பயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு05

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கித்திட்டம் சைவம்[தொகு]

சகோ, விக்கித்திட்டம் சைவத்திற்கு வேண்டிய சில தானிக்கப் பணிகளை NeechalBOT மூலம் செய்ய நினைக்கிறேன். நீங்கள் பார்த்திருக்கலாம், விக்கித்திட்டம் சைவ வார்ப்புருவை சில பக்கங்களில் இட்டுள்ளேன். சிறப்பாகவே வருகிறது. கொஞ்ச நாளில் தானியங்கி அணுக்கம் வாங்கிய பிறகு தொடர்ந்து NeechalBOTடை பணியில் இறக்குகிறேன். ஒரே பக்கத்தில் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் நிர்ணயிக்கப்பட்ட தகவல்களையும் இந்தத் தானியங்கி இற்றைப்படுத்தும். சைவத் திட்டத்தில் "உங்களுக்குத் தெரியுமா?", "பக்தியிலக்கியப் பாடல்கள்" அல்லது இது போன்ற பகுதிகளுக்கு இற்றைப்படுத்த இந்தத் தானியங்கி உதவி தேவைப்பட்டால் கூறுங்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 07:57, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாத்திற்கான வெற்றி இதுவே என்று கூறுவதில் பெரு மகிழ்ச்சி. உள்ளம் மகிழ்ந்து, உடன் உரையாடி, அதன் புரிதல்களை கொண்டு இங்கு பங்காற்ற தொடங்கியிருக்கிறோம். தானியங்கி மூலம் இவ்வாறு விக்கித்திட்டத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கல் இயலும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. தங்களுடைய பேச்சுப் பக்கத்தில் NeechalBOT பற்றி குறிப்பிடும் முன்னரே விக்கித்திட்டம் வார்ப்புருவை நீங்கள் இட்டிருப்பதைக் கண்டேன். அதன் பிறகே NeechalBOT பற்றி அறிந்து உங்கள் பேச்சுப் பக்கத்திற்கு வந்தேன். வலைவாசல் வேலைகளை விடவும் தற்போது சைவ சமய உள்ளடக்கங்களில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், இந்த காலத்தினை தானியங்கி மூலம் எத்தகு உதவிகளைப் பெறவேண்டும் என்பதை சிந்தனை செய்து தங்களுக்கு தெரிவிக்கிறேன். (இருப்பினும் ஆங்கில விக்கிப்பீடியாவில் சில தானியங்களை கண்டிருக்கிறேன். அவை இனி தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் தேவைப்படும். அவை குறித்து விரைந்து அறிந்து தங்களுக்கு தெரிவிக்கிறேன்.) தானியங்கி அனுக்கம் பெற்று அலாவுதீன் பூதத்தினை களத்தில் இறக்க வாழ்த்துகள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:08, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றியுரைத்தல்[தொகு]

நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 02:01, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்தமைக்கு நன்றி!
--அஸ்வின் (பேச்சு) 03:40, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மூவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:36, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 08:17, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் நந்தகுமார் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:20, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

எனது எழுத்துப்பிழையைத் திருத்தியமைக்கு நன்றி, செகதீசுவரன். -- சுந்தர் \பேச்சு 09:39, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அது வெறும் தட்டச்சுப்பிழைதான் நண்பரே, அதற்கெல்லாம் நன்றி கூறி நாணம் கொள்ள வைக்காதீர்கள் :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:30, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

வணக்கம். பகுப்பு பேச்சு:அவுஸ்திரேலியக் கோயில்கள் பார்த்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:09, 16 அக்டோபர் 2013 (UTC) Y ஆயிற்று[பதிலளி]

வாழ்த்துரைத்தல்[தொகு]

