பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், பா.ஜம்புலிங்கம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--✍ mohamed ijazz ☪® (பேச்சு) 08:10, 25 மே 2014 (UTC)

விக்கிப்பீடியா கொள்கைகள்[தொகு]

வணக்கம் ஜம்புலிங்கம்,

நீங்கள் விக்கிப்பீடியாவில் உங்களைப்பற்றிய கட்டுரையை உருவாக்கியுள்ளீர்கள். இது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு எதிரானது. உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் கொடுக்கலாம். உங்கள் கட்டுரைய நீக்குவதற்காக உரையாடல் இங்கு நடக்கிறது. உங்கள் கருத்துகளை நீங்கள் பதியலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:11, 26 மே 2014 (UTC)

தங்கள் விளக்கத்துக்கு நன்றி. தங்களைப் பற்றிய முழுமையான தகவல் தங்கள் பயனர் பக்கத்தில் தொடர்ந்து இருக்கட்டும். விக்கிப்பீடியாவில் தன்வரலாற்றுக் கட்டுரைகளை வரவேற்பதில்லை என்பதால், கட்டுரைப் பக்கத்தில் தங்கள் ஆய்வை மட்டும் முன்னிலைப்படுத்திச் சுருக்கி எழுதியுள்ளேன். பார்க்க: பா. ஜம்புலிங்கம்--இரவி (பேச்சு) 04:30, 27 மே 2014 (UTC)

வணக்கம். புதிய முயற்சியில் ஊக்குவித்து கருத்துக்கள் கூறிய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆய்வு தொடர்பான செய்தியை மேம்படுத்த புதுதில்லியில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்திற்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் விவரத்தை அடிக்குறிப்பாக (மேற்படி அருங்காட்சியக பக்கத்திலிருந்து) இணைத்துள்ளேன். -பா.ஜம்புலிங்கம்

வணக்கம், பெளத்தம் கட்டுரையில் தமிழரும் பெளத்தமும் பகுதியில் தங்களின் வலைப்பூவிற்கான இணைப்பைக் கொடுத்துள்ளீர்கள். தமிழ் விக்கியின் விதிகளின் படி தனது வலைப்பூவிற்கான இணைப்பை அதே பயனர் வழங்கக்கூடாது. எனவே அதை நீக்கியிருக்கேறேன். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 06:25, 3 சூன் 2014 (UTC)

இனி கவனமாக இருப்பேன். தகவலுக்கு நன்றி. ஜம்புலிங்கம்

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 07:39, 3 சூன் 2014 (UTC)

கவனிக்கவும்[தொகு]

வணக்கம் நண்பரே, பௌத்தம் குறித்து தாங்கள் விக்கியில் எழுத முனைந்தமைக்கு நன்றி .தாங்கள் முன்வந்தது போல தங்களின் நண்பர்களுக்கு ஆர்வம் இருப்பின் அவர்களையும் விக்கிக்கு அழைத்து வர வேண்டுகிறேன்.தாங்கள் கையெழுத்தினை பேச்சுப் பக்கத்தில் இடுவதற்கு --~~ ~ ~

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்

என்ற குறியீட்டினை இனைதால் விக்கிப்பீடியா தங்களுடைய கையெழுத்தினை இணைத்துவிடும் காண்க விக்கிப்பீடியா:கையெழுத்து. உடன் தங்களுக்கு நேரமிருக்கும் பொழுது விக்கிப்பீடியா:உதவி பக்கத்திலுள்ள கட்டுரைகளை ஒரு முறை படித்துப்பாருங்கள், விக்கியில் மிக எளிமையாக பங்களிக்க இவை உதவும்--✍ mohamed ijazz ☪ ® (பேச்சு) 07:43, 3 சூன் 2014 (UTC)

ஐராவதேஸ்வரர் கோயில் என்ற தலைப்பின்கீழ் அந்நூலைப் பற்றிய குறிப்பினைத் தந்து எனது வலைப்பூவில் வந்த விமர்சனத்தை இணைப்பாகத் தந்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D. வலைப்பூ எனதாயினும் நூல் மற்றொருவருடையது. தேவையாயின் ஏற்கவேண்டுகிறேன். இல்லாவிடில் அன்புகூர்ந்து நீக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் 12:15, 10 சூன் 2014 (UTC)

சொந்த ஆய்வு[தொகு]

வணக்கம், உங்கள் சொந்த ஆய்வையோ அல்லது அந்த ஆய்வுக்கான இணைப்பையோ கட்டுரைகளில் தருவதைத் தவிர்க்கவும்.--Kanags \உரையாடுக 09:10, 6 சூன் 2014 (UTC)

வணக்கம். சொந்த நூலாக இருப்பினும் அப்பொருண்மையில் தமிழில் வந்த நூல் என்பதால் தரப்பட்டது. பதிப்பகத்தின் மேற்கோள் அவ்விணைப்பில் தரப்பட்டிருந்தது. தாங்களோ, பிறரோ படிக்கம் நூலை மேற்கோளாகத் தர வாய்ப்பிருன் தர வேண்டுகிறேன். படியாக்கம் தொடர்பாக சுமார் 8 ஆண்டுகள் பத்திரிக்கைகளிலும் பிற இதழ்களிலும் வந்த செய்திகள் தொகுக்கப்பட்டு, தமிழில் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கில் எழுதப்பட்டது அந்நூல். அப்பொருண்மையில் உள்ள அத்தலைப்பில் இதுவரை எந்த தமிழ் நூலும் மேற்கோளாகத் தரப்படவில்லை என்பதையும், இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் 10:14, 6 சூன் 2014 (UTC)

வணக்கம். ஐராவதேஸ்வரர் கோயில் என்ற தலைப்பின்கீழ் அந்நூலைப் பற்றிய குறிப்பினைத் தந்து எனது வலைப்பூவில் வந்த விமர்சனத்தை இணைப்பாகத் தந்துள்ளேன். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D. வலைப்பூ எனதாயினும் நூல் மற்றொருவருடையது. தேவையாயின் ஏற்கவேண்டுகிறேன். இல்லாவிடில் அன்புகூர்ந்து நீக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் 12:21, 10 சூன் 2014 (UTC)

கும்பகோணத்திலுள்ள கோயில்கள்[தொகு]

கும்பகோணத்திலுள்ள கோயில்கள் தொடர்பில் 10 குறும்பட்டியல்கள் உருவாக்கியுள்ளீர்கள். இவை விரிவாக்கம் செய்யப்படாதவிடத்து நீக்கப்படும். அல்லது கும்பகோணம் கட்டுரையில் சேர்க்கப்பட வேண்டும். --AntonTalk 03:40, 9 சூலை 2014 (UTC)

கும்பகோணம் கோவில் நகரம் என்ற நிலையில் அந்நகருடன் தொடர்புடைய முக்கியமான கோயில்கள் கட்டுரைக்குத் தேவையாக இருக்கும் என எண்ணி சேர்த்தேன். தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் 17:51, 9 சூலை 2014 (UTC)

நீங்கள் ஒவ்வொரு கும்பகோணத்திலுள்ள கோயில் கட்டுரைகளிலும் இதனையும் காண்க என மற்ற கட்டுரைகளைப் பட்டியலிடுவதை விட ஓர் வார்ப்புருவை உருவாக்கி அனைத்துக் கட்டுரையிலும் சேர்க்கலாம். ஆனால் உள்ளிணைப்புகளுக்கு தனிப் பக்கங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, வார்ப்புரு:தஞ்சாவூர் மாவட்டம் பார்க்கவும்.--மணியன் (பேச்சு) 05:13, 21 சூலை 2014 (UTC)

கும்பகோணம் கோயில்கள் தொடர்பாக தந்த செய்திகளை தாங்கள் கூறியபடி வார்ப்புரு தயாரிக்க முயன்றேன். பதிவு செய்தபின் பத்தி முழுமையடையாமல் உள்ளது. --பா.ஜம்புலிங்கம் 17:09, 21 சூலை 2014 (UTC)

வார்ப்புருவில் name= என்பது வார்ப்புருவின் பெயராக இருத்தல் அவசியம். Title= வேறாக இருந்தால் பரவாயில்லை. நீங்கள் இரண்டிலும் கும்பகோணம் கோயில்கள் என்று தந்து வார்ப்புருக்கு கும்பகோணம் எனத் தந்திருந்தீர்கள். --மணியன் (பேச்சு) 04:33, 22 சூலை 2014 (UTC)

கும்பகோணம் என்று தற்போது தெரியும் இடத்தில் கும்பகோணம் கோயில்கள் என்றிருக்க வேண்டும். தொகுப்பில் சென்று பார்க்கும்போது மாற்றத்தக்க அளவில் முன்னர் பதிந்த முழுப்பதிவுகளையும் காணமுடியவில்லை. அடைப்புக்குறிக்குள் கும்பகோணம் என்று மட்டுமே தொகுப்பு விவரத்தில் காணமுடிகிறது. அதனை எவ்வாறு மாற்றுவது எனத் தெரியவில்லை. அன்புகூர்ந்து மாற்றி உதவுக.--பா.ஜம்புலிங்கம் 13:48, 25 சூலை 2014 (UTC)

தலைப்பில் கும்பகோணம் கோயில்கள் என்று வருமாறு மாற்றியுள்ளேன். சிவப்பு இணைப்புகள் இருக்கும் உள்ளிணைப்புகளில் விக்கிப்பீடியாவில் என்ன தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை இட வேண்டும். மற்றபடி முன்னர் பதிந்த முழுப்பதிவுகளையும் காணமுடியவில்லை என எதனைக் கூறுகிறீர்கள் என்று அறிய முடியவில்லை. இந்த வார்ப்புருவின் பெயர் கும்கோணம் கோயில்கள். எனவே குறிப்பிட்டக் கட்டுரைகளின் அடியில் {{கும்பகோணம் கோயில்கள்}} என்று இட்டால் இந்த உள்ளடக்கம் அக்கட்டுரையில் இடம் பெறும். --மணியன் (பேச்சு) 03:29, 26 சூலை 2014 (UTC)

தாங்கள் வெளியிட்டுள்ளதைப் போலத்தான் நான் எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடியே தற்போது தாங்கள் சரிசெய்துள்ளீர்கள். நன்றி. தொடர்ந்து கட்டுரைகளை மேம்படுத்துவேன். --பா.ஜம்புலிங்கம் 05:05, 26 சூலை 2014 (UTC) கும்பகோணத்திலுள்ள வைணவக் கோயில்களில் ஒன்று சார்ங்கபாணி கோயில். பலர் இக்கோயிலின் பெயரை சாரங்கபாணி கோயில் என்று கூறிவருகின்றனர். சார்ங்கபாணி என்பது சரி என்ற நிலையில் சார்ங்கபாணி கோயிலிலிருந்து சாரங்கபாணி கோயிலுக்கு வழிமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் 08:13, 28 சூலை 2014 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]

வணக்கம், பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1!

250 Raketna Brigada.png

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:59, 2 ஆகத்து 2014 (UTC)

தங்களின் வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து எழுத முயற்சிப்பேன். --பா.ஜம்புலிங்கம் 11:56, 2 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 12:19, 2 ஆகத்து 2014 (UTC)

தங்களின் அன்பான வருகைக்கு நன்றி. முடிந்தவரை அவ்வப்போது எழுதிவருகிறேன். தொழில்நுட்ப நிலையில் சிலவற்றைப் புரிந்துகொள்ள தாமதமாகிறது. பேச்சு)--பா.ஜம்புலிங்கம் 10:50, 4 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்-- mohamed ijazz(பேச்சு) 08:13, 5 ஆகத்து 2014 (UTC)

பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
அருமையான கட்டுரைகள் எழுதி அசத்துகிற உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 08:15, 5 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் 14:59, 5 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம் விக்கி நுட்பங்களைப் புரிந்துகொண்டு தொடர்ந்தும் சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:26, 10 ஆகத்து 2014 (UTC)

இயலும்வரையில் தொழில்நுட்பத்தைப்புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் 06:29, 10 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம், அசத்துகிறீர்கள்!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:47, 10 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். தங்களின் வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:20, 11 ஆகத்து 2014 (UTC)

ஒரு வேண்டுகோள்[தொகு]

வணக்கம் திரு ஜம்புலிங்கம் முடியுமானால் தாதுகோபம் எனும் இந்தக் கட்டுரையை விரிவாக்கி தரத்தை மேம்படுத்த உதவுங்கள்.-- mohamed ijazz(பேச்சு) 08:45, 5 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். ஸ்தூபி தொடர்பான கட்டுமானம் தமிழ்நாட்டில் இல்லாத நிலையிலும், களப்பணியின்போது நான் எவ்விடத்திலும் அதனைப் பார்க்காத நிலையிலும், அது தொடர்பாக படிக்காத நிலையிலும் இத்னை விரிவாக்குவது சிரமம் என நினைக்கிறேன். இருப்பினும் இத்தலைப்பு பற்றி மனதில் இருத்திவைத்துக்கொண்டேன். இதுதொடர்பாக படிக்க ஒரு வாய்ப்பு தங்களால் அமைந்துள்ளமையறிந்து மகிழ்கின்றேன். அவ்வப்போது செய்திகளைப் படித்து, பின் மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் 15:07, 5 ஆகத்து 2014 (UTC)

--பா.ஜம்புலிங்கம் 06:37, 10 ஆகத்து 2014 (UTC)

வேண்டுகோள்[தொகு]

வணக்கம்.

