பயனர் பேச்சு:மதனாஹரன்/தொகுப்பு ௧

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், மதனாஹரன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--மணியன் 13:21, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஒரு வேண்டுகோள்[தொகு]

விக்கிப்பீடியாவில் கலைக் களஞ்சியத் தன்மையுடைய கட்டுரைகளை மட்டுமே சமர்ப்பிக்கவும். நீங்கள் உருவாக்கியுள்ள சோனி எரிக்சன் கைப்பேசி பற்றிய கட்டுரை இதற்குப் பொருந்தாததாக உள்ளது. விக்கிப்பீடியா ஒரு விளம்பரத் தளம் அல்ல. மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும். மிகவும் பிரசித்தி பெற்ற ஐபோன் போன்ற கட்டுரைகள் சமூகத்தில் மிகுந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதால் விக்கி விதிமுறைகளுக்குள் அடங்கும். ஆனால் விதிவிலக்குகள் என்றும் விதிகளாகா. எனவே உங்களுடைய கட்டுரையை நீங்களே நீக்கி விடுங்கள். --ஏர்னஸ்டோ பாலாஜி 11:24, 16 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பாலாஜி, இது முற்றிலும் பொருத்தமான தலைப்பே. கலைக்களஞ்சியம் என்றால் அனைத்து தரப்பு தலைப்புகளும் எழுதலாம். ஐபோன் போடலாம் எரிக்சன் போடக்கூடாது என்ற எந்தவொரு தடையும் கிடையாது. “மிக முக்கியத்துவம் வாய்ந்த” கட்டுரைகள் என்றல்ல கலைக்களஞ்சிய நடையில் பயனுள்ள அனைத்து விசயங்களைப் பற்றியும் எழுதலாம். இக்கட்டுரை கலைக்களஞ்சியத் தன்மையுடன் தான் எழுதப்பட்டுள்ளது. ஆங்கில விக்கி போன்று தமிழ் விக்கியில் கடினமான notability criteria கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது ஆங்கில விக்கி notability விதிகளை எளிதாகக் கடந்து விடும். பிற பயனர்களுக்கு எழுத வேண்டாம் என்று சொல்லும் முன் நிருவாகிகள் யாரிடமோ அல்லது ஆலமரத்தடியிலோ உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.
மதனாஹரன், இது போன்ற கட்டுரைகளை எழுதுவதில் எந்தத் தடையும் கிடையாது. தொடர்ந்து எழுதுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 11:31, 16 திசம்பர் 2011 (UTC).[பதிலளி]
எனில் தவறுக்கு மன்னிக்கவும். ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இந்த கட்டுரை உள்ளது என்பதைக் கண்டேன். ஆலமரத்தடி பற்றியும் தெரிந்து கொள்கிறேன். நன்றி நண்பர்களே. −முன்நிற்கும் கருத்து Bala8vijay (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

@ஏர்னஸ்டோ பாலாஜி: ஆங்கில விக்கிப்பீடியாவிலும் சோனி எரிக்சன் கே770ஐ பற்றிய கட்டுரை இருப்பதைப் பார்த்து விட்டே இதனை எழுதினேன். ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் நோக்கியா N95, நோக்கியா 1100, நோக்கியா 6300, சோனி எரிக்சன் சி905 பற்றிய கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. --மதனாஹரன் 11:36, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

@சோடாபாட்டில்: நன்றி! --மதனாஹரன் 11:36, 18 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
மிக இளைய வயதில் மிக்க ஆர்வத்துடன் பல புதிய கட்டுரைகளைத் தொடங்கிவரும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி யடைகிறேன். மணியன் 13:25, 17 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நல்வரவு மதனாஹரன்! உங்களைப் போன்ற இளையோர் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:53, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் நீங்கள் அனைவரும் வழங்கும் ஆதரவு, கதைக்கும் முறை என்பன எனக்கு நன்றாகப் பிடித்துள்ளன. --மதனாஹரன் 10:52, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கியில் நீங்கள் எழுதும் புதிய தலைப்பிலான கட்டுரைகள் வியக்க வைக்கின்றன. இல்லாத் தலைப்புகளில் அருமையாக ஆக்கங்கள் அளித்து அசத்துகிறீர்கள். கடவுச்சொல் என்ற கட்டுரை பார்த்தேன். தெளிவாக இருந்தது. :) நானும் முடிந்த அளவு அக்கட்டுரையில் பங்குகொள்கிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துகள் மதனாஹரன். சூர்யபிரகாசு உரையாடுக... 12:47, 19 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நீங்கள் அனைவரும் வழங்கும் ஆதரவே கட்டுரைகள் எழுதுவதற்கு ஊக்கம் அளிக்கின்றன. அவ்வாறு ஆதரவளித்த நிர்வாகிகளுக்கும் பயனர்களுக்கும் எனது நன்றிகள்! --மதனாஹரன் 02:49, 20 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

வியக்க வைக்கிறது உங்களின் திறமை![தொகு]

கணினி, பொறியியல் மற்றும் அறிவியல் குறித்து நீங்கள் எழுதிவரும் கட்டுரைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. உங்களின் தமிழ், தெளிவாகவும் முறைப்படியாகவும் பிழையேதும் இல்லாமல் அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சிறப்பான செயலாக்கம். --Selvasivagurunathan mஉரையாடுக

நன்றிகள்! --மதனாஹரன் 02:48, 20 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

பெயரீடு[தொகு]

தமிழ் விக்கியில் விண்டோஸ் என்ற பயன்பாடு உள்ளதால், அக்கட்டுரையை நகர்த்தியுள்ளேன். விண்டோஸ் மீடியா பிளேயர் :) இனி இப்பெயரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். :) --சூர்யபிரகாசு உரையாடுக... 06:43, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

வின்டோஸ் மீடியா பிளேயர் என்ற பக்கத்திலிருந்து வழிமாற்று ஒன்று கொடுத்து விடுங்கள். --மதனாஹரன் 06:46, 24 திசம்பர் 2011 (UTC) Y ஆயிற்று --சூர்யபிரகாசு உரையாடுக... 06:47, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

வின்டோஸ் என்பதே சரியான ஒலிப்பாகத் தெரிகிறது. ஒருங்குறியில் ன்+டோ என எழுதும் போது ண்டோ என வருவதால் அவ்வாறே நிலைத்து விட்டது போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 06:53, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

