பயனர் பேச்சு:Gcsekaran

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Gcsekaran! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Gcsekaran, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Gcsekaran, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 14:26, 31 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சேலம் பயனரே![தொகு]

சேகரன் வருக! உங்கள் பயனர் பக்கத்தைப் பார்த்தேன். உங்கள் பணிகள் அருமை. உங்களைப் போன்ற துறைசார் நிபுணர்களும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வருகை தந்திருப்பது மகிழ்ச்சி. நானும் சேலம் தான். உங்களைச் சந்திக்க ஆவல். :) எனது மின்னஞ்சல் முகவரி: suryasalem2010﹫gmail.com

--சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 12:41, 18 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் - நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:49, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:13, 18 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் தொலைப்பேசி எண் தேவை. என் எண் 99431 68304. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான நேர அட்டவணை, இட விவரங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா பக்கத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். அருள்கூர்ந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 19:59, 27 செப்டம்பர் 2013 (UTC)

பத்தாண்டு கொண்டாட்டம் பற்றிய தங்கள் கருத்துகள்[தொகு]

விக்கிப்பீடியா பத்தாண்டுக் கொண்டாட்டம் பற்றிய தங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் என்ற பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். கட்டுரை வெளியில் தகவல் கட்டுரைகள் மட்டுமே இடம் பெறுகின்றன என்பதால் இந்த நகர்த்தல். திட்டப்பக்கத்தில் இதற்கென ஒரு தனிப்பகுதி இட்டு அங்கிருந்து இப்பக்கத்துக்கு இணைப்பும் தந்துள்ளேன். தங்கள் கருத்துகளுக்கு நன்றி. பின்வரும் காலங்களில் நடத்தும் நிகழ்வுகளுக்கு இதனை கருத்தில் கொள்கிறோம்.--சோடாபாட்டில்உரையாடுக 05:25, 30 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் நண்பரே, பத்தாண்டு கொண்டாட்டம் பற்றிய தங்களது கருத்திற்கு நன்றி. தங்களது கருத்துக்கள் எங்களை மேலும் வளம் செய்யும். எனினும் சில புரிதல்களின் குறைபாடு காரணமாக தங்களுடைய மனம் வருத்தில் இருப்பது குறித்து நானும் வருந்துகிறேன். மேலே நான் கொடுத்துள்ள பத்தாண்டு கொணடாட்டத்திற்கான இணைப்பினை நீங்கள் பார்த்தாலே உங்களுடைய புரிதல்கள் மாறுபடும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:31, 30 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:52, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

எனது கண்டனங்கள்...[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் கூடலில் நான் கலந்து கொள்ளாததால், இப்பக்கத்தில் எனது கருத்துகளை பதியவில்லை. இருந்தபோதிலும் குறைகளை சரியான பாங்கில் நீங்கள் தெரிவிக்கவில்லை என்பது எனது தெளிவான நிலை. பாகற்காயை அப்படியே உண்ணச் சொல்வது சரியன்று; தேங்காய், உப்பு, காரம், புளிப்பு சேர்த்து பதமாக சமைத்துத் தர வேண்டும். உங்களின் விமரிசனம் ஆக்கத்திற்கு உதவவில்லை. தமிழ், தமிழ் குமுகாயம் இவற்றின் நலனுக்காக நீங்கள் பேசுவதாக நினைத்தால்... எங்கும் எப்போதும் யோசித்துப் பேசுங்கள்; என்னைவிட வயதிலும், படிப்பிலும், அனுபவத்திலும், வெளியுலகத் தொடர்பிலும் நீங்கள் மூத்தவராக இருக்கலாம் என்பதால்... இதனை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா ஒரு தன்னார்வ அமைப்பு; இலாப நோக்கு கொண்டு இயங்கும் ஒரு வணிக நிறுவனமன்று என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:38, 15 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

வணிக இணையதளத்துக்கான இணைப்பு[தொகு]

தங்களின் வணிக இணையதளத்துக்கான இணைப்புகளை பல கட்டுரைகளில் சேர்த்துள்ளீர்கள். இவற்றை மீளமைத்துள்ளேன். முன்னரும் தங்களின் இதுபோன்ற இணைப்புகளை கட்டுரைகளில் சேர்த்திருந்தீர்கள். இந்நடவடிக்கை தொடர்ந்தால் தங்களை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதற்குத் தடை செய்ய வேண்டி வரலாம்.--Kanags \உரையாடுக 12:52, 13 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Gcsekaran&oldid=2285767" இலிருந்து மீள்விக்கப்பட்டது