பயனர் பேச்சு:சக்திவேல் நிரோஜன்/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள், சக்திவேல் நிரோஜன்/தொகுப்பு 1!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --சிவகுமார் 16:18, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்று[தொகு]

நன்று சக்திவேல். தொடர்க உங்கள் பங்களிப்பு! --சிவகுமார் 16:40, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

வருக சக்திவேல் நிரோஜன், உங்கள் நண்பர்கள், உறவினர்களிடமும் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துங்கள்--ரவி 16:56, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

வெகு விரைவில் தெரியப்படுத்துகின்றேன்.

கையொப்பமிட --~~~~~ என்ற குறியைப் பயன்படுத்துங்கள் --சிவகுமார் 17:00, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோஜன், உங்களை சுருக்கமாக எப்படிப் பெயரிட்டு அழைப்பது எனத் தெரியப்படுத்தவும் :) புகைப்படங்களை பதிவேற்ற தளத்தின் இடப்பக்கம் உள்ள 'கோப்பைப் பதிவேற்று' என்ற இணைப்பை சொடுக்கவும். நீங்கள் உருவாக்கும் கட்டுரகள் தாமாகவே தேடு பொறியில் சேரும். தமிழ் திரை என்று தேடல் பெட்டியில் இட்டு செல் பொத்தானை அழுத்தினால், உங்கள் கட்டுரைக்கு இட்டுச் செல்லும். மேலும், இது போன்ற விவரங்களுக்கு, பார்க்கவும் விக்கிப்பீடியா:உதவி. இது போன்ற உங்கள் ஐயங்களை விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம் என்ற இடத்தில் கேளுங்கள்.--ரவி 17:20, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

சுருக்கமாக நிரோ என்றழைப்பர்..

நல்வரவு நிரோஜன்! உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள். கனடாவில் எங்கு இருக்கின்றீர்கள்? --Natkeeran 00:33, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள் பல்லாயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. அவை எல்லாவற்றையும் ஒரு பட்டியலில் தொகுப்பது சாத்தியமில்லை. ஆண்டு வாரியாகத் தொகுப்பது சாத்தியமானது. ஏனெனில் பல இதழ்களும் ஆண்டு முடிவில் பட்டியலிடுவதை அவதானித்துள்ளேன். முழுமையில்லாத பட்டியல்களால் அதிக பயனில்லை. --கோபி 15:42, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆமாம் அச்சிக்கலில் நானும் மாட்டியிருந்தேன் ஆண்டின் முறைப்படி வரிசைப்படுத்துகின்றேன்.

தமிழ் திரை என்ற கட்டுரைத் தலைப்பை தமிழ்த் திரைப்பட வரலாறு என்பதாக மாற்றிப் பூரணமான கட்டுரையைத் தயாரிப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா? தமிழ்த் திரைப்பட சங்கம், விருதுகள் வென்ற தமிழ்த் திரைப்படங்கள் போன்றவற்றைத் தனியான கட்டுரைகளாகவே பின்னர் உருவாக்கலாம் --கோபி 15:54, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழ் திரை என்பதன் தலைப்பு அனைத்தவர்க்கும் எளிதில் தமிழ் திரைப்படங்களைப்பற்றி விளக்குவதற்கே.நீவீர் விரும்புவதுபோல் மாற்றம் செய்ய வேண்டுமெனில் மாற்றம் செய்க.

நீங்கள் ஆரம்பத்தில் tam எழுத்துருவில் தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றிய நீளமான கட்டுரையொன்றை இட்டுப் பின்னர் அழித்திருந்தீர்கள். அதனை யுனிகோடுக்கு மாற்றி அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இட்டுள்ளேன். அதனைப் பயன்படுத்தி தரமான கட்டுரையை தயாரிக்கலாம். ஆனால் அப்படியே பிரதி செய்வது பொருத்தமில்லை. ஏனெனில் அது விக்கிப்பீடியா நடையிலில்லை. --கோபி 16:06, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

அப்படியே ஆகட்டும்.

நிரோஜன், கையொப்பமிட என்ற குறியைப் பயன்படுத்துங்கள். மேலும் தமிழ்த் திரைப்பட வரலாறு கட்டுரையை நீங்களே வளர்த்தெடுத்தீர்கள் என்றால் அது சிறப்பாக வரும் என நம்புகிறேன். --கோபி 16:11, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

அப்படியே செய்து முடிக்கப்படும் அன்புடையீர்.nirojansakthivel --16:11, 10 ஆகஸ்ட் 2006 (UTC) தயவு கூர்ந்து கையொப்பமிட முழுமையாக விளக்குக

நிரோஜன், மேலே சிவகுமார் கூறியுள்ள படி செய்தால் போதுமானத். அல்லது மேலே உள்ளவற்றில் கையொப்பமிடும் தத்தியை (வலமிருந்து இரண்டாவது) அழுத்தினால் கையொப்பமிடப்படும். கோபி 16:20, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோஜன், கையெழுத்திடும் முறையை சரியாக சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன். கையெழுத்துக் குறியீட்டை இடும்போது அது கையெழுத்தாகாமல் இட எனக்குத் தெரியவில்லை. ~ குறியீட்டை நான்குமுறை தொடர்ந்து இட்டுவிட்டுப் பக்கத்தைச் சேமித்தால் கையொப்பம் தானாக இடப்படும்.--கோபி 16:43, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

புரிந்து கொன்டேன் உதவிக்கு மிக்க நன்றி--நிரோஜன் சக்திவேல் 16:48, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

நேரம்[தொகு]

ஆனால் என்னுடைய நேரம் இன்கு வேறாகும் அதனை எப்படி சரி செய்வது.ம்ம்...--நிரோஜன் சக்திவேல் 16:50, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

இங்கு 12-50 மாலை--நிரோஜன் சக்திவேல் 16:51, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

உங்களுடைய விருப்பங்கள் பக்கத்தில் (பக்கத்தின் மேலே 'என் பேச்சு' 'விருப்பங்கள்' 'என் கவனிப்புப் பட்டியல்' போன்ற இணைப்புகள் இருக்கும்.) உள்ள நேரம் மற்றும் தேதியில் வழங்கன் நேரத்திற்கும் உங்கள் ஊர் நேரத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கொடுக்கவும். --சிவகுமார் 16:55, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழில் மாற்ற[தொகு]

இதனை எப்படி தமிழில் மாற்றி அமைப்பது --நிரோஜன் சக்திவேல் 20:51, 10 ஆகஸ்ட் 2006 (UTC)அதாவது இது அலைபாயுதே திரைபடத்தில் வரும் டிவிடி அட்டை இருக்கும் பகுதியாகும் --நிரோஜன் சக்திவேல் 20:53, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

வீடியோ கேம் இதன் தூய தமிழ் சொல் எது.மேலும் எக்ஸ் பாக்ஸ்,பிளே ஸ்டேசன் ஆகிய இயந்திரங்களை தமிழில் எவ்வாறு அழைப்பது.--நிரோஜன் சக்திவேல் 16:23, 2 செப்டெம்பர் 2006 (UTC)

xbox, playstation ஆகியவை பதிவு செய்யப்பட்ட வணிகப் பெயர்கள். ஆகவே இவற்றை மொழிபெயர்க்கக்கூடாது; முடியாது. videogameஐ நிகழ்பட விளையாட்டு என்று அழைக்கலாம். --ரவி 10:05, 17 செப்டெம்பர் 2006 (UTC)