விண்டோஸ் சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்டுரைகளுக்கும் அவ்வாறே வழிமாற்றுக்களைக் கொடுத்து விடலாம். --மதனாஹரன் 06:56, 24 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள்[தொகு]

இவ்வளவு இளைஞராய் இருந்து இவ்வளவு அருமையாய்ப் பணியாற்றுகின்றீர்களே!! நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள். உங்கள் முதன்மையான கடமைகளுக்கு எந்த ஊறும் விளையாமல், தமிழ் விக்கியில் இயலும் பொழுதெல்லாம் பங்களியுங்கள்! நன்றி.--செல்வா 13:02, 31 சனவரி 2012 (UTC)[பதிலளி]

நிச்சயமாகப் பங்களிப்பேன்! தங்களுக்கு எனது நன்றிகள்! --மதனாஹரன் 11:31, 1 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி.--செல்வா 11:41, 1 பெப்ரவரி 2012 (UTC)

உங்கள் விக்கிப்பணி கண்டு மகிழ்கிறேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்--இரவி 11:47, 4 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி! --மதனாஹரன் 11:47, 4 பெப்ரவரி 2012 (UTC)

Can we upload the file File: Jhansi_Rani_Zee.jpg in the English Wikipedia?--Shankrskite 04:32, 3 பெப்ரவரி 2012 (UTC)

@Shankrskite: Yes, you can. --மதனாஹரன் 11:03, 3 பெப்ரவரி 2012 (UTC)

And as for your query about Tippu being the singer of the title song of the show "Jhansi Rani" I actually read it in the title song of the show where the give the list of crew who have worked on on the show. Usually they don't play the tile song but that day the show show took the leap (small Rani became big Rani) so the title song was played and the cast and crew showed. Hope your doubts are cleared. If you want to listen to the song you can go here: http://zeetamizh.com/mp3/j.mp3

Thanks --Shankrskite 04:32, 3 பெப்ரவரி 2012 (UTC)

Thank you! --மதனாஹரன் 10:36, 3 பெப்ரவரி 2012 (UTC)

@மதனாஹரன்: Please note. The actual title of the song is "ஜான்சி ராணி.....ஒரு வீரப் பெண்ணிண் கதை" and not "ஒரு வீரப்பெண்ணின் கதை... ஜான்சி ராணி", you can see the proof in the above photo it says "ஜான்சி ராணி.....ஒரு வீரப் பெண்ணிண் கதை" and not "ஒரு வீரப்பெண்ணின் கதை... ஜான்சி ராணி", the later is the Tamil translated version of the title of the hindi serial and not the actual title of the tamil serial. Hope I am not offending you. --Shankrskite 12:12, 3 பெப்ரவரி 2012 (UTC)

Ok! I changed the title. See this page. ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை --மதனாஹரன் 12:15, 3 பெப்ரவரி 2012 (UTC)

@மதனாஹரன் Thank u so much.--Shankrskite 12:25, 3 பெப்ரவரி 2012 (UTC)

Do you have a video link of the title song which was played with cast? --மதனாஹரன் 12:28, 3 பெப்ரவரி 2012 (UTC)
@Shankrskite: You can create a user page in Tamil in this link. Shankrskite So, we can easily contact you. --மதனாஹரன் 12:37, 3 பெப்ரவரி 2012 (UTC)

@மதனாஹரன் sorry I don't have the link showing the cast and about the user page....i have it in English, I thought it was enough....I will create it in Tamil soon.--Shankrskite 13:58, 7 பெப்ரவரி 2012 (UTC)

@Shankrskite: Here is the link in Hindi. But, can't find the Tamil version of this episode. --மதனாஹரன் 09:28, 8 பெப்ரவரி 2012 (UTC)

சிறு பரிந்துரை[தொகு]

வணக்கம்...நானும் யாரோ புகுபதிகை செய்ய மறந்துவிட்டதாகத்தான் நினைத்தேன்...அதனால்தான் ஞாபகப்படுத்தினேன்..தங்கள் சொந்த கணினி எனில் "கடவுச்சொல்லை நினைவில் வைத்திருக்கவும்" தேர்வை தேர்வு செய்துவிடலாம் .. இந்த பிரச்சினை இருக்காது.... நன்றி... −முன்நிற்கும் கருத்து Shanmugamp7 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பதிலளித்தமைக்கு நன்றி! உங்கள் கையொப்பத்தை இட மறந்து விட்டீர்கள்! --மதனாஹரன் 11:10, 4 பெப்ரவரி 2012 (UTC)
:)--shanmugam 12:08, 4 பெப்ரவரி 2012 (UTC)

பக்கத்தை நகர்த்த[தொகு]

உதவி:பக்கத்தை நகர்த்துதல் பார்க்கவும். ஒவ்வொரு பக்கத்தின் மேல் உள்ள நட்சத்திரக் குறிக்கு அடுத்து உள்ள அம்புக்குறியை அழுத்தினால் நகர்த்தவும் என்ற தெரிவு கிடைக்கும். அதைப் பயன்படுத்தி நீங்களே தலைப்புகளை மாற்றலாம் / பக்கங்களை நகர்த்தலாம். --இரவி 11:06, 9 பெப்ரவரி 2012 (UTC)

நகர்த்துவதில் சிக்கலில்லை. பக்கத்தை நீக்குவதற்குத் தான் நிருவாகிகளின் உதவி தேவைப்படுகிறது. --மதனாஹரன் 11:16, 9 பெப்ரவரி 2012 (UTC)

சரி. முதலில் பக்கத்தை நகர்த்தினால், அது வரலாற்றோடு சேர்ந்து நகரும். பிறகு, வழிமாற்று தேவையில்லை எனில் நீக்கல் வேண்டுகோள் விடுக்கலாம். --இரவி 11:20, 9 பெப்ரவரி 2012 (UTC)

ஆள் களப்பெயர்[தொகு]

ஆள்களப்பெயர் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் 05:56, 15 பெப்ரவரி 2012 (UTC)

எழுதி விட்டேன். ஆள்களப் பெயர் என்ற பக்கத்தைப் பார்க்கவும். மேற்கோள்களையும் சேர்த்து விடுகின்றேன். --மதனாஹரன் 13:29, 16 பெப்ரவரி 2012 (UTC)