 • நீங்கள் சமீபத்தில் தொடங்கியுள்ள மயிலாடுதுறை சப்தஸ்தானங்கள் கட்டுரைகளில் அவை முழுமையான வடிவிலமைவதற்காக, மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் கட்டுரையில் உள்ளதுபோல் தகவற்பெட்டியும், தொடக்கத்தில் அமையவேண்டிய தலைப்பகுதியையும் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சித்தர்காடு கோயில் கட்டுரையில் நான் இணைத்திருக்கிறேன். இக் கோயில்கள் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாததால் என்னால் அவற்றை இணைக்க முடியவில்லை. அதனால்தான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
 • கட்டுரைகளில், ’மேற்கோள்கள்’ என்ற துணைத் தலைப்பின் கீழ் {{reflist}} என்பதை இணைக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
 • பேச்சுப் பக்கங்களில் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தபின், உங்கள் கையொப்பம் இடுவதற்கு, தொகுத்துக் கொண்டிருக்கும் பக்கத்தின் மேற்புறமுள்ள நீலப்பட்டையில் உள்ள பேனா வடிவை அழுத்திவிட்டு, பக்கத்தை சேமிக்க உங்கள் கையொப்பம் பதிவாகும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:17, 9 ஆகத்து 2014 (UTC)

வணக்கம்.

 • தாங்கள் சொன்னதுபோல மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் பதிவில் உரிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். அது சரி எனத் தாங்கள் கூறினால் மற்ற பக்கங்களிலும் அவ்வப்போது இனி செய்வேன்.
எனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக பதிவுகளைச் சேர்த்தமைக்கு நன்றி. ஐயாறப்பர் கோயில் கட்டுரையில் நீங்கள் இணைத்துள்ள பதிவுகள் சரியானவையே. அவற்றில் சிறு திருத்தங்கள் செய்திருக்கிறேன். பிற கட்டுரைகளிலும் இதேபோல இணைத்து விடுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:05, 10 ஆகத்து 2014 (UTC)
 • கட்டுரைகளில், ’மேற்கோள்கள்’ என்ற துணைத் தலைப்பின் கீழ்

என்று இணைத்துள்ளேன். அவ்வாறு இணைப்பது சரியா அல்லது தாங்கள் கூறியுள்ளது போல் {{reflist}} என்று இணைக்கவேண்டுமா? இவ்வாறு இணைப்பதற்கான காரணம் என்ன? எனக்குப் புரியவில்லை. அன்புகூர்ந்து தெளிவிக்கவேண்டுகிறேன்.

 • தொகுத்துக் கொண்டிருக்கும் பக்கத்தின் மேற்புறமுள்ள நீலப்பட்டையில் உள்ள பேனா வடிவை அழுத்திவிட்டு, பக்கத்தை சேமிக்க உங்கள் கையொப்பம் பதிவாகும் என்று கூறியுள்ளீர்கள். நீலப்பட்டையில் A A அடுத்து உள்ள குறியைத்தானே கூறுகிறீர்கள்? அவ்வாறுதான் தற்போது செய்துவருகிறேன். தொழில்நுட்பரீதியாக சிலவற்றை புரிந்துகொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. அன்புகூர்ந்து பொறுத்துக்கொள்க.--பா.ஜம்புலிங்கம் 06:23, 10 ஆகத்து 2014 (UTC)
நீங்கள் செய்திருப்பது தான் சரி. உரையில் reflist என்பது தெரிய வேண்டும் என்பதால் அவ்வாறு nowiki இட்டு எழுதினேன். reflist என்று எழுதுவதால், கட்டுரையின் இறுதியில் சான்றுகள் பட்டியலிடப்படும். சிரமமாக இருப்பின் மற்றவர்களின் தொகுப்புகளை கவனியுங்கள். ஒரு முறை திருத்திக் காண்பிக்கும்படி வேண்டுங்கள். பின்னர், அந்த திருத்தத்தினைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். சிரமப்பட வேண்டாம். :) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:50, 10 ஆகத்து 2014 (UTC)

தமிழ்க்குரிசில், இவரது கையொப்பம் நீலஇணைப்பாகத் தோன்றாமல் இருப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இவருக்கு இவ்விஷயத்தில் உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:52, 10 ஆகத்து 2014 (UTC)

அம்மையே, இவர் தன் விருப்பத்தேர்வுகளை அவ்வாறு அமைத்திருக்கிறார். கையொப்பம் என்ற பகுதியில், வெறும் கையொப்பம் மட்டும் (இணைப்பு இல்லாமல்) என்ற வசதி உள்ளது. அதை தேர்வு செய்தால் கையொப்பத்திற்கு இணைப்பு தோன்றாது. அதில் உள்ள டிக்கை எடுத்துவிட வேண்டும். கையொப்பத்துடன் இணைப்பும் தெரியும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:30, 10 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். தாங்கள் இருவர் கூறிய கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிறேன். தற்போது டிக் தெரிகிறது. சரியாகிவிடும் என நினைக்கிறேன். கருத்துரைகளுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:45, 11 ஆகத்து 2014 (UTC)

அண்மையில் நீங்கள் எழுதிய ”பாபநாசம் (தஞ்சாவூர்)” என்ற கட்டுரையை நீக்கியுள்ளேன். போதிய தகவல்கள் இல்லாமையால் அப்படியே நீக்கிவிட்டேன். பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) என்ற கட்டுரையில் தகவல்களைச் சேருங்கள். தலைப்பிடும் போது, சொற்களுக்கு இடையில் இடைவெளி விடுங்கள். ”பாபநாசம் (தஞ்சாவூர்)” என்றவாறு இருக்க வேண்டும். நன்றி-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:15, 17 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். தாங்கள் கூறியபடி பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) கட்டுரையில் இணைப்பேன். அவ்வாறாக ஒரு கட்டுரை இல்லை என நினைத்துத் துவங்கிவிட்டேன். பொறுத்துக்கொள்க. இனி, தலைப்பிடும்போது சொற்களுக்கிடையில் இடைவெளி விடுவேன். வழிகாட்டலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:19, 17 ஆகத்து 2014 (UTC)

ஆவூர் (கும்பகோணம்)[தொகு]

வணக்கம்! ஆவூர் (கும்பகோணம்) என்பதும் ஆவூர் என்பதும் ஒன்றா என சரி பாருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 18 ஆகத்து 2014 (UTC)

ஆவூர் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள செய்தியில் "இந்த ஊரில் வாழ்ந்த நான்கு புலவர்களின் பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஆவூர் கிழார், ஆவூர் கிழார் மகனார் கண்ணனார், ஆவூர்க்காவிதிகள் சாதேவனார், ஆவூர் மூலங்கிழார். ஆகியோர் அந்தப் புலவர்கள்." குறிப்பு உள்ளது.

அதை வைத்து நோக்கும்போது அது ஆவூர் (கும்பகோணம்) என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆதலால்தான் ஆவூர்(கும்பகோணம்) என்ற தலைப்பில் உருவாக்கினேன். அதே சமயம் ஆவூர் கட்டுரையின் இணைப்பாக தரப்பட்டுள்ள முதல் கட்டுரை பற்றியதான இணைப்பு ஆவூர்(கும்பகோணம்) பசுபதீஸ்வரர் கோயில் பற்றியதேயாகும். இன்னும் சில நூல்களைப் பார்த்துவிட்டு உறுதி செய்கிறேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:59, 18 ஆகத்து 2014 (UTC)

இரண்டாவது இணைப்பாக தரப்பட்டுள்ள இணைப்பு http://wikimapia.org/10788179/ta/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D. என்று உள்ளது.இந்த இணைப்பின்படி பார்த்தால் இது குறிப்பிடுவது நாம் தற்போது விவாதிக்கும் இரு ஆவூரும் அல்ல. ஏனென்றால் அதில் "அருகிலுள்ள நகரங்கள்: திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திண்டுக்கல் ஆயத்தொலைவுகள்: 10°39'31"N 78°40'30" என்று சுட்டப்பட்டுள்ளன. ஆவூர் என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் புலவர்கள் பற்றிய குறிப்பு உறுதி செய்யப்படா நிலையிலும் ஆவூர் (கும்பகோணம்) என ஆரம்பித்தேன். தவிரவும் இந்தக் கோயிலுக்கு நேரில் சென்று பார்த்துள்ளேன். கும்பகோணம்-தாராசுரம்-பட்டீஸ்வரம்-ஆவூர்-தஞ்சாவூர் என்ற நிலையில் பேருந்து மார்க்கம் அமையும். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:05, 18 ஆகத்து 2014 (UTC)

ஒரு வாசகனாக உரை திருத்தம் செய்துள்ளேன். உங்களின் கருத்தினைப் பகிருங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:15, 18 ஆகத்து 2014 (UTC)

களப்பணியின்போது பல கோயில்களுக்குச் சென்றதால் சில செய்திகளைக் கூடுதலாகப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவித்து உதவுக. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:30, 18 ஆகத்து 2014 (UTC)

கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு முன்னுரை தருவது விக்கி வழக்கம். இதைத்தான் ஆவூர் (கும்பகோணம்) எனும் கட்டுரையில் செய்துள்ளேன். இதனை அனைத்துக் கட்டுரைகளிலும் நடைமுறைப்படுத்தினால், சிறப்பு! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:39, 18 ஆகத்து 2014 (UTC)

விக்கி நண்பர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். மறந்துவிட்டேன். இனி தொடர்ந்து செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:04, 19 ஆகத்து 2014 (UTC)

வணக்கம்; சப்தஸ்தானம் என்றால் என்பதனை என்னுடைய அறிதலுக்காக விளக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 19 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். சப்தஸ்தானம் என்றால் ஏழு ஊர்கள். சப்தஸ்தான விழாவை ஏழூர்த் திருவிழா அல்லது ஏழூர் விழா என்பர். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:50, 19 ஆகத்து 2014 (UTC)
Nanri nanri.png

தங்களிடம் கோரிக்கை வைக்கலாம் என நினைத்திருந்தேன்; சப்தஸ்தானம் எனும் தனிக் கட்டுரையை நீங்களே துவக்கிவிட்டீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 20 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். நீங்கள் சப்தஸ்தானம் பற்றி கேட்டவுடனே எனக்கு அதைப் பற்றி எழுத எண்ணம் வந்தது. தாமதிக்காமல் எழுதிவிட்டேன். தொடர்ந்து கூடுதல் விவரங்களைச் சேர்ப்பேன். தங்களின் நன்றி அறிந்து மகிழ்ச்சி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:01, 20 ஆகத்து 2014 (UTC)

பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயில்...[தொகு]

இந்தக் கட்டுரை, கோயிலைப் பற்றி முதன்மையாக சொல்லக்கூடியதாக இருப்பதால், முன்னுரையில் மாற்றம் செய்துள்ளேன். படிப்பவர்களுக்கு சீராகவும், இனிமையாகவும் இருக்கும்; கவனியுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:20, 20 ஆகத்து 2014 (UTC)

பதக்கம்[தொகு]

Barnstar of Diligence.png விடாமுயற்சியாளர் பதக்கம்
தங்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்து இப்பதக்கம்! அன்புடன் மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:43, 22 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:44, 22 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம் தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:32, 23 ஆகத்து 2014 (UTC)

தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து பங்களிப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:41, 23 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 05:52, 23 ஆகத்து 2014 (UTC)

அன்பான வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:00, 23 ஆகத்து 2014 (UTC)

சிறப்புப் பதக்கம்[தொகு]

SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
உங்கள் தொடர் பங்களிப்புகளைக் காணும் போது மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அன்புடன், அகம் மகிழ்ந்து இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன். தொடர்க உங்கள் சீரிய பங்களிப்பு! :)--இரா.பாலா (பேச்சு) 15:23, 27 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வணக்கம். தங்களின் வாழ்த்து என்னை மென்மேலும் எழுதவைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தொடர்ந்து எழுதுவேன். அன்புக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:27, 27 ஆகத்து 2014 (UTC)

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 27 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 01:06, 28 ஆகத்து 2014 (UTC)
👍 விருப்பம் தொடர்ந்து சிறப்பாகப்பங்களிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:22, 28 ஆகத்து 2014 (UTC)

தமிழக பௌத்தக் கோயில்கள்[தொகு]

