உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Freedom dillibabu

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Freedom dillibabu, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்பிற்கும் தொகுப்பிற்கும் நன்றி. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கலை (பேச்சு) 05:17, 27 செப்டெம்பர் 2025 (UTC)Reply

வாழ்த்துகள்

[தொகு]

புதிய கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு வாழ்த்துகள். உருவாக்கும் கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்து உதவுங்கள். கபுர்த்தலா இரயில் பெட்டி தொழிற்சாலை-- சா. அருணாசலம் (உரையாடல்) 15:40, 15 அக்டோபர் 2025 (UTC)Reply

கட்டுரையினை உறுதி படுத்துதல்

[தொகு]

வணக்கம். தாங்கள் புதிதாக ஒரு கட்டுரையினைத் தொடங்கும் போது அக்கட்டுரை தமிழில் உள்ளதா என்பதை உறுதிப் படுத்தியப் பின்னர் தொடங்கவும். அண்மையில் நீங்கள் தொகுத்த கட்டுரை (இந்திய மசாலா வாரியம்) ஏற்கனவே உள்ள கட்டுரையினைவிட (இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம்) விரிவாக உள்ளதால் அதனை அக்கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. Chathirathan (பேச்சு) 14:40, 22 நவம்பர் 2025 (UTC)Reply

கட்டுரைகளின் தரம்

[தொகு]

வணக்கம். பெருமுயற்சி கொண்டு கட்டுரைகளை எழுதிவருவதற்கு பாராட்டுகள். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கோள்கள் வேலை செய்வதில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பதை அப்படியே இங்கு நீங்கள் இடுவதை பார்க்க முடிகிறது. அங்கு இருக்கும் குறைபாடுகள் தமிழ் விக்கிப்பீடியாவிலும் இருப்பதை ஏற்க இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி, உங்களுக்கு கற்றுத் தந்தவர்களிடத்து உதவி கேளுங்கள். ஏற்கனவே எழுதியிருக்கும் கட்டுரைகளை மேம்படுத்திய பிறகு, புதிய கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:40, 17 திசம்பர் 2025 (UTC)Reply

வணக்கம். வேண்டுகோள் விடுத்தும், அதனை கவனத்திற்கொள்ள நீங்கள் தயாராக இல்லை. உங்களால் உருவாக்கப்படும் கட்டுரைகளின் தரத்தில் குறைபாடுகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்:

# நரிங்கி கட்டுரையில் இரண்டு மேற்கோள்கள் வேலை செய்யவில்லை. இதுவரை உருவாக்கப்படாத பகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
# கல்லார் கட்டுரையில் மேற்கோள் வேலை செய்யவில்லை.

நீங்கள் இதுவரை எழுதிய கட்டுரைகளின் பட்டியல்: பட்டியல்

இதுவரை எழுதியிருக்கும் கட்டுரைகளை மேம்படுத்திய பிறகு, புதிய கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். தரம் குறித்து கவனம்கொள்ளாது கட்டுரைகளை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தால், பங்களிப்பதற்கான கணக்கு தடைக்கு உள்ளாக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 19 திசம்பர் 2025 (UTC)Reply

என்னுடைய கட்டுரைகளில் உள்ள குறைபாடுகள் வேண்டுமென்றே சரி செய்யாமல் விடுவதில்லை. குறைகளை களைய முயல்கிறேன்.எனக்கு தெறிந்த வரை. அப்படி உள்ள குறைபாடுகளை தாங்களே கூட நிவர்த்தி செய்யலாம். Freedom dillibabu (பேச்சு) 02:33, 20 திசம்பர் 2025 (UTC)Reply

பதிலளித்தமைக்கு நன்றி!

விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் பங்களிப்பவர்கள், வேண்டுமென்றே தவறு செய்வதாகவோ சரிசெய்யாமல் விடுவதாகவோ நான் கருதவில்லை. மற்ற பயனர்கள் தெரிவிக்கும் வழிகாட்டல், நெறிப்படுத்தும் குறிப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். மீண்டும் எனது கருத்தினை வலியுறுத்துகிறேன்: இதுவரை எழுதியிருக்கும் கட்டுரைகளை மேம்படுத்திய பிறகு, புதிய கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

