பயனர் பேச்சு:Jagadeeswarann99/தொகுப்பு02

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Jagadeeswarann99/தொகுப்பு02!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:49, 2 ஏப்ரல் 2013 (UTC)

ஆச்சரியமாகவும், மகிழ்வாகவும் உள்ளது நண்பரே. தொடர்ந்து ஊக்கம் தருவதற்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:51, 2 ஏப்ரல் 2013 (UTC)

அகத்தியர் வசிட்டர்[தொகு]

அகத்தியர் வசிட்டர் 2 பேரும் ஒரே பாத்திரத்தில் பிறந்த இரட்டையர் அல்லவா? பின் எப்படி வசிட்டர் மட்டும் பிரம்ம குமாரர் ஆனார்? குழப்பமாக உள்ளதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:44, 27 ஏப்ரல் 2013 (UTC)

குழப்பம் ஒன்றுமில்லை நண்பரே. பிரம்மன் தன்னுடைய படைப்பு தொழிக்கு உதவியாக சிலரை படைத்தாக நம்பப்படுகிறது. அவர்களை பிரம்ம குமாரர்கள் என்று அழைக்கிறார்கள். மானசீக புத்திரர்கள் என்றும் பிரஜாபதிகள் என்றும் அழைப்பதுண்டு. பகுப்பிற்கு வேறு பெயர் பொருத்தமாக இருக்குமென்றால் மாற்றிவிடுங்கள். வசிட்டரின் ஆங்கில விக்கிப்பீடியால் இதுபற்றி குறிப்பும் இருக்கிறது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:54, 27 ஏப்ரல் 2013 (UTC)

அன்பு சகோதரன் அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பங்களிப்புகளில் நூற்றியெட்டு சிவ தாண்டவங்களில் சதுரம் ஒரு கணக்கு சூத்திரம் உள்ளது.தாண்டவ விளக்கம் இல்லையே கொஞ்சம் கவனியுங்களேன்.--யோகி சிவம் 15:17, 2 மே 2013 (UTC)
நிச்சயம் திருத்தம் செய்கிறேன் நண்பரே. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:19, 2 மே 2013 (UTC)[பதிலளி]

மறுமொழி இடும் போது, புது வரியில் “:” இட்டு தொடங்குங்கள். உரையாடல் ஒரே பத்தியாக இருந்தால் படிக்க கடினமாக் இருக்கிறது. தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:38, 2 மே 2013 (UTC)[பதிலளி]

இனி அவ்வாறே செய்கிறேன் நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:40, 2 மே 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
வலைவாசல்:இந்து சமயம் உருவாக்கும் பொருட்டும், இன்னபிற அவசியமான கட்டுரைகளை உருவாக்கும் பொருட்டும் அண்மைக் காலங்களில் நீங்கள் இரவு பகலாக உழைப்பதனைக் காண்கிறோம். உள்ளம் நெகிழ்ந்து இப்பதக்கத்தினை வழங்குகிறோம்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:19, 3 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பதக்கம் தந்தமைக்கு நன்றி நண்பரே,. நேரமிருக்கும் போது இந்து சமய கட்டுரைகளை மேம்படுத்த உதவுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:03, 4 மே 2013 (UTC)[பதிலளி]

ஆம், முற்றிலும் பொருத்தமான பதக்கம். உங்கள் உழைப்பு இன்னும் பலரையும் சிறப்பான வலைவாசல்களை அமைக்கத் தூண்டி இருக்கிறது.--இரவி (பேச்சு) 15:31, 10 மே 2013 (UTC)[பதிலளி]
மிக்க மகிழ்ச்சி நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:34, 10 மே 2013 (UTC)[பதிலளி]

ஜெகதீஸ்வரன், நீங்கள் கடுமையாக உழைக்கிறீர்கள்; தங்களின் உடல்நலனையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளவும்! -அன்புடன் : --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 10 மே 2013 (UTC)[பதிலளி]