பட உரிமைகள்[தொகு]

கோப்பில் ஏற்றும் படங்கள் பொதுவில் (PL) அல்லது GNU GPL போன்ற licences மூலம் கட்டற்றதகாக இருக்க வேண்டும். தயவுசெய்து காப்புரிமை படங்களை கோப்பில் ஏற்றாமல் இருப்பதில் அவதானாமாய் இருங்கள். நன்றி. --Natkeeran 23:46, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

Bolding[தொகு]

பொதுவாக கட்டுரையின் தலைப்பை மாத்திரமே ஒருமுறை போல்ட் செய்வது வழக்கம். நீங்கள் குறித்து காட்ட விரும்பினால் உள் இணைப்பொன்றை ஒரு முறை (முதல் தரம் அச் சொல் தோன்றும் பொழுது) தருவதன் மூலம் செய்யலாம். நன்றி. --Natkeeran 00:55, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோஜன் கவனத்துக்கு[தொகு]

நிறோஜன், நீங்கள் சிறு கட்டுரையொன்றை உருவாக்க பெருமளவு editகளைச் செய்து நேரத்தை விரயம் செய்கிறீர்களோ என்று படுகிறது. எது எவ்வாறெனினும் உங்களால் நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் பங்களிக்க முடிவதனையும் அவதானிக்க முடிகிறது. நீங்கள் கலைக்களஞ்சியத் தரத்தில் கட்டுரைகள் அமைப்பது மற்றும் விக்கிப்பீடியா நடை என்பவற்றை ஏனைய கட்டுரைகளில் அவதானித்து உங்கள் பங்களிப்பை மெருகூட்டுவதோடு, வெறுமனே திரைப்படம் என்னும் சிறு வட்டத்துக்குள் நின்றுவிடாது பரந்த அளவில் பங்களைப்பைத் தொடர் வேண்டும். கோபி 02:24, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழில் தட்டெழுத[தொகு]

நண்பர் கோபி அவர்களே நான் தற்பொழுது http://jaffnalibrary.com/tools/Unicode.htm மூலமாகவே தமிழை எழுதுகின்றேன்.அதனால் மிகுந்த கடினமாக உள்ளது.--நிரோஜன் சக்திவேல் 02:34, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

செல்வாவின் பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்

இ கலப்பையை பயன்படுத்துவதே இலகுவாக இருக்கும். --கோபி 15:42, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோஜன், தங்கள் தமிழார்வம் வியக்க வைக்கிறது. பயனுள்ள கட்டுரைகளை தயக்கமில்லாமல் எழுதுங்கள். கோபி சொன்னது போல் e-கலப்பை பாவித்துப் பாருங்கள். அதன் உபயோகம் உங்களை வியக்க வைக்கும். இங்கு download செய்யுங்கள்.--Kanags 08:44, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி சிறீதர், கோபி. நிரோஜன் விக்கிபிடியாவில் இ கலப்பை பற்றிக் கட்டுரையுள்ளது பார்க்க --Umapathy 02:08, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

மருதநாயகம்[தொகு]

மருதநாயகத்தின் வரலாற்றினை நான் உருவாக்கவா--நிரோஜன் சக்திவேல் 02:41, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

குறித்த கட்டுரைகள் இல்லாத பட்சத்தில், பொருத்தமான விதத்தில் நீங்களாகவே உருவாக்கலாம். இதற்கு எவரதும் அனுமதி வேண்டியதில்லை. --கோபி 15:44, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

அவ்வாறே ஆகட்டும்--நிரோஜன் சக்திவேல் 15:46, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

குறிப்புகள்[தொகு]

  • நிரோ ! (இது ரொம்ப சுருக்கமான பேரா இருக்கே :)), fossil என்பதை தொல்லுயிர் எச்சம் எனலாம். அறிவியல் சார் சொற்கள் பொருள் அறிய தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியை பயன்படுத்தலாம். இன்னும் சில தளங்கள், பயனுள்ள தமிழ் இணையத் தளங்கள் என்ற தலைப்பில் wikipedia:உதவி பக்கத்தில் தரப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவில் சொற்பொருள் குறித்த உரையாடல்களை இங்கு செய்யலாம். பயனுள்ள எத்தலைப்பு குறித்தும் நீங்கள் கட்டுரை துவக்கலாம். யாருடைய முன் அனுமதியும் தேவையில்லை. கட்டுரை துவங்கிய பின் எவருக்கும் ஆட்சேபம் இருந்தால் பேச்சுப் பக்கத்தில் தெரிவிப்பர். கோபி சொன்னது போல சுரதா எழுதியை விட e-கலப்பை தான் தமிழ் விக்கிப்பீடியாவை தொகுக்க எளிதானது. உங்களுக்கு சொந்த கணினி இருக்கம் பட்சத்தில் இதில் எழுதிப்பழகலாம். பொதுவாக, சிறு சிறு தொகுப்புகளாக செய்வதை விட, ஒரு குறிப்பிடத்தக்க அளவு எழுதிய பின் உங்கள் கட்டுரையை சேமிக்கலாம். அல்லது, தொடக்கத்தில், சிறு சிறு தனிக்கட்டுரைகளாக எழுதிப் போகப் போக பெரிய கட்டுரைகளை எழுதலாம். பிற விக்கிப்பீடியா கட்டுரைகளை பார்ப்பதும், அவற்றின் தொகுத்தல் பக்கங்களை கவனிப்பதும் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எப்படி எழுதப்படுகின்றன என புரிந்து கொள்ள உதவும். உங்கள் ஆர்வம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் பங்களிப்பு--ரவி 18:12, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

தொடரும் என் பங்களிப்பு--நிரோஜன் சக்திவேல் 18:15, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

Satyajit ray சத்யஜித் ரேய் என்பதா சரி அல்லது சத்யஜித் ராய் என்பதா சரி--நிரோஜன் சக்திவேல் 01:59, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோ, இது போன்ற உங்கள் ஐயங்களை இங்கு உங்கள் பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம் அல்லது wikipedia:உசாத்துணைப் பக்கம் என்ற இடத்தில் கேட்கலாம். தனியாக satyajit ray என்ற தலைப்பில், அதுவும் ஆங்கிலத் தலைப்பில், கட்டுரைகள் தொடங்க வேண்டாம். அது போல வேண்டாத பக்கங்களை அழிப்பது தான் சரி. satyajit ray கட்டுரையை மாட்டுவண்டி கட்டுரைக்கு நகர்த்தியது பிழை ஆகும். நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளை நீக்க விரும்பினால் அதற்கான வேண்டுதலை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவும். நன்றி.--ரவி 07:41, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

