பயனர் பேச்சு:Booradleyp1/தொகுப்பு02

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புருவில் இட்ட செய்தி[தொகு]

வார்ப்புரு:முதல் கட்டுரையும் தொகுப்பும் பக்கத்தில் நீங்கள் தவறுதலாக இட்டிருந்த செய்தியை நீக்கியுள்ளேன். அதனைச் சரியான பயனர் பேச்சுப் பக்கத்தில் இட்டு விடுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 04:40, 23 பெப்ரவரி 2013 (UTC)

இரவி, நீங்கள் முதல் தொகுப்பும் கட்டுரையும் வார்ப்புரு இட்ட பக்கங்களில் கடைசித் தொகு பொத்தானை அழுத்தினால் வார்ப்புரு திறந்து அதில் உள்ளடக்கம் சேர்வதாலேயே இது நிகழ்கிறது. எனக்கும் இதுபோல நிகழ்ந்து மீளமைத்தேன். வார்ப்புரு செயலாக்கத்தைச் சீராக்கினால் நன்று.

--மணியன் (பேச்சு) 05:03, 23 பெப்ரவரி 2013 (UTC)

ஓ ! இது தானா பிரச்சினை.. சுட்டிக் காட்டியதற்கு நன்றி, மணியன். வார்ப்புருக்களை உரியவாறு மாற்றியுள்ளேன்--இரவி (பேச்சு) 06:08, 23 பெப்ரவரி 2013 (UTC)

நீக்கல் வார்ப்புரு[தொகு]

பொதுவாக அண்மைய மாற்றங்களைக் கவனித்து வரும் நிருவாக அணுக்கம் உள்ள பயனர்கள் உறுதியாக நீக்கப்பட வேண்டிய கட்டுரைகளைக் கவனித்து நீக்கி விடுவார்கள். எனவே, இது குறித்து நீக்கல் வார்ப்புருக்கள் இடும் இரட்டிப்புப் பணியைத் தவிர்க்கலாம். அதே வேளை, பதிப்புரிமை மீறல் போனவற்றைக் கண்டு சொல்லும் நீக்கல் வார்ப்புருக்கள் உதவியாக உள்ளன. நன்றி--இரவி (பேச்சு) 16:04, 25 பெப்ரவரி 2013 (UTC)

அரசு, பிற நிறுவனங்களுடன் தமிழ் விக்கிப்பீடியா உறவாட்டம் குறித்த கொள்கை[தொகு]

வணக்கம். ஒரு முன்னாள் அரசு அலுவலர் (?), ஆசிரியர் என்ற முறையில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு அரசும் பள்ளிச் சூழலும் நடைமுறையில் எவ்வாறு, எந்த அளவு உதவக்கூடும் என்பதை அறிந்திருப்பீர்கள். இது குறித்த உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். உங்கள் பரிந்துரைகள், ஆதரவை இங்கு தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:14, 25 பெப்ரவரி 2013 (UTC)

கட்டுரை இணைப்பு[தொகு]

வணக்கம் பூ. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா கட்டுரை "வேண்டும் கட்டுரைகள்" பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்ததாலும் சிவப்பிணைப்பில் இருந்ததாலும் உருவாக்கினேன். தக்க நேரத்தில் அறிவுருத்தியமைக்கு நன்றி. நாள்தோறும் உருவாகும் புதிய கட்டுரைகளைக் கவனித்து பிழைதிருத்தி, தக்கவை செய்யும் தங்களின் சேவை என்றும் தொடர இறைவனை வேண்டுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:31, 27 பெப்ரவரி 2013 (UTC)

👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 13:38, 28 பெப்ரவரி 2013 (UTC)

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் தலை சிறந்த பங்களிப்பாளர்களில் ஒருவராகிய உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் பெருமைப்படுகிறோம். தொடர்க உங்கள் பங்களிப்புகள். --இரவி (பேச்சு) 14:34, 8 மார்ச் 2013 (UTC)

(நீங்கள் என்னுடைய கட்டுரைகளையே அதிகம் திருத்தி உதவியிருக்கிறீர்கள். அதனால், நான் தான் முதலில் வாழ்த்துவேன். மற்றவர்கள் பிறகு வாழ்த்தட்டும் :)) உங்களின் பங்களிப்புகள் என் போன்ற பலருக்கும் முன்மாதிரியாக அமையவேண்டும் என்று விரும்புகிறேன். ஆசி வழங்குங்கள். அறிமுக வாழ்த்துக்களுடன் மகளிர் தின வாழ்த்துக்களும் அம்மையே!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:14, 8 மார்ச் 2013 (UTC)
வாழ்த்துகள் Booradleyp!--பரிதிமதி (பேச்சு) 15:03, 8 மார்ச் 2013 (UTC)
முதற்பக்க அறிமுகத்தில் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. தொடர்க உங்கள் விக்கிப் பயணம்! --Anton (பேச்சு) 15:12, 8 மார்ச் 2013 (UTC)

