பயனர் பேச்சு:Esan~tawiki

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Esan~tawiki, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


--Natkeeran 19:32, 7 ஜூன் 2008 (UTC)

நல்வரவு[தொகு]

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை கட்டுரையில் சேர்க்கவும் நன்றி. --Natkeeran 19:32, 7 ஜூன் 2008 (UTC)

பகுப்பு:ஈழத்து வானொலி ஒலிபரப்பாளர்கள்[தொகு]

நீங்கள் எழுதவருவது எனக்கு விளங்கவில்லை. [[பகுப்பு:ஈழத்து வானொலி ஒலிபரப்பாளர்கள்]] ஐ மீள்விக்க இருக்கின்றேன் --உமாபதி \பேச்சு 12:25, 8 ஜூன் 2008 (UTC)

ஈஸ்வரதாசன் நீங்கள்தானா?[தொகு]

ஈஸ்வரதாசன் என்பது நீங்களாக இருந்தால், ஏன் உங்களைப் பற்றி இங்கு கட்டுரை இருக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டுகிறேன். ஒருவரைப் பற்றி விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் ஒரு கட்டுரை இருக்க வேண்டுமெனில், விக்கிப்பீடியா கொள்கைகளின்படி குறிப்பிடத் தகுதி என்று ஒன்றிருக்க வேண்டும். நோபல் பரிசு பெற்றவர்கள், பெரும் பணியாற்றி புகழ் படைத்தவர்கள் என்று தகுதி பற்றிய ஒரு புரிதல் வேண்டும். இங்கு விக்கிப்பீடியாவில் ஏதோ ஒரு படத்தில் சிறு பாத்திரமாக பங்கேற்றவர்களைப் பற்றிக் கூட எழுதுகிறார்கள். இவை பற்றி ஒரு முடிவு எடுக்க வேண்டியிருக்கலாம். ஏற்ற தகுதிகள் ஈஸ்வரதாசன் அவர்களுக்கு இல்லை என்பதல்ல என் முன்முடிவு. நீங்களே இந்த ஈஸ்வரதாசனா என்று முதலில் தெரியவில்லை. --செல்வா 22:00, 8 ஜூன் 2008 (UTC)


வணக்கம் செல்வா அவர்களே!

அருமையான கேள்வி.

இந்த இணையத்தில் பலரது வெளிப்பாடுகளைப் பார்த்தேன். அதனால் அவர் பற்றி அறிந்த வற்றை தந்தேன். எனது நோக்கம் அப்படிப்பட்டவர்களின் விடயங்களை இப் பகுதியில் தொகுப்பதுதான். அவற்றில் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்களையே நான் இங்கு தொகுக்க விரும்புகிறேன். கலைஞர்களுக்கு தெரியாமல் அவர்களது திறன் விடயங்களை அறிந்தவர்கள் தொகுப்பது என்ற எண்ணத்தில் இப்படிப்பட்ட தொகுப்பை எழுத எண்ணினேன். அவர்களே தொகுப்பதுவே சரி எனக் கருதினால் அவர்களிடம் இதனைத் தெரியப்படுத்தி விடுகிறேன். அவர்களது தொடர்பு கிடைத்தால் உங்களைத் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன்.

எனது தொகுப்பிற்கு முக்கியம் கொடுத்த உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் இணையத் தள குழுமத்திற்கும் நன்றி. நீங்களே குறிப்பிட்டவரை அறிந்திருந்தால் மட்டும் இப் பகுதியை இணையத்தில் இயணயுங்கள் இல்லாவிட்டால் முற்றாக நீக்குங்கள். நான் வேறு பகுதிகளில் எனது பங்களிப்புகளை வழங்கலாம். நீங்கள் கேட்பது போலல்லாமல் தகுதியற்றது என நீங்கள் கருது மிடத்தில் நீங்கள் முற்றாக நீக்குங்கள். அதையே நானும் வரவேற்பேன்.வரவேற்கிறேன்.எனவே இதைக் கருத்தில் எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.


