பயனர் பேச்சு:பாலச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், பாலச்சந்திரன்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Umapathy 18:24, 5 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

பாலச்சந்திரன், விக்கிப்பீடியாவுக்கு நானும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அண்ணை றைற் கே. எஸ். பாலச்சந்திரனா?--Kanags 07:15, 6 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

ஆமாம் அதே கேள்விதான் எனக்கும்.. ??--ஜெ.மயூரேசன் 06:47, 21 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

Kanags, மயூரேசன் நன்றி, நான் உங்களுக்கு தெரிந்த அந்த ஆள்தான் - பாலச்சந்திரன் 21, பெப்ரவரி 2007

பாலச்சந்திரன் அவர்களே உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி!--ஜெ.மயூரேசன் 06:26, 22 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

உங்கள் வருகை கண்டு மகிழ்கிறேன். உங்களை போன்று துறை அனுபவம் உள்ளவர்கள் பல முக்கியத்துவம் வாய்ந்த நேரடி வரலாற்று அனுபவங்களை விக்கிப்பீடியாவில் பதிவு செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி--Ravidreams 09:05, 22 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். கலைத்துறையிலான உங்கள் ஈடுபாட்டு அனுபவம் தமிழ் விக்கிக்கு மேலும் வளங்கூட்டும் என எதிர்பார்க்கிறேன். Mayooranathan 16:24, 22 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

நல்வரவு! அனுபவம் மிக்க ஒரு கலைஞர் த.வி.விற்கு பங்களிப்தைக் கண்டு மகிழ்ச்சி. உங்கள் நிகழ்ச்சிகளின் படக்கோப்புக்கள் சில youtube கிடைக்கின்றன. உங்களின் நகைச்சுவையை மிகவும் ரசித்து பார்த்தேன். உங்களைப் பலர் அறிந்திருந்தாலும், சில குறிப்புகளை பயனர் பக்கத்தில் சேர்த்தால் நன்று. --Natkeeran 16:55, 22 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள். கோபி 18:35, 22 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]


பகுப்புகள்[தொகு]

பாலச்சந்திரன், பகுப்புப் பக்கத்தில் ஆட்களின் பெயரை நாம் இடத்தேவை இல்லை. எஸ்.கே.பரராஜசிங்கம் என்ற கட்டுரையை உருவாக்கி அதன் இறுதியில் [[பகுப்பு:வானொலி ஒலிபரப்பாளர்கள்]] என்று இணைத்தீர்களானால் தானாக பகுப்புப் பக்கத்தில் காட்டப்படும்--Ravidreams 14:27, 18 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

வானொலி நடிகர்கள்[தொகு]

Kanags, நீங்கள் சொல்வது சரி. வானொலி நடிகர் என்பதை விட வானொலி நாடகத்துறை என்பதுதான் பொருந்தும். மாற்றலாம் - பயனர்:பாலச்சந்திரன் 22 பெப்ரவரி 2007

வானொலி நடிகர்கள் என்ற கட்டுரைத் தலைப்பை இலங்கை வானொலி நாடகத்துறை என்று மாற்றியுள்ளேன். பல பிரபலமான வானொலி ஒலிபரப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அப்போதைய இலங்கை வானொலி ஒரு மறக்க முடியாத அனுபவம். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--Kanags 12:07, 26 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

படிமங்கள்[தொகு]

நீங்கள் பதிவேற்றும் படிமங்களுக்கு மூலமும், உரிமமும் தரவேண்டும். உங்களுடைய படங்களாக இருந்தால் {{PD-self}} என்ற வார்ப்புருவை சுருக்கம் பகுதியில் சேர்த்தால் சரி. நன்றி. --Natkeeran 17:05, 26 பெப்ரவரி 2007 (UTC)[பதில் அளி]

ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை[தொகு]

