பயனர் பேச்சு:Mohamed ijazz/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

EuroCarGT


வாருங்கள்!

வாருங்கள், Mohamed ijazz, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 09:12, 7 சனவரி 2014 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

வணக்கம், அருள்கூர்ந்து பதிப்புரிமையுள்ள வேறு இணையப் பதிவுகளில் இருந்து கட்டுரைகளைப் பிரதி எடுத்து இங்கு எழுத வேண்டாம். இவை உடனுக்குடன் நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 08:16, 11 சனவரி 2014 (UTC)

வணக்கம், Mohamed ijazz/தொகுப்பு 1!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.



உதவி[தொகு]

ஏதாவது ஒரு படத்தை எவ்வாறு இணைப்பது அல்லது படத்தை எப்படி பக்கத்திற்குக் கொண்டு வருவது.

பதிப்புரிமை மீறல்[தொகு]

பதிப்புரிமை மீறல் உள்ள உள்ளடக்கங்களை தொடர்ந்து சேர்த்து வந்தால் நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:47, 12 சனவரி 2014 (UTC)

ஞானசார தேரர் பற்றிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல் ஏதுமில்லாமல், வெறுமனே அவரைப் பற்றிய விமரிசனமாகவே உள்ளது. மேலும் இணையத்தில் இருந்து பிரதி பண்ணாதீர்கள்.--Kanags \உரையாடுக 07:53, 16 சனவரி 2014 (UTC)--Kanags \உரையாடுக 07:53, 16 சனவரி 2014 (UTC)

வணக்கம், Mohamed ijazz/தொகுப்பு 1!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


இனியும் பதிப்புரிமை மீறல் உள்ள உள்ளடக்கங்களை சேர்த்தால் நீங்கள் தடை செய்யப்டுவீர்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 11:48, 17 சனவரி 2014 (UTC)

இவருக்கு இவ்வாறு ஒரு பக்கம் இருப்பது தெரியவில்லை போலும் நானும் அவ்வாறு தான்,புதியவர் என நினைக்கிறேன்,மின்னஞ்சல் செய்துபார்க்கலாம்--[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:58, 17 சனவரி 2014 (UTC)

யாழ்ஸ்ரீ, நீங்கள் கூறுவது சரியாகக் கூட இருக்கலாம். முகம்மது இஜாஸ் சில நல்ல தகவல் கட்டுரைகளையும் தந்திருக்கிறார். மின்னஞ்சல் இட்டுப் பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 12:29, 17 சனவரி 2014 (UTC)

செய்திகள்[தொகு]

செய்திகளை இங்கு எழுதும் போது முழுமையான வசனமாக சுருக்கமாக எழுதுங்கள். தலைப்புச் செய்தியாகத் தரவேண்டாம். உதாரணமாக, "இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது" என்று எழுதுவது தவறு. "இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்" என எழுத வேண்டும். பழைய செய்தியை அந்தந்த நாட்களுக்குக் கீழேயே தர வேண்டும். இந்த செய்தி பெப்ரவரி 9 இல் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறெனின், அது எப்போது நடந்தது என அறிந்து அந்த நாளுக்குக் கீழ் எழுதப்பட வேண்டும். இச்செய்தி ஏற்கனவே பெப். 8 இன் கீழ் எழுதப்பட்டு விட்டது. --Kanags \உரையாடுக 10:19, 10 பெப்ரவரி 2014 (UTC)

ஏற்கனவே இந்த செய்தி இருப்பதை நான் பார்க்கல்ல தவறுக்கு வருந்துகிறேன் இனி எழுதும் பொது என் தவறுகளை திருத்திக் கொள்கிறேன் வழிகாட்டியாக இருக்கும் உங்களது ஆதரவு எனக்கு எப்போதும் தேவை நன்றி Kanags Mohamed ijazz \உரையாடுக 10 பெப்ரவரி 2014 (UTC)

விக்கிசெய்தியில் செய்தி எழுதும் போது "இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்திய கடற்படையினரால் கைது" எனத் தலைப்பிடுவது சரி.--Kanags \உரையாடுக 11:50, 10 பெப்ரவரி 2014 (UTC)

எழுத்தாளனாக முயற்சி[தொகு]

என் தவறுகளை கண்டு துவண்டதில்லை வெற்றியை தேடி விரைகிறேன் விடாமுயற்சியோடு தவறுகளால் வெற்றிக்கான அனுபவங்களை கற்றுகொண்டிருக்கிறேன் எனது தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் தவறுகளை எனக்குள்ளே தேடி சரி செய்துகொண்டு நான் தன்னம்பிக்கையோடு விரைகிறேன் முயற்சி யோடு எனது எதிர்கால வெற்றிகளுக்கு கடந்தகால தவறுகளை உரமாக்குகிறேன் முயற்சி என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருக்குறேன் எனது கட்டுரையில் யாராவது தவறு கண்டுபிடித்தால், அதை மனப்பூர்வமாக வரவேற்று, எனது தவறை உடனே திருத்திக்கொள்கிறேன்.தவறுகளை அடையாளம் காட்டித்தந்த நபர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் வெற்றியை நோக்கி பயணிக்கிறேன் Mohamed ijazz

👍 விருப்பம், வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)
👍 விருப்பம், சிறந்த எழுத்தாளனாக வர என்னுடைய வாழ்த்துகள் சகோ!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:42, 11 பெப்ரவரி 2014 (UTC)

குர்ஆன்[தொகு]

பொதுவாகக் கட்டுரைகள் எழுதும் போது தலைப்பைப் பற்றி முதலில் எழுத வேண்டும். தலைப்பை மீண்டும் எழுதி, அது எதைக் குறிக்கிறது போன்ற அடிப்படைத் தகவல்களை முதலில் தரவேண்டும். குர்ஆன் அத்தியாயங்கள் கட்டுரையில் தலைப்புக்கும் கட்டுரைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. முதலாவது கட்டுரையில் நான் செய்த மாற்றங்களைப் பாருங்கள். எல்லாக் கட்டுரைகளையும் வேறு யாராவது திருத்துவார்கள் என்று நினைக்க வேண்டாம்:).--Kanags \உரையாடுக 08:30, 13 பெப்ரவரி 2014 (UTC)


மற்றதை கவனித்தேன் எனது தவறை உடனே திருத்திக்கொள்கிறேன் உங்களது ஆதரவு எனக்கு எப்போதும் தேவை நன்றி சகோ Mohamed ijazz

இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்[தொகு]

