பயனர் பேச்சு:Karthi.dr/தொகுப்பு01

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், Karthi.dr/தொகுப்பு01! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Karthi.dr/தொகுப்பு01, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

விக்கிப்பீடியாவில் ஆங்கிலத்தலைப்புகளை இடுவதில்லை; மேலும் ஆங்கில உள்ளடக்கங்களும் இடுவதில்லை. எனவே, நீங்கள் முதன்முதல் தொடங்கிய பக்கமாக இருந்தாலும் அது நீக்கப்படுகின்றது. பல தலைப்புகளில் கட்டுரைகள் தேவை. நீங்கள் பங்களிக்க வாருங்கள். தமிழில் நல்லதொரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவோம். --பரிதிமதி 18:11, 4 மார்ச் 2010 (UTC)

முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா?[தொகு]

வணக்கம், தங்கள் பங்களிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. பல பயனுள்ள கட்டுரைகளைத் தருகிறீர்கள். நன்றி. சில கருத்துகள்:

  • உங்களுக்குத் தெரியுமா பகுதியில் ஒரு படிமம் இருந்தால் போதுமானது. அனைத்துக்கும் முதற்பக்கத்தில் படிமங்களை இணைப்பது அழகாக இராது.
  • ஹ என்ற கிரந்த எழுத்துக்குப் பதிலாக உற என்ற எழுத்தை எழுதுகிறீர்கள். காரணம் என்ன?

--Kanags \உரையாடுக 09:30, 11 ஜூலை 2010 (UTC)

Karthidr! உங்களுக்குத் தெரியுமா? பகுதிக்காக பங்களிப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி; நல்ல பல தகவல்களைத் தருகின்றீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். முடிந்தால், தகவல்களுக்கான ஆதாரத்தை உரையாடல் பக்கத்தில் தாருங்கள். பல படிமங்களை இணைத்தது நான் தான். கனகிடம் சொல்லி விடுகிறேன். நன்றி. --பரிதிமதி 12:27, 11 ஜூலை 2010 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

வணக்கம் கார்த்தி.நீங்கள் குறுகிய காலத்தில் மிகச் சிறப்பான பங்களிப்புகளைத் தந்து வருவதைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்பு தொடர வேண்டுகிறேன். நன்றி--ரவி 18:36, 11 ஜூலை 2010 (UTC)

இதுவே ஓய்வுன்னா, இதுக்கு முன்னாடி எப்படி உழைச்சிருப்பேன் :) சும்மா.. :) என்ன தான் ஓய்வெடுக்க நினைத்தாலும் விக்கி எப்படி இருக்கிறது என்று பார்க்காமல் இருக்க மனசு கேட்க மாட்டேன்குதே?--ரவி 18:49, 11 ஜூலை 2010 (UTC)

புதுப்பயனர் வரவேற்பில் பயன்படுத்தும் பக்கம்[தொகு]

நீங்கள் புதுப்பயனர் வரவேற்பில் பாரதியாரின் படத்தைப் பயன்படுத்தியிருக்கின்றீர்கள். இது சரியானதாக எனக்குப் படவில்லை. நானும் பாரதியாரை மிகவும் போற்றுபவன்தான், எனினும், இப்படியான சாய்வுகள் (குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்துதல்) வேண்டாம். திருவள்ளுவரின் (மிகப் பழங்காலத்தவர் எனினும்) படத்தை இடுவது கூட வேண்டாம். தனி மனிதரின் படம் இருப்பதைவிட, வரவேற்பை உணர்த்த, பலூன், அல்லது உணவுப்பொருள் போன்றவை இருப்பது நல்லது. புரிந்துகொள்ள வேண்டுகிறேன். --செல்வா 03:01, 20 ஜூலை 2010 (UTC)

விக்கி வழக்கத்தைப் புரிந்து கொண்டேன்.--Karthi.dr 07:28, 20 ஜூலை 2010 (UTC)
மிக்க நன்றி. --செல்வா 12:29, 21 ஜூலை 2010 (UTC)

அறிவுப்பல்[தொகு]