பாலச்சந்திரன் அவர்களுக்கு, நீங்கள் சில ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் என்ற முறையில் அத்துறையைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்கு உங்களைவிட தகுதியானவர் வேறு ஒருவர் இருக்க முடியாது. ஈழத்துத் தமிழ்த் திரைப்படத்துறை என்ற பெயரில் ஒரு கட்டுரை விக்கியில் எழுதமுடியுமா? ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்ற பக்கத்தையும் விரிவாக்கி தனித்தனியே படங்களுக்கும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். அப்படங்களின் சில தகவல்களை (நடிகர்கள், தயாரிப்பு, ஆண்டு, பாடல்கள், இயற்றியோர், கதைச்சுருக்கம் போன்ற சில விபரங்கள்) அக்கட்டுரைகளில் தரலாம். குறுங்கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் மேம்படுத்தலாம். இந்தியத் தமிழ்த் திரைப்படக் கட்டுரை ஒன்றின் மாதிரியை பின்பற்றலாம் (அவசியமில்லை). [[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]] என்ற பகுப்பில் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் தொகுப்பு உள்ளது. எ+கா: சகுந்தலை, அசோக்குமார். (இவை நான் எழுதியவை:).நன்றி.--Kanags 10:07, 5 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

ஈழத்துத் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை உடனடியாகவே ஆரம்பித்தமைக்கு நன்றிகள். நல்ல ஆக்கம். நாடு போற்ற வாழ்க கட்டுரையில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளேன். படிமம் ஒன்றாவது இணைத்தால் நன்றாக இருக்கும். போஸ்டர் அல்லது திரைப்படக் காட்சி உங்களிடம் இருந்தால் ஏற்றினால் நல்லது. நன்றி.--Kanags 07:41, 6 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

Kanags, படிமம் ஏற்றுவதுதான் எனக்கு சற்று சிரமமாக படுகிறது. தமிழில் வரும் வார்த்தைபிரயோகங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.--கே.எஸ்.பாலச்சந்திரன் 01:44, 7 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

Kanags, நாடு போற்ற வாழ்க புகைப்படம் ஏற்றியிருக்கிறேன். பாருங்கள் --கே.எஸ்.பாலச்சந்திரன் 01:54, 7 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

வருக![தொகு]

பாலச்சந்திரன், உங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சிறு வயது முதலே எங்களுக்கெல்லாம் நன்கு அறிமுகமானவர் நீங்கள். தொலைக்காட்சியில் அடிக்கடி பார்க்கக்கிடைத்த உங்கள் முகம் மனதில் அப்படியே பதிந்துபோய் இருக்கிறது. வானொலி மாமா நிகழ்ச்சி நீங்களா செய்தீர்கள்? --மு.மயூரன் 20:16, 7 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

நன்றி, மயூரன். தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்தது சரி. ரூபவாஹினி தொலைக்காட்சியில் விஞ்ஞான கல்வி நிகழ்ச்சிகளில் மாமாவாக வந்திருக்கிறேன். நீங்களும் எனது மருமக்களில் ஒருவரா? நான் மறந்துபோனேன். --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:06, 7 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

இல்லை இல்லை. அபோது நான் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். திருக்கோணமலையில் இருந்தேன். அந்த விஞ்ஞான நிகழ்ச்சிகள் நினைவிருக்கிற்து. தொலைபேசி தொடர்பான நிகழ்ச்சி இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கொழும்பு வந்திருந்தபோது இலங்கைவங்கியில் நேரில் கண்டதாய் ஞாபகம். --மு.மயூரன் 21:11, 7 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

உண்மைதான் மயூரன். அந்த நிகழ்ச்சியில் "தொல்லை தரும் தொலைபேசி" என்பேன். இங்கு இப்போதுதான் அது உண்மை என்று புரிகிறது. சரிதானே --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:20, 7 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

நன்றி[தொகு]

