பயனர் பேச்சு:நிரோஜன் சக்திவேல்/தொகுப்பு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1 2

பாராட்டுக்கள்[தொகு]

நிரோ, லக்ஸ்மி மிட்டால் கட்டுரை நன்று. பாராட்டுக்கள். --Sivakumar \பேச்சு 11:56, 14 அக்டோபர் 2006 (UTC)

நன்றி--சக்திவேல் நிரோஜன் 14:40, 14 அக்டோபர் 2006 (UTC)


நிர்வாகிகளுக்கான ஒரு வேண்டுகோள்[தொகு]

தமிழ்த் திரையிசைப் பாடல்கள் வரிகள் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியே பக்கங்கள் அமைப்பது நன்று என்று எனத் தோன்றுகின்றது.அவ்வாறு ஆங்கிலப் பாடல்களிற்காக ஆங்கில விக்கியில் பார்க்கின்றேன்.அவ்வாறு உருவாக்கினால் பயனர்களும் அதிகரிப்பர் என்று நினைக்கின்றேன்.இது எனது விருப்பம்.ஆனால் அதனைப் பற்றி நிர்வாகிகள் கலந்துரையாடி ஆட்சேபனையேதும் இருந்தால் தெரிவிக்கவும்.--சக்திவேல் நிரோஜன் 04:08, 23 அக்டோபர் 2006 (UTC)

ஆங்கில விக்கியில் இவ்வாறு உள்ள சில பக்கங்களுக்கான இணைப்புகளைத் தர முடியுமா? அங்கு எல்லா பாடல்களுக்கும் கட்டுரை தொடங்க அனுமதி உண்டா? இல்லா, குறிப்பிடத்தக்க பாடல்களை எவ்வாறு முடிவு செய்கிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் என் கருத்துக்களை தெரிவிக்க இயலும்--ரவி 07:59, 23 அக்டோபர் 2006 (UTC)

http://en.wikipedia.org/wiki/Category:Songs_by_artist ஆங்கில விக்கியில் பாடல்கள் பற்றிய மேலோட்டம் தான் உள்ளது ஆனாலும் தமிழ்த் திரையிசைப் பாடல்களோ மற்றும் அதனைப் பற்றி தெரிந்து கொள்ள வெளிநாடு வாழ் இளம் சமூகத்தினருக்கு அவசியமாக நான் கருதுகின்றேன் இது என்னுடைய அவா.ஆனாலும் அப்படி திரையிசைப் பாடல்களை த.வி போடலாமா இல்லை அவற்றினை வேறு பகுதிகளில் போடுவதா என்பது எனக்கு சந்தேகம்தான்.அவ்வாறு உருவாக்குவதனால் தவறுகளேதும் இருந்தால் அவ்வாறு உருவாக்க வேண்டாம்.--சக்திவேல் நிரோஜன் 15:23, 23 அக்டோபர் 2006 (UTC)

நிரோ, தமிழிசைப் பாடல்களை விக்கிபீடியாவில் இணைப்பது தவறானது. ஏனெனில் பாடல்கள் பதிப்புரிமையுடையுடையவை. பதிப்புரிமை அனுமதி கிடைத்தாலும் விக்கிமூலத்தில்தான் இணைக்கலாம். கலைக்களஞ்சியத்துக்குப் பொருந்தாது. ஆனால் பாடல்களைப் பற்றிய பக்கங்கள் உருவாக்குவது பிழையில்லை. நாம் உருவாக்க வேண்டிய முக்கியமான கட்டுரைகள் பல உள்ளன. மில்லியன் கணக்கில் பக்கங்கள் உள்ள ஆங்கில விக்கியில் பாடல்கள் பற்றி உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் தமிழில் செய்ய வேண்டியவை எராளம் உள்ளன. நன்றி. --கோபி 15:39, 23 அக்டோபர் 2006 (UTC)

உங்களால் திரைத்துறைக்கு அப்பாலும் நிறையப் பங்களிக்க முடிவதையிட்டு மகிழ்ச்சி. மேலும் பல நடிக நடிகைகளைப் பற்றி ஆங்கிலத்தில் இருக்குமளவு கூட தமிழில் இல்லை என்பதை உங்களது கவனத்துக் கொண்டு வர விரும்புகிறேன். பார்க்க http://en.wikipedia.org/wiki/Category:Tamil_actors கோபி 15:42, 23 அக்டோபர் 2006 (UTC)

நிரோ, நீங்கள் தந்த ஆங்கில விக்கி இணைப்பை பார்த்தேன். புகழ்பெற்ற உலகப் பாடகர்கள், அவர்களின் பாடல் தொகுப்புகள், புகழ்பெற்ற பாடல்கள் குறித்த கட்டுரைகளை தாராளமாக எழுதலாம் (எடுத்துக்காட்டு, celine dion, அவரின் my heart will go on பாடல் பற்றி எழுதலாம்). பதிப்புரிமை காரணங்களுக்காகவும், கலைக்களஞ்சிய நோக்கத்துக்காகவும் முழுப் பாடல் வரிகளை எழுதக் கூடாது என்பது நீங்கள் அறிந்தது தான். இளையராஜாவின் how to name it, nothing but wind போன்ற இசைத்தொகுப்புகள் குறித்து எழுதலாம். எனினும், குறிப்பிட்டுக் கட்டுரை அளவில் எழுதக்கூடிய தமிழ்த் திரையிசைப் பாடல்கள் எத்தனை உள்ளன என்று சொல்ல இயலவில்லை. அப்படி இருந்தால் நீங்கள் எழுதலாம். ஆனால், வெறும் பாடல் துவக்க வரி, பாடியவர்,இசையமைப்பாளர், கவிஞர் விவரம் தரும் கட்டுரைகளை நீங்கள் தவிர்க்கலாம். அது போன்ற பங்களிப்புகளை தமிழ் விக்கிபீடியாவுக்கு வெளியில் செய்து, தேவைப்படும்போது தமிழ் விக்கிபீடியாவில் இருந்து வெளி இணைப்பாகத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, http://tamilcinema.wikia.com தளத்தில் பங்களிக்கலாம். அவையும் கூகுள் தேடல் முடிவுகளில் அடையப்பெறும் வாய்ப்பு உண்டு. எனவே, உங்கள் நோக்கமான தமிழில் திரையிசைத் தகவல் தரும் நோக்கமும் வெற்றி பெறும்.