ஐயாவுக்கு வணக்கம். தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள் கட்டுரை இருப்பது போல் தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் கட்டுரையைத் தொடங்கி அதில் சில முக்கியக் கோயில்களை பற்றி சில குறிப்புகளை மேற்கோள்களோடு சேர்த்து எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:17, 27 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். எனக்கு இவ்வாறு எழுதவேண்டும் என்ற விருப்பம் உள்ளது. சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் நான் முனைவர் (Ph.D.,) பட்டம் பெற்றுள்ளேன். விக்கிபீடியாவில் (அனுபவமில்லாத நிலையில்) ஒரு முறை இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அக்கட்டுரை திரும்ப வந்துவிட்டது. அப்பொழுது விக்கிபீடியாவில் எனக்கு அதிக பரிட்சயம் இல்லை. தாங்கள் கூறுவது தொடர்பாக எழுதத் தொடங்கும் நிலையில் எனக்கு ஒரு சிக்கல் இருப்பதாகத் தோன்றுகிறது. சோழ நாட்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று 60க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளை நேரில் நான் பார்த்துள்ளேன். புதிய சமணர் சிலைகளையும் கண்டுபிடித்துள்ளேன். பல முறை என் நண்பர்களும் ஆய்வாளர்களும், அறிஞர்களும் துணையாக இருந்துள்ளனர்/இருந்து வருகின்றனர். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் புத்தர் சிலைகளைப் பார்த்தவன் என்று என்னைப் பல அறிஞர்கள் பாராட்டுகின்றனர். இருப்பினும் விக்கிபீடியாவில் ஒருவர் தன் கட்டுரையை/நூலை/வலைப்பூவை சான்றாதாரமாகக் காட்டக்கூடாது என்று விதி இருப்பதாக அறிந்தேன். அதனால் என்னால் மேற்கோள் காட்ட இயலாத நிலையில் எழுதத் தயங்குகின்றேன். பல சிலைகளுக்கு அடிக்குறிப்பு (முதன் முதல்) கண்டுபிடித்தவர் என்ற நிலையில் என் பெயரோ, ஆய்வோ அமைகின்றது. தங்களின் கடிதம் என்னை தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் என்ற தலைப்பில் எழுத ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. விரைவில் தங்களின் ஆவலை (என் ஆவலும்கூட) பூர்த்தி செய்வேன். இது தொடர்பாக தங்களின் கருத்தையும் விக்கிபீடியாவில் உள்ள பிற நண்பர்களின் கருத்தையும் அறிய ஆவலோடு உள்ளேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:30, 28 ஆகத்து 2014 (UTC)

ஆம். நான் உங்கள் ஆய்வுகளைப் பற்றி அறிவேன். நீங்கள் முதலில் கண்டுபிடித்ததால் உங்கள் ஆய்வு முதலாம் நிலை மூலம் என்பதின் கீழ் வரும். ஆனால் உங்களது கட்டுரை பற்றி வரலாறு.காம் தளத்தில் சக மீள்பார்வை (Peer Review) பதிவு ஒன்றை பார்த்ததாக நினைவு. அதை இரண்டாம் நிலை மூலம் எனக்கொள்வோம். அதனால் நீங்கள் எழுதும் கட்டுரையில் இரண்டாம் நிலை மூலம் என்பதைச் சான்றாக வைத்து எழுதலாம். அதாவது உங்கள் முதலாம் நிலை ஆய்வு முடிவுகளை ஏற்று வெளியிடப்பட்ட சக மீள்பார்வை பெற்ற இரண்டாம் நிலை விமர்சனக் கட்டுரையிலும் இருந்து எழுதுவதில் தடை இல்லை.

அதே போல் ஆவணம் இதழில் நீங்கள் கட்டுரை வெளியிட்டிருந்தாலும் அதையும் மேற்கோளாகத் தரலாம். நீங்கள் எழுதும் ஆய்வு நூல்களை மேற்கோளாகத் தரலாம் என்றாலும் அது அதிகளவு சக மீள்பார்வை பெற்று ஏற்கப்படுமாயின் அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத முடியும். மாற்றுக்கருத்துள்ள உங்கள் ஆய்வு நூல் கருத்துகள் மீள்பார்வை பெறாதது எனில் அதை சில வரிகளில் மட்டும் அந்த கட்டுரையின் கடைசியில் குறிப்பிட இயலும்.

தமிழ்நாட்டில் பௌத்த கோயில்கள் என்பது பட்டியல் கட்டுரை என்பதால் அதில் இந்த சிக்கல்கள் அதிகம் வராது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:07, 28 ஆகத்து 2014 (UTC)

தலைப்பு சற்றுச் சிரமம்தான். இருப்பினும் தாங்கள் கூறியனவற்றை அறிந்தேன். இதோ, ஆரம்பித்துவிட்டேன். தொடர்ந்து எழுதுவேன். உரிய மேற்கோள்களைத் தருவேன். எழுதும்போது விதிகளைப் பிறழும் நிலை அறியாமல் ஏற்பட்டால் நெறிப்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:27, 28 ஆகத்து 2014 (UTC)

நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள செய்தித்தாள் இணைப்புகளை மேற்கோள்களாக தரலாம். நிறைய செய்திகள் அதிலேயே உள்ளன. ஆனால் பிற்காலத்தில் வேறு ஒரு ஆய்வாளர் வந்து அது எல்லாம் புத்தர் சிலை அல்ல. வேறு ஒருவரின் சிலை என்கிறார் எனில் அப்போது செய்தித்தாள்களின் மேற்கோள்களுக்கு முக்கியத்துவம் இருக்காது. அப்போது மற்றவர் எழுதும் ஆய்வு நூல்களைக் கொண்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை கட்டுரையின் முதலிலும் ஏற்றுக்கொள்ளப்படாதது கட்டுரையின் பின்னில் சிறிதாகவும் வரலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:57, 28 ஆகத்து 2014 (UTC)

இதுபோன்ற சிக்கல்கள் நான் எதிர்பார்த்ததுதான். செய்தித்தாள் ஆதாரம் மட்டுமே இருக்கும்போது அதனைத் தருகிறேன். ஏதாவது ஒரு இடத்தில் புத்தர் சிலையின் அமைப்பினைப் பற்றி விவாதிப்பேன். தாங்கள் கூறியதை கவனத்தில் கொள்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 17:04, 28 ஆகத்து 2014 (UTC)

வணக்கம் ஐயா, தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள் என்ற கட்டுரையில் குமரி மாவட்டத்திலுள்ள சிதறால் மலைக் கோவில் என்பதையும் இணைக்கலாமா? மேலும் நாகர்கோயிலில் அமைந்துள்ள நாகராஜா கோவிலும் சமணக் கோயில் என்றே கேள்விப்பட்டுள்ளேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 05:20, 30 ஆகத்து 2014 (UTC)

வணக்கம். சிதறால் மலைக் கோவில் என்ற தலைப்பிலான கோயிலை இணைக்கலாம். பல கோயில்கள் சமணக்கோயில்கள் என்றும் புத்தர் கோயில்கள் என்றும் கூறப்பட்டுவருகின்றன. அந்நிலையில் கூறப்படுவதை வைத்து பட்டியலில் சேர்ப்பது என்பதானது நாம் தவறாகச் செய்தியைத் தந்ததுபோல் ஆகிவிடும் என நினைக்கிறேன். எனவே நாகராஜா கோவில் இணைப்பு பற்றி சற்றுச் சிந்திக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:30, 30 ஆகத்து 2014 (UTC)

நன்றி.--இரா.பாலா (பேச்சு) 05:37, 30 ஆகத்து 2014 (UTC)

விக்கி காமன்சில் படிமம் (நீங்கள் எடுத்த படிமங்கள்) பதிவேற்ற[தொகு]

வணக்கம். அண்மையில் நீங்கள் படிமங்களைக் கட்டுரைகளில் இணைத்து வருவது பாராட்டுக்குரியது. அதில் ஒரு சிறு வேண்டுகோள். அருமையான புகைப்பட ஆவணங்களான அவற்றை தமிழ் விக்கியில் பதிவேற்றினால் அவற்றை தமிழ் விக்கியில் மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக அவை விக்கி பொதுவகத்தில் பதிவேற்றப்பட்டால் அனைத்துமொழி விக்கிப்பீடியாக்களிலும் அவற்றைப் பயன்படுத்த இயலும். இனிமேல் பதிவேற்றும் படிமங்களை விக்கிப் பொதுவகத்தில் பதிவேற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அங்கு பதிவேற்றத் தேவையான வழிக்குறிப்புகளை கீழே தந்துள்ளேன். முயற்சி செய்து பாருங்கள். மேலும் உதவி தேவைப்பட்டால் கேட்கவும். நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:23, 12 செப்டம்பர் 2014 (UTC)

 • த.விக்கிப் பக்கத்தில் இடதுபுறம் ’பொதுவகம்’ என்று ஒரு இணைப்பு உள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்தால் விக்கி காமன்ஸ் பக்கம் ஆங்கிலத்தில் திறக்கும்.
 • விக்கி காமன்சில் log in செய்து கொள்ளுங்கள்.
 • தவியில் கோப்பைப் பதிவேற்று என இடப்புறம் இருப்பது போல அங்கும் ’upload a file’ இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
 • ’select a media fil’e இணைப்புடன் புதுப்பக்கம் தோன்றும்.
 • select a media file- இதைக் கிளிக் செய்து, உங்கள் கணினியில் உள்ள படிமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். படிமம் லோட் ஆகும். அதற்கு சற்று நேரம் ஆகலாம். லோடான பின் அந்த பக்கத்தின் வலதுபுறம் கீழே ’next’ அல்லது ’continue’ இணைப்பை கிளிக் பண்ண,
 • அடுத்து வரும் பக்கத்தில் நாம் பதிவேற்றப்போகும் படிமம் சொந்த முயற்சியா (own work) இல்லையா என இரு options இருக்கும். அதில் ’own work’ செலெக்ட் பண்ணிவிட்டு கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அழுத்த வேண்டும்.
 • அடுத்த பக்கத்தில் படிமத் தலைப்பு இருக்கும். பெயர் மாற்றுவதானால் மாற்றிக் கொள்ளலாம். படிமத் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கட்டும். அப்போதுதான் பிற மொழிப் பயனர்கள் பயன்படுத்த முடியும். தலைப்புப் பெட்டிக்குக் கீழ் படிமம் பற்றிய விளக்கம் தர ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்கள் படிமம் குறித்து ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் அங்கு எழுதலாம். (ஆங்கிலத்திலும் தமிழிலும்) அப்பக்கத்தின் கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அடுத்தினால் படம் அப்லோட் ஆகிவிடும். தேங்க்ஸ் ஃபார் அப்லோடிங் என்று வரும். பின் அப்படிமத்தினை பொருத்தமான பகுப்புகளில் இணைக்கலாம். பொருத்தமான பகுப்புகள் இல்லாவில் நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.

தங்களின் கருத்திற்கு நன்றி. தாங்கள் கூறியமுறையை செயல்படுத்த முயற்சிப்பேன். உதவி தேவையாயின் தொடர்புகொள்வேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:16, 12 செப்டம்பர் 2014 (UTC) தாங்கள் கூறியபடி முதன்முதலாக இன்று தஞ்சாவூர் வெள்ளைபிள்ளையார்கோயில் தொடர்பான புகைப்படங்களை இணைத்துவிட்டேன். கீழே இவ்வாறு வருகிறது. Creating User:பா.ஜம்புலிங்கம் Wikimedia Commons does not yet have a user page called பா.ஜம்புலிங்கம். To start the page, begin typing in the box below. When you're done, press the "Save page" button. Your changes should be visible immediately. If this page used to exist, it may have been deleted. Check for பா.ஜம்புலிங்கம் in the deletion log and/or in deletion requests. Search for பா.ஜம்புலிங்கம் in Commons. வணக்கம். விக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் உருவாக்கவேண்டுமா? (தமிழ் விக்கிபீடியாவில் உள்ளவாறே விக்கி காமன்சில் log in செய்துள்ளேன்). தற்போது விக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் என்ற தலைப்பின்கீழ் என்னைப் பற்றிய குறிப்பினை இடலாமா? ஐயத்தைத் தெளிவிக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:11, 16 செப்டம்பர் 2014 (UTC)

ஒரு விக்கியில் log in செய்தால் அனைத்து விக்கிகளிலும் உட்பதிகை ஆகிவிடும். ஆனால் பயனர் பக்கம் தனித்தனிதான். எனவே புதிய பயனர் பக்கத்தை விக்கி காமன்சில் உருவாக்க வேண்டும். அனைத்து விக்கியினருக்கும் இது பொதுவான விக்கியாதலால் இங்கு உங்கள் பயனர் பக்கத்தை ஆங்கிலத்தில் இடுவது நலம்.
விக்கி காமன்சில் User:பா.ஜம்புலிங்கம் என்ற தலைப்பின்கீழ் என்னைப் பற்றிய குறிப்பினை இடலாமா? இடலாம். ஆங்கிலத்தில் இடுவது நல்ல வழக்கம்.--மணியன் (பேச்சு) 16:36, 16 செப்டம்பர் 2014 (UTC) வேண்டுமானால் சிறு குறிப்பு தந்து மேல் விவரங்களுக்கு தமிழ் விக்கி இணைப்பைத் தரலாம். [[ta:பயனர்:பா.ஜம்புலிங்கம்|My page in Tamil Wiki]] என்று தலைப்பில் இடலாம்.--மணியன் (பேச்சு) 16:40, 16 செப்டம்பர் 2014 (UTC)

Wikipaedia (English)இல் அண்மையில் User ஆக பதிவு செய்துள்ளேன். அதில் உள்ள என்னைப் பற்றிய குறிப்பினை ஆங்கிலத்தில் சில மாற்றங்களுடன் விக்கி காமன்சில் தந்துவிட்டேன். தகவலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:14, 17 செப்டம்பர் 2014 (UTC)