அன்பிற்கு நன்றி நண்பரே. நான் உடல்நலத்தினை கவனமாக பார்த்துக்கொள்கிறேன்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 13:55, 11 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் சைவம்...[தொகு]

வணக்கம் ஜெகதீஸ்வரன்!
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்குமாறு நீங்கள் விடுத்த அழைப்பினை எனது பேச்சுப் பக்கத்தில் கண்டேன். உங்களின் முயற்சிகளுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

  • கட்டுரைகளில் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை திருத்த இயலும்
  • கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய இயலும்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகள், இந்த மாதத்தின் முக்கிய நாள் போன்ற வலைவாசல் பகுதிகளை தொடர்ந்து பராமரிக்க உதவிட இயலும்

(குறிப்பு: இங்கு ஏற்கனவே 2 செல்வாக்கள் இருப்பதனால், என்னை நீங்கள் சுருக்கமாக சிவகுரு என அழைக்கலாம்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:46, 6 மே 2013 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி சிவகுரு நண்பரே,. சைவக்கட்டுரைகள் பல தொடங்கப்பட்ட இடங்களிலேயே இருக்கின்றன. அக்கட்டுரைகளை சிறப்பு கட்டுரைகளாக தரம் உயர்த்த தங்களைப் போன்ற பங்களிப்பார்களால்தான் இயலும். இது சாத்தியப்படுமாயின் விரைவில் வலைவாசல் சைவம் அமைக்கப்பெறும். அப்போது தாங்கள் வலைவாசலை பராமரிக்கலாம். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:07, 6 மே 2013 (UTC)[பதிலளி]
என் பங்கிற்கு வாரத்திற்கு பத்து குறுங்கட்டுரைகள் எழுத முடியும். வேற்று மொழிகளில், சைவம், விக்கித் திட்டம் சைவம் தொடர்பான கட்டுரைகள், படங்கள் இருந்தால் இங்கு கொண்டு வருவேன். அவ்வப்போது உரை திருத்தம் செய்ய முடியும். :-) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:20, 6 மே 2013 (UTC)[பதிலளி]
விக்கித்திட்டம் சைவத்தில் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் பட்டியல் நீண்டதாக உள்ளது. வாரம் பத்து குறுங்கட்டுரைகளை உருவாக்கும் முயற்சி இப்பட்டியலை வெற்றிடமாக ஆக்கும் என நம்புகிறேன். தங்களது திட்டங்களுடன் விக்கித்திட்டம் சைவம் மேம்பட யோசனைகள் கூறி வழிகாட்டவும் வேண்டுகிறேன்,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:07, 6 மே 2013 (UTC)[பதிலளி]
நன்றி,

இந்திரன் பழி தீர்த்த படலம். வெள்ளையானை சாபம் தீர்த்த படலம். திருநகரங் கண்ட படலம். திருமணப் படலம். உருவாக்கப்படவேண்டிய இக்கட்டுரைகளில் படலம் என்பது விளங்கவில்லை. பார்த்தல் நாயன்மார்களின் கதைகளில் வருவது போல் உள்ளது.அப்படியாக இருந்தால் என்னால் உருவாக்க முடியுமென நினைக்கிறேன்.--ஆதவன் (பேச்சு) 15:01, 6 மே 2013 (UTC)[பதிலளி]

