பயனர் பேச்சு:DORAI RAJ L

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், DORAI RAJ L! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் DORAI RAJ L, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--Kanags \உரையாடுக 23:14, 16 சனவரி 2011 (UTC)

ஆளுநர்[தொகு]

நல்ல கட்டுரை. சிறப்பாகத் துவங்கிய்ள்ளீர்கள். என் வாழ்த்துகள் :-). --சோடாபாட்டில்உரையாடுக 04:10, 17 சனவரி 2011 (UTC)

--Eldiaar 06:26, 25 சனவரி 2011 (UTC)அய்யா, எனக்கு இந்த வலைத்தளம் குறித்த போதிய தொழில்நுட்ப அறிவு போதாத காரணத்தால் என்னால் சரியாக இதில் பங்களிக்க முடிவதில்லை. இந்தப் பதில் எழுதும் பக்கத்தைப் பற்றிக்கூட இன்று வரை எனக்குத் தெரியாது. இருப்பினும் தங்களுடைய இன்னும் பிறருடைய புதிய செய்திகள் எனக்கு வழங்கப்பட்ட பொது கூட அவற்றிற்கு எப்படிப் பதில் எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை. அதனாலேயே இன்று வரை நான் எந்த ஒரு மறுமொழியையும் தங்களுக்கு அளிக்கவில்லை. இன்று தேனி. எம். சுப்பிரமணியன் அவர்களின் எண் கிடைத்தது; அவருடன் பேசிய பிறகே எனக்கு இங்கு எப்படி எழுத வேண்டும் என அவர் கற்றுக் கொடுத்தார்.

புதிய சொற்களை அல்லது பக்கங்களைச் சேர்க்கும்பொழுது குறியீடுகளை (உம். [[, {{, #) எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த உதவிப் பக்கங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைப் பற்றிய செய்தியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடுவண் அரசு[தொகு]

இந்திய அரசு என்றொரு கட்டுரை ஏற்கனவே உள்ளது. எனவே நீங்கள் புதிதாக உருவாக்கிய கட்டுரையை நீக்கியுள்ளேன். நீங்கள் புதிய மாற்றங்களை இக்கட்டுரையில் செய்யலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 18:51, 20 சனவரி 2011 (UTC)

விக்சனரி சொற்கள்[தொகு]

வணக்கம், விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாடு கட்டுரையில் மிக அவசியமான சில திருத்தங்களைச் செய்திருக்கிறீர்கள். நன்றி. மேலும், உங்கள் பிளிரல், கரைதல் போன்ற கட்டுரைகள் எமது சகோதரத் திட்டமான விக்சனரியில் இடத் தகுதியானவை. விக்கிப்பீடியா கட்டுரையில் குறைந்தது இரண்டு மூன்று பந்திகளாவது சேர்க்க வேண்டும். இப்படியான குறுங்கட்டுரைகள் வரவேற்கப்படுவதில்லை. அல்லது குறைந்தது விரிவாக்கப்படக் கூடிய தலைப்புகளாக இருக்க வேண்டும். இன்னும் ஒன்று, உங்கள் தமிழ் 2011 கட்டுரை விக்கிக் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றது அல்ல. எனவே அதனை நீக்கியிருக்கிறேன். தொடர்ந்து உங்கள் பங்களிப்பைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறோம். நன்றி.--Kanags \உரையாடுக 23:20, 20 சனவரி 2011 (UTC)

கனக்ஸ் கூறியுள்ளதை வழிமொழிகிறேன். கரைதல், பிளிறல் போன்ற கட்டுரைகள் விக்சனரிக்கு பொருத்தமானவை. (விக்சனரி = விக்கி +டிக்சனரி). எனவே அச்சொற்களையும் (இனி அதுபோல உருவாக்க நினைப்பவற்றையும்) விக்சனரியில் உருவாக்குங்கள். உங்கள் பங்களிப்புகளுக்கு எனது பாராட்டுகள்--சோடாபாட்டில்உரையாடுக 03:51, 21 சனவரி 2011 (UTC)

ஊர்வன[தொகு]

ஊர்வன கட்டுரையில் நீங்கள் எறும்பு, நண்டு முதலியவற்றைச் சேர்த்திருந்தீர்கள். அவை ஊர்ந்து செல்வன என்றாலும் ஊர்வன (reptilia) என்ற குறிப்பிட்ட அறிவியல் வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை என்பதால் அவற்றை நீக்கியுள்ளேன். வேறு பொருத்தமான தலைப்பின்கீழ் அவற்றைச் சேர்க்கலாம். நன்றி. -- சுந்தர் \பேச்சு 08:45, 22 சனவரி 2011 (UTC)