சிறு அகவையில் முளைக்காமல், பின்னர் முளைப்பதால், முதுமைப்பல் எனலாமா? அதாவது ஞானப்பல், அறிவுப்பல் என்பதெல்லாம் நேரடியான மொழி பெயர்ப்பாக இருப்பதாகத் தோன்றியது. தமிழில் இதனை ஆசறுதிப்பல் என்றும் கூறுவர். பார்க்கவும். கடைக்கடைப்பல், கடையிறுதிப்பல் என்றெல்லாமும் கூறலாம். அறிவுப்பல் என்பதும், ஞானப்பல் என்பதும் ஏனோ தமிழில் சரியான உணர்வைத் தராதது போல் தோன்றுகின்றது. பொருள் கொள்ளும் முறைமை தமிழில் சற்று வேறாக இருக்கலாம். உங்கள் கருத்துக்கு நன்றி.--செல்வா 17:54, 21 ஜூலை 2010 (UTC)

நீர் நமைச்சல், நீர் எரிச்சல்[தொகு]

கார்த்திகேயன், நீங்கள் சிறீதரன் கனகு அவர்களிடம் கேட்டிருந்த கேள்விகளுக்கு விடையாக கீழ்க்கண்டவற்றை என் பேச்சுப் பக்கத்தில் இட்டிருக்கின்றேன் (அவர் அங்கு கேட்டிருந்ததால்). இங்கும் இடுகின்றேன்:

கார்த்திகேயன் கூறும் aquagenic pruritis என்பது சேற்றுப்புண் இல்லை என்று நினைக்கிறேன் (சேற்றுப்புண் பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுத வேண்டும்!!). aquagenic என்பது நீரால் தோன்றும் என்று கார்த்திகேயன் சொன்ன பொருள்தான். pruritis என்பது அரிப்பு. நீரரிப்பு என்றால் நீரால் ஏற்படும் நில அரிப்பைச் சுட்டுமோ என ஐயுறலாம். ஆம் சுட்டும்தான்,, எனினும் நீரரிப்பு என்னும் நீரால் ஏற்படும் தோல் அரிப்பைக் குறிக்கப் பயன்படுத்தலாம். அப்படி இருப்பது தவறே இல்லை. இது எல்லா மொழிகளிலும் வழக்கம்தான். குழப்பம் வரும் எனில் நீர்நமைப்பு என்றும் சொல்லலாம். aquadynia என்பதை நீர் எரிச்சல் = நீரெரிச்சல் அல்லது நீர் எரிப்பு எனலாம். --செல்வா 13:03, 31 ஜூலை 2010 (UTC)

பிபிசி - தமிழோசை[தொகு]

அந்த இணைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டியதை அறிந்து மகிழ்ச்சி, கார்த்தி. :) -- சுந்தர் \பேச்சு 02:22, 8 செப்டெம்பர் 2010 (UTC)

கூகுள் தேடல் முடிவுகள்[தொகு]

அறிவுப்பல், ஞானப்பல் என்பது பற்றி நீங்கள் சுந்தரின் பேச்சுப் பக்கத்தில் கருத்து இட்டிருந்தீர்கள். தேடல் முடிவுகள் தலைப்புச்சொல்லால் அல்ல, எத்தலைப்பாக இருந்தாலும் எத்தனை பேர் பார்க்கின்றார்கள் என்பதைப் பொருத்தது. கூகுள் தேடலில் முதலில் வர வேண்டும் என்றே சில நுட்பங்களையும் சிலர் கையாளக்கூடும். இன்றைய தமிழ்ச் சூழலில் சிற்றெண்ணிக்கையானோர் ஒரு பக்கத்தைப் பார்த்தாலும் தேர்வுகள் மாறக்கூடும். எனவே இது பற்றிக் கவலைப்பட வேண்டாம். தக்க தகவல்கள், தரமான தகவல்கள் இருக்குமாறும், அவை பெருகுமாறும் தொடர்ந்து உழைத்துவந்தால் கட்டாயம் மிகப்பலவற்றிலும் த.வி முன்னிற்கும் வாய்ப்பு மிகவுள்ளது.--செல்வா 17:20, 26 செப்டெம்பர் 2010 (UTC)

