பயனர் பேச்சு:ெகா.சதாசிவம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், ெகா.சதாசிவம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மாகிர் (பேச்சு) 11:55, 7 செப்டம்பர் 2015 (UTC)

கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்[தொகு]

வணக்கம், ெகா.சதாசிவம்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--மதனாகரன் (பேச்சு) 14:53, 9 செப்டம்பர் 2015 (UTC)

தமிழ் நாட்டில் தேனி மாவட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகள்[தொகு]

தமிழ் நாட்டில் தேனி மாவட்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறைகள் முனைவர். கொ. சதாசிவம், உதவிப் பேராசிரியர், பெ. பழனிச்சாமி, ஆய்வு மாணவர். சுற்றுச்சூழல் பொருளியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை- 21. sadamku@gmail.com முன்னுரை தமிழ் நாட்டில் 42 வகைப் பழங்குடிகள் வாழ்ந்து வருகிறார்கள். தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அதிகமான பழங்குடிகள் வாழ்கிறார்கள். தமிழ் நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் ‘பளியர்கள்’ எனும் இனக்குழு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வினக்குழுவின் பூர்வீகம் பற்றிய தொன்மை வரலாறு இருப்பதாகத் தெரியவில்லை. (சி.நல்லதம்பி, ப.24, 2011). தமிழ்நாட்டில் தேனி மாவட்ட மலைக்கிராமங்களில் பரவலாக வசிக்கும் பழங்குடியினர்களில் ஒரு பிரிவினர்களாகிய பளியர் இனமக்களின் பொருளாதார நிலை குறித்த கட்டுரை இது. தேனி மாவட்டத்தில் மொத்தம் 1,337 பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். அதில் ஆண்கள் 714 பேர் என்றும் பெண்கள் 663 பேர் என்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆய்வறிக்கை கூறுகிறது. பழங்குடியின மக்கள் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் இரண்டு வகையான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் ஒரு பிரிவினர் ‘பளியர்கள்’ என்றும் மற்றொரு பிரிவினர் ‘முதுவர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆதிகாலங்களில் இருந்து மலைப்பகுதிகளையே பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள் என்பது வரலாற்றுப்பூர்வமான உண்மையாக இருக்கிறது. பழங்குடியினர்களில் ஒரு பிரிவினராகிய பளியர் இனமக்கள் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் வேலப்பர்கோவில், ஜெ.ஜெ.நகர், யானைகஜம், அரசரடி, நொச்சிஓடை, ஆட்டுப்பாறைஃ கத்திரிக்காபாறை, கரட்டுப்பட்டி காலனி, பளியர்குடி, அகமலை, கொட்டக்குடி, சோலையூர், முந்தல், மஞ்சலாறு போன்ற கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்கள் முதுவர் இனமக்களுக்கு அடுத்த குடியைச் சேர்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். பளியர் இனமக்கள் வசதி வாய்ப்புகளில் விளிம்பு நிலை மக்களாகவே இருக்கின்றனர். தேனி மாவட்ட போடி ஒன்றியப் பகுதியான குரங்கனி பஞ்சாயத்தில் முதுவர்குடி என்னும் மலைக் கிராமத்தில் முதுவர் இனமக்கள் வசித்து வருகின்றனர். பளியர் இனமக்களோடு ஒப்பிடும்போது சமூகபொருளாதார நிலைகளில் சற்று முன்னேற்றம் உடையவர்களாக காணப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் பளியர் இனமக்கள் தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கடலைக்குண்டு-மயிலாடும்பாறை, தேனி, போடிநாயக்கனூர், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என மொத்தம் எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன. இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் உத்தமபாளையம் தவிர்த்து மற்ற ஏழு ஊராட்சி ஒன்றியங்களிலும் பழங்குடியின பளியர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதுவர்குடி என்னும் மலைக்கிராமத்தில் மட்டும் 30 முதுவர் இனக்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கடலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலைக்கிராமமான ஜெ.ஜெ.நகர், யானைகஜம், ஆகிய கிராமங்களில் பழங்குடியின மக்களில் பளியர் இனப்பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை நிலை குறித்த ஆய்வே இவ்வாய்வாகும். ஜெ.ஜெ.நகர் ஜெ.ஜெ.நகர் என்பது தமிழக அரசால் 2013-2014-ம் நிதியாண்டில் புதிதாக உருவாக்கபப்பட்ட கிராமம் ஆகும். தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகஜம் என்ற மலைவாழ் மக்களின் பழங்கால குடியிருப்பில் போதுமான வசதிகள் இல்லாததன் காரணத்தினால் அரசு அவர்களின் நலன் கருதி அவர்களுக்கு புதிய குடியிருப்பு வசதிகளை அமைத்துக் கொடுத்து உப்புத்துரை என்ற கிராமத்தின் அருகில் மலைவாழ் மக்கள் பாதுகாப்பாக வாழ வழிவகை செய்து கொடுத்துள்ளது. இங்கு 25 பளியர் இனக்குடும்பங்கள் வசிக்கன்றன. இம்மக்களில் சிலர் ஜெ.ஜெ.நகரில் கொஞ்ச நாளுக்கும், யானைக்கஜத்தில் கொஞ்ச நாளுக்கும் என தங்களின் தேவைகளைப் பொருத்து வாழ்ந்து வருகின்றன