தமிழ்குரிசில், பரிதிமதி, அன்டன் -உங்கள் அன்புக்கு நன்றி.--Booradleyp (பேச்சு) 15:26, 8 மார்ச் 2013 (UTC)

 • வணக்கம்: முதற்பக்கத்தில் தங்களைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. விக்கிப்பீடியாவிற்கு அளப்பரிய பங்காற்றும் சிறந்த பெண் பங்களிப்பாளரான தங்களின் அறிமுகம் மகளிர் தினத்தன்று பொருத்தமான சரியான நேரத்தில் அமைந்தது..:) சேவை தொடர வாழ்த்துக்கள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:07, 8 மார்ச் 2013 (UTC)

👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 04:05, 9 மார்ச் 2013 (UTC)

 • வணக்கம். தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் தங்களின் தொகுப்புப் பணி வியப்படைய வைக்கும் விதத்தில் தொடர்ந்து இருந்து வருவது குறித்து மேலும் மகிழ்ச்சி. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் ...!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:11, 9 மார்ச் 2013 (UTC)

👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 04:15, 9 மார்ச் 2013 (UTC)

 • வணக்கம் ஆசிரியப் பெருந்தகையே !! உங்களை குறித்து அறியாமலே பல உதவிகளைப் பெற்றுள்ள நிலையில் உங்களது முதற்பக்க அறிமுகம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் மகளிர்தினத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் பெண்களின் சார்பாளராக தங்களை முன்நிறுத்தியது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. வளர்க உங்கள் பணி !! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !!--மணியன் (பேச்சு) 05:22, 9 மார்ச் 2013 (UTC)

👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 16:09, 9 மார்ச் 2013 (UTC)

அனைவரின் வாழ்த்துகளையும் காண மகிழ்ச்சியாக உள்ளது. வரிசையாக பங்களிப்பாளர்கள் வரும் முறையிலேயே அன்று அறிமுகத்தை இட்டேன். பிறர் சுட்டியபின் இந்தப் பொருத்தத்தை எண்ணி மகிழ்ந்தேன். மகளிர் நாளில் உங்கள் அறிமுகத்தை இட்டது எதேச்சையான ஒன்று. உலகம் முழுக்கவே விக்கிப்பீடியா இயக்கத்தில் பெண்களை எவ்வாறு கூடுதலாக ஈடுபடச் செய்யலாம் என்று எண்ணி வருகிறார்கள். இதனை முன்னிட்டு நமது அனுபவத்தை இந்திய விக்கிமீடியா மடற்குழுமத்தில் பகிர்ந்து கொண்டேன். பார்க்க - http://lists.wikimedia.org/pipermail/wikimediaindia-l/2013-March/009583.html --இரவி (பேச்சு) 06:59, 12 மார்ச் 2013 (UTC)

விக்கியில் பெண்கள் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. உங்களைப் போன்றோரின் முயற்சியால் அதிகரிக்க வாழ்த்துகளுடன்--Booradleyp (பேச்சு) 14:53, 12 மார்ச் 2013 (UTC)

 • உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மிக மகிழ்ந்தேன். தலைசிறந்த பங்களிப்பாளர்களுள் ஒருவராகிய உங்களுக்கு ஆழ்ந்த நன்றி. தமிழ் விக்கிப்பீடியா தங்களைப்போன்ற விடா நற்படைப்புகளாலும் நற்பணிகளாலுமே மேலும் மேலும் சிறக்கும் உயரும் என்று நம்புகின்றேன். கடைசியாக நீங்கள் உங்கள் அறிமுகத்தைப் பதிவிட அனுமதி தந்துவிட்டீர்கள்! நன்றி! நல்வாழ்த்துகள்! நான் த.வி பணியில் இருந்து அரைகுறை விடுப்பில் இருக்கின்றேன், ஆகையால் இன்றே இதனைப் பார்க்க நேர்ந்தது. உங்கள் நற்பணி தொடர்ந்திட வேண்டுகின்றேன். கணிதம் சார்ந்த தலைப்புகளில் உங்கள் கட்டுரைகளே ஐயத்திற்கு இடமின்றி முதன்மையானவை. தரமான உள்ளடக்கத்திலும் தமிழ் நடையிலும் நிலைத்த பயன் தரக்கூடிய வாய்ப்பிலும் கூட. --செல்வா (பேச்சு) 20:00, 16 மார்ச் 2013 (UTC)
👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 04:35, 18 மார்ச் 2013 (UTC)