நாளுக்கு நாள், உங்கள் பங்களிப்புகளின் தரம் மேம்பட்டு வருகிறது. மகிழ்ச்சி. பிறகு, நிர்வாகிகளுக்கு எனத் தனி அழைப்பிட்டு கருத்துக்களை எழுத வேண்டும். விக்கிபீடியாவில் அனைவரும் சேர்ந்து தான் முடிவெடுக்கிறோம். அனைவரும் ஒரு காலத்தில் பயனராக இருந்து நிர்வாகி ஆனவர்களே..உங்கள் தொடர்ந்த தரமான பங்களிப்புகளின் மூலம் நீங்களும் நிர்வாகிப் பொறுப்பு ஏற்கத் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம். நன்றி--ரவி 17:58, 23 அக்டோபர் 2006 (UTC)


பயனர்களின் உதவி நாடப்படுகின்றது[தொகு]

இவ்வாருப்புருவை தமிழில் மொழி பெயர்க்க என்ன செய்வது.--சக்திவேல் நிரோஜன் 13:39, 2 நவம்பர் 2006 (UTC)

நிரோ, வார்ப்புருவைத் தமிழாக்க உதவமுடியும். இந்த வார்ப்புரு ஏற்கனவே தமிழில் உள்ளதா? இல்லாவிட்டால் புதிய வார்ப்புருவைத் தமிழில் (ஆங்கிலத்தில் இருந்து அப்படியே பிரதி பண்ணி) சேமித்துவிட்டுப் பின்னர் படிப்படியாக பிற பயனர்களின் உதவியுடன் மொழிபெயர்க்கலாம். CVG என்றால் என்ன:))--Kanags 21:07, 2 நவம்பர் 2006 (UTC)

அதாவது இந்த வார்ப்புரு நிகழ்பட ஆட்டங்களினைப் பற்றிய வார்ப்புரு--சக்திவேல் நிரோஜன் 21:15, 2 நவம்பர் 2006 (UTC)

நிரோ,

உங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ள வார்பருவுக்கான சிவப்பு இணைப்பை சொடுக்குங்கள்.

பிறகு, ஆங்கில விக்கியில் இதே பெயரில் உள்ள வார்ப்புரு பக்கத்துக்கு செல்லுங்கள். அங்கு சென்று தேடல் பெட்டியில் template:infobox CVG என்று இட்டு go பொத்தான் அழுத்துங்கள். அந்த வார்ப்புரு பக்கம் வரும். பிறகு அதன் தொகு இணைப்பை அழுத்தி அங்கு உள்ள முழு பக்கத்தையும் வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டியதைக் கொண்டு வந்து மேலே தமிழ் விக்கிபீடியாவில் நீங்கள் திறந்து வைத்திருக்கும் வெற்றுப் பக்கத்தில் ஒட்டவும். அந்த ஆங்கில விக்கிப் பக்கத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே மூடி விடுங்கள்.

தமிழ் விக்கி வார்ப்பு பக்கத்தில் ஒட்டியவுடன், அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவற்றை தமிழாக்கி பக்கத்தை சேமித்து விடுங்கள். பிற பயனர்கள் மேம்படுத்தி உதவுவர்..

இப்படி உங்களுக்கு விருப்பமான வார்ப்புருக்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம்.

இது தான் நான் உங்களுக்கு அனுப்பிய மடல் விவரம் நிரோ--Ravidreams 20:13, 9 நவம்பர் 2006 (UTC)

நன்றி--சக்திவேல் நிரோஜன் 20:30, 9 நவம்பர் 2006 (UTC)

சில திரைப்படங்கள் ...:-)[தொகு]

நேரடியாக எழுதுதல்[தொகு]

உங்களுக்கு நல்ல ரசனை இருக்கின்றது. நல்ல திரைப்படங்களைத் தெரிந்து எழுதுகின்றீர்கள்.

ஆங்கிலத்தில் active voice என்று சொல்வார்கள். Ex: ("the car hit the tree") rather than the passive ("the tree was hit by the car"). அதாவது நேரடிய ஒரு விடயத்தை சொல்வது நன்று என்று நினைக்கின்றேன். இந்த குறையை நானும் பல இடங்களில் செய்கின்றேன். ஒரு பரிந்துரைதான். --Natkeeran 00:52, 3 நவம்பர் 2006 (UTC)

நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்பதற்கு பதிலாக நடித்துள்ளார்கள் என்று எழுதானல் நன்றாக இருக்குமா? --Natkeeran 23:15, 3 நவம்பர் 2006 (UTC)

ஆம் உங்கள் விருப்பம்படியே இனிமேல் எழுதுகின்றேன் ஏன் நான் அவ்வாறு எழுதுகின்றேன் என்றால் நடிகர்கள் நடிப்பதற்கே ஆனாலும் பல விடயங்களில் இந்த இயக்குனர் இயக்கிய திரைப்படத்தில் நடிகர்கள் நடித்துள்ளனர் என்று குறிப்பிடுவது சரியாக நான் நினைக்கவில்லை அதனலேயே அவ்வாறு உருவாக்கினேன் மேலும் இனிமேல் தாங்கள் விரும்பியது போன்று மாற்றி எழுதுகின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 23:18, 3 நவம்பர் 2006 (UTC)

பழைவற்றை மாற்ற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நீங்கள் எழுதும் முறை சிறப்பாக தெரிந்தால், உங்கள் முறையை மாற்றாதீர்கள். --Natkeeran 23:46, 3 நவம்பர் 2006 (UTC)

கனடாவில் விபச்சாரம்[தொகு]

மீண்டும் தொந்தரவுக்கும் மன்னிக்கவும்.