தவறுகளுக்கு மன்னிக்கவும்.--நிரோஜன் சக்திவேல் 13:20, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோ, செம்மொழி என்ற தலைப்பில் நல்ல கட்டுரையை தொடங்கி வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். பிறகு, தவறுகளுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். அது பெரிய வார்த்தை. இங்கு உள்ள அனைவரும் இப்படித் தான் கற்றுக்கொண்டோம். தொடர்ந்து பங்களியுங்கள்--ரவி 12:51, 18 ஆகஸ்ட் 2006 (UTC)

பணி தொடரட்டும்[தொகு]

நிரோஜன், நீங்கள் செம்மொழி மற்றும் ஆஸ்கார் விருது போன்ற கட்டுரைகளைத் தொடங்கியமை நன்று. இத்தகைய சிறு கட்டுரைகளை உருவாக்கிப் பங்களிக்கும்போது பலவிதமான கட்டுரைகளில் தமிழில் கிடைக்க வாய்ப்புண்டாகும். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களித்து வந்தீர்களானால் விக்கிப்பீடியா நடையிலும் எழுதப் பழகி விடுவீர்கள். பணிதொடர வாழ்த்துக்கள். கோபி 17:50, 21 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழ்த் திரைப்பட வரலாறு கட்டுரையைச் சரிசெய்யத் தொடர்ந்து சளைக்காமல் உழைக்கிறீர்கள்! நன்று. உங்களது ஆர்வத்தை திரைப்படம் சம்பந்தமான அல்லது வேறு உஙளுக்குப் பிடித்த துறைகளில் குறுங்கடுரைகள் உருவாக்குவதிலும் செலுத்தித் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள். --கோபி 18:50, 26 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழ்த் திரைப்படங்கள் குறித்த பகுப்பு இங்குள்ளது. பல கட்டுரைகளில் திரைப்படங்களை பற்றிய செறிவான தகவல்கள், தகவல்பெட்டிகள் உள்ளன. அவற்றை, இங்கு கட்டுரைகளை சிறப்பாக எழுத நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். --ரவி 22:13, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

திரைப்படத்தலைப்புகள்[தொகு]

திரைப்படங்களின் இயக்குனர் எழுதியவர் ஆகியோரை வரிசைப்படுத்தி அதனை படத்துடன் போடுவது எப்படி அதாவது ஆங்கிலத்தில் அதன் வலது பகத்தில் ஒரு பெட்டி மாதிரி உள்ளது அதனை எவ்வாரு தமிழில் மாற்றுவது எப்படி--நிரோஜன் சக்திவேல் 22:25, 27 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோ, அந்த ஆங்கிலப் பக்கத்தை தொகுப்பு பார்வையில் பார்த்தால், தகவல் பெட்டிக்கான வார்ப்புருவும் தகவல்களும் கட்டுரையின் தொடக்கத்தில் இருக்கும். அதை அப்படியே copy செய்து தமிழ் கட்டுரையில் ஒட்டி விடுங்கள். தமிழ் கட்டுரையை சேமிக்கும் முன் நபர்களின் பெயர்களை மட்டும் தமிழில் மாற்றி விடுங்கள். மிகவும் எளிய முறை இது. எடுத்துக்காட்டுக்கு, அலைபாயுதே கட்டுரையை பாருங்கள். இதற்கான தகவல் பெட்டி ஆங்கில விக்கியில் இருந்து எடுக்கப்பட்டதே--ரவி 08:03, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோ, ஆங்கில வார்ப்புருவை தமிழ் கட்டுரையை சேமிக்கும் முன் பரிச்சயமான நபர்களின் பெயர்களையாவது மட்டும் தமிழில் மாற்றி விடுங்கள். இது மிகவும் முக்கியம். பிறகு, பல கட்டுரைகளை உருவாக்கும் உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன் என்றாலும், அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவான கட்டுரைகளாக உருவாக்கலாமே? வெறும் ஆங்கிலத் தகவல் பெட்டிகள் மட்டும் உள்ள கட்டுரைகள் அவ்வளவு நல்ல தோற்றத்தை வாசகர்களிடம் பெறாது. பிறகு, திரைப்பட அறிமுகங்களை எழுதும் பொது மேம்போக்காகவும் புகழ்ச்சியாகவும் எழுதாமல், தகவல்களுக்கு முக்கியத்துவம் தந்து எழுதுங்கள். தகவல் பெட்டியில் உள்ள தகவல்களையே திரும்பவும் எழுதுவதும் வரவேற்கப்படுவதில்லை. நன்றி--ரவி 15:07, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

விரைவில் ஆங்கில விக்கி வார்ப்புருக்களை எப்படி பயன்படுத்துவது என்ற உதவிக்குறிப்பை எழுத முயல்கிறேன். உங்களுக்கு உதவியாக இருக்கக்கூடும். பிறகு, ஆங்கில விக்கியில் இருந்து வார்ப்புருக்களை ஒட்டும் போது அனைத்து சமயங்களிலும் படங்களும் தாமாகவே இங்கு வராது. ஆங்கில விக்கியில் இருந்து படிமங்களைப் பதிவிறக்கி, இங்கு நீங்கள் பதிவேற்ற வேண்டும். ஆங்கில விக்கி படிமப் பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் படிம விளக்கத்தையும் வெட்டி ஒட்டி விடுங்கள். நன்றி--ரவி 15:14, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

கலைக்களஞ்சியத்தரம்[தொகு]

நிரோஜன், உங்கள் ஆர்வத்தைப் பாராட்டும் அதே வேளையில் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் கலைக்களஞ்சியத் தரத்தில் அமைவதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். வெறுமனே தகவற்பெட்டிகள் கட்டுரைகளாகிவிடாது. உங்கள் பங்களிப்பு ஆர்வத்தை தரத்தை மேம்படுத்துவதிலும் செல்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன். கோபி 15:49, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோ, திரைப்படங்களின் பட்டியலை மிக விரிவாகத் தருகிறீர்கள். நன்று. ஆனால் எல்லாத் திரைப்படங்களுக்கும் உள்ளிணைப்புத் தந்து கட்டுரைகள் உருவாக்கத்தான் வேண்டுமா? திரைப்படம் தொடர்பாக எழுத வேண்டியவை நிறைய இருக்கின்றன. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள அளவுக்கு நடிக நடிகையர் பற்றிய கட்டுரைகள் தமிழில் இல்லை. நீங்கள் திரைப்படத்துறையிற்றான் ஆர்வமாக உள்ளீர்கள் என்றால் அப்படியும் பங்களிக்கலாம். --கோபி 16:42, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

நிரோஜன், தொகுப்பின்பின் பக்கத்தைச் சேமிக்கமுன்னர் முன்தோற்றம் காட்டு இனை அழுத்தி முன்தோற்றத்தைப் பார்த்தீர்களென்றால் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். தேவையற்ற மாற்றங்களைச் சேமிக்காமலிருக்கலாம். நன்றி. --கோபி 16:10, 2 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, ஒரு எடுத்துக்காட்டுக்கு, வேட்டையாடு விளையாடு, தவமாய் தவமிருந்து ஆகிய கட்டுரைகளை வளர்த்தெடுக்க முயன்றுள்ளேன். இது போன்று பிற திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளையும் வளர்த்தெடுக்க உதவுவீர்கள் என்றால் மகிழ்வேன். நன்றி--ரவி 10:56, 6 செப்டெம்பர் 2006 (UTC)