நான் விக்கிபீடியா இஸ்லாமிய வரலாறு தமிழ் பக்கங்களை தொகுக்கும் வேலையை ஆரம்பித்து உள்ளேன். ஒரு சமூகத்தின் நம்பிக்கையை, கலாசாரத்தை, அதன் வழிபாட்டு முறையை, வாழ்க்கைச் சக்கரத்தை கலை நயத்தோடு வெளிப்படுத்துவதே இலக்கியம் ஆகும்.இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு மொழிபெயர்ப்புத் துறை சிறப்பான பங்காற்றியிருப்பதை நன்றியுடன் நினைவுகூர வேண்டும். அதிலும் குறிப்பாக, அரபி மொழியிலிருந்து தமிழுக்குக் கிடைத்துள்ள அரிய கருவூலங்கள் நினைத்துப் போற்றத் தக்கவை ஆகும்அவை இஸ்லாத்தின் மூலாதாரங்களாக விளங்குவதுடன், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை முறைப்படுத்துவதிலும், இஸ்லாமிய வரையறைக் குட்பட்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை வழிநடத்துவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன. இஸ்லாமிய இலக்கியம் என்பது, முஸ்லிம்களின் நம்பிக்கை, கலாசாரம், வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை ஆகிய வற்றைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.இஸ்லாமிய வரலாற்று விக்கிபீடியா தமிழில் வெளி வந்திருந்தாலும், முழுமையான ஒரு வரலாற்றுத் தொகுப்புத் தமிழில் இல்லாதது பெரும் குறையே.விக்கிபீடியாவில் உள்ள இஸ்லாமிய வரலாற்று கட்டுரைகளைத் முழுமையாக தொகுக்கும் வேலையை ஆரம்பித்து உள்ளேன். இன்னும் ஏராளமான பக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்க/தொகுக்க வேண்டியிருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அரபி மொழியிலிருந்து தூய்மையான தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றல் மிகுந்த அறிஞர்களுக்குச் சமுதாயத்தில் பெரிய பஞ்சம் உள்ளது. அரபி மொழி அறிந்தவர்களுக்குத் தூய தமிழ் தெரியவில்லை; தமிழ் அறிஞர் களுக்கு அரபி மொழி தெரியவில்லை. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடைய அல்லாஹ் அருள் புரிவானாக Mohamed ijazz

வணக்கம் நண்பரே, சமயம் குறித்து தாங்கள் விக்கியில் எழுத முனைந்தமைக்கு நன்றி. ஏறாளமான இசுலாமியர்கள் தமிழ் மொழியை அறிந்திருந்தும், விக்கியில் அவர்களின் செயல்பாடுகள் கனிசமாகவே உள்ளது. அதிலும் சமயம் குறித்து எழுதுகின்றவர்கள் சொற்பமாகவே இருக்கின்றார்கள். இசுலாமிய சமயம் குறித்தான மிக முக்கியமான கட்டுரைகள் கூட போதுமான அளவிற்கு இல்லை. தாங்கள் முன்வந்தது போல தங்களின் நண்பர்களுக்கு ஆர்வம் இருப்பின் அவர்களையும் விக்கிக்கு அழைத்து வர வேண்டுகிறேன். அடுத்ததாக தாங்கள் கையெழுத்தினை பேச்சுப் பக்கத்தில் இடுவதற்கு [[User:Mohamed ijazz|Mohamed ijazz]] என்றெல்லாம் தட்டச்சு செய்ய தேவையில்லை. அதற்குப் பதிலாக --~~~~ என்ற குறியீட்டினை இணைத்தாலே, விக்கிப்பீடியா தங்களுடைய கையெழுத்தினை இணைத்துவிடும். காண்க விக்கிப்பீடியா:கையெழுத்து. உடன் தங்களுக்கு நேரமிருக்கும் பொழுது விக்கிப்பீடியா:உதவி பக்கத்திலுள்ள கட்டுரைகளை ஒரு முறை படித்துப்பாருங்கள், விக்கியில் மிக எளிமையாக பங்களிக்க இவை உதவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:53, 14 பெப்ரவரி 2014 (UTC)

கிரந்த எழுத்துப் பயன்பாடு[தொகு]

இஜாஸ், முடிந்தவரை கிரந்த எழுத்துப் பயன்பாட்டைக் குறைக்கப் பாருங்கள். கிறிஸ்தவம், இஸ்லாம் என்பதற்குப் பதில் கிறித்தவம், இசுலாம் என்பதுபோல் தமிழில் உள்ள எழுத்தக்களைக் கொண்டு சொற்களை உருவாக்கலாம். பார்க்க விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு. --AntonTalk 05:21, 14 பெப்ரவரி 2014 (UTC)


மன்னிக்க வேண்டும் அன்டன் நான் ( Arwi ) அரபுத் தமிழ் எழுத்துமுறை கொண்டு சொற்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தேன் விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு முறையை பார்த்தேன் விக்கிபீடியா இஸ்லாமிய பக்கங்களில் கிரந்த எழுத்துப் முறையை பயன் படுத்துவதால் பிழையான அர்த்தமில்லாத வசனங்களை தருகிறது அதனால் விக்கிபீடியா இஸ்லாமிய பக்கங்களில் Arwi எழுத்துமுறையை பயன் படுத்த அனுமதிக்க வேண்டும் . Mohamed ijazz

இங்கு மன்னிக்க எதுவுமில்லை. அனுமதி என்பது இங்கு பெரும்பான்மையாக எடுக்கும் முடிவே, மற்றப்படி யாரும் யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை. அரபு மொழி உட்பட பல மொழிகளை தமிழில் ஒலிபெயர்த்து எழுதுவதற்குள்ள சிக்கலை அறிவேன். ஆனால் இங்கு இயன்றவரை கிரந்தம் தவிர்த்து எழுதுதல் என்ற நடைமுறை இருப்பதை உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். --AntonTalk 11:45, 15 பெப்ரவரி 2014 (UTC)
தமிழ் எழுத்துக்களைக் கொண்டு, இலக்கண விதி மீறாது கட்டுரைகளை எழுதி, கட்டுரையினுள் அரபுத் தமிழ் எழுத்துமுறையினை இட சிபார்சு செய்கிறேன். அல்லது கிரந்தம் குறைத்து பெயர் மாற்றப்படலாம். எ.கா: இஸ்ரவேலே கேள்! - இக்கட்டுரை ஷேமா யிஸ்ராயல் என்றுதான் முறைப்படி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் தமிழ் முறைப்படி எழுதப்பட்டள்ளது. நன்றி. --AntonTalk 12:28, 16 பெப்ரவரி 2014 (UTC)


வணக்கம் அன்டன் ஸூரத்து குறைஷின், என்ற அக்கதை சுரத்து குறைஷின் என்று தலைப்பு தங்களால் மாற்றப்பட்டுள்ளது ( சுரத்து ) என்ற வசனம் பிழையானது ஸூரத்து என்ற வசனத்தை தமிழ் எழுத்துக்களைக் கொண்டு சூரத்து என்று எழுத முடியும் (ஸூ)- என்ற எழுத்துக்கு (சூ) எழுத்தை எழுதலாம் சுரத்து என்பதை ஸூரத்து /சூரத்து என்று தயவு செய்து திருத்தி அமைக்க வேண்டும்--Mohamed ijazzMohamed ijazz

"மாற்றம்"[தொகு]

குர் ஆன் பக்கத்தில் அதன் பின் நிறத்தை மாற்றம் செய்துள்ளேன் காரணம் அந்த பக்கத்தை முழுமையாக இன்னும் சுமார் இருநூறு கட்டுரைகளின் தொகுப்பு அவசியமாக உள்ளது பல மணி நேரங்கள் கம்பியூட்டரில் இருந்தால் வெள்ளை பின் நிறம் கண்களுக்கு வேதனை தருகிறது--