மேற்கோள்களையும் சேர்த்து விட்டேன். --மதனாஹரன் 11:21, 25 பெப்ரவரி 2012 (UTC)

ஆங்கில ABCD[தொகு]

(என் பேச்சுப்பக்கத்தில் கருத்திட்டு இருந்தீர்கள்)

மதன், மாற்றுவதற்காகச் சொல்லவில்லை. எதையும் மாற்றவேண்டாம். ஆங்கில எழுத்துகளின் பெயர்களில் இல்லாத சீர்மையையும், அமெரிக்கர்கள் zee என்று ஓரெழுத்துக்குச் சீர்மை கூட்டியதையும், குறிப்பிட விரும்பினேன். ஒரு மொழியை (ஆங்கிலம்/பிரரசியம்/...) அறியாதவர்கள் தங்கள் மொழியின் வாயிலாக அம்மொழியின் எழுத்தொலிகளைப் படிக்க/அறிய/கற்றுக்கொள்ள, தங்கள் மொழியில் அவ்வொலி எங்கு வழங்குகின்றது என்று சுட்டியும் எடுத்துக்காட்டாகத் தந்தும் தங்கள் மொழியில் தருதல் எல்லா மொழிகளிலும் நிகழ்வது. எடுத்துக்காட்டாக இடாய்ச்சு மொழியில் (செருமன் மொழியில்) z என்றால் அதன் ஒலிப்பு cats என்பதில் வரும் -ts என்று சொல்லித்தருவார்கள். பிரான்சிய மொழியில் வரும் j -வின் ஒலிப்பு ஒருவகையான ழகரம் (முற்றிலுமாகத் தமிழ் ழகரமே அல்ல, ஆனால் அதை ஒட்டிய ஓர் ஒலிப்பு), இதனை ஆங்கிலேயர்கள் measure என்பதில் வரும் s என்பதுபோல என்று சுட்டிக் காட்டுவர். அதுபோல தமிழில் B D ஆகிய ஒலிகளைத் தமிழில் குறிக்க கபம், கம்பம், இன்பம் போன்ற எழுத்துகளில் வரும் ப போன்ற ஒலிப்பு என்றும், D என்பதன் ஒலிப்பு படம், குடம், என்பதில் வரும் ட போன்ற ஒலிப்பு என்றும் சொல்லித்தருகின்றோம். அதே போல B என்பது இபீ, D என்பது இடீ என்பது போன்று ஒலிப்பைக் காட்டும் எழுதொலிப்பெயர்களாகச் சுட்டலாம் என்னும் கருத்தைத்தான் பகிர்ந்தேன். தமிழ்விக்கிப்பீடியாவில் மாற்றுவதற்காகச் சொல்லவில்லை.

--செல்வா 13:37, 20 பெப்ரவரி 2012 (UTC)

விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள்! நீங்கள் உங்கள் பேச்சுப் பக்கத்திலேயே பதிலளிக்கலாம். நான் மறுமொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றேன். --மதனாஹரன் 13:46, 20 பெப்ரவரி 2012 (UTC)

ஓ! நன்றி! அப்படியே செய்கின்றேன். --செல்வா 03:21, 21 பெப்ரவரி 2012 (UTC)

Shankrskite[தொகு]

You had asked me to see your Talk page on 20th February..... After a long time now only I am coming..... What is that you wanted me to see?--Shankrskite (பேச்சு) 06:00, 7 மார்ச் 2012 (UTC)

This title! --மதனாஹரன் (பேச்சு) 13:57, 7 மார்ச் 2012 (UTC)

@மதனாஹரன்What is new there?! You have provided the Hindi episode of the leap (Which i have already seen)... Thanks for the link......... I don't see anything new there.... --Shankrskite (பேச்சு) 07:33, 8 மார்ச் 2012 (UTC)

I am asking Do you have the Tamil version of that episode? --மதனாஹரன் (பேச்சு) 10:48, 8 மார்ச் 2012 (UTC)

I have already replied about that question in my previous post as sorry I don't have the link showing the cast please see...... I think in the re-telecast (what they are doing now) they will show it again.... I will try to get it this time--Shankrskite (பேச்சு) 04:57, 9 மார்ச் 2012 (UTC)

Ok... --மதனாஹரன் (பேச்சு) 13:34, 9 மார்ச் 2012 (UTC)

Hey, I'm really sorry.... the leap in the repackaged version of the serial took place in the midway of the episode. So the title song was not played. So I can't get the link and I don't hope it would be uploaded by Zee.--Shankrskite (பேச்சு) 11:33, 26 மார்ச் 2012 (UTC)

It's ok. --மதனாஹரன் (பேச்சு) 12:18, 26 மார்ச் 2012 (UTC)

நன்றிகள் மதனாஹரன் !! --எஸ்ஸார் 13:05, 12 மார்ச் 2012 (UTC)

நல்லது. மறுமொழிக் கொள்கையைப் பின்பற்றவும்! அப்போது தான் ஏனைய பயனர்கள் நிகழ்ந்த உரையாடலை இலகுவில் விளங்கிக் கொள்ள முடியும். --மதனாஹரன் (பேச்சு) 12:48, 15 மார்ச் 2012 (UTC)

நன்றி[தொகு]

உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பலரும் தமிழ் விக்கிப்பீடியாவின் இணைந்து பங்களிப்பதே, இன்னும் கூடிய உற்சாகத்துடன் அனைவரையும் பங்களிக்க வைக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 14 மார்ச் 2012 (UTC)

நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 09:21, 14 மார்ச் 2012 (UTC)

உங்களின் கவனத்திற்கு...![தொகு]

பாக்கெட் சுவிட்சிங், என்பதனை பொட்டல நிலைமாற்றல் என மாற்றியிருக்கிறீர்கள். கட்டுரையின் உள்ளே 'பொதி' என எழுதப்பட்டுள்ளது. கட்டுரையின் தலைப்பும் உள்ளே எழுதப்பட்டுள்ளனவும் ஒரே மாதிரி இருப்பது நன்று என நினைக்கிறேன். இக்கட்டுரையின் தரத்தை உயர்த்தவும் உதவுக! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:09, 16 மார்ச் 2012 (UTC)

