பயனர் பேச்சு:கோபி/தொகுப்பு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வருக

வருக கோபி! தமிழ் விக்கிபீடியாவின் மீது தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்திற்கு நன்றி -சிவகுமார் 07:11, 2 அக்டோபர் 2005 (UTC)

வாருங்கள் கோபி! உங்களின் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்த முனைவோம். நன்றி. --Natkeeran 14:51, 9 மார்ச் 2006 (UTC)

இலங்கையை சேர்ந்த ஒருவரை விக்கிப்பீடியாவில் சந்திப்பதில் மகிழ்ச்சி.உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்.--ஜெ.மயூரேசன் 04:07, 21 மார்ச் 2006 (UTC)

பாராட்டுக்கள்

கோபி தங்களுடைய பங்களிப்புகள் கண்டேன். நன்று. தொடரட்டும் தங்கள் பணி. -- சிவகுமார் 04:49, 17 மார்ச் 2006 (UTC)

கோபி, உங்கள் கிரிக்கெட் வீரர்கள் வகைப்படுத்தல் நன்று. --Natkeeran 00:59, 20 மார்ச் 2006 (UTC)

hi gud to see u creating new articles and organising this site. ur contribution will greatly help improve tamil wikipedia quality. sorry for writing in english as i am surfing from a browsing centre :(--ரவி 05:31, 20 மார்ச் 2006 (UTC)

கோபி உங்கள் கட்டுரைகளைப் வாசித்தேன் நன்றாக இருக்கின்றது. தொடர்ந்தும் எழுதுங்கள். --உமாபதி 16:08, 25 மார்ச் 2006 (UTC)

ஆலோசனைகள்

வகைப்படுத்தல்

கோபி, விக்கிபீடியாவில் நுண்ணியமாக வகைப்படுத்தல் அவசியம். பெரிய பகுப்புக்களில் எல்லாவற்றையும் அடைக்க முடியாது. உதாரணமாக, ஒரு நாட்டை பற்றி பிற தகவல்களையும் அப்பகுப்பில் இணைப்பதற்காகத்தான், அப்படி பகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதை நீக்குவது தவறு. த.வி. ஒரு நீண்ட நோக்கில் பார்ப்பது அவசியம். வகைப்படுத்தல் பற்றி சற்று பரிச்சியம் வரும் வரை, பிற பகுப்புக்களை நீக்காமல் இருந்தால் நன்று. நன்றி. --Natkeeran 13:26, 23 மார்ச் 2006 (UTC)

கோபி, வகைப்படுத்தலின் போது நாம் பல விடயங்களை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு விடியம் ஒரு பகுப்பில் மட்டும் வகைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நுண்ணியமாக வகைப்படுத்த வேண்டும், அதேவேளை வழக்க வகைப்படுத்தலுடன் பரிச்சியப்பட்ட வகைக்குள் அடங்கும்மாறும் வகைப்படுத்த வேண்டும். மேலும் தகவல்களை பின்னர் பகிர்கின்றேன். எனினும்,

ஒருமையிலா பன்மையிலா பகுப்புக்கள் ஏற்படுத்த வேண்டும் என்று தெளிவு இல்லாமல் இருப்பது உண்மைதான். இதைப்பற்றி நாம் மேலும் அலச வேண்டும். --Natkeeran 14:47, 23 மார்ச் 2006 (UTC)

ஈழ இலக்கிய பகுப்புக்கள்

கோபி, ஈழத்து இலக்கியம் என்ற பகுப்பின் கீழ் இருந்த பகுப்புக்களை ஏன் நீக்கின்னீர்கள் என்பது புரியவில்லை. அப்பகுப்புக்கள் மயூரனுடன் கலந்துரையாடியே ஏற்படுத்தப்பட்டன. அவை நீண்ட திட்ட நோக்கை கொண்டவை. பல பகுப்புக்கள் அப்படி ஏற்படுத்தபடுவதுண்ட்டு, உதாரணமாக இயற்பியலில் சில பகுப்புக்களில் பகுப்பை விளக்க இடப்பட்ட கட்டுரை மட்டும் இருப்பதை நீங்கள் காணலாம். ஆனால் அப்பகுப்புக்களில் மேலும் கட்டுரைகள் இணைக்கப்படும் என்று கருதியே இப்படி பகுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து இப்படி மாற்றங்கள் செய்யும் பொழுது விளக்கம் தந்து செய்யுங்கள், அல்லது முன்னறிவுப்பு செய்து பிறர் அலோசனையையும் கேட்டு செய்யுங்கள். நன்றி. --Natkeeran 13:19, 23 மார்ச் 2006 (UTC)

Please read the following section at Alamarathadi: இலங்கை தமிழ் இலக்கியம் பகுப்பை நூலக திட்டத்துடன் இணைந்து வகைப்படுத்தல் --Natkeeran 14:02, 23 மார்ச் 2006 (UTC)

கோபி: ஈழத்து எழுத்தாளர்கள் என்ற பகுப்பு எழுத்தாளர்கள் என்ற பகுப்பின் கீழும் இருப்பதால், எழுத்தாளர்கள் என்ற பகுப்பிலும் ஈழத்து எழுத்தாளர்களை இடுவது தேவையற்றது. பகுப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பு அப்படி செய்யப்பட்டிருக்கலாம், உங்களால் ஈழத்து எழுத்தாளர்களை அடையாளம் காணக்கூடிய்தாக இருந்தால், மீள் பகுப்பு படுத்தி விடுங்கள். நன்றி. --Natkeeran 15:50, 19 மார்ச் 2006 (UTC)