அண்ணா, இவ்வாறு செய்வதேன் {{தொகுக்கப்படுகிறது}} வார்ப்புரு இட்டு விட்டு செய்தால் நலம்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:03, 26 பெப்ரவரி 2014 (UTC)

செய்தி[தொகு]

ஐ.பி முகவரி கொண்டு பங்களிப்பவர்களின் பேச்சுப் பக்கத்தில் {{anonymous}} வார்ப்புருவை இட வேண்டும். பிறகு பங்களித்தார்கலாயின் முதல் தொகுப்பு வார்ப்புருவை இடுங்கள். நன்றி. பங்களிப்பு சிறக்க வாழ்த்துக்கள்....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:36, 10 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம் நன்றி சகோ ------ Mohamed ijazz

நடப்பு நிகழ்வுகளில் திருத்தம்[தொகு]

வணக்கம் இஜாசு, நடப்பு நிகவுகளில் நான் செய்த இந்தத் திருத்தங்களைக் கவனியுங்கள். குறிப்பாக ( தினகரன் ) என எழுதக்கூடாது. {தினகரன்) என்றே எழுத வேண்டும். இது இங்கு மட்டுமல்ல எங்கும் இப்பயன்பாடே உண்டு. கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:06, 12 மார்ச் 2014 (UTC)

laft கனக சிறீதரன்,மற்றதை கவனித்தேன் தவறினை திருத்திக்கொள்கிறேன் ----- Mohamed ijazz

தாதுகோபம்[தொகு]

தாதுகோபம் கட்டுரைக்கு மேற்கோள்கள் இணைக்கும் படி வார்ப்புரு சேர்த்திருக்கிறேன். நீங்கள் தற்போது இதனை எழுதிக் கொண்டிருப்பதால், ஆதாரங்கள் இணைப்பது உங்களுக்கு இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். புத்தகங்களில் இருந்து எடுத்தால், அவற்றின் விபரங்களையும் தரலாம். மேலும், கட்டுரைகளில் அளவுக்கு அதிகமாக வண்ண எழுத்துக்களை, பின்னணி வர்ணங்களைச் சேர்க்காதீர்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:47, 18 மார்ச் 2014 (UTC)

தாதுகோபம் எனது ஆய்வுக் கட்டுரை 👍 விருப்பம் நன்றி சகோ ------ Mohamed ijazz

கையெழுத்து[தொகு]

கையெழுத்து பற்றிய (எப்படி அமைய வேண்டும்) விளக்கம் இங்கு போதிய அளவில் இல்லை. ஆ.வி.யில் அது பற்றி போதிய அளவில் அறியலாம். குறிப்பாக, படங்கள் கையெழுத்தில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாய அறிவுறுத்தல். அங்கு உள்ளதை அப்படியே இங்கு பிரிதி செய்துள்ளேன்.

Images of any kind must not be used in signatures for the following reasons:

They are an unnecessary drain on server resources, and could cause server slowdown A new image can be uploaded in place of the one you chose, making your signature a target for possible vandalism and denial-of-service attacks They make pages more difficult to read and scan They make it more difficult to copy text from a page They are potentially distracting from the actual content Images do not scale with the text, making the lines with images higher than those without them They clutter up the "file links" list on the respective image's page every time one signs on a different talk page Images in signatures give undue prominence to a given user's contribution

எனவே, தயவு செய்து கையெழுத்தில் படங்களைப் பயன்படுத்துபவர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி என்று ஆன்டன் ஆலமரத்தடியில் குறிப்பிட்டுள்ளதை பார்க்கவும். கையெழுத்தில் படிமம் ஒருங்குறி அல்லாத எழுத்து வேண்டாம். --குறும்பன் (பேச்சு) 01:19, 20 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம் --Mohamed ijazz 15:03, 21 மார்ச் 2014 (UTC)

பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்...[தொகு]

வணக்கம்! விக்கியில் பிற பணிகளையும் செய்யத் தொடங்கியமைக்கு பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 27 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம் --✍♏ϴ♓ѦℳℰРッ ЇⒿѦℤẐ © (பேச்சு) 17:22, 27 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:49, 28 மார்ச் 2014 (UTC)

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் பங்களிப்புக்கள் கண்டு வியக்கிறேன். விக்கியில் தொடர்ந்தும் பங்களிக்கவும் பல சேவைகள் புரியவும் வாழ்த்துக்கள். மற்றவர்களை ஊக்குவிக்கும் பண்பு மற்றும் உடனே புரிந்து செயற்படுவது போன்றவற்றில் சிறந்து விளங்குகிறீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்......... :) ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:17, 31 மார்ச் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

laft --✍mohamed ijazz © (பேச்சு) 16:39, 31 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 1 ஏப்ரல் 2014 (UTC)
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:55, 1 ஏப்ரல் 2014 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Mohamed ijazz/தொகுப்பு 1!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 11:17, 2 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம்வாழ்த்துக்கள்!..--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:06, 2 ஏப்ரல் 2014 (UTC)
--✍mohamed ijazz © (பேச்சு) 20:45, 2 ஏப்ரல் 2014 (UTC)

ஆர். ஜே. உத்ரா[தொகு]

ஆர். ஜே. உத்ரா - இக்கட்டுரை நீக்கக்கோரி வார்ப்புரு இடப்பட்டிருக்கையில், கட்டுரை முறையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இல்லாதவிடத்து நீக்கப்படும். ஆகவே வார்ப்புரு நீக்குதல் எச்சரிப்புக்குரிய செயலாகும். மேலும், அங்குள்ள வெளியிணைப்புக்கள் வலிந்து வழங்கப்பட்டுள்ளன. https://soundcloud.com இதில் யார் வேண்டுமானாலும் பதிவேற்றலாம். எனவே அது நம்பகமான மூலம் அல்ல. அலுவலக இணையத் தளத்தை அங்கு "வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு" தொடர்பில் இணைக்க முடியாது. முகநூல் இணைப்பும் அவ்வாறே. --AntonTalk 16:38, 21 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி அன்டன் மூத்த பங்களிப்பார் நிங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாகத்தான் இருக்கும் த.வி.யில் இவ்வாறான கட்டுரைகள் ஏற்கனவே இருந்தாலும் நான் எழுதிய இந்த கட்டுரை மட்டும் அனைத்திலும் மோசமான கட்டுரையாக நான் நினைக்கிறன் மன்னிக்கணும் இது போன்ற கட்டுரைகளை நான் இனி விக்கிக்கிப்பீடியாவில் எழுத மாட்டேன் மன்னித்து விடுங்க --✍☪mohamed ijazz☪® (பேச்சு) 17:07, 21 ஏப்ரல் 2014 (UTC)
60,700 கட்டுரைகளையும் தனி மனிதனாக திருத்துவது என்பது இயலாத விடயம். அவ்வப்போது தென்படும் பழைய கட்டுரைகளையும் நீக்க அல்லது மேம்படுத்த வார்ப்புரு இட்டே வருகிறேன். மூத்த பங்களிப்பாளர் என்ற பேதம் இன்றி நீங்களும் கட்டுரை தரம் குறித்து கேள்வி எழுப்புவதில் தவறில்லை. புதிதாக உருவாகும் கட்டுரைகள் சிறப்பாக அமைவதையே விரும்புகிறேன். அதற்காக பழைய கட்டுரைகள் அப்படியே இருக்கட்டும் என்றல்ல. ஆரம்பத்தில் இருந்த நெகிழ்வு 10 ஆண்டுகளுக்குப் பின்பும் வேண்டாம் என்கிறேன். நான் உருவாக்கிய கட்டுரைகளும் நீக்கப்பட்டும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டும்தான் இருந்தன. "விக்கியாக்கம்" என்பதை புரிந்து கொள்ளாதவரை புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும் சிரமமாகத்தான் இருக்கும். "வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு" எழுதலாம். ஆனால் அது சாதாரண நடைமுறையிலும் பார்க்க சற்று சிரமமானது. ஆ.வி.யில் உள்ள வழிகாட்டலைப் படித்தால் நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்கள் எழுதிய கட்டுரை மோசமானது என்ற மறையான எண்ணத்திற்கு வராதீர்கள். ஏற்கெனவே நீங்கள் எழுதிய கட்டுரைகள் முறையாக உள்ளது என்பதை நினைவிற் கொள்ளுங்கள். --AntonTalk 17:33, 21 ஏப்ரல் 2014 (UTC)