ஆதவன் நண்பரே, மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ளவை, திருவிளையாடல் புராணம் என்பதில் உள்ள 64 நான்கு சிவனுடைய கதைகளாகும். சிவனுக்கும் அவன் பக்தர்களுக்கும் நடந்த சிறுசிறு நிகழ்வுகளின் தொகுப்புகள் என்று கூட கூறலாம். மேலும் இவற்றில் ஒன்றான தருமிக்குப் பொற்கிழியளித்த படலம், சிவாஜி நாகேஸ் நடிப்பினால் பரவலாக அறியப்பட்டுள்ளது. மற்றவை வெகுஜன மக்களை சென்று சேரவில்லை. படலம் என்பதற்கு சிறுபிரிவு என விளக்கம் தருகிறார் என் அன்னை. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்|உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகளில்]] இவற்றை எழுதுவதற்கான தளங்களின் இணைப்பும் கொடுத்துள்ளேன். திருவிளையாடல்களை தமிழ் விக்கிக்கு தர வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:18, 6 மே 2013 (UTC)[பதிலளி]
விக்கித்திட்டம் சைவத்தில் தங்கள் உழைப்புக்கு நன்றி. நேரமெடுத்து பங்களிக்க முயலுகின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:02, 6 மே 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி நண்பரே. கட்டுரைகளின் உருவாக்கம், மேம்பாடு போன்றோடு விக்கித்திட்டம் சைவத்தினை மேலும் சிறப்பாக ஆக்க தங்களது ஆலோசனைகளையும் கூற வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:21, 6 மே 2013 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைத்தமைக்கு நன்றி. ஆனால், இது குறித்த துறையறிவோ ஆர்வமோ இல்லை என்பதால் என்னால் பங்களிக்க இயலாத நிலை. பொதுவாக விக்கிச் செயற்பாடுகளில் என்னால் இயன்ற பங்களிப்பைத் தருகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:06, 7 மே 2013 (UTC)[பதிலளி]

உங்களிடமிருந்து வழிகாட்டல்களைத்தான் எதிர்ப்பார்க்கிறேன். அது கிடைக்கும் எனவும் நம்புகிறேன் நண்பரே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:08, 7 மே 2013 (UTC)[பதிலளி]

வலைவாசல்:இந்து சமயம்/சிறப்புக் கட்டுரை[தொகு]

வணக்கம். இன்றுதான் கவனித்தேன்... ஒரே ஒரு சிறப்புக் கட்டுரை மட்டுமே உருவாக்கியுள்ளீர்கள். எனது ஆலோசனை: அர்த்தமுள்ள இந்துமதம் (நூல்), தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், சுவாமி விவேகானந்தர் போன்ற கட்டுரைகளை காட்சிப்படுத்தினால் என்ன? இவையாவும் இந்து சமயம் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தானே? பரிசீலிக்கவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:48, 6 மே 2013 (UTC)[பதிலளி]

ஆம் நண்பரே,. இந்து சமயத்தின் பல்வேறு கட்டுரைகளை இன்னும் வளப்படுத்த வேண்டியுள்ளது. தங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். முதல் பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்ட இந்து சமய கட்டுரைகளை தேடி அவற்றையும் முன்நிறுத்த வேண்டும். அதற்குள் விக்கிப்பீடியா சைவம் திட்டம் மூலம் சில கட்டுரைகளை உருவாக்கி, மேம்படுத்தினால் நல்லது என்று நினைத்தேன். இன்றே, மற்ற கட்டுரைகளையும் காட்சிபடுத்துகிறேன் நண்பரே. அத்துடன் சிறப்பு படம் போன்றவற்றில் சிறந்தவைகளையும் ஆலோசனைகளை கூறுங்கள். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:23, 7 மே 2013 (UTC)[பதிலளி]

கொஞ்சம் இங்கேயும் கவனிக்கவும் nanbare.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:10, 7 மே 2013 (UTC)[பதிலளி]

வணக்கம் ஜெகதீஸ்வரன், நீங்கள் எனது பேச்சுப் பக்கத்தில் கேட்டுக்கொண்டதன்படி, எனது பரிந்துரைகளை வலைவாசலின் துணைப் பக்கங்களில் இட்டு வருகின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:19, 9 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:17, 9 மே 2013 (UTC)[பதிலளி]

படிமம்[தொகு]