கனடாவில் விபச்சாரம் என்றால் என்ன என்று சற்று விபரித்து விட்டு பின்னர் அந்த விடயத்தை சார்ந்த பிற அம்சங்களை ஆய்தால் நன்று. --Natkeeran 01:29, 4 நவம்பர் 2006 (UTC)

Hindi -> இந்தி[தொகு]

Hindi என்றால் தமிழில் இந்தி என்று எழுதுவது வழக்கம். இதை ரவி உறிதிப்படுத்தியிருந்தார். பார்க்க: பகுப்பு பேச்சு:ஹிந்தித் திரைப்படங்கள். எனினும் உங்களுக்கு ஆட்சோபனை என்றால், பழையபடியே மாற்றி விடுகின்றேன். இவற்றை நீங்களே முனைப்பு எடுத்து செய்கின்றீர்கள், எனவே உங்கள் கருத்து முக்கியம். --Natkeeran 15:11, 11 நவம்பர் 2006 (UTC)

எதுவேண்டுமென்றாலும் பரவாயில்லை ஆனால் நீங்கள் மாற்ற விரும்பினால் கட்டுரைகள் உள்ளே நிறைய மாற்றங்களும் செய்ய வேண்டும்.என்னைப்பொறுத்தவரை ஹிந்தியே சரியாகப்படுகின்றது ஏனெனின் indi pop இதனை ஹிந்தி பாப் என்று அழைக்க இயலாது காரணம் அதன் உச்சரிப்பு.hindi pop இதனை ஹிந்தி பாப் என்று அழைக்கலாம் அதனால் என்னைப்பொருத்தவரையில் ஹிந்தி சரியாகப்படுகின்றது.--சக்திவேல் நிரோஜன் 15:18, 11 நவம்பர் 2006 (UTC)

indi popஐ இந்திப் பாப் என்று எழுதினால் hindi pop என்று குழப்பிக் கொள்ள வாய்ப்புள்ளது உண்மை தான். ஆனால், தமிழ்நாட்டில் hindi என்பதை இந்தி என்று பரவலாக எழுதும் வழக்கம் உள்ளது. indi pop என்பது indian pop வேறு வேறா? ஒன்று தானென்றால் இந்தியப் பாப் என்று எழுதலாம். இல்லை என்றால் குழப்பம் தவிர்க்க யோசிக்க வேண்டும். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்--Ravidreams 16:06, 11 நவம்பர் 2006 (UTC)

hindi pop ஹிந்தி பாப் வேறு indi pop இந்தி பாப் வேறு அதனாலேயே அவ்வாறு நான் தெரிவித்தேன்.--சக்திவேல் நிரோஜன் 23:44, 11 நவம்பர் 2006 (UTC)

//Indian pop music, often known as Indi-pop or Hindi pop, is a term that refers to pop music of India. It is based on various Indian folk or classical music, influenced by modern beats from different parts of the world. Indian pop was relatively non-existent until the late 1970s to early 1980s.//
மேற்கண்ட வரிகள் ஆங்கில விக்கி கட்டுரை en:Indian pop -இல் இடம்பெற்றுள்ளது. இதன்படி indian pop = indi pop = hindi pop. ஆனால், indi pop வேறு hindi pop வேறு என்று உங்களுக்குத் தோன்றினால், indi popஐ இண்டி பாப் என்று எழுதுங்களேன்..அல்லது தமிழொலிப்புக்கு ஏற்ப எழுதுவது என்றால் இந்தியப் பாப் என்று எழுதலாம். --Ravidreams 09
08, 12 நவம்பர் 2006 (UTC)

இப்பக்கத்தினை என்னால் அவதானிக்க முடியவில்லை[தொகு]

  • அனைத்துமொழிப் புள்ளிவிபரங்கள் (அட்டவணை) இப்பகுதியினுள் என்னால் செல்ல இயலவில்லை.--சக்திவேல் நிரோஜன் 15:21, 11 நவம்பர் 2006 (UTC)


சந்தேகம்[தொகு]

புதிதாக யாரும் என் பேச்சுப்பக்கத்தில் இடும் பொழுது விக்கியில் தானாகவே வரும் you got message வருவதில்லை என்ன காரணம்.--சக்திவேல் நிரோஜன் 23:42, 11 நவம்பர் 2006 (UTC)

சில சமயம் மீடியாவிக்கி மென்பொருளுக்கு காய்ச்சல் வந்தால் கூட இது மாதிரி ஆகலாம் :) வேறு காரணங்கள் ஏதும் இருக்கிறதா என பார்த்து சரிசெய்ய முயல்கிறேன். பெரும்பாலும், அதுவே சரியாகி விடுவதுண்டு.--Ravidreams 09:10, 12 நவம்பர் 2006 (UTC)
நிரோஜன் சக்திவேல் என நீங்கள் ஆரம்பித்த பயனர் பக்கத்தையும் பேச்சுப் பக்கத்தையும் சக்திவேல் நிரோஜன் என்பதற்கு நீங்கள் அதிகாரியின் உதவியின்றி நகர்த்தியமை காரணமாக இருக்கலாம். பக்கங்களின் பெயர் மாற்றப்பட்டாலும் உங்களது பயனர் பெயர் இன்னமும் நிரோஜன் சக்திவேல் ஆகவே உள்ளது. கோபி 15:43, 12 நவம்பர் 2006 (UTC)


முதற்பக்கக் கட்டுரைகள்[தொகு]

முதற்பக்கக்கட்டுரைகள் திடீர் திடீரென மாற்றம் அடைகின்றனவே ஏன் இந்த அவசரம்.--சக்திவேல் நிரோஜன் 00:24, 14 நவம்பர் 2006 (UTC)

பார்க்க - Wikipedia:ஆலமரத்தடி#முதற்பக்க இற்றைப்படுத்தல்கள். இவை சரியாக ஒரு நாளைக்கு ஒரு முறை தானியக்கமாக மாறும். தொடர்ந்து தமிழ் விக்கிபீடியா தளத்துக்கு தினமும் பயனர்களை வரச் செய்வதற்கான உத்தி இது. பல விக்கிபீடியாக்களிலும் இது போன்று செய்யப்படுவது வாடிக்கை தான்--Ravidreams 05:53, 14 நவம்பர் 2006 (UTC)

நிர்வாகிகள் கவனிக்க[தொகு]

விக்கிபீடியாவின் முதற்பக்கத்தில் தமிழில் எழுதுவது எப்படி என்ற விளக்கத்திற்கான இணைப்பு மிகவும் அவசியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.மேலும் எ கலப்பையினை எவ்வாறு உபயோகிப்பது என முதற்பக்கத் தலையங்கத்தில் தருவது மிகவும் அவசியம் என நான் கருகின்றேன்.மேலும் தமிழில் எழுத எனத் தலைப்புக்கொடுத்தால் புதுப்பயனர்கள் எளிதில் புரிந்து கொள்வர்.--நிரோஜன் சக்திவேல் 02:24, 3 டிசம்பர் 2006 (UTC)

ஏற்கனவே உள்ளதனையும் அறிவேன் ஆனாலும் அதனை முதற்பக்கத்தின் தலைப்பில் அமைய மேலும் தமிழில் எழுத இல்லாவிடில் புதிய பயனர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் தலைப்புடன் இருந்தால் பயனர்களின் பங்களிப்புகள் தொடரும்.--நிரோஜன் சக்திவேல் 02:26, 3 டிசம்பர் 2006 (UTC)

