பயனர் பேச்சு:கோபி/தொகுப்பு 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளடக்கம்

நிர்வாகிப் பொறுப்பு

கோபி, Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/கோபி பக்கத்திற்கு சென்று, என் பரிந்துரையை ஏற்பதாகத் தெரியப்படுத்துங்கள்..அதன் பிறகு பிற பயனர்கள் வாக்களிப்பர். இது விக்கி நடைமுறை.--ரவி 08:25, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி ரவி, என் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டேன். --கோபி 15:42, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

speed delete

அன்புள்ள கோபி, தற்போதைய வார்ப்புருவில் தேதி இல்லை. என்வே இந்த வார்ப்புருவை பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன். வேறுபாட்டை இங்கு பார்க்கவும். --சிவகுமார் 16:28, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

பல விக்கிபீடியாக்கள் கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு சகட்டு மேனிக்கு தரமற்ற கட்டுரைகளை உருவாக்கி வரும்பொழுது தமிழ் விக்கிபீடியாவின் தரத்தை கூட்டும் வண்ணம் பல கட்டுரைகளை தாங்கள் களையெடுத்து வருவது மிகவும் நன்று. நன்றி--ரவி 20:24, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு

விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:23, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

குறிப்பு

தாவரங்களின் அறிவியல் பெயர்களை சாய்வெழுத்துக்களில் தர வேண்டும். சுந்தர் இதற்காகத் தான் நடைக்கையேட்டை பார்க்க சொன்னார் என்று நினைக்கிறேன். மேற்படி காரணங்கள் இருந்தால் அவரே தெரிவிக்கலாம்--ரவி 16:49, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

உண்மைதான். ஆனால் நான் மருத்துவ குணங்கள் என இணைத்தவை நீக்கப்பட்டிருந்ததால் தான் குழம்பிப் போனேன். அது தொடர்பில் ஏதாவது தவறான உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளேனோ என்பதே எனது குழப்பமாகும். --கோபி 16:52, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, சுந்தர் மருத்துவ குணங்களை நீக்கியதை நானும் பார்த்தேன். எனக்கும் விளங்க வில்லை. தவறுதலாகவும் நிகழ்ந்திருக்கலாம். தற்போதைக்கு மூலிகைகள் கட்டுரையில் மருத்துவ குணங்களை மாற்றி எழுதச் சிரம பட வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். (பின்னர், ஆதாரங்களின்றி போனால், உங்கள் பங்களிப்பையும் நீக்க வேண்டி வரும்..!)இக்கட்டுரைகள் அனைத்தும் சிங்கப்பூர் பள்ளி சிறுவர் ஒருவரால் கட்டுரை எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவை. மொத்தப் பகுப்புக்குமே பெரிய அளவில் துப்புரவு தேவைப்படுகிறது. என்னால் இயன்ற அளவு உதவுகிறேன். இதில் உள்ள பல தாவரங்களை மூலிகைகள் என்ற குறுகிய பகுப்பில் அடக்குவது பிழை. பலவும் முக்கியத்துவம் வாய்ந்த விரித்து எழுதப்பட வேண்டிய தாவரங்கள்.--ரவி 16:58, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

நமது கொழும்பு சந்திப்பு

இன்று 5 மணிக்கு சந்திப்பதாக உத்தேசித்து இருந்தபோதும் என்னால் வரமுடியாமல் உள்ளது. எனக்கு இன்று மைக்ராசாஃப்ட் .நெட் சம்பந்தமான பிராஜக்ட் ஒன்று பற்றி கலந்தாலோசனை செய்ய கிரிபத்கொட செல்கின்றேன். வேறு ஒரு தினத்தில் சந்திக்கலாம் இதை மயூரனுக்கும் அறிவிக்கவும்.--ஜெ.மயூரேசன் 07:04, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

வார்ப்புரு மாற்றங்கள்

நீங்கள் வார்ப்புரு:சஞ்சிகை தகவல் சட்டம் இதழாசிரியர் என்று ஏற்படுத்திய மாற்றம் சரியானதே. எனினும் அவ்வார்ப்புரு பயன்படுத்தப்பட்ட கட்டுரைகளிலும் தகுந்த மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதை கவனித்தில் கொள்க. அதை யாரும் செய்யலாம், ஆனால் உங்கள் கவனத்தில் கொண்டுவருவதே இக்குறிப்பின் நோக்கம். நன்றி. --Natkeeran 19:34, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

படிமங்களை வகைப்படுத்துதல்

தொடர்புடைய சுட்டியை தாருங்கள். நன்றி. --Natkeeran 19:42, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி. சற்று அலசி விட்டு இவ்விடயம் நோக்கி மேலும் பின்னர் பகிர்கின்றேன். --Natkeeran 19:54, 29 ஆகஸ்ட் 2006 (UTC)

சாய்வெழுத்துக்கள்

கோபி, நேரமின்மையால் நான் சுருக்கமாகத் தெரிவித்த வேண்டுகோளைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல் சரியாகப் புரிந்து கொண்டமைக்கு நன்றி. உங்கள் அண்மைய பங்களிப்புகள் வியத்தகு வேகத்தில் அமைந்துள்ளன. பணி தொடரட்டும். -- Sundar \பேச்சு 06:19, 30 ஆகஸ்ட் 2006 (UTC)

நிர்வாகி அணுக்கம்

கோபி, உங்களுக்கு நிர்வாகி தரத்துக்கானஅணுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, தமிழ் விக்கிபீடியாவில் நீங்கள் செய்யும் பணிகளை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். Mayooranathan 19:16, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

தங்களின் அயராத பணிகள் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள். நிர்வாக அணுக்கத்தை ஏற்படுத்திய மயூரநாதனிற்கும் மனமார்ந்த நன்றிகள். --Umapathy 19:26, 31 ஆகஸ்ட் 2006 (UTC)
நன்றி மயூரநாதன், உமாபதி. ஆதரவு தெரிவித்து வாக்களித்த மயூரேசன், சுந்தர், கனக சிறீதரன், சிவகுமார், நற்கீரன், டெரன்ஸ், உமாபதி ஆகியோருக்கும் நிர்வாகி அணுக்கம் பெறத் தூண்டிய ரவிக்கும், மற்றும் நற்கீரனுக்கும் எனது நன்றிகள்.--கோபி 19:57, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, நீங்கள் விரும்பிக் கேட்டபடி செப்டம்பர் 1 அன்று நிர்வாகியாக்கும்படி சுந்தரிடமும் மயூரனாதனிடமும் வேண்டியிருந்தேன். ஆனால், இன்றே ஆக்கி விட்டார் :)..பரவாயில்லை..ஜப்பான் நேரப்படி செப்டம்பர 1 என்று வைத்துக்கொள்ளலாம் தானே :) இனி விக்கிபீடியாவில் எனது நீக்கல் பங்களிப்புகள் குறையும் ;) மீடியாவிக்கி பக்கங்களையும் தற்பொழுது நீங்கள் தொகுக்க இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி--ரவி 20:57, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, வாழ்த்துக்கள். வந்த கையோட நிறைய (அவசியமான) நீக்கல்கள் செய்துள்ளீர்கள். விக்கிபீடியா பக்கங்கள் துப்பரவாக்கும் பணி தொடரட்டும்.--Kanags 03:25, 2 செப்டெம்பர் 2006 (UTC)

ரவி, அந்நேரம் இலங்கை நேரப்படியும் செப்டெம்பர் 1 தான். :-) நான் அந்தளவு எண்சாத்திர நம்பிக்கையுடையவனல்ல.. kanags, நன்றி. என்னாலியன்ற சிறு பங்களிப்பைச் செய்தேன். ஆங்கில விக்கிபீடியாவில் கட்டுரைகளைத் தேடும்போது குறிப்பாகப் பெயர்கள் போன்றவற்றைத் தேடும்போது சரியான spelling தெரியாவிட்டால் அகரவரிசைப் பட்டியலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இப்போது தமிழ்விக்கிபீடியாவில் தேடுவது இலகுதான். ஆனால் ஒரு 200,000 கட்டுரைகள் வந்தபின்னர் அகரவரிசையும் தேவைப்படும். இப்பொழுதே தேவையற்ற redirect களை நீக்கிவந்தாற்தான் அப்போது தேட இலகுவாயிருக்கும் என நினைக்கிறேன். கோபி 16:05, 2 செப்டெம்பர் 2006 (UTC)

கோபி, உங்கள் பணி சரி தான். போன ஆண்டு இது போன்று தேவையற்ற வழிமாற்றுகளை நீக்கும் வேலையை செய்து வந்தேன். ஒரு வேளை, நீங்கள் அகர வரிசைப் பட்டியலில் இருந்து வழிமாற்றுகளை கண்டுபிடித்துக்கொண்டிருந்தால், அதைவிட இந்த சிறப்புப் பக்கத்தை பயன்படுத்துவது உங்கள் வேலையை மிச்சமாக்கும். இந்த சிறப்புப் பக்கமும் பயனுள்ளது.--ரவி 10:59, 3 செப்டெம்பர் 2006 (UTC)

தகவலுக்கு நன்றி ரவி. --கோபி 16:19, 3 செப்டெம்பர் 2006 (UTC)

நிர்வாகியாகிவிட்ட கோபிக்கு நன்றிகள். நின் பணி தொடர வாழ்த்துக்கள். ;)--ஜெ.மயூரேசன் 04:03, 4 செப்டெம்பர் 2006 (UTC)

geo-stub

கோபி, வார்ப்புரு:geo-stub பல கட்டுரைகளில் இணைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது காணாமல் போய்விட்டது. பல கட்டுரைகளில் சிகப்பு இணைப்பாக இருக்கிறது. ஒரு வேளை இதை நீங்கள் இதை அழித்திருந்தால் காரணம் அறியலாமா?--ரவி 14:22, 6 செப்டெம்பர் 2006 (UTC)

ரவி, ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுப் பின்னர் தமிழுக்கு நகர்த்தப்பட்டிருந்த வழிமாற்றிகளையே அழித்தேன். அப்பொழுது தவறாகவே geo-stub இனையும் அழித்து விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி --கோபி 15:41, 6 செப்டெம்பர் 2006 (UTC)

