பயனர் பேச்சு:Booradleyp1/தொகுப்பு04

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலோசனை தேவை[தொகு]

வணக்கம்! சகோதரி!! எனது கைபேசியில் படம் எடுத்தேன் கணினியில் பதிவேற்றும் சமயத்தில் கவனிக்காமல் பெயர்மாற்றம் செய்யாது பதிவேற்றிவிட்டேன். மீண்டும் பெயர் மாற்றம் (எகா: படிமம்:யோக நரசிம்மர்.jpg ) செய்து பதிவேற்றலாமா?--Yokishivam (பேச்சு) 15:48, 13 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நிர்வாகிகளிடம் படிமங்களின் பெயர்களை மாற்ற முடியுமா எனக் கேட்டுப் பார்த்துவிட்டு முடியாதென்றால் மீண்டும் பதிவேற்றிவிட்டு ஏற்கனவே உள்ள படிமங்களை நீக்கல் வேண்டுகோள் இட்டு விடலாம்.--Booradleyp1 (பேச்சு) 04:02, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]
அவை நகர்த்த முடியும். முயற்சிக்கிறேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:34, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இப்படி ஒரு படிமம் இல்லையே!--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 05:36, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆதவன், சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் கட்டுரையில் உள்ள படங்களைப் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 06:01, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

அம்மா, அவற்றையும் நகர்த்த முடியும். அய்யா படத்தின் பெயர் , மாற்றவேண்டிய பெயர் என பட்டியலிட்டு ஒரு நிர்வாகிகளுக்கான அறிவுப்புப் பலகை போன்ற இடங்களில் குறிப்பிட்டால் நகர்த்தி விடுவார்கள். இரவி இவ்வாறு ஒரு படிமத்தை என்னுடையதை நகர்த்தியுள்ளார். அம்மா இவ்வாறான வேலைகளைச் செய்வதற்காக நீங்கள் நிர்வாகப் பொறுப்பை பெற்றுக் கொள்ளலாமே!, பலபேருடைய வேலைச் சுமையைக் குறைக்க விரும்பினால்! :).நீங்கள் ஆமென்றால் பரிந்துரைக்கிறேன். பலபேருக்குக் கிடைத்த தோல்வி எனக்குக் கிடைக்கக்கூடாது என வேண்டுகிறேன் :) :)--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:55, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆதவன், நிர்வாகப் பொறுப்புக்குத் தேவைப்படும் அளவுக்கு நான் இன்னமும் தேறவில்லை, தேறுவேனா என்பதும் கேள்விக்குரியே, அதனால் தான் ஒரு ஓரமாக இருந்து கொண்டு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அனைவரது வேண்டுகோளையும் மறுக்க வேண்டியுள்ளதே என்ற வருத்தமும் உண்டு. மன்னிக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 13:22, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நீங்கள் நிர்வாகப் பொறுப்பேற்ற பிறகும் கற்றுக்கொள்ளலாம் தானே. நிர்வாகப் பொறுப்பேற்று முடிந்ததை மட்டும் செய்யலாம் தானே. அதனால் இழுக்கில்லையே!--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:31, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சந்தேகம்[தொகு]

வணக்கம்! சகோதரி!! தவியில் எனது பங்களிப்புகள் அண்மைய மாற்றங்களில் பதிவாவதில்லையே ஏன்? பதிதாக கட்டுரை தொடங்கினால் மட்டுமே பதிவாகிறது, மற்ற கட்டுரைகளில் பங்களிப்பு செய்கிற மாற்றங்கள் பதிவாவதில்லை ஏன்? --Yokishivam (பேச்சு) 17:14, 13 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இது ஏன் என்று எனக்கும் தெரியவில்லை.--Booradleyp1 (பேச்சு) 04:02, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பூங்கோதை அவர்களே யோகிசிவம் அவர்களின் பேச்சுப் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளேன். கட்டுரைகளைப் போல இதனையும் சரிபாருங்கள் :) அன்புடன்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:06, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நன்றி ஸ்ரீகர்சன். இப்பொழுது தெரிந்தது எனக்கும். இன்னமும் கணினியையும் இணையத்தையும் பார்த்து மிரளும் என்னை உங்களைப் போன்ற இளம்தலைமுறையினரின் (குட்டீஸ் பட்டாளம்: ஆதவன், மாதவன், ஸ்ரீகர்சன், யாழ்ஸ்ரீ) அறிவும், ஆர்வமும், வேகமும் அசர வைக்கின்றன. உங்கள் பங்களிப்புகளால் தமிழ் விக்கிப்பீடியா நிச்சியம் வளம்பெறும். உங்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