செய்தி[தொகு]

நாடார் என்ற தமிழக சாதிகள் கட்டுரையில் நான் கொடுத்த தகவலின் சாரம் தவறு என்று நீங்கள் நினைத்து நீக்கினீர்களா? அல்லது ஆதாரம் இல்லை என்று நினைத்து நீக்கினீர்களா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் முழுக்க முழுக்க இந்திய சரித்திரக்களஞ்சியத்தின் வரிகளின் அடிப்படையில் தான் அந்த தகவலை நான் காட்சிப்படுத்தினேன். முடிந்தால் அந்த புத்தக பக்கத்தின் நகலை வேண்டும் என்றாலும் காட்சிப்படுத்துகிறேன். இந்த கட்டுரை மூலம் யாரையும் மிதமாக நான் நினைக்கவில்லை. மத்திய அரசு பள்ளிகளின் (கேந்திரிய வித்தியாலயா பள்ளி) ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் கூட இந்த தகவல் வந்தது. நீங்கள் நீக்கியது சரி என்று பட்டால் நீக்கியதற்க்கு நன்றி. --Muthuppandy pandian (பேச்சு) 05:23, 7 மே 2014 (UTC)

நன்றி[தொகு]

புலவர் கால மன்னர் கட்டுரையின் பயன் உணர்ந்து பாராட்டியுள்ள பாங்குக்குக் கடப்பாடுடையேன்.
தங்களின் இயக்க இடுகைகள் தமிழ் விக்கிக்குப் பெருமை சேர்க்கின்றன.
தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். --Sengai Podhuvan (பேச்சு) 12:34, 23 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:56, 23 ஏப்ரல் 2014 (UTC)

இயல்வாணன் என்ற கட்டுரை தன்வரலாறாக இருப்பதால் அதனை அவரது பயனர் பக்கத்துக்கே மாற்றி விட்டேன்.--Kanags \உரையாடுக 08:48, 24 ஏப்ரல் 2014 (UTC)
laft கனக சிறீதரன்,மற்றதை கவனித்தேன் --✍ mohamed ijazz ☪® (பேச்சு) 08:53, 24 ஏப்ரல் 2014 (UTC)
வணக்கம், மொஹம்மத்! தமிழ் விக்கியில் தங்களின் தொடர்பங்களிப்பிற்கு எனது பாராட்டுகளும், நன்றிகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:42, 27 ஏப்ரல் 2014 (UTC)

ஒரு வேண்டுகோள்[தொகு]

வணக்கம் Mohamed ijazz! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:48, 17 மே 2014 (UTC)

👍 விருப்பம்--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 05:58, 17 மே 2014 (UTC)

துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய குறிப்பிடத்தக்கமை வரையறை[தொகு]

வணக்கம். ஒரு துடுப்பாட்ட இரசிகராக, துடுப்பாட்டக்காரர்களின் குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பாக உங்கள் கருத்து தேவைப்படுகிறது. பார்க்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு. பின்னணி உரையாடலுக்கு, பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் பார்க்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 13:14, 17 மே 2014 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்
அண்ணா! உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.....  நி.மாதவன்  ( பேச்சு  ) 15:52, 21 மே 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

laft மாதவன்--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 05:27, 22 மே 2014 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 09:53, 23 மே 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

laft திரு நந்தகுமார்--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 09:58, 23 மே 2014 (UTC)

பதிப்புரிமை[தொகு]

படிமங்களுக்கு முறையாக உள்ளீடுகளை இடுவதற்கு பாராட்டுக்கள். ஆயினும், உள்ளீடுகள் இடுவதன் ஊடாக எல்லாக் கோப்புக்களையும் இங்கு பயன்படுத்தவியலாது. எனவே, பதிப்புரிமை தொடர்பில் அவதானமான செயற்படுங்கள். எ.கா: இலங்கையிலுள்ள ஓர் பதிப்புரிமை இவ்வாறு உள்ளது. The expressions of folklore of Sri Lanka are protected against the unauthorized use. இது நாட்டுக்கு நாடு, தன்மை என்பவற்றுக்கேற்ப மாறுபடும். --AntonTalk 18:22, 25 மே 2014 (UTC)

நன்றி திரு அன்டன் நான் பதிவேற்றம் செய்த படிமங்களில் பதிப்புரிமை உள்ள எதாவது கோப்பு இருக்கிறதா ? கவனிக்கவும் தங்களின் உதவி வேண்டும்

நன்றி --✍ mohamed ijazz ☪® (பேச்சு) 18:48, 25 மே 2014 (UTC)

தகவல்சட்டம்[தொகு]

ஈழத்து நபர்களின் படங்களைத் தரவேற்றி அவற்றைக் கட்டுரைகளில் தகவல் சட்டங்கள் மூலம் இணைப்பதற்கு நன்றி. ஆரம்ப காலங்களில் எழுதிய கட்டுரைகளில் இவ்வாறு தகவல்சட்டங்கள் இடம்பெறவில்லை. நபர்களுக்கான தகவல்சட்டங்களில் பிறந்த, இறந்த தேதிகளைக் குறிப்பதற்கு வார்ப்புருக்களைப் பயன்படுத்துங்கள். இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 09:13, 26 மே 2014 (UTC)

மற்றதை கவனித்தேன் நன்றி ஐயா --✍ mohamed ijazz ☪® (பேச்சு) 09:29, 26 மே 2014 (UTC)
ஆனாலும், நீங்கள் உங்கள் பிந்தைய கட்டுரைகளில் இதனைக் கவனிப்பதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 10:15, 26 மே 2014 (UTC)

காப்புரிமையுள்ள படிமங்கள்[தொகு]

இஜாசு, இல்லற ஜோதி திரைப்பட விளம்பரப்படம் காப்புரிமையுள்ளது போல் தெரிகிறது. watermark எழுத்துகள் உள்ள படிமங்களைத் தரவேற்ற வேண்டாம். அண்மையில் விருபா இணையத்தளத்தில் இருந்து ஒரு படமும் இவ்வாறு தரவேற்றியிருந்தீர்கள்.--Kanags \உரையாடுக 08:43, 28 மே 2014 (UTC)