பா.ஜம்புலிங்கம் அவர்களே நீங்கள் பொதுவகத்தில் படிமங்களைப் பதிவேற்ற இப்பக்கத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மேலே பூங்கோதை அவர்கள் குறிப்பிட்டபடி செயற்பட்டு பொதுவகத்தில் படிமங்களைப் பதிவேற்றலாம். இப்பதிவேற்றத்திற்கான இணைப்பை பொதுவகத்தின் முதற்பக்கத்தில் வலது மேல் மூலையில் உள்ள Upload என்ற ஆழியின் (button) ஊடாகவும் அடையலாம். பொதுவகத்தில் படிமங்களைப் பதிவேற்றினால் அப்படிமங்களை அனைத்து விக்கிகளிலும் பயன்படுத்தலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:50, 17 செப்டம்பர் 2014 (UTC)
பூங்கோதை பேச்சு ஸ்ரீகர்சன் அனைவருக்கும் வணக்கம். தாங்கள் அனைவரும் கூறியபடி பொதுவகத்தில் படிமங்களைப் பதிவேற்ற ஆரம்பித்துவிட்டேன். கருத்துரைக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:21, 17 செப்டம்பர் 2014 (UTC)
மணியன் அவர்களுக்கும் என் நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:24, 17 செப்டம்பர் 2014 (UTC)
இன்று எழுதியுள்ள சமண அறநெறிகள் (நூல்) கட்டுரையில் முதன்முதலாக நூலட்டையை நானாக இணைத்துள்ளேன். முன்னர் புகைப்படங்களை நான் இணைத்தபோது பல விடுபாடுகள் செய்து (புரிதலின்மை காரணமாக) நான் பதிவிறக்கம் செய்த புகைப்படங்கள் நீக்கப்பட்டன. நான் தற்போது நூலட்டையினைப் பதிந்துள்ள முறை சரியா? எனவும் புகைப்படம் நீக்கப்படாமல் இருக்குமா? எனவும் அன்புகூர்ந்து தெரிவிக்கவேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:23, 6 சனவரி 2015 (UTC)
வாழ்த்துக்கள், இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். தொடர்ந்தும் இணைக்கும் போது இவ்வார் இணையுங்கள். தகவற்சட்டத்தில் இணைத்தால் அழகாகவும் இருக்கும். அதிக இடம் பிடிக்காதது போன்றும் தோன்றும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:47, 6 சனவரி 2015 (UTC)
அறிந்தேன். இனி அவ்வாறே செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:57, 6 சனவரி 2015 (UTC)

வேண்டுகோள்[தொகு]

பேச்சு:மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:57, 12 செப்டம்பர் 2014 (UTC) தாங்கள் கூறியபடி என் கருத்தை அப்பக்கத்தில் இட்டுள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:06, 12 செப்டம்பர் 2014 (UTC)

 • அழகரந்தாதி கட்டுரையில் அந்நூலின் அமைப்பினைக் காட்டுவதற்கு அதன் ஒரு பாடல் அல்லது சில வரிகள் இணைக்கும் படியும்(முடிந்தால்)
 • பெருங்களூர் உருமநாதர் கோயில்- இக்கோயில் இறைவன் உருமநாதர்-அய்யனாரா? இல்லை வேறு கடவுளா என்ற எனது சந்தேகத்தைத் தெளிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:56, 27 செப்டம்பர் 2014 (UTC)

வணக்கம். தற்போது தாங்கள் விரும்பியபடி அழகரந்தாதி கட்டுரையில் ஒரு பாடலை, பொருளுடன் இணைத்துள்ளேன். நான் கேள்விப்பட்ட வரையில் பெருங்களூர் உருமநாதர் கோயில் இறைவன் அய்யானார்தான். இருப்பினும் நான் செல்லவுள்ள களப்பணிப்பட்டியலில் இக்கோயிலைச் சேர்த்துள்ளேன். நேரில் செல்லவுள்ளேன். பார்த்தபின் மேலும் செய்திகளைச் சேர்ப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:42, 28 செப்டம்பர் 2014 (UTC)

பதக்கம்[தொகு]

Shaivism barnstar.png சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்
தாங்கள் சைவசமயக் கட்டுரைகளை தொகுப்பதிலும் தொடங்குவதிலும் ஆர்வம் காட்டுவதால், இப் பதக்கம் உங்களுக்கு வழங்கப்படுகிறது. தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்! -- mohamed ijazz(பேச்சு) 10:45, 2 அக்டோபர் 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம் வாழ்த்துக்கள் ஜம்புலிங்கம் அவர்களே!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:19, 2 அக்டோபர் 2014 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 01:20, 3 அக்டோபர் 2014 (UTC)

பதக்கம் வழங்கிய User:Mohamed ijazz அவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்ரீகர்சன் மற்றும் மணியன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி. தங்களுடைய ஒத்துழைப்புகளுடன் தொடர்ந்து எழுதுவேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:19, 3 அக்டோபர் 2014 (UTC)

👍 விருப்பம் பங்களிப்புகளுக்கு எனது பாராட்டுகளும்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:26, 3 அக்டோபர் 2014 (UTC)

பாராட்டிற்கு அன்பான நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:30, 3 அக்டோபர் 2014 (UTC)

👍 விருப்பம் வணக்கம் ஐயா, தாங்கள் சைவ சமயத்தின் கட்டுரைகளில் கொள்ளுகின்ற ஆர்வத்தினை அறிந்து இப்பதக்கத்தினை தரலாம் என்று தங்கள் பேச்சுப் பக்கத்திற்கு வந்தால், அதற்கு முன்பே அப்பதக்கத்திற்கு உரியவராகி இருக்கின்றீர்கள். அதிலும் மாற்று மத நண்பரான User:Mohamed ijazz அப்பதக்கத்தினை தங்களுக்கு அளித்திருப்பது விக்கிப்பீடியாவில் நிலவுகின்ற அற்புதமான வேற்றுமையில் ஒற்றுமைக்கு சான்றாக இருக்கிறது. தொடர்ந்து ஆர்வத்துறையில் பங்களியுங்கள். தாங்கள் கோயில்களின் புகைப்படங்களையும் ஏற்றுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் அரிதாக சிலர் மட்டுமே செய்கின்ற காரியம் இது. தொடர்ந்து தங்களின் சேவையை விக்கிக்குத் தந்து வருங்காலத் தலைமுறையின் சீர்மிகு வாழ்விற்கு வழிகாட்டியாக இருப்பதற்கு எந்தன் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:54, 30 மார்ச் 2015 (UTC)
வணக்கம் சகோதரன் ஜெகதீஸ்வரன். உங்களைப் போன்றோரின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. தமிழகத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் என்ற நிலையில் அவ்வப்போது கோயில் உலா செல்கிறோம். தற்போது விக்கிபீடியாவிற்காகவும் தனியாக உலா செல்ல ஆரம்பித்துள்ளேன். முடிந்தவரை நான் நேரில் பார்த்தவற்றை அவ்வப்போது விக்கிபீடியாவில் பதிய என்னால் ஆன முயற்சியினை மேற்கொண்டு வருகிறேன். அவ்வாறு செல்லும்போது கிடைக்கும் கூடுதல் தகவல்களை கட்டுரைகளில் சேர்க்கிறேன். அடிக்குறிப்பு இல்லா நிலையில் வாய்மொழியாகப் பெறப்படும் செய்திகளும் உதவியாக உள்ளன. தொடர்ந்து பயணிப்பேன், எழுதுவேன், உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:58, 30 மார்ச் 2015 (UTC)

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்[தொகு]

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:00, 21 அக்டோபர் 2014 (UTC)

ஆதுர சாலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:06, 29 அக்டோபர் 2014 (UTC)

அண்மையில்தான் அறிந்தேன். தெரியப்படுத்தியமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:44, 19 சூலை 2015 (UTC)

படிமம்:Dhenuga.jpg எங்கிருந்து பெறப்பட்டது?[தொகு]

Nuvola apps important blue.svg

படிமம்:Dhenuga.jpg படிமத்தை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. இக்கோப்பு எங்கிருந்து எடுக்கப்பட்த்து என்றத் தகவல் இணைக்கப்படவில்லை. காப்புரிமைப் பற்றி சரிபார்க்க மூலம் தரப்படுதல் முக்கியமாகும்.தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவையும் மூலத்தையும் படிம விளக்கப் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அவற்றையும் ஒருமுறை சரிபார்க்கவும். ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:38, 23 அக்டோபர் 2014 (UTC)

படிமம்:Dhenuga.jpg இன் பதிப்புரிமை என்ன?[தொகு]

Image Copyright problem

படிமம்:Dhenuga.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:38, 23 அக்டோபர் 2014 (UTC)

படிமம்:Dhenuga.jpg படிமம் என்னால் மின்னஞ்சல் வழியாகப் பெறப்பட்டது. அவருடைய நூல்கள் பற்றிய விவரங்கள் தெளிவிற்காக கேட்கப்பட்டபோது அவரிடமிருந்து இப்படம் பெறப்பட்டது. இப்படம் என்னால் எடுக்கப்படவில்லை (This photograph was not taken by me). மேற்கொண்டு நான் செய்யவேண்டியவற்றைக் கூறவேண்டுகிறேன். தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:12, 24 அக்டோபர் 2014 (UTC)

அவரிடம் இருந்து “இப்படத்தை கிரியேட்டிவ் காமன்ஸ் CC BY SA 3.0 உரிமத்தின் கீழ் வெளியிடுகிறேன்” என்று ஒரு மின்னஞ்சல் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள். அந்த மின்னஞலைப் படியெடுத்து, படத்தின் உரையாடல் பக்கத்தில் இடுங்கள். மற்றதை நான் செய்துவிடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 01:26, 24 அக்டோபர் 2014 (UTC)
விவரம் தெரிவித்து அவருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மறுமொழி பெற்றபின் அனுப்புவேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:44, 24 அக்டோபர் 2014 (UTC)
படிமம்:Dhenuga.jpg படிமம் தொடர்பாக தேனுகா அவர்களுக்கு 24.10.2014 காலை கடிதம் எழுதிவிட்டு, தொலைபேசியில் தொடர்புகொண்டு நினைவுபடுத்தினேன். அனுப்புவதாகக் கூறியிருந்தார். அன்று இரவு அவர் இயற்கையெய்திவிட்டார். கும்பகோணத்தில் அவருடைய இல்லம் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன். அவருக்காக பக்கம் ஆரம்பித்து, இறப்புச் செய்தியையும் தரவேண்டியுள்ளதே என்று எண்ணி வேதனையோடு கனத்த மனத்தோடு விக்கிபீடியாவில் அவருடைய பக்கத்தைப் பார்த்தபோது அவருடைய பக்கத்தில் அவர் இறந்த செய்தியை தினமணி மேற்கோளிட்டு செய்தி சேர்க்கப்பட்டுள்ளதை இன்று பார்த்தேன். அவருடைய இப்புகைப்படம் தொடர்பாக தங்களது கருத்தினை அறிய விரும்புகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:26, 27 அக்டோபர் 2014 (UTC)
இச்செய்தியைக் கேட்டு மனம் வருந்துகிறேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள். நியாயப் பயன்பாட்டுக் காரணத்தின் அடிப்படையில் படத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். தேவையானவற்றை நான் செய்து விடுகிறேன். கனக்ஸ் செய்து விட்டார். இனி பதிப்புரிமைச் சிக்கல் இல்லை.--சோடாபாட்டில்உரையாடுக 13:23, 27 அக்டோபர் 2014 (UTC)
செய்தி அறிந்தேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:53, 27 அக்டோபர் 2014 (UTC)
எனது ஆழ்ந்த இரங்கல்கள். தேனுகா அவர்கள் இறந்த செய்தியை பத்மநாப ஐயர் மூலம் முகநூல் வாயிலாகவே அறிந்து கொண்டேன். தேனுகா அவர்கள் பற்றி மேலும் தகவல்கள் (பிறந்த தேதி) உட்பட மேலும் தகவல்கள் தெரிந்தால் இற்றைப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 19:53, 27 அக்டோபர் 2014 (UTC)
கூடுதல் விவரம் சேர்க்க முயற்சிப்பேன்.நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 00:56, 28 அக்டோபர் 2014 (UTC)

திருப்பேர் நகர் அல்லது கோவிலடி புதிய புகைப்படம்[தொகு]

அண்மையில் திருச்சிக்கு அருகில் லால்குடியிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள 6ஆவது திவ்யதேசமான திருப்பேர் நகர் எனப்படும் கோவிலடி என்னுமிடத்திலுள்ள அப்பக்குடத்தான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது எடுத்த புகைப்படத்தினை கோவிலடி தலைப்பிலும் பஞ்சரங்க தலங்கள் தலைப்பிலும் இணைத்துள்ளேன் என்பதைத் தகவலுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டுரைகளிலிருந்த பழைய கருப்பு வெள்ளை படத்திற்குப் பதிலாக இதனைச் சேர்த்தேன். இவ்வாறு சேர்த்தது சரியா என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:08, 13 நவம்பர் 2014 (UTC)