ஜெகதீஸ்வரன் படிமங்களை உருவாக்க பயனர் ஆன்டன் உதவுவார். உங்களுக்கு தேவைப்படும் படிமங்களை அவரிடம் கேட்டுப்பாருங்கள். --குறும்பன் (பேச்சு) 23:15, 8 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 00:30, 9 மே 2013 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:35, 9 மே 2013 (UTC)[பதிலளி]
  • அன்புள்ள நடராசன், நீங்கள் உருவாக்கி இணைத்துள்ள 'சைவ நூல்கள்' படிமம் மிகவும் நன்று. சைவப் பலாச்சுளைகளை ஓரிடத்தில் பிட்டு வைத்துள்ளது. மிகச் சிறந்த தொண்டு. பாராட்டுகள். --Sengai Podhuvan (பேச்சு) 11:29, 9 மே 2013 (UTC)[பதிலளி]
நன்றி ஐயா! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:31, 9 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

ஜெகதீஸ்வரன், விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைத்தமைக்கு நன்றி. விரைவில் மேலும் கட்டுரைகள் எழுதுவேன். ----மயூரநாதன் (பேச்சு) 13:57, 10 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே. தங்களுடைய பணிகளுக்கிடையே விக்கித்திட்டம் சைவத்தினையும் மேம்படுத்த இசைந்தமைக்கு நன்றி பல.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:36, 10 மே 2013 (UTC)[பதிலளி]

சூர்ய சந்திர வம்சம் பற்றி கட்டுரைகள் தேவை[தொகு]

இந்த இணைப்பை பாருங்கள். இதிலுள்ள தகவல்க்ளையும் சேர்த்து சூர்ய சந்திர வம்சம் பற்றி கட்டுரை எழுதுங்கள். தனித்த்னியாக இருக்க வேன்டும். மேலதிக தகவல்களுக்கு en:Solar Dynasty, en:Lunar Dynasty--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:56, 16 மே 2013 (UTC)[பதிலளி]

சூரியவன்ஷி க்ஷத்ரியர்கள் என்று நீக்கப்பட்ட பக்கமாக காண்பிக்கிறது நண்பரே. தகவல்கள் இல்லை. :( --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:37, 16 மே 2013 (UTC)[பதிலளி]


நூலாசிரியர்கள்[தொகு]

வணக்கம் ஜகதீஸ்வரன். இளம்பூரனார், பேராசிரியர் போன்றோரை உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்தாலொழிய அவர்களை சைவ சமய நூலாசிரியர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:45, 18 மே 2013 (UTC)[பதிலளி]

சைவ இலக்கிய வரலாறு (நூல்) அடிப்படையிலேயே இணைத்தேன். வேண்டுமானால் நீங்களும் அந்நூலை படித்துப்பாருங்கள். துரைசாமிப் பிள்ளை அவர்கள் ஆய்வு செய்து எழுதியதை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:50, 18 மே 2013 (UTC)[பதிலளி]
இளம்பூரணர் கட்டுரையிலேயே அவர் சமணர் எனக் கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.(அண்ணாமலைப் பல்கலைக் கழக முதுகலைத் தமிழ் பட்டத்திற்கான பாடத்தில்) எனவே அவரைச் சைவசமய நூலாசிரியர் என்பது தகாது. மேலும் அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரா? அவர் எழுதிய சைவ சமய நூலகள் என்னென்ன என்பதனை அக்கட்டுரையில் குறிப்பிட்டால் நானும் அறிந்துகொள்ள இயலும். அவருடைய தொல்காப்பிய உரையை வைத்தே அவரை சமணர் எனக் கருதுகிறார்கள்.

