பயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு04

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தங்களின் கவனத்திற்கு...[தொகு]

வணக்கம்! பகுப்பு:துறைகள் வாரியாகத் தமிழ் நூல்கள் எனும் பகுப்பினை பார்வையிடுங்கள்; நூல்கள் குறித்த கட்டுரைகளில் உரிய பகுப்பினை இணைத்திட பெரிதும் உதவிடும்! அன்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:24, 6 ஆகத்து 2013 (UTC)-[பதிலளி]

பகுப்பு பற்றிய குழப்பம் இருந்தமையால் பகுப்பினை சிவப்பிணைப்பாகவே விட்டுவிட்டேன். புதிய பகுப்பினை உருவாக்கவில்லை. துறைகள் வாரியாகத் தமிழ் நூல்கள் பகுப்பில் ஏறத்தாள அனைத்து பகுப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்கிறேன். தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி நண்பரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:46, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நூல்கள்[தொகு]

குறைந்த உள்ளடங்கங்களுடன் நூல்கள் பற்றிய கட்டுரைகள் இருப்பது குறித்த கால நீக்கல் வார்ப்புரு இடப்பட்டு நீக்கப்பட வாய்ப்புள்ளதால், அவற்றை விரிவுபடுத்துவது நன்று. நூல்கள் வார்ப்புரு (Infobox Book) இடப்பட்டால் மேலும் சிறப்பாக இருக்கும். --Anton (பேச்சு) 04:41, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

மூன்று வரி கட்டுரையாகவே உருவாக்கியுள்ளேன். எனினும் இன்போபாக்ஸ் புக்கினை இணைக்கிறேன். நீக்கப்பட வேண்டியதாக இருப்பின் வார்ப்புருவினை இட்டுவிடுங்கள் தயக்கம் வேண்டாம். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:49, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நூல் தகவல் சட்டம்[தொகு]

நூல்கள் பற்றிய நிறையக் கட்டுரைகள் எழுதுவது குறித்து மகிழ்ச்சி. நூல்களுக்கு நூல் தகவல் சட்டத்தைத் சேர்த்தால் சிறப்பு. எ.கா:

{{நூல் தகவல் சட்டம்| 
  தலைப்பு            =  '''யாழ்ப்பாணச் சரித்திரம்''' |
  படிமம்              =  yarlpanasarithiram_rasanayagam.png |
  நூல் பெயர்          =  யாழ்ப்பாணச் சரித்திரம் |
  நூல் ஆசிரியர்       =  [[செ. இராசநாயகம்]] |
  வகை               =  [[வரலாறு]] |
  ISBN சுட்டெண்               =   |  
  காலம்              =  [[1933]] |
  இடம்               =  [[யாழ்ப்பாணம்]]|
  மொழி              =  [[தமிழ்]] |
  பதிப்பகம்           = முதல் மீளச்சு (1986): <br>ஏசியன் எடுகேஷனல் சர்வீசஸ்<br> (புதுடில்லி) |
  பதிப்பு              = 1993 ஏ.எ.ச. <br> 1994 ஏ.எ.ச.<br> 1997 ஏ.எ.ச. <br> 1999 ஏ.எ.ச. |
  பக்கங்கள்           =  267 (1999 பதிப்பு) |
  ஆக்க அனுமதி      =   |  
  பிற குறிப்புகள்      =   |
}}

மேலும், மூன்று வகையான பகுப்புகளைச் சேர்த்தால் நன்று.

