பயனர் பேச்சு:Kalaiarasy/போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கட்டுரைப் போட்டி கட்டுரைகள்[தொகு]

கலை, கட்டுரைப் போட்டி கட்டுரைகளை பதிவேற்றம் செய்து வருகிறேன். முதற்கட்டமாக நான் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் பதிவேற்றி விட்டேன். மீதமுள்ள கட்டுரைகள் உங்களிடம் கிடைக்கும் (மற்ற விவரங்களுடன்) என்று ரவி சொல்லியிருந்தார். அக்கட்டுரைகளுக்கு எனக்கு access அளிக்க வேண்டுகிறேன். --சோடாபாட்டில் 10:36, 5 செப்டெம்பர் 2010 (UTC)

வணக்கம்!

என்னிடமிருந்த அனைத்துக் கட்டுரைகளையும் நக்கீரன், சிறீதரன், மயூரனாதன், சுந்தர், செல்வா, பெரியண்ணன், ரவி ஆகியோருக்கு Dropbox மூலமாக அனுப்பி வைத்திருந்தேன். அவர்களில் இரவி, நக்கீரன், மயூரனாதன் ஆகியோர் அவற்றை ஏற்றுக் கொண்டதாக மடல் கிடைக்கப்பெற்றேன். எனவே இவர்கள் மூவரிடமும் அந்த கோப்புக்கள் யாவும் இருக்கும். இரவி எவற்றை 'மற்ற விபரங்கள்' என்று கூறியிருக்கிறார் என்பது சரியாகப் புரியவில்லை. உங்களிடம் Dropbox இருந்தால் உங்களுடனும் அங்கே அந்த கோப்புக்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடியும். ஆனால் அப்படி பகிர்ந்து கொள்வதற்கு, என்னிடம் உங்களது மின்னஞ்சல் முகவரி இல்லை. இங்கே கட்டுரைப்போட்டி கட்டுரைகளைப் பதிவேற்றும் பணியில் இரவி, நக்கீரன் இருவரும் இருப்பதால், உங்கள் மின்னஞ்சல் முகவரி இரவியிடமோ, நக்கீரனிடமோ இருந்தால், அவர்களே நேரடியாக அந்தக் கோப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும். மேலும் அவர்கள் ஏற்கனவே அந்தப் பணியில் ஈடுபட்டிருப்பதால் தேவையான கட்டுரைகளை மட்டும்கூட உங்களுடன் பகிர்ந்து கொள்வது, பணியைத் தொடர இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகள் எவை, அடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டியவை எவை என்ற விபரங்கள் அவர்களுக்கே தெரியும் என்பதால் அது பணியை இலகுவாக்குவதுடன், நேரத்தையும் மீதப்படுத்தும்.
இந்த விபரங்களை இரவி, நக்கீரன் இருவரினதும் பேச்சுப் பக்கத்தில் அவர்களுக்கும் அறிவித்து விடுகிறேன். அவர்கள் முடிவைப் பொறுத்து, நான்தான் அவற்றை அனுப்ப வேண்டும் என்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தந்தீர்கள் என்றால் நான் Dropbox அழைப்பை அனுப்பி உங்களுடன் அந்த கோப்புக்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதில் சிரமம் எதுவுமில்லை. நன்றி.--கலை 21:39, 5 செப்டெம்பர் 2010 (UTC)

நன்றி கலை. நான் ரவியிடம் dropbox அழைப்பை பெற்றுக் கொள்கிறேன். அவருக்கு என் அஞ்சல் முகவரி தெரியும். ”மற்ற விவரங்கள்” என்று நான் சொன்னது - குறியீட்டு எண், கட்டுரையாளர் பெயர், கல்லூரி போன்ற விவரங்களை. தற்போது பேச்சு பக்கத்தில் ஒரு வார்ப்புரு இட்டு அதில் இந்த விவரங்களை குறித்து வருகிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுரைகள் இந்த பகுப்பில் இருக்கின்றன.--சோடாபாட்டில் 03:33, 6 செப்டெம்பர் 2010 (UTC)
நன்றி. குறியீட்டு எண், கட்டுரையாளர் பெயர், கல்லூரி போன்ற விபரங்கள் இரவியிடம் உள்ளது. எனவே அவரே அதனையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்.--கலை 08:26, 6 செப்டெம்பர் 2010 (UTC)
Hi, Kalai, sodabottle has been responsible a responsible user. Please share the articles with him. --Natkeeran 23:14, 6 செப்டெம்பர் 2010 (UTC)
நற்கீரன், ரவி எனக்கு dropbox access தருகிறேன் என்று சொல்லியுள்ளார்--சோடாபாட்டில் 04:09, 7 செப்டெம்பர் 2010 (UTC)
Natkeeran, I think you have misunderstood :(. The main reason for that I couldn't share the files with Sodabottle is I don't have his email address (and I mentioned this in my message too). And then he said Ravi has his email address and can share the files with him. All the other details Sodabottle asked for are also not with me, but with Ravi. So, he will share them with Sodabottle.--கலை 07:50, 7 செப்டெம்பர் 2010 (UTC)

