பயனர் பேச்சு:Mohamed S. Nisardeen

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருக! --செல்வா 18:37, 14 டிசம்பர் 2008 (UTC)



அறிஞர்களின் கூற்றுக்கள்: 2,3, ஆக கூடியது 4 போதும்[தொகு]

உங்களின் பங்களிப்புக்கு நன்றி. அறிஞர்களின் கூற்றுக்கள் 2,3, ஆக கூடியது 4 போதும், அதற்கு மேல் என்றால் விக்கி ஆவணத்தில் அல்லது விக்கி நூல்களில் சேக்கலாம். சார்பான கூற்றுக்களை மட்டும் சேக்கிறீர்கள். விமர்சனக் கூற்றுக்கள் பல உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. --Natkeeran 20:44, 14 டிசம்பர் 2008 (UTC)


ஒத்துழைப்புகளுக்கு நன்றி.விக்கிப்பீடியாவுக்கு புதியவன் என்பதால் தங்களிடமிருந்து வந்த செய்தியை பெறுவதிலும்; தங்களதும் kanags மற்றும் செல்வாவினது பங்களிப்புகளும் தொகுப்பின் போது எனக்கு பெரிதும் உதவியுள்ளதையும் தாமதமாகவே அறிகிறேன். ஒத்துழைப்புகளுக்கு நன்றி. ("இஸ்லாம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்கள்" உலகம் மதிக்கத்தக்க ஆய்வாளர்களிடமிருந்து காரணங்களுடன் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதையே கவனத்தில் எடுக்கிறேன்.தவறுகள் இருந்தாலோ அல்லது மேலும் தகவல்கள் இருந்தாலோ அறிய ஆவல் கொள்கிறேன்.) --Mohamed S. Nisardeen 11:41, 16 டிசம்பர் 2008 (UTC)

நிசார்டீன், இஸ்லாம் கட்டுரையில் உங்கள் பங்களிப்பு நன்று. கட்டுரைகள் ஆங்கிலத்தில் தலைப்பிடப்படுவதில்லை. மேலும், ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு வெறுமனே இணைப்புத் தந்து கட்டுரைகள் ஆக்கப்படுவதில்லை. முடியுமானால் ஆங்கிலக் கட்டுரையைத் தமிழில் மொழிபெயருங்கள். தமிழில் குறுங்கட்டுரை (இரண்டு அல்லது மூன்று பந்திகள்) ஆனாலும் பரவாயில்லை. அல்லாதுவிடில் அவை நீக்கப்படலாம். தொடர்ந்து பங்களியுங்கள்.--Kanags \பேச்சு 10:18, 15 டிசம்பர் 2008 (UTC)


தொகுப்பின் போதான உங்களின் வழிகாட்டல்களுக்கும், அறிவுரைக்கும் நன்றி, தமிழ் விக்கிப்பீடியாவின் சட்டங்களை அறியாததால் தலைப்பிடுவதில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக வருந்துகிறேன். ஒரு வட்டத்துள் என்றில்லாமல் முடியுமானவரை விக்கிப்பீடியாவுக்கு செய்ய வேண்டிய சேவைகளை நான் அறிகிறேன். உங்களது ஒத்துழைப்புகளும் இருக்கும் என நம்புகிறேன்.--Mohamed S. Nisardeen 11:39, 16 டிசம்பர் 2008 (UTC)


நிசார்டீன், உங்கள் ஆரம்பகாலப் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. விக்கி நடை ஆரம்பத்தில் சிறிது பிரச்சினையாகவே இருக்கும். நாம் அனைவருமே இந்தத் தடைகளைத் தாண்டி வந்தவர்களே. இன்னமும் அறிய நிறைய உள்ளன. உதவிகளை பயனர்களின் பேச்சுப் பக்கத்திலேயே கேட்கலாம். அல்லது பொதுவாக ஆலமரத்தடியில் கேட்கலாம். தொடர்ந்து உங்களுக்கு விருப்பமான துறை ஒன்றில் கட்டுரைகளை எழுத ஆரம்பிக்கலாம். அல்லது இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கி உதவலாம். நீங்கள் கொழும்பில் இருந்தா எழுதுகிறீர்கள்?--11:57, 16 டிசம்பர் 2008 (UTC)


பாராட்டுகள்[தொகு]