  • துறை (எ.கா வரலாற்றியல் தமிழ் நூல்கள்)
  • காலம் (எ.கா 1999 நூல்கள்)
  • இடம் (எ.கா இந்தியத் தமிழ் நூல்கள்)

--Natkeeran (பேச்சு) 16:50, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தங்கள் குறிப்புகளை கவனத்தில் கொள்கிறேன். நூல்களுக்கான படங்களை இணைக்கும் பொழுது தகவற்சட்டத்தினையும் இணைக்கிறேன். குறிப்புகளை எழுத வேண்டியுள்ளாதால் சிறிது காலம் அவகாசம் தர வேண்டுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:55, 6 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நூலுலகம்[தொகு]

வணக்கம், பொதுவாக வணிக இணையத்தளங்களை வெளி இணைப்புகளாகத் தருவது தவிர்ப்பது நல்லது. நூலுலகம் (நூலகம் அல்ல) இணைப்பை சில நூல்களின் கட்டுரைகளில் இருந்து நீக்கியிருக்கிறேன். வேறு கட்டுரைகளில் நீங்கள் இணைத்திருந்தால் அவற்றை நீக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள்--Kanags \உரையாடுக 08:29, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சில புத்தகங்கள் குறித்து தேடிய பொழுது நூலுலகம் இணையம் மட்டுமே கிடைத்தது. வெளி இணைப்பாக இருக்கட்டும் என இணைத்தேன். விக்கியில் ஏன் இந்த நடைமுறை?. ஒரு விக்கிப்பயனர் அந்தப் புத்தகத்தினைப் பற்றி அறிந்த பின்பு அதை வாங்குதல் இந்த இணைப்புகள் மூலம் எளிதாகுமே நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:42, 7 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பகுப்பு:பதிப்பகங்கள் வாரியாகத் தமிழ் நூல்கள் என்பதனையும் பாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:38, 11 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைக் வேண்டுதல்[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சிறப்புக் கட்டுரை எழுதும் அளவிற்கு எனக்கு தகுதியில்லை என நினைக்கிறேன் நண்பரே. மன்னிக்கவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:49, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
யோவ் ஜெகா! என்னாயா நினைச்சுக்கிட்டு இருக்குகிறீரு? எங்களைப் பார்த்தால் எப்படித் தெரியுது உமக்கு? இந்து மதம் தொடர்பாக எல்லாக் கட்டுரைகளையும் உருவாக்கிவிட்டு, ஒன்னுந் தெரியாத மாதிரி நடிக்கிறீரா?! எவனாவது புயல் காத்துல பொறி கடலை தின்னுக்கிட்டிருப்பான் அவன் கிட்டே போயி சொல்லும் இதை! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:18, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நிச்சியமாகத் தகுதி உண்டு. வேறு காரணங்களால் சிரமம் எனில் புரிந்து கொள்ளகிறேன். உங்கள் பதிலுக்கு நன்றி. --Natkeeran (பேச்சு) 15:45, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
உண்மையைத்தான் கூறியுள்ளேன் தமிழ்க்குரிசில் நண்பரே. சிறப்புக் கட்டுரைகள் விக்கிப்பீடியாவினை பல்நோக்கோடு புரிந்து கொண்ட நபர்களால் மட்டுமே எழுதப்படக் கூடியது. சிறப்புக் கட்டுரைகளின் தலைப்புகளை கண்டவுடனே தெரிந்துவிட்டது எமக்கான களம் அதுவல்லவென. இதை தன்னடக்கம் என தாங்கள் புரிந்து கொண்டது என் பாக்கியம். இந்து சமயக் கட்டுரைகளை எழுத நூல்களும், இணையமும் உதவி செய்தன. அத்துறை மீதான ஆர்வம் அவைகளையும் தாண்டி என்னை கொண்டு செலுத்தியது. ஆனால் மூன்று வருடங்கள் பயனராக இருப்பினும் விக்கிப்பீடியாவைப் பற்றி கொஞ்சமே அறிந்திருக்கிறேன். நண்பர் நக்கீரன் விடுத்தல் வேண்டலுக்கு மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:31, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

மின்னஞ்சல்...[தொகு]

உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது; மிகவும் முக்கியமானது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:55, 21 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு[தொகு]

