பயனர் பேச்சு:220.227.66.105

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வருக விக்கிபீடியாவிற்கு! விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி மென்மேலும் பங்களிப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை படிக்கவோ திருத்தவோ நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயணர் கணக்கு உருவாக்குவதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:

  • நீங்கள் விரும்பும் பயனர் பெயரை பெறலாம்
  • உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பை தெரிவு செய்து காணலாம்.
  • உங்களுக்கென்று ஒரு பயனர் பக்கம் கிடைக்கும்
  • உங்களுக்கென தனியாக ஒரு பேச்சுப் பக்கமும் அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
  • நீங்கள் விரும்பினால் உங்களுக்கு பிற பயனர்கள் மின் மடல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின் மடல் முகவரியை பிற பயனர்கள் அறிய இயலாது.
  • நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க கவனிப்பு பட்டியல் வசதி
  • விக்கிபீடியா பக்கங்களின் பெயர்களை மாற்றும் அனுமதி
  • கோப்புகளை பதிவேற்றும் அனுமதி
  • உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிபீடியா தள தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றி பார்வையிடும் அனுமதி
  • விக்கிபீடியா நிர்வாகி ஆகும் வாய்ப்பு
  • வாக்கெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை
  • பயணர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்

நீங்கள் ஒரு விக்கிபீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.

ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.

நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்:

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.-- சுந்தர் \பேச்சு 09:25, 21 மே 2008 (UTC)

வேண்டுகோள்[தொகு]

தயவு செய்து நேரடியாக விக்கியில் இருந்து மற்ற பங்களிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பங்களிக்க முன்வாருங்கள். ஏற்கனவே விக்கியில் உள்ள சில கட்டுரைகளை நீங்கள் தமிழாக்குவதால் உங்கள் உழைப்பும் வீணாகக் கூடும். பார்க்க: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கம். நன்றி.--ரவி 06:20, 29 அக்டோபர் 2009 (UTC)

உங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)[தொகு]

வணக்கம் 220.227.66.105. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவது குறித்து முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பங்களிப்பு குறித்து சில கருத்துகள், வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகிறோம்:

தமிழ் விக்கிப்பீடியா என்பது பள்ளி மாணவர்களும் கூட அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இங்குள்ள கட்டுரைகள் சீரான, நல்ல தமிழ் நடையில் இருப்பதும் பக்கங்கள் பிழையின்றி முழுமையாக இருப்பதும் முக்கியம் ஆகும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால் அனைத்துப் பங்களிப்பாளர்களும் கூடி உரையாடிச் செயல்பட்டால் தான் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த இயலும்.

  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் சில கட்டுரைகளில் ஒரு வகையான வறண்ட, எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு உள்ளதாக உணரப்படுகிறது. ஒருவேளை, இது கருவியின் பிழையாகவோ கருவி உங்களின் செயல்திறனை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், தயவு செய்து உங்கள் கருத்தை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கக் குழுவுக்குத் தெரிவியுங்கள். அல்லது, இக்கருவியை விடுத்து நேரடியாக கைப்பட மொழிபெயர்க்கலாம்.
  • கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் அளிக்கப்பட்ட கட்டுரைகளில் தேவைப்படும் மேம்பாடுகளைக் காணுங்கள். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளில் இக்குறைகள் இருந்தால், தயவு செய்து திருத்தத் தொடங்குங்கள். இவை பொதுவான குறைகள் என்பதால் இவற்றைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. நீங்கள் விக்கிப்பீடியாவில் புகுபதிந்த பிறகு விக்கிப்பீடியாவின் வல மேற்புறத்தில் "என் பங்களிப்புகள்" என்று ஒரு இணைப்பு இருக்கும். இந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் பழைய கட்டுரைகளை இனங்கண்டு திருத்தத் தொடங்கலாம்.
  • தங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் நிகழும் உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியர்களிடையே கூடிய புரிந்துணர்வு ஏற்படவும், கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியம்.

இது கூகுள் கருவி மூலம் பங்களிக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் விடுக்கப்படும் பொதுவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் உள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனவே கவனத்தில் எடுத்திருக்கலாம். சில விசயங்கள் பொருந்தாமல் இருக்கலாம். எனினும், இப்பொதுவான வேண்டுகோளை ஏற்று, தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வேண்டுகோள் குறித்த அடுத்தடுத்த நினைவூட்டல்கள் மே 3, 2010 அன்றும் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

--ரவி 17:04, 26 ஏப்ரல் 2010 (UTC)


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:220.227.66.105&oldid=518901" இருந்து மீள்விக்கப்பட்டது