👍 விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 18:39, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தங்கள் வாழ்த்து மனமகிழ்வை தருகின்றது. நன்றி ஐயா!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:41, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் திரைப்படம்[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் ரெடி. இணைய வேண்டுகோள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 22:57, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உடனே இணைந்துவிடுகிறேன். அதென்னவோ திரைப்படம் என்று கூறியவுடனே மகிழ்வு வந்துவிடுகிறது. வாழ்வின் கவலைகளை சில மணி தொலைத்துவிடும் களம். நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:58, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நண்ப!சகோதரா!! //வாழ்வின் கவலைகளை சில மணி தொலைத்துவிடும் களம்// என்பது மட்டுமல்ல சமூக மாற்றத்தையே நிகழ்த்தி இருக்கிறது. திரைப்படம் எப்போது?..?--யோகிசிவம் (பேச்சு) 14:03, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஆம் ஐயா, விக்கித்திட்டம் திரைப்படத்தில் இணைந்து கொள்ளுங்கள். சமயம் சாரந்த திரைப்படங்களையும் எழுத வேண்டியிருக்கிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:33, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் என்னை இணைத்திடுக! இயக்குக!! இயங்குகிறேன்.--யோகிசிவம் (பேச்சு) 15:56, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இந்தப் பேச்சுப் பகுதியிலேயே இராஜ் குமார் இணைப்பினைத் தந்திருக்கிறார் ஐயா, அங்கு சென்று பங்களிப்பாளர்கள் பகுதியில் ~~~ என இட்டு இணைந்து கொள்ளுங்கள். திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்த உதவுங்கள்.நன்றி ஐயா!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:59, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு...[தொகு]

வணக்கம்! 'முதற்பக்க வலைவாசல்' என்பதனை இற்றை செய்ய தற்போது யாரும் இல்லை. இங்கு காண்க. உங்களால் இயன்றால், செய்யலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:23, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

செய்யலாம் நண்பரே, தற்போது வலைவாசல்கள் பலவற்றையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. எப்படி இயற்றை செய்ய வேண்டும்? என்ற சில சந்தேகங்கள் உள்ளன அவற்றை கேட்டுத் தெரிந்து கொண்டு பங்களிக்கின்றேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:32, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நம்பி வந்தேன்... நீங்கள் உதவுவீர்கள் என்பது தெரியும்! வலைவாசல்களில் உங்களின் ஆர்வம் தெரிந்தே உங்களை அணுகினேன். பொறுமையாக செய்யுங்கள். வாழ்க! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:22, 18 அக்டோபர் 2013 (UTC) 👍 விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:34, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:10, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

முதற்பக்க வார்ப்புரு, முதற்பக்க வலைவாசல் இற்றைப்படுத்தலுக்கு முன்வந்ததற்கு நன்றி ஜெகதீஸ்வரன். தற்போதைய பராமரிப்பாளர்கள் என்பதன் கீழ் வழிகாட்டல் தேவைப்படுகிறது குறிப்பிட்டுள்ளீர்கள். தேவையான உதவிகளைக் குறிப்பிடுங்கள் என்னால் இயன்றதைச் செய்கிறேன். வழிகாட்டல் தேவைப்படுகிறது குறிப்பை நீக்கிவிடலாமே? --Anton·٠•●♥Talk♥●•٠· 12:46, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதனை முன்மொழிந்த இரவி அவர்கள், தற்போது தொடர் பணிகளால் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரை அனுக இயலவில்லை, யாரை அனுகுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். தக்க நேரத்தில் உதவ முன்வந்தமைக்கு என் நன்றிகள் முதலில்.
  1. விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல் மற்றும் விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள் இரண்டிற்குமே நடைமுறைக் கொள்கைகளை உருவாக்க வேண்டும். தற்போது வளர்ந்து வரும் சூழலில் இருப்பதால் இரவியின் முன்மொழிதல்களே ஏற்றவையாக இருக்கின்றன. அவற்றில் மேம்படுத்தி இறுதியாக்க வேண்டும்.
  2. எவ்வாறு இயற்றை செய்வது என்று அறியத்தரவேண்டும். தற்போது தானியங்கி இயற்றை செய்வதால் தேர்வு செய்யப்பட்ட வார்ப்புரு மற்றும் வலைவாசல் குறித்தான தகவலை எங்கு தர வேண்டும் என்ற தகவல் தேவைப்படுகிறது.
  3. காட்சிபடுத்தப்பட்ட வார்ப்புருக்களின் தகவல்கள் இருக்கின்றன. ஆனால் வலைவாசல்கள் இதுவரை எவை காட்சிபடுத்தப்பட்டன என்று தெரியவில்லை. சைவ வலைவாசல் காட்சிபடுத்தப்பட்டதை அறிவேன் மற்றதையும் அறிய வேண்டும்.
  4. அத்துடன் தற்போது காட்சிபடுத்தப்பட்டிருவை எப்போதிருந்து செய்யப்பட்டிருக்கின்றன. அதனையடுத்து எப்போது புதியத் தேரிவுகள் காட்சிபடுத்தப்பட வேண்டும்