ஆங்கிலத் தலைப்புக்கள்

கோபி நான் கூகிள் ஏர்த் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவருகின்றேன் பல இடங்களை கூகிள் ஏர்த்தில் உருவாக்கிப் பின்னர் பலரும் பார்க்கக் கூடியவண்ணமாக விக்கிப்பீடியாவுடன் இணைப்புக்களை ஏற்படுத்தி வருகின்றேன். எனது வேலைகளைப் பார்வையிட விரும்பினால் நீங்கள் கூகிள் ஏர்த் பாவிப்பவராக இருந்தால் திருகோணமலையை நகரத்தை zoom பண்ணிப் பார்க்கவும் (எனது விக்கிப்பீடியாவிற்கான இணைப்பு வேலையைப் பார்பதற்கு google earth community layer tick பண்ணப் பட்டிருத்தல் வேண்டும் கூகிள் ஏர்த் மென்பொருளின் இது இடது பக்கக் கீழ் மூலையில் உள்ளது). பிரச்சினை என்னவென்றால் இப்போதைக்கு கூகிள் ஏர்த்தில் தமிழ்த் தலைப்பிற்கு நேரடியாக இணைப்புக் கொடுக்கமுடியாது இது சம்பந்தமாக கூகிளிடம் முறைப்பாடு செய்திருந்தேன் உரிய பதிலெதுவும் கிடைக்கவில்லை ஓர் தன்னியங்கிப் பதில் மாத்திரமே கிடைத்தது. இப்போதைக்கு ஆங்கிலத் தலைப்பு வழிமாற்றிகளை நீக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் ஏனெனில் ஆங்கிலத் தலைப்பை கூகிள் ஏர்த்தில் இருந்து இணைக்க இயலும். நன்றி --Umapathy 16:21, 11 செப்டெம்பர் 2006 (UTC)

கூகுள் ஏர்த் இல் தமிழ் இல்லையென்பதற்காக ஆங்கிலத்தில் வழிமாற்றிகளை வைத்திருக்க வேண்டும் என்பதை என்னால் விளங்க்கிக் கொள்ள முடியவில்லை. வழிமாற்றிகளின் தேவை கட்டுரைகளை இலகுவில் தேடியடைவதற்காகவே என்றே விளங்கி வைத்திருக்கிறேன். விடயமறிந்த பயனர்கள் தான் பதில்கூற வேண்டும். --கோபி 17:07, 11 செப்டெம்பர் 2006 (UTC)

குறுங்கட்டுரை

கோபி, ஊருக்குப் போயிருந்ததால் கடந்த மூன்று நாட்களாக பங்களிக்க முடியவில்லை. என்னால் இயன்ற வரை அக்குறுங்கட்டுரைகளை விரிவாக்குகிறேன். --Sivakumar \பேச்சு 11:35, 13 செப்டெம்பர் 2006 (UTC)


கிறிஸ்த்து குறுங்கட்டுரைக்கு இரண்டு பத்தியளவு சேர்த்து விட்டேன் விரைவில் முழுக்கட்டுரையாக மாற்றிவிடுகிறேன். சுட்டியமைக்கு நன்றி--டெரன்ஸ் \பேச்சு 06:57, 21 செப்டெம்பர் 2006 (UTC)

நீக்கும் போது கவனிக்கத்தக்கது

கட்டுரைகளை நீக்கும் போது பெறுமதி வாய்ந்த தகவலை தகுந்த இடத்தில் பிரதி செய்வது நன்று. அப்படியே நீங்க செய்து வருவதாக நினைக்கின்றேன். நன்றி. --Natkeeran 19:39, 13 செப்டெம்பர் 2006 (UTC)

எனக்குத் தெரிந்த அளவில் அவ்வாறே செய்து வருகிறேன். நான் நீக்கியவற்றுள் மூலிகைகள் தொடர்பான (பூக்கள்) கட்டுரைகளின் உள்ளடக்கத்தையே பிரதி செய்யவில்லை. அவற்றுக்குப் போதிய ஆதாரம் இருப்பதாகத் தெரியாததாலேயே முழுமையாக நீக்கினேன். தவறெனின் சுட்டிக் காட்டவும். நன்றி. --கோபி 19:42, 13 செப்டெம்பர் 2006 (UTC)

கோபி, பின்வரும் தலைப்புகளை நீக்கி விடும்படி கேட்டுக்கொள்கிறேன். (தலைப்புகளில் எழுத்துப்பிழையுள்ளவை):

நன்றி. --Kanags 07:40, 23 செப்டெம்பர் 2006 (UTC)

கோபி Kanags வேண்டுகோளுக்கமைய கோரப்பட்ட பக்கங்களை நீக்கியுள்ளேன். --Umapathy 07:52, 23 செப்டெம்பர் 2006 (UTC)
  • விக்கிபீடியா தர கண்காணிப்பில் உமாபதியின் கருத்தைக் கவனிக்கவும். தமிழ் விக்கிபீடியாவும் கூகுலும்

--Natkeeran 21:37, 25 செப்டெம்பர் 2006 (UTC)


விரிவாக்குவது

கோபி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பொருள் இலக்கணம் பற்றிய குறுங்கட்டுரையை விரிவு படுத்துகிறேன். தமிழின் தனிச்சிறப்பு வாய்ந்த இலக்கணம் இது. குறிப்பிட்டுக் காட்டியமைக்கு நன்றி.--C.R.Selvakumar 13:52, 24 செப்டெம்பர் 2006 (UTC)செல்வா

உங்கள் குறிப்புகளில்

உங்கள் குறிப்புகளில் உள் இணைப்புகளை நேரடியாக தந்தால், அதை பின்பற்றி சென்று மாற்றங்கள் செய்வதற்கு சுலபமாக இருக்கும். இல்லாவிட்டால் அவற்றை தேடி பிடிக்கவேண்டும். நன்றி. --Natkeeran 19:31, 3 அக்டோபர் 2006 (UTC)

நன்றி.

--Natkeeran 16:19, 24 அக்டோபர் 2006 (UTC)

hi

sorry, I can't read tamil, and thus I cannot read your messages. --Soman 16:31, 31 அக்டோபர் 2006 (UTC) I'm creating articles on the basis of en:User:Soman/Lang-Help-ta. I'll try to shift as many articles to tamil names as possible, but there are some that I simply can't translate due to lack of knowledge of tamil grammar. sinc.,


படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும்

கோபி, உங்களுக்கு தெரிந்த இத்தோடு தொடர்புடைய வார்ப்புருக்களையும், தகவல்களையும் சேருங்கள். நன்றி. படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் --Natkeeran 22:05, 4 நவம்பர் 2006 (UTC)

தொடர்பியல் தொழில்நுட்பம் தொடர்பாடல்

எனது தனிப்பட்ட கருத்தில் இயன்றவரைக்கும் தாய்ப் பகுப்புக்கள் இரண்டில் ஒரு பகுப்பை சேர்க்காமல் இருப்பது நன்று. அதற்கிணைய தொடர்பியல் தொழில்நுட்பம், தொடர்பாடல் என்று இரு பகுப்புக்களை தொடங்கலாமா? தொடர்பாடல் சமூகவியல் புலத்தில் ஆயும் விடயங்கள் வேறு. --Natkeeran 16:57, 5 நவம்பர் 2006 (UTC)

த இன்ஹெரிட்டன்ஸ் ஒஃப் லாஸ்

கோபி மேற் குறிப்பிட்ட தலைப்புடைய தகவல் நகர்தப்பட்டதற்கு தகுந்தகாரணம் என்ன?அறிய விரும்புகின்றேன்.இம் மாற்றத்தில் எனக்கு ஒப்பில்லை.ஒரு நாவல் எவ்வாறு புதினமாகும் மேலும் நூல் தகவல் சட்டம் எனும் வார்ப்புரு தொழிற்படுகின்றதா?என கவனிக்கவும். இன்னனும் ஆங்கிலவிக்கிக்கு link கொடுக்கவில்லை உங்களின் கருத்தின்பின் மேற்கொள்ள உத்தேசித்திருக்கின்றேன்--கலாநிதி 18:39, 9 நவம்பர் 2006 (UTC)

மறுமொழிக்கு நன்றி.அதுதான் விக்கியின் பொது கொள்கை எனின் பிரச்சனை இல்லை.எழுத்தாளர் பற்றிய கட்டுரைகளில் நாவலா?புதினமா?எந்த சொல் புழக்கத்தில் இருக்கின்றது என்பதனை முதலில் கவனிக்கவேண்டும்.மேலும் நூல் தகவல் சட்டம் எனும் வார்ப்புரு தொழிற்படுகின்றா என கவனிக்கவும்.நாளை பார்க்கலாம்--கலாநிதி 18:56, 9 நவம்பர் 2006 (UTC)

நன்றி.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை இப்ப சரிதானே...

--Natkeeran 18:05, 10 நவம்பர் 2006 (UTC)

அமெரிக்க மாநிலங்கள்.

கோபி, அமெரிக்க மாநிலத் தொடர் கட்டுரைகள் தேவையான குறைந்தபட்சத் தகவல்களை கொண்டுள்ளது. நன்று. அத்தோடு, இம்மாநிலங்களின் இருப்பிடத்தைக் காட்டும் படிமத்தை இணைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எந்த மாநிலம் எந்தப் பக்கம் இருக்கிறது என்று பல முறை குழம்பி இருக்கிறேன்--Ravidreams 16:13, 11 நவம்பர் 2006 (UTC)

காலநிலை?

தங்களுடைய மாநிலங்கள் பற்றிய கட்டுரைகளில் 'climate' என்பதற்கு 'காலநிலை'யைப் பயன்படுத்தியுள்ளீர்கள். 'தட்பவெட்ப்பம்' என்பதுதான் சரியென்று நினைக்கிறேன். இவ்வாறு மாற்ற விரும்பினால் தெரியப்படுத்தவும்.

பாலாஜி 21:59, 11 நவம்பர் 2006 (UTC)

காலநிலை பற்றிய உங்கள் கருத்தைப் படித்தேன். தாங்கள் 'standard time (as in IST or UTC)' என்பதற்கு என்ன சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள்?