உதவி[தொகு]

எம்.ஏ.சுசீலா பக்கத்தை முதலில் நான்தான் எழுதினேன்.பின்பு நீங்கள் செம்மை செய்திருக்கிறீர்களென அறிந்தேன்.அதிலுள்ள புகைப்படத்தை விட வேறுபடம் சேர்த்தால் சிறப்பாக இருக்குமென அவர்களுமே நினைக்கிறார்கள்.எனவே அதைச் சேர்க்கவும்,பிறந்த ஆண்டு,பெயர்,மாவட்டம்,ஊர் ஆகியவற்றையும் அதற்குள்ளேயே சேர்த்தும் உதவுக. படங்கள்; எம்,ஏ.சுசீலா,எம்.ஏ.சுசீலா இப்படம் பொதுவெளியில் நிறையப்பயன்படுத்தப்பட்டிருப்பதால் இதை விக்கியில் சேர்ப்பதில் தவறில்லை. கயல்கண்ணி

கட்டுரையில் தகவற்பெட்டி இணைத்திருக்கிறேன் அதில் அவர் பிறந்த ஆண்டு மட்டுமே தரமுடிந்தது. சரியான தேதியை சேர்த்து விடுங்கள். நீங்கள் கொடுத்துள்ள இணைப்பிலுள்ள படமும் கட்டுரையில் உள்ள படமும் ஒன்றாகத்தானே உள்ளது. எழுத்தாளரின் வேறு படங்கள் (உங்களால் எடுக்கப்பட்டது) உங்களிடமிருந்தால் நீங்களே உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து இங்கு பதிவேற்றலாம். பதிவேற்ற உங்களுக்கு உதவுகிறேன்.

உங்கள் ஆர்வத்திற்கும் பங்களிப்புக்கும் வாழ்த்துக்கள். எனினும் ஒரு வேண்டுகோள். இது கலைக்களஞ்சியம் என்பதால் நாம் தருபவை விக்கி நடைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ’கலைக்களஞ்சியத்துக்குத் தேவையான, தகவல்களை மட்டும் கட்டுரைகள் கொண்டிருத்தல் நல்லது. எம். ஏ. சுசீலா-கட்டுரையில் வாழ்க்கைக் குறிப்பினைச் சற்று மாற்றியிருக்கிறேன்; பாருங்கள். மேலும் உங்களது பங்களிப்புகள் தொடர வாழ்த்துக்கள்.--Booradleyp (பேச்சு) 06:02, 21 ஏப்ரல் 2013 (UTC)

மிக்கநன்றி... படத்தை உங்களிடம் பேசியபின் இன்னொரு படத்தை மாற்றிப் புதிய படத்தை நானே பதிவேற்றி விட்டேன்.நான் விக்கியில் எழுதுவதில் புதியவள் என்பதால் தகவல்பெட்டி இணைப்பது தெரியவில்லை. தாங்கள் அதைச் செய்தமைக்குநன்றி.பிறந்த நாள் தெரிந்தால் சேர்த்து விடுவேன். கயல்கண்ணி பிறந்த நாள் மற்றும் சில விவரங்களைச் சேர்த்திருக்கிறேன்.பட அமைப்பைச் சீர் செய்ய உதவுக,கயல்கண்ணி

திருக்கண்ணபுரம் விஜயராகவன் பக்கத்தைக் காணவும். இதனை சீர்படுத்த வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 05:45, 22 மார்ச் 2013 (UTC)

தேற்றத்தின் கூற்றில் ஆங்கிலத்தில் இருந்ததை, தமிழாக்கம் செய்திருக்கிறேன்--Booradleyp (பேச்சு) 07:52, 22 மார்ச் 2013 (UTC)
நன்றிகள் பல. அந்தப் பிவி எண்ணைப் பற்றியும் சிறு குறிப்பு அல்லது அறிமுகம் கொடுக்க முடியுமானால் கட்டுரை முழுமையை அடையும். தொந்தரவிற்கு மன்னிக்கவும். இயலாது போனாலும் பரவாயில்லை. மீண்டும் நன்றிகள்.--மணியன் (பேச்சு) 11:47, 22 மார்ச் 2013 (UTC)
முயற்சி செய்கிறேன்.--Booradleyp (பேச்சு) 15:48, 24 மார்ச் 2013 (UTC)