பழங்கால திரைப்பட சுவரொட்டிகளை இங்கு சேர்க்கும் உங்களின் உழைப்பு, மிகுந்த பாராட்டுதலுக்குரியது! காப்புரிமை குறித்தும் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:29, 31 மே 2014 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
100-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படக்கட்டுரைகளுக்கு படிமம் இணைத்தமைக்காக இப்பதக்கத்தினை வழங்குகிறேன். தொடர்ந்து உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன். நன்றி. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:52, 31 மே 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


நன்றி திரு தினேஷ்குமார் பொன்னுசாமி --✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 09:56, 31 மே 2014 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:34, 31 மே 2014 (UTC)
👍 விருப்பம் பல்வகைகளிலும் சிறப்பாகப் பங்களிக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:27, 31 மே 2014 (UTC)
👍 விருப்பம் -- நி.மாதவன்  ( பேச்சு  ) 14:35, 31 மே 2014 (UTC)
👍 விருப்பம் கர்சன் அண்ணா சொன்ன மாதிரி பல்வகைகளிலும் சிறப்பாகப் பங்களிக்கின்றீர்கள். உங்கள் பணி விக்கிக்கு கட்டாயம் தேவை. தொடர்ந்து விரைந்து செய்யுங்கள் உங்கள் பணியை.-- நி.மாதவன்  ( பேச்சு  ) 14:35, 31 மே 2014 (UTC)
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 22:55, 31 மே 2014 (UTC)

இசுலாமிய மாதங்கள்[தொகு]

இஜாசு, இசுலாமிய மாதங்கள் அனைத்துக்கும் தமிழில் கட்டுரைகள் இல்லைப் போல் தெரிகிறது. ஒரு சில உள்ளன. மீதமானவற்றுக்குக் கட்டுரைகள் எழுதுகிறீர்களா? உங்களால் முடிந்தவரையில் கிரந்த எழுத்துகளைத் தவிர்த்து எழுதுமாறு வேண்டுகிறேன். ஆங்கில விக்கிக் கட்டுரைகளைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:55, 31 மே 2014 (UTC)

எஸ் சார்...எஸ் சார்,கன்பார்ம் சார்,நிச்சயமா சார்..நான் நல்லா கவனிச்சுட்டேன் சார், சல்யூட்  !--✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 12:14, 1 சூன் 2014 (UTC)

மாதம் 1000 தொகுப்புகள்[தொகு]

வணக்கம், Mohamed ijazz/தொகுப்பு 1!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 14:43, 3 சூன் 2014 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:49, 4 சூன் 2014 (UTC)

உங்களின் கவனத்திற்கு...[தொகு]

சாமி மக்கள் எனும் வழிமாற்றுப் பக்கத்திற்கு நீக்கல் வார்ப்புரு இட்டிருந்தீர்கள். தேவைகருதியே இந்த வழிமாற்றுப் பக்கம் உருவாக்கப்பட்டிருந்தது. Sami people (சமி மக்கள்) என்பது சாமி மக்கள் எனவும் தேடப்படலாம். எனவேதான் சாமி மக்கள் எனும் வழிமாற்று பக்கம் உருவாக்கப்பட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:14, 9 சூன் 2014 (UTC)

உண்மையில் இவர்கள் சாமி என்றே அழைக்கப்படுகின்றனர்.--Kanags \உரையாடுக 04:57, 9 சூன் 2014 (UTC)

வாழ்த்துகள்...[தொகு]

வலைவாசல்:துடுப்பாட்டம் தொடங்கியமைக்கு பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:41, 19 சூன் 2014 (UTC)

👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:03, 22 சூன் 2014 (UTC)

பிறந்தநாள் வாழ்த்துக்கள்![தொகு]

வணக்கம் Mohamed ijazz/தொகுப்பு 1 அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~

அண்ணா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடர்ந்து விக்கியில் 50 இற்கும் மேற்பட்ட பிறந்தநாட்களைக் கொண்டாடுங்கள்!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:11, 29 சூன் 2014 (UTC)

பதிப்புரிமை மீறல்[தொகு]

சன் ஒப் பாபிலோன் கட்டுரையில் நேரடி பதிப்புரிமை மீறலும் நெருங்கிய பொழிப்புரையும் காணப்பட்டது. நெருங்கிய பொழிப்புரை இல்லாது இருப்பது சிறப்பானது. --AntonTalk 21:40, 5 சூலை 2014 (UTC)

பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்குதல் தடைக்கு இட்டுச் செல்லாலாம். (பார்க்க: en:Template:Uw-tdel4) தொடர்ச்சியாகப் பங்களித்து வரும் நீங்கள் இதனைக் கருத்திற் கொண்டு புதுப்பயனர்களுக்கும் வழிகாட்டலாம். நன்றி.--AntonTalk 23:16, 5 சூலை 2014 (UTC)

பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை பக்கத்தில் நீங்கள் கல்ஃப் டுடேயின் முதற்பக்க நகலை படிமமாக இணைத்துள்ளீர்கள். இது பதிப்புரிமையை மீறியச் செயலாகும். எனவே படிமம் உடனடியாக நீக்கப்படும். இத்தகைய செய்திகளின் சாராம்சத்தை கட்டுரையில் இட்டு இந்த இதழின் பதிப்பிற்கு இணைப்பு தருவதே விக்கிநெறியாகும். --மணியன் (பேச்சு) 04:19, 23 சூலை 2014 (UTC)

உள்ளடக்கமில்லாத கட்டுரைகள்[தொகு]

உள்ளடக்கமில்லாத கட்டுரைகளை அளவுக்கு அதிகமாக உருவாக்காதீர்கள். இவ்வாறான கட்டுரைகள் வரவேற்கப்படுவதில்லை. அவற்றை இற்றைப்படுத்துங்கள் அல்லது ஒவ்வொன்றாக உருவாக்குங்கள்.--Kanags \உரையாடுக 11:31, 24 சூலை 2014 (UTC)