மேலும் தாங்கள் மேற்குறிப்பிட்ட நூலில் பத்தாம் நூற்றாண்டு வரை மட்டுமே ஆய்வு ரீதியாக மெய்ப்பிக்கப்பப்பட்டுள்ளது. எனவே அந்நூலை சரியான மேற்கோளாகக் கருத முடியாது. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:58, 18 மே 2013 (UTC)[பதிலளி]

முழுவதும் ஆய்வு செய்துவிட்டு அவர் எழுதத்தொடங்கியதாகவும், காலச்சூழலால் 10ம் நூற்றாண்டு வரையான நூலாசிரியர்களைப் பற்றி எழுத இயன்றதாகவும் விளக்கியுள்ளார். பக் 33ல் சைவ இலக்கியங்களைத் தனித்தனியே காண்பது இனி நாம் மேற்கொள்ள வேண்டிய செயன்முறையாகும். இந்த இலக்கியங்களை ஆக்கித்தந்த ஆசிரியர்களை கீழ்க்காணும் காலமுறையில் மேற்கொள்வது முறை என்கிறார். மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள படி இளம்பூரணர் கட்டுரையில் இவர் சமணர் என்பது பெரும்பான்மை ஆய்வாளர் கருத்து என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்க்கம் இல்லை. பிற ஆய்வாளர்களின் கருத்துகளையும் செவி மடுக்க வேண்டுகிறேன். பகுப்பினை நீக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது. நீக்கியும் இருக்கின்றீர்கள். பிற ஆதாரங்களை அறியும் போது உங்களிடம் சமர்ப்பித்து பின் இணைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:14, 18 மே 2013 (UTC)[பதிலளி]

புரிதலுக்கு நன்றி :)நானும் இது போல ஆதாரம் இருந்தால் தேடிக் கட்டுரையில் இணைக்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:24, 18 மே 2013 (UTC)[பதிலளி]

சைவ வலைவாசல்[தொகு]

வலைவாசல் ஒன்றிற்கு உப பகுப்புகள் உருவாக்கும் போது வலைவாசலின் பெயரை முன்வைத்து பகுப்புகளை உருவாக்குவது நல்லது. உ+ம்: பகுப்பு:சான்றோர் கூற்று - சைவ வலைவாசல் என்பதற்குப் பதிலாக பகுப்பு:சைவ வலைவாசல்-சான்றோர் கூற்று எனத் தலைப்பிடலாம். மேலும், நீங்கள் உருவாக்குப் பக்கங்கள் எதுவும் தேவையற்றனவெனின் அதனை நீக்குவதற்கு delete வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 07:07, 19 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே!.அவ்வாறே செய்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:09, 19 மே 2013 (UTC)[பதிலளி]

இந்த வலைவாசல் பக்கத்தில் தோன்றும் அறிமுகம், சிறப்புக் கட்டுரைகள் போன்றவற்றில் காணப்படும் 'சிவப்பு இணைப்புகள்' கண்களுக்கு உறுத்தலாக உள்ளன. எனவே துணைப்பக்கங்களில் [[]] என்பதனை தாற்காலிகமாக நீக்கி விடலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:09, 21 மே 2013 (UTC)[பதிலளி]

நீக்கம் செய்வதற்குப்பதிலாக குறுங்கட்டுரையாக அமைத்துவிடலாம் நண்பரே. சிவப்பிணைப்பு என்பது எப்போதும் விக்கிப்பீடியர்களுக்கு ஆர்வமூட்டுகின்ற ஒன்றாகவே நான் நினைக்கிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:13, 21 மே 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரியே. ஆனால், நான் சொல்லவருவது என்னவென்றால்... வலைவாசலுக்குரிய துணைப் பக்கங்களில்தான் [[]] என்பதனை நீக்கப் பரிந்துரைக்கிறேன்; கட்டுரைகளின் பக்கங்களில் நீக்கச் சொல்லவில்லை. முகப்பில் சிவப்பு இருப்பது கண்களுக்கு இனிமையாக இல்லை என்பது எனது கருத்து! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 21 மே 2013 (UTC)[பதிலளி]

விரைந்து சீர் செய்கிறேன் நண்பரே!--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:21, 21 மே 2013 (UTC)[பதிலளி]