தமிழ்நாடு காவல்துறை[தொகு]

ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை என்றொரு கட்டுரை உள்ளது. நீங்கள் புதிதாக சேர்க்க நினைப்பவற்றை இதில் சேர்த்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 13:21, 22 சனவரி 2011 (UTC)


Eldiaar அவர்களே, உங்கள் மாற்றங்களுக்கு பாராட்டுக்கள். இருப்பினும், தமிழில் பல சொற்கள் வேற்று மொழியில் இருந்து மருவி வந்திருக்கின்றன. த.வி.யில் பங்களிப்பாளர்கள் தங்கள் பேச்சுநடை எழுத்துநடையில் இருந்து சொற்களை பயன்படுத்துவதால், எல்லா கட்டுரைகளிலும் தொல்காப்பிய நடையை எதிர்பார்க்க முடியாது என்பது என் எண்ணம். அத்தகைய தூய சொற்கள் இல்லாவிடினும் அந்த நடையை மன்னித்து விடுங்கள். மொத்தமாக ஆங்கிலத்திலோ அல்லது வேற்று மொழியிலோ இருக்கும் சொற்களை தமிழுக்கு மொழி பெயர்த்தால் இன்னும் அதிக உதவியாக இருக்கும்! - செழியன் 06:39, 23 சனவரி 2011 (UTC)

--Eldiaar 15:01, 27 சனவரி 2011 (UTC)

தங்கள் கருத்து மிகச் சரியானதே! இருப்பினும் 'சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இது ஒரு பழக்கப்படுத்தும் முயற்சியே ஆகும். பழகிவிட்டால் இதுவும் எளிமையான ஒன்றாகி விடுமே! காட்டில் வாழும் விலங்குகளைக் கூடப் பயிற்சி அளித்துப் பழக்கப்படுத்தும் நம்மால், தொல்காப்பியத் தமிழைப் பழக்கப்படுத்த முடியாதா? அயற்சொல் கலப்பு கூட பழகிவிட்டதன் விளைவுதான்; தூய தமிழே நடைமுறையில் இருந்திருந்தால் அயற்சொல் கூடக் கடினமானதாகவே இருந்திருக்கும்.

தமிழனுக்கு இப் பாரெங்கும் தமிழே அடையாளம். அதுவும் அது தனித்தமிழாக இருப்பதால் மட்டுமே! தமிழில் புகுந்து, தமிழனுக்குப் பழகிவிட்ட சொற்களை அப்படியே விட்டுவிடலாம் என்றால் தமிழின் தனித்தன்மை கெட்டுவிடும். பின்பு தமிழும் ஒரு சராசரி மொழியாகி விடும். எனவே தனித்தமிழ் இயக்கத்தை மீண்டும் தொடக்கி, தனித்தமிழை மீண்டும் நிறுவ நான் எடுக்கும் முயற்சியே இது.

இம்முறையை நான் கண்டிப்பாகக் கடைபிடித்தால் மட்டுமே, உயர் தனிச் செம்மொழி என்ற ஒரு நிலையைத் தக்கவைக்க முடியும் என்பதே என் கருத்து. எனவே, இது தங்களுக்குச் சரியெனப் படுகிறதா என தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்தவும். தங்களுடைய கருத்துக்களுக்கு நான் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பயனர் பக்கம்[தொகு]

வணக்கம், பயனர் பக்கம் என்பது அந்தந்தப் பயனர்கள் தங்களைப் பற்றிய தரவுகளைத் தருவதற்கான பக்கம். அப்பக்கத்தில் வேறு பயனர்கள் திருத்தங்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல. பயனர் பக்கங்களில் உள்ள தவறுகள் கட்டாயம் திருத்தப்பட வேண்டும் என ஒருவர் கருதினால் அவரின் உரையாடல் பகுதியில் அதைப் பற்றித் தெரிவிப்பதே நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 23:06, 23 சனவரி 2011 (UTC)

தொகுத்தல் உதவி[தொகு]