பாராட்டுக்கள்[தொகு]

தமிழ் திரைப்படம் தொடர்பான கட்டுரைகள் எழுதுவது கண்டு மகிழ்ச்சி. தொடர்க நிரோஜனின் பணி ;)--ஜெ.மயூரேசன் 04:54, 5 செப்டெம்பர் 2006 (UTC)

டைம் இதழின் நூறு சிறந்த திரைப்படங்கள் கட்டுரையை தொடங்கியதற்கு நன்றி, நிரோ. தமிழர்கள் வாழ்வில் தவிர்க்க இயலாத ஒன்றாக திரைப்பட ஆர்வம் திகழ்கிறது. இது குறித்த பல கட்டுரைகளையும் நீங்கள் முனைப்போடு உருவாக்குவதில் மகிழ்ச்சி. எனக்கும் இத்துறையில் ஆர்வம் தான். விக்கிப்பீடியாவில் நான் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் நடிக நடிகையர் குறித்து தான் எழுதினேன். உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். திரைப்படங்கள் குறித்த தனிக்கட்டுரைகளை தொடங்கும்போது இயன்ற அளவு விரிவாக ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதுங்கள். நன்றி--ரவி 12:47, 5 செப்டெம்பர் 2006 (UTC)

தமிழ்த் திரைப்படங்களின் படியலை மிக விரிவாக உருவக்கி வருகின்றமைக்குப் பாராட்டுக்கள். உங்களது எக்ஸ் பாக்ஸில் பொருத்தமான உள்ளடக்கமின்மையல் நீக்கினென். தவறாக நினைக்காமல் அதனைச் சரியான விதத்தில் உருவாக்குங்கள். நன்றி. --கோபி 17:22, 6 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, எக்ஸ்பாக்ஸ் இனை மீண்டும் விரிவாக உருவாக்கியமைக்கு நன்றி. கடுரைகளை உருவாக்கும்போது ஆங்கில விக்கிக் கட்டுரைக்கான இணைப்பையும் கொடுத்தீர்களானால் ஏனைய பயனர்கள் விரிவாக்க உதவியாயிருக்கும். போதிய உள்ளடக்கமற்றிருந்த எக்ஸ்பாக்ஸ் தொடர்பான மற்றைய இரண்டையும் நீக்கியுள்ளேன். தனியான பட்டியல் ஆங்கிலத்தில் விரிவாக இருப்பினும் தமிழில் எக்ஸ் பாக்ஸ் கட்டுரையுடனேயே சேர்த்து அமைக்கலாம் என்பௌ எனது தாழ்மையான அபிப்பிராயம். மற்றைய கட்டுரையை நீங்கள் விரிவாக மிண்டும் தொடங்கலாம். வாழ்த்துக்கள். --கோபி 19:53, 7 செப்டெம்பர் 2006 (UTC)

வீடியோ விளையாட்டுகளின் வார்ப்புருக்கள்[தொகு]

இவ்வகை வார்ப்புருக்களை எவ்வாறு தமிழில் மாற்றுவது !.--நிரோஜன் சக்திவேல் 20:26, 8 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, எந்த வார்ப்புருக்களை கேட்கிறீர்கள் என அறியவில்லை. ஆங்கில விக்கியில் உள்ள வார்ப்புரு ஏதேனும் உங்களுக்கு தமிழாக்க உதவி தேவையெனில், அவ்வார்ப்புருக்கான இணைப்பை தாருங்கள். நான் இயன்றவரை உதவுகிறேன். மேலும், இது போன்ற கேள்விகளை உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தில் கேட்பதை விட ஒத்தாசை பக்கத்தில் கேட்டால், விரைந்து பதில் கிடைக்கவும் கூடுதல் பயனர்கள் கவனிக்கவும் வாய்ப்பாக இருக்கும். --

ரவி 19:52, 9 செப்டெம்பர் 2006 (UTC)

இவ்வார்ப்புருவை தமிழில் எவ்வவாறு மாற்றியமைப்பது.--நிரோஜன் சக்திவேல் 20:06, 9 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, நீங்கள் கேட்ட வார்ப்புருவை ஆங்கில விக்கியில் இருந்து இங்கு வெட்டி ஒட்டி பகுதி தமிழாக்கித் தந்துள்ளேன். சிலவற்றைத் தமிழாக்கத் தெரியாததால் விட்டு விட்டேன். அறிந்தவர்கள் பின்னர் தமிழாக்குவர். தற்போதைக்கு, பொருத்தமான ஆங்கில விக்கி கட்டுரைகளில் இருந்து வார்ப்புரு நிரலை வெட்டி இங்குள்ள பொருத்தமான கட்டுரைகளில் ஒட்டிவிட்டால் வேலை எளிதாகி விடும் :)--ரவி 20:50, 9 செப்டெம்பர் 2006 (UTC)

தயவுசெய்து கவனியுங்கள்[தொகு]

நிரோஜன், கட்டுரைகளை உருவாக்கும் போது பொருத்தமான பகுப்பை இடுங்கள். தயவுசெய்து ஆங்கில விக்கிப்பீடியாவுக்கான கட்டுரை இணைப்பைக் கொடுங்கள். நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவை உசத்துணையாகக் கொண்டே கடுரை தயாரிக்கும் போது இணைப்புக் கொடுப்பது இலகுவானது. பிற பயனர் மீண்டும் தேடிச் செய்வது நேர விரையமாகும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். wiki commons இலுள்ள படிமங்களை மீண்டும் பதிவேற்றத் தேவையில்லை. மேலும் கட்டுரைகளைத் தொடங்கி அரைகுறையாக விட்டுச் செல்லாதீர்கள். நீங்கள் தொடங்கில ராஜகுமாரி, கெருடாவில் வேறெவராலும் விரிவாக்கப்படாமல் கிடப்பதைக் கவனியுங்கள். ஆங்க்ல விக்கிப்பீடியாவை நன்கு பயன்படுத்துபவர் என்ற வகையில் அதன் தரம் நீங்கள் அறிந்ததே. அந்த அளவு இல்லாவிடினும் ஓரிரு வரிகளுடன் குறுங் கட்டுரைகளை விட்டுச் செல்வது தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை கீழிறக்குவதாகவே அமைகிறது. சிறு தொகுப்புக்களைச் செய்யும் போது அடையாளப் படுத்துவது பிற பயனருக்கு கண்காணிக்க உதவியாக இருக்கும். நீங்கள் இனியும் ஆரம்ப நிலைப் பயனார் அல்லர். பெருமளவு பங்களிப்புச் செய்து விட்டீர்கள். ஆதலால் கலைக்களஞ்சியம் ஒன்றுக்கு பங்களிக்கும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இவற்றைக் கவனத்திலெடுப்பீர்கள் என்றே நம்புகிறேன். உங்கள் பணியை நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். நீங்கள் கவனத்திலெடுக்கும் விடயங்கள் ஏனையோர் கவனிக்காதவை என்ற விதத்தில் உங்களது வருகை தமிழ்விக்கிப்பீடியாவுக்கு வளம் சேர்ப்பதாகவே உள்ளது. ஆனால் அது உரிய பயனுள்ளதாகவும் வினைத்திறனுள்ளதாகவும் அமைய வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பாகும். நன்றி. --கோபி 19:38, 9 செப்டெம்பர் 2006 (UTC)