விக்கி ஊடகப்போட்டி[தொகு]

ஒருங்கிணைப்பாளர்[தொகு]

போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உங்களையும் முன்மொழிந்துள்ளேன். மொத்தம் ஐந்து பேர் உள்ளோம் (நற்கீரன், நான், நீங்கள், சஞ்சீவி சிவக்குமார், ஸ்ரீகாந்த்)

ஒருங்கிணைப்பாளர்களின் பணிகள் - 1) பரப்புரை செய்தல் 2) போட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல் + வழிகாட்டுதல் (மின்னஞ்சல் + சமூக வலை) 3) போட்டிப் பக்கம் பராமரிப்பு 4) நடுவர் பணி (மதிப்பீடு மற்றும் பதிப்புரிமை மீறல்களை கண்டுபிடித்தல்)

ஒருங்கிணைப்பாளர்களாவதால் வரும் தடைகள் 1)போட்டியில் நாமும் நமது நெருங்கிய உறவினர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் நமது ஆக்கங்கள் பரிசுகள் தேர்வுக்காக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.

தங்களுக்கு இது ஏற்பில்லையெனில் தங்கள் பெயரினை நீக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:15, 7 அக்டோபர் 2011 (UTC)

நல்கை விண்ணப்ப வரைவு[தொகு]

போட்டித் திட்டத்துக்கான விதிகள் மேல்நிலை அளவில் உறுதியாகிவிட்ட நிலையில் அக்டோபர் 11ம் தேதி நல்கை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என நினைக்கிறேன். வரைவு விண்ணபத்தைப் பரிசீலித்து திருத்தங்கள் ஏதும் இருப்பின் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:28, 9 அக்டோபர் 2011 (UTC)

புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகள் என்பதில் 'நோர்வே' என்பதை 'ஐரோப்பா' என மாற்றியுள்ளேன்.--கலை 11:51, 9 அக்டோபர் 2011 (UTC)
விண்ணப்பம் செய்தாயிற்று- Meta:Grants:Tamil Wikimedians/TamilWiki Media Contest--சோடாபாட்டில்உரையாடுக 06:53, 11 அக்டோபர் 2011 (UTC)

தொடர் பங்களிப்பாளர் போட்டி[தொகு]

வேண்டுகோள்[தொகு]

தங்களால் தொடர்பங்களிப்பாளர் போட்டியின் நடுவராக செயற்பட முடியுமா? விரும்பின் தாராளமாகத் தெரிவிக்கவும். பங்குபற்றுவதுடன் நடுவராகவும் செயலாற்றலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:53, 11 மார்ச் 2017 (UTC)

தற்போது இதுபற்றி கூற முடியாமல் உள்ளது. காரணம் நேரக் குறைபாடு. ஆனால் நடுவராக என்னவிதமான பணியைச் செய்யவேண்டும் என்பது தெரிந்தால் என்னால் நேரம் ஒதுக்க முடியுமா என்று பார்க்கிறேன். நன்றி.
இங்கு போட்டிக்காலத்தில் Judge என்பதை அழுத்தும் போது பயனர்கள் சமர்ப்பித்த கட்டுரைகள் வரும். தாங்கள் அக்கட்டுரைகளின் வரலாற்றில் சென்று குறித்த கட்டுரை எப்போது, யாரால், எவ்வளவு விரிவாக்கப்பட்டது எனப் பார்த்து விதிகளுக்கு அமைய இருப்பின் அங்கு Yes என இருக்கும் பொத்தானையும் இல்லையெனில் No எனும் பொத்தானையும் அழுத்தலாம். இது மிகவும் இலகுவானது. மேலும் போட்டிக்காலத்தில் விரும்பின் தீக்குறும்புகளையும் தடுத்து உதவலாம். எனினும் தாங்கள் ஓர் பெண் பயனர் என்பதால் தங்களுக்கு முன்னுரிமை அளித்து நடுவராக ஆக்குவதற்கு சிறியேன் யான் விரும்புகின்றேன். தங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:04, 11 மார்ச் 2017 (UTC)
நன்றி ஸ்ரீஹீரன்! இலகுவானதாக இருப்பின் நடுவர் பணியை ஏற்கலாம்தான். ஆனாலும் செய்கின்றேன் என்று கூறிவிட்டு, பின்னர் நேரக் குறைபாட்டால் செய்ய முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது என்றுதான் யோசிக்கிறேன். மேலும் போட்டிக் காலத்தில் சிலவேளை எனக்குச் சில பயணங்கள் செய்ய வேண்டியும் ஏற்படலாம். அவ்வாறாயின் என்னால் சரியான முறையில் பங்களிக்க முடியாமல் போகலாம். அதுதான் யோசனை.--கலை (பேச்சு) 22:33, 11 மார்ச் 2017 (UTC)
யோசனை வேண்டாம்.போட்டியின் நடுவர் வேலையில் யான் அதிகமாகக் கவனம் செலுத்துவேன் என்பதனால் தாங்கள் அதற்கு உதவியாக இருந்தால் மட்டும் போதும். தங்கள் நேரத்தை செலவிடுவதற்கு அங்கு அதிக சந்தர்ப்பம் இருக்காது என எண்ணுவதனால் தங்களையும் நடுவர் குழுவில் இணைக்கின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:32, 12 மார்ச் 2017 (UTC)
நன்றி ஸ்ரீஹீரன். என்னால் முடிந்தளவுக்கு உதவி செய்கின்றேன்.--கலை (பேச்சு) 12:45, 12 மார்ச் 2017 (UTC)
அப்படியே ஆகட்டும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:47, 12 மார்ச் 2017 (UTC)