போன்ற தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி நண்பரே--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:13, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  1. இரண்டிற்குமே நடைமுறைக் கொள்கைகளைகளை முக்கியத்துவத்தினை சற்று (2 வாரங்கள்?) பின்பு பார்க்கலாம். (?)
  2. காட்சிபடுத்தப்பட்ட வார்ப்புருக்களின் தகவல்கள் இங்கேயே இருக்கின்றன. - விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல், விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள்
  3. //இயற்றை செய்வது // இவற்றினை தானியங்கிகள் செய்வதில்லை. {{Mainpage v2}} இதனை தொகுப்பதன் ஊடாகச் செய்யலாம். தொகுத்ததும் உங்களுக்கே தெரிந்துவிடும்.
  4. //எப்போது புதியத் தேரிவுகள் காட்சிபடுத்தப்பட வேண்டும்?// 1 வாரம். ஆனால் பரிந்துரைகள் அல்லது காட்சிப்படுத்தப்படக்கூடியவை குறைவாகவுள்ளன. நீங்கள் இப்போதே ஆரம்பிக்கலாம்.

--Anton·٠•●♥Talk♥●•٠· 13:39, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

@ அன்டன். விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல் எனும் பக்கம் ஜெகதீஸ்வரனால் இன்று ஆரம்பிக்கப்பட்டதே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:44, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:10, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஓ, அப்படியா? :) --Anton·٠•●♥Talk♥●•٠· 13:59, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விளக்கத்திற்கு நன்றி அன்டன். தற்போதுள்ள விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் திருத்தங்களை மேற்கொள்ளுங்கள். முதற்பக்க வலைவாசல் பகுதியில் தாங்களும், செல்வசிவகுருநாதன் அவர்களும் காட்சிபடுத்தப்பட்ட வலைவாசல்களை இட்டுவருவதற்கு நன்றிகள். இருவரும் இப்பணிகளில் தங்களால் இயன்றளவு பங்களிக்கவும் கோரிக்கையும் வைக்கின்றேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:15, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தொடர்ந்து இங்கு உரையாடுவோம். நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:29, 24 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியில் நுழையும்போதெல்லாம் ஒருமுறை விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்க வலைவாசல் பார்த்து விடுங்கள். ஏதேனும் புதிய செய்திகள் இருக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:24, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சரி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:33, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம்! இங்கும், இங்கும் உங்களுக்கு செய்தி உள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:05, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வலைவாசலைக் காட்சிப்படுத்தும்போது... மற்ற அறிவிப்புகளைப் போலவே வார்ப்புருவினை பங்களிப்பாளர்களின் பேச்சுப் பக்கங்களில் இடலாம். இது ஒரு ஊக்கமாக அமையும். (எனக்காகச் சொல்லவில்லை!). நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:53, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பங்களிப்பாளர்களின் பேச்சுப் பக்கத்தில் குறிப்புகள் இடும் நடைமுறையே இதுவரை பின்பற்றப்பட்டு வந்துள்ளது. (உங்களுக்குத் தெரியுமா, முதற்பக்க கட்டுரைகள் போல)வார்ப்புரு இடுவது புதிய ஆலோசனை. அதனை மற்ற பயனர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுத்துகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:01, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆண்டுகளைக் குறிப்பிடும்போது...[தொகு]