ஒரு சிறு வேண்டுகோள், பூங்கோதையின் பின் சேர்த்துள்ள ’அவர்களே’ வேண்டாமே. பூங்கோதை என்றே அழையுங்கள். மகிழ்வுடன் ஏற்பேன்.--Booradleyp1 (பேச்சு) 13:59, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்னதான் இருந்தாலும் நீங்கள் வயதிலும் அறிவிலும் பெரியவரல்லவா! நிச்சயம் தமிழ் விக்கிப்பீடியாவை வளம்பெற வைப்போம் அந்த நம்பிக்கை உள்ளது.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:35, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆலோசனை தேவை[தொகு]

தேசிய கடன் கடிகாரம் (ஐக்கிய அமெரிக்கா) https://ta.wikipedia.org/s/3syh கட்டுரையை பார்க்குமாறு கேட்டுகொள்கிறேன்.மொழிபெயர்ப்பை எனது பல்கலைகழக ஒப்படைக்கக செய்கின்றேன், பிழைகளை திருத்தி உதவுமாறு கேட்டுகொள்கிறேன்.

பரணிடல்[தொகு]

அம்மா, பேச்சுப் பக்கம் நீளம் அதிகமாகிடுச்சு. page load நேரம் அதிகமாகுது. பரணில் தொகுப்பு 3 க்கு நகர்த்திடலாமே?--சோடாபாட்டில்உரையாடுக 04:51, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 13:31, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பகுப்புகள்[தொகு]

நன்றி. இனிமேல் அவ்வாறே செய்கிறேன்.--ஆர்.பாலா (பேச்சு) 16:42, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 16:45, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஏ. நாகேஸ்வர ராவ்[தொகு]

இவர் தமிழில் ஏ. நாகேஸ்வர ராவ் என்றே அறியப்பட்டார். நாகேஸ்வர ராவ் என தமிழ் விக்கியில் தேடினேன். https://ta.wikipedia.org/w/index.php?search=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D&title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3ASearch&fulltext=1 அதில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் கட்டுரை காண்பிக்கப்படவே இல்லை. அதனால் 3 மணி நேரம் செலவிட்டு இந்த கட்டுரையை எழுதினேன். அக்கினேனி நாகேஸ்வர ராவ் கட்டுரையையும் இந்தக் கட்டுரையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அது நன்றாக எழுதப்பட்டுள்ளது என நீங்கள் கருதினால் இந்த கட்டுரையை நீக்கி விடுங்கள். அது அவசரமாக ஆங்கில கட்டுரையை தமிழாக்கம் செய்து, இணைப்புகள் சரியாக இருக்கின்றனவா என்று கூட பார்க்காமல் உடைந்த இணைப்பை (http://www.telugufilmfun.com/celebrity_interviews/Akkineni_Nageswara_Rao_Birthday.php) சேர்த்து எழுதப்பட்டுள்ளது. நான் கட்டுரை எண்ணிக்கையை பெருக்குவதற்காக எழுதுபவனல்லன். ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வு செய்து தகுந்த மேற்கோள்களுடனேயே எழுதுகிறேன். - Uksharma3 (பேச்சு) 02:07, 23 சனவரி 2014 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

உங்களின் வழிகாட்டளுக்கு எனது நன்றி. நான் பார்த்த தினமலர் நாளிதளில் கல்சா மஹால் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை வைத்தே அப்பெயரை வைத்தேன். நீங்கள் பெயரை மாற்ற உதவுங்கள்.[1][2][3]--Muthuppandy pandian (பேச்சு) 04:42, 8 பெப்ரவரி 2014 (UTC)

வழுவூர்[தொகு]

இந்த கட்டுரையில் மேலதிக தகவல் சேர்த்துள்ளீர்கள். நன்றி. இதில் {{Infobox Indian jurisdiction பயன்படுத்தியுள்ளீர்கள். ஆனால் அதில் வரும் இணைப்புகள் அறுந்துள்ளன. http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm என்பது http://www.tn.gov.in/government/keycontact/197 என்றும், http://www.tn.gov.in/gov_cm.html என்பது http://www.tn.gov.in/government/keycontact/18358 என்றும் மாற்றப்பட வேண்டும். இது Template இல் செய்யப்படவேண்டுமென நினைக்கிறேன். கவனிக்கிறீர்களா? நன்றி, வணக்கம் - Uksharma3 (பேச்சு) 05:53, 8 மார்ச் 2014 (UTC)

Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 06:22, 8 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம் - Uksharma3 (பேச்சு) 16:01, 9 மார்ச் 2014 (UTC)

இந்தியப் பெண் ஆளுமைகள்...[தொகு]

வணக்கம்! மணியன் அவர்களின் பேச்சுப் பக்கத்தில் தங்களின் உரையினைப் படித்தேன். என்னுடைய பரிந்துரைகள் சில...