நடுவர் பணிகள்[தொகு]

தொடர்பங்களிப்பாளர் போட்டியின் நடுவராக தாங்கள் செய்ய வேண்டியவை பற்றி...

நிச்சயம் செய்யவேண்டியவை
 • இங்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சென்று Judge பொத்தானை அழுத்தி நடுவர்ப்பணியை மேற்கொள்ளல்.
 • அங்கு, குறிந்த பயனர் தானா விரிவாக்கியுள்ளார் என்பதை 'வரலாற்றைக் காட்டவும்' பக்கத்திற்கு சென்று பார்த்தல்.
 • அவரால் குறித்த கட்டுரையில் இடம்பெற்ற மாற்றங்களை கூர்ந்து அவதானித்தல்
 • அவரால் சமர்ப்பிக்கப் பட்ட கட்டுரை இப்பட்டியலில் உள்ளதா எனவும், விதிகளுக்கு உட்படுகின்றதா எனவும் பரிசீலினை செய்தல்
 • விரிவாக்கப்பட்ட கட்டுரை போட்டிக்கு ஏற்புடையதாயின் இப்பட்டியலில் இருந்து அக்குறித்த கட்டுரையை நீக்குதல் அல்லது வெட்டுதல்'
செய்யக்கூடியவை
 • போட்டியாளர்களுக்கு ஆலோசனைகளை அவர்கள் கேட்காமலேயே வழங்குதல்

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:34, 9 ஏப்ரல் 2017 (UTC)


என்னால் இயன்றளவுக்கு இதில் உதவுகின்றேன் ஸ்ரீஹீரன். சில விடயங்களை தெளிவாக்கிக்கொள்ளச் சில கேள்விகள்.
 • Judge என்ற பொத்தானைக் காணவில்லையே.
 • ஒருவர் போட்டியில் பங்குபற்ற விரும்பினாராயின், அவர் போட்டி ஆரம்பிக்கும் நாளுக்கு முன்னரே 50 தொகுப்புக்களாவது செய்திருக்க வேண்டும். சரிதானே. போட்டிக்குப் பதிவு செய்திருக்கும் நபர்களில் சிலர் 50 தொகுப்புக்களைச் செய்யாதவர்களும் அடங்குகின்றனர். அதனால்தான் கேட்கிறேன். ஒருவேளை போட்டிக்கு முன்னரான கால இடைவெளியில் அவர்கள் அதனை நிறைவேற்றக் கூடும். இருந்தாலும், போட்டி அண்மிக்கையில், அதிபற்றி ஒரு குறிப்பை அவர்களது பக்கத்தில் இடலாமோ?
 • ஒருவர் கட்டுரையை விரிவாக்கும்போது, அந்தக் கட்டுரை 26000 பைட்டைக் கடந்தும், குறிப்பிட்ட பயனரால் 6000 பைட்டுக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டும் இருந்தால் மட்டுமே இங்கும், இங்கும் இற்றைப்படுத்தப்படும். சரிதானா?
 • இங்கு குறிப்பிட்ட பயனரே இற்றை செய்யவாரா? விதிகளில் "விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்." என்று இருக்கிறதே?
 • விதிகளில் "நீங்கள் கட்டுரைகளை விரிவாக்கும் போதும் வெளி இணைப்புகள், மேலதிக வாசிப்பிற்கு, உசாத்துணைகள், நூற்பட்டியல் ஆகிய பகுதிகளை தவிர்த்து உரைகளின் பைட்டு அளவு மட்டுமே கணக்கிடப்படும்." என்றுள்ளது. இதனை எவ்வாறு கணக்கிடுவது என்று எனக்குத் தெரியவில்லையே. வரலாற்றில் பார்க்கையில், ஒரு குறிப்பிட்ட தொகுப்பில் கட்டுரை விரிவாக்கத்துடன், மேற்கோளிணைப்பும் சேர்ந்து வருகையில், அதில் எப்படி பைட் அளவைப் பிரித்தறிவது?
 • ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே கட்டுரையை விரிவாக்கம் செய்வதை முடிந்தளவு தவிர்ப்பதாயின், ஒருவரால் விரிவாக்கம் ஆரம்பிக்கப்பட்டதைக் குறித்து அந்தக் கட்டுரையில் ஏதாவது வார்ப்புரு இடப்படுமா? "இந்தப் பயனரால், இந்தப் போட்டிக்காக இந்தக் கட்டுரை விரிவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது" என்பதுபோல?
--கலை (பேச்சு) 11:02, 9 ஏப்ரல் 2017 (UTC)