இப்படிமங்களை நீங்களே எடுத்திருந்தால் இவற்றைப் பொதுவகத்தில் தரவேற்றினால் ஏனைய மொழி விக்கிகளிலும் பயன்படுத்த முடியும்.--Kanags \உரையாடுக 08:07, 13 நவம்பர் 2014 (UTC)
இப்புகைப்படங்களை நான்தான் எடுத்தேன். தாங்கள் கூறியபடி நான் எடுத்த புகைப்படங்களை இனி பொதுவகத்தில் தரவேற்றுவேன். நன்றி.--117.217.249.54 14:45, 13 நவம்பர் 2014 (UTC)
இப்புகைப்படங்களை நான்தான் எடுத்தேன். தாங்கள் கூறியபடி நான் எடுத்த புகைப்படங்களை இனி பொதுவகத்தில் தரவேற்றுவேன். நன்றி. புகுபதிகை செய்யாமல் மறுமொழி அனுப்பிவிட்டேன். பொறுத்துக்கொள்க. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:47, 13 நவம்பர் 2014 (UTC)

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் பா.ஜம்புலிங்கம்/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:11, 30 திசம்பர் 2014 (UTC)

என் பெயரையும் இத்திட்டத்தில் இணைத்துள்ளேன். முடியுமா என்ற எண்ணம் எழுந்தபோதிலும் முயற்சித்து சாதிப்போம் என்ற நிலையில் களம் இறங்கியுள்ளேன். உங்கள் அனைவரின் அன்பையும் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்நோக்குகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:04, 31 திசம்பர் 2014 (UTC)

ஐயா,
 1. தாங்கள் இதுவரை இங்கு எழுதியுள்ள கட்டுரைகளை மேம்படுத்த முயற்சி செய்யலாம்.
 2. உங்களுக்கு விருப்பமான துறையில் எழுதப்பட்டுள்ள மற்றக் கட்டுரைகளை படித்துப் பார்த்து, பிழைகளைத் திருத்தலாம்; கூடுதல் தகவல்களை சேர்க்கலாம்.
 3. 100 கட்டுரைகள் என்பது இலக்கல்ல; 100 குறிப்பிடத்தக்க தொகுப்புகளே நமது இலக்கு என்பதனை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். தினந்தோறும் சராசரியாக 4 தொகுப்புகள் போதுமானது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:14, 31 திசம்பர் 2014 (UTC)
ஐயா தங்கள் உளவெண்ணம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள். தமிழ்விக்கியர்களால் முடியும் எனும் நம்பிக்கையிலேயே இதை ஆரம்பித்தோம். இத்திட்டம் தங்களுக்கு ஓர் மனவெழுச்சி தந்ததையிட்டு மகிழ்கிறேன். இலக்கை அடைந்து பதக்கங்களை தட்டிச்செல்ல வாழ்த்துக்கள். உங்களால முடயுமெண்டு எங்களுக்குத் தெரியும்!!! --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:15, 31 திசம்பர் 2014 (UTC)
வணக்கங்க, வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:54, 16 சனவரி 2015 (UTC)

உங்கள் கவனத்திற்கு[தொகு]

மணப்பாறை மாடு கட்டுரையில் "மணப்பாறை மாடு கட்டி" பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியாக தரப்பட்டிருந்தது. ஆனால் அப் பாடலை எழுதியவர் மருதகாசி என்பதால் மாற்றியிருக்கிறேன். ஒரேயொரு ஆதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை உருவாக்கும்போது இவ்வாறு நேர்வதுண்டு. முடிந்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகளைக் கொண்டு விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:04, 1 சனவரி 2015 (UTC)

தாங்கள் கூறிய கருத்தை அறிந்தேன். இனி தாங்கள் கூறியபடி கவனமாக இருப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:08, 1 சனவரி 2015 (UTC)

தமிழர் பண்பாட்டில் சங்கு[தொகு]

ஐயா, இந்தக் கட்டுரையின் உள்ளடக்கங்கள் குறித்து எனக்கு இரண்டு ஐயங்கள் உள்ளன.

 1. இந்தியக்கலை மரபில் போற்றப்படும் பஞ்சமுக வாத்தியத்தினைப் பற்றி இந்நூல் விரிவாக ஆராய்கிறது. - இது பொருத்தமற்ற வாக்கியமாக உள்ளது. சங்கு பற்றிதானே தகவல்கள் இருக்கும்?
 2. இந்தக் கட்டுரை ஒரு நூலைக் குறித்தது. அவ்வாறிருக்க, சங்கின் பெருமை எனும் துணைத் தலைப்பு இங்கு பொருத்தமற்று இடம்பெற்றிருப்பதாக நான் கருதுகிறேன். ஏனெனில் ஆனந்த விகடனின் தகவலை ஆதாரமாக காட்டியுள்ளீர்களே?! கவனிக்கவும், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:55, 1 சனவரி 2015 (UTC)

வணக்கம். (1) ஒரே சமயம் கிட்டத்தட்ட ஒரே பொருண்மையிலான இரு தொடர்புடையனவற்றை எழுதும்போது இந்த சிக்கல். தாங்கள் கூறியபடி நீக்கிவிட்டேன். (2) நூல் அறிமுகத்தில் மேற்கோள்கள் இருக்கவேண்டும் எனக் கூறப்படுவதன் அடிப்படையில் தேடியபோது எனக்குக் கிடைத்தத் தகவலை மேற்கோளுக்காகச் சேர்த்தேன். நூல்களில் மேற்கோள் சேர்க்க அதிகம் சிரமப்படவேண்டியுள்ளது. எழுதும் வேகத்தை அது குறைத்துவிடுகிறது. தங்கள் கண்ணோட்டத்தில் நோக்கும்போது இச்சொற்றொடர் தனிப்பட்ட நிலையில் அமைவதை உணர்ந்தேன். இதுபோன்ற பல பெருமைகள் சங்குக்கு உண்டு, இருப்பினும் அதையும் தற்போது நீக்கிவிட்டேன். கிடைக்கும் நேரத்தில் எழுதவேண்டும் என்ற ஆர்வமும், அவசரமும் இவ்வாறான நிலைக்கு ஆட்படுத்துகின்றன. தொடர்ந்து பிற பதிவுகளை எழுதவுள்ளேன். அவ்வப்போது நெறிப்படுத்த வேண்டுகிறேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:42, 2 சனவரி 2015 (UTC)

நூல் குறித்த கட்டுரைகளுக்கான உதவிக் குறிப்புகள்...[தொகு]

ஐயா, வணக்கம். நூல் பற்றியக் கட்டுரைகளில் உரிய மேற்கோள் சேர்ப்பது குறித்தான எனது கருத்தினையும், உதவிக் குறிப்பினையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்:-

 1. நூல் பற்றியக் கட்டுரையில், அந்த நூல் பற்றிய தகவலைச் சொல்லும் ஒரு ஆதாரத்தையே மேற்கோளாக குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, பத்திரிகையில் வெளியான புத்தக விமர்சனத்தைக் குறிப்பிடுதல். தெளிவாக புரிந்துகொள்ள மங்கல இசை மன்னர்கள் (நூல்) எனும் கட்டுரையைக் கவனியுங்கள்!
 2. கட்டுரையில் உள்ள தகவல்கள், உதாரணம் அத்தியாயங்கள், அந்த நூலைப் பார்த்த (படித்த) பிறகே எழுதப்படும். எனவே உசாத்துணை எனும் துணைத் தலைப்பின்கீழ் நூல் குறித்த தகவல்களை இடுங்கள்! தெளிவாக புரிந்துகொள்ள மீண்டும் மங்கல இசை மன்னர்கள் (நூல்) எனும் கட்டுரையைக் கவனியுங்கள்! - அன்புடன், --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:52, 2 சனவரி 2015 (UTC)
வணக்கம். தற்போது தமிழறி மடந்தை கதை (நூல்) என்ற நூலினைப் பற்றி தாங்கள் தந்த உத்தியின் அடிப்படையில் எழுதியுள்ளேன். தங்கள் கருத்து உதவியாக உள்ளது. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:01, 3 சனவரி 2015 (UTC)

தமிழர் பண்பாட்டில் சங்கு, நாகபட்டினம் (நூல்) ஆகிய கட்டுரைகளையும் இதே மாதிரி மேம்படுத்த கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:10, 3 சனவரி 2015 (UTC)

தற்போது வேறு சில கட்டுரைகளுக்கான பதிவுகளுக்கான குறிப்புகளை எடுத்துவருகிறேன். தாங்கள் கூறியபடி மேற்கண்ட இரு கட்டுரைகளையும் விரைவில் மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:56, 3 சனவரி 2015 (UTC)
தமிழர் பண்பாட்டில் சங்கு, நாகபட்டினம் (நூல்) இரு கட்டுரைகளையும் தாங்கள் கூறியபடி சரிசெய்துவிட்டேன். தமிழர் பண்பாட்டில் சங்கு என்ற கட்டுரை தொடர்பாக சிறு குழப்பம். அதில் (நூல்) என்பது விடுபட்டிருந்ததால் புதிதாக தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்) என்னும் தலைப்பில் புதியதாக ஆரம்பித்துள்ளேன். தற்போது தமிழர் பண்பாட்டில் சங்கு என்றும் தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்) என்றும் இரு தலைப்புகள் உள்ளன. தமிழர் பண்பாட்டில் சங்கு என்னும் கட்டுரையை நீக்கவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:15, 3 சனவரி 2015 (UTC)
இரு கட்டுரைகளையும் இணைத்துவிடலாம். வார்ப்புரு இணைத்திருக்கிறேன். யாரும் ஆட்சேபணைத் தெரிவிக்கவில்லையெனில், இன்றே இணைத்துவிடுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 09:19, 3 சனவரி 2015 (UTC)
எப்படி செய்வது என்று வழிமுறை புரியாமல் யோசித்துக்கொண்டிருந்தேன். உதவிக்கு வந்துவிட்டீர்கள். ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 09:21, 3 சனவரி 2015 (UTC)
Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 11:59, 3 சனவரி 2015 (UTC)

ஐயா, தங்களை மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்.

 1. தமிழர் பண்பாட்டில் சங்கு (நூல்) எனும் கட்டுரையில் உள்ள சங்கின் பெருமை எனும் துணைத் தலைப்பின்கீழ் எழுதப்பட்டுள்ள தகவல்கள், இந்த நூலில் காணப்படுகின்றவா? இல்லையெனில், இந்தத் துணைத் தலைப்பினையே நீக்குதலே கட்டுரைக்குப் பொருத்தமானது.
 2. நாகபட்டினம் (நூல்) எனும் கட்டுரையில் நீங்கள் காட்டியுள்ள மேற்கோள் பொருத்தமற்றது. இந்த நூல் குறித்த தகவல் எதுவும் தினகரன் இணையத்தளத்தில் இல்லையே! உரிய மேற்கோள்கள் கிடைக்காத பட்சத்தில், உசாத்துணை விபரம் போதுமானது. இன்னொரு விசயம்... தகவற்சட்டத்தை நீக்கியதற்கு ஏதேனும் காரணமுண்டா?

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 3 சனவரி 2015 (UTC)

(1)சங்கின் பெருமை எனும் துணைத் தலைப்பின்கீழ் எழுதப்பட்டுள்ள தகவல்கள் நூலின் முன்னுரையில் காணப்படுகின்றன. இருப்பினும் படிப்பவருக்கு ஒரு குழப்பத்தை உண்டாக்கும் எனக் கருதும் நிலையில் துணைத்தலைப்பினை நீக்கிவிடுகிறேன்.
(2)நூல்கள் தொடர்பாக நான் எழுதிய பதிவுகள் தாங்கள் தந்த மாதிரிக்கட்டுரையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படடவையாகும். தாங்கள் தந்திருந்த மங்கல இசை மன்னர்கள் (நூல்) கட்டுரைப்பதிவில் தகவற்சட்டம் இல்லை.ஆகவே அதனை அடிப்படையாகக் கொண்டு எனது பதிவுகளிலும் தகவற்சட்டத்தை நீக்கினேன். தகவற்சட்டம் இருக்கலாம் என்று கருதினால் நாகபட்டினம் (நூல்) மற்றும் தொடர்ந்து நான் எழுதவுள்ள நூல் தொடர்பான பதிவுகளில் இணைத்துவிடுவேன்.
(3) நீங்கள் எழுப்பாத கேள்வி. ஆனால் என் ஐயம் ஒன்று உள்ளது. பழைய நூல்களுக்கு பெரும்பாலும் மேற்கோள் எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அல்லது கிடைப்பதில்லை. இந்நிலையில் மேற்கோள் இல்லாமல் எழுதலாமா? மேற்கோள் எழுதவேண்டும் என்ற நிலையில் வலிந்து அதனைத் தேடி கிடைக்காத நிலையில் நூலிலிருந்தே தகவலை எடுத்து அதனை கட்டுரையில் திணிக்கப்படும்போது இவ்வாறான தவறுகள் நிகழ்கின்றன. அவ்வப்போது தாங்களும், நண்பர்களும் தெளிவுபடுத்தும் ஐயங்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:08, 4 சனவரி 2015 (UTC)