தவறுகளுக்கு பெரிதும் வருந்துகின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 20:11, 9 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோஜன், நீங்கள் தவறேதும் செய்வதாக நான் கருதவில்லை. உங்களது பங்களிப்பு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஆனால் சில சிறு விடயங்களை நீங்கள் கவனத்திலெடுத்தால் மிகப் பயனுள்ளதாயிருக்கும். உதாரணமாக சிறு தொகுப்பைச் செய்யும்போது இது ஒரு சிறு தொகுப்பு என்பதை குறித்தீர்களென்றால் சரிபார்க்கும் ஏனைய பயனர்களுக்கு உதவியாக இருக்கும். எல்லாக் கட்டுரைகளும் நீளமாக எழுத வேண்டுமென்றில்லை. பகுப்பு இடுவது நல்லது. தவறாமல் ஆங்கில விக்கிக் கடுரைக்கு இணைப்புக் கொடுங்கள். அது கட்டுரையை விரிவாக்க உதவும். அத்துடன் இன்னொரு பயனர் மீண்டும் ஆங்கில கட்டுரையைத் தேடி இணைப்பை கொடுப்பது சிரமமானது. உதாரணமாக லூகாஸ் போன்ற கட்டுரைக்கு நீங்கள் மிக இலகுவாக [[en:George Lucas]] என இட்டு தொடுப்புக் கொடுத்திருக்கலாம். நான் கொடுக்க குறித்த கட்டுரையைத் தேட வேண்டியிருந்தது :-( மேலும் commons இல் உள்ள படிமங்களை மீண்டும் பதிவேற்றாமல் நேரடியாக இணைப்புக் கொடுங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வம் உண்மையில் மெச்சத் தக்கதாகும். நன்றி. --கோபி 20:25, 9 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியலில் திரைப்படப் பெயர்களின் மொழிபெயர்ப்புகளை தருவது அவசியமற்றது. அவை அதிகாரப்பூர்வற்ற பெயர்களாக இருப்பதால், தருவதும் தகாது. திரைப்படங்களுக்குத் தனிக் கட்டுரைகள் உண்டாக்கும் போது வேண்டுமானால், தலைப்பை விளக்கலாம். பிறகு, அனேகமாக, நீங்கள் சொந்தக் கணினி வைத்திருக்கூடும். எனவே, சிறு சிறுத் தொகுப்புகளாக பதிவேற்றாமல், பட்டியல்களை உங்கள் கணினிக்கோப்பு ஒன்றில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒட்டு மொத்தமாக வலையேற்றினால், அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளை கவனிக்கும் பிற பயனர்களுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தொகுப்பின் வரலாறும் விக்கிப்பீடியா வழங்கியில் சேமிக்கப்படுகிறது. குறைவான தொகுப்புகள் இருப்பது பக்கத்தின் வரலாறை எளிமையாகப் புரிந்து கொள்ள, தேவையற்ற தொகுப்புகளை இனங்காண உதவும். தேவைப்படும் இடங்களில், முன்தோற்றம் காட்டும் வசதியைப் பயன்படுத்தி உங்கள் உரையை சரி பார்த்து தொகுப்புகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். நன்றி--ரவி 23:23, 12 செப்டெம்பர் 2006 (UTC)

பட உரிமம்[தொகு]

பொது (Public Domain), GNU GPL, Creative Common, Fair Use (not widely used) are some of the accepted licenses for pictures. நீங்கள் பட உரிமம் பற்றி தகவல்கள் தருவது அவசியம். அப்படிப்பட்ட தகவல்கள் இல்லாத போது அப்படத்தை தவி இரு நீக்கவேண்டி வரலாம். கவனத்தில் கொள்க. நன்றி. --Natkeeran 14:52, 16 செப்டெம்பர் 2006 (UTC)

பெயரிடல் மரபு[தொகு]

பொதுவாக பட்டப்பெயர்கலை தலைப்பில் தராமல் இருப்பது நன்று. நன்றி. --Natkeeran 14:58, 16 செப்டெம்பர் 2006 (UTC)

படங்களின் licence அவற்றை விரிவாக விளக்குக.மேலும் எவ்வவறு அவற்றை உரிமை பெறுவது.--நிரோஜன் சக்திவேல் 15:29, 16 செப்டெம்பர் 2006 (UTC)

குறுங்கட்டுரை விரிவாக்கம்[தொகு]

நிரோஜன், பின்வருவனவற்றை விரிவாக்கி உதவ முடியுமா? உங்களிடம் தகவல்கள் இருந்தால் விரிவாக்குங்கள்.

--கோபி 16:37, 16 செப்டெம்பர் 2006 (UTC)

ஆம் தாராளமாக--நிரோஜன் சக்திவேல் 16:39, 16 செப்டெம்பர் 2006 (UTC)

வார்ப்புருக்கள்[தொகு]

இவ்வார்ப்புருப்புகளை தமிழில் மொழி மாற்றம் செய்ய எவரேனும் உதவி புரிய முடியுமா.--சக்திவேல் நிரோஜன் 01:12, 20 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோஜன், இவ்வார்ப்புருக்களை யாராவது தமிழில் மொழிபெயர்த்தபின்னர் நீங்கள் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து வெறுமனே வார்ப்புருவை மட்டும் பிரதியெடுத்து இங்கு ஒட்டிக் கட்டுரைகளை உருவாக்கப் போகிறீர்கள் என்பதை நினைக்க வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து நீங்கள் உருவாக்கும் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளில் சிறு அறிமுகக் குறிப்பாவது (ஆங்கில விக்கியிலுள்ள கட்டுரையின் முதற் பந்தி) தமிழில் தருமாறு கேட்கிறேன். நன்றி. --கோபி 16:10, 20 செப்டெம்பர் 2006 (UTC)

திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

அனைத்து நண்பர்களுக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் அதாவது பல அன்பர்கள் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் வேறு இணையத் தளங்களிலும் உள்ளதே எனக் கூறுயுள்ளனர்.அது முற்றிலும் உண்மையே அதாவது ஹிந்தித் திரைப்படங்கள் போன்ற திரைப்படங்களின் பட்டியல்களும் மேலும் அனைத்துலக திரைப்படங்களின் பட்டியல்களும் அதன் விமர்சனங்களும் உள்ளதனை நன்கு அறிவேன் மேலும் நான் இப்பட்டியல்களை திரும்பவும் விகிபீடியாவின் நடைக்கேற்ப எழுதுவதென்பது ஏனெனில் அவ்வாறே ஆங்கில விக்கிப்பீடியாவிலும் அழகாக அட்டவணைப்படுத்தியுள்ளனர் இதன் காரணம் அனைத்துலக திரைப்படங்களையும் பயனர்கள் மிகவும் எளிய முறையில் தெரிந்து கொள்வதேயாகும் மேலும் ஒவ்வொரு திரைப்படத்துறைக்கும் வெவ்வேறு இணையத் தளங்களைத் தேடி அலைவதைத் தடுக்கவே இவ்வேற்பாடெனவும் நான் மிகவும் தாழ்மையுடன் கருகின்றேன் மேலும் ஆட்சேபனைகள் இருந்தால் பயனர்கள் விருப்பமே எனது விருப்பமும்.நன்றி.--சக்திவேல் நிரோஜன் 14:19, 20 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, அனைத்து மொழித் திரைப்படங்கள் பற்றிய விவரக்குறிப்புகள், கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்பட வேண்டுமென்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. findig nemo படம், நான் பெரிதும் விரும்பிப் பார்த்த ஒன்று. அது பற்றிய கட்டுரை இங்கு காண முடிந்ததில் மகிழ்ச்சி. எனினும், இது போன்ற கட்டுரைகளை ஒன்றன் பின் ஒன்றாக குறைந்தபட்ச தரம், அளவு ஆகியவற்றை பின்பற்றி நீங்கள் உருவாக்க வேண்டும் என்பதே எம் எதிர்ப்பார்ப்பு. தமிழ் விக்கிப்பீடியாவின் ஒட்டுமொத்த தரத்தை உயர்த்த உதவும். பிற தளங்களில் உள்ளது போல் வெறும் பட்டியல் மட்டுமாக இல்லாமல், மேலதிக தகவல்களை நாம் தருவதன் மூலம் வாசகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெறலாம் அல்லவா?--ரவி 16:52, 20 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோஜன், நீங்கள் ஆரம்பித்த திரைப்படங்கள் தொடர்பான கட்டுரைகளில் சிறு அறிமுகக் குறிப்புக்களைச் சேர்த்துத் தரமுயர்த்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வயதில் மிக இளையவர் தானே. உங்கள் ஆர்வமுள்ள துறைகளிலெல்லாம் விக்கிக் கட்டுரைகளை உருவாக்க வாழ்த்துக்கள். ஆனால் சற்று விரிவாகப் பங்களித்தீர்களானால் உங்களது பங்களிப்பின் பெறுமதி கூடும் என்பதே என் அபிப்பிராயம். நன்றி. --கோபி 17:07, 20 செப்டெம்பர் 2006 (UTC)

திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள்[தொகு]

ஆங்கில விக்கியிலிருந்து நீங்கள் வார்ப்புருவைப் பிரதி செய்து உருவாக்கும் திரைப்படம் தொடர்பான கடுரைகள் எண்ணிக்கையை அதிகரிப்பதைத் தவிர வேறெந்தப் பயனும் தருவதாக இல்லை. தயவு செய்து பயனுள்ள விதங்களில் பங்களிப்பது தொடர்பில் கவனமெடுக்கக் கோருகிறேன். உங்களது பங்களிப்பு விக்கிப்பீடியாவுக்கும் தமிழருக்கும் பயன்படுவதாக அமைய வேண்டும் என்ற நன்னோக்கிலேயே இக்கருத்தைத் தெரிவிக்கிறேன். உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது. ஆனால் உள்ளடக்க உருவாக்கத்தின் தரம் அந்தளவு இன்னமும் முன்னேறவில்லை. பயனுள்ள விதத்தில் பணி தொடர வாழ்த்துக்கள். நன்றி. --கோபி 16:16, 20 செப்டெம்பர் 2006 (UTC)

நண்பர் கோபிக்கு நான் அவ்வாறு திரைப்படங்களின் விமர்சனங்கள் அற்ற கோப்புகளை மட்டும் தொகுப்பதன் காரணம் யாதெனில் நான் அவ்வாறு செய்யும் தருணத்தில் ஏனைய பயனர்கள் அதனை விரிவுபடுத்தும் பொழுது நானும் தொடர்ந்து பின்னால் அவற்றை முடிப்பதற்கே.மேலும் விக்கிப்பீடியாவின் அனைத்து நெறிகளையும் இன்னமும் அறியாத நான் மேலும் அறியப் பெரிதும் விரும்பும் அதன் வழக்கம் போல அதனை உபயோகிக்கவும் கற்றுக்கொள்கிறேன் மேலும் நான் ஏதேனும் தவறாக பங்களிப்புகள் செய்திருந்ததால் மன்னித்தருள வேண்டும் நான் வேண்டும் என்று தமிழிற்குத் தவறுகள் விளைவிக்க விரும்பவில்லை.மேலும் அனைத்து நண்பர்களின் உதவிகளுக்கும் நன்றி.--சக்திவேல் நிரோஜன் 22:34, 20 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, கவனிக்க[தொகு]

நிரோ, விக்கிப்பீடியா:ஆலமரத்தடி அண்மைய உரையாடலை கவனியுங்கள். உங்கள் hotmail முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். கவனிக்கவும். நன்றி--ரவி 18:29, 20 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, இப்ப msn messengerல் இருக்கிறேன். வர இயலுமா?--ரவி 14:45, 21 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, என்னென்ன வார்ப்புருக்கள் தமிழாக்கத் தேவை என என் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஓரிரு நாளில் செய்து தரப்பார்க்கிறேன்--ரவி 05:25, 26 செப்டெம்பர் 2006 (UTC)

சந்தேகங்கள்[தொகு]

ஆஸ்கார் விருதுக்கு சென்ற இந்தியத் திரைப்படங்கள் இவ்வாறு ஒரு பட்டியல் உருவாக்க சிறப்பான தலைப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும்.--சக்திவேல் நிரோஜன் 23:27, 22 செப்டெம்பர் 2006 (UTC)

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் என்பது பொருத்தமாக இருக்கும்--ரவி 08:58, 23 செப்டெம்பர் 2006 (UTC)

ஒரு நீண்ட பட்டியலையோ கட்டுரையினையோ ஒருவர் தவறுதலாக அழிப்பாராயின் அவற்றை எவ்வாறு மீளச் செய்வது.--சக்திவேல் நிரோஜன் 00:11, 23 செப்டெம்பர் 2006 (UTC)

இந்திய திரைப்பட வரலாறு இக்கட்டுரையினை நான் இந்திய திரைப்படங்களிற்கு மாற்றிவிட்டேன் மேலும் இக்கட்டுரையினை உருவாக்கியதும் நான் தான் மேலும் இதனை எவ்வாறு முற்றிலுமாக நீக்க முடியும்.--சக்திவேல் நிரோஜன் 00:28, 23 செப்டெம்பர் 2006 (UTC)

கட்டுரையை நீக்குதலை விக்கிப்பீடியா நிர்வாகிகள் மட்டுமே செய்யமுடியும். கட்டுரையை நீக்க வேண்டும் என நீங்கள் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்தால் நிர்வாகிகளில் யாராவது ஒருவர் அதனை நீக்கிவிடுவர். --Sivakumar \பேச்சு 05:31, 23 செப்டெம்பர் 2006 (UTC)

