பயனர் பேச்சு:NSS-IITM-tamil

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வாருங்கள்!

வாருங்கள், NSS-IITM-tamil, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--சங்கீர்த்தன் (பேச்சு) 19:04, 17 அக்டோபர் 2012 (UTC)

இந்தியாவில் ஊழல் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்கள் நன்றாக உள்ளது...:)) தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்கு பங்களியுங்கள்.--சங்கீர்த்தன் (பேச்சு) 05:41, 18 அக்டோபர் 2012 (UTC)

பயனர் விவரங்கள்[தொகு]

அன்புள்ள நிறுவனப் பயனருக்கு, நீங்கள் அண்மையில் பங்களித்த சில கட்டுரைகளில் பழைய உள்ளடக்கதை நீக்கி புதிய உள்ளடக்கத்தூ இடுகிறீர்கள். இது தவறான அணுகலாகும். மேலும் உள்ளடக்கங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இணைக்கப்படாது உள்ளன. NSS IITM tamil என்றால் ஐஐடிஇல் என் எஸ் எஸ் குழுவினரால் அளிக்கப்படும் என எண்ணுகிறேன். மேலும் காப்புரிமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு ஒரே பயனர் கணக்கில் பலர் பங்களிப்பதும் விக்கி விதிகளுக்குப் புறம்பானது. உங்கள் பயனர் விவரங்களை பயனர் பக்கத்தில் தருவதுடன் குறிப்பிட்டப் பேச்சுப் பக்கங்களிலும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். --மணியன் (பேச்சு) 08:51, 26 அக்டோபர் 2012 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

நான் ஐ.ஐ.டி. வனவாணி பள்ளியில் படித்தேன். மேலும், ஐ.ஐ.டி குழுவை இங்கு சந்திப்பதில் மகிழ்கிறேன். கட்டுரை தொடர்பான எந்த வகை உதவி தேவையென்றாலும் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறேன். (நீங்கள் எனக்குத் தெரிந்தவராகக் கூட இருக்கலாம். ;)) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:09, 30 அக்டோபர் 2012 (UTC)

உங்களுக்கு எந்த விதமான உதவி தேவை என இப்பக்கத்திலேயே குறிப்பிட்டால் உதவுவோம். கீழே குறிப்பிடுங்கள். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:20, 30 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:NSS-IITM-tamil&oldid=1247037" இருந்து மீள்விக்கப்பட்டது