விக்கியில் தொகுத்தல் குறிகள் (#, [[]] {{}}) ஆகியவை குறித்த விளக்க பக்கம எடுத்துக் காட்டுகளுடன் இங்கு - விக்கிப்பீடியா:தொகுத்தல் உள்ளது. ஒரு முறை படித்துப் பாருங்கள். (கொஞ்சம் நீளமாக வளவள வென்று இருக்கும், சற்று பொறுமையுடன் ஒரு முறை நோட்டம் விடுங்கள்). மேலும் உங்களுக்கான சந்தேகங்களை பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் இடலாம் (கட்டுரைப்பக்கங்களைத் தொகுப்பது போன்றே பயனர்களின் பேச்சுப் பக்கங்களைத் தொகுக்கலாம், செய்திகளை இடலாம்). பொதுவான ஐயங்களை இங்கு கேட்கலாம் - விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் (நான் விக்கியில் இல்லையெனிலும் பிற பயனர்கள் இதனைப்பார்த்து உங்களுக்கு உதவி செய்வார்கள். விக்கி குறித்து கொள்கையளவு கருத்துகள் இருப்பின் விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் இடுங்கள்.

தொடங்கிய சில நாட்களிலேயே உங்கள் பணி மிகச்சிறப்பாக உள்ளது. சேர்ந்த புதிதில் சிறிது தடுமாற்றங்கள் இருப்பது வழக்கமே. நான் புதிதாக வந்த போது எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற்போல் இருந்தது. சிறிது சிறிதாகக் கற்றுக் கொண்டேன் :-). உங்கள் பணியைத் தொடருங்கள். உதவி செய்ய நானும் பிற விக்கிப்பயனர்களும் எப்போதும் உள்ளோம். என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ள வேண்டுமெனில் sodabottle@gmail.com என்ற முகவரிக்கு அஞ்சல் அனுப்புங்கள். --சோடாபாட்டில்உரையாடுக 06:46, 25 சனவரி 2011 (UTC)

மேலும் என்னை ஐயா என்றெல்லாம் அழைக்கவேண்டாம். “சோடா” அல்லது “சோடாபாட்டில்” என்று பெயர் சொல்லியே அழையுங்கள். நான் உங்களை விட வயதில் சிறியவன் :-). விக்கியில் அனைவரும் குடும்பத்தார் போலவே பழகி வருகிறோம். --சோடாபாட்டில்உரையாடுக 06:52, 25 சனவரி 2011 (UTC)

ஆரம்ப காலத்திலேயே தாங்கள் நல்ல கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். தமிழறிவும் தமிழார்வமும் உடைய பலர் தொழில்நுட்பத் தடைகளால் த.வி.யில் பங்களிக்காமல் இருந்து விடக் கூடாது. தாங்கள் எந்த ஊர் என்பதையும் தெரிவியுங்கள். கன்னியாகுமரி அல்லது மதுரை மாவட்டமெனில் நான் நேரில் உதவ முடியும். திருச்சி அல்லது சென்னைக்கு அருகில் இருந்தால் இவ்விரண்டு ஊர்களில் ஏதேனும் ஒன்றில் நடக்கும் பயிற்சிப்பட்டறையில் நீங்கள் கலந்து கொள்ளலாம். திருச்சியில் நடைபெற உள்ள பட்டறைக்கு பயனர் சோடாபாட்டில் வருவார். விக்கியில் எல்லாப் பயனரும் சமம். மரியாதை நிமித்தச் சொற்களை இங்கு பயன்படுத்துவதில்லை. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr) 09:10, 25 சனவரி 2011 (UTC)

--Eldiaar 14:45, 27 சனவரி 2011 (UTC) வணக்கம். நான் கோவையைச் சேர்ந்தவன். தங்கள் உதவிக்கரங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பயனர் பக்கங்களில் எழுதத் தெரியாததாலேயே தங்களுடன் மிகவும் காலதாமதமாகத் தொடர்பு கொள்கிறேன். இருப்பினும் தமிழில் 'இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்'. நன்றி.

--Eldiaar 14:59, 25 சனவரி 2011 (UTC)அய்யா வணக்கம்.

விக்கியில் என்னுடைய வினாக்களுக்கும், ஐய்யபாடுகளுக்கும் தாங்கள் மிகச் சிறப்பாக மறுமொழி அளித்துள்ளீர்கள். நன்றி! விக்கியில் நான் தொடர்ந்து பங்கேர்ப்பதற்கு, தங்களைப் போன்ற பயனர்களின் துணை எனக்கு முழுமையாகத் தேவைப்படுகிறது. எனவே வரும் காலங்களில் நான் தங்களையும், தங்களைப் போல் உள்ள பிற பயனர்களையும் நன்கு பயன்படுத்திக்கொள்ள தங்களின் அணுகுமுறை என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது என்பதே உண்மை.

