பயனர் பேச்சு:மேமன்கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், மேமன்கவி!

விக்கிபீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிபீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --Sivakumar \பேச்சு 16:16, 30 அக்டோபர் 2006 (UTC)

நீங்கள் எழுத்தாளர் மேமன்கவி என்றே நினைக்கிறேன். அண்மையில் வலைப்பதிவொன்றையும் தொடங்கியதாகத் தெரிகிறது. கடைசியாகத் தமிழ்ச்சங்க நூலகத்தில் சந்தித்து நூலகம் திட்டம் தொடர்பில் பேசினோம். நீங்கள் தொடர்ந்து பங்களித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். சிலகாலத்தின்முன் இளையதம்பி தயானந்தா வதார். பின்னர் காணவில்லை. அவ்வாறு போய்விடாமல் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 16:19, 30 அக்டோபர் 2006 (UTC)

மேமன் கவி அவர்களுக்கு நல்வரவு. உங்கள் மூலம் பல சிறந்த கட்டுரைகளை விக்கிபீடியா பெற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். கோபி நாம் ஒரு நாள் மேமன் கவியை சந்திக்கலாமா?

---மு.மயூரன் 19:47, 30 அக்டோபர் 2006 (UTC)

மேமன்கவி அவர்களுக்கு, விக்கிபீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். தங்களைப்போல ஈழத்து எழுத்தாளர்கள் விக்கிபீடியாவில் நுழைவது விக்கியை மேலும் வளம்படுத்தும் என எதிர்பார்க்கலாம். தரமான இலக்கியக் கட்டுரைகளை இங்கு தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். விக்கிபீடியா பற்றியும் தமிழில் எ-கலப்பை போன்றவையின் பயன்பாடு பற்றியும் கோபி அல்லது மயூரனை சந்தித்தால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மயூரன் ஒரு பிரபல்யமான (!!) வலைப்பதிவாளரும் கூட. வலைப்பதிவு பற்றிய உங்கள் சந்தேகங்களையும் அவரிடம் கேட்டறியலாம்.--Kanags 07:06, 31 அக்டோபர் 2006 (UTC)

மேமன் கவி அவர்களை எனைய விக்கிபீடியர் சார்பில் நானும் வரவேற்கிறேன்--கலாநிதி 16:32, 31 அக்டோபர் 2006 (UTC)

கட்டுரை வரலாறு[தொகு]

ஒவ்வொரு பக்கத்தின் மேலும் தொகு இணைப்புக்கு அடுத்து வரலாறு என்னும் இணைப்பு இருக்கிறதல்லவா? அங்கு சென்று பார்த்தால் யார் யார் கட்டுரையில் என்னென்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள், யார் தொடங்கினார்கள் என அறியலாம். வெவ்வேறு மாற்றங்களுக்கு இடையிலான வேறுபாட்டையும் அறியலாம்--Ravidreams 18:50, 29 நவம்பர் 2006 (UTC)

பாராட்டு[தொகு]

எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளை நீங்கள் நேர்த்தியாக எழுதித் தருவது கண்டு மகிழ்கிறேன். இது போன்று நூட்கள், இலக்கியங்கள் குறித்தும் எழுதித் தர வேண்டுகிறேன். உங்கள் user பக்கத்தில் உங்களை பற்றிய விவரங்களை தந்தாலும் நன்றாக இருக்கும்--Ravidreams 13:50, 4 டிசம்பர் 2006 (UTC)

நன்றிகள்!!![தொகு]

நன்றிகள் நண்பர் Ravidreams அவர்களே! பாராட்டுக்கு. நான் ரொம்பவும் புதியவன் வீக்கிக்கு ஆனாலும் நான் விடும் தவறுகளை வீக்கி நண்பர்கள் உடனுக்கு உடன் திருத்துவதை கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். நல்ல கூட்டு குழு தான். சேர்த்து இயங்குவதில் சந்தோஷமாக இருக்கிறது. அந்த உரிமையுடன் ஒரு உதவி! நாம் எழுதும் கட்டுரைக்கான பொருளடக்கத்தை எப்படி உருவாக்குவது? இந்த கேள்வியை இந்த பகுதியில் கேட்பதும் சரியா? என்பதும் என் சந்தேகம்.---மேமன்கவி 20:06, 4 டிசம்பர் 2006 (UTC)