இதோ தங்கள் கேள்விகள் ஒவ்வொன்றிற்குமான விளக்கங்கள்,

 • Judge பொத்தான் போட்டிக்காலத்திலும், போட்டி நிறைவுற்று சில நாட்களுக்கு மட்டுமே தோன்றும். இப்போது தோன்றாது.
 • ஆம், ஆனால் இதில் குறித்த பயனர் சிறப்பாகக் கட்டுரைகளை விரிவாக்கினாரே யானால், இறுக்கமாகக் கவனிக்க வேண்டியதில்லை.
 • ஆம், இங்கு கொடுக்கப்படவுள்ள ஆலோசனையின் கீழ் போட்டியாளர்கள் தமது கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இது பற்றி குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை
 • ஆம், இற்றை செய்யவேண்டியது குறித்த பயனரே.
 • இங்கு குறித்த போட்டியாளர்கள் அக்கட்டுரையில் செய்த மாற்றங்களைப் பாருங்கள், அம்மாற்றங்களில் உரைப்பகுதியைப் பொதுவாக அல்லது அதிகமாக தட்டச்சு செய்தால் கவலை இல்லை. ஆனால், மாறாக, வெளி இணைப்புக்கள், மேற்கோள்கள், உசாத்துணைகளை அளவுக்கதிகமாகக் கண்டுகொண்டால், அவர்களால் விரிவாக்கம் செய்யப்பட்ட உரைப்பகுதியை Copy செய்து உங்கள் மணல்தொட்டியில் Paste சேமியுங்கள். பின்னர், உங்கள் மணல்தொட்டியின் வரலாற்றைக்காட்டவும் பக்கத்தில் சென்று எத்தனை பைட்டுக்களை நீங்கள் சேர்த்திருக்கின்ரீர்களோ அதைத்தான் குறித்த கட்டுரையில் போட்டியாளரும் செய்துள்ளார். சரி தானே, இதனை விடவும், பைட்டு அளவை கணக்கிடுவதற்கான இவ்வாறான கருவிகளில் உரைப்பகுதியை Paste செய்து பாருங்கள்!
 • பொதுவாக பயனர்கள் தொகுக்கப்படுகிறது / வேலை நடந்துகொண்டிருக்கின்றது போன்ற வார்ப்புருக்களை இடுவது வழக்கம். ஆனால் இங்கு போட்டியே இடம்பெறுகிறது. ஆகையால் விதிகளில் தெளிவாக இருப்போம், "முற்பதிவு செய்திருப்பின் 26,000ஆவது பைட்டை சேர்ப்பவர் கணக்கில் அல்லாது முற்பதிவு செய்தவர் கணக்கில் சேர்க்கப்படும்". நீங்கள் அக்கட்டுரை யாரால் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பார்த்துவிட்டு Judge செய்யுங்கள்!

இப்போட்டியில் நடுவராகப் பணியாற்றுவதில் தங்கலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அழுத்தங்களைத் தவிர்த்துக்கொளவதற்கு உதவியாகவும், பக்கபலமாகவும், யான் போட்டிகாலம் முழுதும் கூட இருப்பேன். கவலையே வேண்டாம்! மேலும், தங்களும் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துகின்ரேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:50, 9 ஏப்ரல் 2017 (UTC)

Judge பொத்தான்?

ஸ்ரீஹீரன்! எனக்கு அந்த Judge பொத்தான் இன்னமும் தெரியவில்லையே. அதனால் எப்படி நடுவர்பணியைச் செய்வது என்று தெரியவில்லை. இன்னொரு விடயம், நீங்கள் எழுதும் கட்டுரைக்கு நீங்களே நடுவர்பணியை மேற்கொள்ளாமல், இன்னொருவரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தல் நல்லது எனத் தோன்றுகிறது. நீங்கள் செய்வது சரியாகவே இருந்தாலும், இன்னொருவரால் அது குறிப்பிடப்படுவது நல்லது எனத் தோன்றுகிறது. நன்றி. கலை