மேலும் தாங்கள் மிகப் பெருந்தன்மையுடன் தங்களை 'சோடா' என்று அழைத்தாலே போதும் என்று கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. இருப்பினும் நம்முடைய நட்பு இப்பொழுதுதான் புத்தம் புதிய ஒன்றாகப் பிறந்துள்ளது. இது மேலும் மேலும் வளரும் பொழுது நான் கண்டிப்பாக அந்த உரிமையை எடுத்துக் கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது தான் நம் விழுமிய பண்பாட்டுக்கும், பரம்பரியத்திருக்கும் உகந்தது ஆகும் என்பதே என் எண்ணம்.

நான் தமிழுக்காகச் சில ஆண்டுகளாகச் சில பணிகளைச் செய்து வருகிறேன். தமிழ் மொழியைத் தூய்மைப்படுத்துவதில் நான் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரிடமும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்பில் உள்ளேன். அவர்களும் என்னுடைய கோரிக்கையில் உள்ள உண்மையையும், தேவையும் முழுமையாகப் புரிந்துள்ளமையால் எனக்குச் சில வகைகளில் ஒத்துழைப்பு நல்குகின்றனர். அதே நேரத்தில் தமிழில் அயற்சொல் கலப்பு குறித்தும் என்னுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே என்னுடைய பணி, தமிழில் உள்ள அயற்சொற்களை முழுவதுமாகக் களைந்து எடுத்துவிட்டுப் பின் முழுக்க முழுக்க ஒரு தனித்தமிழை உருவாக்கவேண்டும் என்பதே ஆகும். என்னால் தொடங்கப்படும் இந்தப் பணி பின்னாளில் ஒரு மிகப் பெரிய வெற்றியைக் கூட அடையலாம்! எனவே தான் விக்கியில் இது குறித்து நான் மிகுந்த ஆர்வம் செலுத்துகிறேன். எனவே இதில் நான் எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தெளிவாகத் தெரிவித்தீர்களே ஆனால் அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அனைவரும் முழுக்க முழுக்க தனித்தமிழிலேயே எண்ணவேண்டும், அந்தத் எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சியே ஆகும்.

தாங்கள் தயவு செய்து தங்களுடைய தொடர்பு எண்ணைத் தெரிவித்தீர்களானால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

நம் நட்புடன் இன்ன பிற விக்கி பயனர்களின் நடபும் ஓங்கி வளரவேண்டும் என்பதே என் விருப்பம். நன்றி.- ELDIAAR. --

வருக வருக[தொகு]

நானும் விக்கிக்கு புதுசுதான் நண்பரே!. இப்போதுதான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். தங்களையும் வரவேற்கிறேன்.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

--Eldiaar 03:52, 26 சனவரி 2011 (UTC)

நன்றி, வாழ்த்துக்கள்!

கலைச் சொற்கள்[தொகு]

தாங்கள் தனித் தமிழார்வலர் என்பதறிந்து மகிழ்கிறேன். மருத்துவக் கலைச் சொற்கள் குறித்து ஐயம் எழுமாயின் கனகு, செல்வா, சுந்தர், சோடா எனும் பட்டியலில் ஐயம் தீர்க்க தற்போது இன்னொருவர் கிட்டியது குறித்து மகிழ்ச்சி. சோடாபாட்டில் தங்களுடன் தொடர்பு கொண்டது அறிந்து மகிழ்கிறேன். தங்களின் ஆர்வம் கண்டு வியக்கிறேன். நன்றி. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 15:01, 27 சனவரி 2011 (UTC)

--Eldiaar 03:18, 28 சனவரி 2011 (UTC) மருத்துவர் கார்த்தி அவர்களே, உங்கள் மகிழ்சியில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன்! புதிய மருத்துவக் கலைச்சொற்க்களைத் தமிழில் உருவாக்க உங்களைப் போன்றோரின் பங்களிப்புக்கள் மிகவும் தேவை என்பதை நானும் நன்றாகவே அறிகிறேன். நீங்களும் உங்களுடைய தொடர்பு எண் உள்ளிட்ட செய்திகளை எனக்கு மின் அஞ்சல் (eldiaar@gmail.com) செய்யலாமே...!