உங்களின் பங்களிப்புகளை வரவேற்கிறோம். நீங்கள் இட்ட கட்டுரை தகுதியானது என்றே நினைக்கிறேன். நபர்களைப் பற்றி இடும் பொழுது, முக்கியத்துவத்தை கணிப்பதில் சற்று சிக்கல் இருக்கிறது. ஏன் என்றால் ஒரு பகுதியினருக்கு முக்கியமாகப் படும் நபர்க் இன்னொரு பகுதியினருக்கு சற்றும் கூட அறிமுகம் இல்லாது இருக்கலாம். சமயப் பெரியோ, அரசியல் வாதிகள், சினிமாத் துறையினர் என பல துறை சார்ந்தோர்ருக்கும் இக்கூற்று பொருந்தும். எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் உலகளாவிய நோக்கில் பெரும் புகழ், அல்லது தகுதி உடையோர் மட்டுமல்ல, எமது சமூகங்களிலும் முக்கிய பணிகளைச் சொய்தோரையும், அறிவியலாளர்களையும், கலைஞர்களையும் த.வி சேர்க்க வேண்டும். இதை நிலை நிறுத்த ஒரு சில தகுந்த உசாத்துணைகள் அல்லது மேற்கோள்கள் தந்தால் நன்று. அனைத்த நடிகர் நடிகைகள் சேர்க்கப்படும் அனுமதிக்கும் பொழுது, ஒரு ஒலிபரப்பாளர், சமூக சீர்திருததவாதி போன்றோர் சேர்க்கப்பட ஏன் நாம் தயங்க வேண்டும். ஒருவர் தன்னைப் பற்றி தானே எழுதுவது அவ்வளவு வரவேற்ப்பபைப் பெறுவதில்லை. ஆனால் நிச்சியம் அந்த நபர் வேண்டிய தகவல்களை தரலாம், சுட்டலாம். தேவைப்பட்டால், நேரடியாகவும் தொகுக்கலாம்.

உங்கள் பணிகள் தொடரட்டும். நன்றி. --Natkeeran 15:55, 9 ஜூன் 2008 (UTC)

என் கருத்துக்களை பேச்சு:ஈஸ்வரதாசன் என்னும் பக்கத்தில் சேர்த்திருக்கின்றேன். நற்கீரன், அனைத்து நடிகர்களையும் பற்றி ஏன் சேர்க்க வேண்டும் என்பதே என் கேள்வி. ஈஸ்வரதாசன் அரிய செயல்கள் செய்த முக்கியமானவர்தான் என்று நற்கீரனும், கனகும் போன்றவர்கள் சொன்னால், நான் ஏற்கிறேன், ஏனெனில் அவர்கள் அது பற்றிய தகுதிகள் அறிந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். என் கருத்து என்னவென்றால் எல்லா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பற்றித் தனி கட்டுரைகள் இருக்க வேண்டியதில்லை. குறிப்பிடத்தக்க அரிய செயல்கள் செய்து புகழ் ஈட்டி இருந்தால் மட்டுமே அவர்களைப் பற்றிய தனிக் கட்டுரைகள் இருத்தல் வேண்டும். இது என் தனிக் கருத்துதான். --செல்வா 22:29, 9 ஜூன் 2008 (UTC)

இக் கொள்கையையும் பார்க்க வேண்டுகிறேன்: வாழும் தனி மனிதர்களின் வரலாறுகள்--செல்வா 22:33, 9 ஜூன் 2008 (UTC)


நன்றி. செல்வா

தளத்தில் உள்ளமைபோன்று பார்க்கையில் ஈழத்து நபர்கள் ஈழத்தவானொலி ஒலிபரப்பாளர்கள் என்று உட்புகும் பகதிகளின் கணிப்பிலே இக்கட்டுரையை எழுதினேன்.