தேடுபொறியில் முன்வருவதால் தான் விக்கிபீடியாவே வளர்ந்துள்ளது. அதைப்பற்றி நாம் கண்டிப்பாக கவலைப்பட வேண்டும். தேடுபொறிகளால் தான் த.விக்கிக்கு பார்வையாளர்கள் பெரும்பாலும் வருவார்கள் (இணையத்தில் இதைப்பற்றி கவலைப்படாமல் நாம் இருக்கக் கூடாது). --சோடாபாட்டில் 17:26, 26 செப்டெம்பர் 2010 (UTC)
சோடாபாட்டில், நாம் கூகுள் தேடலில் பின்தங்கவில்லை (ஒரு சில தலைப்புகளில் அப்படிப் பின் தங்கி இருக்கலாம்). கூகுள் தேடலில் முன்நிற்பதற்கான காரணங்கள் வேறு. தமிழ் விக்கிப்பீடியா நாளொன்றுக்கு 85K முறை பார்க்கப்படுகின்றது ஒரு மாதத்தில் 2.5 மில்லியன் முறை பார்க்கப்படுகின்றது. பின் தங்குவதாக உணர்ந்தால் அதனைச் சரி செய்ய பிற வழிகளைக் கைக்கொள்ள வேண்டும். ஒரு சில தலைப்புகளில் பின் தங்கி இருந்தால் அதற்கு வேறு காரனங்கள் இருக்கலாம். கருத்துப் பரவப் போதிய கால இடைவெளி இல்லாமல் இருக்கலாம்.--செல்வா 17:38, 26 செப்டெம்பர் 2010 (UTC)

நோவுகுறிவிறைப்பு[தொகு]

இதனை நாம் நோவுவிறைப்பு, நோவுகுறிவிறைப்பு (நோவும் குறிவிறைப்பு) எனலாம். நோவுதல் என்றால் வலித்தல். வலிவிறைப்பு என்பது வலுவான விறைப்பு என்னும் பொருள் சுட்டக்கூடும். (இதனை என் பேச்சுப் பக்கத்திலும் இட்டிருக்கின்றேன்)--செல்வா 17:43, 26 செப்டெம்பர் 2010 (UTC)

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் படைப்புகள்[தொகு]

அவர்களிடம் கேட்டிருக்கின்றேன் (நற்கீரனும் இதே போல ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்), தெரிந்தவுடன் உங்களுக்கும் தெரிவிக்கின்றேன். ஆனால் கருத்துகளை உள்வாங்கி நாமும் மாற்றி எழுதலாம். மேற்கோளாக சிறுபகுதிகளை அப்படியே தரவும் கூடும் --செல்வா 13:56, 29 செப்டெம்பர் 2010 (UTC)

நோய்களை வகைப்படுத்தல்[தொகு]

நாம் நோய்களை பொதுவான நோய்கள் என்ற பகுப்புக்குள் இட்டு வருகிறோம். அந்தப் பகுப்பு பெரிதாகி வளருகிறது. இதை ஒரு நல்ல முறைப்படி வகைப்படுத்தல் அவசியமாகும். எ.கா நோய்களுக்கும் தொடர்புடைய நலச் சிக்கல்களுக்குமான சர்வதேச புள்ளிவிய வகைப்பாடு. இதை மருத்துவம், உயிரியல் துறையினர் கவனத்தில் எடுக்க வேண்டும். நன்றி. --Natkeeran 15:58, 9 அக்டோபர் 2010 (UTC)

வெற்று மருந்து[தொகு]

placebo விற்கு ஏற்கனவே மருந்துப்போலி என்றொரு கட்டுரை உள்ளது. அத்துடன் உங்கள் உள்ளடக்கங்களை இணைத்து விடுங்களேன். மேலும் ஆங்கில விக்கியில் மூலக்க்கட்டுரையில் இடப்புறத்தில் தமிழ் விக்கி கட்டுரைக்கு இணைப்பு உள்ளதா என்று ஒரு முறை பார்த்துவிட்டு புதிய கட்டுரை தொடங்குங்கள். அப்படி செய்தால் இரட்டிப்பு கட்டுரைகள் உருவாவதை ஓரளவு தடுக்கலாம்.--சோடாபாட்டில் 15:25, 18 நவம்பர் 2010 (UTC) பேச்சு:மருந்துப்போலி பக்கத்தைப் பாருங்கள். இரு கட்டுரைகளையும், அவற்றின் வரலாற்றுடன் சேர்த்து இணைத்துள்ளேன். --கலை 00:41, 20 நவம்பர் 2010 (UTC)

bias[தொகு]

