பயனர் பேச்சு:220.247.250.233

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிபீடியாவுக்கு வணக்கம்

ஈழத்து இலக்கிய ஆவணங்களை சேகரிக்கவும், ஒழுங்குபடுத்தி இணையத்தில் பகிர்ந்துகொள்ளவுமான இணையத்தளம் ஒன்றினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ் இணையத்தளத்தில் இலவசமாக ஈழத்து தமிழ் மின்னூல்கள் வழங்கப்படவுள்ளன.

ஈழத்து இலக்கியம் பற்றி தனித்த பகுதியொன்றினை , எமது வலைத்தளத்தில் தனியாக ஆரம்பித்து, வளர்த்தெடுப்பதை விட,

அதற்கு செலவழிக்கும் உழைப்பினை, விக்கிபீடியாவில் செலுத்தி, இவ்விடயப்பரப்பு சார்ந்த அதன் பக்கங்களை மேம்படுத்தி, விக்கிபீடியாவின் தகவற் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்ய உதவலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

அதன் பிரகாரம் இங்கே "ஈழத்து இலக்கியம் " என்ற புதிய தலைப்பினை, இலக்கியம் என்ற வகைப்படுத்தலின் கீழ் உருவாக்கியுள்ளோம்.

எதிர்வரும் நாட்களில் எமது வலைத்தளக்குழுவினர் இப்பக்கத்தை மேம்படுத்துவதில் தமது உழைப்பினை செலுத்தத்தொடங்குவார்கள்.

இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கும், மிகப்பிரதானமாக விக்கிப்பீடியாவில் பக்கங்கள் தொகுப்பது தொடர்பாக எம்மை நெறிப்படுத்தவும் இம எமது மின்னஞ்சல் முகவரியோடு தொடர்புகொள்ளவும். - mmauran@gmail.com


மு.மயூரன் http://mauran.blogspot.com திருக்கோணமலை, இலங்கை.

வருக[தொகு]

விக்கிபீடியாவுக்கு வருக. நீங்கள் ஒரு குழுவாக செயல்பட முன்வந்து, அதற்கு தகுந்த தளமாக விக்கிபீடியாவை தேர்ந்தெடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நீங்களும் உங்கள் நண்பர்களும் தனித்தனியாக பயனர் கணக்கு ஏற்படுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும். விக்கிபீடியாவில் விவரக்கட்டுரைகளையும் விக்கிநூல்கள் தளத்தில் மின்நூல்களை பதிவேற்றும் பணியையும் செய்யலாம்.

ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.

நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்:

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி (பேச்சு) 12:45, 1 ஆகஸ்ட் 2005 (UTC)


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:220.247.250.233&oldid=12678" இருந்து மீள்விக்கப்பட்டது