நீங்கள் நடுவர்பணி செய்வீர்கல் என எதிர்பார்த்தும் இல்லாததால் எனது கட்டுரையைஉ நானே இடவேண்டியதாயிற்று. உங்களின் கணக்கில் பல பிரச்சினைகள் இருப்பதை அறிவேன். உங்கள் கணக்கு மூலம் Judge செய்யாவிடினும் பரவாயில்லை. என்னுடையதை பின்னர் கவனிக்கலாம். நீங்களும் பங்குபற்றாம் தானே. அத்துடன் உரிய பயனர்கள் விட்டுள்ள பிழைகள், அவர்களுக்கான வழிகாட்டுதல்களைக் கொடுங்கள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:38, 1 மே 2017 (UTC)
ஸ்ரீஹீரன்! நான் ஒன்றைச் செய்வதாகக் கூறினால், அதனை எப்படியும் செய்யவே முயல்வேன். போட்டியில் பங்குபற்ற நேரம் கிடைக்குமோ என்று தெரியாததால்தான் அதில் பங்குபற்றவில்லை Face-smile.svg. தற்போது தொகுத்தல் பிரச்சனைகள் வேறு சேர்ந்துகொண்டது. என்னுடைய தொகுத்தல் பிரச்சனைகளுக்கும் Judge பொத்தானுக்கும் தொடர்பு இருக்குமா? இந்தப் பிரச்சனைகள் இருப்பதால் தொகுத்தலே சிக்கலாக உள்ளது Face-sad.svg.
அறிவியல்கட்டுரைகளை விரிவாக்கிப் பங்குபெறலாம் தானே, அத்துடன் தொகுத்தல் பிரச்சினைகள் இருப்பின் வேறு கணனிகள் மூலம் முயற்சித்தீர்களா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:06, 1 மே 2017 (UTC)
பங்குபெறாவிடினும், அருள்கூர்ந்து பயனர்கள் இங்கு சமர்ப்பித்த கட்டுரைகள் 26,000 / 27,000 பைட் என மட்டுமட்டாக இருப்பின் அவற்றை விரிவாக்கு 30,000 பைட் வரைக்கும் கொண்டுசென்று விடுங்கள். அபோதுதான் மேல்விக்கிப்பிஅட்டியலில் நம் விக்கி இலகுவில் உயரமுடியும். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09
43, 1 மே 2017 (UTC)
@Shriheeran: ஸ்ரீஹீரன்! சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை ஒரு நடுவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டால், அதில் மாற்றுக் கருத்தில்லையெனில், அடுத்த நடுவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிடுவது அவசியம்தானா? ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் போதாதா? ஏன் கேட்கிறேன் என்றால், மனித இரையகக் குடற்பாதை கட்டுரைக்கு நான் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட பின்னர், நீங்களும் போட்டுள்ளீர்கள். சிறுகோள் கட்டுரையில் நீங்கள் போட்டது ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால். ஆனால் ஒருவர் ஏற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்ட பின்னர், அதனையே இன்னொருவரும் குறிப்பிடுவது அவசியமில்லை என நினைக்கிறேன். நன்றி.--கலை (பேச்சு) 19:21, 3 மே 2017 (UTC)
சரி அப்படியே செய்வோம், யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டால் மற்றவர் எதுவும் இடாது தவிர்க்கலாம், இதனைப் பின்பற்றுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:29, 4 மே 2017 (UTC)

போட்டி[தொகு]

போட்டிக்கான கட்டுரைகளில், இணைக்கப்படாத சான்றுகளை இப்போதே இணைத்து விரிவாக்குவோமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:58, 10 ஏப்ரல் 2017 (UTC)

எல்லாக் கட்டுரைகளுக்கும் இதனை நாம் மட்டுமே செய்தல் சாத்தியமா தெரியவில்லை. ஆனால், பலரும் இணைந்தால் செய்யலாம். நான் ஏற்கனவே ஒரு கட்டுரையில் (நரம்புத் தொகுதி) இன்று இதனைச் செய்தேன். கவனித்தீர்களா தெரியவில்லை. இந்தக் கிழமை வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருப்பதால், விக்கியிலும் கொஞ்சம் பங்களிக்க முடியும் :) --கலை (பேச்சு) 10:06, 10 ஏப்ரல் 2017 (UTC)
ஆம், கவனித்தேன், அவ்வாறான தொகுப்புக்களைத் தான் செய்வோமா? பலர் இணைந்தால் போட்ட்டியின் உத்வேகம் குறைந்துவிடும். நாம் நடுவர்கள். அதன்படி, நீங்கள் கட்டுரைப்பட்டியலின் மேலிருந்து ஒவ்வொரு கட்டுரையாகக் க்வனித்து வாருங்கள். நான் கீழிருந்து வருகின்றேன். எம்மால் முடிந்த அளவு கட்டுரைகளை போட்டியின் முன்பதாகவே சான்றிணைத்து மேம்படுத்துவோம். எனக்கும் பாடசாலை விடுமுறைதான். இருவம் இணைந்து இன்றிலிருந்தே இவ்வேலையை ஆரம்பிக்க வேண்டுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:52, 10 ஏப்ரல் 2017 (UTC)
முடிந்தளவு செய்கிறேன். நான் அறிவியல் கட்டுரைகளில் ஆரம்பிக்கிறேன். அது எனக்கு ஓரளவு இலகுவாக இருக்கும். --கலை (பேச்சு) 11:00, 10 ஏப்ரல் 2017 (UTC)
மிக்க மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:09, 10 ஏப்ரல் 2017 (UTC)