நீங்கள் அருமையாக தகுந்த சான்றுகோள்களுடன் பல கட்டுரைகளுக்கு ஆக்கம் தந்துள்ளீர்கள். முகமது நபி கட்டுரையும், இசுலாம் கட்டுரையும், முகம்மது நபியின் இறுதிப் பேருரை ஆகிய கட்டுரையும் நல்ல எடுத்துக்காட்டுகள். தகுந்த, துல்லியமான சான்றுகோள்கள் தருதலும், நடுநிலமையுடன் (பல பக்கக் கருத்துகள் இருப்பின், போதிய அளவு அவற்றையும் தந்து நடுநிலைமை காத்து), கலைக்களஞ்சிய கட்டுரை நடையில் எழுதுதல் விக்கிக்கு வலு சேர்ப்பன. உங்கள் ஆக்கங்களுக்கு நன்றி. தொடர்ந்து பங்களித்து ஆக்கம் தர வேண்டுகிறேன்.--செல்வா 13:49, 16 டிசம்பர் 2008 (UTC)


உங்களது வரவேற்புரைக்கும் இன்னும் பாராட்டுதல்களுக்கும் நன்றி. பரந்தளவில் எழுதுவதில் எனக்கு ஆர்வமிருந்தாலும் இஸ்லாம் என்ற பகுப்பிலமைந்த தலைப்பின் கீழ் ஆதாரமற்ற விடயங்கள் நிறைய உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவைகளை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் . இப்பகுப்பின் கீழ் கட்டுரைகளை ஆக்க தரமானவர்கள் இல்லை என்பதையும் அறிகிறேன். முடிந்தளவு எனது பார்வையில் நடுநிலைமையோடு அதே நேரம் தலைப்பிலிருந்து விலகிச்செல்லாமலும், தலைப்புக்கு வலு சேர்க்கும் வகையிலும் இருப்பதாகவே கட்டுரைகளை வரைகிறேன். கட்டுரைகளில் குறைகள் இருப்பின் அவ்விடத்தைச்சுட்டுமிடத்து "ஏற்றுக்கொள்வேன்" என பணிவுடன் உறுதி தருகிறேன். உங்களது ஆதரவுகளை தொடர்ந்தும் எதிர்பார்த்திருக்கிறேன். நன்றி.--Mohamed S. Nisardeen 22:04, 16 டிசம்பர் 2008 (UTC)

நீங்கள் ஆதரபூர்வமாக சேப்பதில் எனக்கு எந்தவித ஆட்சோபனையும் இல்லை. சில கட்டுரைகளுக்கு ஒரு பகுதியாக அறிஞர்களின் கூற்றுக்கள் இருப்பது நன்றே. கட்டுரையின் உள்ளடக்கத்தில் இந்த கருத்துக்களை மேற்கோள் காட்ட முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பக்கத்தில் மேலும் குறிப்புகள். உண்டு. சில வரிகளை இடுவதில் காப்புரிமைச் சிக்கல்கள் இருக்காது ஏன்றே நினைக்கிறேன். உங்கள் பங்களிப்புக்களை தொடர்ந்து வழங்குங்கள். எந்தவிதமான விக்கி நுட்ப உதவி தேவை என்றாலும் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி இல் கேளுங்கள். பயனர்கள் இயன்றவரை உதவுவர். நன்றி. --Natkeeran 21:54, 16 டிசம்பர் 2008 (UTC)

சமயக் கட்டுரைகள்[தொகு]

சமயக் கட்டுரைகள் எழுதும்பொழுது சமய நம்பிக்கையுடையோரின் மனதை நோகடிக்காமல் இருப்பது முக்கியம். அதேவேளை கலைக்களஞ்சியத்தின் முக்கிய நோக்கம் ஆதாரபூர்வமான தகவல்களை முன்வைப்பதுதான். நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட சமயக் கருத்துக்களை ஆதாரபூர்வமான முறையில் எப்படி எழுதுவது என்பதுவே சமயக் கட்டுரைகளில் இருக்கும் சிக்கல். சமயக் கட்டுரைகளை பரப்புரையாக எழுதுதல் முற்றாக தவிர்க்கப்படவேண்டும்.

திருக்குர்ஆன் கட்டுரையின் உள்ளடக்கம் ஆங்கில பக்கத்தில் உள்ளது மாதிரி பின்வருமாறு அமையலாம்:

  • சொற்பிறப்பியல்
  • திருக்குர்ஆன் வரலாறு
  • தமிழில் திருக்குர்ஆன்
  • உள்ளடக்கம்
  • இஸ்லாமில் திருக்குர்ஆனின் முக்கியத்துவம்
  • இலக்கியமும் திருக்குர்ஆனும்
  • பண்பாடும் திருக்குர்ஆனும்
  • அறிவியல் நோக்கில் திருக்குர்ஆன்

பொது வாசகரை மனத்தில் கொள்க. இயன்றவரை நடுநிமை பேணுக.