ஐயா,

 1. சங்கின் பெருமை எனும் துணைத்தலைப்பினை நீக்குதலே சரியானது
 2. மேற்கோள் பற்றிய உதவிக்குத்தான் மங்கல இசை மன்னர்கள் (நூல்) எனும் கட்டுரையினை சுட்டினேன். தகவற்சட்டம் இருப்பதுவே சிறப்பு!
 3. எனது முந்தைய உரையினை மீண்டும் படியுங்கள்: உரிய மேற்கோள்கள் கிடைக்காத பட்சத்தில், உசாத்துணை விபரம் போதுமானது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:17, 4 சனவரி 2015 (UTC)
தங்களது கருத்துரைகளை அறிந்தேன். அதன்படி எழுதுவேன்.நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:30, 4 சனவரி 2015 (UTC)

வணக்கம். ஆலமரத்தடியில் நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் ஒரு குறிப்பு இட்டிருக்கிறேன். அதனை உங்களது பங்களிப்புகள் மீதான தனிப்பட்ட விமர்சனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தாழ்மையாகக் கேட்டுக் கொள்கிறேன். நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பில் தெளிவான கொள்கை இல்லாமையைச் சுட்டிக்காட்டுவதே நோக்கமாகும். உங்கள் சிறப்பான பங்களிப்புக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும். கோபி (பேச்சு) 13:38, 7 சனவரி 2015 (UTC)

வணக்கம். இணைப்பது உசிதமாக இருக்கும் எனக் கருதினால், இணைப்பதே நல்லது. நூல் தொடர்பான பதிவு ஒரு மாதிரியைக் கேட்டே எழுத ஆரம்பித்தேன். தகவற்சட்டம் பற்றிய இணைப்பு, நூலட்டை பற்றிய இணைப்பு, மேற்கோள்கள் தொடர்பான தொடர்ந்து வந்த என்னுடைய பல ஐயங்களைக் கேட்டு ஒவ்வொரு நிலையிலும் கேட்டு, தெளிவு பெற்று அதன்படியே தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். தற்போது தாங்கள் கூறியபின் ஆலமரத்தடி சென்றேன். சிக்கலை அறிந்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடை தொடர்பான கருத்து கூறுவதால் பின் தொடர்வது சற்று சிரமமாக உள்ளது. தாங்கள் நினைப்பதுபோல் மூலக்கட்டுரையுடன் நூல் பற்றிய பதிவை இணைக்கலாம் என்றால் அவ்வாறே இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். மாற்றம் எது இருப்பினும் அவ்வப்போது தெரிவிக்க வேண்டுகிறேன். அவ்வாறு கடைபிடிக்க எனக்கு உதவும். இவ்வாறான தங்களின் கருத்துக்கள் எனது பதிவுகளை செம்மைப்படுத்த உதவுகின்றன. தொடர்ந்து எழுதுவேன், மேம்படுத்த முயற்சிப்பேன். உங்களது பாராட்டுக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:39, 7 சனவரி 2015 (UTC)

ஐயா, தளராத தங்களின் உள்ளத்திற்கு எனது நன்றி! கோபி தெரிவித்துள்ள கருத்து, நூல்களின் குறிப்பிடத்தக்கமை பற்றியது. மற்றபடி, நூல்கள் குறித்த தங்களின் தற்போதைய நடை மேம்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:13, 8 சனவரி 2015 (UTC)

வணக்கம். என்னுடைய கருத்து குறித்த நூல்கள் பற்றித் தனித்தனிப்பக்கங்கள் உருவாக்குமளவுக்குக்கு அவை முக்கியமானவையா என்பது தொடர்பானது மட்டுமே. அதாவது இது தொடர்பில் சரியான கொள்கை இருக்க வேண்டும் என்பது தொடர்பாக மட்டுமே. மற்றபடி உங்களது பங்களிப்பில் எந்தக்குறையும் இல்லை. குறித்த நூல்கள் பற்றிய உங்கள் பதிவுகள் அந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களைக் கொண்ட கட்டுரைகளிலோ அல்லது நூலாசிரியர்கள் பற்றிய பக்கங்களிலோ இருக்க வேண்டியவையே. உங்களது ஆய்வுப் பின்புலத்தின் துணை கொண்டு நீங்கள் பெருமளவு பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி (பேச்சு) 17:24, 8 சனவரி 2015 (UTC)
தங்களது மறுமொழிகள் எனக்கு உத்வேகத்தைத் தருகின்றன. கருத்தை அறிந்தேன். தங்களின் செறிவூட்டல் எனது பதிவுகளுக்கு உதவியாக உள்ளது. முடிந்தவரை தங்கள் அனைவரின் உதவியுடன் எனது பங்களிப்பினைத் தொடர்ந்து செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:55, 9 சனவரி 2015 (UTC)

வாழ்த்துக்கள்[தொகு]

வாழ்த்துக்கள், ஜம்புலிங்கம், தற்போது நீங்களும் இலக்கை அடைந்த பயனர்களுள் ஒருவர். பண்குகொண்டமைக்கு நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:31, 3 சனவரி 2015 (UTC)

நன்றி. தொடர்வேன், தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களுடன் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:37, 3 சனவரி 2015 (UTC)
👍 விருப்பம்! ஆர்வத்துடன் பணியாற்றும் தங்களின் பங்களிப்பிற்கு நன்றிகளும், பாராட்டுகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:59, 4 சனவரி 2015 (UTC)

அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது[தொகு]

வணக்கம். அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது என்ற தலைப்பில் உள்ள பதிவினை அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவி என்ற தலைப்பைக் கொண்டோ, அவர் உருவாக்கிய திலகவதியார் திருவருள் ஆதீனம் என்ற தலைப்பைக் கொண்டோ புதிய தலைப்பாக மாற்ற ஆவன செய்யவேண்டுகிறேன். என்னால் இயன்றவரை இக்கட்டுரையினை விக்கிப்படுத்த முயன்றுள்ளேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:02, 30 சனவரி 2015 (UTC)

மேற்கண்ட கடிதம் அனுப்பியபின் தற்போது விக்கிபீடியாவில் சிவ பிருந்தாதேவி என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினைக் கண்டேன். சிவ பிருந்தாதேவி கட்டுரையோடு அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி பொற்கிழி விருது என்ற தலைப்பிலான கட்டுரையினை இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:14, 30 சனவரி 2015 (UTC)

உங்கள் கவனத்திற்கு[தொகு]

வணக்கம். நாளிதழ் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு கட்டுரைகளை (சுந்தரராஜத் தேவர்) உருவாக்கும்போது அச் செய்திகளை வாக்கியம், வார்த்தை மாறாமல் கட்டுரையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவ்வாறு பயன்படுத்துவது பதிப்புரிமை மீறலாகக் கருதப்படும். கருத்துகளை நமது சொந்த வாக்கியங்களில் கலைக்களஞ்சிய நடையில் தருதல் அவசியமாகும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:42, 22 பெப்ரவரி 2015 (UTC) வணக்கம். இவ்வாறான செய்திகளை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கும்போது இனி சொந்த வாக்கியங்களில் தருவேன். கருத்திற்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:32, 22 பெப்ரவரி 2015 (UTC)

கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் இருக்குமிடம்[தொகு]

வணக்கம். கும்பகோணம் கன்னிகா பரமேசுவரி கோயில் என்ற தலைப்பில் இன்று ஒரு பதிவு துவங்கியுள்ளேன். இக்கோயில் சோலையப்ப முதலித்தெருவில் (இப்போது சோலையப்பன் தெரு) இருப்பதாக புலவர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை தன் நூலில் கூறியுள்ளார். நான் மேற்கோளாக அந்நூலைத் தந்துள்ளேன். இக்கோயில் அந்தத் தெருவில் இல்லை. நன்கு தேடிப்பார்த்துவிட்டேன், விசாரித்தும்விட்டேன். மூர்த்திச்செட்டித்தெருவில் உள்ளது. இந்த விவரத்தை தெளிவிற்காக நான் இக்கட்டுரையில் தந்துள்ளேன். இதில் தவறு எதுவும் இருப்பதாகக் கருதினால் தெரிவிக்கவேண்டுகிறேன். தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளுக்காக இதுவரை 50க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு நேரில் சென்று வந்துள்ளேன். நேற்றைய ஒரு நாள் களப்பணியில் 30 கோயில்களுக்குச் சென்றேன். மகாமகம் விழா தொடர்பாக திருப்பணி நடைபெறுவதால் புகைப்படம் எடுப்பதிலும், விவரங்கள் எடுப்பதிலும் சற்று தொய்வு ஏற்படுகிறது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:19, 1 மார்ச் 2015 (UTC)

பயனர் பக்கத்தில் பகுப்புக்கள்[தொகு]

ஐயா, தங்களைப் பற்றி விக்கிக் கட்டுரை ஒன்றும் அங்கே உரிய பகுப்புக்களும் உள்ளது. ஆகவே பயனர் பக்கத்திலும் கட்டுரைப் பகுப்புக்கள் தேவையில்லை. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:43, 2 மார்ச் 2015 (UTC)

வணக்கம். எனது வலைப்பூ (blog)நண்பர் கூறியதன் அடிப்படையில் பதிந்தேன். இன்று நான் பதிந்த, தேவையில்லை என நினைப்பனவற்றை நீக்கி உதவிடுக. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:58, 2 மார்ச் 2015 (UTC)
மேற்கண்ட எனது வேண்டுகோளைத் தொடர்ந்து நானே தற்போது நீக்கிவிட்டேன். சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:00, 2 மார்ச் 2015 (UTC)
நன்றி ஐயா :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:06, 2 மார்ச் 2015 (UTC)

பதிவில் நாள் தவறாக பதிந்தமை தொடர்பாக[தொகு]

வணக்கம். இன்று இளைய மகாமகம் 2015 தலைப்பில் மகாமகம் தேர் தொடர்பான ஐந்து புகைப்படங்களையும், தீர்த்தவாரி தொடர்பான ஒரு புகைப்படத்தையும் பொதுவகத்தில் இணைத்தேன். ஐந்து புகைப்படங்களுக்கும் Created: 30 நவம்பர் 1899 என்ற தேதி வந்துள்ளது. தீர்த்தவாரி தொடர்பான புகைப்படத்திற்கு இன்றைய தேதிக்குப் பதிலாக 3.3.2015 என்று வந்துள்ளது. அனைத்தையும் நீக்கிவிட்டு புதிதாக பொதுவகத்தில் மறுபடியும் தற்போது சேர்க்கலாமா? என்பது குறித்து தெளிவிக்கவேண்டுகிறேன். ஆனால் File Listஇல் 4 March 2015 என்ற தேதி தெரிகிறது.தொல்லைக்குப் பொறுத்துக்கொள்க.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:20, 4 மார்ச் 2015 (UTC) கடிதத்தை எழுதியபிறகு நானே தற்போது தேதியை சரிசெய்துவிட்டேன். சரியாக பதிவு செய்துள்ளேனா என்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:32, 4 மார்ச் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help[தொகு]

Hello பா.ஜம்புலிங்கம், thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)

புத்தர் சிலைகள்[தொகு]

பௌத்த ஆய்வு, புத்தர் சிலைகள் பற்றிய உங்கள் ஆர்வத்தினை உங்கள் பயனர் பக்கத்தில் காணக்கூடியதாகவிருந்தது. en:International Buddhist Museum இங்கு உங்களுக்குப் பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கலாம். 17 நாடுகளைச் சேர்ந்த சிலைகளும், பொருட்களும் இங்கு உள்ளன. ஒரு முறை இங்கு சென்றுள்ளேன். ஔிப்படம் எடுக்கத்த தடை என்பதால் அழகிய கலைப்படைப்புக்களை பார்க்க மட்டுமே முடிந்தது. ஔிப்பட அனுதிக்காக முயற்சிக்கிறேன். கிடைத்தால் அவற்றைப் படமாக்கிவிடுவேன். --AntanO 07:05, 13 சூன் 2015 (UTC)

வணக்கம். நான் தமிழகத்தில் சோழ நாட்டினைக் (ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம்)களமாகக் கொண்டு, வரலாற்று நோக்கில் ஆய்வு செய்து வருகிறேன். என் ஆய்வின் பொருண்மை மீதான தங்களது ஈடுபாட்டிற்கு நன்றி. அவ்வப்போது தமிழ் விக்கியில் ஏற்படும் ஐயங்களைத் தெளிவுபடுத்தி உதவ வேண்டுகிறேன். புகைப்படம் சேர்க்கை, நூலட்டை சேர்க்கை என்ற நிலையில் விதிகள் புரியாமல் செய்துவிடுகிறேன். உங்களைப் போன்றோரின் உதவி விக்கியில் என்னை மென்மேலும் ஈடுபடுத்திக்கொள்ள உதவுகிறது. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:39, 13 சூன் 2015 (UTC)

உங்கள் கவனத்திற்கு[தொகு]

அறிவுக்களஞ்சியம் ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்) கட்டுரையில் ஒரு சிக்கல். கட்டுரையின் உள்ளடக்கம் தமிழர் வீரம் நூலாக உள்ளது. ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:53, 2 சூலை 2015 (UTC)

