்டில்உரையாடுக 04:59, 19 நவம்பர் 2011 (UTC)

எல்லாம் கேட்டிச்சுங்க. நானும் குடுத்தேன். ஆங்கில காமன்ஸ்ல இருந்து தமிழ் காமன்ஸ் வரைக்கும் தாவுச்சு, அப்பிடியே விக்கிபீடியாவுக்கு ஒரு கிளிக்.. டுஷ் .. "வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா"னு சொல்லிடுச்சு :( சரி அது கெடக்குது கழுதைன்னு புதுசா ஒன்னு ஓப்பன் பண்ணிட்டேன். --NaanCoder 07:13, 19 நவம்பர் 2011 (UTC)
ஒரு வழியா கண்டுபிடுச்சுட்டேன். காமன்ஸ் அக்கவுண்ட் வச்சுக்கிட்டு விக்கிபீடியாகுள்ள வர முடியல ஆனா விக்கிபீடியா அக்கவுண்ட் வச்சுக்கிட்டு காமன்ஸுக்குள்ள போலாம். எப்படின்னு தெரியல. சதிகாரப்பயல --NaanCoder 13:37, 19 நவம்பர் 2011 (UTC)
அண்ணன் அருண்மொழியை தமிழ் ஏரியாவுக்கு வரவிடாமல் சதி செய்யும் விக்கிமீடியாவை வன்மையாகக் கண்டிக்கிறோம் :-)--சோடாபாட்டில்உரையாடுக 13:43, 19 நவம்பர் 2011 (UTC)
+1 --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 10:38, 21 நவம்பர் 2011 (UTC)

அப்புறம் அந்த data visualisation, chloropeth அப்டி இப்டின்னு ஏதோ செஞ்சிட்டு இருந்தியே, அதை அப்படியே நம்ம ஊடகப் போட்டிக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 14:58, 19 நவம்பர் 2011 (UTC)

பதக்கம்[தொகு]

Real Life Barnstar.jpg மெய்வாழ்வுப் பதக்கம்
எஸ். எஸ். என். கல்லூரிக்கு வந்து விக்கிப்பீடியா பட்டறையில் தமிழா குழுமச் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியதற்காக இந்த பதக்கத்தை வழங்குகிறேன் சோடாபாட்டில்உரையாடுக 15:16, 13 சனவரி 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

அவ்வண்ணமே பாராட்டும் ஸ்ரீகாந்த் 09:33, 19 சனவரி 2012 (UTC)

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:40, 16 மார்ச் 2013 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

பயனர் பக்கம் உருவாக்கியது குறித்து மகிழ்ச்சி. //ஒரே பயனாளர் பெயர் வச்சுக்கிட்டு எல்லா விக்கிலையும் போகலாமுனு ஒரு பக்கி சொல்லுச்சு// அந்தப் பக்கி நான் இல்லையென நினைக்கிறேன்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 10:02, 19 சனவரி 2012 (UTC)

நீங்கள் இல்லை கார்த்தி அது இந்த சூரிய பிரகாசு பய.. பரவயில்லையே என்னை கண்டுபிடிசுடீங்களே :) --NaanCoder 14:53, 19 சனவரி 2012 (UTC)
tecoholic என்ற பெயரில் இங்கு வருவீர்கள் என நினைத்தேன். கூடுதல் செய்தி: ஏற்கனவே பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் மற்ற தளங்களில் naancoder என்ற பெயரைப் பயன்படுத்துகிறார். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 15:35, 19 சனவரி 2012 (UTC)
இது வேறையா? இந்த பேருக்கும் போட்டியா? Clash ஆகும்பொழுது பாத்துக்குவோம். காமன்ஸ் அக்கவுண்டு என் சொந்தபெயரில்தான் உள்ளது பெரிதாய் சிக்கல் எழுந்தால் மாறிக்கொள்ளலாம். தமிழில் டெகோ கிகோ எல்லாம் வேலைக்கு ஆவாதுன்னு விட்டுட்டேன். --NaanCoder 15:44, 19 சனவரி 2012 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:08, 29 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