நன்றி Kanags அணைத்து கட்டுரைகளையும் கண்டிப்ப நாளை புதிய விடயங்களை உள்ளடக்கி இற்றைப்படுத்தி முடிக்கிறேன். நீங்க விழித்து இருப்பிங்க என்ற நம்பிக்கையில் நான் உறங்கப் போகிறேன் தயவு செய்து கட்டுரைகளை நீக்கி விடவேண்டாம் என கேட்டு கொள்கிறேன் நன்றி -- mohamed ijazz(பேச்சு) 12:29, 24 சூலை 2014 (UTC)
வேலை நடக்கிறது வார்ப்புருவினை நீக்கிவிட்டு நடப்பு நிகழ்வு வார்ப்புருவினை நான் இட்டதை தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். என்னால் இயன்றளவு கட்டுரை வடிவமைப்பினை செய்கிறேன்; தொடர்ந்து நீங்கள் மேம்படுத்துங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:39, 24 சூலை 2014 (UTC)
நன்றி மா. செல்வசிவகுருநாதன் -- mohamed ijazz(பேச்சு) 15:41, 24 சூலை 2014 (UTC)
நிகழ்ச்சிநிரலில் கவனம் செலுத்துவதைவிட, பதக்கப் பட்டியல் மற்றும் முடிவுகளில் கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். உங்களின் Resource availabilityஐயும் கணக்கில் கொள்ளுங்கள்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:12, 26 சூலை 2014 (UTC)
Commonwealth Games குறித்த புதிய கட்டுரைகளைத் துவக்காமல், ஏற்கனவே உள்ள கட்டுரைகளை ஓரளவு இற்றைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:02, 31 சூலை 2014 (UTC)
வணக்கம் திரு மா. செல்வசிவகுருநாதன் என் பேச்சு பக்கத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கின்றேன் மா. செல்வசிவகுருநாதன் 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் குறித்து 2014-07-26 பின் எந்த ஒரு புதிய கட்டுரையும் துவங்கவில்லையே -- mohamed ijazz(பேச்சு) 10:55, 31 சூலை 2014 (UTC)
மன்னிக்கவும். நான் சரியாக கவனிக்கவில்லை. ரக்பி குறித்த புதிய வார்ப்புருக்களைத்தான் உருவாக்கியுள்ளீர்கள் - கட்டுரையை விரிவுபடுத்த! உழைப்பிற்கு பாராட்டுகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:50, 31 சூலை 2014 (UTC)
திரு மா. செல்வசிவகுருநாதன் இங்கு மன்னிக்க எதுவுமில்லை நன்றி. -- mohamed ijazz(பேச்சு) 11:55, 31 சூலை 2014 (UTC)
திரு மா. செல்வசிவகுருநாதன்Resource availabilityஐயும் கணக்கில் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொன்னிக்க அது எனக்கு விளங்கவில்ல விக்கிபிடியாவில் Resource availability என்று சொல்வது என்ன மா. செல்வசிவகுருநாதன்.-- mohamed ijazz(பேச்சு) 06:35, 1 ஆகத்து 2014 (UTC)
(அலுவலக மொழியில் எழுதிவிட்டேன்!) வேறோன்றுமில்லை... கட்டுரைகளை இவ்வளவு விரிவாக எழுதுகிறீர்களே, நிறைவு செய்ய உங்களுக்கு நேரமிருக்குமா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் என்பதனையே அவ்விதம் எழுதினேன். Resource - வளம் (இங்கு நேரம் எனக் கருதலாம்!). ஏனெனில் காமன்வெல்த் விளையாட்டுக்களை இற்றை செய்யும் ஆர்வம் மற்ற பயனரிடத்து இல்லை; நீங்கள் மட்டுமே பெருமளவுக்கு செய்யவேண்டியிருக்கும் என்பதனையே அவ்விதம் தெரிவித்தேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:25, 2 ஆகத்து 2014 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]



பதக்கம்[தொகு]

Wikipedia Motivation Award விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம்
இந்தப் பதக்கத்துக்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன் :) தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் :) இரவி (பேச்சு) 15:05, 5 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் விளக்கம் தேவையில்லை என்பதை விட விளக்கம் கொடுத்தால் விடிஞ்சிடும் அவ்வளவு ஊக்குவித்திருக்கின்றார் இஜாஸ் அண்ணா இல்லையா இரவி அவர்களே! வாழ்த்துக்கள் அண்ணா!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:19, 5 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 22:12, 5 ஆகத்து 2014 (UTC)
களைப்படையாத தொடர் உழைப்பிற்கு பாராட்டுகளும், நன்றிகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:06, 6 ஆகத்து 2014 (UTC)

உளங்கனிந்த நன்றிகள்...[தொகு]

நான் ஆரம்ப காலத்தில் எழுதிய கட்டுரைகளில் மேற்கோள்களை சேர்த்து உதவுவதற்காக! - அன்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:36, 6 ஆகத்து 2014 (UTC)
எந்த கட்டுரை திரு மா. செல்வசிவகுருநாதன் சார்.-- mohamed ijazz(பேச்சு) 11:44, 6 ஆகத்து 2014 (UTC)

லால்குடி ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன், ஆர். வேதவல்லி, ஆலத்தூர் சகோதரர்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:56, 6 ஆகத்து 2014 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மொஹம்மத் இஜாஸ் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 9 ஆகத்து 2014 (UTC)

நன்றிங்க. அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் உங்கள் முதற்பக்க அறிமுகத்தைத் தருகிறோம். அது வரை தாங்கள் சிறப்பாக பங்களித்து வரும் கட்டுரைகளுக்கான இணைப்பையும் அந்தப் பக்கத்தில் சேர்க்கலாம். --இரவி (பேச்சு) 20:15, 11 ஆகத்து 2014 (UTC)
விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மொஹம்மத் இஜாஸ் பக்கத்தில், நீங்கள் சிறப்பாக பங்களித்த கட்டுரைகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டினால், அடுத்து உங்கள் அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர இயலும். நன்றி.--இரவி (பேச்சு) 13:00, 28 திசம்பர் 2014 (UTC)


ஏதாவது ஒரு படத்தை எவ்வாறு இணைப்பது அல்லது படத்தை எப்படி பக்கத்திற்குக் கொண்டு வருவது.- சகோ!--பயனர்:mohamedtet (பேச்சு) 04:52, 16 ஆகத்து 2014 (UTC)

தங்கள் உதவிக்கு நன்றி. நான் இப்ராகிம் என்ற தமிழ் கட்டுரையை english மூலத்தில் abraham in islam என்ற கட்டுரையுடன் இணைக்க விரும்பிகிறேன்.உதவவும். நான் ஆதம் என்ற தமிழ் கட்டுரையை english மூலத்தில் adam in islam என்ற கட்டுரையுடன் இணைத்து விட்டேன்.பயனர்:mohamedtet (பேச்சு)

உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக Mohamed ijazz நான் இந்த தலைப்பை இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் என மற்ற விரும்பிகிறேன் .எவ்வாறு மாற்றுவது?பயனர்:mohamedtet


உதவி[தொகு]

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நண்பரே! பயனர்:Zubair ,பயனர்:Mohamedtet ,பயனர்:Zubair11 இந்த மூன்று கணக்குகளும் நான் உருவாக்கியதுதான்.பிரச்சனை என்னவென்றால் பயனர்:Mohamedtet இதன் password மாற்றத்துக்குள்ளாகி ,என்னால் பயன் படுத்த முடியவில்லை. பின்பு பயனர்:Zubair இதை உருவாக்கினேன்.ஆனால் இந்த கணக்கும் படிமம் ஏற்றும் போது error வந்ததால் பயனர்:Zubair11 இதை உருவாக்கினேன். ஆனால் இந்த பயனர்:Zubair கணக்கை மட்டும் பயன் படுத்த விரும்பிகிறேன்.மற்ற கணக்குகளை என்னால் தடை செய்வதற்கு உதவவும்.மாற்றங்களுக்கு வருந்துகிறேன்.தொடர்ந்து உதவவும்.பயனர்:Zubair(பேச்சு)


நான் கிப்லா என்ற தமிழ் கட்டுரையை english மூலத்தில் qibla என்ற கட்டுரையுடன் இணைக்க விரும்பிகிறேன்உதவவும்.பயனர்:Zubair(பேச்சு)