இஸ்லாம் இருந்த உள்ளடக்கத்தை எந்த விளக்கமும் இல்லமல் நீக்கி பக்க சார்பு அறிஞர் கூற்றுக்களை மட்டும் சேக்கிறீர்கள். இது இந்த தளத்தில் அவ்வளவு பொருத்தமில்லை. வலைப்பதிவு, அல்லது விக்கி நூலில் (http://ta.wikibooks.org/) பொருத்தமாக இருக்கலாம்.


--Natkeeran 18:01, 18 டிசம்பர் 2008 (UTC)

இஸ்லாம், முகம்மது நபி மற்றும் திருக்குர்ஆன் என்ற் தலைப்புக்களிலிருந்த மோசமான பதிவுகளைக் கண்டு அவைகளை தெளிவாக்கும் முயற்சியிலேயே குறியாக இருந்து விட்டேன். முடிந்த மட்டும் கவனமாகவே எழுதியுள்ளேன் என்பதும் கவனத்தில் கொண்டிருப்பீர்கள். நாஸ்திகம், ஆஸ்திகம், பொதுவுடமை, ஜனநாயகம், போன்ற மனித சுதந்திர கொள்கைகளை விளக்கும் போது அதை ஏற்றவர்களது வாதம் சுட்டிக்காட்டப்படுவது வழமையானதே. அதையும் நான் தவிர்த்தே வந்துள்ளேன். மீண்டுமொருமுறை எனது ஆக்கங்களை ஆராய்கிறேன். சிந்திக்க வைத்த உங்களது விமர்சனங்களுக்கு நன்றிகள். --Mohamed S. Nisardeen 18:42, 18 டிசம்பர் 2008 (UTC)


சகோதரர் நற்கீரன் அவர்களுக்கு; உயரிய சேவைகளால் புகழ் பெற்றவர்களது கருத்துகளையே நான் தொகுக்க முனைந்தேன். "பக்கச்சார்பானவர்களது கூற்றுக்கள்" என்ற கருத்து இவர்களது சேவைகளை களங்கப்படுத்துவதாகவே நான் காண்கிறேன். கருத்துகள் மூலமே பிரபலத்தை தேடியோரும் உள்ளனர் அவர்களை இங்கு அடையாளப்படுத்த முனையவில்லை என்பதையும் பணிவுடன் அறியத்தருகிறேன். இங்கு சுவாமி விவேகானந்தர் மற்றும் சேர் சி. பி. இராமசாமி ஐயர் ஆகியோரது கருத்துகளை தணிக்கைக்கு உட்படுத்தியுள்ளேன் என்பதை அறியத்தருவதில் திருப்தியடைகிறேன். --Mohamed S. Nisardeen 12:09, 20 டிசம்பர் 2008 (UTC)


எனது பதிப்பில் திருக்குர் ஆன் விடும் சவால் என்ற தலைப்பும், Sir.வில்லியம் மூரினது இரண்டாவது வரியுமே காரத்தன்மை கொண்டதாக என் சிற்றறிவுக்கு எட்டியதால் அவைகளை நீக்கியுள்ளேன். ஏனைய பதிவுகளிலும் தணிக்கை செய்வதாக உறுதித்தருகிறேன்.
இன்னும் எனது சிறு விளக்கத்தை அதிக பிரசங்கித்தனமானது என கருதாமல் ஆராய்வீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். இறைவனிடமிருந்து மோசேக்கு வழங்கப்பட்ட அதிசயம் மந்த்திரக் கோல் என்பதும், ஜீசசுக்கு உயிர்ப்பித்தவர்களை எழுப்பிக்கும் பிணி தீர்க்கும் ஆற்றல் என்பதும் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்ட ஒன்றே. இவைகளை விளக்கும் போது வெறும் சம்பவமாக விளக்காமல் அதிசயமாகவே விளக்க வேண்டியது கட்டாயமாகும். இவ்வாறே முகம்மதுக்கு திருக்குர்ஆனே இறைவனால் கொடுக்கப்பட்ட அதிசயமாக முஸ்லிம்கள் நம்புகிறனர். இதை இவர்கள் காகிதத்தினாலான புத்தகமாக அல்லாமல் "ஒலி" வடிவிலான உச்சரிப்பாக மட்டுமே ஏற்றுக்கொள்கிறனர். அவ்வுச்சரிப்பு முறை இன்றும் இலட்ச்சக் கணக்கானவர்களினால் மனப்பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதனையும் மேற்கோள் காட்டி சாதாரண புத்தகங்களுக்கான வரைவிலக்கணத்தில் தாங்கள் பட்டியலிட்டுள்ள தலைப்புகளை தொகுப்பதில் சிக்கலுள்ளது என்பதை தாழ்வாக அறியத்தருகிறேன். அடுத்து இப்பகுதிக்கு மாற்று மத சகோதரர்களின் வருகை மிகக்குறைவாகவே இருக்கும் என நான் நம்புவதால் எனது முயற்சிகளுக்கான தங்களது ஆதரவு கரத்தை எதிர் பார்த்திருக்கிறேன். (விடுமுறை என்பதால் உடனடியாக என்னால் மாற்றம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன்.)--Mohamed S. Nisardeen 11:27, 20 டிசம்பர் 2008 (UTC)