உள்ளே தகவல்களை மாற்றி விட்டேன். கூடிய விரைவில் கட்டுரையின் தரத்தை மேம்படுத்துகின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 02:22, 17 மார்ச் 2012 (UTC)
நன்றி மதனாஹரன்! நானே மாற்றியிருக்கலாம், ஆனால் நீங்களே இக்கட்டுரையை திருத்தவும் விரிவுபடுத்தவும் பொருத்தமானவர்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:15, 17 மார்ச் 2012 (UTC)

நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 13:35, 17 மார்ச் 2012 (UTC)

அதனைக் குறுங்கட்டுரையின் தரத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். --மதனாஹரன் (பேச்சு) 14:37, 17 மார்ச் 2012 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மதனாஹரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 08:44, 19 மார்ச் 2012 (UTC)

தங்களுக்கு நன்றி! கூடிய விரைவில் தருகின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 10:28, 19 மார்ச் 2012 (UTC)
அறிமுகத்தைச் சேர்த்துள்ளேன். பாருங்கள். --மதனாஹரன் (பேச்சு) 11:42, 19 மார்ச் 2012 (UTC)

நன்றி, மதன். இந்த அறிமுகம் பல்வேறு விக்கிப்பீடியா பரப்புரைகளிலும் இடம் பெறும் வாய்ப்பு உண்டு என்பதால், தங்கள் முகம் தெளிவாகத் தெரியும் சற்று நுணுக்கம் கூடிய பெரிய படத்தைத் தர முடியுமா? அப்புறம், தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பன்முகப் பங்களிக்கும் ஆக இளைய பயனர் என்ற முறையில் உங்கள் வயதைக் குறிப்பிடலாமா? இது உங்களைப் போன்ற இன்னும் பல இளைஞர்களை ஈர்க்க உதவும் என்று நம்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 19:21, 19 மார்ச் 2012 (UTC)

நன்றிகள்! அறிமுகப் பக்கத்தில் வயதைக் குறிப்பிட்டு இற்றைப்படுத்தியுள்ளேன். நுணுக்கம் கூடிய படத்தை இன்று தருகின்றேன். அது வரை அறிமுகத்தை இடம்பெறச் செய்ய வேண்டாமென்று கேட்டுக் கொள்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 02:16, 20 மார்ச் 2012 (UTC)
இப்போது தந்த படம் போதுமென நினைக்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 12:51, 20 மார்ச் 2012 (UTC)

நன்றி, மதன். சற்று உரை திருத்தி, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இட்டுள்ளேன். ஏப்ரல் 16 முதல் 30 வரை முதற்பக்கத்தில் அறிமுகப்படுதுவோம். நன்றி--இரவி (பேச்சு) 13:29, 22 மார்ச் 2012 (UTC)

நன்றி! விக்கி தானுலாவி பற்றிய உதவிக் குறிப்பைச் சேர்த்துள்ளீர்களா? --மதனாஹரன் (பேச்சு) 13:32, 22 மார்ச் 2012 (UTC)

சிறு தொகுப்புகள், awb[தொகு]

பல்வேறு பக்கங்களில் ஒரே வார்ப்புரு இணைப்பது போன்ற பணிகளைச் சிறு தொகுப்புகளாகக் குறிக்கலாம். இதன் மூலம் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் குறைந்து அவற்றைக் கண்காணித்து வரும் மற்ற பயனர்களுக்கு உதவியாக இருக்கும். இது போன்ற பணிகளுக்கு விக்கி தானுலாவியும் பயன்படுத்தலாம். நன்றி--இரவி (பேச்சு) 08:54, 19 மார்ச் 2012 (UTC)

நன்றி! விக்கி தானுலாவியை ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். எப்படிப் பயன்படுத்துவது என்று உதவ முடியுமா? --மதனாஹரன் (பேச்சு) 10:16, 19 மார்ச் 2012 (UTC)

விரைவில், இது குறித்த உதவிப் பக்கத்தைச் சேர்க்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 19:21, 19 மார்ச் 2012 (UTC)

பதக்கம்[தொகு]

சிறப்புப் பதக்கம்
சிறந்த மொழிப் புலமையையும் ஆழ்ந்த அறிவுச் செறிவையும் பெற்றிருப்பதோடு, தணியாத ஆர்வம் கொண்டு விளங்கும் உங்களைப் பார்த்து வியந்து பாராட்டுகின்றேன்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:49, 23 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 13:04, 24 மார்ச் 2012 (UTC)


வணக்கம் மதனாஹரன். வயதுக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பதை விக்கிபீடியாவில் தஙகளின் பங்களிப்புகள் மூலம் உறுதிப்படுத்துகிறீர்கள். இச்சிறுவயதில் எப்படிச் சாத்தியம்? என்ற வியப்பே மேலோங்குகிறது. விக்கிபீடியா உறுதியாகத் தங்களின் அறிவுக்குத் தீனி போடும் அதே நேரம் தங்களையும் கொடையாளனாக்கும். பல்லாண்டு வாழ்ந்து வாழ்வில் இன்னும் பல உயரங்களை அடைய மனதார வாழ்த்துகிறேன்.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 24 மார்ச் 2012 (UTC)

தங்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 13:21, 24 மார்ச் 2012 (UTC)

சான்று தேவை குறித்து[தொகு]

வணக்கம். சான்று தேவை வார்ப்புரு இடப்பட்ட வசனங்கள் அல்லது, கட்டுரைகளை தனியே பார்ப்பது எப்படி? -- தினேஷ்குமார் பொன்னுசாமி, 30, மார்ச்சு, 2012.

இப்பகுப்பில் ஆதாரம் தேவைப்படும் கட்டுரைகள், மேற்கோள்_தேவைப்படும்_பக்கங்கள் என இரண்டு துணைப்பகுப்புகள் உள்ளன.. இவற்றுள் காணலாம்..--shanmugam (பேச்சு) 13:20, 30 மார்ச் 2012 (UTC)
நன்றி சன்முகம். என்னால் இயன்ற அளவு ஆதாரங்களை திரட்டுகிறேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி, 30, மார்ச்சு, 2012.