பயனர்:Anishikunew[தொகு]

மீண்டும் முன்பதிவு கலை அவர்களுக்கு நான் தொகுத்த திரு தூதர பவுல் எனது வார்ருப்பு நீக்கப்பட்டது இப்பொது நான் மீண்டும் முன்பதிவு செய்முடியுமா?--Anishikunew (பேச்சு) 07:50, 30 சூன் 2017 (UTC)

Anishikunew! அந்தக் கட்டுரை 26000 பைட்டுக்களை நிறைவு செய்து, போட்டிக்காக உங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி முற்பதிவு தேவையில்லை. நீங்களோ, வேறு எவருமோ அந்தக் கட்டுரையை விரிவாக்கவோ அல்லது திருத்தவோ முடியும். எனவே நீங்கள் விரும்பினால் மேலும் விரிவாக்கலாம். --கலை (பேச்சு) 10:41, 30 சூன் 2017 (UTC)

ஆயிற்று > சரி[தொகு]

இங்கு உடனுக்குடன் வார்ப்புரு இடுவதர்கு நன்றி! ஆனாலும், ஆயிற்று என்பதை விட சரி எனும் வார்ர்புருவைப் பயன்படுதுதுங்கள். நம்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:55, 21 மே 2017 (UTC)

ஸ்ரீஹீரன்! தொகுப்புப் பெட்டியிலுள்ள சரி அடையாளத்தைத்தான் அழுத்துகிறேன். அது சரி அடையாளமிட்டு, ஆயிற்று என்றும் குறிப்பிடுகிறது.--கலை (பேச்சு) 16:46, 21 மே 2017 (UTC)

ஸ்ரீஹீரன்! இரு கேள்விகள்:
 • புரதம் கட்டுரை போட்டி ஆரம்பிக்க முன்னரே 27000 க்கு மேற்பட்ட பைட்டுக்களைக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதே? ஆனாலும், Thiyagu Ganesh 8000 பைட்டுக்களுக்கு மேல் விரிவாக்கம் செய்துள்ளதால் ஏற்றுக்கொள்ளலாம் என்றே தோன்றுகிறது.
 • கட்டுரைகள் சமர்ப்பிக்கும் பக்கத்தில் அன்புமுனுசாமி, மற்றும், TNSE P.RAMESH KPM ஆகியோரின் பெயர்களைக் காணவில்லையே? ஏன்?
--கலை (பேச்சு) 16:34, 22 மே 2017 (UTC)
ஏற்றுக்கொள்ளவேண்டும் எனத் தோன்றியது. அன்புமுனுசாமி, மற்றும், TNSE P.RAMESH KPM ஆகிய இருவரும் சமர்ப்பித்த கட்டுரைகளைப் போட்டியிலிருந்து விலக்குமாறு கருவி உரிமையாளரிடம் கேட்டேன், அவரே விலக்கிவிட்டார். ஆகையால்த்தான். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:37, 22 மே 2017 (UTC)

திருத்தம்[தொகு]

தொடர் பங்களிப்பாளர் போட்டியில் விரிவாக்க வேண்டிய கட்டுரைகளில் அறிவியல் பகுதியில் பூனை கட்டுரை 79,82 ஆகிய இரு இடங்களில் இடம்பெற்றுள்ளது. - ஹிபாயத்துல்லா

அறியத் தந்தமைக்கு நன்றி ஹிபாயத்துல்லா! நீங்களும் ஒரு விக்கிப் பயனரே. எனவே நீங்களேகூட அதனை நீக்கலாம். Face-smile.svg. --கலை (பேச்சு) 18:14, 26 மே 2017 (UTC)

கலை அவர்களுக்கு நான் விரிவாக்கிய புறாஎன்ற கட்டுரை ஸ்ரீஹீரன அவர்களுக்கு தாங்கள் முற்பதிவு செய்துள்ளீர்கள் ஹிபாயத்துல்லா

ஸ்ரீஹீரன மற்றும் கலை அவர்களுக்கு நடத்தை கட்டுரையினை திருத்தம் செய்துவிட்டேன்.நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் நீக்கிவிடவும் நன்றி TNSE P.RAMESH KPM 08.15, 28 மே 2017

கலை அவர்களுக்கு நான் விரிவாக்கிய பாலூட்டி என்ற கட்டுரை தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான பட்டியலில் இருக்கிறது. அறிவியல் உட்பிரிவில் 79 ஆவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. கவனிக்கவும் நன்றி--- ThIyAGU 19:44, 30 மே 2017 (UTC)

ஆம். இருக்கிறது. தேடியபோது காட்டவில்லை. ஏனென்று தெரியவில்லை. மன்னியுங்கள்.--கலை (பேச்சு) 19:48, 30 மே 2017 (UTC)