செகதீசுவரன், தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட பொறுப்பாளர்களில் ஒருவராக பணியாற்ற இயலுமா? பல்வேறு வடிவமைப்புப் பணிகள், களத்தில் இருந்து கவனிக்க வேண்டியவை தொடர்பாக உங்கள் பங்களிப்பு பயன் தரும். நன்றி.--இரவி (பேச்சு) 17:29, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இயலுவதைச் செய்கிறேன் நண்பரே!. சென்னையில் இருப்பதால் ஓரிரு நாள் விடுமுறை எடுத்து பங்களிக்க இயலும். எனக்கான பணியெதுவென கட்டளையிடுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:30, 24 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நன்றிங்க. கட்டளையிட நான் யாருங்க? ஒவ்வொருவராலும் இயன்ற பணிகளைப் பிரித்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பாகச் செய்வோம். முதற்கட்டமாக, t-சட்டை வடிவமைபுப்புப் பணிகளைத் தொடங்க முடியுமா? நல்கைப் பணம் நம் கைக்கு வரும் முன்னர், இதைச் செய்து முடித்து விட்டால் உடனடியாக உற்பத்திக்குப் போய் விடலாம். வடிவமைப்புப் பணிகளில் திறம் மிக்க அன்டன் / அராப்பத் / தாரிக் ஆகியோரின் உதவியையும் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 17:15, 24 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
தாராளமாக செய்யலாம் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:18, 24 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

வாழ்த்துக்கு நன்றி,ஆனா 250 கட்டுரை எழுத போறேன், எழுத போறேனு உசுப்பேத்தி உசுபேத்தியே எல்லாரும் ரனகள படுதுரீங்க பா. பாக்கலாம், எவ்வளவு முடியுதோ அவ்வளவு கண்டிப்பா எழுதுவேன் நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:57, 3 செப்டம்பர் 2013 (UTC)

உங்களுடைய எழுத்து நடை பேச்சு வழக்கில் உள்ளது என்பதால் ஏதோ நேரிலே நீங்கள் பேசுவதைப் போல இருக்கிறது. சிலருக்கு மட்டுமே வாய்த்திடும் இந்நடையில் எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளைக் கையாளுகின்றீர்கள் என்று வியப்பாக இருக்கிறது. என்றும் இதே ஆர்வத்துடன் செயல்பட என்னுடைய வாழ்த்துகள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:25, 4 செப்டம்பர் 2013 (UTC)

இரு கட்டுரைகள்[தொகு]

ஒரே கோயிலுக்கு இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில், இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் என இரண்டு கட்டுரைகள் உள்ளன. ஒன்றிணைக்கப்பட வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 05:09, 8 செப்டம்பர் 2013 (UTC)

நன்றிங்க.நான் தொடங்கிய எந்தக் கட்டுரையையும் இணைக்க வேண்டுமானால் அவற்றை நீக்கம் செய்து உரிய வழிமாற்றை அளித்துவிடுங்கள். தேவாரத் திருத்தலங்களை ஆதிகாலப் பெயரிலிருந்து தற்காலப் பெயருக்கு மாவட்டம் வாரியாக தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் கட்டுரையை முதன்மையாகக் கொண்டு மாற்றிவருவதால் இவ்வாறு நிறைய இரட்டைக் கட்டுரைகள் உருவாகிவிட்டன. கவனமாக இருந்தும் இவ்வாறு தவறு நிகழ்ந்து விடுகிறது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:28, 8 செப்டம்பர் 2013 (UTC)

பகுப்பு மாற்றம் ஏன்?[தொகு]

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் & வட்டம் திருமருகல் ஓன்றியத்தில் உள்ளது. நன்றி. --ஹிபாயத்துல்லா (பேச்சு) 11:56, 11 செப்டம்பர் 2013 (UTC)

