பயனர் பேச்சு:Bseshadri

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Bseshadri, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 03:37, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உங்கள் கட்டுரை[தொகு]

பத்ரி,

விக்கியில் தற்போது தன்வரலாறுகளைத் தவிர்க்க முயன்று வருகிறோம். எனவே நீங்கள் உங்களைப் பற்றி எழுதிய கட்டுரையை உங்கள் பயனர் பக்கத்துக்கு நகர்த்தியுள்ளோம். சில நாட்களில் நான் மீண்டும் என் வார்த்தைகளில் அதை எழுதி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:14, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில்,

பிரச்னை இல்லை. என் கருத்து என்னவென்றால், யார் எழுதினார் என்பதைவிட, அதில் தேவையற்ற அல்லது பொய்யான தகவல்கள் ஏதேனும் இருந்தனவா என்பதுதான் விவாதத்துக்கு உரியதாக இருக்கவேண்டும்.--Bseshadri 08:26, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பத்ரி சேஷாத்ரி பற்றிய கட்டுரையை எழுதியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 08:32, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
கனக்ஸ் மீண்டும் உருவாக்க நான் சில கூடுதல் தரவுகளை சேர்த்துள்ளேன். தங்களது கருத்துகளுடன் உடன்படுகிறேன். எனினும் பலர் சுய விளம்பரம் வேண்டி செய்யும் தேடுபொறி உகப்பாக்க வேலைகளால் இது போன்ற ஒரு சீரான கொள்கைகளை வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. :-) --சோடாபாட்டில்உரையாடுக 08:55, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கிரிக்இன்போ[தொகு]

கிரிக்இன்போ தளத்தை உருவாக்கியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் -- மாகிர் 08:45, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வரவேற்பு[தொகு]

உங்களது பயனர் பக்கத்தைப் பார்த்து உங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். தமிழ் விக்கியில் நீங்களும் ஒரு பயனராய்ச் சேர்ந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.--பாஹிம் 10:43, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

வருக[தொகு]

  • பத்ரி, நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி. கணிதம், அறிவியல் துறைகளில் உங்களது புலமை விக்கிக்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.--சிவக்குமார் \பேச்சு 16:04, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் வழியான பங்களிப்புக்கு நீங்கள் புதியவர். ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தாங்கள் முன்பே அறிமுகமானவர்தான். கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் நான், ரவிசங்கர், மு. இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்ட “தமிழ் வலைப்பூக்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா” கலந்துரையாடல் நிகழ்விற்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தீர்கள். கடந்த ஜனவரி 16, 2011 அன்று சென்னையில் நடைபெற்ற விக்கிப்பீடியா 10 ஆம் ஆண்டின் நிகழ்வில் கலந்து கொண்டு என்னுடைய “தமிழ் விக்கிப்பீடியா” நூலை வெளியிட்டுப் பேசிச் சிறப்பித்தீர்கள். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் பல அரிய கட்டுரைகளை அளித்துச் சிறப்பீர்கள் என நம்புகிறோம். வருக... வருக...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:48, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • தமிழ் வலைப்பதிவுகளில் ஓர் முன்னோடியாக பல தொழில்நுட்ப, அறிவியல் சார்ந்த கட்டுரைகளை எழுதி வரும் தங்களின் வருகை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வலுச்சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. தங்களின் ஆர்வம் தொடர்ந்திருந்து தமிழ் விக்கிப்பீடியாவை பல்வகைகளில் மேம்படுத்த வாழ்த்துகிறேன். வருக ! வருக!!--மணியன் 22:59, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
  • தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பு கண்டு மகிழ்ச்சி. வலைப்பதிவுகளில் நுட்பங்கள் சார்ந்த பதிவுகளை எழுதிவரும் உங்களின் ஆற்றல், தமிழ் விக்கிக்கும் பயனுள்ள பல கட்டுரைகளைத் தந்து சிறப்பிக்கும் என நம்புகிறோம். நீங்கள் தொடர்ந்தும் ஆர்வத்துடன் தமிழ் விக்கிக்கு பங்களிக்க ஆசிகளும் வாழ்த்துக்களும். வருக.. வருக என வரவேற்கிறோம். :) --தாரிக் அஸீஸ்  உரையாடுக  23:21, 22 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

பத்ரி,

தமிழ் விக்கியின் ஊடகப் போட்டி பற்றி உங்கள் வலைப்பதிவிலும், தமிழ் பேப்பரிலும் ஒரு சிறு அறிவிப்பு இட்டு உதவ வேண்டுகிறேன். போட்டிக்கான துண்டறிக்கை - படிமம்:OnePageContestGuideUpdated.jpg. விவரங்கள் - வலைவாசல்:ஊடகப் போட்டி/விதிகள்.--சோடாபாட்டில்உரையாடுக 07:59, 24 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

சேர்த்துவிட்டேன். --Bseshadri 05:04, 25 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. :-) --சோடாபாட்டில்உரையாடுக 05:13, 25 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

முதற்பக்கக் கட்டுரை[தொகு]



2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bseshadri&oldid=3184018" இலிருந்து மீள்விக்கப்பட்டது