மதிப்பிற்குரிய கலை அவர்களுக்கு, நாகரிகம் என்னும் கட்டுரை என்னால் விரிவாக்கம் செய்யப்பட்டு போட்டிக்கும் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.இந்நிலையில் வேறு ஒருவர் இக்கட்டுரையினை விரிவுபடுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தகவல் தரவும்.நன்றி!மணி.கணேசன்

மணி.கணேசன்! அறியத் தந்தமைக்கு நன்றி. தவறுதலாகச் சேர்க்கப்பட்டுவிட்டது. மாற்றியுள்ளேன்.--கலை (பேச்சு) 08:14, 1 சூன் 2017 (UTC)

பயனர்:TNSE P.RAMESH KPM[தொகு]

கலை அவர்களே நடத்தை கட்டுரையினை தாங்கள் குறிப்பிட்டது போல் மீண்டும் மாற்றம் செய்து உள்ளேன் . அதை தங்கள் பார்த்தீர்களா என்று தெரிய வில்லை.ஆனால் அதற்குள் ஸ்ரீஹீரன் அவர்கள் அந்த கட்டுரையை ஏற்க மறுத்துள்ளார் . ஏனென்று தெரியவில்லை . என்ன குறை கண்டார் கட்டுரையை முழுவது மாக படித்தாரா என்று தெரியவில்லை . விக்கியில் கட்டுரை எழுத நான் புதியவன் எனக்கு வேண்டியது வழிகாட்டல் தான் . போட்டியில வெற்றி பெறுவதற்காகவோ அல்லது தங்கள் வழங்குகின்ற பதக்கங்களை பெறுவதெற்கவோ கட்டுரை எழுத முனையவில்லை . ஸ்ரீ ஹீரன் அவர்களே புதியவர்களை முதலில் அங்கீகாரம் செய்து பிறகு குறைகளை சுட்டி காட்டி சரிசெய்யுங்கள் . எடுத்த எடுப்பிலே அவர்கள் எழுத முனையும் கட்டுரைகளை நீங்குவது என்பது,அவர்கள் தொடர்ந்து கட்டுரை எழுத ஆர்வம் இல்லாமல் போகலாம் நன்றி ..நன்றி .. நன்றி TNSE P.RAMESH KPM 9.27 3 சூன் 2017 (UTC)

வணக்கம் ரமேஷ்! நீங்கள் எனது பக்கத்தில் வந்து பார்ப்பீர்களா என்பது தெரியாமையால், உங்கள் பக்கத்திலேயே பதில் இட்டிருக்கிறேன். பாருங்கள். நன்றி. --கலை (பேச்சு) 00:16, 4 சூன் 2017 (UTC)
கலை அவர்களுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் பொறுமையாக  என்னுடைய  சந்தேகங்களுக்கு விடையளித்து . என்னை போன்றோருக்கு நல்ல வழிகாட்டியாகவும் உற்சாகப்படுத்தி திறம்பட செயல்படுகிறீர்கள் . நடத்தை கட்டுரையை என்னால் முடிந்தவரை சரி செய்துவிட்டேன் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 12:26, 4 சூன் 2017 (UTC)

கலை அவர்களே என்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக்கவும் . இனிமேல் மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபடமாட்டேன் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 13:09, 7 சூன் 2017 (UTC)

கலை அவர்களே,தங்களின் வழிகாட்டலின் படி நல்ல தரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் . நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 08:01, 8 சூன் 2017 (UTC)

கலை அவர்களே , கோணம் தற்பொழுது கட்டுரை 6000 பைட்டுகள் சேர்க்கப்பட்டு உள்ளன . நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 15:03, 11 சூன் 2017 (UTC)

கலை அவர்களே , கோணம் கட்டுரையை விக்கி நடைக்கு திருத்தம் செய்து உள்ளேன். நன்றி --TNSE P.RAMESH KPM (பேச்சு) 14:26, 13 சூன் 2017 (UTC)

கலை அவர்களே , கோணம் கட்டுரையில் பதிப்புரிமை மீறல் உள்ள பகுதியை நீக்கி சரி செய்து உள்ளேன். நன்றி--TNSE P.RAMESH KPM (பேச்சு) 12:55, 12 சூன் 2017 (UTC)

நன்றி, கலை அவர்களே தாங்கள் குறிப்பிட்டபடி முற்றுப்புள்ளி , கமா, ஆகியவற்றுக்கு இடையில் இடைவெளி விட்டு எழுதுகிறேன் . --TNSE P.RAMESH KPM (பேச்சு) 03:16, 14 சூன் 2017 (UTC)

காரைக்கால் ஏன் ஏற்றுக்கொள்ளப்படாது[தொகு]

தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக கடினப்பட்டு விரிவாக்கிய எனது ஊரான காரைக்கால் பற்றிய கட்டுரையை நடுவர் பயனர்:ஸ்ரீஹீரன் காரணம் கூறாமல் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இதற்கு காரணம் மற்றும் கடினப்பட்டு விரிவாக்கிய கட்டுரைக்கு மதிப்பென்னும் வழங்கவும்.--wiki tamil 100 (பேச்சு) 07:09, 6 சூன் 2017 (UTC)