கார்த்தி,

பக்கசார்பு என்றொரு கட்டுரை ஏற்கனவே உள்ளது. உங்கள் உள்ளடகங்களை அங்கு சேர்த்து விடுங்களேன். (நான் செய்தால், பதிப்புரிமைக்காக வரலாறுகளை இணைக்க வேண்டி வரும், நீங்கள் செய்தால், வெறுமனே வழிமாற்று மட்டும் செய்து விடலாம்)--சோடாபாட்டில் 08:00, 23 நவம்பர் 2010 (UTC)

prejudice[தொகு]

முன்முடிவு என்று இன்னொரு உள்ளது :-). ஆங்கில விக்கியில் உள்ள கட்டுரையில் இடது panel இல் languages கீழ் தமிழ் க்கட்டுரை உள்ளதா என்றொரு முறை சோதித்து விட்டு தொடங்குங்கள். த. விக்கியில் பல கட்டுரைகளில் ஆங்கில/வேறு மொழி மூல சொற்கள் இல்லையென்பதால் இங்கு தேடினால் மட்டும் சிக்காது. ஆங்கில் விக்கியிலும் தேட வேண்டும்--சோடாபாட்டில் 08:24, 23 நவம்பர் 2010 (UTC)

2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்[தொகு]

வணக்கம் Karthi.dr/தொகுப்பு01:

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.

--Natkeeran 17:24, 8 சனவரி 2011 (UTC)

--Eldiaar 14:38, 27 சனவரி 2011 (UTC)

வணக்கம். நான் கோவையைச் சேர்ந்தவன். தங்கள் உதவிக்கரங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பயனர் பக்கங்களில் எழுதத் தெரியாததாலேயே தங்களுடன் மிகவும் காலதாமதமாகத் தொடர்பு கொள்கிறேன். இருப்பினும் தமிழில் 'இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்'. நன்றி.

குறுங்கட்டுரைகள்[தொகு]

{{குறுங்கட்டுரை}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தினால் பகுப்பும் உடன் இணைந்துவிடும். தங்களின் வேலையற்ற மீட்சி கட்டுரையில் செய்துள்ளேன்.

கங்கை, பிரம்மா போன்ற கட்டுரைகளுக்கு ஆதாரம் அவசியாமா. அவசியமானால் எதை ஆதாரமாகக் கொடுப்பது.

இது என்னுடைய சந்தேகம்.

ஏகப்பட்ட கட்டுரைகளை தாங்கள் எழுதியுள்ளதாக தெரிகிறது. எனக்கும் உதவி செய்யுங்கள்.

நன்றி.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

ஆதாரம்[தொகு]

கங்கை பக்கத்தினை நான் ஆரமித்தேன். ஏகப்பட்ட செய்திகள் தெரிந்தும் ஆதாரம் கொடுக்கப்பாடால் மட்டுமே அங்கிகரிக்கப்படும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காகதான் கேட்டேன். பிரம்மா கட்டுரையை நீங்கள் எழுதினீர்கள் என்று கவணிக்கவில்லை. ஆதாரம் இடுவதானால் புராணங்கள் என்று மொட்டையாக எழுதவா இல்லை இன்ன புத்தகத்தில் இன்ன பக்கத்தில் என்றும் எழுத வேண்டுமா என்பதே என் கேள்வி.

நன்றி.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

சமயம் சம்பந்தமான விஷயமாதலால் முடிந்தவரை என்ன புராணம் என்று குறிப்பிட்டுவிடுங்கள். பக்கமும் பதிப்பும் அவ்வளவு அவசியமில்லை. ஆனால் குடுக்க முடியுமெனில் அதனையும் கொடுத்துவிடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 15:18, 29 சனவரி 2011 (UTC)

இருவருக்கும் என் நன்றி. தாங்கள் கூறியபடியே செய்கிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

மனித உயிரணு[தொகு]

என்ன நண்பரே!, சண்டை என்றெல்லாம் பயமுறுத்துகிரீர்களே!...

மனித உயிரணு என்ற பக்கம் புதிதாக உருவாக்கப்பட்டு வழிதடம் மாற்றப்பட்டுள்ளது. பிறர் கட்டுரையை நான் நீக்கவில்லை என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

நான் என் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே செய்கிறேன். அதில் தவறு இருக்க வாய்ப்பில்லை என்று நம்பவது முட்டாள்தனம். அதை நான் செய்வதில்லை. மனித உயிரணு என்பது அண்டத்தினையும் குறிக்கும் என்று தாங்கள் கூறியவுடன்தான் புரிந்தது. அதற்கென்ன,. தாங்களே மாற்றியிருக்கலாமே!.