தினமலர் தளத்தின் படியே இங்கிருக்கும் தேவாரம் சிவாலயங்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றேன். தவறு ஏதேனும் இருந்தால் நானும் திருத்தங்களை செய்ய கடன் பட்டுள்ளேன். எதனை ஆதாரமாகக் கொண்டு இந்த மாற்றங்களை நிகழ்விக்கின்றீர்கள் என்பதை அறியலாமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:59, 11 செப்டம்பர் 2013 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் கட்டுரை ஏற்கனவே இருந்ததால் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் கட்டுரையை வழிமாற்றினேன். ஆனால் திருப்பாம்புபுரம் என்பது தவறு, அதற்குப் பதில் திருப்பாம்புரம் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என்னால் இப்பொழுது தலைப்பை திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் என நகர்த்த முடியவில்லை. உதவவும்.--Booradleyp1 (பேச்சு) 12:57, 13 செப்டம்பர் 2013 (UTC)

Y ஆயிற்று சரிபார்க்கவும்--குறும்பன் (பேச்சு) 14:52, 13 செப்டம்பர் 2013 (UTC)
ஏற்கனவே உள்ள கட்டுரையை நீக்கம் செய்து அக்கட்டுரையின் பெயரில் நகர்த்தல் செய்வார்கள் என நினைக்கிறேன். விக்கிப்பயனர்களுக்கு நீக்கம் செய்யும் உரிமை இல்லாமையால் உங்களால் செய்ய முடியவில்லை. என்னாலும் இயன்றிருக்காது. அதனை இயற்படுத்திய குறும்பன் அவர்களுக்கும் மிகநுணுக்கமாக ஆய்வு செய்திடும் தங்களுக்கும் என் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:01, 13 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:03, 18 செப்டம்பர் 2013 (UTC)

அன்பான அழைப்புக்கு மிக்க நன்றி நண்பரே. மாதந்தோறும் 250க்கும் அதிகமான பயனர்கள் பங்களித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களிலிருந்து 50 பேரை மட்டும் அழைப்பது மிகவும் சிரமான விசயம் என்பதை அறிவேன். அதனால் உறவினர்களையோ, நண்பர்களையோ உடன் அழைத்துவரப்போவதில்லை. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:15, 19 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியா சட்டைகள் உருவாக்கம், தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கொண்டாட்டம் தொடர்பாக நீங்கள் காட்டி வரும் ஈடுபாட்டையும் உழைப்பையும் பாராட்டி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் சேர்ந்த காலத்துக்கும் இப்போதைக்கும் உள்ள உங்கள் பக்குவம் மலைக்க வைக்கிறது. வாழ்த்துகள். இரவி (பேச்சு) 08:43, 19 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பதக்கத்திற்கு நன்றி நண்பரே. தொடக்கத்தில் விக்கிப்பீடியாவிற்கும் வலைப்பூக்களுக்கும் இடையே இருக்கும் வேற்றுமையை அறியாது போனமையும், பொதுவெளி எழுதுவது குறித்த அறியாமையும் இருந்தன. தற்போது அவைகள் நீக்கப்பெற்று இருப்பதில் மகிழ்ச்சி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:25, 19 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:08, 19 செப்டம்பர் 2013 (UTC)
தனியொரு ஆளாகவே சைவம் வலைவாசலை அமைத்து பல கட்டுரைகளை சீரமைத்தமையும் பாராட்டிற்குரியது. விக்கிப் பத்தாண்டுகள் கொண்டாட்டத்தில் உங்கள் ஈடுபாடும் திட்ட ஒருங்கிணைப்பையும் பாராட்டுவதில் நானும் மகிழ்ச்சியைப் பகிர்கிறேன்.வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 13:23, 19 செப்டம்பர் 2013 (UTC)
மிக்க நன்றி நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:16, 19 செப்டம்பர் 2013 (UTC)

செயலில் மட்டுமல்ல, பேச்சிலும் (எழுத்து - பேச்சுப் பக்கங்கள்) நயம் மிக்கவர் இந்தத் தமையன்; நளினமான நண்பர்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 20 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் பாராட்டுகள் நாணம் கொள்ள செய்கின்ற நண்பரே. மிக்க நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:53, 20 செப்டம்பர் 2013 (UTC)