வணக்கம் : ஆவியூர், விருதுநகர் கட்டுரையில் ராஜ ராஜ சோழன் என பெயர் மாற்றப்பட்டது. பிழையை சுட்டி காட்டியதற்கு நன்று. பிழை இருப்பின் தயவு செய்து சுட்டி காட்டுக. நன்றி Gopikumar.ila

👍 விருப்பம்--Booradleyp (பேச்சு) 15:48, 24 மார்ச் 2013 (UTC)

இருப்பிடம் குறித்த இணைய முகவரி[தொகு]

கிராமங்கள் பற்றிய கட்டுரைகளில் அவற்றின் இருப்பிடம் குறித்த இணைய முகவரியைக் காணும் முறை

http://tnmaps.tn.nic.in/ இந்த இணைய தளத்தில் மாவட்டத்தை தேர்வு செய்து கிராமம் எந்த வட்டம் மற்றும் ஊராட்சி என காணலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 13:08, 31 மார்ச் 2013 (UTC)

உதவி[தொகு]

லாக்ராஞ்சியின் தேற்றம் இக்கட்டுரையை விரிவாக்கி மேம்படுத்தி உதவ முடியுமா? சொற்கள் புரியாத நிலையிலேயே உள்ளன. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:36, 14 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரைகளுக்கு உள்ளிணைப்பு வழங்குதல் தொடர்பாக[தொகு]

 • முதலில் நீங்கள் இணைப்பு கொடுக்க விரும்பும் ஆங்கிலக் கட்டுரையில் இடப்பக்கமுள்ள Edit links என்பதைs சொடுக்கவும்.
 • அது அக்கட்டுரையின் விக்கி டேட்டா பக்கதிற்கு இட்டுச் செல்லும்.
 • அங்கு கீழ் பகுதியில் {add} என்ற இணைப்பு இருக்கும்.
 • அங்குள்ள முதல் கட்டத்தில் ta (தமிழ்) என தட்டச்சிடவும்.
 • அடுத்த கட்டத்தில் தாங்கள் உருவாக்கிய தமிழ் கட்டுரையின் தலைப்பினை இடவும்.
 • சேமிக்கவும். அது தானியக்கமாக இணைப்பாகிவிடும்.

(சில சமயங்களில் இவ்விணைப்பு உடனே இடப்பக்கம் தெரிவதில்லை தாமதமாகலாம்) நன்றி :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:18, 17 ஏப்ரல் 2013 (UTC)

கணிதக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம் பூ. வலைவாசல்:கணிதம் இப்பக்கத்தில் சிவப்பிணைப்புகளில் உள்ள கட்டுரைகளை உங்களால் உருவாக்கி உதவ முடியுமா? நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:14, 18 ஏப்ரல் 2013 (UTC)

முயற்சிக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 14:08, 18 ஏப்ரல் 2013 (UTC)

பயனர் பெயர் சிக்கல்[தொகு]

வணக்கங்க. உங்களைப் போன்று நிறைய பங்களிப்புகள் செய்த ஒருவர் இரண்டாவது கணக்கில் வருவதால் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவதில் சிக்கல் வரும். கடவுச் சொல்லை மீட்பதில் என்ன சிக்கல் என்று அறியலாமா? கடவுச்சொல்லைப் பெறும் பயனர் மின்மடல் கணக்குக்குள் போக முடியவில்லையா? உங்களுக்கு விருப்பம் எனில், Booradleyp என்ற கணக்கின் பெயரை முறையாக மாற்றுவதன் மூலம் உங்கள் பங்களிப்புப் பதிவுகளின் தொடர்ச்சியைப் பேண முடியும். நன்றி.--இரவி (பேச்சு) 07:51, 11 மே 2013 (UTC)[பதிலளி]

(from sodabottle on behalf of booradleyp)
Ravi, password got scrambled. Not an account rename issue. Password reset is not working for some strange reason. The temporary password is getting sent to the email id. but when it is used, the "change password" action always results in a "wrong password" error message. Its okay if there is discontinuity. Doesn't bother booradley much. Have asked for help in en wiki, will wait for 7 days if automatic password requests expire and try again. If nothing works out, she is okay with using this account.--Booradleyp1 (பேச்சு) 08:00, 11 மே 2013 (UTC)[பதிலளி]
ஓ, சரி. 7 நாள் பொறுத்துப் பார்ப்போம். வேறு உலாவி / கணினியில் இருந்தும் முயன்று பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். booradleypக்கு இதில் பிரச்சினை இல்லை என்றாலும் அவருக்கு மறுப்பு இல்லையென்றால் முறையாக பெயரை மாற்றி விடுவது நன்றாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 08:07, 11 மே 2013 (UTC)[பதிலளி]
(from sodabottle on behalf of booradleyp)
yes. tried out other browser / machine options. problem is at database level. I dont think rename will solve the issue - it doesn't reset the password and/or the contrib history wont get transferred to an unrelated new account. A have heard of such things happening before. anyway i hope this goes away on its own. lets see after a week--Booradleyp1 (பேச்சு) 08:12, 11 மே 2013 (UTC)[பதிலளி]
சரி.--இரவி (பேச்சு) 08:28, 11 மே 2013 (UTC)[பதிலளி]

