பயனர் பேச்சு:வசந்தன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், வசந்தன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--ரவி 13:31, 1 மே 2006 (UTC)[பதிலளி]

நல்வரவு வசந்தன்! உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படுகின்றது. நீங்கள் வலைப்பதியும் வசந்தனா ?? --Natkeeran 01:50, 19 டிசம்பர் 2006 (UTC)

ஓமோம். அதே வசந்தன்தான்.--வசந்தன் 03:58, 19 டிசம்பர் 2006 (UTC)

நல்ல செய்தி, நல்ல செய்தி. அப்படியே உங்களப்பற்றி ஒர் இரு வசங்களைப் பயனர் பக்கத்தில் போட்டல் நல்லது. கட்டாயம் அல்ல. அல்லது சயந்தனை போட சொல்லுறன் :-) --Natkeeran 04:20, 19 டிசம்பர் 2006 (UTC)

வசந்தன், விக்கிப்பீடியாவுக்கு வரவேற்கிறேன்.--Kanags 08:33, 19 டிசம்பர் 2006 (UTC)
வருக வசந்தன். முக்கியமான பல விடயங்களை ஆவணப்படுத்த மிகப் பொருத்தமான தளம் விக்கிபிடியா. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். --கோபி 11:51, 19 டிசம்பர் 2006 (UTC)

வரவேற்பளித்த அனைவருக்கும் நன்றி. நற்கீரன், உந்த வசந்தன்-சயந்தன் பிரச்சினை ஓயாதுபோல கிடக்கு. பேசாமல் நீங்களே அந்த "ரெண்டொரு" அறிமுக வசனங்களையும் எழுதிவிட்டா நல்லதெண்டு நினைக்கிறன். நான் எழுதிறதெண்டா 'நான் சயந்தன் அல்லன்' எண்டதைத்தவிர வேற எழுத இல்லை.

-)

--வசந்தன் 12:32, 19 டிசம்பர் 2006 (UTC)

நற்கீரன், உங்கள் விருப்பப்படி பயனர் பக்கத்தில் இரண்டொரு வசனங்கள் எழுதியாச்சு. --வசந்தன் 00:11, 20 டிசம்பர் 2006 (UTC)

மிக்க நன்றி வசந்தன். --Natkeeran 01:09, 20 டிசம்பர் 2006 (UTC)

வசந்தன் கட்டுரைப் பக்கங்களில் கையொப்பம் இடுவதில்லை. பேச்சுப் பக்கங்களில் உரையாட நேர்ந்தால் கருத்துத் தெரிவிப்பவர் யாரென்று தெரிவிப்பதற்காக கையொப்பம் இடவேண்டிய தேவை உள்ளது. தொடர்ந்து பங்களியுங்கள். --கோபி 09:23, 20 டிசம்பர் 2006 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

எழுதப்பட வேண்டிய கட்டுரைகள்[தொகு]

நீங்கள் இட்டவற்றை இங்கு சேர்த்துள்ளேன்: பேச்சு:இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு.

வசந்தன் நீங்கள் எழுத நினைத்திருக்கும் கட்டுரைகள் எழுதிய பின்பு காலக்கோட்டில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும். எழுதப்பட வேண்டிய கட்டுரைகள் எல்லாவற்றையும் காலக்கோட்டில் உடனேயே சேர்தால், அது நீண்டு அவ்வளவு பயன் தராது. ஆட்சோபனை என்றால் சுட்டுங்கள் தற்போதைய வழக்கத்தை மாற்றிக்கொள்ளலாம். நன்றி. --Natkeeran 23:43, 2 ஆகஸ்ட் 2007 (UTC)

நீங்களே மாற்றிவிடுங்கள்[தொகு]

கட்டுரையை இட்ட பயனர் பெயர் தெரியாது. மிதிவெடியும் கண்ணிவெடியும் ஒன்று என்றால் எது சரியோ அதை வைத்துக்கொண்டு, தகவலை இணைத்து, உங்களுகள் பரிந்துரைகளுக்கு ஏற்ப மாற்றி விடுங்கள். தயக்கம் தேவை இல்லை...குறிப்பாக பொருள் பற்றிய கட்டுரைகளுக்கு. அத்தோடு நல்வரவு வசந்தன். கண்டு கன காலம். --Natkeeran 16:55, 14 பெப்ரவரி 2009 (UTC)