ஊடகச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா?[தொகு]

வணக்கம் செகதீசுவரன். விடுப்பு எடுக்க முடியாத நெருக்கடியில் உள்ளீர்கள் என்று அறிவேன். ஒரு வேளை இயன்றால், ஆர்வமிருந்தால், செப்டம்பர் 25, சென்னை ஊடகச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா?--இரவி (பேச்சு) 04:28, 23 செப்டம்பர் 2013 (UTC)

இயலாமைக்கு வருந்துகிறேன் நண்பரே. ஊடகச் சந்திப்பினை சிறப்பாக்க வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:39, 23 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:07, 27 செப்டம்பர் 2013 (UTC)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:07, 27 செப்டம்பர் 2013 (UTC)

பாராட்டு சான்றிதழுக்கு தகுதியுள்ளவனாக கருதியமைக்கு நன்றி நண்பரே. பெயர் மற்று கையொப்ப விவரங்களை அங்கு பதிந்துள்ளேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:30, 27 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி[தொகு]

இனிய சகோதரா! நன்றி!!

  • எனது உடல்நிலை கருதியே ஐந்துரதம், கடல் கோவில் ஆகிய இடங்களுக்கு வரமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. கடல் கோவிலில் உள்ள சிவலிங்கம் எண்முகப் பட்டையுடையது, அது குறித்த தகவல்கள் நேரில் காண்பித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய எண்ணியிருந்தேன் சைவ வலைவாசலுக்கு கூடுதல் தகவல் தங்களுக்கு கிடைத்து இருக்கும். மீண்டும் நான் சென்னை வரும்போது (ஞாயிற்றுக் கிழமையாய் பார்த்து) மீண்டும் மல்லை குறித்து கூடுதல் தகவலுடன் தங்களை சந்திக்கிறேன்.நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 16:39, 30 செப்டம்பர் 2013 (UTC)
தங்களின் உடல்நலத்தினையும் பாராமல் எங்களுக்கு வழிகாட்டியது நெகிழ வைத்தது. சில நண்பர்களுக்கு அங்கு சென்றதையும், சில வரலாற்றுக் குறிப்புகளை தாங்கள் உரைத்தை கூறியதும் அருமையான வாய்ப்பினை தவற விட்டதாக வருத்தம் கொண்டார்கள். இருமுறை மாமல்லபுரம் சென்றிருந்தும் இந்த முறை அறிந்துகொண்டதை போல எம்முறை அறிந்ததில்லை. தங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:59, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பத்தாண்டு[தொகு]

பத்தாண்டு பற்றிய கட்டுரை தொடங்கப் போகிறீர்களா? இத்தலைப்பு ஏராளமான கட்டுரைகளில் இணைக்கப்பட்டிருப்பதால் அவை அனைத்தும் இணைப்பறுந்துள்ளன. குறுங்கட்டுரையாக அல்லாமல் விரிந்த கட்டுரையாக எழுதினால் நல்லது. இல்லையேல் முன்னர் மாதிரி பட்டியலாகவே இருக்கட்டும்.--Kanags \உரையாடுக 09:49, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இப்படியொரு பிரட்சனை உள்ளதா? :-( வலைவாசல்:உள்ளடக்கங்கள் என்ற பகுதிக்காக பார்க்கும் பொழுது கட்டுரையின் பெயர் தவறாக இருந்தமை தெரிந்தது. அதனால்தான் தலைப்பினை மாற்றிவிட்டு கட்டுரையை நீக்கும்படி கோரினேன். நானே தொடங்கும் யோசனை அப்போது இல்லை. யாரேனும் தக்க நபர் கிடைக்கின்றா எனப் பார்க்கிறேன் இல்லாவிட்டால் என்னால் முடிந்தளவு கட்டுரையை கொண்டு செல்கிறேன். தங்களுடைய செயல்பாட்டிற்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:57, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கிக் கட்டுரையிலும் பெரிதாகத் தகவல் எதுவும் இல்லை. இப்போதைக்கு வழிமாற்றே இருக்கட்டும். பட்டியலில் உள்ள தகவல்களே போதும் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 10:58, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி நண்பரே,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:07, 1 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?[தொகு]