மலைப்பகுதிகளில் போதுமான மருத்துவ வசதிகள், பள்ளிக் கூடங்கள் மற்றும் அரசின் சேவைகளை முறையாக கொண்டு செல்ல முடியாததன் காரணத்தினாலேயே தமிழக அரசு உப்புத்துரை கிராமத்திற்கு அருகில் ஜெ.ஜெ.நகரை உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆட்டோக்கள், பேருந்துகள் செல்லும் வகையில் தார்சாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரவு நேங்களில் வெளிச்சத்திற்கு சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அம்மக்களுக்கு தரைவாழ் மக்களைப்போன்ற வாழ்க்கை முறை கிடைத்திருக்கிறது எனலாம். பளியர் இனமக்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று கற்கவும் அம்மக்களுக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில் விரைந்து மருத்துவ வசதிகளைப் பெறவும் அரசு ஏதுவான வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறது என்பது இவ்வாய்விலிருந்து தெரிய வருகிறது. பளியர் இனமக்களின் தொழில் முறைகள் மலைப்பகுதிகளிலேயே வாழ்ந்து பழகிவிட்ட பளியர் இனமக்கள் இன்றும் மலைப்பகுதிகளுக்குச் சென்று மலைப்பொருட்களைக் கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அங்கிருந்து கொண்டு வரும் தேன், கிழங்கு, மரப்பட்டை, சாரனத்தி வேர், முறுங்கை இலை, பெரண்டை, துளசி, ஆவாரம் பூக்கள், வெள்ளறிக்கலச்செடியின் வேர், சிறுகுறிஞ்சி, பெரியாநங்கை, கொடி சங்கை, மிளகு நங்கை, வெள்ளைநாகைதலைவேர், வண்டுகொள்ளிபட்டை ஆகிய மூலிகைப் பொருட்களைச் சேகரித்து வைக்கின்றனர்.

இடைத்தரகர்கள் மலைப்பகுதிகளிலிருந்து கொண்டு வரும் பொருட்களை வாங்கிச் செல்ல இடைத்தரகர்கள் மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்பான ஜெ.ஜெ.நகருக்கு நேரடியாகச் சென்று அம்மூலிகைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். மருத்துவ குணம் மிகுந்த சில மூலிகைப் பொருட்கள் தலைவலி, இருமல், காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்லாமல் இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்துகின்றனர். சிறுகுறிஞ்சி, பெரியாநங்கை, கொடி சங்கை, மிளகு நங்கை, வெள்ளைநாகைதலைவேர், வண்டுகொள்ளிபட்டை ஆகிய மூலிகைச் செடிகளைப் பாம்பு மற்றும் பூரான், தேள், விசவண்டுகளின் கடிகளுக்கு பயன்படுத்துகின்றனர். பொருளாதார நிலை அன்றாட வாழ்விற்கு தேவையான பொருட்களைத் தேடுபவர்களாகவும், அவைகளை விற்று அன்றாடப் பசியை தீர்த்துக் கொள்பவர்களாகவும், நாளைய வாழ்விற்கு பணத்தை சேகரித்து வைக்காதவர்களாகவும், நாளைய வாழ்க்கையின் மீது அக்கரை இல்லாத அன்றாடங்காட்சி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

