பயனர் பேச்சு:KaNiJan2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், KaNiJan2!

வாருங்கள் KaNiJan2, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 00:09, 14 ஜூன் 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், KaNiJan2!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 16:51, 2 செப்டம்பர் 2014 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]மிக்க நன்றி. இதற்கு முதற்பக்கக் கட்டுரைக்கான தரம் இருக்கிறது என்று தமிழ் விக்கிப்பீடியர்கள் கருதுவது என் முதல் முயற்சிக்குக் கிடைத்த ஊக்கமாகக் கருதி நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். இதை மேலும் மெருகேற்ற வேண்டும். இதைத் தொடர்ந்து மேலும் சில கட்டுரைகளையும் தொகுக்க எண்ணியுள்ளேன். பார்ப்போம். --கணிஞன் (பேச்சு) 06:04, 7 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:02, 7 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் நன்றியை நாங்கள் தான் சொல்ல வேண்டும். இவ்வளவு அருமையான கட்டுரையைப் படைத்ததற்காக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:25, 7 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் பாராட்டுகள்! --செல்வா (பேச்சு) 05:29, 16 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வந்த நாளிலேயே அத்திக்கும்பா கல்வெட்டுக் கட்டுரை முதற்பக்கத் தரத்தில் கொண்டு வர வேண்டும் என்று எழுதத் தொடங்கியதற்காகவும் உரையாடல் பக்கத்தில் பல பேச்சுகள் நட்ந்தாலும் அதே நேரத்தில் கல்வெட்டு வரிகளை முழுவதுமாக எழுதி முடித்து விட்டதற்காகவும். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:50, 8 செப்டம்பர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி. --கணிஞன் (பேச்சு) 15:42, 8 செப்டம்பர் 2014 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துக்கள் மணி! (இங்கே பெயர் சொல்லி அழைப்பது வழக்கம். மரியாதைக் குறைவாகக் கொள்ள வேண்டாம். :)) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:01, 8 செப்டம்பர் 2014 (UTC)
மிக்க நன்றி தமிழ்க்குரிசில்! --கணிஞன் (பேச்சு) 07:00, 16 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம் --ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:06, 11 செப்டம்பர் 2014 (UTC)
மிக்க நன்றி ஸ்ரீகர்சன்! --கணிஞன் (பேச்சு) 07:00, 16 செப்டம்பர் 2014 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு[தொகு]

நீங்கள் கல்வெட்டி முடித்தவுடன் விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு பக்கத்தில் அக்கடுரையை பரிந்துரைக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:48, 11 செப்டம்பர் 2014 (UTC)

புரியவில்லை தென்காசி சுப்பிரமணியன். --கணிஞன் (பேச்சு) 07:00, 16 செப்டம்பர் 2014 (UTC)

சிறப்புக்கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவின் சிறந்த கட்டுரைகளை அடையாளப்படுத்துவதற்கு உருவாக்கப்பட்டது. அதில் ஹாத்திக்கும்பா கல்வெட்டு கட்டுரையும் பரிந்துரைக்குமாறு சொன்னேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:02, 16 செப்டம்பர் 2014 (UTC)

சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள்[தொகு]

சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் கட்டுரையை நீங்கள் உருவாக்கியிருந்ததைக் கண்டேன். அதில் பெரும்பாலான உள்ளடக்கம் ஆங்கிலத்தில் இருந்தது. இவ்வாறு பெரும்பாலான உள்ளடக்கம் ஆங்கிலத்தில் இருப்பது தமிழ் விக்கிப்பீடியாவுல் வரவேற்கப்படுவதில்லை. நீங்கள் பின்னர் மொழிபெயர்க்கும் பொருட்டு அவற்றையும் இட்டிருக்கலாம். அதனால் சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் கட்டுரையில் இருந்த ஆங்கில உள்ளடக்கத்தை உங்க்ளது பயனர்வெளியில் பயனர்:KaNiJan2/மணல்தொட்டி/சேரந்தீவத்தின் மூன்று இளவரசர்கள் பக்கத்தில் இட்டுள்ளேன். இனிவரும் காலத்தில் மொழிபெயர்த்த பின்னரே கட்டுரையில் உள்ளடக்கங்களை சேருங்கள். ஆங்கிலத்தில் இட்டு பின்னர் மொழிபெயர்த்து விரிவாக்க உங்க்ளது மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். ஹாத்திகும்பா கல்வெட்டு கட்டுரையைப் போல இக்கட்டுரையையும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு விக்கியிடை இணைப்புகளை தவறாமல் இட்டுவிடுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:05, 15 செப்டம்பர் 2014 (UTC)

மிக்க நன்றி ஸ்ரீகர்சன். ”சேரந்தீவத்தின்” கட்டுரையை நீக்கி விட்டேன். அதற்குப் பகராக “சேரந்தீவின்” என்ற புதிய கட்டுரையை இணைத்துள்ளேன். “சேரன் தீவின்” என்று மாற்றினால் சேரந்தீப்பிட்டி என்ற சொல்லின் தொடர்பு புரியாதோ என்று மாற்றவில்லை. பின்னால் தமிழ் விக்கிப்பீடியா குழுவினர் இதை மாற்றினாலும் சரிதான். --கணிஞன் (பேச்சு) 07:00, 16 செப்டம்பர் 2014 (UTC)
உங்கள் புரிதலுக்கு நன்றி:)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:53, 16 செப்டம்பர் 2014 (UTC)

வரவேற்பு[தொகு]

மணி, உங்களுடைய அருமையான பங்களிப்புகளைத் தமிழ் விக்கிப்பீடியாவில் காண்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். தொடர்ந்து சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள். தமிழ் விக்கிபீடியாவில் உங்களை வரவேற்பதில் மகிழ்கின்றேன். வருக வருக!--செல்வா (பேச்சு) 05:27, 16 செப்டம்பர் 2014 (UTC)

மிக்க நன்றி செல்வா. இது ஏனைய செயல்களை விட நிறைவு தருவது. ஒரு சில கட்டுரைகளையாவது ஆழமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நேரமும், பொறுமையும், முனைப்பும் சேரவேண்டும். பார்ப்போம். --கணிஞன் (பேச்சு) 07:00, 16 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:57, 16 செப்டம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:54, 16 செப்டம்பர் 2014 (UTC)

”உங்களுக்குத் தெரியுமா?” அறிவிப்பு[தொகு]


தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

Project Tiger 2.0[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:KaNiJan2&oldid=2795991" இருந்து மீள்விக்கப்பட்டது