பயனர் பேச்சு:Eswar physics

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Eswar physics, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--Umapathy (உமாபதி) 11:59, 22 ஆகஸ்ட் 2007 (UTC)

முதல் கட்டுரை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Eswar physics!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Kanags \உரையாடுக 21:32, 1 மார்ச் 2016 (UTC)

மணல்தொட்டி[தொகு]

வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து அறிவியல் சார்ந்த கட்டுரைகளை எழுதுங்கள். குறிப்பாக இயற்பியலில் அதிக கட்டுரைகள் இல்லை. இருக்கும் சில கட்டுரைகளும் குறுங்கட்டுரைகளே. அவற்றையும் முடிந்தால் மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒரு புதிய கட்டுரையை மணல்தொட்டியில் எழுதிப் பழக வேண்டுமென்றால் உங்கள் பயனர் மணல்தொட்டியைப் பயன்படுத்தி எழுதி முடித்து விட்டு குறிப்பிட்ட தலைப்பை மீண்டும் புதிய கட்டுரையாக உருவாக்கி மணல்தொட்டியில் எழுதியவற்றை cut and paste செய்யலாம். அல்லது "பயனர்:Eswar physics/குவாண்டக் கணினியியல்" (உதாரணம்) என்ற தலைப்பில் ஒரு மணல்தொட்டியை உருவாக்கி எழுதி முடித்து விட்டு முழுவதையும் குவாண்டக் கணினியியல் என்ற முதன்மைத் தலைப்புக்கு தலைப்பை மாற்றலாம். இரண்டாவது முறையே சிறந்தது. இதனால் உங்கள் மணல்தொட்டித் தொகுப்புகளும் கட்டுரை வரலாற்றுடன் இணைந்திருக்கும். மேலும் விளக்கம் தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:42, 1 மார்ச் 2016 (UTC)

நன்றி அண்ணா! நீங்கள் சொன்ன மாதிரிதான் என்னையும் அறியாமல் செய்திருக்கிறேன், ஆனால் முதன்மைத் தலைப்புக்கு மாற்றியபொழுது, கொஞ்சம் குழப்பமாகிவிட்டது, திரும்பவும் மணல்தொட்டிக்கு மாற்றவேண்டியதாகிவிட்டது! அதை முதன்மைத்தலைப்புக்கு மாற்றியதற்கு நன்றி! --Eswar (பேச்சு) 12:19, 2 மார்ச் 2016 (UTC)
@Eswar... வாழ்த்துகள்; தொடர்ந்து பங்களிக்க எனது வேண்டுகோளை தங்களிடம் முன் வைக்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:25, 2 மார்ச் 2016 (UTC)
மிக்க நன்றி மா. செல்வசிவகுருநாதன் ஐயா, இயன்ற அளவு செய்கிறேன்! --Eswar (பேச்சு) 13:35, 2 மார்ச் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Eswar_physics&oldid=2032399" இருந்து மீள்விக்கப்பட்டது