நானும் இதை எவ்வாறு அறிவது என்று கேட்கலாம் என்றிருந்தேன். தாங்களே உதவி விட்டீர்கள்... நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 12:28, 10 ஏப்ரல் 2012 (UTC)

மீன் பிடித்தல்[தொகு]

மதன்,
போனமுறை மீனை சமையல் செய்து எனக்கு உண்ணத் தந்தீர்கள்... ஆனால் இம்முறை, மீனை எப்படி பிடிக்கவேண்டும் என்பதனைக் கற்றுத்தந்தால்... அடிக்கடி தொந்தரவு செய்யமாட்டேன். வேறொன்றும் இல்லை... File:Luxury Car 2.jpg எனும் படிமத்தை 'பொது'விற்கு நகர்த்துவது எப்படி என சொல்லவும். நன்றி! - அன்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:42, 4 ஏப்ரல் 2012 (UTC)

விக்கி பொதுவில் கணக்கை உருவாக்குங்கள். இதற்காக இத்தளத்திற்குச் செல்லுங்கள். Selvasivagurunathan_m என்ற பயனர் பெயரிலேயே கணக்கை உருவாக்குங்கள். பின்னர், புகுபதிகை செய்யுங்கள். அதன் பின்னர் இத்தளத்திற்குச் செல்லுங்கள். அதிலே User name on wiki(m|p)edia என்ற பகுதியில் Selvasivagurunathan_m என்று கொடுத்து விட்டு, Language என்ற பகுதியில் commons என்பதையும் Project என்ற பகுதியில் wikimedia என்பதையும் கொடுங்கள். பின்னர், Next step என்பதில் சொடுக்குங்கள். அடுத்த பக்கத்தில் Click me! என்பதில் சொடுக்குங்கள் (இதன்போது நீங்கள் விக்கி பொதுவில் புகுபதிகை செய்திருக்க வேண்டும்.). பின்னர் கடவுச் சொல் பகுதியில் உங்கள் விக்கி பொதுக் கடவுச் சொல்லைத் தவிர்த்து வேறொரு புதிய கடவுச் சொல்லை இட்டுக் கணக்கை உருவாக்குங்கள். அதன் பின்னர், இத்தளத்தில் விக்கி பொதுவுக்கு நகர்த்த வேண்டிய கோப்பு உள்ள விக்கிப்பீடியாவின் மொழிக் குறியீட்டை Language code என்ற பகுதியில் இடுங்கள் (ஆங்கில விக்கிப்பீடியா எனின், en). Image name என்ற பகுதியில் கோப்பின் பெயரைக் கொடுங்கள். New name என்ற பகுதியில் எதுவும் கொடுக்க வேண்டாம். Project என்பதில் wikipedia என்பதைக் கொடுங்கள். User: என்ற பகுதியிலும் TUSC user name என்ற பகுதியிலும் Selvasivagurunathan_m என்பதைக் கொடுங்கள். TUSC password என்பதில் நீங்கள் கொடுத்த கடவுச் சொல்லை இடுங்கள். பின் Get text என்பதில் சொடுக்குங்கள். இப்போது கோப்பு நகர்த்தப்பட்டிருக்கும். --மதனாஹரன் (பேச்சு) 15:20, 4 ஏப்ரல் 2012 (UTC)

திரு.கலாமணி மதனாஹரன், வணக்கம்!

எனக்கு தங்கள் மூலம் ஒரு உதவி தேவைப் படுகிறது:

நான் ஒரு பயனர் பக்கத்தில் என் கையெழுத்தை இங்கே உருவாக்கியுள்ளேன்.

பயனர்:Iramuthusamy/Signature

இதை எவ்வாறு என் கையெழுத்துடன் இணைப்பது. நேரமிருந்தால் உதவி செய்யவும்.

நன்றி --Iramuthusamy (பேச்சு) 11:17, 5 ஏப்ரல் 2012 (UTC)

கையெழுத்தில் வேண்டிய மாற்றங்களைச் செய்துள்ளேன். {{பயனர்:Iramuthusamy/Signature|~~~~~}} என்பதையே பிரதி செய்து தாங்கள் கையொப்பம் இட வேண்டிய இடத்தில் இட வேண்டும். கவனிக்க! ஐந்து தலைபெய் குறிகள் இடம்பெறுதல் வேண்டும் (தகவலுழவன் தவறாக நான்கு தலைபெய் குறிகள் என்றுள்ளார் போலும்.). --மதனாஹரன் (பேச்சு) 11:53, 5 ஏப்ரல் 2012 (UTC)


இரா♣முத்துசாமிஉரையாடுக 12:58, 5 ஏப்ரல் 2012 (UTC)


திரு.கலாமணி மதனாஹரன்,
சோதித்துப் பார்த்தேன் நிறைவாக உள்ளது. பெரிய உதவி. என் இதயம் கனிந்த நன்றிகளுடன்

இரா♣முத்துசாமிஉரையாடுக 12:58, 5 ஏப்ரல் 2012 (UTC)


:) --மதனாஹரன் (பேச்சு) 13:02, 5 ஏப்ரல் 2012 (UTC)

செய்திகள்[தொகு]

வணக்கம் மதனாஹரன், நாட்கள் பற்றிய கட்டுரைகளில் (உ+ம்> ஏப்ரல் 14) வழமையான செய்திகள் எழுதப்படுவதில்லை. குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமே பதியப்படுகிறது. அவற்றுக்கு மேற்கோள்கள் தரத் தேவையில்லை. நீங்கள் இட்ட செய்தியை வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் ஏப்ரல் 2012 என்ற பக்கத்திற்கு மாற்றியிருக்கிறேன். தொடர்ந்து இவ்வாறான குறுஞ்செய்திகளை எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:48, 14 ஏப்ரல் 2012 (UTC)

சரி! நன்றி! --மதனாஹரன் (பேச்சு) 10:51, 14 ஏப்ரல் 2012 (UTC)

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்[தொகு]

மதன், உங்களைப் பற்றிய முதற்பக்க அறிமுகம் இன்று முதல் அடுத்த இரு வாரங்களுக்கு இடம்பெறும். இவ்வாறு அறிமுகப்படுத்தப்படு்ம் ஐம்பதாவது தமிழ் விக்கிப்பீடியர் நீங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:06, 15 ஏப்ரல் 2012 (UTC)