செவிசாய்த்தமைக்கு மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:04, 23 மே 2013 (UTC)[பதிலளி]

சென்னை விக்கியர் சந்திப்பு[தொகு]

மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:39, 21 மே 2013 (UTC)[பதிலளி]

அழைப்புக்கு நன்றி நண்பரே. வாரவிடுமுறை நாள் என்பதால் ஏகப்பட்ட திட்டங்கள் இருக்கின்றன. இயன்றால் வருகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:04, 21 மே 2013 (UTC)[பதிலளி]

என்ன செய்யலாம்[தொகு]

விக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:47, 23 மே 2013 (UTC)[பதிலளி]

குறுவழுதி என்ற பெயர் பாண்டிய அரசர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. பாண்டிய மன்னன் கலிமான் வழுதியை அண்டர்மகன் குறுவழுதியார் என்று சில வலைதளங்கள் தெரிவிக்கின்றன. அவரே பாடல் அமைத்தாரா அல்லது அவர் பெயர் மற்றொரு புலவரா என்று தெரியவில்லை. அண்டர்மகன் குறுவழுதாயாரை சிலர் பாண்டிய அரசன் என்கிறார்கள் என புலவர் கட்டுரையிலும், குறுவழுதியை புலவர் சிலர் என்கிறார்கள் என்று அண்டர்மகன் கட்டுரையிலும் இட்டு இரு கட்டுரைகளையும் காக்கலாம் என்பதே என் எண்ணம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:15, 24 மே 2013 (UTC)[பதிலளி]

சரிபார்க்கவும்...[தொகு]

வணக்கம், ஈஸ்வரன்!
'சைவ சமய பட்டியல் கட்டுரைகள்' எனும் பகுப்பின் கீழ் அம்மன் ஆலய வழிபாட்டு வகைகளின் பட்டியல் எனும் கட்டுரையைக் கொண்டு வந்துள்ளேன். சரிதானே? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:27, 25 மே 2013 (UTC)[பதிலளி]

சிவசம்மந்தமுடைய சைவம் என்கிறார் சம்மந்தர். அம்மன் சிவனாரின் சக்தியம்சம் என்பதால் நிச்சயம் இது ஏற்றதுதான். சைவனாகிய என்னைக் கேட்டால் அனைத்து கட்டுரைகளையும் கூட சைவத்தின் கீழ் இணைத்திடலாமென்பேன். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:04, 25 மே 2013 (UTC)[பதிலளி]

சைவ சமயப் பகுப்புகள்[தொகு]

வணக்கம் ஜகதீஸ்வரன். சைவ சமயம் குறித்த பகுப்புகளை கட்டுரைகளில் சேர்த்து வரும் நீங்கள் சிலவற்றை நினைவில் கொள்ளவும். நூலாசிரியர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்பதனால் அந்நூல் சைவ சமய நூல் என அப்பகுப்பில் சேர்க்க வேண்டாம். சைவ சமயக் கருத்துகளை மையப்படுத்தி எழுதிய நூல்களை மட்டுமே அப்பகுப்பில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சில நூல்களில் தொகுப்பாசிரியர்கள் கூட கடவுள் வாழ்த்தைப் பாடி இணைத்துள்ளனர். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:36, 28 மே 2013 (UTC)[பதிலளி]

சரிங்க,. ஏதேனும் தவறாக இணைத்திருந்தால் நீக்கிவிடுங்கள், நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:40, 28 மே 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புரு: வைணவம்[தொகு]

வார்ப்புரு: வைணவம் (ஆங்கில விக்கியிலிருந்து) என்பதை உருவாக்கினேன். சரிசெய்து உதவ முடியுமா?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:20, 28 மே 2013 (UTC)[பதிலளி]