நல்ல ஆலோசனை, செய்யலாம். --Natkeeran 02:30, 3 டிசம்பர் 2006 (UTC)

மேலும் எவ்வாறு எ கலப்பையினை பதிவிறக்கம் செய்வது என்ற வெளியிணைப்பினையும் அளிப்பதனால் புதிய பயனர்கள் தமிழில் எழுதத்தெரியாத எழுதமுயலும் நண்பர்கள் எளிதில் பயனடைவரல்லவா.--நிரோஜன் சக்திவேல் 02:32, 3 டிசம்பர் 2006 (UTC)


2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை[தொகு]

நிரோஜன், உங்கள் கருத்துகள் இங்கு Wikipedia பேச்சு:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review வரவேற்கப்படுகின்றன. கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் இடலாம். நன்றி. --Natkeeran 03:17, 7 டிசம்பர் 2006 (UTC)

மகிழ்ச்சி[தொகு]

நிரோ, விஜய்க்கு உதவியாக நீங்கள் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தகவல் இட்டதை கண்டு மகிழ்ந்தேன். கட்டுரைகள் எழுதுவதில் இருந்து அடுத்த கட்டப் பங்களிப்பான நிர்வாக உதவிக்கு நீங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் விக்கிபீடியா செயல்பாடுகளை இன்னும் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொண்டு புதிதாக வரும் பயனர்களுக்கு உதவியாக நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்--Ravidreams 22:01, 9 டிசம்பர் 2006 (UTC)

என்னால் முடிந்ததை செய்கின்றேன் மேலும் எனக்கு இப்பொழுது you got message வேலை செய்கின்றது மகிழ்ச்சி ஆனாலும் என் தொகுப்புகளை அவதானிக்கமுடியவில்லை.--நிரோஜன் சக்திவேல் 22:55, 9 டிசம்பர் 2006 (UTC)

மேலும் middle east இதன் தமிழாக்கம் ஜக்கிய அரபு நாடுகள் தானே--நிரோஜன் சக்திவேல் 22:57, 9 டிசம்பர் 2006 (UTC)

நிரோ ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தான் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் இருக்கிறதா தெரியவில்லை. middle east என்பது மத்திய கிழக்கு நாடுகள் . உங்கள் தொகுப்புகளை ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் என்ன கோளாறு என்று பார்க்கலாம்--Ravidreams 23:03, 9 டிசம்பர் 2006 (UTC)

இல்லை கோளாறு இல்லை பொதுவாக ஆங்கிலத்தில் middle east என்று தெரிந்தவர்கள் எவ்வாறு தமிழ் விக்கிபீடியாவில் தேடித் தெரிவர்.இது என்க்கிருக்கும் சந்தேகமே --நிரோஜன் சக்திவேல் 23:08, 9 டிசம்பர் 2006 (UTC)

நிச்சயம் பொறுமை காப்பேன் :-)[தொகு]

நிரோ, கட்டுரை உருவாக்கும்போது பைட்ஸ் அளவை விடத் தகவல் அளவே முக்கியமானது. அடிப்படைச் சட்டகத்தை மட்டும் இடுவது கட்டுரை அல்ல என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. மேலும் காலப்போக்கில் இவற்றை நீங்கள் விரிவாக்குவீர்கள் என்றே நினைக்கிறேன். ஒரு தனிக் கட்டுரையாக அமையும் அளவு விரிவாக இருப்பது போதுமானது. தொடர்ந்து பங்களிக்கும் பயனர் ஒருவரது கட்டுரைகளுக்கு speed-delete இடப்பட்டாலும் குறித்த காலத்துள் நீக்கப்பட்டதில்லை. ஆனால் விரிவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இந்த வேகத்தில் குறுங்கட்டுரைகள் உருவாக்கிச் சென்றால் விரிவாக்கப்படாமற் தேங்கவே வாய்ப்புக்கள் அதிகம். கட்டுரை எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. உள்ளடக்கமற்ற 100 கட்டுரைகளை விட ஆழமான 10 கட்டுரைகளின் பயன் அதிகமானது.

உங்களது தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளை விட பிறமொழிப் படங்கள் பற்றிய கட்டுரைகள் பயனுள்ளவை என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம். மேலும் நற்கீரன் சின்ன வட்டங்களுக்குள் நிற்க வேண்டாம் என்று எனக்குக் கூறியதையே உங்களுக்குக் கூற விரும்புகிறேன். திரைப்படங்களுக்கு அப்பாலும் பங்களிக்க உங்களிடம் நிறையத் தகவல்கள் இருக்கின்றனவே! --கோபி 19:10, 12 டிசம்பர் 2006 (UTC)

நீங்கள் கூறியபடியே இக்கட்டுரைகளை விரிவாக்க முயல்கின்றேன் மேலும் பிற கட்டுரைகளிலும் ஆர்வம் காட்டுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 19:14, 12 டிசம்பர் 2006 (UTC)

நிரோ, மேற்குறிப்பிட்ட மிகச்சிறு கட்டுரைகளை முடிந்தவரை விரைவில் விரிவாக்கக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையேல் அவற்றை நீக்குவதே பொருத்தமாயிருக்கும். நன்றி. --கோபி 16:10, 17 டிசம்பர் 2006 (UTC)

நன்றி நிரோஜன், அவ்வாறே செய்கிறேன். போதிய தகவல்கள் கிடைக்கும்போது அவற்றை மீள உருவாக்குங்கள். புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு என் நன்றிகள். --கோபி 16:35, 17 டிசம்பர் 2006 (UTC)

தமிழ்த் திரைப்படங்கள் வகைகள்[தொகு]

தமிழ் திரைப்படங்களை வகை ரீதியாகவும் பகுப்படுத்தினால் நன்றாக இருக்குமா? எ.கா. [[பகுப்பு:தமிழ் மசாலாப்படம்]] --Natkeeran 02:12, 13 டிசம்பர் 2006 (UTC)