வகுப்பறை:க.பொ.த உயர்தரம்:இணைந்த கணிதம்/மாதிரி வினாத்தாள்கள்/தமிழ்மொழி மூலம்/பகுதி I[தொகு]

வகுப்பறை:க.பொ.த உயர்தரம்:இணைந்த கணிதம்/மாதிரி வினாத்தாள்கள்/தமிழ்மொழி மூலம்/பகுதி I

எடுத்துக்காட்டுக்கு. கணித்தக் கேள்விகளில் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் கவனித்தக் தக்கவை. --Natkeeran (பேச்சு) 03:49, 13 மே 2013 (UTC)[பதிலளி]

திருவாலி, திருநகரி[தொகு]

திருவாலி, திருநகரி என்ற பெயரில் ஒரு கட்டுரை உள்ளது. இதனை [திருவாலி, திருநகரி (வைணவத் திருத்தலம்)] என மாற்றாலா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:39, 15 மே 2013 (UTC)[பதிலளி]

அப்படியே இருக்கட்டுமே?--Booradleyp1 (பேச்சு) 15:46, 16 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

வணக்கம் அம்மா! எனது கட்டுரைகள் உடனுக்குடன் உரை திருத்தம் வியந்த நான் இன்று தான் தங்கள் பயனர் பக்கத்தை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி! விக்கியில் நான் உலாவுதல் மிகக் குறைந்த நாட்களே (31) இன்னும் மனபயமுள்ளது. --Yokishivam (பேச்சு) 15:13, 19 மே 2013 (UTC)[பதிலளி]

பெயர் சொல்லியே இங்கு அழைக்கலாம். தயக்கமின்றி உதவிகளைக் கேளுங்கள். எல்லோரும் உதவ முன் வருவார்கள். நீங்கள் பதிவேற்றும் படங்களை விக்கி காமன்சில் பதிவேற்றினால் வேற்று மொழி விக்கிப்பீடியாக்களும் அதனால் பயனடைவர். --Booradleyp1 (பேச்சு) 15:18, 19 மே 2013 (UTC)[பதிலளி]

நன்றி பூ அவர்களே! விக்கி காமன்சில் பதிவேற்றுவது எப்படி? என்னைப் பொறுத்த வரை கணிணி,மற்றும் தட்டச்சு முற்றிலும் புதிது,நில அளவைத் துறையில் பணிசெய்து உடல் நலக்குறைவினால் விருப்ப ஓய்வில் வெளி வந்த நான் தற்செயலாய் விக்கியின் கட்டுரைகளை பார்த்த நேர்வில் உலாவுகிறேன்.நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 16:56, 19 மே 2013 (UTC)[பதிலளி]

Category:Spoken Wikipedia[தொகு]

இந்தப் பகுப்பில் தாங்கள் ஊடகப் போட்டியை ஒட்டி பதிவேற்றிய ஒலிக் கோப்புகள் இருக்கின்றனவா? -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:03, 25 மே 2013 (UTC)[பதிலளி]

அறிந்தேன் Category:Tamil pronunciation இந்தப் பகுப்பில் உள்ளன.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:06, 25 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:48, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

வட்டம்[தொகு]

வட்டம் கட்டுரையை வடிவாக வளர்த்து வருவது கண்டு மகிழ்கிறேன், பூ! -- சுந்தர் \பேச்சு 04:42, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர். இன்னமும் சேர்த்த வேண்டியவை உள்ளன. ஆக மேலும் வளரும்.--Booradleyp1 (பேச்சு) 04:49, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

) -- சுந்தர் \பேச்சு 04:59, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைக் வேண்டுதல்[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். குறிப்பாக சில தலைப்புக்கள்:

 • தமிழ் விக்கிப்பீடியாவில் கணிதக் கட்டுரைகள்
 • தமிழ் இணையத்தில் தமிழில் கணித உள்ளடக்கம்

உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]