தாராளமாக செய்கிறேன். ஆனால் வார்ப்புரு:வைணவ சமயம் என்ற வார்ப்பரு முன்பே உள்ளதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:27, 28 மே 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி ஜகதீஸ்வரன். இரண்டு வார்ப்புருவில் இடம்பெறும் செய்திகளையும் ஒரே வார்ப்புருவில் கொண்டு வாருங்கள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:38, 28 மே 2013 (UTC)[பதிலளி]

வடிவமைப்பு முடிந்துவிட்டது. கட்டுரைகளை இணைத்தல் பற்றி எனக்கு தெரியாதுங்க. :-( அதனால் இரு வார்ப்புருக்களையும் தாங்களே இணைத்துவிடுங்கள். வைணவம் பற்றிய கட்டுரைகள் ஏகம் இன்னும் எழுதப்பெறாமல் உள்ளது. தாங்கள் வைணவம் சார்ந்த கட்டுரைகளை கவனிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு. மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:06, 28 மே 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி ஜகதீஸ்வரன். வார்ப்புரு:வைணவம் என்ற தலைப்பை முதன்மைப்படுத்தி உள்ளடக்கங்களை இணைத்துள்ளேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:01, 29 மே 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைத் தலைப்புகள்[தொகு]

நன்றி ஜகதீஸ்வரன்.சரி செய்துள்ளேன். நேற்றிரவே அக்கட்டுரைகளை நீக்கினேன். ஆனால் பக்கத்தைச் சேமிக்கும்பொழுது இணையம் தொடர்பின்றி கிடைத்தால் இத்தவறு நிகழ்ந்துள்ளது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. நீங்கள் விரிவு படுத்திய கட்டுரைகளை அப்பட்டியலில் இருந்து நீக்காமல் ஆயிற்று என்ற குறியிடுங்கள். பிறரும் அறிந்துகொள்ள வசதியாக இருக்கும். அப்பக்கத்தை வேறொரு நாளில் இற்றை செய்துகொள்ளலாம். மீண்டும் நன்றிகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:34, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

நன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:44, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]


மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், Jagadeeswarann99/தொகுப்பு02!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)


கடந்த 30 நாட்களில் மட்டும் 2,862 தொகுப்புகள் செய்திருக்கிறீர்கள். அண்மைய நாட்களில் நான் அறிந்து யாரும் இந்த அளவு முனைப்பாக பங்களிக்கவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் அறிமுகமான காலத்தில் நீங்கள் இவ்வளவு சிறப்பான பங்களிப்பாளராக மிளிர்வீர்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக முனைப்பாக பங்களிக்க வாழ்த்துகள். அதே வேளை, உங்கள் உடல்நலம், பணி, விக்கிக்கு வெளியேயான வாழ்க்கைக்கும் உரிய கவனம் செலுத்த வேண்டுகிறேன். அன்புடன் --இரவி (பேச்சு) 07:14, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

தங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி நண்பரே. சைவத்திட்டம் இணைப்பின் காரணமாக தொகுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்குமென நினைக்கிறேன். :) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:23, 2 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் ஆம்.. ஜெகதீஸ்வரன் இரவு நீண்ட நேரம் கண்விழித்து விக்கியில் பங்காற்றுகிறீர்கள். தங்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொள்வது மிகவும் அவசியம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:24, 6 சூன் 2013 (UTC)[பதிலளி]

தங்களது கனிவுக்கு மிக்க நன்றிங்க. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:07, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புருக்கள்[தொகு]

ஜெகதீசுவரன், வார்ப்புருக்களில் தலைப்பை மாற்றுக போன்ற வேண்டுகோள்களை சேர்க்க வேண்டாம். அவ்வாறு இணைப்பது அவ்வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளில் குளறுபடியை ஏற்படுத்தும். பேச்சுப்பக்கங்களில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 07:53, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]