ஆம் ஆம் இது நான் நினைத்ததொன்றோ பொதுவாகா மசாலாத் திரைப்படங்கள்,கலைத் திரைப்படங்கள் அப்படியென்றால் திரைப்பட கல்வி பயில்வர்கள் மேலும் திரைப்படத்தினைப்பற்றி தெரிந்துகொள்ள முயல்வர்கள் பயன்பெறுவர் அத்தகைய காரணம்கருதி சில திரைப்படங்களிற்கு இட்டுள்ளேன் மேலும் வெகுவிரைவில் அனைத்துப்படங்களிற்கும் இடுபதாகா உத்தேசம்.--நிரோஜன் சக்திவேல் 02:19, 13 டிசம்பர் 2006 (UTC)

மேலும் நான் வகைகள் இடும் திரைப்படங்களினை முழுமையாகப் பார்த்து ஆராய்ந்த பின்னரே வகைகள் இடுகின்றேன் வெறுமனே நானாகவே இடவில்லை என்பதனையும் கருத்தில்கொள்க அதே வேளை இனி உருவாக்கும் அனைத்துத் திரைப்படங்களிற்கும் நீங்கள் கூறியவாறு இடுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 02:21, 13 டிசம்பர் 2006 (UTC)


எனது அனுமானம் என்ன வென்றால் நீங்கள் தமிழ் திரைப்படங்களையே இப்படி பொரும்பாலும் குறிப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அப்படி என்றால் தமிழ் மசாலாப்படம் என்ற மாதிரியாகப் பகுப்படுத்தினால் அதை தமிழ் திரைப்படங்கள் என்ற வகைக்குள் அடக்கலாம். மசாலாத் திரைப்படம் என்றால் பிற மொழித் திரைப்படங்களும் அதற்குள் வருமா? --Natkeeran 02:44, 13 டிசம்பர் 2006 (UTC)

தமிழ் மசாலாப்படங்கள் என்று தனியாக பிரித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றீர்களா ஏனெனில் தமிழ்த்திரைப்படங்களில் மட்டும் மசாலாவகையில்லையெபதே உணமை தெலுங்கு,ஹிந்தி ஏன் கலைத் திரைப்பட உலகமான மலையாளத் திரைப்படங்களிலும் இவ்வாறான வகைகள் வளர்ச்சிபெறுகின்றன.--நிரோஜன் சக்திவேல் 03:09, 13 டிசம்பர் 2006 (UTC)

படங்களை நீக்குதல்[தொகு]

நிரோஜன் படங்களை நீக்குமாறு கோருகின்றீர்கள் சில பட்ங்கள் குறிப்பாக இலமூரியா போன்றவை ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடியவையே. தவிர படிமம்:Prince of Persia SOT Fighting.png போன்றவை இளைஞ்ர்களைக் கவரக்கூடிய கணினி விளையாட்டுக்களே. இதற்கான காரணங்களை அறியலாமா?--Umapathy 20:04, 13 டிசம்பர் 2006 (UTC)

இலமூரியா ம்மெலும் அழிக்கக்கோரும் படிமங்கள் எங்கிருந்து பெற்றேன் என்று தெரியவில்லை.அதனால் அழிக்கக்கோருகின்றேன்.மேலும் இனிமேல் முழு விபரத்தினையும் சேர்த்து படிமங்களினை பதிவேற்றுவதாக உத்தேசம்.--நிரோஜன் சக்திவேல் 20:06, 13 டிசம்பர் 2006 (UTC)

குறிப்பு[தொகு]

நிரோ, படிமங்களை நீக்கக் கோரும்போது ஏன் என்ற காரணம் சொலுங்கள் (எடுத்துக்காட்டுக்கு - நான் பதிவேற்றிய இப்படிமம் இனிமேலும் தேவையில்லை!). ஒரே காரணத்துக்கு பல படிமங்களை நீக்கக் கோருகிறீர்கள் என்றால் மொத்தமாக அவற்றை wikipedia:படிம நீக்கப் பரிந்துரை பக்கத்தில் தெரிவியுங்கள். பிறகு, எந்த ஒரு தொகுப்பை செய்யும்போதும் தொகுப்புச் சுருக்கத்தை இடுங்கள். இல்லாவிட்டால், அண்மைய மாற்றங்கள் பக்க தொகுப்புச் சுருக்கத்தில் தானியக்கமாக கொச கொசவென்று சுருக்கம் வந்து விடுகிறது.--Ravidreams 08:10, 14 டிசம்பர் 2006 (UTC)

தொகுப்புச் சுருக்கம் எவ்வாறு இடுவது சற்று விளக்கவும்.--நிரோஜன் சக்திவேல் 13:57, 14 டிசம்பர் 2006 (UTC)

தொகுப்பு பெட்டியில் கீழ் சென்று பார்த்தீகளானால் சுருக்கம்: என்று ஆரம்பிக்கும் ஒரு பெட்டியை காண்பீர்கள் அதில் சுருக்கமாக நீங்கள் செய்த்ததை எழுதினால் நீங்கள் பக்கத்தை சேமிக்கும் போது அது அண்மைய மாற்றங்களில் தொகுப்பு இணைப்புக்கு அருகே வந்துவிடும்--டெரன்ஸ் \பேச்சு 07:43, 18 டிசம்பர் 2006 (UTC)


மேலும் ஒரு குறிப்பு இப்போது தவியில் ஏரளமான திரைப்படங்கள், கலைஞ்சர்கள் பற்றிய கட்டுரைகள் இருப்பதால் திரைப்படங்களுக்கு ஒரு நுழைவாயில் அமைக்கலாமே.உதாரணத்துக்கு இதை பார்க்கவும். நுழைவாயில்:இலங்கை --டெரன்ஸ் \பேச்சு 07:43, 18 டிசம்பர் 2006 (UTC)

தகவல்களிற்கு நன்றி மேலும் நுழைவாயில் யோசனை நல்லது மேலும் திரைப்படப்பிரிவுகளில் மொழிவாரியான திரைப்படங்கள்,நாடுவாரியான திரைப்படங்கள் என பிரித்து வகைப்படுத்த வெண்டும் மேலும் பகுப்பு பகுதியில் அனைத்தும் ஒன்று சேர்ந்து இருப்பதனால் நன்றாகப்படவில்லை.--நிரோஜன் சக்திவேல் 13:38, 18 டிசம்பர் 2006 (UTC)


நிர்வாகிகள் மற்றும் அனைத்து நண்பர்களின் ஆலோசனை தேவை[தொகு]