வணக்கம். உங்களின் அண்மையக் கட்டுரைகளில் கிபி 1990, கிபி 1977 எனக் குறிப்பிடுதலைக் கண்டேன். அண்மைய நூற்றாண்டுகளின் ஆண்டுகளைக் குறிப்பிட கிபி என எழுத வேண்டியதில்லை. உதாரணம்: இக்கட்டுரையைக் கவனியுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:19, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நன்றிங்க. இனியெழுதும் கட்டுரைகளில் இந்த நடைமுறையை கடைபிடிக்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:17, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 15:28, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 15:49, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கத்திற்கு நன்றி நண்பரே--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:39, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
இப்பவே இப்பிடினா !!! அப்ப??? .,, ஹ ஹா தானியங்கிப் பதக்கம் கூடக் கொடுக்கலாம் :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:46, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆதவன் அவர்களே, தங்களின் இந்தப் பாராட்டே அந்தப்பதக்கத்திற்கு நிகரானதே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:53, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
:) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:54, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வலைவாசல்[தொகு]

வலைவாசல்களில் பல நிறங்கள் கூடாதா?, அப்படியெனில் அதை மாற்றி மேம்படுத்தியுதவ முடியுமா?, தங்கள் ஆக்கங்கள் போன்று--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:38, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தாங்கள் வலைவாசல்:பரதநாட்டியம் குறித்து கேட்கின்றீர்கள் என நினைக்கிறேன். பல நிறங்களை அமைப்பதில் தவறில்லை. அந்த நிறங்கள் ஒன்றுக்கொன்று சற்று தொடர்பு கொண்டவையாக இருக்கவேண்டும். அதுபோல வலைவாசல் இரண்டு மூன்று நிறங்களின் கலவையாக இருந்தால் பார்வைக்கு ஏதுவாக இருக்கும். தற்போதைய பரதநாட்டிய வலைவாசலில் ஒவ்வொரு தகவல்பெட்டியும் ஒரு நிறத்தினைக் கொண்டிருப்பதால் நிறத்தேர்வினை மாற்ற வேண்டியது அவசியமாகிறது நண்பரே. பிற வலைவாசல்களைக் கண்டு மாற்றம் செய்ய முயலுங்கள். வலைவாசல்களின் உள்ளடக்கங்களை அமைத்தவர் என்பதால் நிறத்தேர்வு தங்களுக்கு ஒரு பெரிய விசயமில்லை. முயற்சி செய்யுங்கள் நானும் இணைகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:54, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரி முயல்கிறேன்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:05, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
Y ஆயிற்று சரியா என பார்த்துக்கூறவும் வலைவாசல்:பரதநாட்டியம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:08, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சிறப்பாக உள்ளது நண்பரே! உங்களால் முடியுமென நானறிவேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:32, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 23:57, 25 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு[தொகு]

நிருவாக அணுக்கத்தைத் திரும்பப் நியமித்தல் தொடர்பான பரிந்துரைக் குழு உங்களை ஓர் உறுப்பினராக பங்களிக்க வேண்டுகிறேன். பங்களிக்க இசைவு எனில் குழு என்ற பகுதியில் உங்கள் பெயரைச் சேர்த்து விடுங்கள். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:22, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எனக்கு இக்குழுவில் இணைந்து செயலாற்ற விருப்பம் இல்லை நண்பரே. தங்களுடைய கோரிக்கையை மறுப்பதற்கு மன்னிக்கவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:23, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
பதிலுக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 17:40, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சாங்கோபாங்கம்[தொகு]