பாலாஜி 16:53, 14 நவம்பர் 2006 (UTC)

குறிப்பு

கோபி, கட்டுரையில் ஆங்கில விக்கி இணைப்பு இருந்தால் மட்டும் கூடப் போதுமானது. பிறவற்றை சேர்க்கும் வேலையை சுந்தர்பாட் செய்யும்--Ravidreams 18:34, 13 நவம்பர் 2006 (UTC)

தமிழ் கட்டுரையில் ஆங்கில விக்கிக்கான இணைப்பு மட்டும் இருந்தால் போதும். பிற விக்கி இணைப்பை சுந்தர்பாட் இங்கு சேர்ப்பதோடு, தமிழ் விக்கிக்கான இணைப்பை ஆங்கில விக்கியிலும் சேர்த்துவிடும். இது தவிர ஏகப்பட்ட விக்கியிடை தானியங்கிகள் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றன. பயனர் பட்டியலில் தானியங்கிகளைத் தேர்ந்து எடுத்துப் பார்க்கலாம். மனிதர்களுக்குத் தான் இங்க பஞ்சம் :(--Ravidreams 18:53, 13 நவம்பர் 2006 (UTC)

கோபி, அந்த விஷமத் தொகுப்பை சரி செஞ்சாச்சு. அந்தப் பக்கம் தனக்குத் தானே வழிமாற்றிக் கொண்டிருந்தது தான் பக்கத்தை முன்னிலைப்படுத்த முடியாத குழப்பத்துக்கு காரணம். இது போன்ற சமயத்தில் வரலாற்றில் உள்ள கடைசி பழைய நல்ல தொகுப்புச் சென்று அதன் தொகுப்புப் பார்வையை பார்த்து மாற்றம் ஒன்றும் செய்யாமல் சேமிக்க வேண்டும். பழைய தொகுப்புப் பக்கத்தை பார்க்கும்போது விக்கிபீடியா ஒரு எச்சரிக்கை தரும். கண்டுகொள்ளாமல் முன்னிலைப்படுத்த வேண்டும் :)--Ravidreams 18:44, 14 நவம்பர் 2006 (UTC)

நன்றி ரவி - --கோபி 18:48, 14 நவம்பர் 2006 (UTC)

கோபி, முதல் வரியில படிமத்துக்கு அடுத்து இடம் விடுவது நல்லது தான். ஆனால், பிறத் தொகுப்புகள் செய்யும்போது இதையும் சேர்த்து செய்யலாமே? தனியே இதை மட்டும் தொகுப்பாக செய்வது நேரம் வீண் தானே? அவ்வளவு அவசரமான தொகுப்ப இது தெரியல..சும்மா சொல்றேன்..கோவிச்சுக்க வேணாம்..--Ravidreams 16:19, 15 நவம்பர் 2006 (UTC)

ரவி, நான் எந்த இடத்தில் அவ்வாறு செய்தேன் என்பதைச் சுட்டிக் காட்டுங்களேன். ஏனென்றால் முதல் வரியில் படிமத்துக்கு அடுத்து இடம் விட்டுள்ளதா இல்லை என்பதைத் தொகுப்புப் பார்வையில் தான் காண முடியும். ஆதலால் வேறு ஏதாவது ஒரு மாற்றஞ் செய்வதற்காகவே தொகுக்கத் தொடங்கினேன் என்பதை விளங்கிக் கொள்ளலாம். நிச்சயமாக ஒரு இடைவெளி விடுவதற்காக தொகுத்திருக்க வாய்ப்பில்லை.... --கோபி 16:24, 15 நவம்பர் 2006 (UTC)

மன்னிச்சுக்குங்க கோபி, கலைவாணர் கட்டுரையின் மாற்றத்தை டக்குனு பார்த்தப்ப அப்படி தோணுச்சு. இப்ப தான் அதில் நீங்க உள்ளிணைப்பு மாற்றங்கள் செஞ்சிருக்கிறது தெரிஞ்சுச்சு. பொதுவா, நான் பல தொகுப்புகளை ஒன்னா சேர்த்து செய்யுறதும், சிறிய மாற்றம்னா அத ஒத்தி வைக்கிறதும் வழக்கம். அது தான் சொன்னேன். --Ravidreams 16:35, 15 நவம்பர் 2006 (UTC)

சரி கோபி..நான் மன்னிச்சுக்குங்கன்னு சென்னை வழக்கில் ;) சொன்னேன். இங்க freeயா விடு அப்படிம்பாங்க !--Ravidreams 17:38, 15 நவம்பர் 2006 (UTC)

பட்டியல்கள்

கோபி, உங்கள் அவதானத்துக்கும் கருத்துக்களுக்கு நன்றி. பட்டியல்கள் அளவில் சிறிதாக, அதாவது நினைவக அளவில் சிறிதாக இருப்பது அவற்றின் இயல்பு. அந்த அளவை வைத்து பட்டியல்களின் பயன்பாட்டை நாம் மதிப்பிட முடியாது. அதேவேளை ஒன்றாக தரக்கூடிய பட்டியல்களை பிரித்து தருவதும் அவ்வளவு பொருத்தம் இல்லை. சில வேளைகளில் கட்டுரைகளுடன் பட்டியல்கள் ஒன்றாக வரலாம்.

நீங்கள் குறிப்பிட்ட உணவுகள் பட்டியல்கள் வளரக்கூடியவை, ஒவ்வொன்றும் ஒரு பகுப்புக்குள் வரகூடியது, முதலில் ஒன்றாக இருந்து பின்னர் வேறு வேறாக ஆக்கப்பட்ட பட்டியல்கள். மற்றைய சில பட்டியல்கள் ஒரு கட்டுரைக்குள் அடங்க கூடியவை. அவற்றை ஒவ்வொன்றாகத்தான் பார்க்க வேண்டும், பின்னர் விரிவாக பார்க்கலாம்...--Natkeeran 17:18, 21 நவம்பர் 2006 (UTC)

சில எண்ணங்கள்

விக்கிபீடியா போன்ற திறந்தநிலையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் சாத்தியங்கள் மிக அதிகம்தான். ஆனால் நீண்ட உரையாடல்கள் சலிப்பூட்டுகின்றன. யாரும் விக்கிபீடியாவை நம்பியில்லை; விக்கிபீடியாவும் யாரையும் நம்பியில்லை என்பது ஆறுதலளிக்கிறது.. இலக்குகள் நிர்ணயித்துச் செய்ற்படுவதென்பது ஒரு செயற்றிட்டத்துக்கு நல்லதுதான். ஆனால் தனிமரம் தோப்பாகாது. கலைக்களஞ்சியத்தரம் பேணுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காவிடின் விக்கிபீடியாவுக்கான உழைப்பு பயனற்றதொன்றாகிறது. தரம் பேணுவதற்காக பயனற்ற நீண்ட உரையாடல்களால் ஆகப்போவதொன்றுமில்லை. ஆனால் ஓரிரு கட்டுரைகள் நம்பகத்தன்மையற்றவையாயிருந்தாலும் மொத்தத் திட்டத்தின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகிறது. அப்படியாயின் பயனர்களின் உழைப்பும் வீண்தான். இணையம் என்பது விக்கிபீடியா மட்டுமல்ல. அதற்கப்பாலும் என்பதை மறக்காதிருக்க வேண்டியிருக்கிறது. --கோபி 19:25, 2 டிசம்பர் 2006 (UTC)

தரம் பேணல், விக்கியாக்கம், நடுநிலைமை, முதற்பக்க இற்றைப்படுத்தல் போன்ற விதயங்களுக்கு தனி ஆளாக முட்டி மோத வேண்டி இருக்கையில் சலிப்பும் சோர்வும் நேர்வது உண்மை தான். என்ன செய்யலாம் ;(? இன்னும் சிலர் விரைவில் இணைவர் என்று எதிர்பார்த்திருக்க வேண்டியது தான் !!!--Ravidreams 21:21, 2 டிசம்பர் 2006 (UTC)
நீங்கள் தனி ஆளாக இருப்பாதாக உணராதீர்கள். பலர் இத்திட்டத்தில் இணைந்துள்ளார்கள். சற்று விரிவாக சிந்தித்து உங்கள் கருத்துக்களை Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review பேச்சு பக்கத்தில் சேருங்கள். நன்றி. --Natkeeran 01:45, 3 டிசம்பர் 2006 (UTC)
கோபி, ஆம் நற்கீரன் கூறுவதைப் போன்று பயனர்கள் நம்பிக்கையிலேயே இணைந்துள்ளார்கள். இது ஓர் சமூக முன்னெடுப்பே. பாடசாலைக்காலத்தில் வகுப்பறைகளில் பலவிதமான மாணவர்கள் இருப்பார்கள் சிலர் குழப்படி பண்ணுவார்கள் சிலரோ எல்லாருடனுமே கதைத்துக் (பேசிக்) கொண்டிருப்பாகள் சிலர் விளையாட்டுக்களில் கூடுதல் கவனும் செலுத்துவார்கள் வேறுசிலர் கல்வியில் மாத்திரம் கவனம் செலுத்துவர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதியசத்தைக் கொண்டிருப்பர். எல்லாரும் ஒரே மாதிராயாக இருக்கமுடியாது. முன்னர் நான் ஓர் சமாதானப் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்டபோது எல்லாரும் ஒரேமாதிரியாக இருந்தால் இரண்டாவது நபர் தேவையில்லை. ஆங்கிலவிக்கிபீடியாவில் பொருத்தமில்லாததை Uncyclopedia இல் போட்டுவிடுகின்றார்கள் நமக்கு இன்னமும் அந்த வசதியில்லை. விக்கிபீடியாவிலே சிறந்த பல கட்டுரைகள் நிச்சயமாக உள்ளன. எடுத்துக்காட்டாக மயூரநாதன் எழுதிய கட்டிடக் கலைகள் சம்பந்தமான கட்டுரைகள் இங்கேயுள்ளன. மட்டக்களப்பில் இருந்து கலாநிதியும் சிறப்பாக முகாமைத்துவம் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக எழுதி வருகின்றார். செல்வா அவ்வப்போதே வந்துபோனாலும் தமிழில் தரமான உரைநடையுடன் கட்டுரைகளை எழுதியுள்ளார்எழில்நிலா.காம் இணையத்தளம், முகுந்தராஜ், மயூரன், மயூரேசனின் வலைப்பதிவு தவிர அநேகமான கணினி சார்ந்த கட்டுரைகள் இங்கேயே உள்ளன. பலதுறைகளில் கட்டுரைகளை எழுதும் நீங்கள் மற்றும் நற்கீரன் ஆகியவர்கள் மிகவும் சிறப்பாகவும் நம்பிக்கையாகவும். செயற்படுவது எனக்கு மகிழ்சியை அளிக்கின்றது. ரவியும் முதற்பக்கத்தை மேமபடுத்தி வருகின்றார். சிவகுமாரும், பாலாஜியும் எழுத்துப் பிழைகளைத் திருத்துவதோடு கட்டுரைக்ளையும் மேம்படுத்தி வருகின்றனர். யாகூ! மற்றும் கூகிள் தேடுபொறிகளில் கட்டுரைகளைத் தேடினால் அநேகமாக விக்கிபீடியாக் கட்டுரைகளே முதன்மை பெறுகின்றன. இவை எல்லாம் ஓர் ஆர்வமூட்டும் நிகழ்வுகள். ஒருசில கட்டுரைகள் தரக் குறைவாக உள்ளதும் உண்மைதான். நாம் தனியார் நிறுவனங்களில் செய்வது போன்று "Hire and Fire" அதாவது வேலைக்கு ஆட்களைச் செர்ப்பதும் ஏதாவது கருத்து முரண்பாடுகள் என்றால் நீக்கிவிடுவதையும் இங்கே செய்வது என்பது கடினமான காரியம். --Umapathy 03:03, 3 டிசம்பர் 2006 (UTC)