வணக்கம். Booradleyp1தமிழர் வீரம் (நூல்) கட்டுரையிலிருந்து மாதிரிக்காகப் பதிவு செய்தபோது இவ்வாறு ஆகிவிட்டது. அறிவுக்களஞ்சியம் ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்) என்ற பக்கத்தை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். அறிவுச்சோலை ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்) என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரை சரியாக எழுதிவிட்டேன். அதில் நீங்கள் நூலின் அட்டையைப் பதிவு செய்துள்ளமையைக் கண்டேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:26, 2 சூலை 2015 (UTC)
வணக்கம். Booradleyp1, உங்களுக்கு செய்தியனுப்பியபின் பயனர்:மதனாஹரன் அறிவுக்களஞ்சியம் ஞானாலயா ஆய்வு நூலகம் (நூல்)கட்டுரையை நீக்கியதை அறிந்தேன். உங்களைப் போன்றோரின் துணையுடன் செம்மையாக எழுத முயற்சிப்பேன். அவருக்கும் உங்களுக்கும் நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:51, 2 சூலை 2015 (UTC) 👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 15:54, 2 சூலை 2015 (UTC)

மதனாகரன், உங்கள் வேகத்திற்கும் சுறுசுறுப்புக்கும் பாராட்டுகள். கட்டுரையில் நீக்கல் வார்ப்புரு இட்டபின், பேச்சுப் பக்கத்திலும் செய்தியிட்டுவிட்டு கட்டுரையைப் பார்த்தால் காணோம், நீக்கப்பட்டுவிட்டது. என்னவொரு வேகம். நன்றி மதன்.--Booradleyp1 (பேச்சு) 16:03, 2 சூலை 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:22, 7 சூலை 2015 (UTC)

இல்லத்தில் இருந்தபடி[தொகு]

வணக்கம். முன்னரே எனது இசைவினைத் தெரிவித்துவிட்டேன். இல்லத்தில் இருந்தபடியே முடிந்தவரை அதிக எண்ணிக்கையில் பதிவினைப் பதிய முயற்சி மேற்கொள்வேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:12, 12 சூலை 2015 (UTC)

தேதி குறியீடு[தொகு]

வணக்கம். நாள்-மாதம்-ஆண்டு என்ற வரிசையில் குறிப்படுவது வழமைதான். ஆனாலும் சில இடங்களில் மாதம்-தேதி-ஆண்டு என்ற முறைமையும் பயன்படுத்தப்படுகிறது. அதானால் 6.7.2015 என்பதற்குப் பதில் ஜூலை 6, 2015 எனக் குறிப்பிட்டால் குழப்பம் நேர வழியில்லை என்பதால் மாதத்தை எழுத்து மூலம் குறிப்பதைப் பரிந்துரைக்கிறேன் (இது எனது தனிப்பட்டக் கருத்தே. விக்கியின் கொள்கை என்ன என்பது தெரியவில்லை). உங்கள் பேச்சுப் பக்கம் நீண்டுவிட்டதாகத் தோன்றினால் பரணேற்றி, தொகுப்புப் பெட்டிக்குள் சேமிக்கலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:42, 16 சூலை 2015 (UTC)

வணக்கம், Booradleyp1. தங்கள் கருத்தை ஏற்கிறேன். இனி பதியும் பதிவுகளில் தாங்கள் சொன்ன உத்தியைக் கடைபிடிப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:27, 16 சூலை 2015 (UTC)

படிம அளவு[தொகு]

வணக்கம், நீங்கள் பதிவேற்றும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் (எ.கா: நூல் அட்டை) குறைந்த அளவினைக் கொண்டிருக்க வேண்டும். நூல் அட்டைகள் 250 × 400 அளவு உள்ளதாக இருக்க வேண்டுமென்ற பரிந்துரை உள்ளது (பார்க்க: en:Wikipedia:Non-free content). ஆனால், நீங்கள் பதிவேற்றும் நியாயப் பயன்பாட்டுப் படிமங்கள் அதிக அளவுள்ளதாகக் காணப்படுகிறது. எ.கா: இது 1,500 × 2,260 அளவினைக் கொண்டுள்ளது. இது நியாயப் பயன்பாடாகாது. எனவே இவ்வாறான படிமங்களின் அளவைக் குறைத்து மீள் பதிவேற்றுங்கள். முன்னைய படிமங்களை நீக்கி விடுகிறேன். நன்றி. --AntanO 17:22, 24 செப்டம்பர் 2015 (UTC)

படிம அளவைக் குறைக்கும் முறை வேண்டல்[தொகு]

வணக்கம், AntanO. முந்தைய கடிதத்தைப் புகுபதிகை செய்யாமல் உள்ளே வந்து எழுதிவிட்டேன். மறுபடியும் அக்கடிதத்தை அனுப்புகிறேன். படிமங்களின் அளவைக் குறைக்கும் முறை குறித்துத் தெரிவிக்கவேண்டுகிறேன். நீக்குவதற்குப் பதிலாக ஒவ்வொன்றாக படிமங்களின் அளவைக் குறைப்பதே நன்று என நினைக்கிறேன். அவ்வாறான உத்தியும், நெறியும் அறியாததால் இதுவரை அவ்வாறு செய்துவிட்டேன். நீக்குவது பற்றிக் கருதிப் பார்க்கவேண்டுகிறேன். தங்களது மறுமொழியினைத் தொடர்ந்து இவ்வகையில் 250 × 400 அளவிலான வகையில் புகைப்படம் அமையும் வகையில் பார்த்துக்கொள்வேன். தங்களது கருத்துரைகள் பதிவுகளை மேம்படுத்த மிகவும் உதவியாக உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:26, 25 செப்டம்பர் 2015 (UTC)

உங்கள் கணினியில் உள்ள மென்பொருள் கொண்டு செய்வது இலகு. ஏதும் வரைகலை, வடிவமைப்பு மென் பொருள் உள்ளதா? கட்டாயம் விண்டோஸ் கணினியில் பெயின்ட் மென்பொருள் இருக்கும். அப்படியாயின் இது உதவும். அல்லது இணையம் மூலம் செய்யதாயின் picresize.com, resizeimage.net ஆகியன உதவும். இணையம் மூலம் செய்வதால் வேலை இரட்டிப்பாகிவிடும். அட்டைகளை CanoScan LiDE 110 படிம வருடி சேமிப்பதால், அதனுடன் உள்ள மென்பொருள் மூலமும் இதனைச் செய்யலாம். --AntanO 04:13, 25 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம், AntanO. தங்களின் கருத்து உதவியாக உள்ளது. தாங்கள் கூறியபடி முயன்று வருகிறேன். இவ்வாறான இனி இந்த அளவிலேயே புகைப்படக்ளைப் பதிவிறக்கம் செய்வேன். ஐயமிருப்பின் தொடர்பு கொள்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:11, 29 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம், AntanO. இன்று புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மீள் (நூல்) என்ற தலைப்பிலான கட்டுரையில் தாங்கள் கூறிய உத்தியின்படி நூலட்டையைப் பதிவிறக்கம் செய்துள்ளேன். இது சரியா என்று தெரிவிக்க வேண்டுகிறேன். சரியெனில் இனி இவ்வாறே தொடர்வேன். உத்தியைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாக இருந்தது. எனவே பதிவில் தாமதம் ஏற்பட்டது. பொறுத்துக்கொள்க. தங்களின் கருத்து நான் தொடர்ந்து எழுத உதவியாக இருக்கும். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:24, 1 அக்டோபர் 2015 (UTC)
வணக்கம், சரியாகவே செய்துள்ளீர்கள். தொடர்ந்து அவ்வாறே செய்யுங்கள். --AntanO 16:56, 1 அக்டோபர் 2015 (UTC)

நூல்கள் குறித்த கட்டுரைகள்[தொகு]

வணக்கம், நூல்கள் குறித்த கட்டுரைகள் பற்றி ஏற்கனவே உங்களுடன் உரையாடியுள்ளோம். குறிப்பாக, குறிப்பிடத்தக்க நூல்கள் குறித்தான கோபியின் பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக, விக்கிப்பீடியாவில் எவ்வகையான நூல்களைப் பற்றி எழுதலாம் என்பதற்கான சில வரைமுறைகள் ஆங்கில விக்கியில் எழுதப்பட்டுள்ளன. அதன் சுருக்கத்தை விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) என்ற கொள்கை விளக்கப் பக்கத்தில் சேர்த்திருக்கிறேன். அதனைக் கவனத்தில் எடுக்க வேண்டுகிறேன். எடுத்துக்காட்டாக, நீங்கள் அண்மையில் எழுதிய திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் (நூல்) என்ற கட்டுரை என்னைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்கதாகக் கொள்ள முடியவில்லை. அக்கட்டுரைக்கு வார்ப்புரு இட்டுள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 00:50, 4 அக்டோபர் 2015 (UTC)

வணக்கம் Kanags, விக்கியில் இக்கோயில் தொடர்பான நூல்கள் பற்றிய பதிவு இல்லாத நிலையில் கோயிலின் வரலாற்றைப் பற்றி மற்றவர்கள் அறியவேண்டும் என்ற நோக்கில் இக் கட்டுரையை எழுதினேன். காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள, தேவாரப் பாடல் பெற்ற 30ஆவது தலம் என்ற நிலையில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் எனப்படுகின்ற இக்கோயிலைப் பற்றி கூடுதல் விவரங்கள் அறிய வாய்ப்பாக இருக்கும் என எண்ணிச் சேர்த்தேன். இதே ஆசிரியர் 2004இல் எழுதிய இக்கோயிலினைப் பற்றிய நூலிலிருந்து சில விவரங்களை இக்கோயில் பற்றிய கட்டுரையில் மேற்கோளாகத் தந்துள்ளேன். இச்சூழலில் தாங்கள் கூறும் விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) தெர்டர்பான கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதோடு ஆதரிக்கிறேன். தங்களுடனான உரையாடல் மூலமாக சில தெளிவுகளைப் பெறுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:23, 5 அக்டோபர் 2015 (UTC)
புரிதலுக்கு நன்றி. அந்த நூலைப் பற்றிய குறிப்பை கோயில் கட்டுரையிலும் நீங்கள் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 09:58, 5 அக்டோபர் 2015 (UTC)
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தலைப்பில் உசாத்துணையாக திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் (நூல்) பற்றிய விவரங்களான நூலின் தலைப்பு, ஆசிரியர், பதிப்பகம், ஆண்டு என்ற நிலையில் சேர்க்கலாமா? அல்லது அந்நூலில் சில செய்திகளை எடுத்து மேற்கோளாகத் தந்து திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்என்ற தலைப்பிலான கட்டுரையை மேம்படுத்தலாமா? --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:41, 5 அக்டோபர் 2015 (UTC)

வணக்கம், Kanags. நூல் பற்றிய ஒரு பத்தியை திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கட்டுரையில் நூலட்டையுடன் சேர்த்துள்ளேன். ஏதேனும் மாற்றம் செய்வதாயின் செய்யவேண்டுகிறேன். நன்றி.

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

வணக்கம் பா. ஜம்புலிங்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பா. ஜம்புலிங்கம் என்ற பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் என்ற பக்கத்திலுள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவலையோ ஒளிப்படத்தையோ பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும் காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 15:28, 16 அக்டோபர் 2015 (UTC)

வணக்கம், மதனாகரன் என்னைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் வரவுள்ளதறிந்து மகிழ்ச்சி. நன்றி. அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் நிகழ்வில் விக்கிபீடியாவில் நான் தொடர்ந்து எழுதிவருவதற்காக ஒரு விருது தந்துள்ளார்கள். அதைப் பற்றிய பதிவினை ஓரிரு நாள்களில் இடவுள்ளேன். விக்கியில் எழுதவுள்ள சில கட்டுரைகளுக்காக இரு நாள்கள் களப்பணி செல்கிறேன். சென்றுவந்து உடன் அனுப்புவேன். பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:46, 17 அக்டோபர் 2015 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:24, 17 அக்டோபர் 2015 (UTC)
வணக்கம், மதனாகரன். என்னைப் பற்றிய அறிமுகத்தை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பா. ஜம்புலிங்கம் பக்கத்தில் தந்துள்ளேன். விக்கியில் எழுதவுள்ள சில கட்டுரைகளுக்காக களப்பணி சென்றுவந்து இன்று காலை இவற்றை அனுப்பியுள்ளேன். வேறு ஏதேனும் விவரம் தேவைப்படின் தெரிவிக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:56, 20 அக்டோபர் 2015 (UTC)
விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உங்கள் அறிமுகத்தைச் சேர்த்துள்ளேன். நவம்பர் முதல் முதற்பக்கத்தில் வரும். நன்றி. --இரவி (பேச்சு) 08:14, 20 அக்டோபர் 2015 (UTC)
வணக்கம், இரவி. செய்தியறிந்தேன். எனது எழுத்துப்பணிக்கு ஊக்கம் தரும் வகையில் முதற்பக்கத்தில் என்னைப் பற்றிய அறிமுகம் வெளிவரக் காரணமாகவுள்ள தங்களுக்கும், பிற விக்கிபீடிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:25, 20 அக்டோபர் 2015 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:17, 20 அக்டோபர் 2015 (UTC)