கனடியத் தமிழ்த் திரைப்படங்கள் இது வரை நான் கேள்விப்பட்டிராதவை. அவற்றை குறித்து நீங்களே எழுதுவது விக்கிப்பீடியா கட்டுரைகளின் மிகுந்த நம்பகத் தன்மையை கொண்டு வரும். நீங்கள் இங்கு வந்து கட்டுரை எழுதுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறேன். ஈழத் தமிழ், நாடக கட்டுரைகளை தவிர்த்து உலக அளவில் இத்துறையில் உங்கள் ஈடுப்பாட்டுக்குத் தொடர்புடைய கட்டுரைகளையும் எழுதித் தர வேண்டுகிறேன். நன்றி--Ravidreams 20:03, 10 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

நன்றி, இத்துறைகளில் பதிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.--கே.எஸ்.பாலச்சந்திரன் 21:18, 10 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

Kanags, இயக்குனர் ஞான ராஜ்சேகரன் பற்றிய குறுங்கட்டுரையை சற்று விரிவாக்கியிருக்கிறேன். அவரது படிமத்தையும் ஏற்றி விட்டால் நன்று. --கே.எஸ்.பாலச்சந்திரன் 21:38, 15 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

முதற்பக்கக் கட்டுரை[தொகு]

பாலச்சந்திரன், முதற்பக்கக் கட்டுரை பாருங்கள் :) உங்கள் கலைப்பணி தொடர வாழ்த்துகள்--ரவி 14:44, 17 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

நன்றி ரவி. என் கலைப்பணியின் ஒரு அங்கமாக நான் விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்வதையும் கருதுகின்றேன். அன்புடன் --கே.எஸ்.பாலச்சந்திரன் 02:59, 18 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

உங்களைப் போன்றவர்கள் விக்கிக்குப் பங்களிப்பதில் எமக்குப் பெரு மகிழ்ச்சி. நன்றி--ரவி 09:08, 18 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

பாலச்சந்திரன், உங்கள் கலைப்பணி பல துறைகளிலும் தொடர வாழ்த்துக்கள்.--Kanags 09:22, 18 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

நன்றி ரவி,Kanags- அன்புடன் --கே.எஸ்.பாலச்சந்திரன் 13:17, 18 மார்ச் 2007 (UTC)[பதில் அளி]

FARC[தொகு]

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)[பதில் அளி]

வருக[தொகு]

பாலச்சந்திரன், நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் விக்கிப்பீடியாவுக்கு வருகை தந்திருக்கும் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.--Kanags 12:19, 24 ஜூன் 2007 (UTC)

இருமாத இடைவெளியின் பின்னர் நீங்கள் மீண்டும் மும்முரமாகப் பங்களிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து சளைக்காமல் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 17:10, 10 செப்டெம்பர் 2007 (UTC)

காப்புரிமை[தொகு]

உங்களது திரைப்படங்களின் விளம்பரங்களையோ அல்லது படக் காட்சிகளையோ நீங்கள் விக்கிபீடியாவில் தரும் போது பொது உரிமத்தில் தருவதாக வார்புரு இட்டிருந்தீர்கள். இவற்றை நான் நியாயமான பயன்பாட்டுப் படிமங்களாக மாற்றியுள்ளேன். உங்கள் படங்கள் (விளம்பரம், படக்காட்சி, .....) காப்புரிமைச் செய்யப்பட்டவைத் தானே. அவற்றை இங்கே பொது உரிமத்தில் வழங்கினால் உங்கள் காப்புரிமைச் சார் பயன்கள் உங்களுக்கு இல்லாமல் போகலாம். பொது உரிமத்தில் தருவதாயின் காப்புரிமைகளை இரத்துச் செய்துவிட்டு இங்கே தரலாம்.;) --டெரன்ஃச் \பேச்சு 04:28, 26 ஜனவரி 2008 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம்[தொகு]

வணக்கம் பாலச்சந்திரன், விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:55, 5 அக்டோபர் 2009 (UTC)[பதில் அளி]

விக்கிப்பீடியர் அறிமுகம்[தொகு]