நாம் பலதுயரப்பட்டு உருவாக்கும் ஆக்கங்களினை யாரேனும் திடு திடு வென அழித்தாளார்களாயின் அவற்றை மீண்டும் எவ்வாறு பெற முடியும்.--சக்திவேல் நிரோஜன் 01:23, 26 செப்டெம்பர் 2006 (UTC)

நிர்வாகிகள் கட்டுரைகளை அழிக்கவோ மீள்விக்கவோ முடியும். நீங்கள் மீள்விக்கவேண்டிய கட்டுரையைக் குறிப்பிடுங்கள் பொருத்தமானது எனினின் மீள்விக்கலாம். --Umapathy 01:40, 26 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, நீங்கள் கட்டுரையை சேமிக்கும்போது, தட்டச்சும்போது server கோளாறு காரணமாக தவறுதலாக காணாமல் போகும் ஆக்கங்களை ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், சேமிக்கப்பட்ட அதிக உள்ளடக்கம் உள்ள பக்கம் ஒன்றை தவறுதலாக எந்த நிர்வாகியும் நீக்க வாய்ப்பு இல்லை. முறையான அறிவிப்பு இட்டு கட்டுரையின் ஆசிரியர் பதில் அளிக்க உரிய காலமும் தந்து தான் அழிப்பர். அதனால், உங்கள் கட்டுரை எதனையும் நிர்வாகிகள் அழிக்க வாய்ப்பில்லை. அப்படி, ஏதேனும் அழிக்கப்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், ஏதேனும் ஒரு நிர்வாகியின் (நான், உமாபதி, கோபி, சுந்தர், நற்கீரன், சிவா..இன்னும் பலர்) பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுங்கள். அவர்கள் அதை அப்படியே உங்களுக்கு மீட்டுத் தர இயலும். இந்த வசதி நிர்வாகிப் பயனர்களுக்கு உண்டு.--ரவி 05:06, 26 செப்டெம்பர் 2006 (UTC)

ரவி, விளக்கங்களுக்கு நன்றி. விக்கிப்பீடியா சேவரில் பிழைகாரணமாகச் சேமிக்கமுடியாவிட்டால் உலாவியின் பின்செல்லும் பட்டணை (Back Button) அழுத்தவும் இப்போது நீங்கள் தட்டச்சுச் செய்ததைக் காணலாம். இது பயர்பாக்ஸ் உலாவியில் வேலை செய்கின்றது. ஏனைய உலாவிகளிலும் வேலைசெய்யுமென்றே நம்புகின்றேன். நீங்கள் எந்த உலாவியைப் பாவிக்கின்றீர்கள் என்று தெரிவித்தால் விடையளிப்பது இலகுவாக இருக்கும். --Umapathy 14:13, 26 செப்டெம்பர் 2006 (UTC)

நான் இண்டெர்னெட் எக்ஸ்ப்லோரெரைப் பாவிக்கின்றேன் என நினைக்கின்றேன் ஆனால் உலாவி என்பதன் பொருள் அதுதானே--சக்திவேல் நிரோஜன் 14:17, 26 செப்டெம்பர் 2006 (UTC)

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் அதாவது திகதிக் குறியீடுகள் பலவற்றுள்ளும் செப்டெம்பர் ,அக்டோபர்,ஜனவரி என்று ஆங்கில மாத வார்த்தைகளிப் பயன் படுத்துகின்றோம் தமிழில் கார்த்திகை,மார்கழி என்று பயன்படுத்த முடியுமா இல்லை அது பிழையாக இருக்குமா.மிகுந்த சந்தேகம் எனக்கு யாரையும் குறை கூறுவதற்காக இவ்வாறு தெரிவிக்கவில்லை ஆனாலும் தளத்தில் வரும் விருந்தினர்கள் அதுவே தமிழ் எனக் கற்றல் பெரிதும் வருத்தத்திற்குரியது.எனக்கு மாத்திரமே.--சக்திவேல் நிரோஜன் 14:22, 26 செப்டெம்பர் 2006 (UTC)

பொதுவாக ஆங்கிலத்திரைப்படத் தலைப்புகளையும் தமிழில் மொழி மாற்றம் செய்ய நானும் யோசித்தேன் ஆனால் அதனால் ஏற்படும் சிரமங்களையும் அறிந்தேன் அதனாலேயே பல ஆங்கில ஆக்கங்களை அவற்றுடன் ஒத்தே பெயரிடுகின்றேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.--சக்திவேல் நிரோஜன் 14:26, 26 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, பிற மொழி ஆக்கங்களை, பெயர்களை தமிழாக்காமல் அதே பெயரில் தான் தரவேண்டும். இது குழப்பத்தை தவிர்க்கும் என்பதுடன் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டிய தமிழ் விக்கிப்பீடியா பெயரிடல் மரபு. இதே குழப்பம் தவிர்க்கும் காரணத்துக்காக தமிழ் மாதப் பெயர்களை பயன்படுத்துவதில்லை. இது ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் விரிவாக இங்கு அலசப்பட்டுள்ளது. --ரவி 17:01, 26 செப்டெம்பர் 2006 (UTC)

புரிந்து கொண்டேன் ஆங்கில முறைப்படி அவ்வறு மாற்றி எழுதுகின்றேன் மேலும் நான் உருவாக்கிய அனைத்துக் கட்டுரைகளையும் தம்மிழில் மாத முறைகளைப் பாவித்தது பெரும் தவறாகக் கருகின்றேன்.--சக்திவேல் நிரோஜன் 19:37, 26 செப்டெம்பர் 2006 (UTC)