பிறகு கலை என்பவரைப் பற்றி தெரியாது. மிகுந்த கோபக்காரரோ!. அவர் கோபம் கொள்ள வாய்ப்புள்ளது என்பதற்காக என்னால் என்ன செய்ய முடியும் என்று எதிர்ப்பார்க்கின்றீர்கள்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

கார்த்தி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் ஜெகதீஸ்வரன். அவர் சொல்வது, ”மனித” என்பது ஆண், பெண் இருவருக்குக்கும் பொதுவான வார்த்தையென்பதால் விந்து , கருமுட்டை இரண்டுக்கும் தொடுப்பு இருக்க வேண்டுமென்று தான் (நீங்கள் இப்போது செய்தது சரியே, நான் அதைக் கொஞ்சம் மாற்றி பகுப்பையும் இணைத்துள்ளேன்). கலை உங்களுடன் சண்டையெல்லாம் இட மாட்டார் :-)--சோடாபாட்டில்உரையாடுக 05:57, 30 சனவரி 2011 (UTC)

தாங்கள் விளையாட்டுக்கு சொன்னாலும் அதில் அர்த்தம் இருந்து நண்பரே!. ஆனால் எனக்கு கிடைத்த அறிவுரையை கீழே பாருங்கள். --

பக்கத்தை வழிமாற்றும்போது அந்தப் பெயரில் வேறு உள்ளடக்கம் உள்ளதா என்று பார்க்கவும். உள்ளடக்கமும் வரலாறும் அழிய வாய்ப்பிருந்தால் அதனை பேச்சுப் பக்கத்தில் உரையாடிவிட்டு மாற்றுங்கள். இதுவே விக்கி சமூகத்தில் வழமை; தவிர தங்கள் நேரத்தையும் உழைப்பையும் தரும் தன்னார்வலர்களுக்கு நீங்கள் தரும் சன்மானம் இதுவே.--மணியன் 05:49, 30 சனவரி 2011 (UTC)

-- வேறு சில பயனர்களும் கண்டிருந்தால் பாலியல் கட்டுரைகளை நான் எழுதியமைக்கு கிடைத்து போல பல வசைகள் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி நிகழாமலே போனதே பெரியவிஷயம். ஒரு :-) இணைத்திருந்தால் அதை அவர் புரிந்திருப்பார்.

இருந்தும் நீங்களும், சோடாபாட்டில் அவர்களும் தொடர்ந்து எனக்கு உதவுவது மகிழ்வையே தருகிறது.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

TUSC token b69ad5875eb1339a0334c765862605a7[தொகு]

I am now proud owner of a TUSC account! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 18:50, 10 பெப்ரவரி 2011 (UTC)

அவசியமற்றது[தொகு]

அடையாளம் காட்டாமல் பங்களிக்கும் அனைத்து நபர்களுக்கும் விக்கிப்பீடியா அழைப்பு என்பது சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. ஏனெனில் அவர்களுள் சிலர் விசமிகளாகவும் இருக்கலாம். நீங்கள் தற்போது அழைப்பு விடுத்த நபர்களுள் ஒருவர் அவ்வாறு இருந்ததன் காரணமாகவே இதனைக் கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அழைப்பு விடுப்பதற்கு முன் அவரது பங்களிப்பினைப் பார்ப்பது நலம். தாங்கள் அழைப்பு விடுத்திருந்த நால்வருள் மூவர் நல்ல பங்களிப்பையே செய்துள்ளனர். தங்கள் முயற்சிக்கு நன்றி கார்த்தி. --சூர்ய பிரகாசு.ச.அ. 09:46, 21 பெப்ரவரி 2011 (UTC)

