பயனர் பேச்சு:தினேஷ்குமார்சரவணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், தினேஷ்குமார்சரவணன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 08:10, 20 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், தினேஷ்குமார்சரவணன்!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:37, 24 சனவரி 2014 (UTC)[பதிலளி]

படிமம்:Dipika Samson.jpg இன் பதிப்புரிமை என்ன?[தொகு]

Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Dipika Samson.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். சண்முகம்ப7 (பேச்சு) 05:13, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வணக்கம் தினேஷ், மேலுள்ள படம் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு எடுக்கப்பட்டுள்ள படங்களை நாம் no rights reserved என கூற இயலாது. இணையத்தில் உள்ள படங்கள் அனைத்தும் அதில் குறிப்பிடப்படாதவரை காப்புரிமை உள்ளவையே. நீங்கள் எடுத்த படங்களோ அல்லது இலவச உரிமத்தில் வெளியிடப்பட்ட்ட படங்களோ இருப்பின் பதிவேற்றவும். வேறு ஏதும் சந்தேகம் இருப்பின் இங்கேயே கேட்கவும். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 16:06, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]


வணக்கம் சண்முகம் அவர்களே, நீங்கள் குறிப்பிட்டவாறு அந்தப் படம் காப்புரிமை பெற்றது தான். தகவலுக்கு மிக்க நன்றி!! இப்படத்தை எவ்வாறு நீக்குவது? மேலும் நான் விக்கிப்பீடியாவிற்கு புதிது. இதை உபயோகப்படுத்துவது குறித்து எனக்கு பல சந்தேகங்கள் இருக்கிறது. உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்களை எப்படி தொடர்பு கொள்வது? −முன்நிற்கும் கருத்து தினேஷ்குமார்சரவணன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
ஒரு பக்கத்தை அல்லது படத்தை நீக்க அதில் {{delete}} என சேர்த்து விடுங்கள். அதனை நிர்வாகிகள் நீக்கி விடுவர். இந்த படத்தை நான் நீக்கியுள்ளேன். என்னை என்னுடைய பேச்சுப் பக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 06:13, 26 சனவரி 2014 (UTC)[பதிலளி]