நன்றி நக்கீரன். கண்ணிவெடி என்பது மிகப்பெரிய ஒரு தொகுதி. மிதிவெடி என்பது அதில் ஒரு வகை. மனிதர்கள் மிதிக்கும்போது வெடித்து காலைச் சிதைக்கும் நோக்கோடு விதைக்கப்படுபவற்றை மிதிவெடி எனலாம். மிதிவெடி பற்றிய கட்டுரையில் 'இராணுவ நோக்கம்' என்ற பகுதி மிகத் தெளிவாகவும் அழகாகவும் மிதிவெடியின் பயன்பாட்டு நோக்கம் பற்றிச் சொல்கிறது. ஆனால் பின்னர் ஊர்தியெதிர்ப்புக் கண்ணிவெடிகளையும் மிதிவெடிகள் என்ற பகுப்பின்கீழ் கொண்டுவந்து கட்டுரை குழம்பிச் செல்கிறது. M 15 ஊர்தியெதிர்ப்புக் கண்ணிவெடி மிதிவெடி என்ற பகுப்பின் கீழ் வராது. புலிகளின் தயாரிப்பு ஊர்தியெதிர்ப்புக் கண்ணிவெடியின் பெயர் 'அம்மா' (அம்மான் அன்று).
மேலும் பல எடுத்துக்காட்டுக்களோடு அக்கட்டுரையை நானே மேம்படுத்துகிறேன்.
கண்ணிவெடி பற்றிய கட்டுரையையும் 'நேரம் கிடைக்கும்போது' (நேரம் கிடைப்பதென்பது சாட்டுத்தான். வலைப்பதிவில் எழுதாததுக்கும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்) மேம்படுத்துகிறேன்.
கண்ணிவெடி பற்றிய கட்டுரையை எழுதியவர் இந்தியத் தமிழராக இருக்க வேண்டும். கட்டுரையை மாற்ற முன்பு உரையாடற் பகுதியில் அவரின் கருத்தையும் கேட்டால் நன்று என்றுதான் எழுதினேன். அவர்கள் கண்ணிவெடி பற்றி ஒருவகையில் அறிந்திருக்கலாம். கண்ணிவெடி அகற்றும் பயிற்சி நெறிகளிற்கூட சரியான தகவல்கள் சொல்லப்படுவதில்லை. அகற்றும் தேவையை மட்டும் கருத்திற்கொண்டு விடங்கள் சொல்லப்படுவதுண்டு.--வசந்தன் 02:23, 15 பெப்ரவரி 2009 (UTC)

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

நன்றி வசந்தன். அந்தப் பயனர் பெயர் தெரிவிக்க வில்லை. ஒரு இரு நாள் சென்று விட்டன எனவே அவர் வந்து பதில் தருவார் என்று இனியும் எதிர்பாக்க தேவை இல்லை. கட்டுரையிலேயே தேவையான மாற்றங்களைச் செய்யலாம். அத்தோடு ஈழப் போர் காரணங்கள் தொடர்பான கட்டுரைகளையும் இயன்றவரை மேம்படுத்தி தாருங்கள். குறிப்பாக திட்டமிட்ட குடியேற்றம், கல்வி தரப்படுத்தல் ஆகிய கட்டுரைகளை. தகுந்த ஆதரங்களைச் சேத்தால் வலுச் சேக்கும். இக் கட்டுரைகள் இந்தியத் தமிழர்கள்/உலகத் தமிழர்கள் ஈழப் போராட்ட காரணங்களை புரிந்து கொள்ள மிகவும் உதவுகின்றன. பலர் நேரடியாகாவே எனக்கு தெரிவித்து உள்ளார்கள். அவற்றில் சில ஊடகத் துறையினரும் அடங்குவர். எனவே இயன்றவரை உதவவும். மிக்க நன்றி. --Natkeeran 20:05, 15 பெப்ரவரி 2009 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:08, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:வசந்தன்&oldid=823820" இலிருந்து மீள்விக்கப்பட்டது