குடியிருப்புகள் மழைக்குக்கூட ஒதுங்க இடமில்லாமல் தவிர்த்த பழங்குடியின பளியர் இனமக்களுக்கு அரசு அழகான காங்கிரிட் வீடுகளைக் கட்டிக்கொடுத்துப் பாதுகாப்பு நடவடிக்கையைச் செய்துள்ளது.

முக்கிய தொழில்கள் ஒரு காலத்தில் வேட்டையாடுவதையும், தேன் எடுப்பதையும், மரம் வெட்டுவதையும் முக்கியத் தொழிலாக வைத்திருந்த இம்மக்கள் காலப்போக்கில் வேட்டையாடும் தொழில், மரம் வெட்டும் தொழில் ஆகியவைகளை விட்டுவிட்டு இன்று தேன் எடுக்கும் தொழிலை மட்டுமே தங்கள் குலத் தொழிலாக வைத்திருக்கின்றனர். ஷாம்பூ தயாரிக்கப் பயன்படும் இன்டா பட்டை, நன்னாரி வேர்களைச் சேகரித்தல் போன்ற பணிகளிலும் இவர்கள் ஈடுபடுகிறார்கள். உணவு தயாரிக்கும் முறைகள் கற்களால் செய்யப்பட்ட அடுப்பில் விறகுகளைப் பயன்படுத்தி உணவு சமைக்கின்றனர். வீட்டில் தங்கள் மனைவிகளுக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில் ஆண்கள் சமையல் வேலைகளைச் செய்கின்றனர். அதில் அவர்கள் சங்கடங்கள் பார்ப்பதில்லை. வீட்டில் ஆணும் பெண்ணும் சமம் என்ற பண்பாட்டை நிலை நாட்டுகின்றவர்களாக பளியர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.--ெகா.சதாசிவம் (பேச்சு) 10:09, 16 செப்டம்பர் 2015 (UTC) குழந்தைகளின் தேவை பணம், பொருள், நகை, சொத்து, ஆடம்பரம் ஆகியவைகளின் மீது அக்கரை எடுத்துக்கொள்ளாத பளியர் இனமக்கள் தங்களின் குழந்தைகளையே தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்களாக கருதுகின்றனர். எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு குழந்தைகளுக்கு மேலான எண்ணிக்கையில் குழந்தைகளை விரும்பி பெற்றுக்கொள்கின்றனர். தண்ணீர் தேவை குடிக்கத் தண்ணீர் பஞ்சம் வருங்காலங்களில் குறிப்பாக பங்குனி சித்திரை மாதங்களில் இம்மக்கள் தண்ணீர்தேடி குடங்களைத் தூக்கிக் கொண்டு பக்கத்து கிராமங்களுக்குச் செல்வதில்லை. அதற்கு மாறாக மலைப்பகுதிகளுக்குச் செல்கின்றனர். அங்கு தண்ணீர்கொடி என்ற மரத்தின் ஒரு பகுதியை வெட்டிவிட்டு அதிலிருந்து வரும் நீரைப் பிடித்துவந்து குடிப்பதற்கு தண்ணீராக பயன்படுத்துகின்றனர். எப்படிப்பட்ட தண்ணீருக்கான பஞ்சம் வந்தாலும் தண்ணீர்கொடி மரத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாது எனவும் அம்மரத்திலிருந்து வரும் நீர் சுத்தகரிக்கப்பட்ட தண்ணீருக்குச் சமமென்றும் கூறுகின்றனர். கால்நடை வளர்ப்பின் மீது நாட்டமின்மை மலைப்பகுதிகளையே தங்கள் வாழ்க்கையின் முக்கிய இடமாகக் கொண்டு வாழும் இம்மக்கள், கால்நடை வளர்ப்பில் அக்கரை செலுத்துவதில்லை. மலைப்பகுதிகளுக்கு தொழிலுக்குச் செல்லும் இவர்கள் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளர். சில வீடுகளில் ஆண்கள் மட்டும் தொழிலுக்குச் செல்கின்றனர். சில வீடுகளில் குடும்பத்தோடு