  1. காயத்ரி சங்கரன் என்பவர் ஒரு கருநாடக இசைப் பாடகி. வியக்க வைக்கும் ஒரு இசைத் திறனாளி! இவரைப் பற்றி ஆங்கில விக்கியில் கட்டுரை இல்லை. இந்த இணையத்தளத்தில் இவரைப்பற்றி அறியலாம். செய்தித்தாள் ஆதாரங்களுக்கு: 1. On a fresh note, 2.A musical fest with a difference, 3. Touching hearts through music Y ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 11 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  2. மல்லிகா ஸ்ரீனிவாசன் - Mallika SrinivasanY ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 12 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  3. அனிதா ரத்னம் Anita Ratnam Y ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 11 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]
  4. பர்கா தத் Barkha Dutt Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 12 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:04, 15 மார்ச் 2014 (UTC)

உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி. இவர்கள் குறித்த கட்டுரைகளை உருவாக்க முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:44, 15 மார்ச் 2014 (UTC)

இதையும் பார்க்கவும். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 19:04, 16 மார்ச் 2014 (UTC)

பரிந்துரைக்கு நன்றி, முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:11, 17 மார்ச் 2014 (UTC)

நன்றி[தொகு]

அன்பு நண்பர் அவர்கட்கு நீங்கள் கூறியது போல் கட்டுரை அமையவேண்டும் எனபது தான் எனது ஆசையும் உங்கள் உதவிக்கும் .நீங்கள் எனக்கு கொடும் இந்த ஊக்கத்துக்கும் எனது நன்றி .நான் புதுச்சேரி பகுதியை இருப்பிடமாக மற்றும் பிறப்பிடமாக கொண்டு உள்ளத்தால் எனது பல கட்டுரைகள் புதுச்சேரியை சார்ந்ததாக இருக்கும்.தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு கேடு கொள்கிறேன் - புதுவைபிரபு 09:38, 24 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:19, 24 மார்ச் 2014 (UTC)

இலங்கை மௌரிய மன்னர்கள்[தொகு]

என் பேச்சுப் பக்கத்தில் உங்களுக்கு பதிலளிக்க தாமதமானதற்கு வருந்துகிறேன். இலங்கை மௌரிய மன்னர்கள் பெயர்கள் சிலவற்றை திருத்தியுள்ளேன். இலங்கை பாடப்புத்தகங்களில் சரியான பெயர்கள் காணப்பட்டன. தற்போது விரைந்து செயற்பட முடியாத நிலையில் உள்ளேன். பின்னர் இவற்றைக் கவனிக்கிறேன். --AntonTalk 03:11, 25 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:47, 25 மார்ச் 2014 (UTC)

மீண்டும் நன்றி...![தொகு]

வணக்கம்! பயனர்கள் எழுதும் கட்டுரைகளில் தொடர்ந்து முன்னேற்றங்களை செய்யும் உங்களின் பொறுமைக்கு மீண்டும் ஒருமுறை எமது நன்றிகளை தமிழ் விக்கி குமுகாயம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:49, 2 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:10, 2 ஏப்ரல் 2014 (UTC)

உங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி, சிவகுருநாதன். ஆனால் இதில் பொறுமை என்பதைவிட, பல ஆண்டுகாலமாக ஆசிரியராக வேலை பார்த்த ’விட்ட குறை, தொட்டகுறை’ தான் இதற்குக் காரணமென நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 17:18, 2 ஏப்ரல் 2014 (UTC)

ஒரு மாணவன் என்ற வகையில் மிக்கப்பெரிய 👍 விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:14, 2 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம் (பச்சை விருப்பம். :p --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:17, 3 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம் விருப்பத்திற்கு விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:14, 7 ஏப்ரல் 2014 (UTC)

உதவி...[தொகு]

வணக்கம்! சதவிகிதம், சதவீதம் - இந்த இரு சொற்களில் மிகவும் பொருத்தமானது எது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:08, 14 ஏப்ரல் 2014 (UTC)

இரண்டும் ஒரே பொருளைத்தான் தருகின்றன, என்றாலும் சதவீதமே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.--Booradleyp1 (பேச்சு) 16:17, 14 ஏப்ரல் 2014 (UTC)

பதிலுக்கு நன்றி! இந்த உரையாடலையும் பாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:00, 8 மே 2014 (UTC)[பதிலளி]

நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் கணிதக் குறுங்கட்டுரைகளை விரிவாக்க வேண்டுகோள்[தொகு]

வணக்கங்க, நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் கணிதக் குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ வேண்டுகிறேன். எடுத்துக்காட்டுக்கு, புள்ளி, விட்டம், தொடர் பெருக்கம், இயூலரின் சுழற்சித் தேற்றம் ஆகிய கட்டுரைகளைக் கவனிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:28, 21 ஏப்ரல் 2014 (UTC)

தற்சமயம் என்னால் விக்கியில் பங்களிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. சிறிது நாட்களில் மீண்டும் பங்களிக்கத் தொடங்கும்போது, இவற்றை மேம்படுத்துகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:03, 24 ஏப்ரல் 2014 (UTC)

சரிங்க. இயன்ற போது உதவுங்கள். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக்கூடிய மேலும் இரு கட்டுரைகள் - பெல் சமன்பாடு, மீளும் தசமங்கள்--இரவி (பேச்சு) 17:46, 24 ஏப்ரல் 2014 (UTC)

இந்தக் கட்டுரையை தரமுயர்த்தியமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:56, 8 மே 2014 (UTC)[பதிலளி]

உங்களது ஊக்குவித்தலுக்கு நன்றி சிவகுருநாதன். இன்னமும் அக்கட்டுரையில் கொஞ்சம் வேலையிருக்கிறது.--Booradleyp1 (பேச்சு) 06:20, 8 மே 2014 (UTC)[பதிலளி]

தேசிய வகை செயின்ட் திரேசா கான்வன்ட் தமிழ்ப்பள்ளி[தொகு]

வணக்கம்! இந்தப் பள்ளி குறித்து 2 வரிகளுடன், ஆங்கிலத் தலைப்புடன் ஒரு கட்டுரை இருந்தது. பொதுவாக ஆங்கிலத் தலைப்புடனோ, ஆங்கில உள்ளடக்கத்துடனோ கட்டுரைகள் இருப்பின் மற்றவர்களைப் போன்று நானும் நீக்கிவிடுவேன். ஆனால் இக்கட்டுரை bonafide'ஆக மனதிற்பட்டது, எனவே நீக்கவில்லை! உங்களின் பெருமுயற்சியால், தமிழ் விக்கிக்கு ஒரு கட்டுரை கிடைத்துவிட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:12, 12 மே 2014 (UTC)[பதிலளி]

நன்றி சிவகுருநாதன், கூகுள் தேடலில் கிடைத்த விக்கித்தரவிலிருந்த மற்றொரு மொழி (மலாய் என நினைக்கிறேன்) விக்கி கட்டுரையும் அதில் தரப்பட்டிருந்த நாளிதழ் செய்தியும் (ஆங்கிலத்தில் இருந்ததால்) இக்கட்டுரையை நிலைப்படுத்த உதவியாய் இருந்தது.--Booradleyp1 (பேச்சு) 13:45, 12 மே 2014 (UTC)[பதிலளி]

நன்றி, சிறிது உதவி தேவை[தொகு]

’நீதிபதியின் மரணம் (நூல்)’ ஐஸ்பிஎன் சுட்டெண் மாறுபாட்டை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. ஐஎஸ்பிஎன் சுட்டெண் குறிப்பிடும் போது எந்த எண்ணை மேற்குறிப்பிட வேண்டும் என்று உதவ இயலுமா? தாங்கள் குறிப்பிட்ட நூலில், உள் பக்கத்தில் சுட்டெண் 978-81-234-1643-1 என்று உள்ளது. அதே நூலில் ஐஸ்பிஎன் பார் கோடின் கீழ் உள்ள சுட்டெண் 978-81-234-1643-4 என்று உள்ளது. வாஸந்தியின் ஒரு நூலில் உள் பக்கத்தில் ISBN 978-81-8345-089-X என்று உள்ளது. பார் கோடின் கீழ் ISBN 978-81-8345-089-8 என்று உள்ளது. இந்த சமயங்களில் எந்த ஒன்றை எடுத்துக்கொள்வது என்று குழப்பமாக உள்ளது. நன்றி.

பன்னாட்டுத் தரப்புத்தக எண் கட்டுரையில் தரப்பட்டிருப்பது போல பார்கோடில் தரப்பட்டுள்ளதைத் தருவதே சரியாக இருக்கும். உதவிக்கு en:Help:ISBN, en:Wikipedia:ISBN பக்கங்களைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 10:06, 18 சூன் 2014 (UTC)[பதிலளி]

உதவிக்கு நன்றி. --Kuzhali.india (பேச்சு) 09:25, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]