தங்களைப் பற்றிய அறிமுகம் அடுத்த இரு வாரங்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியா முகப்பில் இடம் பெறும். விடா முயற்சி, கள உழைப்பு கொண்ட உங்கள் பங்களிப்பு முன்மாதிரியானது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 13:59, 1 நவம்பர் 2015 (UTC)

வணக்கம், இரவி, என்னைப்பற்றிய அறிமுகம் இடம்பெறுவதறிந்து மகிழ்ச்சி. எனக்கு ஊக்கம் தந்து, மென்மேலும் எழுத வைத்த தங்களைப் போன்ற சக விக்கிபீடியர்களுக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருடைய ஆதரவுடனும் தொடர்ந்து பங்களிப்பு செய்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:05, 1 நவம்பர் 2015 (UTC)

வாழ்த்துகள்![தொகு]

முதற் பக்கத்தில் தங்களின் அறிமுகம் கண்டு பெரிதும் மகிழ்கின்றேன். கல்வித்துறையில் மிகுந்த அனுபவமும், ஆய்வுத்துறையில் நுண்ணறிவும் கொண்டிருந்தாலும்., பிற பயனர்களின் பரிந்துரைகளை நேர்முறையாக எடுத்துக்கொண்டு விக்கி நடைமுறைக்கு ஏற்ப செயலாற்றும் தங்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்! --;;::மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 1 நவம்பர் 2015 (UTC)

வணக்கம், மா. செல்வசிவகுருநாதன். தங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களும் ஊக்கமுமே என்னை மென்மேலும் எழுத வைக்கின்றன. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:02, 2 நவம்பர் 2015 (UTC)
உங்களது முதற்பக்க அறிமுகம், உங்களைப் போன்ற களப்பணியாளர்களைத் தமிழ் விக்கிக்கு கண்டிப்பாக ஈர்க்கும். உங்களது பங்களிப்புகள் சிறப்பாகத் தொடர வாழ்த்துகளுடன்--Booradleyp1 (பேச்சு) 15:03, 2 நவம்பர் 2015 (UTC)

வணக்கம், Booradleyp1. நேற்றுகூட கும்பகோணம் சோமேஸ்வரர் கோயில் குடமுழுக்கில் கலந்துகொண்டு வந்துபின் புகைப்படங்களை நேற்றே பதிவேற்றம் செய்தேன். நேரத்திற்கு ஏற்றபடி முடிந்தவரை களத்தில் சென்று பார்த்து, பதிவிடுவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளேன். நேரில் பார்க்கும்போது பல கூடுதல் செய்திகள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 3 நவம்பர் 2015 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துகள்! --AntanO 15:12, 2 நவம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள் நண்பரே!--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 19:10, 2 நவம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 20:03, 2 நவம்பர் 2015 (UTC)

வணக்கம்,Antan, சக்திகுமார் லெட்சுமணன்,Kanags. உங்களைப் போன்ற நண்பர்களால்தான் இது சாத்தியமாயிற்று. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 3 நவம்பர் 2015 (UTC)

கட்டுரைகளை ஒன்றிணைத்தல்[தொகு]

கட்டுரைகளை ஒன்றிணைக்க இந்த முறையைப் பயன்படுத்துங்கள். எ.கா: பொன்செய் நற்றுணையப்பர் ஆலயம் --AntanO 09:49, 19 திசம்பர் 2015 (UTC)

விக்கிமூலத்திற்கு வருக![தொகு]

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்களின் எண்ணங்களை எதிர்நோக்குகிறேன்.--உழவன் (உரை) 04:18, 17 சனவரி 2016 (UTC)

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்[தொகு]


நன்றி[தொகு]

தகவலுக்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:09, 20 சனவரி 2016 (UTC)

படிமம்[தொகு]

கட்டுரைகளில் அளவுக்கதிகமாக படங்களை இணைக்க வேண்டாம். அவை கட்டுரையில் இருந்து நீக்கப்படலாம். பார்க்க: en:Wikipedia:Image use policy பொதுவகத்திற்கு இணைப்புக் கொடுத்தால் போதுமானது. எ.கா: டெசட் ஈகிள் கட்டுரைக்கு படங்களை இணைக்காமல், பொதுவகத்திற்கு இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

படிமம்:Mahamaham 2016 Logo.jpg இப்படிமத்தை Attribution 3.0 இன் கீழ் பதிவேற்றியுள்ளீர்கள். வேறு ஒருவருடைய வேலையை அனுமதியின்றி எவ்வாறு CC BY 3.0 இன் கீழ் பதிவேற்ற முடியும்? சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின் ஒருவர் தனக்கு என உருவாக்கிய ஒன்றை அனுமதியின்றி யாவரும் பயன்படுத்தலாம் என்கிறது உங்களுடைய பதிவேற்றம். இவ்வாறு செய்வது காப்புரிமை மீறலாகும். இது மாற்றப்படாவிட்டால், இப்படிமம் நீக்கப்படும். --AntanO 14:42, 27 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம், AntanO. கட்டுரையின் முக்கியத்துவம் கருதி முடிந்தவரை படங்களின் எண்ணிக்கையைக் குறைத்துத் தந்துள்ளேன். தாங்கள் கூறிய கருத்தை ஏற்கிறேன். (அதிகபட்சம்) எத்தனை படங்களை இணைக்கலாம் என்று தெரிவித்தால் நான் முக்கியத்துவத்தின் தன்மைக்கு ஏற்றாற்போல குறைக்க முயற்சிப்பேன். தங்களது கருத்துகள் எனது கட்டுரைகளை செழுமைப்படுத்த உதவியாக உள்ளன.அதற்கு என் நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:29, 28 பெப்ரவரி 2016 (UTC)

மகாமகம் 2016 லோகோ[தொகு]

வணக்கம், AntanO. மகாமகம் 2016க்கான லோகோ எனப்படும் அடையாளச்சின்னத்தை புகைப்படப்பதிப்புரிமையில் எந்த வகையில் சேர்ப்பது என எனக்குத் தெரியாததால் அட்ரீபியூசன் 3 என்ற நிலையில் சேர்த்துள்ளேன், இது சரியா என்று எனக்குத் தெரியவில்லை, இதனை சரிசெய்துதர வேண்டுகிறேன் என்று கேட்டு கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் இந்த லோகோவைப் பதிவு செய்த நாளில் வினா எழுப்பியிருந்தேன். இக்கட்டுரையில் இது இருக்கவேண்டும் என்ற நிலையில் இதனைச் சேர்த்தேன் என்றும் கூறியிருந்தேன். காப்புரிமை மீறலின்றி இந்த லோகோ கட்டுரையில் அமைய ஆவன செய்ய வேண்டுகிறேன். 12 வருடத்திற்கொரு முறை நிகழும் இந்நிகழ்வுக்கு இந்த முறை இந்த லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:20, 28 பெப்ரவரி 2016 (UTC)

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது..--இரவி (பேச்சு) 13:05, 27 மார்ச் 2016 (UTC)

அழைப்புக்கு நன்றி, இரவி. அலுவலகத்தில் ஏப்ரல்,மே தேர்வுப்பணிகள் காரணமாக கல்ந்துகொள்ள இயலா நிலையில் உள்ளேன். பயிற்சிப்பட்டறை சிறப்பாக அமைய வாழ்த்துகள்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:59, 28 மார்ச் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

விக்கிக்கோப்பையில் பங்குபற்றியமைக்கு மிக்க நன்றிகள். புள்ளிகளை கணக்கிடுவதற்காக நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை பயனர் நிலவரம் என்பதில் சேர்த்துவிட வேண்டுகிறோம் ஏற்கனவே சேர்ந்திருந்தால் இவ்வறிவிப்பை கவனிக்கத்தேவையில்லை.-- மாதவன்  ( பேச்சு ) 07:16, 3 ஏப்ரல் 2016 (UTC)

வணக்கம். உருவாக்கிய கட்டுரைகள் மற்றும் மேம்படுத்திய கட்டுரைகளைப் பற்றிய விவரங்களை எப்படி எடுப்பது என்ற முறை எனக்குத் தெரியவில்லை. தவிரவும் பணிச்சுமை காரணமாக இப்போது இப்பணியில் முயற்சி செய்ய இயலா நிலையில் உள்ளேன். விக்கிக்கோப்பையில் பங்குகொண்டு இயன்றவரை எழுதியதை நிறைவாகக் கருதுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 5 ஏப்ரல் 2016 (UTC)

குறிப்பிடத்தக்கமை, நூல்கள்[தொகு]

வணக்கம். நூல்கள் குறிப்பிடத்தக்கமையைக் கொண்டிராவிட்டால் நீக்கப்படும். பார்க்கவும் விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்) --AntanO 02:28, 23 சூன் 2016 (UTC)

வணக்கம, Antan. செய்தியறிந்தேன். தாங்கள் கூறியபடி பார்ப்பேன். தங்களது எழுத்து என் பதிவுகளை மேம்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது. என்னைப் போன்றோருக்குத் தாங்கள் தருகின்ற ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:31, 23 சூன் 2016 (UTC)

வணக்கம் நண்பரே. தாங்கள் நூல்களைப் பற்றி எழுதும் ஆர்வம் கொண்டிருப்பதால், சில விவரங்களைத் தருகிறேன். தமிழ் விக்கியில் நூல்கள் பற்றிய கட்டுரைகள் மிகுந்த கவனத்தோடு எதிர்கொள்கிறது. அதனால் பல நூல்களைப் பற்றிய கட்டுரைகள் அழிக்கப்பட்டுள்ளன. அதனை இங்கு எழுதிய காலமும், உழைப்பும் வீணாகும். இதை தவிர்க்க நூல் பற்றிய கட்டுரைக்கு, அந்நூலைப் பற்றிய தகவல்களோடு, அந்நூல் குறித்து அச்சு ஊடகங்கள் குறிப்பிடுவதையும் சேகரித்து வையுங்கள். செய்திதாள், இலக்கிய இதழ்கள் போன்றவற்றில் குறிப்பிடாத நூல் என்றால், அந்த நூலின் முக்கியத்துவம் என்ன என கவனியுங்கள். பிறகு அந்த நூலைப் பற்றி எழுதுங்கள். உங்கள் உழைப்பும், காலமும் ஒரு நீக்கப்படக் கூடிய கட்டுரைக்கு செலவிடக் கூடியதல்ல.. நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:16, 24 சூன் 2016 (UTC)

வணக்கம், சகோதரன் ஜெகதீஸ்வரன். நூல்களைப் பற்றிய பதிவுகள் தொடர்பான தங்களின் கருத்தினை அறிந்தேன். இனி உரிய முறையில் செயல்படுவேன். தங்களின் கருத்திற்கு நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:48, 26 சூன் 2016 (UTC)

சில குறிப்புக்கள்[தொகு]

கட்டுரைகளை இணைக்க பேச்சுப்பக்கத்தில் கருத்திடுவதோடு, கட்டுரையில் {{Merge}} போன்ற வார்ப்புருக்களையும் சேர்த்தால் நிருவாகிகளினால் கவனிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேச்சுப்பக்கத்தில் மட்டும் கருத்திடுவதால் கவனிக்கமல் விடப்படலாம். மேலதிக விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல்#பயனுள்ள வார்ப்புரு

வே. உமாமகேசுவரன் கட்டுரையில் இணைத்துள்ள படிமம் நியாயப்பயன்பாட்டு நியாயப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. பார்க்க en:Wikipedia:Use_rationale_examples#Book_cover_in_the_article_about_that_book. எனவே இவ்வாறான பதிவேற்றங்களைத் தவிர்க்கலாம். நன்றி. --AntanO 02:10, 14 சூலை 2016 (UTC)

வணக்கம், AntanO இனி இவ்வாறாக கட்டுரைகளை இணைக்க குறிப்புவைக்கும்போது {{Merge}} போன்ற வார்ப்புருக்களை இணைப்பேன். (வார்ப்புரு அமைக்கும்போது தவறு ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தில் வார்ப்புரு இடுவதைத் தவிர்த்துவந்தேன்). உமாமகேசுவரன் கட்டுரையில் அவரைப் பற்றிய நூல் என்ற நிலையில் இணைத்தேன். தாங்கள் கூறியபடி இப்படிமம் நியாயப்பயன்பாட்டு நியாயப்பாட்டை கொண்டிருக்கவில்லையாயின் மேற்கொண்டு ஆவன செய்யவேண்டுகிறேன். இவ்வாறான பதிவேற்றங்களை இனி முழுமையாகத் தவிர்ப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:34, 14 சூலை 2016 (UTC)

இந்த மாற்றத்தின்படி வார்ப்புருவை இணைக்கலாம். எ.கா: {{mergefrom|உமாமகேஸ்வரனார்}} --AntanO 08:57, 14 சூலை 2016 (UTC)

இனி அவ்வாறே செய்வேன், நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:27, 15 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்[தொகு]

2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இந்தியா பாலாஜீ, இலங்கை மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)

வணக்கம், வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:06, 21 சூலை 2016 (UTC)