மலையேறிவிடுகின்றனர். எனவே இவர்கள் கால்நடை வளர்ப்பின் மீது அக்கரை செலுத்துவதில்லை. அரசின் சலுகைகள் முன்பு அரசினுடைய சலுகைகள் இருப்பதை அறிந்து கொள்ளாத பளியர் இனமக்கள் இன்று குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வன அடையாள அட்டை, சாதிச் சான்றிதல் போன்றவைகளைப் பெற்று அரசின் சலுகைகளை முறையாகப் பெறுகின்ற மக்களாக வளர்ச்சி பெற்றிருக்கின்றனர். பாரம்பரியம் பழங்குடியின பளியர் இனமக்கள் தங்கள் பாரம்பரியங்களை மதிப்பவர்களாகவும், பண்பாடுகளை மறக்காதவர்களாகவும், குலதெய்வ வழிபாடுகள் உடையவர்களாகவும், இருக்கின்றனர். மலைக்குள் தொழிலுக்குக் செல்வதற்கு முன் தங்கள் குலதெய்வத்தை வழிபட்டுவிட்டு அதன் பின்னரே செல்கின்றனர். வருடம் வருடம் தங்கள் குலதெய்வங்களுக்கு திருவிழாக்கள் வைத்து கொண்டாடி மகிழ்கின்றனர். ‘கருப்புச்சாமி’ எனும் குலதெய்வம் இம்மக்களின் விருப்ப தெய்வமாகத் தெரிகிறது. திருமண முறைகள் திருமண முறைகள் என்று பார்க்கும்போது இளவயது திருமணங்களே அதிகமாக இருக்கின்றன. அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பரம்பரையாக வாழ்ந்து வருவதாலும் அனைவரும் சொந்தமாகிப்போனதாலும் அவர்களுக்குள்ளேயே ஆண் பெண்களுக்கு பெரியோர்களின் முன்னிலையில் இருவீட்டார்கள் பேசி முடித்து மணமக்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து வைக்கிறார்கள். மாப்பிள்ளை நன்கு வேலை செய்வாரா? என்பதை மட்டுமே திருமணத்திற்கான தகுதியாக பெண் வீட்டார்கள் பார்க்கின்றனர். முடிவுரை தமிழகத்தில் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களில் பளியர் இன மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற துவங்கியுள்ளனர். தொடர்ந்து அரசு அவர்களின் வாழ்க்கையின் மீது அக்கரை செலுத்துமானால் அவர்களும் தரைவாசி மக்கள்போல தங்களின் தேவைகளைப் பெற்று வாழ்வார்கள் என்பது உண்மையாகும்.

தகவல் குறிப்புகள்: 1. சி.நல்லதம்பி, (2011). தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள், புலம், ப.24. 2. Census of India 2011. www.censusindia.gov.in, www.census.tn.gov.in 3. உப்புதுறை ஜெ.ஜெ.நகர் மலைவாழ்விடத்தில் பளியர் இனமக்கிடம் நேரடியாக திரட்டப்பட்ட முதன்மைத் தரவுகள் (ஆய்வுக்குழு: கொ.சதாசிவம், உதவிப் பேராசிரியர், மாரிராஜன், சமூகவியல் ஆய்வாளர், பெ.பழனிச்சாமி, கோ.அஜிதா, கவிதா, பெரியமாயன், ராஜ்குமார் ஆகிய பொருளியல் ஆய்வு மாணவ-மாணவியர்கள்). 4. Jeyaprakash.K , Ayyanar.M, Geetha.KN , Sekar.T (2011). Traditional uses of medicinal plants among the tribal people in Theni District (Western Ghats), Southern India, Asian Pacific Journal of Tropical Biomedicine, pp 20-21, journal homepage:www.elsevier.com/locate/apjtb