வேண்டுகோள்

நாட்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தாலும் அன்றாட நாட்களுக்கான கட்டுரைகளை தொடர்ந்து சற்று முன்கூட்டியே கவனித்து மேம்படுத்தினீர்கள் என்றால் முதற்பக்கத்தில் இன்னும் தகவற் செறிவோடு காட்சிப்படுத்த ஏதுவாக இருக்கும். விக்கிபீடியா உள்ள மட்டும் முதற்பக்கத்தில் இன்றைய நாள் குறித்த கட்டுரைகள் வரும். அப்படிப்பட்ட முக்கியமான கட்டுரைகளை நீங்களும் கனக்சும் முன்முயற்சி எடுத்து உருவாக்கியது நன்று. ஆக, உங்களின் கட்டுரை ஒன்று இனி தினம் முதற்பக்கத்தில் வரும். அப்புறம், கொஞ்ச நாளாகவே விக்கிபீடியாவில் புதுக் கட்டுரைகளை அதிகம் காணாமல் சுணக்கமா இருக்கு. நானும் என்னால் முடிஞ்ச அளவு அசின், பாவனா-னு எழுதிப்பார்த்துட்டேன். விரைவில் உங்க பாணியில் ;) மளமளவென சில கட்டுரைகளை சேர்ப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் ;)--Ravidreams 22:14, 9 டிசம்பர் 2006 (UTC)

ஆண்டு அறிக்கை

கோபி, உங்கள் விமர்சங்களையும், எதிபார்ப்புக்களையும், திட்டங்களையும் Wikipedia பேச்சு:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review நோக்கி தந்தால் நன்று. நன்றி. --Natkeeran 02:37, 10 டிசம்பர் 2006 (UTC)


சற்றுப்பொறுமை காக்க

நீங்கள் அனைத்துக்கட்டுரைகளிற்கும் speed delete இடுகின்றீர்களா இல்லை பைட்ஸ் குறைந்ததாகவுள்ளவற்றிற்கு அவ்வாறு இடுகின்றீர்களா மேலும் எத்தனை பைட்ஸ் க்கு மேலே ஒரு கட்டுரை இருக்க வேண்டும் சற்று விளக்குக.--நிரோஜன் சக்திவேல் 18:43, 12 டிசம்பர் 2006 (UTC)

பார்க்க

கோபி, பார்க்க படிமப் பேச்சு:Columbus.jpg. அப்புறம் நீங்களும் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளின்...வார்ப்புரு இட்டுட்டீங்களே ;(--Ravidreams 19:43, 12 டிசம்பர் 2006 (UTC).

ஒரு திருத்தம்

கோபி, நீங்கள் நான் 'சாதி' கட்டுரையில், ஜாதி என் ஒரு முறை எழுதினேன். அதை மாற்றி நீங்கள் சாதி என எழுதியுளீர். தமிழ் கூகிளில் ஜாதி என போட்டு தேடி பாருங்கள் http://www.google.com/search?q=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF&hl=ta&lr=&start=20&sa=N

9000+ விடைகள் கிடைக்கும். இலக்கிய ஏடுகள் கூட அப்படி எழுதுகிறன. அப்படியிருக்க ஜாதி என எழுதுவதில் தப்பில்லை.--விஜயராகவன் 20:35, 12 டிசம்பர் 2006 (UTC).

விஜயராகவன் கவனிக்க. ஜாதி என்று எழுதுவதும் புழக்கத்தில் உள்ளது.தப்பில்லை.ஆனால், அதை சாதி என்று எழுதுவது சரி தான். தவிர்க்க முடிந்த இடங்களை கிரந்த எழுத்துக்களை தவிர்ப்பது தமிழ் விக்கிபீடியா கொள்கை. ஜாதி என்று வழிமாற்றுப் பக்கம் உருவாக்கலாம்--Ravidreams 20:44, 12 டிசம்பர் 2006 (UTC).

ரவி, ஏன் தப்பிலாட புழக்கங்களை மாற்ற வேண்டும்? அது ஒரு பக்கம் சரீன்றீங்க, அடுத்த வாக்கியமே சாதி 'தான்' சரீன்றிங்க. நீங்க சொல்லுகிற கொள்கை எங்கேயாவது தீர்மானமாகியுள்ளதா? நாம் ஏன் பத்திரிக்கையில், இலக்கியங்களில் பயன் படுத்தர சொல்லெல்லாம் தவறாக்க வேண்டும்? நமக்கு என்ன உரிமையிருக்கு?--விஜயராகவன் 21:09, 12 டிசம்பர் 2006 (UTC)

முடிந்தவரை கிரந்த எழுத்துக்களையும் வடசொற்களையும் தவிர்ப்பது த.வி. கொள்கை. பரவலான பயன்பாடுடையவற்றுக்கு உரிய வழிமாற்றிப் பக்கங்களும் உருவாக்கப்படுகின்றன. கோபி 15:45, 13 டிசம்பர் 2006 (UTC).
மோற்கொண்ட கொள்கையைக் கொண்ட த.வி. கொள்கைகள் பக்கம் எது?--விஜயராகவன் 15:59, 13 டிசம்பர் 2006 (UTC)

அத்தகைய கொள்கைப் பக்கம் எதுவெனக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவ்வாறே தொடர்ந்து பங்களித்து வருகிறோம். ஏதாவது பேச்சுப் பக்கங்களில் உரையாடப்பட்டிருக்கலாம். கொள்கைப் பக்கம் இல்லையெனில் உரிய பக்கத்தை உருவாக்க வேண்டும். அல்லது பொருத்தமான பக்கமொன்றில் இக்கொள்கையை இணைக்க வேண்டும். கோபி 16:15, 13 டிசம்பர் 2006 (UTC)

விஜய், கோபி - பார்க்க Wikipedia பேச்சு:சொல் தேர்வு--Ravidreams 18:37, 13 டிசம்பர் 2006 (UTC)

Page Revert

Gopi, Please have a look at பயனர் பேச்சு:உமாபதி#page revert when you have time. --Umapathy 11:55, 17 டிசம்பர் 2006 (UTC)

முன்னிலையாக்கியமைக்கு நன்றி உமாபதி. நீங்கள் செய்தௌ சரியே. --கோபி 15:34, 17 டிசம்பர் 2006 (UTC)


அனைத்தினையும் நீக்குக

கோபிமுடிந்தவரை தகவல்கள் சேகரிப்பில் ஈடுபட்டும் நீங்கல் speed delete போட்ட கட்டுரைகளிற்கு தகவல்கள் கிடைக்கவில்லை அனைத்தினையும் இப்பொழுதே நீக்கக்கோருகின்றேன்.பின்னர் ஏற்படும் பெரிய பிரச்சனைகளைத் தடுக்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 16:31, 17 டிசம்பர் 2006 (UTC)

மேலும் தமிழ்த் திரைப்படக் கலை இயக்குனர்கள் பட்டியல்,தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் பட்டியல் போன்றனவற்றினையும் தற்சமய்ம் நீக்குக போதிய தகவல்கள் கிடைக்கப்பெறுமாயின் பின் உருவாக்கலாம்.--நிரோஜன் சக்திவேல் 16:52, 17 டிசம்பர் 2006 (UTC)

நாட்குறிப்புகள்

கோபி, நாட்குறிப்புகளில் சில முக்கிய நிகழ்வுகளை அழித்திருப்பதைக் கவனித்தேன். அவற்றை முற்றாக அழிப்பதை விட்டு முழுமையாக பேச்சுப் பக்கத்துக்கு மாற்றினால் நல்லது. அவை அனைத்தும் ஆவணங்கள். பின்னர் யாருக்காவது உதவக்கூடும். நன்றி.--Kanags 23:31, 25 டிசம்பர் 2006 (UTC)

உதவி

கோபி, விஷ்வல் பேஸிக் விக்கிபீடியாவில் இருந்து விக்கிநூல்களிற்கு இணைப்புக் கொடுக்கவேண்டும். வார்புருவை உருவாக்கினேன் சரிவரவில்லை. தயவு செய்து திருத்தியமைக்க இயலுமா? வார்ப்புரு:Wikibooks ஐப் பார்க்கவும். --Umapathy 17:30, 31 டிசம்பர் 2006 (UTC)

கலாநிதிக்கு வந்த சோதனை

கோபி என்னவென்று விளங்கவில்லை.எனது கணனியில் விக்கி பக்கத்தில் உங்களுடைய பெயரே காண்பிக்கின்றது.எனது பெயரில் பதிகை செய்ய முடியவில்லை என்ன வென்று சரிபார்க்கவும்.நான் இணைப்பை விட்டு தற்காலிகமாக வெளியேறுகின்றேன் இப்படிக்கு கலாநிதி