நன்றி! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. --மதனாஹரன் (பேச்சு) 05:07, 15 ஏப்ரல் 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள். விக்கியில் தங்களின் பணி தொடரட்டும். தாங்கள் மேலும் மேலும் சிறப்படைந்து வாழ்க்கையின் உயர் நிலையை அடைய இறைவனை வேண்டுகிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:45, 15 ஏப்ரல் 2012 (UTC)
பாராட்டுக்கள்! வாழ்வு எனும் கடலிலும் முன்னனியில் திகழ என் வாழ்த்துக்கள்! --Anton (பேச்சு) 05:55, 15 ஏப்ரல் 2012 (UTC)
மதனாஹரன், தங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. இந்த சிறு வயதில் உங்கள் விக்கி ஆர்வம் கண்டு மெச்சுகிறேன். உங்கள் வாழ்க்கையை மென்மேலும் சிறப்பாக அமைத்திட இறைவனை வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 09:57, 15 ஏப்ரல் 2012 (UTC)

நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 06:09, 15 ஏப்ரல் 2012 (UTC)

முதற்பக்க அறிமுகம் மூலம் உங்களை அறிய முடிந்தது. இத்துணை சிறிய அகவையில் மிகுந்த முதிர்ச்சியுடன் பங்களித்து வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள் கல்விக்கு இடையூறின்றி உங்கள் பணி தொடர வாழ்த்துகள் !! உங்கள் சீரான அணுகுமுறை வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய உதவிடும். பல்லாண்டு வாழ்க வளமுடன் !!--மணியன் (பேச்சு) 15:39, 15 ஏப்ரல் 2012 (UTC)
உங்கள் தமிழ் பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 15:42, 15 ஏப்ரல் 2012 (UTC)

மதன் உங்கள் மிக அருமையான, அறிவான பங்களிப்புகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன! இளைஞர்களுக்கும் வளர்ந்தவர்களுக்குமே உங்கள் பங்களிப்புகள் நல்ல எடுத்துக்காட்டுகள், நல்லூக்கம் தருவன! தொடர்ந்து நற்பங்களித்து சிறப்புகள் கூட்ட நல்வாழ்த்துகள்!--செல்வா (பேச்சு) 16:14, 15 ஏப்ரல் 2012 (UTC)

மதனாஹரன், முற்பக்கத்தில் உங்கள் ஒளிப்படத்தையும் உங்களைப் பற்றியும் தமிழ் விக்கிப்பீடியாவில் வந்ததில் மகிழ்ச்சி. ஆர்வமுடன் பங்களிக்கும் நீங்கள் தொடர்ந்தும் பங்களிக்க வாழ்த்துக்கள். --உமாபதி \பேச்சு 16:47, 15 ஏப்ரல் 2012 (UTC)
வாழ்த்துகள் மதனாஹரன்!!!--Nan (பேச்சு) 19:33, 15 ஏப்ரல் 2012 (UTC) 👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி\உரையாடுக, 16, ஏப்ரல், 2012.
வாழ்த்துக்கள் மாஸ்டர் மதனாகரன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:16, 16 ஏப்ரல் 2012 (UTC)

வாழ்த்துகள் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். --மதனாஹரன் (பேச்சு) 12:43, 16 ஏப்ரல் 2012 (UTC)

மதன், மனமார்ந்த வாழ்த்துகள். இத்தனை சின்ன வயதில் இவ்வளவு சிறப்பாகப் பங்களிக்கிறீர்கள். மிகவும் ஆச்சரியமாக உள்ளது. தங்களின் சேவை மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகள். .--மலாக்கா முத்துக்கிருஷ்ணன் 22:46, 19 ஏப்ரல் 2012 (UTC)

நன்றிகள். --மதனாஹரன் (பேச்சு) 03:06, 20 ஏப்ரல் 2012 (UTC)

மதனாஹரன், விக்கியில் உங்கள் தொடர் பங்களிப்பு மகிழ்ச்சி தருகிறது.--S.kuneswaran 15:18, 9 மே 2012 (UTC)

அறிமுகமில்லாப் பயனருக்கு நன்றிகள்! தாங்கள் ஒரு பயனர் கணக்கொன்றை ஏற்படுத்தினால் உங்களை இலகுவாகத் தொடர்பு கொள்ள முடியும். --மதனாகரன் (பேச்சு) 15:15, 9 மே 2012 (UTC)[பதிலளி]
நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 15:20, 9 மே 2012 (UTC)[பதிலளி]


அன்னைத்தமிழின் அருமை மகன்;
ஆழ்ந்த அறிவு கொண்டு எம்மை ஊக்குவிப்பவன்!
இனிய தமிழில் எழுதும் ஈழத்துக் குட்டிச்சிங்கம்;
உள்ளக் களிப்போடு உற்சாகமாய் எழுதும் எம்மூர் பையன்!
எழுத்துத்திறன் நிறைந்து விளங்கும் இளைஞன்;
ஏற்றம் பெறுவான் இலக்கிய வாழ்வினிலே!
உன்னைப் போன்றதோர் இளைஞர் கூட்டம் கிளம்பியிங்கு வந்தால்...
தமிழும் விக்கியும் இன்னமும் எழுச்சி பெறும்!
உன்னால் எமக்குப் பெருமை, வேறென்ன சொல்ல?!

அன்புடன்
சிவகுரு
(புலவர்கள் மன்னரைப் புகழ்ந்து பாடும்போது ஏகவசனத்தில் பாடுவது, வரலாற்றில் தவறாக எடுத்துக் கொள்ளப்படவில்லை!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:37, 13 மே 2012 (UTC) 👍 விருப்பம்--shanmugam (பேச்சு) 05:26, 13 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றிகள்! :D --மதனாகரன் (பேச்சு) 02:41, 13 மே 2012 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா விதிமுறைகளை பார்க்கவும் !!!![தொகு]

தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இட்டிருக்கும் பொழுதே பக்கத்தினை நகர்த்தியுள்ளீரகள்!!! விக்கிப்பீடியா விதிமுறைகளை பார்க்கவும். ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:09, 10 மே 2012 (UTC)[பதிலளி]

