பயனர் பேச்சு:ஜெகநாதன் வீரக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், ஜெகநாதன் வீரக்குமார், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:21, 17 அக்டோபர் 2020 (UTC)

Wikipedia
தங்களது பயனர் பக்கத்தில் இருந்த தகவல்கள் விக்கிப்பீடியா பயனர் பக்க கொள்கைக்கு மாறானதாக இருந்ததால் அதனை நீக்கியுள்ளேன்.

ஸ்ரீ (✉) 11:09, 17 அக்டோபர் 2020 (UTC)

Stop hand nuvola.svg

வணக்கம், ஜெகநாதன் வீரக்குமார்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 14:55, 20 அக்டோபர் 2020 (UTC) {{subst:db-notice-multiple|1=கீீீதா மோகன்|2=A1|3=A3|4=G11}} ஸ்ரீ (✉) 15:23, 20 அக்டோபர் 2020 (UTC)

கீதா மோகன்[தொகு]

வணக்கம் தாங்கள் உருவாக்கியுள்ள கீதா மோகன் எனும் கட்டுரை விக்கிப்பீடியா போன்ற கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றது அல்ல அதனால் அதனை நீக்க கோரியுள்ளேன். விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை காணவும். நன்றி ஸ்ரீ (✉) 15:37, 20 அக்டோபர் 2020 (UTC)

நன்றி.. ஐயாயிரம் ஒருவரின் தனி சிறப்பு குறித்து எப்படி எழுதுவது..? எங்கள் ஊரில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் அவரின் ஆட்சி முறை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் உள்ளது அவரை மிகை படுத்தி எழுதலாமா..! ஜெகநாதன் வீரக்குமார் (பேச்சு) 15:52, 20 அக்டோபர் 2020 (UTC)

வணக்கம், தாங்கள் விக்கிப்பீடியாவினை தவறுதலாக நமது வலைப்பதிவு போல எண்ண வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மேலே கேட்டுள்ள கேள்விக்கு நிச்சயமாக எழுதக் கூடாது என்பது தான் பதில் . அவரைப் பற்றி மட்டுமல்ல உலகில் உள்ள யாரைப் பற்றியுமே நீங்கள் மிகைப்படுத்தி விக்கிப்பீடியாவில் எழுதக் கூடாது.
//எங்கள் ஊரில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் அவரின் ஆட்சி முறை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் உள்ளது// நல்ல விசயம் பாராட்டக்கூடியது. ஆனால் இவை விக்கிப்பீடியா போன்ற கட்டற்ற தளங்களில் எழுதக் கூடியது அல்ல என்பதை புரிந்துகொள்ளவும். உதாரணத்திற்கு தமிழ் திரைப்படத் துறையில் பல லட்சம் பேர் பணி புரியலாம். ஆனால் அவர்கள் அனைவருமே முக்கியமானவர்கள் எனக் கருதமுடியாது தானே?
நீங்கள் கட்டுரைகள் எழுத முனைவதற்கு எனது நன்றிகள். நீங்கள் ஊர்களைப் பற்றி எழுத வேண்டும் எனில் மற்ற ஊர்களைப் பற்றிய கட்டுரைகள் எவ்வாறு உள்ளது என முதலில் பார்த்தால் தங்களுக்கு அது உதவியாக இருக்கும் . பின்னர் இங்கு இல்லாத ஊர்களைப் பற்றி நீங்கள் எழுதலாம். தங்களுக்கு உதவி தேவை எனில் இங்கேயே கேட்கலாம். நன்றி ஸ்ரீ (✉) 09:11, 22 அக்டோபர் 2020 (UTC)
ஜெகநாதன் வீரக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர் என்பது விக்கிப்பீடியாவில் ஒரு தனிக் கட்டுரை எழுதுவதற்குத் தகுதி அல்ல. புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 09:39, 22 அக்டோபர் 2020 (UTC)

நன்றி ஐயா... வடசங்கந்தி என்ற ஊரை வடசங்கேந்தி என்று மாற்றி உள்ளனர் அதற்கு உங்கள் உதவி அல்லது கருத்து..? ஜெகநாதன் வீரக்குமார் (பேச்சு) 14:34, 23 அக்டோபர் 2020 (UTC)

வடசங்கேந்தி[தொகு]

வணக்கம். வடசங்கேந்தி ஊராட்சி என்று இன்னொரு கட்டுரை உள்ளது, அதனால் தேவையில்லாமல் வடசங்கந்தி என்று கட்டுரை உருவாக்க வேண்டாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:53, 22 அக்டோபர் 2020 (UTC)

வடசங்கந்தி என்பதுதான் சரியான பெயர் வடசங்கந்தி என்ற ஊரை வடங்கேந்தி என்ற மாற்ற யாருக்கு உரிமை உள்ளது...? ஜெகநாதன் வீரக்குமார் (பேச்சு) 14:36, 23 அக்டோபர் 2020 (UTC)

வடசங்கந்தி என்பது தான் சரியான பெயர் என்றால், அதற்கான சான்றை தாருங்கள், மாற்றம் செய்து விடுகிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:52, 26 அக்டோபர் 2020 (UTC)

@ஜெகநாதன் வீரக்குமார்: வணக்கம், வடசங்கேந்தி  என்ற பெயரை தான் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது[1][2] நன்றி--Almighty34 (பேச்சு) 22:00, 26 அக்டோபர் 2020 (UTC)

பயனர் பக்கம் நீக்கம்[தொகு]

வணக்கம், அடுத்தவர் பயனர் பக்கத்தில் தகுந்த காரணமின்றி நீக்குதல் தேவையற்றது. எனது பயனர் பக்கத்தில் இருந்த தகவல்களை நீக்கியதற்கான காரணத்தினை கூறுங்கள் ஸ்ரீ (✉) 17:56, 1 நவம்பர் 2020 (UTC)

November 2020[தொகு]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். Gowtham Sampath (பேச்சு) 16:10, 2 நவம்பர் 2020 (UTC)

  1. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - திருவாரூர் -> முத்துப்பேட்டை. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம். 2019. https://tnsec.tn.nic.in/nomination/project_main/election_result/village_panchayat_ward_member_level_3.php?post_code=Mg==&dcode=MTU=&bcode=MTA=. "கிராம ஊராட்சி பெயர் : வடசங்கேந்தி" 
  2. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் - திருவாரூர் -> முத்துப்பேட்டை. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம். 2019. https://tnsec.tn.nic.in/nomination/project_main/nomination_view/village_panchayat_ward_village_member_nomination_details.php?dcode=MTU=&post_code=Mg==&bcode=MTA=. "கிராம ஊராட்சி பெயர் : வடசங்கேந்தி"