இக்கட்டுரை குறித்து ஈஸ்வரதாசன் பற்றிய தகவல்களை பெறவிளைந்தேன். அவர் தற்போது ஐ.பி.சி வானொலியல் தற்காலிகமாக பணியில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அரிய பணிகள் என்று பார்க்கும்போது புலப்பெயர்வில் பல தமிழ்ச் சிறுவர்களுக்க மொழி ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளமையை பார்க்கலாம் இல்லையா? காரணம் நான் அறிந்த வகையில் இப் பணியை அவர் புரிந்ததாக பல அன்பர்கள் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். எனவே பல்லினக்கலாச்சாரச் சூழலில் அது குறிப்பிடத்தக்க பணியாகப் பார்க்கலாம். அத்தோடு தமிழ் தொலைக்காட்ச்சி விளம்பர உத்திகளில் இப்போ வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அது ஒரு சாதனைப்போக்கு அல்லவா?

இரட்டைவேட விளம்பரத்தில் தோன்றியமை குறிப்பிடத்தக்கதாகவே கருதுகிறேன்.

இத் தளத்தில் நம்மவர்களின் பல தகவல்கள் வந்துள்ளது. அதில் டக்ளஸ் தகவலும் வந்துள்ளது.

என்ன தகுதி வேண்டும்? என எனக்குத்தெரியவில்லை.

இருந்தாலும் இத் தளத்தின் அடிப்படைக் கொள்ளகை தமிழ்ப் பகுதியில் எதுவாகக் கொள்ளப்படுகிறது எனப் புரியவில்லை.

விரைந்து நீக்கப்பட வேண்டிய கட்டுரை என்று குறிப்பிட்டுள்ளீர்கள் எனவே உடனடியாக நீக்கப்படுதல் பொருத்தமானது.

எனக்கு புரியவில்லை.

ஆனாலும் பல சமூகப்பணிகளில் புரியாமல் சாதாரணமாக நிகழ்வன காலம் கடந்தே சாதனைகள் என்றுதெரியவருகின்றன. சில காலத்தில் கரைந்து போகின்றன. இன்னும் சில இருட்டடிப்பு செய்யப்படடு விடுகின்றன. சில இன்னும் அடக்கப்படுகின்றன. நம் தமிழ் சமூகம் எதனையும் கண்டும் காணமலும் விட்டு விடுவதில் முன்னிற்பதற்கு தயங்குவதில்லை. காலத்தின் சாபம். 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்.' அவருக்கு நான் இத்தளத்தில் வெளியிட்டது தெரிந்திருக்க வாய்பபுமில்லை. ஆனால் அவரது சில விடயங்களை அனுமதியின்றி இங்கு தந்தமை தவறென்பதை இப்போ உணர்கிறேன். அவரிடம் குறைவிளங்க வேண்டாமெனக் கேட்டுககொள்கிறேன். என்னிடம் தரப்பட்டிருந்த சில தனிப்பட்ட தகவல்களை துஸ்பிரயோகம் செய்துவிட்டேன். அவரது படைப்புக்களை அவர் வெளியிட தயாரித்த சில விடயங்கள் எனது தெரிந்தவரிடமிருந்து பெறப்பட்டது. எனவே அந் நண்பரும் இதை அறிந்தால் குறைவிளங்க வேண்டாம். ஈஸ்வரதாசன் பணிகளுக்கு இது இடைஞ்சலாக இருந்திருப்பின் இது எனது தவறே அன்றி . விக்கிபீடியாவின் தவறன்று.

இப்படிக்கு சற்குணம் சிறிதரன்.

லோகேஸ்[தொகு]

பகுப்பு பக்கங்களில் கட்டுரைத் தகவல்கள் சேர்க்கப்படுவதில்லை. ஆதனால், உங்கள் தகவல்களை ஒரு கட்டுரையாக தொடங்கி இட்டுள்ளேன். நீங்கள் மேலும் விரிவு படுத்தலாம். நன்றி. --Natkeeran 20:27, 16 ஜூன் 2008 (UTC)

Your account will be renamed[தொகு]

08:29, 20 மார்ச் 2015 (UTC)

பெயர் மாற்றப்பட்டது[தொகு]

11:59, 19 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Esan~tawiki&oldid=1845490" இலிருந்து மீள்விக்கப்பட்டது