சில வேளைகளில் விதிகளை மீறலாம். விக்கிப்பீடியா வெளியினுள் இருக்க வேண்டிய கட்டுரை வெளியே இருந்ததனாலேயே நகர்த்தினேன். இது கலைக்களஞ்சியக் கட்டுரை எனத் தவறாகக் கருதப்படலாம் என்பதாலேயே உடனடியாக நகர்த்தினேன். பார்க்க: விக்கிப்பீடியா:விதிகளை மீறு --மதனாகரன் (பேச்சு) 10:12, 10 மே 2012 (UTC)[பதிலளி]
நகர்த்தல் சிறந்ததே ஆயினும், தொகுக்கத்தல் பணி நிறைவு பெறும் முன், நகர்த்தல் நடந்ததால், நான் தமிழில் தட்டச்சு செய்து வைத்திருந்தவை வீணாயிற்று. இப்பொழுதுதான், Fahimrazick‎ பயனரால் ஒரு தொகுப்பை இழந்தேன், மறுபடியும் இவ்வாறு நடந்ததால் மறுபடியும் வீணாயிற்று. :-( -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:24, 10 மே 2012 (UTC)[பதிலளி]

எனக்கும் இவ்வாறு அடிக்கடி நடந்துள்ளது. உங்களுக்குச் செய்தியை இட்டிருக்கலாம். இனிமேற்செய்வதாயின், செய்தியை இட்டு விட்டுச் செய்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 10:25, 10 மே 2012 (UTC) 👍 விருப்பம் ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:39, 10 மே 2012 (UTC)[பதிலளி]

(பேச்சுப் பக்கம் பின்தொடருபவர்) @தினேஷ்குமார், நீங்கள் தொகுப்பை இழக்காமலிருக்க, உங்கள் பயனர்வெளியில் தொடங்கி, தொகுத்து முடித்தபின் நகர்த்துங்கள் :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 10:41, 10 மே 2012 (UTC)[பதிலளி]

@ஸ்ரீகாந்த், தகவல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கும் பொழுது, அதிகமான ஆதாரங்களுடன் சேகரிக்க முடியும். தொகுக்கும் பொழுது, தொகுக்கப்படுகிறது வார்ப்புருவையும் தவறாமல் பயன்படுத்துகிறேன். முடிந்த வரையில் அன்றைய தினம் அல்லது அடுத்த நாள் கட்டுரையை முடித்து விடுவேன். கலைச்சொற்கள் சரியாக கிடைக்காத பொழுது அல்லது எனக்கு திருப்திகரமாக இல்லையென்றால் மேலும் சில தினங்கள் எடுத்துக் கொள்வேன். வேறொருவரும் இதே பக்கத்தினை துவங்கி தங்களுடைய உழைப்பையும், நேரத்தினையும் வீண் செய்யவிடாமல் செய்வதே மணல்தொட்டியை பயன்படுத்தாமல் நேரடியாகத் தொகுப்பதற்கு முழுமுதற்காரணம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:15, 11 மே 2012 (UTC)[பதிலளி]

சிறுநவ்வி[தொகு]

பார்க்க: சிறுநவ்வி கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் எனது கருத்துகளை இட்டுள்ளேன். --சிவக்குமார் \பேச்சு 15:26, 16 மே 2012 (UTC)[பதிலளி]

தொடர்புள்ள கருத்து--மதன், உங்கள் மாற்றங்களை நான் வரவேற்கின்ற அதே நேரத்தில் நீங்கள் கட்டுரைகளின் தலைப்பை மாற்றும்போது பேச்சுப் பக்கத்தில் உரையாடி மாற்றுவது நல்ல விக்கி பண்பாகும். எழுத்துப்பிழைகள், சந்திப் பிழைகளை முன்ன்றிவிப்பின்றி நகர்த்தலாம். மாற்றுப் பெயரிடும்போது உரையாடுவது சிறந்த வழக்கம். பல பேச்சுப் பக்கங்களில் உரையாடிய பின்னரே தலைப்பு மாற்றப்பட்டிருப்பதை அவதானியுங்கள். --மணியன் (பேச்சு) 17:05, 16 மே 2012 (UTC) +1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:29, 16 மே 2012 (UTC)[பதிலளி]
+1-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:34, 16 மே 2012 (UTC)[பதிலளி]

இனி அவ்வாறு செய்கின்றேன். ஆங்கிலத் தலைப்பு (தமிழிலும்!) இருந்தால் உடனடியாகவே கலந்துரையாடாமல் தலைப்பை நகர்த்தலாம் என்று எண்ணியிருந்தேன். உதவியமைக்கு நன்றிகள்! உரையாடற்பக்கத்தைப் பார்க்கவும். --மதனாகரன் (பேச்சு) 12:50, 17 மே 2012 (UTC)[பதிலளி]

மதனாகரன், தமிழ்த் தலைப்பு பெரும்பாலானோரால் அறியப்பட்டது எனி்ல் உரையாடாமல் மாற்றலாம். புதிய சொற்களை நாம் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கும் போது கலந்துரையாடிச் செய்வது சிறப்பானது. எனது கருத்துக்களை கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இட்டுள்ளேன் --சிவக்குமார் \பேச்சு 15:27, 17 மே 2012 (UTC)[பதிலளி]

பதிலளித்துள்ளேன். பார்க்கவும். --மதனாகரன் (பேச்சு) 15:28, 17 மே 2012 (UTC)[பதிலளி]

விளக்கம்[தொகு]

பலுக்கல் என்பது பொருத்தமான சொல்லே. எனினும் உச்சரிப்பு என்பது கூடுதலாகப் பயன்படுத்தப்படும் சொல். குறிப்பாக இலங்கையில் உச்சரிப்பு என்ற சொல்லே கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன். நீங்கள் மீண்டும் மாற்றுவதில் எனக்கு ஆட்சோபனை இல்லை. --Natkeeran (பேச்சு) 03:04, 19 மே 2012 (UTC)[பதிலளி]