எனது பேச்சுப்பக்கத்தில் பதில் அளித்தாயிற்று--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:49, 6 சூன் 2017 (UTC)

சிறுகோள்[தொகு]

இக்கட்டுரை 26,000 பைட்டத் தாண்ட வில்லை, பார்க்க நாமும் சேர்ந்து அக்கட்டுரையை விரிவாக்கு உதவுவோம், நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:30, 2 மே 2017 (UTC)

தவறு என்னுடையதுதான். 6000 பட்டிக்கு மேல் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்த்துவிட்டு, எனது பக்கம் வேலை செய்கிறதா என்பதைப் பார்க்கும் அவசரத்தில் செய்துவிட்டேன். இனிமேல் கவனமாக இருப்பேன். அறியத் தந்தமைக்கு நன்றி. கலை
பரவாயில்லை அக்கட்டுரையை விரிவாக்குங்களேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:56, 2 மே 2017 (UTC)
இப்பொழுதுதான் வேலைவிட்டு வந்திருக்கிறேன். வீட்டில் செய்ய வேண்டிய பல வேலைகளும் உள்ளன. தவிர இந்தத் தொகுத்தல் பிரச்சனை வேறு தீரவில்லை. அதனால், இப்போ உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் எப்படியும் செய்து முடிப்பேன்.கலை
மிக்க மகிழ்ச்சி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:07, 2 மே 2017 (UTC)
நான் செய்த தவற்றை நான்தானே திருத்த வேண்டும். :) கலை

தவறைத் திருத்தல்[தொகு]

என் பேச்சுப்பக்கத்தில் கேட்டதற்கான பதில். அங்கே நீஇங்கள் தவறாகக் குறித்த கட்டுரையை Judge செய்ய, Judge பொத்தானை சொடுக்கி மேலே தோன்றும் > எனும் குறியை சொடுக்கினால் அது அனைத்துக் கட்டுரைகளையும் காட்டும். அதில் தவறாக Judge செய்த கட்டுரையைத் தேடித் தெரிவுசெய்து பின் No என்பதை சொடுக்கி சேமியுங்கள். அவ்வளவு தான்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:51, 9 மே 2017 (UTC)

மூச்சுத் தொகுதி[தொகு]

இக்கட்டுரையின் அளவு 9181.8, விரிவாக்கி அருள முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:28, 13 மே 2017 (UTC)

ஸ்ரீஹீரன்!

இது நான் ஏற்கனவே கவனித்து விரிவாக்க நினைத்ததுதான். எனக்குக் கிடைக்கும் நேரம், எந்தக் கட்டுரையில் எனது கவனம் போகிறது, எனது சூழலைப் பொறுத்து எனது விரிவாக்கங்கள் அமையும். நீங்கள் ஒவ்வொன்றையும் சுட்டிக் கேட்கும்போது கடினமாக உள்ளது. :(.--கலை (பேச்சு) 15:42, 13 மே 2017 (UTC)

கவலை வேண்டாம். முடிந்தால் நான்ந்ந் விரிவாக்குகின்ரேன். வேண்டுகோள் தானே கட்டளை இல்லையே, நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 13 மே 2017 (UTC)


கடவுள் கட்டுரை- மேற்கோள்கள்[தொகு]

கடவுள் கட்டுரையில் மேற்கோள்கள் தந்துவிட்டேன். அவை அனைத்தும் நம்பத்தகுந்தவையே. எனவே நான் எழுதிய கட்டுரைக்கு மதிப்பென் வழங்கவும். நன்றி--கிஷோர் (பேச்சு) 12:47, 2 ஆகத்து 2017 (UTC)

தயவு செய்து பதில் அளிக்கவும்--கிஷோர் (பேச்சு) 12:13, 4 ஆகத்து 2017 (UTC)

கிஷோர்! வேறு சொந்த வேலைகளால் விக்கிக்கு வர முடியவில்லை. பார்க்கிறேன். வேறு நடுவர்களும் இருப்பதனால் பார்ப்பார்கள். --கலை (பேச்சு) 21:51, 4 ஆகத்து 2017 (UTC)

சர்வாதிகாரம்[தொகு]

சர்வாதிகாரம் கட்டுரையின் விரிவாக்கம் முடிந்துவிட்டது. எனவே அதை சரி பார்த்து மதிப்பெண் வழங்கவும் --கிஷோர் (பேச்சு) 04:05, 14 ஆகத்து 2017 (UTC)

பஷீர் அகமது[தொகு]

சகோதரிக்கு வணக்கம்.

 • பாரசீக மொழி எனும் என் கட்டுரையில் தாங்கள் கூறியபடி துப்புரவுப்பணி செய்துவிட்டேன். தாங்கள் அதை மீள்பார்வை செய்யலாம்.

நன்றிகள்!

என்றும் விக்கிப்பணியில், அ. பஷீர் அகமது.