Barnstar of Humour Hires.png சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்
உங்கள் பேச்சுப் பக்கம் முழுக்க ஒரே காமெடி! செமையா இருக்கு. :) இது போலவே பல உரையாடல்களிலும் கலந்துகொண்டு உற்சாகமாக பதிலுரைத்தால் ஊக்கமூட்டும்வகையில் இருக்கும். தொடர்க உங்கள் பணி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:43, 16 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

+1 -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 06:16, 17 மார்ச் 2013 (UTC)

நிரல்கள்[தொகு]

வணக்கமுண்ணே! விக்கி்யில் பங்களிப்பதில் நிரல்களும் தேவைப்படுகின்றன. ஆங்கில விக்கியில் பயனுள்ள ஜாவாஸ்கிரிப்ட் பக்கங்கள் பல உள்ளன. இவற்றில் சிலவற்றை எனக்காக சுட்டுவருமாறு வேண்டுகிறேன். :) யுனிகோடில் உள்ள அனைத்து எழுத்துகளையும் string functions கொண்டு பிராசஸ் செய்யும் நிரல் மொழி எது? அண்மையில் வெளியான கோவா (go)? அல்லது பைத்தான் இதனை நிறைவு செய்யுமா? எது கற்பதற்கு எளிது? பயன்படுத்த எளிது?-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:07, 29 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் குரிசில், ஜாவாஸ்க்ரிப்ட் சுட்டு வருவது எளிது. செஞ்சுடலாம். string functions processingக்கு பைத்தான் 2 சரிபட்டு வராது, அதில் unicode ஒரு பெரிய தலைவலி. பைத்தான் 3 முழுக்க unicode support உடையது, நான் பயன்படுத்தியது இல்லை. Go வைப் பற்றித் தெரியவில்லை, பார்த்துவிட்டு சொல்கிறேன். எதாவது பெரிய வேலையா? பைதானில் கற்று எழுதுவது எளிதுதான், நல்ல மொழியும்கூட. பைதான் 2இல் சற்று மெனக்கெட வேணும், பைத்தான் 3 ன்னா அசால்ட்டு. என்ன, பெரும்பாலும் கணிணிகள் பைத்தான் 2இல் இயங்குவதால் கொஞ்சம் setup வேலை இருக்கும். --NaanCoder (பேச்சு) 05:04, 30 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ்ச் சொற்களில் திருத்தம் செய்வதே என் வேலை! அதற்காக கேட்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, மலையாளக் கட்டுரையை சுட்டுவந்து தமிழில் எழுதும் போது ”க்ரி”ஷ்ணன் என்று இருந்தால் ”கிரு”ஷ்ணன் என்று மாற்ற விரும்புகிறேன். பல இடங்களில் மாற்ற வேண்டியிருக்கும். இது find and replace அல்ல. பல்வேறு இடங்களில்ிது போல் செய்ய வேண்டியிருக்கும். இது ஒரு எடுத்துக்காட்டுக்கே! மேலும், இணைய பக்கங்களில் உள்ள டெக்ஸ்ட்டை என் கணினியில் தானே இறக்கி சேமிக்கும் படியும், அதில் னான் கூறும் திருத்தங்கள் செய்து சேமிக்கும்படியும் நிரல் எழுத விரும்புகிறேன். இதற்கு ஏற்றவாறு வழி கூறுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:30, 30 செப்டம்பர் 2013 (UTC)
புரிகிறது. பைதான் கத்துக்குங்க. இந்த வேலைக்கு பைதான் 3 தான் சரியா வரும். அவசியம் இருந்தா அப்பமட்டும் பைதான் 2 பக்கம் போய்கலாம். Downloading, uploading, parsing, search and replacing எல்லா வேலைக்கும் பைதான் கை கொடுக்கும். :) --NaanCoder (பேச்சு) 12:57, 30 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)

ஒரு வேண்டுகோள்[தொகு]

Crystal Clear app help index.png

வணக்கம் NaanCoder! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:45, 17 மே 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:NaanCoder&oldid=1660999" இருந்து மீள்விக்கப்பட்டது