மாவட்டம்[தொகு]

மாவட்டம் (இந்தியா) என்ற தலைப்பை மாவட்டம் என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய கலைக்களஞ்சியம். ஆகவே இங்கு மாவட்டம் என இந்திய, இலங்கை எனப் பன்னாட்டவரும் தேடிவரும் களஞ்சியம். எனவேதான் தலைப்புகளில் இந்தியா போன்ற பின்னொட்டுகள் தேவையாயுள்ளன. உங்கள் பங்களிப்புகளில் இதனை நினைவு கொள்ளுங்கள்.

உங்கள் தமிழார்வம் மிகவும் போற்றத்தக்கது. இருப்பினும் விக்கிப்பீடியாவின் கொள்கை பாமரனும் தேடும் அறிவைக் கொடுப்பதாகும். ஆங்கிலப் பீடத்தில் எட்டாதிருந்ததுபோல தனித்தமிழ் பீடத்திலும் எட்டாதில்லாமல் அதேநேரம் பாமரனின் வழக்கில்லில்லாத வேற்றுமொழிச்சொற்களைத் தவிர்த்து முதற்கட்ட கலைக்களஞ்சியம் வடிப்பதே இப்போதையத் தேவை. இந்தப் புரிந்துணர்வுடன் உங்கள் துப்புரவுப் பணி மிகவும் வேண்டிய ஒன்று.--மணியன் 04:53, 29 சனவரி 2011 (UTC)

வணக்கம்,

தங்கள் அறிவுரையை வரவேற்கிறேன்! மாவட்டம் (இந்தியா), என்ற தலைப்பை மாவட்டம் என்ற தலைப்பிற்கு மாற்றியுள்ள இச்செயலை எடுத்தவுடன் நான் செய்துவிடவில்லை. குறைந்தது ஆறு பேரிடம், 'மாவட்டம் என்ற சொல்லை தமிழ் விக்கியில் எப்படித் தேடுவீர்கள்' என்று கேட்டேன். இந்த ஆறு பேரில் இருவர் கல்லூரி மாணவர்கள், ஒருவர் இயற்கை வேளாண் ஆர்வலர், ஒருவர் அரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர், ஒருவர் M.A. Labour Management படித்துவிட்டு 300 பேருக்கு மேல் உள்ள ஒரு நிறுவனத்தில் Personnel Manager ஆக Germany-யில் பணி புரிபவர், ஒருவர் அரசறிவியல் படித்துவிட்டு சொந்தமாகத் தொழில் செய்பவர். இந்த ஆறு பேரில் ஒருவர் மட்டுமே அதாவது அரசியல் அறிவியல் படித்துவிட்டுச் சொந்தமாகத் தொழில் செய்பவர் மட்டுமே, 'மாவட்டம் என்றால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்; எனவே ஒரு நாட்டின் பெயருடன் தான் நான் தேடுவேன்' என்று பதிலுரைத்தார். அதாவது அரசியல் அறிவியலில் தேர்ச்சி பெற்றவர் தான் மாவட்டத்தின் பெயருடன் நாட்டையும் இணைத்துத் தேடுகிறார். மீதி அனைவரும் 'மாவட்டம்' என்ற சொல்லை மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதை இதன் வாயிலாக அறிந்த பின்புதான், அதுவும் நான் கூட முன் காலங்களில் தேடும் பொழுது மாவட்டம் என்றே தேடுவேன் என்ற எண்ணத்தையும் உறுதி செய்து கொண்ட பின் ஆங்கில விக்கியில் இது எப்படித் தரப்பட்டுள்ளது என்பதையும் பார்த்த பின்பே மாவட்டம் என்பதே சரியான தலைப்பு; அதன் கீழ் வேண்டுமானால் துணைத் தலைப்புக்கள் இருக்கலாம் என்ற முடிவிற்கு வந்த பின்புதான் இத்தலைப்பை மாற்றினேன். ஆங்கில விக்கியில் கூட district என்ற தலைப்புக்குக் கீழ் தான் பல்வேறு நாடுகளின் பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன. தலைப்புடன் நாட்டின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கும் மேல் மாவட்டம் என்ற தலைப்பின் கீழ் நாடுகளின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்பொழுது கூட, மாவட்டம் இந்திய என்று தேடுவோருக்கு எந்த இன்னலும் இல்லையே!