இனி‌ மேல் அவ்வாறே செய்யலாம் சூர்ய பிரகாசு! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 09:53, 21 பெப்ரவரி 2011 (UTC)
சூர்யா, விசமிகளுள் பலர் வேண்டுமென்று விசமத்தனம் செய்வதில்லை. விளையாட்டாகவும் ஏதோ ஆர்குட், ஃபேஸ்புக், வலைப்பதிவில் செய்வது போலவும் செய்வதுண்டு. ஆங்கில விக்கியில் இப்படி விசமத்தனத்துடன் ஆரம்பித்து பலர் பின்னர் நல்ல பங்களிப்பாளர்களாக ஆன கதையும் நடந்துள்ளது. எனவே ஒருவர் தொடர் விசமியாக இருந்தால் மட்டும் அவரை ஒதுக்குவோம், இல்லையெனில் முடிந்தவரை அரவணைத்துப் போவோம். மீண்டும் வந்து விசமம் செய்தால் தடுத்து விடுவோம். ஆகவே கார்த்தி, தொடர் விசமிகளை மட்டும் புறக்கணியுங்கள், ஓரிரு சின்னப்புளத்தனம் செய்தவர்களை தாராளமாக வரவேற்பு செய்யுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 10:06, 21 பெப்ரவரி 2011 (UTC)
புதுப்பயனர்களை விட ஒரிரு‌ தொகுப்புகளைச் செய்தவர்களை நான் வரவேற்பதன் காரணம் அவர்கள் சோதனை முயற்சிகளோடு மட்டும் நின்று விடாமல் பதிவு செய்து நல்ல பயனுள்ள பங்களிப்புகளைத் தரவேண்டும் என்பதே! அவர்கள் நல்ல பங்களிப்பார்களாக மாறினால் தமிழுக்கு நலம். விசமியாக மாறினால் டரியலாகி விடுவார்கள். விசமிகளுக்குத் தான் இருக்கவே இருக்கிறது தடைப்பதிகை! கடைவிரித்தோம். கொள்வோர் கொள்ளட்டும்! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 10:11, 21 பெப்ரவரி 2011 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம்[தொகு]

கார்த்தி,

முதற்பக்க விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் இடம்பெறும் பொருட்டு தங்கள் புகைப்படம் மற்றும் விக்கிப்பீடியா பங்களிப்புகளை முக்கியப்படுத்தி அதற்கான குறிப்புகளை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பெ. கார்த்திகேயன் பக்கத்தில் தர வேண்டிக் கொள்கிறேன். (பிற பயனர் குறிப்புகளின் மாதிரிகளுக்கு விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பாருங்கள்)--சோடாபாட்டில்உரையாடுக 04:07, 10 மார்ச் 2011 (UTC)

தங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி பாலா! தமிழ் விக்கிப்பீடியாவில் நான் எழுத நினைத்ததை (உயிர்வேதியியல்) இன்னும் எழுதவே இல்லை. குறைந்தது ஆயிரம் கட்டுரைகளாவது எழுதி முடித்த பின்னர் தான் பங்களிப்பாளர் அறிமுகத்தில் என்னைக் குறித்த தகவல்கள் இடம் பெற வேண்டுமென நினைக்கிறேன்.--பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 04:20, 10 மார்ச் 2011 (UTC)
சொக்கா ஒன்னா ரெண்டா ஆயிரமாச்சே :-)--சோடாபாட்டில்உரையாடுக 05:49, 10 மார்ச் 2011 (UTC)
  • கார்த்தி, சோடாபாட்டிலின் கருத்தை நானும் ஆதரிக்கின்றேன். தங்கள் அறிமுகம் கட்டாயம் தேவை--P.M.Puniyameen 08:30, 10 மார்ச் 2011 (UTC)
  • இங்கு எண்ணிக்கை முக்கியமில்லை... தங்களின் தொடர் பங்களிப்பும் விக்கியின் மேல் உள்ள பற்றுதலும்தான் தேவை. எனவே விக்கிப்பீடியர் அறிமுகத்தில் இடம் பெறத் தயக்கம் வேண்டாம். ஆயிரம் கட்டுரைகள் வந்தவுடன் ஆயிரம் கட்டுரைக்கான சான்று உங்களுக்கு உண்டு.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:18, 10 மார்ச் 2011 (UTC)

வேண்டுகோள்[தொகு]

நிர்வாகிகள் யாரேனும் அருள்கூர்ந்து படிமம்:Cori & Alanine Cycle (2).svg ஐ நீக்கி விடவும். --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 03:17, 11 மார்ச் 2011 (UTC)

பதக்கம்[தொகு]

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
உங்களுக்குத் தெரியுமா? - பகுதியில் தொடர் பங்களிப்பு அளித்துவரும் உங்களுக்கு இந்தச் சிறப்புப் பதக்கம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் கார்த்தி... சூர்ய பிரகாசு.ச.அ. 10:07, 21 மார்ச் 2011 (UTC)
நன்றி சூர்யா! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 09:30, 24 மார்ச் 2011 (UTC)