மேலும் சில கருத்துக்கள்[தொகு]

உங்கள் பங்களிப்பை வரவேற்கிறோம். முன்னர் குறிப்பிட்டது போல ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அறிஞர்களின் கூற்றுக்களை சேப்பதில் ஆட்சோபனை இல்லை. ஆனால் நீங்கள் இஸ்லாம் கட்டுரையில் சில பகுதிகளை நீக்கி உள்ளீர்கள். அவையும் ஒரு முஸ்லீம் அன்பர், எனது அழைப்பின் பேரில் எழுதியது. கருத்துவேறுபாடு இருந்தால் உரையாடல் பக்கத்தில் தெரிவிப்பது, மற்ற பயனர்களின் கருத்துக் கோருவது விக்கி வழக்கம்.

திருகுர்ஆன் கட்டுரை அவ்வளவு விருத்தி பெற்று இருக்க வில்லை என்பது உண்மையே. எனினும் அடிப்படைத் தகவல்களை தரப்படவில்லை (எ.கா: வரலாறு) என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் சிறந்த பண்புகள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். அதேவேளை அவை சமய நம்பிக்கை எனபதையும் குறிப்பிட வேண்டும்.

ஏன் என்றால் அவை பற்றிய அடிப்படைக் கருத்து வேறுபாடுகள் உண்டு. மர்சனங்கள் விக்கிப்பீடியாவில் ஒரு அங்கம் என்பதையும் கவனிக்க. en:Criticism of Islam en:Criticism of the Qur'an

--Natkeeran 13:18, 20 டிசம்பர் 2008 (UTC)


உங்களனைவரதும் அன்பை பெறுவதே வயதில் சிறியவனான எனது நோக்கமாக உள்ளது. தொடர்ந்து வரும் எனது பங்களிப்புகளும் திருத்தங்களும் இதற்கு துணை நிற்கும் என நம்புகிறேன்.நான் படிப்படியாக நிரப்பி வருவதையும் இஸ்லாம் கட்டுரைகளில் அவதானித்திருப்பீர்கள். சில காலங்கள் தேவைப்படுகிறது. இன்னும் நீக்கப்பட வேண்டிய வசனங்களை சுட்டும் போது நிச்சயமாக கவனத்திலெடுக்க ஆவல்கொண்டுள்ளேன். நன்றி --Mohamed S. Nisardeen 14:06, 20 டிசம்பர் 2008 (UTC)


அவசரம் காரணமாக உங்களது அடிக்குறிப்பை கவனிக்கத் தவறி விட்டேன்.இங்கு விவாதம் எனது நோக்கமல்ல. இஸ்லாம் என்ற தலைப்பிட்டு அதன் கீழ் ஆதாரமில்லாமல் எழுதுவதே எழுதப்படுவதே ஏற்புடையதாக படவில்லை மாறாக, இஸ்லாம் எதிர் நோக்கும் விமர்சனங்கள் என்ற தலைப்பில் எதையும் எவராலும் எழுதலாமே! ஆட்சேபனையும் இல்லையே! ஆராயும் படி கூறும் வார்த்தைகளே திருக்குர்ஆனில் அதிகம் என்பதும் அது மனிதனின் அடிப்படை உரிமையும், முதல் தேவையும் என்பதும் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விமர்சனங்களை அந்த தலைப்பின் கீழ் கொண்டு வருவதையே விரும்புகிறேன் பேச்சுப்பக்கம் நாகரிகமாக தோன்றவில்லை. திரும்பவும் அழுத்தமாக கூறுகிறேன். சாடல் எனது கட்டுரைகளிலில் நிச்சயமாக இல்லை. உரை பெயர்ப்புகளின் போது இருந்ததையும் தணிக்கைக்குட்படுத்தி விட்டேன். அவ்வாறு எதனையும் காணும் போது நீக்குவதற்காக உங்களது ஆலோசனைகளை இப்பக்கத்தில் எதிர்பார்க்கிறேன். நன்றி நண்பரே.--Mohamed S. Nisardeen 18:09, 20 டிசம்பர் 2008 (UTC)