தூய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதற்காகவே பலுக்கல் என்பதைப் பயன்படுத்தினேன். தமிழ் விக்சனரியிலும் அச்சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. மீண்டும் மாற்றியுள்ளேன். நன்றி! --மதனாகரன் (பேச்சு) 03:08, 19 மே 2012 (UTC)[பதிலளி]
நன்றி. இயன்றவரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவே நானும் விரும்புகிறேன். எனினும் பொருள் துல்லியம் தேவைப்படும் இடங்களிலும், மிக நீண்ட காலமாக உள்வாங்கப்பட்டு அறியப்பட்ட மாற்றுக்கள் இல்லாத இடங்களிலும், அறிவியல் பெயர்கள் போன்ற இடங்களிலும் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்பது என் கருத்து. எனினும் இச்சொல் குறித்து அதிகம் கருத்துவேபாடு இல்லை. --Natkeeran (பேச்சு) 03:13, 19 மே 2012 (UTC)[பதிலளி]

Sinhala Loanwords in Tamil[தொகு]

Hi. Could you please review http://en.wikipedia.org/wiki/Tamil_loanwords_in_Sinhala and add the missing Tamil equivalents to the list if possible? Thank you very much.−முன்நிற்கும் கருத்து 1.124.213.74 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Added some of the words. Post your request in Tamil embassy. --மதனாகரன் (பேச்சு) 16:02, 19 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி[தொகு]

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ



தங்கள் உதவியால் முதன் முதலாக நிர்வாக அணுக்கம் கிடைத்ததும் என் பக்கத்தை நானே நீக்கியுளேன் அதற்கும் நன்றி............. :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:02, 26 மே 2012 (UTC) +1 நன்றி மதன்--சண்முகம் (பேச்சு) 11:25, 26 மே 2012 (UTC) 👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 11:26, 26 மே 2012 (UTC)[பதிலளி]

:) --மதனாகரன் (பேச்சு) 11:09, 26 மே 2012 (UTC)[பதிலளி]

+1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:20, 30 மே 2012 (UTC)[பதிலளி]

:) --மதனாகரன் (பேச்சு) 14:22, 30 மே 2012 (UTC)[பதிலளி]

-1 (எண்)[தொகு]

நீங்கள் ஆலமரத்தடியில் குறிப்பிட்டுள்ளவற்றில் முதல் தலைப்பே சரி. இதை கண்டறிய உங்கள் தட்டச்சு பலகையில் அந்த தலைப்பை தட்டச்சிட்டு அதை வெட்டி ctrl + F கொடுத்து அதில் ஒட்டி தேடிப் பாருங்கள். சரியான தலைப்பு அதில் வரும். காட்சிப்பிழை கொண்ட தலைப்பு வராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:14, 31 மே 2012 (UTC)[பதிலளி]

சரியே! சரியான தலைப்புக்கு நகர்த்தி விடுகிறீர்களா? --மதனாகரன் (பேச்சு) 14:20, 31 மே 2012 (UTC)[பதிலளி]

ஏற்கனவே அப்பெயரில் கட்டுரை உள்ளதால் அதை நீக்கிய பின்னரே வழிமாற்ற முடியும். அது நிர்வாகிகளால் மட்டுமே முடியும். அவர்களில் யாரையாவது கேட்டுப் பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:12, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

சரியான பக்கத்தை முன்னிலைப்படுத்திருக்கிறேன் என நினைக்கிறேன். சரி பாருங்கள். வழிமாற்று இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 04:21, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

தற்போது சரியாக உள்ளது. ஆனால் அப்பெயரில் கட்டுரை இருக்கும் போது அதை அழிக்காமல் மற்றொரு பக்கத்தை அப்பக்கத்திற்கு நகற்ற முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:01, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

வழிமாற்று மட்டுமே இருந்தது. இரண்டையும் மதனாகரனே உருவாக்கியிருந்தார். ஒன்றை அழித்துவிட்டே மாற்றலாம்.--Kanags \உரையாடுக 06:08, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

வழிமாற்றை உருவாக்கியவரும் நிருவாகிகளும் எவ்விதச் சிக்கலுமின்றி மாற்றலாம். நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 11:59, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

விக்கிப்புயல் பதக்கம்
விக்கியில் பங்களிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக கட்டுரைகள் உருவாக்குதல், உரையாடல்களில் பங்குகொள்ளுதல் உள்ளிட்ட பல்தரப்பட்ட இடங்களில் விக்கிசமூகத்தில் உங்களுடைய செம்மையான பணியை பாராட்டி இப்பதக்கத்தினை அளித்து வாழ்த்துகிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:40, 1 சூன் 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 12:00, 3 சூன் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரைத் தலைப்புகள் மாற்றம்[தொகு]

வணக்கம் மதனாகரன். மிகச்சிறப்பான முறையில் விக்கியில் பங்காற்றி வருகிறீர்கள் வாழ்த்துகள். நல்ல தமிழ் பெயராகத் தேடித்தேடி தலைப்புகளை மாற்றம் செய்கிறீர்கள். அதற்கும் என் பராட்டுகள். ஒரு சிறு வேண்டுகோள். தங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில் .ac, .ae, போன்ற கட்டுரைகள் ஆங்கிலத்தலைப்புகளில் உள்ளன. மேலும் விக்கியில் கட்டுரைகள் புள்ளி மற்றும் (ப்ரண்ட்ஸ்) மெய்யெழுத்துகளில் தொடங்குவதில்லை. எனவே, அவற்றை ஆள்களப்பெயர் .ஏஇ, ஆள்களப்பெயர் .ஏசி இது போன்று நாடுகளுடன் இணைத்து மாற்றலாம் அல்லவா? நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:06, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

மாற்ற வேண்டிய தேவை இல்லை. ஏனெனில், .ac என்பதே ஆள்களப் பெயர். அதனைத் தவிர்த்து வேறு பெயரை அதற்குச் சூட்டமுடியாது. .ஏஇ என்று தட்டச்சிட்டால் இணையத்தள முகவரி கிடைக்காது. ஆங்கிலக் கட்டுரையை எடுத்துப் பார்த்தீர்களானால் அனைத்து மொழி விக்கிப்பீடியாகளிலும் ஆங்கிலப் பெயரே உள்ளது. ஆங்கிலக் கட்டுரையிலும் புள்ளியிலேயே கட்டுரை தொடங்கியுள்ளது. மேலும் ப்ரண்ட்ஸ் என்பது ஒரு திரைப்படத்தின் பெயர். அதனை உள்ளவாறே பயன்படுத்துவது தான் எனது விருப்பம் (அதனாற்றான் கிரந்தமும் நீக்கவில்லை.). --மதனாகரன் (பேச்சு) 13:25, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]