யெகோவாவின் சாட்சிகள்[தொகு]

இது இன்னும் முடிவடையாமல் உள்ளதே. சற்று கவனிக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:29, 29 மார்ச் 2011 (UTC)

பக்க இணைப்பு குறித்து[தொகு]

நான் பக்க இணைப்பு கொடுப்பது குறித்த உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே. பெரும்பாலும் நான் பக்க இணைப்பு கொடுக்கும்போது அதற்கான கட்டுரை வேறு ஏதேனும் பெயரில் இருக்கிறதா என பாரத்துவிட்டு கொடுப்பதுதான் வழக்கம், சில சமயங்களில் சரியாக கவனிக்காமல் விட்டுவிடுகிறேன். அவ்வப்போது இதுபோன்ற சிறுசிறு பாராட்டுதல்களையும், பிழை சுட்டிகாட்டலையும் எல்லா விக்கிபீடியர்களுக்கும் குறிப்பாக புதிய விக்கிபீடியர்களுக்கு நீங்கள்(எல்லோரும்) தொடரந்து வழங்கவேண்டும், அது தமிழ் விக்கிபீடியாவை மேலும் பல உயரங்களை அனாயசமாக எட்ட உதவும். மிக்க மகிழச்சி மிக்க நன்றி ;) கி. கார்த்திகேயன்.

புரிந்துணர்வுக்கு நன்றி! ---மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:19, 20 ஏப்ரல் 2011 (UTC)

192.248.92.4[தொகு]

இவர் ஒரே ஆள் அல்ல. இலங்கையில் ஏதோ ஒரு கல்லூரியின் ஐபி இது [1]. மாணவர்கள் நான்காண்டுகளாக சோதனை செய்து வருகிறார்கள் :-)--சோடாபாட்டில்உரையாடுக 06:59, 25 ஏப்ரல் 2011 (UTC)

உரிய நேரத்தில் குறித்த தகவலைத் தந்தமைக்கு நன்றி பாலா! ‌--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:02, 25 ஏப்ரல் 2011 (UTC)

விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்[தொகு]

விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள் அட்டவணையாகவோ, பட்டியலாகவோ தகவல்களைத் தொகுக்கலாம். பட்டியலாகத் தகவல்களைத் தொகுப்பது இலகுவாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் கட்டுரைகள் உருவாக்கத்தில் நேர்த்தி இருக்கும். பின்னர் இந்த தகவல்களைத் தொகுத்து ஒரு தரவுத்தளம் உருவாக்கலாம். அது பின்னர் பல வழிகளில் பயன்படுத்தப்படலாம். மேலும் உங்கள் கருத்துக்களைக் அறிந்து. --Natkeeran 21:10, 12 சூன் 2011 (UTC)

நன்றிகள்[தொகு]

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:04, 17 சூன் 2011 (UTC)

ஆலோசனை தேவை[தொகு]

கேடயச் சுரப்பி, தைராய்டு சுரப்பி என்பவற்றை ஒன்றிணைப்பதில் உள்ளடக்கத்தை சீர் செய்வதில் உங்கள் ஆசோசனை தேவை.--சஞ்சீவி சிவகுமார் 04:01, 17 சூன் 2011 (UTC)

முன்பொரு முறையே தங்களுடனான உரையாடலின் போது இது குறித்து தாங்கள் கூறியிருந்தீர்கள். நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி! தைராய்டு சுரப்பி கட்டுரை காலத்தால் பிந்தியதும் அடையாளம் தெரியாத பயனர் ஒருவரால் உருவாக்கப்பட்டதுமாதலால் அதை கேடயச் சுரப்பி கட்டுரையுடன் இணைத்து வழிமாற்று ஒன்றை உருவாக்கி இருக்கின்றேன். தங்கள் நிருவாகப் பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்! நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 08:48, 17 சூன் 2011 (UTC)


பகுப்பு[தொகு]

கார்த்தி,

ஏற்கனவே - [[பகுப்பு:நோபல் பரிசு பெற்றவர்கள்]] உள்ளது. ஏதாவது ஒன்றில் அனைத்தையும் சேர்த்துவிட்டு, மற்றதில் நீக்கு வார்ப்புருவை இட்டு விடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 10:58, 22 சூன் 2011 (UTC)