ஆங்கிலக் கட்டுரையுடன் இணைத்துவிட்டேன். ஒரு கணக்கில் இருந்து பங்களித்தால் உங்களுடன் உரையாட வசதியாயிருக்கும். கட்டுரையின் இடது பக்கத்தில் "languages" என்ற சொல் தெரிகிறதா? அதன்கீழ் edit links" என்பதை அழுத்தினால் ஒரு பெட்டி வரும். அதில் மொழியையும், கட்டுரையின் தலைப்பையும் இட்டு சேமித்தால் பிற மொழிக் கட்டுரைகளுடன் இணைக்கப்படும். உதவி தேவைப்படும்பொழுது மறவாமல் கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:48, 19 ஆகத்து 2014 (UTC)


வாலைக்கும் சலாம்(வர்ஹ்)பயனர்:Zubair கிப்லா குறித்து தாங்கள் விக்கியில் எழுத முனைந்தமைக்கு நன்றி.-- mohamed ijazz(பேச்சு) 09:11, 20 ஆகத்து 2014 (UTC)
நன்றி தமிழ்க்குரிசில்-- mohamed ijazz(பேச்சு) 09:11, 20 ஆகத்து 2014 (UTC)

அய்யா தமிழ்க்குரிசில் அவர்களுக்கும் Mohamed ijazz அவர்களுக்கும் உதவிக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் குறித்து நீங்கள் துவக்கிய கட்டுரைகளில் குறைந்தபட்ச தகவல்களை சேர்க்க வேண்டுகிறேன். உதாரணம் - 2014 பொதுநலவாய பௌலிங் விளையாட்டுக்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:46, 20 ஆகத்து 2014 (UTC)

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பிற்காக இப்பதக்கத்தை அகம் மகிழ்ந்து வழங்குகிறேன். இரா.பாலா (பேச்சு) 02:52, 30 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

laft திரு இரா.பாலா -- mohamed ijazz(பேச்சு) 04:33, 30 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 05:01, 30 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:38, 30 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:52, 9 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:10, 9 செப்டம்பர் 2014 (UTC)

Question about Tamil MH17 article: does it have the names of the pilots?[தொகு]

Mohamed, does the Tamil MH17 article have the names of the pilots? WhisperToMe (பேச்சு) 13:38, 9 செப்டம்பர் 2014 (UTC)

mr WhisperToMe

pilots

  1. Captain WAN AMRAN BIN WAN HUSSIN
  2. Captain CHOO JIN LEONG, EUGENE
  3. First Officer AHMAD HAKIMI BIN HANAPI
  4. First Officer MUHAMAD FIRDAUS BIN ABDUL RAHIM
  5. In-flight Supervisor MOHD GHAFAR BIN ABU BAKAR -- mohamed ijazz(பேச்சு) 14:26, 9 செப்டம்பர் 2014 (UTC)
Thank you! Please make sure the Tamil article includes these names. Also Eugene Choo's Chinese name is 朱仁隆 according to Sina (Xinlang) WhisperToMe (பேச்சு) 15:07, 9 செப்டம்பர் 2014 (UTC)

புதிய பகுப்பு உருவாக்கல்[தொகு]

இஜாசு, புதிய பகுப்பு ஒன்றை உருவாக்கும் போது அப்பகுப்பைக் குறைந்தது ஒரு தாய்ப்பகுப்புக்குள்ளாவது சேர்க்க வேண்டும். இல்லையேல். புதிய பகுப்பை உருவாக்குவதில் எவ்விதப் பயனும் இல்லை. தையற்கலை தமிழ் நூல்கள் என்ற புதிய பகுப்பை, "துறைகள் வாரியாகத் தமிழ் நூல்கள்", "தையல்" ஆகிய இரண்டு தாய்ப்பகுப்புகளுக்குள் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 12:12, 17 செப்டம்பர் 2014 (UTC)

நீண்ட நாட்களுக்கு பின் என்என் பேச்சுப் பக்கத்திற்கு வந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் வாருங்கள்! வணக்கம்! கனக சிறீதரன் தையற்கலை தமிழ் நூல்கள் என்ற பகுப்புக்கு துறைகள் வாரியாகத் தமிழ் நூல்கள் என்ற தாய்ப்பகுப்பை இணைத்து விட்டேன்.நன்றி -- mohamed ijazz(பேச்சு) 07:48, 18 செப்டம்பர் 2014 (UTC)
தையற்கலை தமிழ் நூல்கள் என்பதில் அதில் இரண்டு பெயர்ச் சொற்கள் உள்ளன என்பதைக் கவனியுங்கள். ஒன்று, தையல்', மற்றையது நூல்கள். இந்த இரண்டுக்கும் வெவ்வேறு பகுப்புகள் உள்ளன. இப்பகுப்பை நீங்கள் துறைகள் வாரியாகத் தமிழ் நூல்கள் பகுப்புக்குள் மட்டுமே சேர்த்துள்ளீர்கள். ஆனால், தையல் என்ற பகுப்புக்குள்ளும் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:42, 18 செப்டம்பர் 2014 (UTC)
முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் வார்ப்புருக்களுக்கு பகுப்புகளை சேர்க்காதீர்கள். ஏனெனில், அப்பகுப்புகள் முதற்பக்கத்திலும் சேர்ந்துவிடும்.--Kanags \உரையாடுக 08:07, 20 செப்டம்பர் 2014 (UTC)





திரு இஜாசு அவர்களுக்கு வணக்கம்

'மறைக்கப்பட்ட இந்தியா' என்னும் கட்டுரையை யான் (செம்மல்50) எழுதினேன். ஆனால் புகுபதிகை செய்யத் தவறிவிட்டேன். எனவே என் பதிவு என்று மற்ற அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இருப்பினும் சில மாற்றங்களைச் செய்து அக்கட்டுரையை வளப்படுத்தியதற்கு நன்றி.~~செம்மல்50

எனக்கு ஒரு சந்தேகம்[தொகு]

நான் தமிழக எழுத்தாளர்கள் படங்களைத் தரவேற்றி அவற்றைக் கட்டுரைகளில் தகவல் சட்டங்கள் மூலம் இணைக்கும் முயற்சியில் உள்ளேன் மு. சுப்பிரமணி அவர்களால் எழுதப்பட்ட தமிழக எழுத்தாளர்கள் எனும் தாய்ப்பகுப்பின் கீழ் உள்ள சில கட்டுரைகளில்

  • ஆதாரம்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல். என்று உள்ளது அவ்வாறு உள்ள கட்டுரைகளுக்கு மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்க வேண்டுமா ???????? -- mohamed ijazz(பேச்சு) 06:41, 11 அக்டோபர் 2014 (UTC)

கண்களுக்குக் கிடைத்தால், சேருங்கள்! கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் சேர்ப்பதில் தவறில்லை என்பதே எனது கருத்து! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:54, 11 அக்டோபர் 2014 (UTC)

பயனர் பக்கக் கட்டுரைகள்[தொகு]

இஜாசு, பயனர் பக்கவெளிகளில் உள்ள கட்டுரைகளை இப்போதைக்கு நகர்த்தாதீர்கள். இவை கூகுள் கருவி கொண்டு மொழிபெயர்க்கப்பட்டவை. இவை மீண்டும் சரி பார்க்கப்பட்டு நகர்த்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 10:24, 15 அக்டோபர் 2014 (UTC)

