பயனர் பேச்சு:பொன்முடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், பொன்முடி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 15:12, 15 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்[தொகு]

வணக்கம், பொன்முடி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntonTalk 17:40, 15 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

வணக்கம், தமிழ் இலக்கணம் தொடர்பான கட்டுரையினை ஆரம்பித்ததற்கு நன்றி. ஆயினும் அதன் உள்ளடக்கங்கள் பல இணையத்தளங்களில் ஏற்கெனவே உள்ளன. இவ்வாறு உள்ளவற்றைப் பிரதி செய்து இங்கு பயன்படுத்துவது பதிப்புரிமை மீறலாகக் கருதப்படும். மேலும், கட்டுரைகள் வலைத்தளங்களில் உள்ளபடி இங்கு எழுதாது, கலைக்களஞ்சியம் என்பதற்கேற்ப மிகைப்படுத்தாமலும் சான்றுகளுடனும் எழுதப்பட வேண்டும். இன்னும் விளக்கம் தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். குறிப்பு: இங்கு ஐயா, sir போன்ற சொற்களைத் தவிர்த்து அவரவர் பெயர்களினாலேயே அழைக்கிறோம். --AntonTalk 05:25, 16 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
இணையத்தில் நீங்களே எழுதியிருந்தாலும் முறையின்றி இங்கு பயன்படுத்த முடியாது. --AntonTalk 05:29, 16 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

புணர்ச்சி விதிகள்[தொகு]

வணக்கம், புணர்ச்சி (இலக்கணம்) என்ற கட்டுரை விக்கியில் உள்ளது. இக்கட்டுரையில் அதிக தகவல்கள் இல்லை. இக்கட்டுரையை மேம்படுத்தித் தருமாறு வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 08:13, 16 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

உங்கள் கட்டுரையில் சில சொற்கள் உ+ம்: "சேர்ந்துவருவதாகும்", "தனிச்சொற்களாயிருக்கும்போது" "இரண்டுக்குமேற்பட்டசொற்களோ" "ஒன்றாகத்தான்கொள்ளவேண்டுமேயன்றி" "புணர்ந்துள்ளசொற்களை", "மொழிகளாகவேகொள்ளப்படுமேயன்றி" போன்ற சொற்களை ஒரே சொல்லாக எழுதியுள்ளீர்கள். இவ்வாறு எழுதுவது சரியா?--Kanags \உரையாடுக 08:47, 16 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

பயனர் பெயர்[தொகு]

காரணமின்றி பயனர் ஒருவர் பல கணக்குகளை வைத்திருக்க பயனர் பெயர்க் கொள்கை அனுமதிப்பது இல்லை. பயனர்:பொன்முடி, பயனர்:பொன்னன், பயனர்:பொன்முடிவடிவேல் ஆகிய கணக்குகள் ஒருவருடையதுபோல் உள்ளன. அவ்வாறாயின் ஒன்றையே பயன்படுத்துங்கள். பல கணக்குகளிலும் அனுமதியின்றி, விசமத் தொகுப்புக்களில் ஈடுபடல் போன்ற செயற்பாடுகள் தடையை ஏற்படுத்தக்கூடும். நன்றி. --AntonTalk 05:22, 18 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:பொன்முடி&oldid=1767812" இலிருந்து மீள்விக்கப்பட்டது