ஒரு கட்டுரையை உருவாக்குவதற்கு நாம் செய்யும் எடிட்கள் (பதிப்புகள்)எண்ணிக்கையின் அளவில் குறைவாக இருப்பது நல்லதா அல்லது அவ்வாறு அதிகரிக்கும் பதிப்புகளினால் த.வி தரம் குறையுமா.இது எனது சந்தேகம்.--சக்திவேல் நிரோஜன் 19:45, 26 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ, தொகுப்புகளின் எண்ணிக்கைக்கும் (edit) தமிழ் விக்கிப்பீடியா உண்மையான தரத்துக்கும் அதிக தொடர்பு இல்லை. இது குறித்த கடினப்போக்கோ கொள்கையோ தமிழ் விக்கிப்பீடியாவில் கிடையாது. குறைவான தொகுப்புகளை கொண்டு நல்ல கட்டுரையை உருவாக்கவும் முடியும். (எடுத்துக்காட்டு - மயூரனாதன், பெரும்பாலும், முழுமையான கட்டுரைகளாக ஒரு சில தொகுப்புகளில் தருவார். ஒருவேளை அவரது கணினியில் சேமித்து வைத்துக் கொண்டு மொத்தமாக விக்கிப்பீடியாவில் பதிக்கக்கூடும்.) ஏராளமான தொகுப்புகளை செய்து தரம் குறைந்த கட்டுரையையும் உருவாக்கவும் முடியும் (எடுத்துக்காட்டுக்கு - என்னேயே வைத்துக்கொள்ளுங்களேன் ;)) விக்கிமீடியா திட்டங்களில் அதிகத் தொகுப்பு எண்ணிக்கை - அதிக தரத்தின் ஒரு அளவுகோலாக கருதப்படுகிறது. எனினும், நாம் இது குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. நடைமுறைப்படி பார்த்தால், குறுகிய நேரத்தில் ஒரே பக்கத்தில் எண்ணற்ற சிறு தொகுப்புகள் செய்வதை தவிர்க்கலாம். (எடுத்துக்காட்டுக்கு, 2,3 நிமிடத்துக்கு ஒரு முறை ஒரே பக்கத்தை தொகுத்தல்.) இதனால், அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் நெரிசல் ஏற்பட்டு பிற தொகுப்புகளை பின்தள்ளும். நிர்வாகிகளும் ஆர்வமுடைய பயனர்களும் பல முறை தளத்துக்கு வந்து புதிய பக்கங்களை பார்வையிடுவார்கள். சிறு சிறு தொகுப்புகளை காண்பதற்காக அவர்கள் திரும்ப திரும்ப ஒரே பக்கத்துக்கு வந்து பார்ப்பது அலுப்பூட்டலாம். எனவே, இப்படிச் செய்வதை காட்டிலும் கொஞ்சம் நிறைய தட்டச்சு செய்து மொத்தமாக சேமிக்கலாம். தட்டச்சு செய்த பக்கத்தை நாம் பிழையாக இழந்து விடுவோம் என்று அஞ்சினால், அவ்வப்போது, வேறு wordpad போன்ற எழுதிகளில் ஒட்டி சேமித்து வைத்துக்கொள்ளலாம். நீங்கள் எண்ணற்றதாய் தொகுப்புகள் செய்தாலும் ஏன் செய்தாய் என்று யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால், குறைவான ஆனால் நிறைவான தொகுப்புகளை செய்வது வரவேற்கத்தக்கது. முக்கியமாக, ஒருவருடைய தொகுப்புகளின் எண்ணிக்கையை வைத்து ஒருவரின் பங்களிப்பின் தரம் தீர்மானிக்கப்படுவதில்லை.
நிரோ, உங்கள் கட்டுரைகளில் தமிழ் மாதப் பெயர்களை பயன்படுத்தி இருந்தால், அவற்றை பொருத்தமான ஆங்கிலப் பெயர்களுக்கு மாற்றி விடுங்கள். இல்லாவிட்டால், குழப்பமாகி விடும். எனினும், இது குறித்து கவலைப்பட வேண்டாம். பலரும் அறியாமல் செய்யக்கூடிய பிழை தான் இது. --ரவி 21:17, 26 செப்டெம்பர் 2006 (UTC)

பக்க வடிவமைப்பு கையேடு[தொகு]

உங்களின் தற்போதைய அணுகுமுறை நன்று. சில பக்க வடிவமைப்பு தொடர்பான தகவல்களுக்கு, பின்வரும் கையேட்டை பார்த்தல்ல் நன்று. குறிப்பாக ஒரு முற்றுப்புள்ளிக்கு பின் இரு வெளிகள் (spaces) விடுவதுதான் வழமை. நன்றி. Wikipedia:பக்க வடிவமைப்பு கையேடு --Natkeeran 15:11, 30 செப்டெம்பர் 2006 (UTC)

இனிமேல் அவ்வாறே செய்கின்றேன்.தவறுகளுக்கு மன்னிக்கவும்.--சக்திவேல் நிரோஜன் 15:42, 30 செப்டெம்பர் 2006 (UTC)

நிரோ தவறு ஏதும் இல்லை. இருந்தாலும் வருந்த வேண்டாம் :) மாற்றிக்கொண்டால் போதும். முற்றுப்புள்ளிக்கு அடுத்து எத்தனை வெளிகள் விடுவது என்பது இன்னும் இறுதியாகத் தெரியவில்லை. அதனால், ஒரு வெளி இட்டே எழுதுங்கள். விரைவில் இது குறித்து வழிகாட்டல் ஒன்றை இறுதிப்படுத்துவோம். என்னென்ன வார்ப்புருக்கள் தமிழாக்க வேண்டும் என எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைப்பீர்களா? விரைவில் செய்து தர முயல்கிறேன்--ரவி 15:57, 30 செப்டெம்பர் 2006 (UTC)

பயனரின் பங்களிப்புகளின் மொத்த எண்ணிக்கை[தொகு]

ஒரு பயனரின் பங்களிப்புகளின் எண்ணிகையைக் காட்டும் படி ஏதாவது வசதி த.வி யில் உள்ளதா.ஏனெனின் எனது பங்களிப்பு வரலாற்றில் சீரான கட்டுரைகளை நான் உருவாக்கியதைப் பார்க்க இயலவில்லை.மிகவும் கடினமாக உள்ளது,எனக்கே.--சக்திவேல் நிரோஜன் 03:38, 5 அக்டோபர் 2006 (UTC)

உங்கள் பங்களிப்பு விவரங்களுக்கு பார்க்க: விக்கிப்பீடியா தள இணைப்பு, விக்கிமீடியா கருவி இணைப்பு--ரவி 18:51, 6 அக்டோபர் 2006 (UTC)

மேலும் பயனர் ஒருவரின் பேச்சுப்பக்கத்திலுள்ள பேச்சுக்களை அழிக்காது அதனை சேகரித்து சிறிய பக்கமாக்குவது எப்படி.--சக்திவேல் நிரோஜன் 03:40, 5 அக்டோபர் 2006 (UTC)

இரண்டாவது கேள்விக்கு பதில், பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:How_to_archive_a_talk_page முதல் கேள்விக்கு: பெயர் வெளியில் முதன்மை என்று தெரிவு செய்தா அனேகமாக நீங்கள் ஆரம்பித்த கட்டுரைகளில் தலைப்புக்களே வரும். ப்ங்களிப்புகளின் எண்ணிக்கை பற்றி புள்ளிவிரங்களில் தகவல்கள் கிடைக்கலாம், அல்லது அதற்கான சிறப்பு செயலிகள் இருக்கலாம், ஆனால் அது பற்றி எனக்கு தெளிவ் இல்லை. பிற பயனர்கள் கூடிய தகவல்கள் தரக்கூடும். --Natkeeran 14:57, 6 அக்டோபர் 2006 (UTC)

நட்சத்திரங்கள் மற்றும் ராசிகள்[தொகு]

இவற்றைப்பற்றிய ஒரு சிறு தகவல்களும் த.வி இல்லை எனவே இவற்றைப் பற்றி தெரிந்தவர்கள் உருவாக்கக் கோருகின்றேன்.அதாவது ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின்பயன்கள் போன்றனவற்றின் பயன்கள் மற்றும் அனைத்து யோசியம் சம்பந்தமான கருத்துகள் மிகவும் அவசியமானதாக மேலும் அது உண்மையா பொய்யா என்ற ஆராயும் காலம் இது.--சக்திவேல் நிரோஜன் 14:44, 8 அக்டோபர் 2006 (UTC)