வணக்கம், செகதீசுவரன். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:24, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உண்மைதான் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியா அடுத்த இலக்கு நோக்கி மிகவும் அபரிவிதமான வேகத்தில் இயங்கிகொண்டிருக்கிறது என்பதை காண்கிறேன். இதனால் நிர்வாகிகளுக்கு ஏற்படப்போகும் கூடுதல் சுமைகளை பகிர்ந்து கொள்ள நானும் உதவுவேன் என்பதால், பொறுப்பினை ஏற்றுக்கொள்ள எனக்கு விருப்பமே. மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:38, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:04, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:25, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பட்டையைக் கிளப்ப சட்டைமுனி தயார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:29, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தென்காசியாரே அவர் வடிவமைப்பு முனி :) :) , வாழ்த்துக்கள் ஜெகதீஸ்வரன்  :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:36, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:25, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
ஸ்யப்பா... இப்பவே கண்ணைக்கட்டுதே! :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:27, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி, செகதீசுவரன். இன்னும் சில பயனர்களிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். எனவே, அனைவருக்கும் பதில் தர அவகாசம் தந்து வரும் திங்களன்று அனைவரையும் நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:50, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நல்லது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:04, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைத்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி அப்பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:51, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
அப்பக்கத்தில் பரிந்துரையை ஏற்றுள்ளேன், நண்பரே. என்னைப் பற்றிய தங்களுடைய புரிதல்கள் வியப்படைய வைக்கின்றன. பரிந்துரைத்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றி!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:02, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இந்த அளவிற்கு துடிப்பான ஒரு இளைஞரை அண்மைக் காலத்தில் நான் கண்டதில்லை! சுறுசுறுப்பு, ஓய்வில்லாத உழைப்பு!! வாழ்க!!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:05, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:38, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
உங்களின் சிறப்பான பங்களிப்புக்களுக்கு நன்றி. 30 மேற்பட்ட சக பயனர்களால் நீங்கள் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்பட்டு அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 18:08, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி நக்கீரனாரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:06, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

நூல் தகவல் சட்டம் இற்றைப்படுத்தப்படுவது தொடர்பாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை[தொகு]

தயந்து இங்கே பார்க்க: வார்ப்புரு பேச்சு:நூல் தகவல் சட்டம்#நூல் தகவல் சட்டம் இற்றைப்படுத்தப்படுவது தொடர்பாக கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை --Natkeeran (பேச்சு) 14:21, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா முகநூல் அணுக்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா முகநூல் பக்கத்துக்கு உங்களுக்கு அணுக்கம் உள்ளதாக அறிகிறேன். அதை இங்கு விக்கிப்பீடியா:சமூக ஊடகப் பராமரிப்பு உறுதிச் செய்ய முடியுமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 14:24, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

முகநூலில் https://www.facebook.com/groups/TamilWikipedians/ என்ற குழுமத்தில் அணுக்கம் பெற்றுள்ளேன் இது போல இன்னும் இரு குழுமங்கள் முகநூலில் உள்ளன நண்பரே. TamilWikipedia பக்கத்தினை சூர்யா நிர்வகித்து வருகிறார். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:03, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தவறான தகவல்[தொகு]

சகோதரன், புதுப் பயனர் ஒருவரின் பக்கத்தில் பயனர் பேச்சு:மு.செம்மல்#பயனர் பக்கத்தில் குறிப்புகளை இட வேண்டுதல் என்ற குறிப்பில் தவறாகத் தகவல் தந்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது. சரி பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:06, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

ஆமாம் நண்பரே, காப்பி பேஸ்ட் செய்து இட்டதில் மாற்றி இட்டுவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:23, 8 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]