பயனர் பேச்சு:Kbala1055

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Kbala1055!

வாருங்கள் Kbala1055, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--கார்த்திக் 10:07, 17 மே 2009 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

தங்களின் அறிமுகத்திற்கு நன்றி! பங்களியுங்கள், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் பாலா--கார்த்திக் 10:24, 17 மே 2009 (UTC)[பதிலளி]

தமிழ் விக்சனரி[தொகு]

தமிழ் விக்சனரி (http://ta.wiktionary.org/) என்ற அற்புதமான அகரமுதலி நம்மிடம் உள்ளது பாலா! :) இந்த அகரமுதலி உலகில் தலை சிறந்த 15 அகரமுதலிகளில் ஒன்று, மேலும் 96,649 சொற்களைத் தன்னகத்தே கொண்டு, தமிழ் விளக்கங்களுடன் வளருகிறது. இந்திய மொழிகளில் முதல் இடத்தை பிடித்த அகரமுதலி. இதில் தேடிப் பாருங்கள். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் --கார்த்திக் 04:36, 23 மே 2009 (UTC)[பதிலளி]

குன்றுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில்[தொகு]

வத்தலக்குண்டு எனும் ஊர் கட்டுரையில் அந்த ஊரிலிருக்கும் தகவல்கள் மட்டுமே தரப்பட வேண்டும் என்பதால் அங்கு தாங்கள் செய்திருந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டது. மேலும் தாங்கள் செய்திருந்த பதிவை சிறி பிழைகள் மட்டும் திருத்தி தனிக்கட்டுரையாக பதிவேற்றம் செய்து விட்டேன். அக்கட்டுரையில் எனக்கு எதையும் நீக்கியதாகத் தோன்றவில்லை. ஆதாரமான தகவல்கள் இருந்தால் தாங்கள் புதிய கட்டுரையில் மீண்டும் சேர்த்து விடுங்கள்.தவறு ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.--Theni.M.Subramani 05:45, 16 ஏப்ரல் 2010 (UTC)

ஆதாரம், வெளி இணைப்புகள் சேர்க்க[தொகு]

அன்புடையீர்,

ஆதாரங்கள்

  • தாங்கள் கட்டுரையில் எந்த செய்திக்கு ஆதாரம் சேர்க்க விரும்புகிறீர்களோ அந்த செய்திக்கு அடுத்து ஆதாரக் குறிப்புகளை தட்டச்சு செய்து அதன் இருபுறமும் <ref> </ref>என்று தட்டச்சு செய்து விடவும். இப்படி எத்தனை செய்திகளுக்கும் ஆதாரம் சேர்க்கலாம்.கட்டுரையின் முடிவில் ஆதாரம் அல்லது மேற்கோள்கள் என்று தனித்தலைப்பிட்டு அதன் கீழ் <reference/> அல்லது

என்று தட்டச்சு செய்து விட்டால் வரிசையாக எண்ணிடப்பட்டு தாங்கள் கொடுத்த அனைத்து அடிக்குறிப்புகளும் அந்த ஆதாரம் அல்லது மேற்கோள்கள் எனும் தலைப்பின் கீழ் ↑ என்ற குறியீட்டுடன் தனியாகத் தரப்பட்டு விடும்.

வெளி இணைப்புகள்

  • வெளி இணைப்புகள் என்பது கட்டுரையுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கொண்ட பிறிதொரு இணையதளமாகும். இப்படி கொடுக்கப்படும் இணைப்புகளுக்கு ஒரு சதுர அடைப்புக் குறியுடன் அந்த இணைய தள முகவரியை அளித்து நாம் அளிக்கும் பெயரையும் சேர்க்கலாம். உதாரணமாக உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தளத்திற்கு இணைப்பு செய்ய இணைய முகவரியிட்டு சிறிது இடைவெளி விட்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்று தட்டச்சு செய்து இருபுறமும் []ஒரு சதுர அடைப்புக் குறியிட்டு விடவேண்டும். அதாவது, http://www.ulakathamizhchemmozhi.org/ உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்று தட்டச்சு செய்து அதன் இருபுறமும் சதுர அடைப்புக்குறி தட்டச்சு செய்தால் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்று நீலநிறத்தில் தனியே தெரிவதுடன் அதைச் சொடுக்கினால் அந்தத்தளத்திற்கு நேரடியாகச் சென்று விடுகிறது. இது வெளி இணைப்புகள் எனப்படுகிறது. பயன்படுத்திப் பாருங்கள். நன்றி.--Theni.M.Subramani 08:42, 17 ஏப்ரல் 2010 (UTC)


குறிப்பு: இது விக்கிக் குறியீடுகளைப் பயன்படுத்துவதால் அது விக்கிப்பக்கமாகும் பொழுது குறியீட்டுக்கு தகுந்தவாறு மாற்றமாகி விடுகிறது. தாங்கள் தொகுவைச் சொடுக்கி அதனுள் போடப்பட்டுள்ள உரையைப் படித்துத் தெரிந்து கொள்ளவும் அல்லது தங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால் அதற்கு விளக்கம் அனுப்பி விடுகிறேன். --Theni.M.Subramani 09:02, 17 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kbala1055&oldid=3779776" இலிருந்து மீள்விக்கப்பட்டது