நிர்வாக அணுக்கம் - நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:43, 28 சூன் 2011 (UTC)

இதய நோய் - மாரடைப்பு விளக்கம்[தொகு]

இதய நோய், மாரடைப்பு இரண்டும் ஒன்றா? இதயநோய் கட்டுரை மாரடைப்பு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனக்கு இரண்டு தலைப்புகளும் தனித்தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.இங்கு இடம் பெற்றுள்ள இதய நோய் குறித்த கட்டுரையில் முழுமையான தகவலில்லை. இருப்பினும் இதய நோய் குறித்த கட்டுரை விரிவாக்கப்படலாம். இது குறித்த தங்கள் விளக்கம் அறிந்து ஒன்றிணைக்கலாம் அல்லது தனித் தனிக் கட்டுரைகளாக்க வேண்டும். பதிலளித்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:20, 8 சூலை 2011 (UTC)

மாரடைப்பு ஓர் இதயநோய். மாரடைப்பு மட்டுமே இதயநோயன்று. எனவே இரண்டும் தனித்தனி கட்டுரைகளாக இருப்பதே நல்லது. ஆனால் இதய நோய் கட்டுரையின் உள்ளடக்கத்தை ஆங்கில விக்கியில் உள்ளது போல முழுவதும் மாற்ற வேண்டி உள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 03:07, 9 சூலை 2011 (UTC)

விரைந்து நீக்கப்பட வேண்டிய கட்டுரை[தொகு]

இத்தகைய கட்டுரைகளில் நீங்கள் பகுப்பினை இடுவதற்கு மாற்றாக கட்டுரையின் துவக்கத்தில் {{delete|சோதனை முயற்சி}} என வார்ப்புரு இடுவது விரும்பத்தக்கது. இது சூர்யாவின் தொடுப்பிணைப்பி கொண்டும் செய்யலாம். --மணியன் 06:25, 9 சூலை 2011 (UTC)

நான் மாடர்ன் தோலைப் பயன்படுத்துகிறேன். transliteration tool வந்து தொல்லை கொடுப்பதால் தொடுப்பிணைப்பி, விக்கியன்பு என எதையும் பயன்படுத்த முடிவதில்லை. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:30, 9 சூலை 2011 (UTC)

கட்டுரையைச் சரிபார்க்கும் மேலதிக மேற்கோள்கள் எப்படி சேர்ப்பது?[தொகு]

சில கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. இவற்றை எப்படி இணைப்பது. மேலும் பயனர் பக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று கூறுங்கள். நன்றி! --பயனர்:Krishnaprasaths 22:05, 9 சூலை 2011

மேற்கோள்களைச் சேர்ப்பது மிக எளிது. கருவிப்பட்டையில் இடமிருந்து வலமாக ஐந்தாவது பொத்தானாக உள்ள இணைப்பைச் சொடுக்குங்கள். நீங்கள் காட்ட விரும்பும் மேற்கோள் வலைத்தளத்தின் முகவரியை மேலேயும் காட்ட வேண்‌டிய தொடரையும் கீழேயும் தந்தால் இணைப்பு உருவாகிவிடும். இந்த இணைப்பை <ref> </ref> இரண்டுக்கும் நடுவில் இட்டால் அது மேற்கோள் இணைப்பாகி விடும்.

கட்டுரையின் கடைசியில் மறக்காமல், ==மேற்கோள்கள்== {{Reflist}} என்பதை மட்டும் சேர்த்து விடுங்கள். மணற்தொட்டியில் பயிற்சி செய்து பாருங்கள்.

உங்கள் பயனர் பக்கம் விக்கிப்பீடியா விதிகட்குட்பட்டு எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம். உங்கள் விருப்பமே! நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 03:50, 11 சூலை 2011 (UTC)


இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் Karthi.dr,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

வார்ப்புரு[தொகு]

இப்பயனர் மருத்துவர் என்னும் வார்ப்புருவில் ஒரு படமுள்ளதே அது என்ன? அது மருத்துவ குறியீடு என்றால் ஏன் அவ்வாறு இருக்கிறது?--தென்காசி சுப்பிரமணியன் 16:04, 8 ஆகத்து 2011 (UTC)

பார்க்க - அஸ்லெப்பியசின் தடி --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 16:29, 8 ஆகத்து 2011 (UTC)