//குறைபாடுகளை தாங்களே கூட நிவர்த்தி செய்யலாம்.// இந்தக் கருத்தினை ஏற்கிறேன். ஆனால், இது அலுவகப் பணியன்று. நீங்கள் தன்னார்வமாக இங்கு பங்களிப்பது போன்று, நானும் ஒரு தன்னார்வப் பங்களிப்பாளர். குறைபாடுகளை திருத்திக்கொண்டே இருப்பதை மட்டும் நான் செய்துகொண்டிருக்க இயலாது. எனக்கு விருப்பமான பணிகளை நான் இங்கு செய்யவேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நிலைநிறுத்த விரும்பும் தன்னார்வலர்களில் ஒருவன் எனும் காரணத்தால், வழிகாட்டல், நெறிப்படுத்தும் குறிப்புகளை நான் வழங்குகிறேன். தரமான கட்டுரைகளை எழுதுவது ஒவ்வொரு பங்களிப்பாளரின் பொறுப்பாகும்.

என்னுடைய பேச்சுப் பக்கத்தில் உங்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தால், சனி / ஞாயிறு நாட்களில் 'கூகுள் மீட்' வாயிலாக ஒரு மணி நேரம் உரையாடவும் நான் தயாராக இருக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:13, 20 திசம்பர் 2025 (UTC)Reply

வணக்கம்.
நாளை மாலை நான் தயார். நீங்கள் இணைப்பை அனுப்புங்கள்.
மிக்க நன்றி. Freedom dillibabu (பேச்சு) 14:06, 20 திசம்பர் 2025 (UTC)Reply

நகர்பேசி எண்ணை நீக்கியுள்ளேன். 'கூகுள் மீட்டில்' இணைவதற்குரிய இணைப்பை இங்கேயே விரைவில் பகிர்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:34, 20 திசம்பர் 2025 (UTC)Reply

அசத்தும் புதிய பயனர்

[தொகு]
அசத்தும் புதிய பயனர்
வாழ்த்துகள். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்கத் தொடங்கிய சிறிது காலத்தில் தொடர்ந்து பங்களிக்கும் விடாமுயற்சியுடன் 100 கட்டுரைகள் தொடக்கம் என்ற இலக்கினை எட்டியுள்ளீர்கள். தொடர்ந்து விக்கியின் நடைமுறை நுட்பங்களை ஐயமறக் கற்று இன்னும் சிறப்பான பங்களிப்பை வழங்க வாழ்த்துகள். மகாலிங்கம் இரெத்தினவேலு 16:57, 20 திசம்பர் 2025 (UTC)Reply
விருப்பம்.--ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:00, 21 திசம்பர் 2025 (UTC)Reply
தங்களது பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், வழிகாட்டலுக்கும், மிக்க நன்றி ஐயா. Freedom dillibabu (பேச்சு) 17:25, 20 திசம்பர் 2025 (UTC)Reply
👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 15:36, 21 திசம்பர் 2025 (UTC)Reply

100 கட்டுரைகள்

[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவில் 100 கட்டுரைகள் எழுதியதற்கு உளமார்ந்த வாழ்த்துகள். ஏனைய பயனர்களின் கருதுகளைக் கேட்டு இன்னும் சிறப்பாக பங்களித்து இணையத் தமிழ் வளர்ச்சிக்கு உதவவும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:36, 21 திசம்பர் 2025 (UTC)Reply

மிக்க நன்றி. Freedom dillibabu (பேச்சு) 15:10, 21 திசம்பர் 2025 (UTC)Reply
வாழ்த்துகள் சார்--கி.மூர்த்தி (பேச்சு) 15:37, 21 திசம்பர் 2025 (UTC)Reply
மிக்க நன்றி ஐயா. தங்களது வழிகாட்டுதலும், ஆலோசனைகளால் தான் இது சாத்தியமானது. Freedom dillibabu (பேச்சு) 16:04, 21 திசம்பர் 2025 (UTC)Reply

கூகுள் திட்டத்திற்கான வார்ப்புருக்கள்

[தொகு]

வணக்கம். இத்திட்டத்திற்கென {{கூகுள்25 புதிய கட்டுரை}}, {{கூகுள்25 மேம்படுத்தப்பட்ட கட்டுரை}} ஆகிய வார்ப்புருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

{{கூகுள்25 புதிய கட்டுரை|- ~~~~}} அல்லது {{கூகுள்25 மேம்படுத்தப்பட்ட கட்டுரை|- ~~~~}} என்பதாக உரையாடல் பக்கத்தில் இட்டால்... உங்களின் பெயர், நேரம், தேதி ஆகியனவும் பதிவாகிவிடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:48, 18 செப்டெம்பர் 2025 (UTC)Reply

பகுப்புகள்

[தொகு]