வாசிகசாலையிலிருந்து எடுத்து வந்த இரு தமிழ்ப்புத்தகங்களினை என் கணணியில் முழுமையாக scan பண்ணி வைத்துள்ளேன் அப்புத்தகங்களில் பயனுள்ள தகவல்கள் பலவுள்ளன.எனது கேள்வ் யாதெனில் இவ்வாறான புத்தகங்களினை தனியாக சேகரித்து வைப்பது விக்கிபீடியாவில் அல்ல அதற்கென்று பொதுவாக திரைப்படத்திற்காக தனியாக ஒரு தளம் இயங்குவது போல இருந்தால் அதாவது மேலும் பயனர்களின் கணனியிலுள்ள தகவல்கள் அதாவது புத்தகங்கள் மற்றும் நிகழ்படத்துண்டுகள் (கல்வி சம்பந்தப்பட்ட) ,மற்றும் பலவற்றை சேகரித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் பிற பயனர்களினால் அது பார்வையிடப்பட்டு அச்சேகரிப்பில் உள்ள தகவல்கள் அழிக்கப்படாமல் எடுத்து விக்கிபீடியாவில் போட முடியுமிதற்கென்று தனியாக ஒரு சிறிய சேகரிப்பு பக்கத்தினை உருவாக்குவதனால் பல சிறப்புகள்.இத்தகவல் சேகரிப்புகளினை விக்கி மூலத்தில் போடுவது சரியில்லை என நினைக்கின்றேன்.அதே வேளை அச்சேகரிப்புகளில் இருந்து தகவல்கள்களை விக்கிபீடியாவில் போடலாம்.இது எனது ஒரு சிறிய வேண்டுகோளே.ஏனெனில் ஒரு புத்தகத்தினை தனது கணனியில் பதிவேற்றும் பயனரிடம் அத்தகவல்களை விக்கிபீடியாவிற்கு ஏற்றவாறு மாற்றி எழுதமுடியாமல் போகலாம்.அக்காரியத்தை பின்னாட்களில் வரும் பயனர்கள் பார்த்து சேகரித்து தேவையாஅ தகவல்களினைப் பெற்று விக்கிபீடியாவில் சேர்ப்பரல்லவா.ஒரு வலைப்பூ சேவைபோல இத்தகவல்சேகரிப்பு இருந்தாலும் பரவாயில்லை.இதன் முக்கிய காரணம் ஒரு புத்தகம் அப்படியே வாசிகசாலையில் மட்டும் இருந்து எவ்வாறொருநாள் பூகம்பம் வந்து அழித்து அழியலாம் ஆனாலும் கணணியில் சேகரித்தால் அது மிகவும் நன்று (மேலும் எனக்கொரு சந்தேகம் நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதும் அனைத்தும் server கைல் உள்ளது மாய வலைகளில் அவ்வலைகள் இவ்வுலகம் அழிந்தால் என்ன ஆகும்.இவ்வுலகில் ஒரு கணனியும் இல்லையென்றால் என்ன நடக்கும்.அழிந்து விடுமா இல்லை விடை தெரிந்தவர்கள் சற்று விளக்கவும்.மேலும் சேகரிப்புத் திட்டம் பற்றிய பதில்களையும் பயனர்கள் மற்றும் நிர்வாக நண்பர்கள் தெரிவிக்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 21:41, 24 டிசம்பர் 2006 (UTC)

நிரோ, நீங்கள் சொல்லும் புத்தகங்கள் காப்புரிமை விலக்கு உள்ளது என்றால் வருடி (scan செய்து) நம் கணினியிலோ வழங்கியிலோ தாராளமாகப் போட்டு வைக்கலாம். இதை இலவச வலைமனைகளிலோ தொழில்முறை வலைமனைகளை நாம் சேமித்து வைக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, கோபி, மயூரன் ஆகியோர் நூலகம் திட்டத்தில் இது போன்று ஈழ நூல்களை சேகரித்து வைக்கிறார்கள். உங்களிடம் நல்ல தொகுப்பு இருக்குமானால், நூலகம் திட்டத்தில் பொருந்தாவிட்டாலும், தற்காலிகமாக அதற்கு ஒரு வழி காணலாம். ஆனால், நீங்கள் வைத்திருப்பது காப்புரிமை உள்ள புத்தகங்கள் என்றால் வருடி இணையத்தில் போடுவது திருட்டு ஆகி விடும். ஆனால், உங்கள் ஆலோசனை நல்ல ஒன்று. இது குறித்து உங்களிடம் பின்னர் தொடர்பு கொள்கிறேன்.
விக்கிபீடியா தரவுகளை அவர்கள் பாதுகாப்பாக பதுக்கி (backup) வைத்திருப்பார்கள். தவிர, அவ்வப்போது நான், சுந்தர் போன்றோரும் பதுக்கி வைக்கிறோம். அதனால், விக்கிமீடியா வழங்கி கோளாறு ஆனாலும், நம் உழைப்பு வீணாகிவிடாது. மீட்டெடுக்க முடியும். http://download.wikimedia.org போய் தேவைப்படும் தரவுகளை நீங்கள் பதுக்கிக் கொள்ளலாம். பூகம்பம் வருதல், உலகின் ஒட்டுமொத்த கணினிகளும் சீர்கெடல் போன்ற நிகழ்வுகளில் விக்கிபீடியாவை, கணினித் தகவல்களை விட கவலைப்பட அதிகம் விசயம் இருக்கும். (அதாவது கவலைப்பட மனிதன் தப்பி இருக்கும்பட்சத்தில்). மனிதன் பிழைத்திருந்தால், பிறகு எல்லாவற்றையும் மீள உருவாக்கிக் கொள்ளலாம் தானே !--Ravidreams 19:10, 4 பெப்ரவரி 2007 (UTC)
http://video.google.ca/videoplay?docid=4000153761832846346&q=long+now+foundation+duration%3Along

பன்மை ஒருமை வகைப்படுத்தல்[தொகு]

பன்மை உள்ள பகுப்புக்குள் ஒருமை தரும் தலைப்புகள் இருக்கலாம். ஒருமை உள்ள இன்னுமொரு பகுப்பு தேவையில்லை என்று நினைக்கின்றேன். அதுவே வழக்கம். இருப்பினும் நல்ல காரணங்கள் இருப்பின் தெரிவிக்கவும். நன்றி. --Natkeeran 01:28, 29 டிசம்பர் 2006 (UTC)