கலாநிதி, நீங்கள் மேலே இட்ட குறிப்பும் என் பெயரிலேயே பதிவாகியுள்ளது. அத்துடன் பேச்சுப் பக்க மாற்றம் எனக்கு புதிய செய்தியென அறிவிக்கப்படவும் இல்லை. விக்கி மென்பொருளுக்குப் பொழுது போகவில்லை போலிருக்கிறது. அதுவும் பாவம்தானே. கடந்த ஐந்து ஆண்டுகளில் இலட்சக் கணக்கில் பயனர்கள் அதனைப் படுத்தாத பாடு படுத்துகின்றனர். ஒரு மாற்றத்துக்கு எம்மைப் பாடுபடுத்த அது நினைத்திருக்கலாம். அல்லது எம்முடன் விளையாடிப் பார்க்கவும் நினைத்திருக்கலாம். அல்லது கலாநிதி ஏன் கலாநிதியாகவும் கோபி ஏன் கோபியாகவும் இருக்க வேண்டும் என்றும் அது நினைத்துப் பார்த்திருக்கலாம். :-) எதற்கும் கடவுச் சொல்லை மாற்றிப் பாருங்கள். நன்றி. --கோபி 17:49, 8 ஜனவரி 2007 (UTC)

ஜனவரி மாதம் விக்கிபீடியாவில் என்ன என்ன நிகழ்ந்தது என்று பார்க்கையில் உங்களின் இந்த பதில் கண்ணில் பட்டது? அயராத துப்புரவுப் பணிக்கு இடையிலும் எப்படி, எப்படி இந்த நகைச்சுவை உணர்வு ;)?--Ravidreams 17:07, 2 பெப்ரவரி 2007 (UTC)

கோபி இது ஒரு முக்கிய வழு

கோபி இது ஒரு முக்கிய வழு, சுந்தர், Ganeshk, Ravi போன்றோருடம் கலந்துரையாடி தீருவு காண முயலவும், இப்போது எனக்கு வேலை இருக்கின்றது, பின்னர் வந்து அலசிப் பார்க்கின்றேன். --Natkeeran 17:53, 8 ஜனவரி 2007 (UTC)

நிர்வாகி பொறுப்பு

கோபி முதலில் என்னை நிர்வாகி பொறுப்ப்புக்கு தகுதியுள்ளவன் என கருதியமைக்கு நன்றி. நான் விக்கியில் முதல் தொகுப்பை செய்தது 2006 யூன் 12. நாளையுடன் 7 மாதம் தான் ஆகிறது. நான் தொடர்ந்து தவிக்கு இப்போது செய்யுமளவு தொடர்ந்து பங்களிக்க முடியுமா என்பது எனது வேலைப்பழுவில் தங்கியிருக்கிறது. அது பெப்ரவரி கடைசி யளவில் தான் தெரியும். அதற்குப் பிறகு நான் இதை ஏற்பதா இல்லையா என கூறுகின்றேன். சிலவேலைகளில் பெப்ரவரிக்குப் பிறகு நான் விக்கிபக்கம் தலைக்காட்ட முடியாமலும் போகலாம்.(அது மட்டும் நடக்க கூடாதுடா சாமி) எனவே பெப்ரவரிக்குப் பிறகு நான் தொடர்ந்து பங்களித்தால் அதை நான் ஏற்கிறேன். அது வரைக்கும் அவ்வப்போது நான் delete வார்ப்புரு இடும் தேவையற்ற கட்டுரைகளை நீங்களும் ஏனைய நிர்வாகிகளும் நீக்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் விக்கியில் எனக்கு சில கெட்டபழக்கங்கள் உண்டு அவற்றை ஏனையவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை திருத்த உதவும். இப்போதைக்கு உங்கள் அழைப்பை ஏற்கமுடியாமைக்கு மன்னிக்கவும்--டெரன்ஸ் \பேச்சு 03:46, 11 ஜனவரி 2007 (UTC)

http://video.google.ca/videoplay?docid=4000153761832846346&q=long+now+digital

--Natkeeran 18:08, 14 ஜனவரி 2007 (UTC)

நன்றி நற்கீரன், ஆனால் எனது இணைய இணைப்புப் போதிய வேகமற்றதாகையால் ஒளிப்படங்களை பார்ப்பது என்பது பொதுவில் நடைமுறைச்ம் சாத்தியமற்றதாகவே உள்ளது. மிக அதிக நேரம் இணைப்பிலிருக்கச் சாத்தியமாகும் போது மிக நீண்ட நேர buffering இன் பிறகு ஆரம்பத்திலிருந்து பார்ப்பதே சாத்தியமாகும். ஆதலால் இணையத்தில் நகர்படங்கள் பார்ப்பது என்பது பெரும்பாலும் சாத்தியமற்றதே. --கோபி 18:14, 14 ஜனவரி 2007 (UTC)

நிர்வாகி அணுக்கம்

கோபி, இரவி இருவருக்கும் நன்றி.நான் தொடர்ந்து விக்கியில் செயற்பட வாய்ப்புகள் அதிகமாகி விட்டன. அதனால் நிர்வாகி அணுகத்துக்கான வாகெடுபுக்கு நான் சம்மதிக்கிறேன். நான் இன்று முதல் மார்ச் 10 வரை இலங்கைக்குச் செல்கிறேன் அதனல் ஒருமாதமளவுக்கு விக்கியில் பங்களிப்பு குறைவாக அல்லது பூச்சியமாகவே இருக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 00:07, 2 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி

கோபி, பிற பயனர்கள் பொறுப்புக்களை ஏற்கும் பொழுது, பின்னிற்பது அவ்வளவு அழகாக இருக்காது. சில நுட்ப விடயங்களையும் நோண்ட முடியுமா என்றும் பார்க்கலாம். நீங்கள் முன்னர் பரிந்துரைத்துக்கும் நன்றி. --Natkeeran 16:25, 2 பெப்ரவரி 2007 (UTC)


விக்கியைப்பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள் கோபி

ஆங்கில விக்கிபீடியாவில் ஒரு வரியில் உள்ள கட்டுரைகள் ஏராளம் ஆனால் அங்கு கால அவகாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை நான் ஆரம்பித்த வரலாற்று நூல்கள் கட்டுரைகளில் தகவல்கள் இவ்வளவுதான் ஆனாலும் பின்னாள்களில் வரும் பயனர்கள் அவற்றை விருவுபடுத்துவர்.விக்கிபீடியா ஒரே நேரத்தில் முழுமையான கட்டுரையினையும் எழுதும் பாணியில் அல்ல இது தகவல் சேகரிப்பு இறு சிறியதாகவுள்ள கட்டுரை நாளை பெரியதாகலாம் ஆனால் தகவல் ஒரு வரியில் இருந்தாலும் பரவாயில்லை.அனைத்துப் பயனர்களும் உலகின் பல தகவல்களினையும் அறிந்திருக்க இயலாது.நான் வாங்கி வந்த புத்தகத்தில் தகவல்கள் அவ்வளவுதான் அதனால் இவ்வாறு கால அவகாசம் தமிழ் விக்கியில் தேவைதான ஏனெனில் வேடிக்கையாகவுள்ளது 6000 கட்டுரைகள் உள்ள பட்சத்தில் இவ்வாறு கால அவகாசம் அளித்து கோபி அனைத்துத் தகவல்களையும் நீக்குவதில் மும்முரம் காட்டுவது.--நிரோஜன் சக்திவேல் 14:30, 7 பெப்ரவரி 2007 (UTC)

அதேபோல் நீங்கள் உருவாக்கிவரும் பாடல் பெற்ற தலங்கள் கட்டுரைகள் பல சிறியதாகவே உள்ளது உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா?!--நிரோஜன் சக்திவேல் 14:32, 7 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் நீங்கள் கால அவகாசம் அளித்த கட்டுரைகளினை தற்சமயம் நீக்குங்கள்.--நிரோஜன் சக்திவேல் 14:41, 7 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ, ஒரு மாதம் விக்கியில் இல்லாததால் நீங்கள் எந்த வரலாற்றுக் கட்டுரைகளை குறிப்பிடுகிறீர்கள் என்றுதெரியவில்லை. எனினும், எந்த ஒரு கட்டுரையையோ பயனரையோ மட்டும் கருத்தில் கொண்டு கோபியோ பிற பயனர்களோ தமிழ் விக்கி கொள்கை பரிந்துரைகளை செய்வதில்லை. இது குறித்த உரையாடல்களை, ஏன் ஒரு line கட்டுரைகளை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆலமரத்தடியில் உரையாடுங்களேன். பெருகும் குறுங்கட்டுரைகளால் தமிழ் விக்கியின் தரக் குறைபாடுகளை பற்றி ஏற்கனவே நிறைய அலசப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது.--Ravidreams 14:59, 7 பெப்ரவரி 2007 (UTC)

நிரோ, உங்கள் கோபம் நியாயமானது. ஒரு வரிக் கட்டுரைகளை நீக்க வேண்டியது கட்டாயமில்லைத்தான். ஆனால் த.வி.யை கலைக்களஞ்சியத் தரமானதாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே உங்களதும் விருப்பமாக இருக்கும். தற்சமயம் உள்ள குறுங்கட்டுரைகளில் முதல் 500 இல் அரைவாசிக்கு மேல் நான் உருவாக்கியவைதான். ஆனால் குறைந்தபட்சத் தகவல்களை உள்ளடக்கியே அவற்றைத் தொடங்கியிருக்கிறேனென்று நினைக்கிறேன். கோபி 16:57, 7 பெப்ரவரி 2007 (UTC)

தற்சமயம் நாம் தானே பங்களிப்பது அதற்கு நீங்கள் கால அவகாசம் கொடுத்து உங்கள் நேரத்தையும் கெடுக்கின்றீர் போலும் ஆகையினால் அவற்றினைச் சும்மா விடச்சொல்லவில்லை தகவல் ஒரு வரியானாலும் கிடைப்பது அரிதல்லவா.மேலும் நான் உருவாக்கும் அல்லது நீங்கள் உருவாக்கும் அனைத்துக் கட்டுரைகளுமோ அல்லது வேறு பயனர்கள் உருவாக்கப்போகும் கட்டுரைகள் அனைத்தும் ஒரு வரியன்று சில பிற நல்ல கட்டுரைகளும் உளன ஆகையினால் நீங்களே புரிந்து கொண்டுள்ளீர் என நான் புரிந்து கொள்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 17:10, 7 பெப்ரவரி 2007 (UTC)


இப்போதெல்லாம் எனக்குக் காலம் நல்லமில்லைப் போல கிடக்கு. சில தனிப்பட்ட மின்னஞ்சல்கள், நூலகம், விக்கிபீடியா என்று எல்லாப் பக்கத்தாலும் தொடருது... :-)

சில மாதங்களின் முன்னர்,

  • 512 பைட்டு அளவை விடச் சிறிய கட்டுரைகள் 300 வரை இருந்தன. இப்போது 75 தான்.
  • உள்ளிணைப்புக் கொடுக்கப்படாத, பகுப்பு இடப்படாத கட்டுரைகள் பல இருந்தன. இப்போது பெருமளவிற் குறைக்கப்பட்டுள்ளன.
  • அவசியமற்ற வழிமாற்றிகள் நூற்றுக் கணக்கில் இருந்தன. இப்போது அவசியமற்றவை எவையும் இல்லை.
  • படிமங்களுக்குப் பகுப்புக்கள் இடப்படாமலிருந்தன. இப்போது பகுப்பிடுவதும் அவசியமற்றவற்றை நீக்குவதும் ஆரம்பமாகியுள்ளது.