நீங்கள் உருவாக்கிய பகுப்பு:ஈரோடு மாவட்ட கிராமங்கள் என்ற பகுப்பு ஏற்கனவே பகுப்பு:ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் என்ற பெயரில் உள்ளது. பகுப்புகளை உருவாக்கும் போது தேடிப் பார்த்து உருவாக்குங்கள். நன்றி. -- சா. அருணாசலம் (உரையாடல்) 10:58, 24 திசம்பர் 2025 (UTC)Reply

ok sir,
thank you. Freedom dillibabu (பேச்சு) 11:31, 24 திசம்பர் 2025 (UTC)Reply

வணக்கம். காக்கிநாடா மாவட்டத்திலுள்ள கிராமங்கள் எனும் பகுப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். உருவாக்கும் பகுப்பினை உரிய தாய்ப் பகுப்பினுள் அடங்குமாறு செய்யவேண்டும் என்பதனை கருத்திற்கொள்ளுங்கள். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:33, 17 சனவரி 2026 (UTC)Reply

Good morning sir
I will check. Sir i want your cell no kindly give me. my cell no 9841398828. Freedom dillibabu (பேச்சு) 03:26, 17 சனவரி 2026 (UTC)Reply
இட்டா நகரில் உள்ள சுற்றுலா தலங்கள் போன்ற தேவையற்ற பகுப்புகளை உருவாக்காதீர்கள். சுற்றுலாத் தலங்கள் பகுப்புகள் நகரங்கள் வாரியாக உருவாக்கத் தேவையில்லை.--Kanags \உரையாடுக 11:03, 17 சனவரி 2026 (UTC)Reply

மாவட்டங்கள் வாரியாக ஆந்திரப் பிரதேச கிராமங்கள் எனும் தாய்ப் பகுப்பினை கவனித்து, அதற்கேற்ப சேய்ப் பகுப்புகளை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பகுப்புகள் குறித்து உதவி தேவையெனில் கட்டுரையின் உரையாடல் பக்கம் அல்லது பகுப்பின் உரையாடல் பக்கம் அல்லது மற்ற பயனர்களின் உரையாடல் பக்கத்தில் நாம் கேட்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:10, 18 சனவரி 2026 (UTC)Reply

பகுப்பு:கிழக்கு கோதாவரி மாவட்ட கிராமங்கள், பகுப்பு:நெல்லூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள், பகுப்பு:சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்ட கிராமங்கள் ஆகிய பகுப்புகள் முழுமைபெறாது உருவாக்கப்பட்டுள்ளன. உதவிக் குறிப்பு உங்களின் உரையாடல் பக்கத்தில் இடப்பட்டிருந்தாலும் (மேலே காணவும்), அதனைக் கவனித்து, உரிய மேம்பாட்டினை நீங்கள் செய்யவில்லை. பகுப்பு:கேரளாவில் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள், பகுப்பு:கேரள வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆகிய பகுப்புகளும் முழுமையடையாது உள்ளன. மேம்பாடுகளைச் செய்யாமல் இதனைத் தொடர்ந்தால், பகுப்புகளை உருவாக்க இயலாத வகையில் உங்களின் கணக்கிற்கு தடை விதிக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:37, 19 சனவரி 2026 (UTC)Reply

விலங்குகள் பெயர்

[தொகு]

வணக்கம், தற்பொழுது நீங்கள் மொழிபெயர்த்து வரும் காட்டுயிர் காப்பகங்கள் தொடர்பான கட்டுரைகளில் விலங்குகள், பறவைகளின் பெயர்களை தானியங்கி மொழிபெயர்ப்பினைத் தவிர்த்து அதற்கான உரிய பொதுப்பெயரினைப் பயன்படுத்தவும். உம். சோம்பல் கரடி -தேன் கரடி, மெதுவான லோரிச (பெரிய தேவாங்கு). நீங்கள் உருவாக்கிய இதுபோன்ற அனைத்து கட்டுரைகளையும் சரி செய்யவும். Chathirathan (பேச்சு) 15:45, 17 சனவரி 2026 (UTC)Reply

வணக்கம் ஐயா குறைபாடுகளை களைய முயற்சி மேற்கொள்கிறேன்.
நன்றி. Freedom dillibabu (பேச்சு) 15:50, 17 சனவரி 2026 (UTC)Reply

கலைக்களஞ்சியக் கட்டுரை

[தொகு]

வணக்கம், Freedom dillibabu!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 16:45, 5 பெப்ரவரி 2026 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Freedom_dillibabu&oldid=4462581" இலிருந்து மீள்விக்கப்பட்டது