சரி திரு Kanags -- mohamed ijazz(பேச்சு) 10:26, 15 அக்டோபர் 2014 (UTC)

இஜாஸ், அடுத்தவர்களின் பயனர் பக்கங்களிலோ, மணல்தொட்டிகளிலோ கைவைக்க வேண்டாம். :( அவர்களின் உழைப்பு வீணாகலாம். சிலர் சண்டைக்கு வரவும் வாய்ப்பு உண்டு. :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:32, 15 அக்டோபர் 2014 (UTC)

அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் துப்புரவு 98% முடிந்து விட்டது. இதன் போது 100% எனது மனசாட்சிபடி எந்த ஒரு பயனரினதும் உழைப்பை வீண் செய்யாமல் நடந்து கொண்டேன் எனது நோக்கம் அறுபட்ட கோப்புக்களை துப்புரவு செய்வதில் இருந்தது தங்களது அறிவுரைக்கு நன்றி தமிழ்க்குரிசில் -- mohamed ijazz(பேச்சு) 14:49, 15 அக்டோபர் 2014 (UTC)

Hello Mohamed! Could you translate an article about boycott of Russian goods in Ukraine for the Tamil Wikipedia? Thanks for the help. --Trydence (பேச்சு) 22:20, 19 அக்டோபர் 2014 (UTC)

File:Dr. Elamathy madam.jpgஇன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது[தொகு]

File:Dr. Elamathy madam.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும் இதன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் இவ்வகைப்படிமங்களுக்கான விக்கிப்பீடியா பயன்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதை சரிசெய்ய படிம பக்கத்துக்கு சென்று அதன் காரணத்தை அறியலாம். உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேவைப்படும் மாற்றங்களைச்செய்யவும். பதிப்புரிமை தொடர்பான விவரங்களும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணமும் ஒன்றல்ல. பதிப்புரிமை உடைய ஆக்கங்களைப்பயன்படுத்த நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் தரவேண்டும் என்பதை கவணத்தில் கொள்க.

இதன் பயன்பாடு நியாயமான பயன்பாட்டுக்கான காரண வரையரைகளுக்குள் வராவிட்டால் [[விதிமுறைகளுக்கு ஏற்ப இப்படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். நன்றி. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:20, 23 அக்டோபர் 2014 (UTC)

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்[தொகு]

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:49, 27 அக்டோபர் 2014 (UTC)

இந்தோனேஷியாவின் ஏர்ஏசியா விமானம் 8501[தொகு]

திரு.இஜாசு, வணக்கம். தாங்கள் ’இந்தோனேஷியாவின் ஏர்ஏசியா விமானம் 8501’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையைத் தொடங்கி இருப்பதைக் கவனிக்காமல், நானும் ’இந்தோனேசிய ஏர் ஏசியா 8501 வானூர்தி பயணம்’ எனும் தலைப்பில் ஒரு புதிய கட்டுரையை உருவாக்கி விட்டேன். மன்னிக்கவும். தவற்றைப் பிறகுதான் உணர்ந்தேன். தயவு செய்து என்னுடைய கட்டுரையை நீக்கி விடவும். (மலாக்கா முத்துக்கிருஷ்ணன்) (பேச்சு)--ksmuthukrishnan 18:16, 28 திசம்பர் 2014 (UTC)

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Mohamed ijazz/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:20, 30 திசம்பர் 2014 (UTC)

விக்கித்திட்டம் 100, 2015[தொகு]

பணிசெய்ய இணைந்தமைக்கு நன்றி. வாழ்த்துக்கள். உதவிகள் செய்ய முடியுமா??? முகநூலில் பகிர வேண்டும். விக்கிப்பீடியா பக்கங்களில், என்னால் இன்று செய்ய இயலா..........., விக்கிப்பீடியர்களுக்கு இணைப்பு கொடுத்து நிலைத்தகவல் ஒன்றையும் இட்டுதவ முடியுமா????, நான் தவற விட்ட பயனர்களுக்கு வார்ப்புருக்கள் இட்டுதவமுடியுமா???, பதிலுக்கு காத்திருக்கிறேன். :) குறைந்தது 50 பயனர்களையாவது பெற்றாக வேண்டாமோ --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:36, 30 திசம்பர் 2014 (UTC)

புதுப்பயனர்களுக்கு இடுவதில் பயனில்லை என தோன்றுகிறது மாறாக தொடர் பங்களிப்பாளர்கள் (கடந்த 30 நாட்களில் தொகுப்பு செய்தவர்கள்), 10 ஆண்டுகள் நிறைவிற்கு சான்றிதழ்கள் வாங்கியவர்கள் போன்றோரில் சிலரை தவற விட்டேன். அவர்களுக்கு இணைத்துதவமுடியுமா???, இணைய இணைப்பு நாளை தான் கிடைக்கும். இணைக்கும் போது சிறுதொகுப்பு எனவும் சுட்டுங்கள். நான் மறந்திட்டன். மற்ற தொகுப்புக்களை கவனிக்க உதவும். நன்றி, மிக்க நன்றி இஜாசு --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:47, 30 திசம்பர் 2014 (UTC)
முயற்சி ​செய்கி​றேன் தம்பி ♥ ஆதவன் ♥--Mohamed ijazz (பேச்சு) 09:55, 30 திசம்பர் 2014 (UTC)
நன்றி அண்ணா--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:04, 30 திசம்பர் 2014 (UTC)

Happy New Year[தொகு]

Happy New Year - 2015
Wish you happy and prosperous new year. -- L Manju (பேச்சு) 19:43, 31 திசம்பர் 2014 (UTC)
L Manju ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවා ...!!--Mohamed ijazz (பேச்சு) 00:24, 1 சனவரி 2015 (UTC)

இலக்கு[தொகு]

தான் இலக்கை அடைந்து விட்டன?

நீங்க என்ன சொல்ல வந்திங்க கிருஷ்ணமூர்த்தி ஒன்றும் புரியல்ல --Mohamed ijazz (பேச்சு) 15:43, 2 சனவரி 2015 (UTC)

முதலாம் ஆண்டு பங்களிப்பு நிறைவு 2014-15[தொகு]

கடந்த ஆண்டு எனது பேச்சுப் பக்கத்தில் புதுப்பயனர் வார்ப்புருவை இட்டு புதிய பக்கம் உருவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி அறிமுகம் செய்த திரு கனகரத்தினம் சிறீதரன் அவர்களுக்கு முதற்கண் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.முயற்சி திருவினையாக்கும்” முயன்று பார்க்காதவரை வெற்றி தோல்வியை நிர்ணகிக்க முடியாது வெற்றி என்பது பெற்று கொள்வது. தோல்வி என்பது கற்று கொள்வது. முதலில் கற்று கொள்வோம், பிறகு பெற்று கொள்வோம். என்ற கோட்பாட்டிற்கமைய என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து 82 கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவுக்காக எழுதி உள்ளேன் இம்முயற்சிக்கு துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.2015 ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்ட வேண்டும் என்பது எனதுகனவு ஒன்று படுவோம் வெற்றி பெறுவோம்.--Mohamed ijazz (பேச்சு) 09:26, 6 சனவரி 2015 (UTC)