என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் நான் விக்கிபீடியாவை விளங்கிக் கொண்ட அடிப்படையில் தான் பங்களித்து வருகிறேன். என் அறிவெல்லைக்கு மேலோ கீழோ சிந்திக்க முடியாமையையிட்டு என்னிற் கோபப்படுவது நியாயமில்லை :-) நன்றி. --கோபி 17:21, 7 பெப்ரவரி 2007 (UTC)

கோபி கவனிக்க

இரண்டாம் விஜயபாகு - இக்கட்டுரை ஒரு வரியிலேயே உள்ளது இதனை அழிப்பதனால் என்ன பயன் அல்லது இப்படியே விடுத்துப் பின்னர் வேறொருவர் தகவல்களினைச் சேர்ப்பாராயின் என்ன பயன் கூறுங்கள் தெளிவுபடுத்துங்கள்.--நிரோஜன் சக்திவேல் 17:25, 7 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் நான் ஒரு வரியில் மட்டும் விடுவது காரணம் வேண்டுமென்றே அல்ல அவ்வளவு தகவல்களே உளன.--நிரோஜன் சக்திவேல் 17:27, 7 பெப்ரவரி 2007 (UTC)

இருப்பினும் பிற புத்தகங்களினைப் படிக்கும் போது தகவல்களினைப் பெற இயலும்.அதற்குள் நீங்கள் கால அவகாசமிட,நான் புத்தகத்தினை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள எப்படியும் நீங்கள் அழித்துவிடுவீர் போல் உள்ளது நிலை.--நிரோஜன் சக்திவேல் 17:31, 7 பெப்ரவரி 2007 (UTC)

மேலும் விக்கியில் உள்ள எந்தவொரு கட்டுரையும் நிறைவுடன் உள்ள கட்டுரைகள் அல்ல என்பதனையும் புரிந்து கொள்ளும்,கோபி.--நிரோஜன் சக்திவேல் 17:31, 7 பெப்ரவரி 2007 (UTC)

த.வி.யை ஆ.விக்கியுடன் ஒப்பிட்டுக் குழம்பிக் கொள்ள வேண்டாம். அங்கே ஒருவர் தொடங்கியதைத் தொடரப் பல்லாயிரம் பேர் உள்ளனர். ஆனால் இங்கு அப்படியல்ல. வங்கி கட்டுரை நல்ல உதாரணம். அது முதலில் ஒரு வரிக்கட்டுரையாக இருந்த போது பலகாலம் எவராலும் வளர்த்தெடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டுச் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டது. --கோபி 17:35, 7 பெப்ரவரி 2007 (UTC)

எது எப்படியோ நீவீர் விரும்புவதை ஆற்றுக.--நிரோஜன் சக்திவேல் 17:41, 7 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. --Natkeeran 02:46, 10 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்கள்

கோபி, நீங்கள் ஊருக்குப் போவதற்கு முன்னர் சொன்னது போல் சில படங்களை எடுத்து வந்து பதிவேற்றி உள்ளேன். பார்க்க - பதிவேற்றப் பதிகை. இன்னும் சில படங்களை பொருத்தமான கட்டுரைகளில் பின்னர் இணைக்கிறேன். இந்த படிமங்களுக்கு பொருத்தமான creative commons வார்ப்புருக்கள், படிமப் பகுப்புகள் இருந்தால் சொல்லி உதவுங்கள். கொஞ்ச நாட்களாக, தமிழ் விக்கிபீடியா பகுப்பு முறையை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவு விரிந்து வருகிறது --Ravidreams 11:58, 11 பெப்ரவரி 2007 (UTC)

வணக்கம் கோபி

கோபி என்னமாதிரி நலமாக உள்ளீர்களா?--ஜெ.மயூரேசன் 18:15, 11 பெப்ரவரி 2007 (UTC)


கோபி கவனிக்க

எவ்வாறு அடொபியில் புத்தகங்களைச் சேர்ப்பதனைக் கூறவும்.--நிரோஜன் சக்திவேல் 16:57, 12 பெப்ரவரி 2007 (UTC)

Melbourne

கோபி, மெல்பேர்ண் என அழைப்பதே சரியானது. அப்படியே அவுஸ்திரேலியர்கள் கூறுகிறார்கள் (குறிப்பாக மெல்பேண், ஆனால் தமிழில் மெல்பேர்ண் கூடப் பொருந்தும்). மெல்பேர்ணில் வசிக்கும் சில தமிழர் மெல்போர்ண் என்றே கூறி வருகிறார்கள். அங்கிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலியிலும் அப்படியே உச்சரிக்கிறார்கள். மெல்பேர்ண் என்பதையே முன்னிலைப்படுத்த வேண்டும். நமது பயனர்:வசந்தன் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்திருக்கிறார்.--Kanags 03:22, 14 பெப்ரவரி 2007 (UTC)

கருத்து வேண்டல்

சென்னை விக்கிப் பட்டறை குறித்த தமிழ் விக்கி அறிக்கை இங்கு உள்ளது. அதை மேம்படுத்தித் தர, கருத்துகள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தவிர, அண்மையில் மொழி சார் உரையாடல்கள் பெருகி, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி இருக்கிறது. இதை தவிர்க்க உங்கள் அனைத்து கருத்துக்களையும் இங்கு குவிக்கவும். நன்றி. --Ravidreams 14:00, 16 பெப்ரவரி 2007 (UTC)

எவை பயன்படதா படிமங்கள்?

ஒரு பக்கத்திலும் பயன்படவில்லை என்பதற்காக ஒரு பக்கத்தை நீக்குவது வரவேற்கத்தக்கது அல்ல. பின்னர் பயன்படக் கூடும், அல்லது பிறருக்கு பின்னர் பயன்படக் கூடிம். அவற்றை வேறாக அடையாளப்படுத்துவது அல்லது வகை செய்வது நன்று, ஆனால் நீக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கருத்து என்ன? --Natkeeran 18:22, 16 பெப்ரவரி 2007 (UTC)

படிமங்களுடன் தொடர்புடைய சுட்டிகள்

படிமங்களுடன் தொடர்புடைய சுட்டிகளை தொகுக்க தொடங்கியுள்ளேன் (பார்க்க படிம கொள்கைப் பக்கம்); அதிகம் இராது; உங்களுக்கும் தெரிந்தவற்றை தாருங்கள். மேலும், அங்கும் இங்கும் இடம்பெற்ற கலந்துரையாடல்களையும் அங்கு சேர்த்தால் கொள்கை-வழிகாட்டல் உருவாக்கத்தற்கு உதவும். நன்றி. மேலும், படிமங்கள் தொடர்பாக என்ன என்ன கொள்கைகள் வழிகாட்டல்கள் தேவை என்பதையும் குறித்தால் நன்று. --Natkeeran 18:38, 16 பெப்ரவரி 2007 (UTC)

தலைப்பைப் பிரித்தெழுதுவது பற்றி

கோபி, நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் இப்படிக் கேட்டிருந்தீர்கள்: "பண்டங்களின் பெயர்களை இடைவெளி விட்டு எழுதுவதா அல்லது சேர்த்து எழுதுவதா பொருத்தமானது? இலவசப் பண்டம், பிரதியீட்டுப் பண்டம் என்றவாறாகப் பிரித்து எழுதுவது சரிபோற்படுகிறது. உங்கள் கருத்தறிந்து மாற்றஞ் செய்வதைக் கலாதி விரும்புகிறார்."

பிரித்து எழுதுவதே நல்லதென்பது என் கருத்து. ஏன் எனில் படிக்கச் சற்று எளிதாக இருக்கும். சிறு தொடர்கள் என்றால் - எடுத்துக் காட்டாக, "ஏன் எனில்" என்பதை ஏனெனில் என எழுதலாம். இங்கு கூட ஏன் எனில் எனப் பிரித்து எழுதவதால் தவறில்லை. படிக்க எளிதாக இருக்கும். --செல்வா 15:32, 18 பெப்ரவரி 2007 (UTC)

ஏன் என்றால் = சரி ஏனெனில் = சரி ஏன் எனில் = சரியாகப் படவில்லை --ஞானவெட்டியான் 16:34, 11 மார்ச் 2007 (UTC)

படிமங்கள்

நான் பதிப்பேற்றிய படங்களை நீக்காதீர்கள். நீக்க வேண்டியவை என்று நீங்கள் கருதினால், எனக்கு ஒரு குறிப்பு தாருங்கள். சில சமயங்களில் நான் பொதுவில் இருந்த் எடுத்து மாற்றங்கள் செய்தே இங்கு பதிவேற்றியிருக்கின்றேன். நன்றி. --Natkeeran 22:53, 20 பெப்ரவரி 2007 (UTC)


கோபி, மதி பதிவேற்றிய படிமங்கள் அவருடையதே. சோயா போன்றவை. நீங்கள் ஒரு செயற்திட்டம் வைத்து நகர்வதாக தெரிகின்றது. இன்னும் கனக்க இருக்கின்றதா. இனி கவனமாக இருக்க வேண்டும். மூலமும், உரிமமும் கட்டாயம் தரப்பட வேண்டும் என்பதில் இறுக்கமாக இருக்க வேண்டும். --Natkeeran 19:01, 22 பெப்ரவரி 2007 (UTC)


புதுப் பயனர்கள் தொடர்பாக இளகிய அணுகுமுறையும் தேவை. அத்தோடு, காப்புரிமை, உரிமம், அளிப்புரிமை தொடர்பான விளக்கங்கள்களும் தேவை. அவை ஆக்கப்பட்ட பின்பு நீங்கள் கூறியவாறு நேர்த்தியான ஒரு வழிமுறையை பின்பற்றலாம். நன்றி. --Natkeeran 19:09, 22 பெப்ரவரி 2007 (UTC)

பாராட்டு

கோபி, உங்கள் ஆக்கப் பணிகளை மிகவும் மனமுவந்து பாராட்டுகிறேன். நல்ல வழிகாட்டு! அண்மையில் 6 நாட்களில் 110 கட்டுரைகளுக்கும் மேல் நம் பயனர்கள் எழுதியதை ஒட்டி நான் என் பயனர் பக்கத்தில் எழுதியதை கீழே தருகின்றேன்.

