பயனர் பேச்சு:Bavani.IRQUE.UOC
தலைப்பைச் சேர்வாருங்கள், Bavani.IRQUE.UOC!


விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
-- சுந்தர் \பேச்சு 06:08, 5 மார்ச் 2009 (UTC)
ஓசோன் படலம்
[தொகு]பவானி இராமசாமி, தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி. நீங்கள் ஓசோன் படலம் குறித்து எழுதிய ஆய்வுக் கட்டுரையை இங்கு சமர்ப்பித்தமைக்கு மிக்க நன்றிகள். மிக நல்ல கட்டுரை. அதன் தலைப்பிலும் உள்ளடக்கத்திலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். ஓசோன் படைத் தேய்வினால் ஏற்படுகின்ற சூழல் பிரச்சினைகள் என்ற தலைப்பில் இப்போது அக்கட்டுரை உள்ளது. உள்ளடக்கத்திலும் பல எழுத்துப் பிழைகளைத் திருத்தியுள்ளேன். மேலும் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. நீங்களே அவற்றைப் பார்த்துத் திருத்துங்கள். கட்டுரையை வேறு எழுத்துருவில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றியுள்ளீர்கள் போல் தெரிகிறது. இதனால் சில ஆங்கிலப் பெயர்கள் சரியாகத் தெரியவில்லை. அவற்றைத் தயவு செய்து நீங்களே திருத்தி விடுங்கள். ஆய்வுக்கட்டுரைகளை அப்படியே ஒரு மாற்றமும் இல்லாது விக்கிப்பீடியாவில் வெளியிட முடியாது. அதனை விக்கி நடையில் எழுத வேண்டியுள்ளது. ஏனைய விக்கிக் கட்டுரைகளைப் பாருங்கள் விளங்கும். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.--Kanags \பேச்சு 09:43, 6 மார்ச் 2009 (UTC)
கருத்து வேண்டல்
[தொகு]பேச்சு:ஓசோன் படைத் தேய்வினால் ஏற்படுகின்ற சூழல் பிரச்சினைகள் என்னும் பக்கத்தில் நானும் பயனர்:Kangs உம் சில கருத்துகளைப் பதிவு செய்து இருக்கின்றோம். கட்டுரையின் தலைப்பை அங்கே கூறியுள்ளபடி மாறலாமா என உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். --செல்வா 16:40, 11 மார்ச் 2009 (UTC)