வணக்கம், முதற்பக்கத்தில் உள்ள விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் தங்கள் பங்களிப்புகளை முன்வைப்பதில் மகிழ்கிறோம். நன்றி--ரவி 05:40, 20 டிசம்பர் 2009 (UTC)

2010 செயற்திட்டம்[தொகு]

நாம் ஒவ்வொரு ஆண்டும், இறுதியில் அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 01:39, 30 டிசம்பர் 2009 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:58, 18 பெப்ரவரி 2010 (UTC)[பதில் அளி]

படங்கள்[தொகு]

நீங்கள் பதிவேற்றும் படங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதை பதிவேற்றும் போது குறிப்பிடுங்கள் . தகுந்த பதிப்புரிமம் tagகுளை அவற்றுடன் இணைக்க மூலமும், அனுமதி பற்றிய விவரங்களும் தேவை.--சோடாபாட்டில் 03:59, 12 அக்டோபர் 2010 (UTC)[பதில் அளி]

விக்கி மாரத்தான்[தொகு]

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)[பதில் அளி]

நவம்பர் 14 தானே..பங்குபற்றுகிறேன்.நன்றி--கே.எஸ்.பாலச்சந்திரன் 01:00, 29 அக்டோபர் 2010 (UTC)[பதில் அளி]

வணக்கம் அண்ணை, எனக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது. kstharan1 at hotmail dot com என்ற முகவரிக்கு ஒரு மடல் அனுப்புவீர்களா? நன்றி.--Kanags \உரையாடுக 23:54, 29 அக்டோபர் 2010 (UTC)[பதில் அளி]

தவறுதலாக "உனக்கு ஒரு நீதி" குறும்படம் பற்றிய கட்டுரையை இரண்டாவது தடவை ஏற்றி விட்டேன். தயவு செய்து இன்று ஏற்றிய கட்டுரையை நீக்கி விடுங்கள்--கே.எஸ்.பாலச்சந்திரன் 02:42, 16 நவம்பர் 2010 (UTC)[பதில் அளி]

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்[தொகு]

வணக்கம் பாலச்சந்திரன். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:20, 2 மே 2011 (UTC)[பதில் அளி]

வணக்கம்[தொகு]

வணக்கம் அண்ணை, உங்களை மீண்டும் இங்கு பார்ப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 00:45, 25 நவம்பர் 2012 (UTC)[பதில் அளி]

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:52, 26 நவம்பர் 2012 (UTC)[பதில் அளி]

வணக்கம்.. யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கிய பேரவை விருதுகள் என்பதை யாழ் இலக்கியவட்டம் - இலங்கை இலக்கிய பேரவை விருதுகள் - 2010 என்று மாற்றிவிடுங்கள். அப்படிசெய்தால் யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கிய பேரவை விருதுகள் என்ற பெரும் ப்ரிவின் கீழ் தனிதலியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் சேர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்--கே.எஸ்.பாலச்சந்திரன் (பேச்சு) 19:07, 22 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2010 இற்கு தலைப்புக்கு வழிமாற்றின்றி மாற்றியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:02, 22 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

நன்றி. வணக்கம். --கே.எஸ்.பாலச்சந்திரன் (பேச்சு) 23:22, 22 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு[தொகு]

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:48, 26 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

மு.செ.விவேகானந்தன் இரண்டு கட்டுரைகள்[தொகு]

தவறுதலாக இரண்டு கட்டுரைகள் பதியப்பட்டுள்ளன. இறுதியான எனது கட்டுரையை நீக்கி விடுங்கள். கோப்பை பயன்படுத்தலாம். --கே.எஸ்.பாலச்சந்திரன் (பேச்சு) 04:52, 28 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

இரு கட்டுரைகளையும் வரலாறுகளுடன் இணைத்திருக்கிறேன். நன்றி அண்ணா.--Kanags \உரையாடுக 05:35, 28 திசம்பர் 2012 (UTC)[பதில் அளி]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]



தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)[பதில் அளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதில் அளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.