தாங்கள் கூறுவதே சரி ஆனாலும் வேதம் என்பதன் பகுப்பு வேதங்கள் என்ற பகுப்பிலிருந்து பிரித்தது ஏனெனில் வேதங்கள் என்பது வேதங்களின் பிரிவுகளை இடுவதற்கு வேதம் என்பது அதன் பொருள் விளக்கங்கள் மற்றும் பிற விடயங்களை இடுவதற்கு.--நிரோஜன் சக்திவேல் 01:39, 29 டிசம்பர் 2006 (UTC)

முதற்பக்கம்[தொகு]

நிரோஜன், //முதற்பக்கத்தில் என்ன மாற்றம் செய்தீர்கள் அங்கு பிற மொழியினூடாகச் செல்ல முடியவில்லை// நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. உங்கள் பிரச்சினையைத் தெளிவு படுத்தினால் நல்லது. எந்த மொழியினூடாகச் செல்லமுடியவில்லை? ஆங்கில முதற்பக்கமூடாகவா அல்லது அனைத்து மொழி முதற்பக்கமூடாகவா? அல்லது வேறு பிரச்சினையா?--Kanags 04:41, 29 டிசம்பர் 2006 (UTC)

இலக்கமிடுவது[தொகு]

தமிழ் திரைப்படங்கள் அகரவரிசைப்படுத்தப்படுவதால் அவற்றுக்கு இலக்கமிடுதலும் நன்றாக இருக்குமா? ஒவ்வொரு ஆண்டுக்கும்! அப்படி இட்டால் கணக்கிடுவது இலகுவாக இருக்கும். அதாவது ஒரு ஆண்டில் எத்தினை திரைப்படங்கள் வெளி வந்தன என்று கணக்கிடுவது இலகுவாக இருக்குமல்லவா. இது ஒரு அலோசனையே, நீங்களே ஆர்வம் கொண்டு ஈடுபடுவதால் இங்கு இடுகின்றேன்.

  1. பொருள் 1
  2. பொருள் 3
  3. பொருள் 2
  1. வேறு பொருள்
  2. வேறு பொருள்

--Natkeeran 08:16, 6 ஜனவரி 2007 (UTC)

அப்படி இடுவது நன்றே ஆனால் நான் அவ்வாறு இடவில்லை காரணம் அகரவரிசைப்படுத்தி எழுதிய மேலும் எழுதாத பல திரைப்படங்கள் உள்ளது இலக்கம் இட்ட பின்னர் திரைப்படங்களினைச் சேர்ப்பதலால் பிரச்சனைகள் எழலாம் அதனால் தயக்கம்.ஆனாலும் உங்கள் யோசனை நன்று அனைத்து பிழைகளினையும் சரிசெய்த பின்னர் இலக்கமிடுவது நன்றாக இருக்கும்.--நிரோஜன் சக்திவேல் 16:29, 7 ஜனவரி 2007 (UTC)

  1. குறிப்புக்காக: # இடைச் செருக்கல் இலக்கங்களை நீங்கள் எல்லாவற்றையும் மீண்டும் இலக்கமிடாமல் செய்யும். --Natkeeran 01:23, 8 ஜனவரி 2007 (UTC)

உங்களிற்கு தெரிந்திருப்பதனால் எட்டுக்காட்டுக.அல்லது இடுக பின்னர் நான் இடுகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 16:19, 8 ஜனவரி 2007 (UTC)

மேலே இடைச்செருக்கலாக பொருள் 3 புகுத்தினாலும், அது தன்னாலேயே சரியாக இலக்கமிட்டுக்கொள்ளும்; இதைப் பயன்படுத்தினால், #. --Natkeeran 17:34, 8 ஜனவரி 2007 (UTC)

ஒவ்வொரு பெயர்களின் முன்னர் இட வேண்டுமா இல்லை ஒரு ஆண்டின் பட்டியலில் இட வேண்டுமா.--நிரோஜன் சக்திவேல் 17:36, 8 ஜனவரி 2007 (UTC)

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2006 இதைப் போல, கட்டாயம் இல்லை. உங்களுக்கு பொருத்தமாக தெரிந்தால் இடலாம், அவசியமில்லை. --Natkeeran 17:41, 8 ஜனவரி 2007 (UTC)

இப்பட்டியலில் இடாமல் பெரிய பட்டியலில் இடலாமா அல்லது அப்பட்டியல் தேவையில்லையா.--நிரோஜன் சக்திவேல் 17:42, 8 ஜனவரி 2007 (UTC)

ஒரு இடத்தில் இட்டுவிட்டு, வெட்டி ஒட்டி விடுங்கள். பெரிய பட்டியலும் பயனுள்ளது. தனித்தனி பட்டியல்களை இன்றைப்படுத்தி வைக்கவும் இலக்கமிடல் உதவலாம். --Natkeeran 17:45, 8 ஜனவரி 2007 (UTC)


குறுங்கட்டுரை விரிவாக்கம்[தொகு]

முன்பு ஒரு பயனர் விக்ரம் நடித்த சில படங்கள் தொடர்பான மிகச் சிறு கட்டுரைகளை உருவாக்கினார். (உ-ம்: மஜா, ஜெமினி) அவற்றைச் சற்று விரிவாக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 17:08, 9 ஜனவரி 2007 (UTC)

தமிழ்ப் படங்கள் எண்ணிக்கை[தொகு]

மொத்தமாக எத்தனை படங்கள் உருவாக்கப்பட்டது என்ற எண்ணிக்கையை கூட்டி தந்தால் நன்றாக இருக்கும். இந்தத் தகவலை வேறு இடங்களிலும் உறுதிப்படுத்தி பார்க்கலாம். உடனடியா அல்ல. ஆர்வம் இருந்தால் மட்டுமே...--Natkeeran 18:12, 4 பெப்ரவரி 2007 (UTC)

ஆம் அதனையே நானும் யோசித்தேன் அதாவது தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் நீளப்பட்டியலினை அகரவரிசைப்படி ஒன்று சேர்த்து பின் அங்கு எண்களினைப் போடுவதாக உத்தேசம் அதற்கு முன்னர் ஆண்டு வாரியான பட்டியல்களிப் பூர்த்தி செய்ய வேண்டும் அதன் பின்னர் அவ்வாறு இடலாம்.--நிரோஜன் சக்திவேல் 18:17, 4 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், நல்ல யோசனை. ஆண்டுவாரியான பட்டியல்களில் எண்கள் வரிசையில் பட்டியல் இடுவது நல்லதுதான். இனிப்பார்ப்போம். மூலப் பட்டியலில் முழுவதையும் எடுத்துவிட்டு ஆண்டு வார்ப்புருவை மட்டுமே வைத்திருக்க எண்ணுகிறேன். நிரோ, தங்கள் எண்ணமும் அதுதானே.--Kanags 20:16, 4 பெப்ரவரி 2007 (UTC)