தாராளமாக இங்கே கேட்கலாம். குறிப்பிட்ட ஒரு பயனரிடமிருந்து உதவி வேண்டுமானால் அவரது பேச்சுப்பக்கத்தில் கேட்கலாம். கட்டுரைக்கான பொருளடக்கம் தானாக உருவாக்கப்படும். நீங்கள் தலைப்புக்களை இடும் வரிசைக்கேற்ப பொருளடக்கம் உருவாக்கப்படும். இது வெறும் கூட்டுக்குழு அல்ல. உலகளாவிய திறந்த கூட்டுக்குழு. விக்கிபீடியா எவருக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. இது எல்லோருக்கும் சொந்தம். அதனால்தான் இதை எல்லோரும் எமதாக உணர முடிகிறது. எம்முடைய கலைக்களஞ்சியத்தில் தவறுகள் நிகழ்ந்தால் உடனுக்குடன் திருத்தும் உணர்வு எழுமில்லையா? ஒரு சோசலிச சமுதாயம் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன் :-) - --மு.மயூரன் 19:44, 4 டிசம்பர் 2006 (UTC)
நீங்கள் உணரும் அந்த சந்தோஷம் தான், விக்கி திட்டங்கள் தொடர்ந்து வளர காரணம். (வீக்கீ என்று சொல்வது தான் சரியான உச்சரிப்பு. ஆனால், தமிழில் விக்கி என்ற சொல் நிலைத்துவிட்டது!). இனி நீங்களும் இந்த அனுபவத்தை, சந்தோஷத்தை இலவசமாக அனுபவிக்கலாம் :) இங்கு நாங்கள் புதுக்கட்டுரைகள் எழுதுகிறோமோ இல்லையோ தவறுகள் கண்டால் மட்டும் பொறுக்காமல் மாற்றி விடுவோம் :). நான் கூட சில சமயங்களில் நம் சமுதாயமும் அரசாங்கமும் விக்கி முறையில் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதுண்டு. பிறகு, பொருளடக்கம் தானாகவே வரும். எடுத்துக்காட்டுக்கு, இந்த பக்கத்தை பாருங்கள். இதில் வாழ்க்கை குறிப்பு, வெளிவந்த நூல்கள், விருதுகள் போன்றவை == == என்ற குறிகளுக்கு இடையில் அமைந்துள்ளது அல்லவா? இந்த விக்கி குறி தலைப்புகளையும் அது தொடர்பாக பொருளடக்கத்தையும் தானாக உருவாக்கும். எனவே, நீங்கள் தலைப்புகளை தர விரும்பும்போது இந்த குறிகளை பயன்படுத்தவும். அடுத்த நிலை துணை துணைத்தலைப்புகளுக்கு === ===, ==== ====... என்று சமன்பாட்டுக் குறியை இருபக்கமும் அதிகரித்துச் செல்ல வேண்டும். விவரங்களுப் பார்க்கவும் -[1]. உதவி கோரும் கேள்விகளை உங்கள் பேச்சுப் பக்கத்திலோ ஒத்தாசைப் பக்கத்திலோ கேட்கலாம். அண்மைய மாற்றங்கள் பகுதியை கவனித்து வரும் பிற பயனர்கள் அதை கண்டு பதில் தருவர். மாறாக, ஏதாவது ஒரு பயனரின் பேச்சுப் பக்கத்திலும் நீங்கள் விரும்பிக் கேட்கலாம். கேள்வி பொதுவாக இருக்கும் பட்சத்தில் அந்த பயனருக்கு முந்தி வேறு சிலரும் முதலில் பதில் தரக்கூடும் !
படிமங்கள் விஷயத்தில், காப்புரிமை அற்ற, திறந்த நிலையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட படிமங்களை மட்டும் விக்கிபீடியாவில் பயன்படுத்துவது பெரிதும் பரிந்துரைக்கத்தக்கது. தமிழ் எழுத்தாளர்கள், நூட்களுக்கு இத்தகைய படங்கள் கிடைப்பது சிக்கலாக இருக்கலாம். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உங்களுக்கு அறிமுகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்று படிமங்களை தரலாம். ஏற்கனவே பிற தளங்களில் படங்கள் வெளியாகி இருந்தால் அத்தள நிர்வாகிகளுக்கு எழுதிக் கேட்டு அனுமதி பெறலாம். இல்லை, குறைந்தபட்சம் அப்படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலாவது தருவது பிற்காலத்தில், அதற்கான காப்புரிமை விலக்கு பெற வசதியாக இருக்கும். பொதுவான படங்களுக்கு commons.wikimedia.org தளத்திலும், flickr, creative commons போன்ற தளங்களில் காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட படங்கள் நிறைய கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம். உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் அட்டைப் படங்களை நீங்களே வருடிச் (scan) சேர்க்கலாம் என்று தான் நினைக்கிறேன். இது குறித்து இன்னும் அறிந்து கொண்டு உறுதிப்படுத்துகிறேன். இப்படி நீங்களே வருடிச் சேர்க்கும்போது, அப்படிச் செய்தீர்கள் என்று குறிப்பிடுங்கள். இந்தப் படிமப் பதிவேற்றுக் கொள்கை கொஞ்சம் சிக்கலாகத் தோன்றலாம். ஆனால், நாம் கட்டற்ற முறையில் கலைக்களஞ்சியத்தை உருவாக்க முனையும்போது அதற்கேற்றவாறு செயல்பட வேண்டி இருக்கிறதல்லவா? மற்றபடி, பொருத்தமான படங்களை எந்த அளவிலும் எத்தனை வேண்டுமானாலும் சேர்க்கலாம். கட்டுப்பாடு இல்லை. நன்றி--Ravidreams 22:53, 4 டிசம்பர் 2006 (UTC)
//தமிழ் எழுத்தாளர்கள், நூட்களுக்கு இத்தகைய படங்கள் கிடைப்பது சிக்கலாக இருக்கலாம்.// ரவி எழுத்தாளர்களது புகைப்படங்கள், இவரே scan செய்யும் நூற்களின் அட்டைப்படங்கள் காப்புரிமை கொண்டனவாக இருக்காது என்றே நம்புகிறேன். மேமன் கவிபயமில்லாமல் அவற்றை பயன்படுத்தலாம். ஆனால் வேறு தளங்களில் இருந்து படங்களை எடுக்கும்போது அவதானமாக இருந்தால் போதுமானது. --மு.மயூரன் 03:09, 5 டிசம்பர் 2006 (UTC)

நல்வரவு[தொகு]

நல்வரவு மேமன்கவி. உங்களின் பங்களிப்பால் த.வி நிச்சியமாக பலம்பெறும்.

உங்கள் கருத்துக்களை Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி தந்தால் நன்று. பேச்சுப் பக்கத்தில் இடலாம். நன்றி. --Natkeeran 02:45, 10 டிசம்பர் 2006 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:39, 21 சூலை 2011 (UTC)

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்[தொகு]

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:36, 13 மார்ச் 2013 (UTC)