இருப்பினும் என் செயல் தவறானது என்று தங்களால் கருதப்பட்டால், அதைத் தங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். மேலும் விக்கி அனைவரும் பயன்படுத்தும் ஒரு தளம்; அதைப் பாமரனும் பயன்படுத்தலாம் என்பதுவும் சரியே! எனினும், பாமரனுக்குத் தெரிந்த பிறமொழிச் சொற்களை நீக்கிவிட்டு, யாருக்கும் தெரியாத தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. அனைவருக்கும் தெரிந்த சொல் என்பதாலேயே அது தமிழ்ச் சொல் ஆகிவிடாது; எனவே குறைந்தது அது அயற்சொல் என்பதாவது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதாலும், அதன் பயன்பாடுகளைக் குறைக்க ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்பதாலுமே நான் அயற்சொற்களை நீக்குகிறேன். அந்த இடத்தில் கூட யாருக்குமே தெரியாத தமிழ்ச் சொற்களை இடுவதில்லை. வழக்கமாக அனைவருக்கும் தெரிந்த சொற்களை மட்டுமே இடுகிறேன். மேலும் அனைவரும் பயன்படுத்தும் அயற்சொற்களை விக்சனரியிலும் இணையான தமிழ்ச்சொற்களுடன் அறிமுகப்படுத்தவும் பெரிய அளவில் நான் பங்களிக்க உள்ளேன் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன். நன்றி! --Eldiaar 06:12, 29 சனவரி 2011 (UTC)

ஆங்கில விக்கியில் “districts of india", "districts of xxx" எனத் தெளிவாகப் பிரித்து தான் கட்டுரைகள் உள்ளன (தலைப்பில் கண்டிப்பாக நாட்டுப்பெயர் இருக்கும்). நீங்கள் மாவட்டம் என்னும் பெயரில் தனியாக பொதுக்கட்டுரை உருவாக்கி (ஆங்கில விக்கி district கட்டுரை போல) அதற்கு “மாவட்டம்” பெயரிட்டால் அது சரியானதே. ஆனால் districts of india/மாவட்டம் (இந்தியா) கட்டுரையை "district"/மாவட்டம் என்ற தலைப்புக்கு நகர்த்துவது உகந்ததல்ல.--சோடாபாட்டில்உரையாடுக 06:24, 29 சனவரி 2011 (UTC)

மாவட்டம்[தொகு]

மாவட்டம் (இந்தியா) கட்டுரையின் இடது கருவிப்பட்டையில் “ஏனைய மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் பிற மொழி விக்கிகளில் இதே கட்டுரைக்கு இணைப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பாருங்கள். அனைத்து மொழிகளிலும் தலைப்பில் நாட்டுப் பெயருண்டு. (எ. கா. இந்தி - பாரத் கே ஜிலே)--சோடாபாட்டில்உரையாடுக 06:29, 29 சனவரி 2011 (UTC)

ஆனால் ஆங்கில விக்கியில் பாருங்கள்... District என்ற பக்கத்தில் எந்த ஒரு நாட்டுப் பெயரும் இல்லை (http://en.wikipedia.org/wiki/District). --Eldiaar 18:59, 6 மார்ச் 2011 (UTC)

அது எல்லா நாட்டு மாவட்டங்களைப் பற்றியுள்ள பொதுக் கட்டுரை. இங்கும் “மாவட்டம்” என்று எழுதினால் அதே போல எழுத வேண்டும். மாவட்டம் என்று பெயர்வைத்து விட்டு இந்தியாவின் மாவட்டங்கள் பற்றி மட்டும் எழுதுவது பொருத்தமானதல்ல. பொதுத் தலைப்பில் பொதுவான விசயங்களும், குறித்த தலைப்பில் குறித்த விசயங்களைப் பற்றியும் இருக்க வேண்டும். ஆங்கில விக்கியில் இது தெளிவாகப் பின்பற்றப்படுகிறது. எ. கா - en:Districts of India. மேலும் பொதுத்தலைப்பு - தலைமைச் செயலகம். குறித்த தலைப்பு - தலைமைச் செயலகம் (தமிழ்நாடு). எனவே இரண்டாமது பற்றிய கட்டுரைக்கு பொதுத் தலைப்பு இடுவது பொருத்தமற்றது.--சோடாபாட்டில்உரையாடுக 19:04, 6 மார்ச் 2011 (UTC)