சாங்கோபாங்கம் என்ற கட்டுரை சைவ சமயக்கட்டுரையாகவும், ஒரு வலைதளத்தில் இருந்து நகலெடுத்தது போலவும் தெரிகிறது. சமயம் சார்ந்த கட்டுரைகளை நீங்கள் மேம்படுத்தி வருவதால், இதனை கூற விரும்பினேன்.--≈ உழவன் ( கூறுக ) 01:56, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி நண்பரே. அக்கட்டுரையை கவனத்தில் கொள்கிறேன். தகவல்கள் கிடைத்தால் மேம்படுத்தி வைக்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:29, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
சரிங்க--≈ உழவன் ( கூறுக ) 16:59, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு[தொகு]

சசி (இயக்குனர்) கட்டுரையை சிறிது மேம்படுத்தியுள்ளேன். வார்ப்புருவை நீக்கலாமா? அல்லது மேலும் மேம்படுத்த வேண்டுமா? நந்தினிகந்தசாமி (பேச்சு) 19:55, 31 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரையை உருவாக்கும் பொழுது குறைந்தபட்சம் மூன்று வரிகள் கொண்டதாக அமைத்திடுங்கள். நமது விக்கிப்பீடியாவின் பங்களிப்பாளர் எண்ணைக்கையை கருத்தில் கொண்டு ஒருவரி கட்டுரைகளை மேம்படுத்த ஒரு மாதகாலம் தரப்படுகிறது. அந்தகால அளவிற்குள்ளும் யாரும் மேம்படுத்தாமல் இருப்பின் கட்டுரை நீக்கம்பெறும். குறைவான உள்ளடக்கம் உள்ள கட்டுரைகளுக்கு இடப்படும் வார்ப்புருவை உள்ளடக்கங்களைச் சேர்த்ததும் உள்ளடக்கங்களைச் சேர்ப்பவரே (நீங்களே) நீக்கிவிடலாம். தற்போது அவ்வார்ப்புருவை நீக்கியுள்ளேன். நன்றி!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:22, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

விக்கிப்புயல் பதக்கம்
தாங்கள் சைவசமயக் கட்டுரைகளை தொகுப்பதிலும் தொடங்குவதிலும்

ஆர்வம் காட்டுவதால், இப் பதக்கம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படிக்கு - அடியேன் யாழ்ஸ்ரீ 20:56, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:29, 1 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்- ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:36, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 11:02, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:14, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்
சைவ சமய வலைவாசலை அமைத்தும், சைவம் தொடர்பான கட்டுரைகளை எழுதியும் தொகுத்தும் சைவத்திற்குப் பெரும்பணியாற்றுகின்றீர்கள் :) தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்! :) ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:36, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 17:48, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி நண்பரே. தாங்கள் வடிவமைத்திருக்கும் சைவ சமய பதக்கம் அருமையாக உள்ளது. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:12, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வலைப்பூ[தொகு]

அன்புச் சகோதரன்! தீபாவளி முடிந்ததா? நான் தங்களிடம் வலைப்பூ தொடங்குவது குறித்து ஆலோசனை கேட்டேனே? எப்ப..பூ தருவீங்க?! நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 18:52, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சகோதரா சரியான பெயர் இதுதான் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் என்பதே சரியான பெயர் திருக்கோவிலின் படம் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது--யோகிசிவம் (பேச்சு) 17:06, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

\\கல்வாழை தலவிருட்சமாக உள்ளது// கல்வாழை பூக்காது, காய்க்காது, ஆனால் தல விருட்சத்தில் மரத்திலேயே பழுத்த பழங்களை பஞ்சாமிர்தமாக அபிசேகம் செய்விக்கப்படுகிறது. மேலும் இந்த வாழை மரத்தின் புடைக்கன்றுகளை பெயர்த்தெடுத்து வைத்தால் அவை வளராது, வாழாது, இந்த வாழைக்கு உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், மருந்தடித்தல் அகிய எந்த வேலையும் இல்லை. கட்டுரையில் கல்வாழையை மாற்றிவிடலாமா?-நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 17:32, 4 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

காலதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், வீட்டில் கணினி சற்று பிரட்சனை செய்துள்ளமையால் தீபாவளி முடிந்தும் விக்கியில் பங்களிக்க இயலவில்லை. கல்வாழை குறித்தான ஆதாரங்கள் ஏதேனும் கிடைக்கின்றதா இல்லை தவறான தகவலா என ஆய்வு செய்தபின் அதனை நீக்கவிடலாம் ஐயா. இனி அனைத்து ஞாயிறும் நான் வீட்டில்தான் இருப்பேன், தங்களுக்கு எப்பொழுது முடியுமோ அன்று கைப்பேசியில் அழைத்து செய்தி கூறுங்கள். வலைப்பூ பற்றி அன்றே காணலாம். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:43, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அன்பு சகோதரா! ஏன் (05:43, 7 நவம்பர் 2013) இவ்வளவு தாமதம்? இன்னுமா? தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவதலங்கள் 20ஐ விரிவு படுத்தியுள்ளேன், கொஞ்சம் பாருங்களேன்!!!.நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 15:01, 13 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
//இன்னுமா? //ஆம் நண்பரே, மதர்போர்டில் பிரட்சனை என நினைக்கிறேன். சரியான தீர்வகம் சைதையில் கிடைக்கவில்லை. அதனால் அலுவலத்தில் மட்டுமே இணையத்தினை அனுக இயலுகிறது. எனினும் தாங்கள் வந்தால் நண்பனிடம் இருந்து மடிக்கணினியை பெற்றுக் கொள்ளலாம். //தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரை சிவதலங்கள் 20ஐ விரிவு படுத்தியுள்ளேன்// தங்களுடைய சிவப்பணி தொடரட்டும். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:35, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆரம்[தொகு]

பேச்சு:ஆரம் (சந்தன மர இலை) பாருங்கள்.--Sengai Podhuvan (பேச்சு) 21:04, 14 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

உங்களின் கவனத்திற்கு...[தொகு]

இங்கு பார்க்கவும்! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கவனத்தில் கொண்டுவந்தமைக்கு நன்றி நண்பரே. மதுரை வாலைவாசல் குறித்து சிறு குறிப்பினை அவர் பேச்சுப்பக்கத்தில் இட்டுள்ளேன். நன்றி.-சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:48, 20 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சந்தேகம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காவல் தெய்வங்களும் சைவ சமயத்துடன் தொடர்புடையோர்களா? --Saba rathnam (பேச்சு) 17:48, 23 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

சைவ, வைணவ சமயங்கள் தங்கள் ஆளுமைகளை அதிகரித்த பொழுது சிறுதெய்வங்களை தங்களுடன் போட்டி போட்டி இணைத்துக் கொண்டன, ஐயனார், கருப்பு போன்ற தெய்வங்களை வைணவம் ஏற்றது, முனி போன்ற தெய்வங்களை சைவம் ஏற்றது. அதன்பின்பு காவல்தெய்வங்கள் சிவ விஷ்ணு வடிவங்களாக கருதப்படலாயினர். தங்களுடைய இந்தக் கேள்வி விக்கியில் உலவும் பொழுது வந்ததா? நண்பரே. இல்லை பொதுமையான கேள்வியா? கேள்வியின் நோக்கம் எதுவென அறிந்தால் அதன் பொருட்டான குறிப்புகளை தேட இயலும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:56, 23 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

திருச்சிராப்பள்ளி[தொகு]

திருச்சிராப்பள்ளி என்ற கட்டுரையை முதற்பக்கத்திற்கு பரிந்துரைத்துள்ளேன். அதில் மேலும் தகவல்கள் சேர்க்க முடிந்தால் நன்று. இன்னும் சேர்க்கலாம் என்பது என் எண்ணம் ஆனால் என்னால் தகுந்த தகவல்களை திரட்டமுடியவில்லை. --குறும்பன் (பேச்சு) 01:20, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

என்னால் இயன்றதைச் சேர்க்க முயலுகிறேன் நண்பரே. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:03, 24 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]