பயனர் பேச்சு:தமிழ்ச்செல்வன்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், தமிழ்ச்செல்வன்., விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:43, 20 திசம்பர் 2013 (UTC)

கத்தரிப்புலம் - கட்டுரை[தொகு]

வணக்கம் தமிழ்ச்செல்வன்! நீங்கள் எழுதிய கத்தரிப்புலம் என்ற கட்டுரை தவறான பக்கத்தில் இருந்தது. அதை தனிப் பக்கத்தில் எடுத்து ஒட்டியுள்ளேன். கத்தரிப்புலம் என்ற பக்கத்தைப் பாருங்கள். அங்கே உங்கள் தகவல்களைச் சேருங்கள். எழுதத் தொடங்கியுள்ளமைக்கு நன்றி! என் வாழ்த்துகள் :) உதவி தேவை என்றால் கேட்கலாம்/ -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:30, 20 திசம்பர் 2013 (UTC)

அருமை! சொன்னவுடன் புரிந்துகொண்டுவிட்டீரே! உங்கள் தகவல்களுக்கு நன்றி! உங்களுக்கு பிடித்த தலைப்புகளை தேடிப் பாருங்கள். ஏற்கனவே கட்டுரைகள் இருந்தால் அவற்றில் தகவல்களைச் சேருங்கள். இல்லை என்றால், நீங்களே புது பக்கம் தொடங்கி எழுதலாம். உதவி தேவை என்றால், இதே பக்கத்தில் கீழே உங்கள் கேள்வியை எழுதுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:37, 20 திசம்பர் 2013 (UTC)

மிக்க நன்றி. என்னைப் பற்றிய தகவல் எப்பக்கத்தில் சேர்க்க வேண்டும். -−முன்நிற்கும் கருத்து தமிழ்ச்செல்வன். (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆகா! மிக விரைவில் புரிந்துகொண்டுவிட்டீரே! வாழ்த்துகள் நண்பா! உங்கள் ஊர் தொடர்பான படங்கள்

இருக்கிறதா? கோயில்கள், குளக்கரை, வயல் என எது இருந்தாலும் அழகான, தெளிவான படம் இருந்தால் கட்டுரைகளில் சேர்க்கலாம். :) மேலும், உங்களுக்கு பிடித்த பாடம், நடிகர், திரைப்படம் என எல்லாவற்றிலும் தகவல்களைச் சேர்க்கலாம். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், கீழே கேளுங்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் சேர்க்க வேண்டும். பயனர்:தமிழ்ச்செல்வன். என்ற பக்கம் உங்களுக்கானது. :) நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:00, 20 திசம்பர் 2013 (UTC)


பயனர் பக்கம்[தொகு]

அடடே! நீங்கள் ஒரு ஆசிரியரா? அப்படியெனில் அறிவியல் தொடர்பான பல கட்டுரைகளில் உங்கள் ஆலோசனைகள் தேவைப்படும். :) நீங்கள் தேடிய தலைப்பு தமிழில் இல்லையா? விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள் என்ற பக்கத்தில் எழுதுங்கள். உடனே கட்டுரையை எழுதிவிடுவோம். :). உங்கள் மாணவர்களையும் விக்கிப்பீடியாவை பயன்படுத்த ஊக்குவியுங்கள். நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:07, 20 திசம்பர் 2013 (UTC) நன்றி -−முன்நிற்கும் கருத்து தமிழ்ச்செல்வன். (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இனிமேல், கருத்துகளுக்குப் பின்னால் உங்கள் பெயரை (கையொப்பம்) குறிப்பிடவும். யாருடைய கருத்து என கண்டுபிடிப்பது கடினம். இது உங்கள் பேச்சுப் பக்கம். இது போலவே எல்லோருக்கும் பேச்சுப் பக்கம். உங்களுக்கு யாருடனாவது பேசத் தோன்றினால், அவர்களின் பேச்சுப் பக்கத்தில் எழுதலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:22, 20 திசம்பர் 2013 (UTC)

--தமிழ்ச்செல்வன் (பேச்சு) 09:30, 20 திசம்பர் 2013 (UTC)நன்றி