உங்களுக்கு இடையூறு தருவது எனது நோக்கமல்ல. அந்தக் கட்டுரையின் கணிசமான பகுதிகளை பயனர்:முஃப்தி எழுதினார். எவை ஏற்புடையவை இல்லை என்று சொன்னால் நன்று. எ.கா படங்கள் ஏன் நீக்கப்பட்டன? இப்போ நீங்கள் எழுதியவற்றை வேறுஒரு பயனர் விளக்கம் இல்லாமல் நீக்கினாலும் நாம் இவ்வாறு கேட்பது நல்லதல்லவா. ஆமாம், நீங்கள் சொன்ன மாதிரி விமர்சனத்துக்கு ஒரு தனிக்கட்டுரை இருக்கலாம். நன்றி. --Natkeeran 19:00, 20 டிசம்பர் 2008 (UTC)



ஆரம்பத்தில் எனது தவறை ஏற்றிருப்பதைஅறியப்படுத்துகிறேன்.
மாற்றம் செய்த தினம் விக்கிப்பீடியாவுடனான பரிச்சியம் இல்லாத காரணத்தினால் அத்தவறு நேர்ந்துள்ளது பயனர்:முஃப்தி தொடர்புகொள்ளும் போது அவரிடம் மன்னிப்பு கேட்கவும் இசைவான மனதுடனே உள்ளேன். மாற்றம் செய்ததற்கான காரணம்.
01)இஸ்லாம் மார்க்க நம்பிக்கைகள்
02)ஈமானின் அடிப்படைகள் ஆறு (ஈமான்= நம்பிக்கை )
என்ற இரண்டும் ஒரே தலைப்பின் கீழ் வரவேண்டியவைகள் என்பதும். மூன்றாவது தலைப்பான
03)இஸ்லாத்தின் அடிப்படைகள் ஐந்து
என்ற தெளிவில்லாத தலைப்பும் அதிலும் கூட ஈமான் பற்றிய விடயங்களே உள்ளடங்கியிருந்த்துமே காரணமாகும் இக்கூற்றை இஸ்லாமியர்கள் பயனர்:முஃப்தி உட்பட விமர்சிப்பார்களானால்முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்வதாக உறுதி மொழிகிறேன். எனது தெரியாமையால் செய்த தவறை .மீண்டும் ஏற்றுக்கொள்கிறேன். இனி அவ்வாறான தவறு நடக்காது என்பதையும் அறிவிக்கும் இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாம் என்ற தலைப்பின் கீழ் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் இரண்டினதும் மேற்கோள் இல்லாமல் அமைக்கப்படும் போது அதை முன்னறிவித்தல் இன்றி நீக்குவதற்கு அதிகாரத்தையும் வேண்டுகிறேன்.
நன்றி--Mohamed S. Nisardeen 20
04, 20 டிசம்பர் 2008 (UTC)
பதிலுக்கு நன்றி. இத்தலைப்புகளில் உள்ளடக்கம் பற்றி அலச எனக்கு பரிச்சியம் இல்லை. ஆனாலும் பேச்சுப் பக்கத்தில் விளக்கம் தந்து மாற்றுவதே விக்கி பண்பு. கலைக்களஞ்சியத்தில் எழுதும் பொழுது சமய நூல்கள் மட்டுமே மேற்கோள் காட்டப்பட வேண்டும் என்று கோருபது நியாமன்று.
பொது வாசகருக்கு எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனேகருக்கு திருக்குர்ஆன் ஹதீஸ் போன்ற நூல்களோடு பரிச்சியம் இருக்காது. எனவே கருத்தை பொழிந்து, மேற்கோளுடன் எழுதினா சிறப்பாக இருக்கும். எ.கா நல்ல சமாரியன் உவமை என்ற கிறிஸ்தவ சமயக் கட்டுரையைப் பாக்கவும். அது சமயக் கட்டுரை என்றாலும் பொது வாசகன் எளிதாக கருத்தைப் புரிந்து கொள்வது போல் அமைந்துள்ளது. --Natkeeran 20:20, 20 டிசம்பர் 2008 (UTC)

2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்[தொகு]

வணக்கம் முகமட்:

நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mohamed_S._Nisardeen&oldid=1454158" இலிருந்து மீள்விக்கப்பட்டது