110 கட்டுரைகள் 6 நாட்களில்

சுமார் 110 கட்டுரைகளை பெப்ரவரி 18 ஆம் நாள் முதல் இன்று இப்பொழுதுவரை, சுமார் 6 நாட்களில் நம் பயனர்கள் ஆக்கியுள்ளனர். இது ஒரு நல்ல முன்னேற்றம். நாம் எல்லோரும் மயூரநாதனின் வழிகாட்டுதலின் படி முழு முனைப்பாய் இயன்ற வரை புதுக் கட்டுரைகள் ஆக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு சராசரியாய் 3 கட்டுரைகள் எழுதி வந்தால் 10 பயனர்களே கூட் 100 நாட்களில் 3000 கட்டுரைகள் எழுதி நாம் 10,000 கட்டுரைகளின் இலக்கை அடைவோம். கோபியைப் போல களப்பணி ஆற்றிக் கொண்டே ஏராளமான கட்டுரைகளை எழுதுவது எல்லாராலும் இயலாவிடினும், மயூரநாதனைப் போல கட்டுக் கோப்பாய், அமைதியாய் கருத்து செறிந்த அருமையான கட்டுரைகளை விறுவிறு என்று எல்லோராலும் ஆக்க இயலாவிடினும், நாம் எல்லோரும் ஆளுக்கு சுமார் 3 குறுங்கட்டுரைகள் (4-5 வரி இருந்தாலே போதும் - தொடக்கத்திற்கு), எழுத இயலும் என நினைக்கிறேன். நாம் சற்று விரைவாய் முந்துவோம். பல தர அளவீடுகளில் தமிழ் விக்கி இந்திய மொழிகளுள் முன் நின்றாலும், நாம் கடந்த ஓராண்டு காலமாக பன்மொழி விக்கியில் 70-72 ஆகிய இடங்களிலேயே உள்ளோம். சற்று முனைப்பாக எல்லோரும் பணி புரிந்தால் விரைவில் 10,000 கட்டுரைகள் எட்டுவதன்றி, பன்மொழி விக்கி வரிசையில் ஒரு 4-5 இடங்களாவது முன்னேறுவோம் என நினைக்கிறேன். முன்னேற வேண்டும். இதனை பொது வேண்டுகோளாய் எல்லோருக்கும் விடுக்கின்றேன். நன்றி. --செல்வா 15:43, 23 பெப்ரவரி 2007 (UTC)

செல்வா, உங்கள் பாராட்டுக்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் பாராட்டுமளவுக்குக் குறிப்பிடத்தக்க பங்களித்ததாக நான் உணரவில்லை. நான் இதுவரை உருவாக்கிய அனைத்துமே குறுங்கட்டுரைகள். வேறு பணிகளில் தீவிரமாக இருப்பதாம் த.வி.யில் முழுமூச்சாகப் பங்களிக்க முடியாத நிலையிலுமுள்ளேன். ஆயினும் 01.06.2007 ஐ இலக்கு வைத்து என் பங்குக்கு 300 குறுங்கட்டுரைகளை உருவாக்க முயல்கிறேன். நன்றி. கோபி 15:58, 23 பெப்ரவரி 2007 (UTC)

awb

கோபி, பகுப்புப் பெயர் மாற்றம் போன்ற தொடர்ச்சியான ஒரே மாதிரியான சிறு தொகுப்புகளுக்கு auto wiki browser சிறந்தது. அதை பயன்படுத்திப் பாருங்களேன். எளிது தான். --Ravidreams 15:02, 24 பெப்ரவரி 2007 (UTC)

மண்டைதீவு

கோபி, மண்டைதீவு ஒரு தனியான ஒரு தீவா...நாலுபக்கமும் கடலால் சூழப்பட்டு. அல்லது லைடன் தீவுடன் இணைக்கப்பட்ட பகுதியா. ஏன் என்றால் சப்த தீவுகளுக்குள் அது வரவில்லை. --Natkeeran 18:44, 24 பெப்ரவரி 2007 (UTC)

நற்கீரன், அது மழைகாலத்தில் தனித்தீவாகவும் கோடைகாலத்தில் வேலணைத்தீவுடன் இணைந்தும் காணப்படுகிறது. சப்த தீவுகள் என்ற பெயர்ப் பயன்பாடு தொடங்கிய காலத்தில் அது மழைகாலத்திலும் வேலணைத்தீவுடன் இணைந்திருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறேன். --கோபி 18:49, 24 பெப்ரவரி 2007 (UTC)
எதிர்பார்க்காத ஒரு விளக்கம். இதைத்தான் local knowledge என்பார்களோ. நன்றி. --Natkeeran 19:19, 24 பெப்ரவரி 2007 (UTC)

புங்குடுதீவு

கட்டுரையை மேம்படுத்திதர வேண்டும். படங்களும் நன்றாக இருக்குமே. --Natkeeran 19:23, 24 பெப்ரவரி 2007 (UTC)

கட்டுரைப் பரப்பு

கோயில்கள் பற்றி கட்டுரைகள் நன்று. இருப்பினும் உயிரினங்கள், மொழிகள், நோய்கள், இனங்கள், ஊடகங்கள் (தமிழ்), இணைய இதழ்கள் (தமிழ்) போன்றவற்றை பற்றியும் எழுதினால் நன்றாக இருக்கும். த.வி கட்டுரை பரப்புக்கு வலுச் சேர்க்கும். --Natkeeran 21:35, 24 பெப்ரவரி 2007 (UTC)

கோபி, நீங்கள் எது எழுதினாலும் நல்லதே. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதில் எழுதுங்கள். நற்கீரன் சொல்வதில் வலு இருந்தபொழுதும், களப்பணிகளுக்கு இடையே இத்தனை குறுங்கட்டுரைகள் ஆக்குவது மகிழ்ச்சி ஊட்டுவதாக உள்ளது. பின்னர் நீங்கள் இட்ட கட்டுரைகளுக்கு வலு சேர்க்கும் பிற செய்திகளும் ஆங்காங்கே இட வேண்டும் என எண்ணியுள்ளேன். இராமேசுரம் போன்ற பல இடங்களுக்கு ஆங்கில விக்கியில் படங்களும் பிற தரவுகளும் உள்ளன. என்னிடமும் பாடல் பெற்ற தளங்கள் பற்றி செய்திகள் உள்ளன. நேரமின்மையே உங்கள் இடுகைகளுக்கு புதிய செய்திகள் தரவுகள் சேர்க்க முடியாமல் இருக்கின்றது. நற்கீரன் தவறாக எண்ண மாட்டார் என்றே இதனை இங்கு இடுகின்றேன்.--செல்வா 21:54, 24 பெப்ரவரி 2007 (UTC)

வரம்பை மீறி விட்டதாக உணர்கின்றேன்.

கோபி, படங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் போல தெரிகின்றது. மூலம், உரிமம் இது இரண்டையும் விட்டுக்கொடுக்காமல் பார்க்க வேண்டும்.

எந்த பட்டியலில் இவையெல்லாம் குவிந்து இருக்கின்றன? இன்னும் எவ்ளவு உண்டு?

எதோ வேகத்தில் மேலே பரிந்துரைகள் சொல்லிவிட்டேன். செல்வா கூறியமாதிரி உங்கள் ஈடுபாட்டுக்கு ஏற்ற மாதி பங்களித்தால் நன்று. வரம்பை மீறி விட்டதாக உணர்கின்றேன்.

