பயனர் பேச்சு:2006CS153

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், 2006CS153, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- C.K.MURTHY  ( பேச்சு  ) 05:44, 16 சனவரி 2015 (UTC)'வேளாண்மை/விவசாயம்'[பதிலளி]


வேளாண்மை என்பது தாவரங்கள் மற்றும் காளான் என்பவற்றின் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்வதும் செல்லப்பிராணிகள் மற்றும் உணவைத் தரக்கூடிய பிராணிகளின் வளர்ப்பும் ஆகும்.விவசாயத்தைப் பற்றி கற்கப்படும் கல்வியானது விவசாய விஞ்ஞானம் எனப்படும்.விளைச்சலுக்கு உகந்த நிலத்தில் விவசாயம் செய்வதும் மேய்ச்சலுக்கு உகந்த நிலத்தில் மிருகங்களை வளர்ப்பதும் வேளாண்மையின் முக்கியமான அடித்தளமாகும்.கடந்த நுாற்றாண்டுகளில் அழியாத விவசாயத்திலும் தீவிரமான பண்ணைத் தொழிலிலுமே கவனம் செலுத்தப்பட்டது.ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் நிலம் மற்றும் பயிர்களை நிர்வகித்தல் (விவசாயப் பொருளாதாரம்), தாவர வளர்ப்பு, கிருமி நாசினிகள், போன்ற தொழிநுட்ப வளர்ச்சிகளி்ன் மூலம் விவசாயமானது வேகமான வளர்ச்சி அடைந்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட மிருக வளர்ப்பு மற்றும் நவீன பழக்கங்களின் மூலம் இறைச்சிக்கான வெளியீடும் அதிகரித்துள்ளது.நவீன விவசாயத்தின் இன்னுமொரு வசீகரிக்கத்தக்க அங்கமாக நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு மற்றும் மரவளர்ப்புத் திட்டங்கள் என்பன காணப்படுகின்றன.


விவசாய உற்பத்திப் பொருட்களை உணவு, எரிபொருட்கள், நார் வகைகள், உற்பத்தி மூலப்பொருட்கள், மருந்து வகைகள், சட்ட விரோதமான மருந்து வகைகள் என்று வகைப்படுத்தலாம்.சமீப காலமாக உயிர் எரிபொருட்கள், உயிர் மருந்து வகைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருள் வகைகள் உற்பத்திக்கு தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உணவு எனும் போது தானிய வகைகள், மரக்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி வகைகள் உள்ளடக்கப்படுகின்றது.நார் பொருட்கள் எனும்போது பருத்தி, கம்பளி, பட்டு, சணல் என்பன உள்ளடக்கப்படும். உற்பத்தி மூலப்பொருட்கள் எனப்படும் போது மூங்கில் மற்றும் மரங்கள் உள்ளடக்கப்படும்.போதைப் பொருட்கள் எனப்படும் போது புகையிலை,ஓபியம்,மரிஜீவானா,கொகெய்ன் போன்றவை உள்ளடக்கப்படும்.உயிர் எரிபொருட்கள் என்பதனுள் மெதென்,எதனோல்,டீசல் என்பன உள்ளடக்கப்படும்.வெட்டுப் பூக்கள்,அலங்கார தாவர வகைகள்,அலங்கார மீன் வகைகள் மற்றும் பறவைகள் என்பனவும் இவற்றில் அடங்கும்.

விவசாயத்தின் வரலாறு ஆனது மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது.விவசாயத்தின் வளர்ச்சி, சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவி புரிந்தது மட்டுமல்லாது இலக்கியம் மற்றும் கட்டிடக்கலை என்பவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.விவசாயிகள் தங்களதும் மற்றைய குடும்பங்களினதும் தேவைக்காக உணவை உற்பத்தி செய்யும் போது மற்றவர்கள் தமது வேறு தேவைக்காக தம்மை அர்ப்பணித்தனர். 2007 இன் கணிப்பீடுகளின் படி 35%ஆன தொழிலாளர்கள் விவசாயத்தை கையாளுகின்றனர். ஆனால், இது தொழிற்பேட்டைகளின் அறிமுகத்தின் பின் விவசாயத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றது.

உள்ளடக்கம்



மேலதிக கருத்து


மேலதிக கருத்து

விவசாயமானது மனிதனின் நாகரிகமான வாழ்க்கையை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.தாவரங்கள் மற்றும் மிருக வளர்ப்பானது மனிதனின் நாடோடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தரமான குடியிருப்புக்களை அமைத்துக்கொள்ள உதவியது.கைத்தொழில் புரட்சியின் முன்னர் வரை பெரும்பாலான மனிதர்கள் விவசாயத்தையே தமது முக்கிய தொழிலாகக் கொண்டிருந்தனர்.விவசாய தொழிநுட்ப வளர்ச்சியானது விவசாயப் பொருள் உற்பத்தியின் உறுதியான வளர்ச்சிக்கு உதவியது.குறிப்பிடத்த்க விவசாய முன்னேற்றமானது கடந்த நுாற்றாண்டிலே ஏற்பட்டுள்ளது.நிலங்களின் மீள்சுழற்சி மற்றும் விலங்குகளின் உரங்களைப் பயன்படுத்துதல் செயற்கை நைற்றிஜனுடன் பொசுப்பேற்றைக் கலந்து கிருமி நாசினியாக பயன்னடுத்துதல் என்பன 20 ஆம் நுாற்றாண்டில் ஆரம்பக்காலக்கட்டத்தில் விவசாயத்தில் வளர்ச்சி ஏற்படுத்தியது.தானிய வகைகளின் மேலதிக உற்பத்தியானது மலிவான கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் உற்பத்திக்கு உதவியது. பசுமை புரட்சியின் பின்னர் அரிசி ,கோதுமை மற்றும் சோளம் என்பன அடிப்படை உணவுகளாக அறிமுகப்படுத்தப்பட்டது.பசுமை புரட்சியானது தொழிநுட்ப முறைகளை வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. பல நாடுகள் விவசாயத்துக்கு வேண்டிய நிதி உதவிகளை கோதுமை ,சோளம்,அரிசி ,சோயா மற்றும் பால் என்பவற்றிற்காக வழங்கி வந்தது.கடந்த நுாற்றாண்டுகளின் விவசாயம் ஆனது தடை இல்லாத உற்பத்தி மற்றும் செயற்கை கிருமி நாசினிகள்,செயற்னக உர வகைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை வளர்ப்பு,பாவிக்கப்பட்ட தொழிநுட்ப இயந்திரங்கள்,பாவிக்கப்பட்ட நீரின் அளவு மற்றும் பண்ணை வசதிகள் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.

Sir Albrat Howard இன் வாதத்தின் படி 1990 களில் செயற்கை உரம் மற்றும் கிருமி நாசினிகளின் தொடர்ச்சியான பாவணையால் மண்ணில் நீண்ட கால பாதிப்புகள் ஏற்பட்டது.ஒன்றிணைக்கப்பட்ட கிருமி நாசினி முகாமைத்துவம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கால்நடை வளர்ப்பு என்பன பண்ணை தொழிலின் முக்கிய வளர்ச்சியாக பிரதிபலிக்கின்றது.


அழைப்பு[தொகு]

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் 2006CS153!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

-- C.K.MURTHY  ( பேச்சு  ) 05:45, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:2006CS153&oldid=1788066" இலிருந்து மீள்விக்கப்பட்டது