பேச்சுப்பக்கத்தில் குறிப்பட்டு பல மாதங்களாகியும் நடவெடிக்கை இல்லை. அதனையடுத்து புதியதாக அறிந்து கொண்ட தொடுப்பிணைப்பியை செயல்படுத்திப் பார்த்தேன். விரைந்து நடவெடிக்கை எடுக்கப்பெற்றது. மகிழ்ச்சியாக அடுத்தடுத்து தொடுப்பிணைப்பியை பயன்படுத்தினேன். இனி அவற்றை தவிர்க்கிறேன். பேச்சுப்பக்கம் தவிற வேறு வழி ஏதேனும் இருந்தாலும் தெரிவிக்கவும்,. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:06, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]
வார்ப்புருக்களின் தலைப்புகளைத் தமிழில் மாற்றுவதற்கு வேண்டுகோள் விடுக்கத் தேவையில்லை. நீங்களே மாற்றி விடலாமே.--Kanags \உரையாடுக 08:36, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]
நன்றிங்க --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]

தானியங்கியை விட வேகம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் Jagadeeswarann99 என்ற பெயரோடு ஏதோ ஒரு தொழில்நுட்பம் தானியங்கியை விட வேகமாக இயங்கி வருவதாக தெரிகிறது. அண்மைய மாற்றங்கள் பகுதியில் 80க்கும் மேற்பட்ட பங்களிப்புகள் தொடர்ச்சியாக Jagadeeswarann99 என்ற ஏதோ ஒரு தொழில்நுடபம் கொண்டு வழக்கமான தானியங்கிகளை விட மிக வேகமாக விக்கித்திட்டம் சைவம் என்னும் வார்ப்புருவை நீங்கள் இயக்கி வருவதாக அறிகிறேன். அந்த தொழில் நுட்பம் எது என்று அறியத்தந்தால் உதவியாய் இருக்கும். எது எப்படி என்றாலும் உங்கள் பங்களிப்புகளுக்கு பாராட்டுகள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:28, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--இரவி (பேச்சு) 18:09, 8 சூன் 2013 (UTC)[பதிலளி]
கட்டுரைகளை முன்பே நண்பர்கள் உருவாக்கி வைத்துவிட்டதனால் எளிமையாக விக்கித்திட்டத்தில் இணைத்துக்கொள்ள இயலுகிறது. இதற்கு நண்பர்களுக்குத்தான் நன்றி கூறவேண்டும். தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி். (அதற்காக தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டா என்னை ஓட்டுவது :-)) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:40, 7 சூன் 2013 (UTC)[பதிலளி]
அப்படியே, கட்டுரைப் போட்டியில் என்னைப் போன்றவர்களும் துரத்திப் பிடிக்க ஊக்கம் அளிக்கும் வகையில் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு பெருந்தன்மையுடன் சமயச் சுற்றுலாவுக்குச் சென்றிருப்பதற்கும் நன்றி :)--இரவி (பேச்சு) 18:09, 8 சூன் 2013 (UTC)[பதிலளி]
தென்காசியார் தானியங்கி தொழில்நுட்பம் என கையாண்டார், தாங்கள் சமய சுற்றுலா என்கிறீர்கள். உவமைகளை தமிழ்க்கவிஞர்களைப் போல எப்படி தேர்ந்தெடுக்கின்றீர்கள் என்பதை கற்றுத் தந்தால் எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பிறகு கட்டுரைப் போட்டியில் நான் எண்ணியதை விட குறைவான பங்களிப்புகளே நேருகின்றன. ஆனால் போட்டி என்பதை புறக்கணித்து ஒவ்வொரு கட்டுரையையும் போட்டி அளவுக்கும் மேல் மெருகேற்றுகிறார்கள். இதைவிட பெருந்தன்மை எவருக்கு வரும். தங்களுடைய ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:58, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்காக[தொகு]

[http:www.paranjothi mahan.com/video.html.பார்க்கவும்]--Yokishivam (பேச்சு) 17:09, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:27, 9 சூன் 2013 (UTC)[பதிலளி]