நன்றி. --Natkeeran 16:21, 25 பெப்ரவரி 2007 (UTC)

புதுப் பயனரும் படிமங்களும்

படிமம்:Kokilam Subbiah.jpg கோபி, பாலச்சந்திரன் கோப்பேற்றிய படிமத்தை நீக்காதீர்கள். புதுப் பயனர்களுக்கு விளக்கங்கள் தருவது நன்று. உங்களுக்கு இது தெரியும், ஆனால் சில வேளைகளில் பதிவேற்றியவரி கவனிகாமல் நீக்கிவிடவும் வாய்ப்புக்கள் உள்ளது அல்லவா...--Natkeeran 16:58, 26 பெப்ரவரி 2007 (UTC)

Re.நன்றி

கோபி, என் பதிலுக்கு தயவு செய்து ரவியின் பயனர் பக்கத்தைப் பார்க்கவும். --Madhu 17:05, 1 மார்ச் 2007 (UTC)

அடிப்படைக் கட்டுரைகள்

கட்டில், கதிரை, மேசை, கத்தி, கரண்டி போன்ற மிக அடிப்படையான விடயங்கள் பற்றிய கட்டுரைகளே இன்றுதான் ஆக்கப்படுகின்றன. நாம் 10000 த்தை நோக்கிப் பயணிக்கையில் இவ்விடயத்தையும் கவனத்தில் எடுப்பது நல்லது. இக்கட்டுரைகளை ஆ.வி.யிலிருந்து மொழிபெயர்ப்பதற்கு எத்தகைய துறைசார் அறிவும் அதிகம்தேவையில்லை என்பதால் அனைத்துப் பயனர்களையும் கவனம் எடுக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 17:54, 4 மார்ச் 2007 (UTC)

பட்டியல்களும் பகுப்புக்கள்ம்

மரவேலைக் கருவிகள், நகர்ப்புறக் கலைகள் பட்டியல், சூழல் பேணல் செயல்பாடுகளின் பட்டியல் போன்ற சிறு பட்டியல்கள் தனிக்கட்டுரைகளாக இருக்கத் தகுதியற்றவை. ஆனால் எழுதப்பட வேண்டிய தலைப்புக்களை அடையாளங் காண வேண்டும் என்ற தூர நோக்கின் அடிப்படையில் அவை அவசியமானவையாக உள்ளன. ஆனால் பகுப்பு:மரவேலைக் கருவிகள் போன்ற ஒற்றைக் கட்டுரைகளைக் கொண்ட பகுப்புக்களை அதிகரித்துக் கொண்டே செல்வது பொருத்தமானதா? ஏன் இவ்வாறாக உணர்கிறேனென்றால் பகுப்புக்கள் அளவுக்கதிகம் இருப்பது புதுக்கட்டுரைகள் உருவாக்க வேண்டிய தலைப்புக்களை அடையாளங் காண்பதைச் சிக்கலாக்கும். கட்டுரைகள் அதிகரிக்கும்போது புதிய பகுப்புக்கள் தாமாக உருவாகி வரும் வளர்ச்சி பொருத்தமானது போற் படுகிறது. இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்தான். தெளிவான நிலைப்பாடென்றும் இல்லை. நீங்களும் ரவியும் பகுப்புக்கள் தொடர்பில் தேடியவற்றிலிருந்து பெற்ற முடிவுகளை அறிய ஆவல். --கோபி 18:02, 6 மார்ச் 2007 (UTC)

ஆமாம், நீங்கள் சொவதும் சரிதான். இந்தப் பட்டியல்களை விரைவாக விரிவாக்கி தருகின்றேன். உங்கள் கருத்தையு கவனத்தில் கொள்கின்றேன். கருவிகள் பகுப்பில் இட்டு விட்டு, சிறு தொகை கட்டுரைகள் சேர்ந்த பின்பு பகுப்பை ஏற்படுத்துவதே நல்ல நடைமுறை. நன்றி. --Natkeeran 18:06, 6 மார்ச் 2007 (UTC)

கோபி வருத்தமா?

கோபி, நான் விடுத்த மறுமொழிகளில் ஏதேனும் உங்கள் மனதைப் புண்படுத்தியிருக்குமெனில், அருள்கூர்ந்து என்னை மன்னியுங்கள். உங்களுக்கு மனவருத்தம் தரும் நோக்கில் நான் ஏதும் ஒருசிறிதும் எழுத நினைக்கவில்லை. தமிழர்களே தமிழைப் போற்றாது இருப்பதைக் கண்டு சில நேரங்களில் என் ஆற்றாமை வெளிப்படுவது உங்களைப் போன்றவர்கள் பற்றியதே அல்ல. நான் அறியாது உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். --செல்வா 00:16, 8 மார்ச் 2007 (UTC)

உங்கள் மறுமொழிக்கு நன்றி கோபி. நான் உண்மையிலேயே வருந்துகிறேன். இப்படி சொல்லில் சோர்வு ஏற்பட்டதே என்று. நன்றி.--செல்வா 13:19, 8 மார்ச் 2007 (UTC)

குறிப்பு

கோபி, கட்சிகள் குறித்த தானியங்கிக் கட்டுரைகளுக்கு நீக்கு வார்ப்புரு இடுவது அவசியம் என்று தோன்றவில்லை. ஏற்கனவே வாக்கெடுப்பில் தெரிவித்து விட்டோம். நீக்கு வார்ப்புரு இட்டு நீக்குவது இரட்டை வேலை--Ravidreams 20:30, 8 மார்ச் 2007 (UTC)

ஓராண்டும் 901 குறுங்கட்டுரைகளும்

த.வி.யில் நான் தொகுக்கத் தொடங்கி இன்றோடு ஓராண்டாகிறது. நாளை தொடங்கும் இரண்டாவதாண்டில் முதலாண்டைப் போல அதிகம் பங்களிக்கக் கூடியதாயிராது என்றாலும் தொடர்ந்தும் சில பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதுவரை என் பங்களிப்புக்கள் பெருமளவில் குறுங் கட்டுரை உருவாக்கமாகவே இருந்து வந்துள்ளது. மேலும் ஒழுங்கமைப்பு, துப்பரவாக்கற் பணிகளான பகுப்புக்கள் ஒழுங்கமைத்தல், படிமப் பகுப்பு, ஆங்கில உரைப் பகுதிகள் நீக்கம், பயன்படாத படிமங்கள் நீக்கம், அவசியமற்ற வழிமாற்றிகள் நீக்கம் போன்ற பணிகளில் ஓரளவும் தரம் பேணும் நடவடிக்கைகளான மிகச்சிறு கட்டுரைகள், கலைக்களஞ்சியத்துக்கு ஒவ்வாத கட்டுரைகள் நீக்கம், குறுங்கட்டுரைகள் விரிவாக்கம், கட்டுரைகள் உரை திருத்தம், வெளியிணைப்புக்கள் வழங்குதல் போன்றவற்றை அவ்வப்போதும் செய்து வந்துள்ளேன்.

சில சமயங்களில் காட்டமான உரையாடல்களில் ஈடுபட்டுள்ளேன். பெருமளவு நீக்கல்களைச் செய்துள்ளேன். இவை யாரையாவது மனம் நோகச் செய்திருப்பின் வருந்துகிறேன். ஆயினும் கலைக்களஞ்சியத் தரம் பேணல் என்ற நன்னோக்கம் ஒன்றையே மனதில் வைத்துச் செயற்பட்டு வந்திருக்கிறேன். இதுதவிர என் செயற்பாடுகளிலுள்ள வேறு குறைகளைச் சுட்டிக் காட்டினால் திருத்தக் கூடியதாயிருக்கும். நன்றி. கோபி 02:08, 13 மார்ச் 2007 (UTC)

உங்கள் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது. ஓராண்டு தான் என்றாலும் பல தொகுப்புக்களைச் செய்துள்ளீர்கள். ஆரம்பத்தில் நான் உங்கள் கோபத்தினைப் பார்த்துக் கோபித்துக் கொண்டாலும் பின்னர் அக்கோபம் கொள்ளும் கோபி தமிழ் விக்கிபீடியாவின் முன்னேற்றத்திற்காகச் செய்கின்றார் எனப் பின்னர் அறிய முடிந்தது. நான் தவறுதலாக உங்களை விமர்சிப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நானும் பன்பலுக்குத் தான் கூறினேன்.--நிரோஜன் சக்திவேல் 02:20, 13 மார்ச் 2007 (UTC)

வாழ்த்துக்கள் கோபி. சில சமயங்களில் நீங்கள் சற்று வேகமாக அல்லது தீவரமாக செயற்படுகின்றீர்களோ என்று எண்ணியதுண்டு. இருப்பினும், பின்னோக்கி நோக்குகையில் அனேகமாக உங்கள் நிலைப்பாடுகள் நன்றாகவே வடிவு பெற்றன. அதற்கு உங்களின் அலப்பு தட்டாத பணி காரணம் எனலாம். ஆரம்பத்திலேயே பல கவணிப்பு பணிகளை செய்து நல்ல கட்டமைப்பை அமைத்தீர்கள். Purging நாம் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்று. படிமங்களை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்று நினைக்கின்றேன். வெளியிணைப்புகளை பற்றியும் ஒரு கையேடு ஒன்றை தயாரிக்கலாம். அதற்கு அந்த கலந்துரையாடல்கள் அடிப்படையாக அமையும். மிக்க நன்றி. --Natkeeran 02:32, 13 மார்ச் 2007 (UTC)
கோபி, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்! வியப்பூட்டும் 901 கட்டுரைகள்! அதுவும் இதனை பணிகளுக்கு இடையே! வாழ்க உங்கள் பணி! த.வியின் முன்னோடிகளில் ஒருவராகிய உங்கள் பணி என்றும் நிற்கும். விடாது, இயன்றளவு ஆக்கங்கள் செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.--செல்வா 02:39, 13 மார்ச் 2007 (UTC)

கோபி, வாழ்த்துக்கள். அக்டோபர் 2, 2005லேயே நீங்கள் தமிழ் விக்கிக்கு வந்து விட்டீர்கள். இருந்தாலும் முனைப்புடன் பங்காற்றத் தொடங்கி ஓராண்டு என நினைக்கிறேன். 1000 குறுங்கட்டுரை போடும்போது சொல்லுங்கள். விக்கிப் பதக்கம் தருகிறேன் :)--Ravidreams 08:45, 13 மார்ச் 2007 (UTC)

இந்த விழாமேடையில் பேசுவதற்கு எனக்கும் வாய்ப்புக்கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இப்படியாக கோபி தன் துணையுடன் திருமண வாழ்க்கையில் பல்லாண்டுகாலம் வாழ்ந்து விக்கிபீடியாவின் துப்புரவுப்பணியினையும் தொடர வாழ்த்துக்கள் ;-D --மு.மயூரன் 15:01, 13 மார்ச் 2007 (UTC)

கோபி, ஒராண்டுக்குள் 901 நிச்சயமாக ஓர் சாதனைதான். தாங்கள் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பது குறித்து மகிழ்ச்சியே. தாங்கள் நீக்கியவை குறித்து கவலைப்படவேண்டியதில்லை ஏதாவது பிழை என்றால மீள்வித்து விடலாம். பணிதொடர வாழ்த்துக்கள். :) --Umapathy 15:08, 13 மார்ச் 2007 (UTC)

கோபி வாழ்த்துக்கள் --கலாநிதி 16:57, 13 மார்ச் 2007 (UTC)

கருத்தக்கள் பகிர்ந்த நிரோ, நற்கீரன், செல்வா, ரவி, மயூ, உமாபதி, கலாநிதி அனைவர்க்கும் என மனமார்ந்த நன்றிகள். கோபி 15:37, 14 மார்ச் 2007 (UTC)