தலைமைச் செயலகம் என்பது கூடப் பொதுத் தலைப்புதான். அதனால் தான் எடுத்தவுடன் தலைமைச் செயலகம் என்பதற்குத் தான் பொருள் தந்திருக்கிறேனே ஒழிய தமிழக அரசின் தலைமைச் செயலகம் என்பதற்கான பொருளைத் தரவில்லை. எனினும், மின் துண்டிப்புக் காரணமாகப் பின்னர் சரியாக எழுதலாம் என்று விட்டு விட்டேன். மேலும், இந்தத் தலைமைச் செயலகம் என்னும் தலைப்பு கூட பாரளவில் உள்ள அரசு, அரசு சாரா அமைப்புக்களின் தலைமைச் செயலகனகளைப் பற்றிய ஒன்றாகும். அது அடுத்த 'தொகுப்பில்' சரியாக வழங்கப்படும். எனவே, தலைமைச் செயலகம் என்பது தான் சரியானது. இப்பொழுது கூட மின் தடை ஏற்பட்டுள்ளது. அதனால் இத்துடம் முடித்துக்கொள்கிறேன். அல்லது தொலைபேசியில் வருகிறேன்.--Eldiaar 19:13, 6 மார்ச் 2011 (UTC)


"என் செயல் தவறானது என்று தங்களால் கருதப்பட்டால்" -- விக்கியில் கூட்டாகவே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனது கருத்துக்கள் புதியதாக வந்துள்ள உங்கள் புரிந்துணர்விற்கும் உங்களது கருத்துகளை அறியவுமே. மற்றபடி எனது பரிந்துரைகளும் உங்கள் செயற்திட்டமும் ஒன்றிப் போவது குறித்து மகிழ்ச்சியே. --மணியன் 09:20, 29 சனவரி 2011 (UTC)

உதவிக்கு அணுகவும்[தொகு]

அன்பு மிக்க Eldiaar நீங்கள் உதவி கேட்டது என்னைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நீங்கள் சென்னையைச் சேர்ந்தவராக இருப்பின் நான் உங்களுக்கு நேரிலேயே உதவ முடியும். அல்லது என் எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்களேன். . இப்போது வேண்டாம். நாளை காலை தொடர்பு கொள்ளுங்கள். (தற்போது ஆய்வகத்தில் இருப்பதால் பேச இயலாது.) உங்களை நல்லதொரு விக்கிப்பீடியராக வளர்ப்பது என் பொறுப்பு. --சூர்ய பிரகாசு.ச.அ. 18:06, 5 மார்ச் 2011 (UTC)

ஆர்வத்துடன் நீங்கள் உதவி செய்ய முன்வந்ததற்கு மிகவும் நன்றி; மிகவும் மகிழ்ச்சி. கண்டிப்பாக நாளை உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.--Eldiaar 18:27, 5 மார்ச் 2011 (UTC)

பகுப்பு[தொகு]

வணக்கம், த.கா போன்ற சுருக்கக் குறியீட்டில் பகுப்புகள் இடாதீர்கள். பகுப்புகள் (தமிழ்நாடு காவல்துறை) முழுப்பெயரில் இருக்க வேண்டும். அத்துடன் காவல்துறை ஒரு சொல்லாகத்தான் எழுதப்படுகிறது. இரண்டு சொற்களாக எழுதப்படுவதில்லை. அதுபோலவே தமிழ்நாடும்.--Kanags \உரையாடுக 09:00, 7 மார்ச் 2011 (UTC)

தில்சன்[தொகு]

இது விக்கிப்பீடியா கட்டுரை அல்ல, இது விக்கி செய்தியில் இடம் பெற வேண்டிய கட்டுரை ஆகையால் அதனை நீக்குகிறேன், விக்கி செய்தியில் விரிவாக இக்கட்டுரையை எழுதலாம். --குறும்பன் 20:58, 12 சூலை 2011 (UTC)

Invite to WikiConference India 2011[தொகு]

WCI banner.png

Hi DORAI RAJ L,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

எனது கணக்கு Eldiaar என்ற பெயரில் உள்ளது. அதை DORAI RAJ L என்ற பெயரில் மாற்ற வேண்டும். For this what I should do?

விக்கி மாரத்தான் 2015[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மதனாகரன் (பேச்சு) 07:14, 9 சூலை 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:DORAI_RAJ_L&oldid=1874376" இருந்து மீள்விக்கப்பட்டது