எனது ஆலோசனை என்னவென்றால் மூலப்பட்டியலை அகரவரிசைப்படுத்தி ஒன்றிணைத்து எண்களினை இடுவதாகும்.ஏனெனில் அப்பொழுதே அனைத்துத் திரைப்படங்களினது எண்ணிக்கை இலகுவாகக் கிடைக்கும் அதே வேளை ஆண்டு வாரியாக நீங்கள் தயாரித்த கட்டுரைகளிற்கும் எண்கள் இடுவோம் அது மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.--நிரோஜன் சக்திவேல் 22:44, 4 பெப்ரவரி 2007 (UTC)

தற்சமயம மூலப்பட்டியலினை அகரவரிசைப்படுத்த வேண்டாம் காரணம் அனைத்து ஆண்டு வரிசைக் கட்டுரைகளினையும் நிறைவு செய்த பிற்பாடு இதனை நானே செய்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 22:46, 4 பெப்ரவரி 2007 (UTC)

ஆலமரத்தடிக்கு வருக ![தொகு]

நிரோ, ஒரு மாதம் விக்கியில் இல்லாததால் நீங்கள் எந்த வரலாற்றுக் கட்டுரைகளை குறிப்பிடுகிறீர்கள் என்றுதெரியவில்லை. எனினும், எந்த ஒரு கட்டுரையையோ பயனரையோ மட்டும் கருத்தில் கொண்டு கோபியோ பிற பயனர்களோ தமிழ் விக்கி கொள்கை பரிந்துரைகளை செய்வதில்லை. இது குறித்த உரையாடல்களை, ஏன் ஒரு line கட்டுரைகளை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆலமரத்தடியில் உரையாடுங்களேன். பெருகும் குறுங்கட்டுரைகளால் தமிழ் விக்கியின் தரக் குறைபாடுகளை பற்றி ஏற்கனவே நிறைய அலசப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.--Ravidreams 15:00, 7 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ, நீங்கள் கூறுவது சரியே. ஒற்றை வரிகளாக இருந்தாலும் பின்னர் விரிவாக்கலாம், மேலும் உள்ள கட்டுரைகள் எவையும் நிறைவுடையன அல்ல. ஆனால் த.வி.யில் மிகச் சொற்பமானோரே பங்களிப்பதால் நாம் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பொறுப்புடன் நாமே கட்டுரைகளை முழுமையாக்கும் பொறுப்பையும் ஏற்க வேண்டியுள்ளது. வங்கி கட்டுரையின் வரலாற்றைப் பாருங்கள். அதன்பின்னர் என்னிற் கோபிக்க மாட்டிர்கள். மேலும் உங்களது உழைப்பைக் குறைவாக எடை போடுவதாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உருவாக்கியவை ஒருவரிக் கட்டுரைகளானாலும் பயனுள்ளவையே. நன்றி. --கோபி 17:47, 7 பெப்ரவரி 2007 (UTC)

ஈழத்தின் பழைய நூற்கள் தொடர்பான உசாத்துணைகள் சில[தொகு]

--கோபி 18:56, 7 பெப்ரவரி 2007 (UTC)

தமிழ் ஆர்வம்[தொகு]

உங்கள் தமிழ் ஆர்வம் மெச்சத்தக்கது. ஆனால் வரலாற்றைப் பற்றி பதியும் பொழுது சற்று அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். எல்லா நூல்களும் சமனல்ல. சில நூற்களின் நம்பிக்கத்தன்மை கம்மி. நூலாசிரியரின் ஆய்வு முறையையும் நோக்க வேண்டும். ஒரு கூற்றுக்காக அவர் தரும் ஆதாரங்களின் அடிப்படைகளையும் நோக்க வேண்டும்.

கி.மு. 7000 வருடங்கள் போன்ற தகவல்கள் எவ்வளவு கற்பனைத் தன்மை இருக்கின்றன எனபதெல்லாம் நோக்க வேண்டும். எடுத்ததுக்கெல்லாம் சங்க நூலகள் என்று சொல்வது பொருந்தாது. எந்த சங்க நூல், எந்தப் பாடல். அந்தப் பாடல் கற்பனையில் அமைந்ததா அல்லது ஒரு நிகழ்வை பதிவி செய்கின்றதா. இப்படி பல தரப்பட்ட கூறுகளை ஆய வேண்டும்.

தற்போதைய தமிழ் படங்களை வைத்து எமது போக்குக்களை எதிர்காலத்தவர் கணித்தால் எப்படியிருக்கும். தனிமனிதன் 30 40 பேரை எப்படி பந்தாடினார் என்று ஆராய வேண்டி வரலாம். எனவே அவதானமாக தகவல்களை சேருங்கள். உங்கள் விமர்சன அல்லது விடயநோக்கு பார்வையை சற்று தீட்டினால் நன்று. மேலும் பின்னர்...

--Natkeeran 03:05, 8 பெப்ரவரி 2007 (UTC)


ஒரு கட்டுரையின் மொத்த அளவினை எங்கு பார்ப்பது[தொகு]

குறிப்பிட்ட ஒரு கட்டுரையின் மொத்த பைட் அளவினை அவதானிப்பது அப்படி எங்கு.--நிரோஜன் சக்திவேல் 03:33, 10 பெப்ரவரி 2007 (UTC)

இப்பொழுது புரிந்து கொண்டேன் சிறப்புப்பக்கங்களில் பார்க்க இயலும்.--நிரோஜன் சக்திவேல் 03:35, 10 பெப்ரவரி 2007 (UTC)

மின்னஞ்சல் முகவரி[தொகு]

நிரோ, நீங்கள் உங்கள் பயனர் பக்கத்தில் தந்திருக்கும் மின்னஞ்சல் முகவரியையா அல்லது வேறெதாவதையா பயன்படுத்துகின்றீர்கள் என அறிய விரும்புகிறேன். நன்றி. --கோபி 07:23, 10 பெப்ரவரி 2007 (UTC)

அதே மின்னஞ்சல் தான்.ஆனால் அங்கு சென்று பார்ப்பது மிகக்குறை ஆனாலும் அதே முகவரியினை வைத்து msn messenger இல் என்னுடன் உரௌயாட முடியும்.