நூல்கள் பகுப்பு

விக்கி நூல்கள் இருக்கின்றன. எனவே, நூல்கள் என்ற பகுப்பில் பலவற்றை இணைப்பது பொருந்தாது. நூல்கள் என்ற பகுப்பில் நூல் என்றால் என்ன? நூலின் வரலாறு போன்ற நூல்களை பற்றிய தகவல்களை இணைப்பதுவே பொருந்தும். எனவே, தயவு செய்து வகைப்படுத்தலை சற்று அவதானித்து கலந்துரையாடி செய்தால் நன்று. --Natkeeran 13:34, 23 மார்ச் 2006 (UTC)

கையெழுத்திட

கோபி, உங்கள் கருத்துக்களுடன் உங்கள் கையெழுத்தையும் இட்டால் நன்று. இப்படியாக --Natkeeran 16:13, 23 மார்ச் 2006 (UTC)

கட்டுரைகளை இணைக்கும் முறை

கோபி, உங்களின் நியாயத்தை, வேகத்தை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால், அதை எழுதியவர்களின் கருத்துக்களை அறிய வேண்டியது அவசியம். கட்டுரைகளை இணைக்கும் முறை ஒன்றை (ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளதை போன்று) இங்கு ஏற்படுத்த வேண்டும். அதைப்பற்றி சற்று மேலு அறிந்து, உங்களுக்கு பின்னர் பதில் தருகின்றேன். --Natkeeran 19:07, 25 மார்ச் 2006 (UTC)

தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

நற்கீரன், சுந்தர், மயூரேசன், சிவகுமார், மயூரானந்தன், உமாபதி, ரவி, சிறீதரன், கலாநிதி மற்றும் விக்கிபீடியர்களுக்கு,

விக்கிபீடியாவை எனக்கு அறிமுகம் செய்தவர் மு. மயூரன். 02.10.2005 இல் விக்கிபீடியாவில் இணைந்தேன். ஆயினும் முதற் குறுங்கட்டுரையை 14.03.2006 இல் தான் எழுதினேன். கடந்த 13 நாட்களில் 66 குறுங்கட்டுரைகளை எழுதியுள்ளேன். குறுக்கெழுத்துத் தொடர்பான ஒன்றைத் தவிர ஏனைய அனைத்துமே இலக்கியம் மற்றும் கிரிக்கெட் தொடர்பானவை. மொத்தம் 136 இல் 66 என்பது குறிப்பிடத்தக்கதாகத் தோன்றினாலும் அனைத்துமே குறுங்கட்டுரைகள் மட்டும்தான்.

எனக்கு நீண்டநேரம் இணைய இணைப்பில் இருப்பது பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை. ஆதலால் இணையப் பக்கங்களைச் சேமித்து வைத்தே பார்வையிடுவது வழக்கம். விக்கிபீடியாவைப் பொறுத்த வரையில் இது பொருத்தமானதில்லை. ஆதலால் என்னால் விக்கிப்பீடியாவை சரியாக விளங்கிக் கொள்வது சிரமமாயிருந்தது. நற்கீரன் எனக்கு நிறைய வழிகாட்டினார். அவருக்கு என நன்றிகள். பகுப்புக்கள் தொடர்பில் எனது குழறுபடிகளைச் சரிசெய்தமைக்கு மீண்டும் நற்கீரனுக்கு நன்றிகள்.

குறுங்கட்டுரைகளாயினும் நிறையக் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் இணைப்பது ந்ல்லது என எனக்குத் தோன்றியது. விரைவில் 10000 கட்டுரைகள் தமிழில் எட்ட வேண்டும். இதற்கான காலஎல்லை ஏதாவது முன்மொழியப் பட்டிருக்கிறதோ நான் அறியேன். இப்போதுள்ள விக்கிப்பீடியர்கள் எண்ணிக்கை போதாது என எண்ணுகிறேன். 2007 தையில் 5000 கட்டுரைகளும் 2008 தையில் 10000 கட்டுரைகளும் சாத்தியம் என நம்புகிறேன். இதற்கு முன் சாத்தியமானால் மகிழ்ச்சிதான். நாம் நிறைய உழைக்க வேண்டியுள்ளது.

இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். 01.03.2006 இல் Thai மொழியில் இருந்த கட்டுரைகள் எண்ணிக்கை 7562. மேலும் பதினான்கு நாட்களில் 10000 ஆகியுள்ளது. அதே காலப்பகுதியில் Corsican மொழியில் 2420 இலிருந்த எண்ணிக்கை 3459 ஆனது. இது ஒரு குழுச் செயற்பாட்டினால் அல்லது நிதியுதவியினால் சாத்தியப்பட்டிருக்கலாம். நாமும் எமது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க ஏதாவது செய்ய முடியாதா?

தமிழில் எண்ணிக்கை 10000 த்தை தொடும்போது எனது பங்களிப்பு 500 ஆவது இருக்க வேண்டும் என ஒரு ஆசை. ஆனால் நான் விக்கிப்பீடியாவில் தீவிரமாகுவது நூலகம் திட்டத்தைப் பாதிக்காமலும் இருக்க போதிய நேரம் கிடைக்குமோ தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நூலகம் திட்டம் முக்கியமானது.

தனிப்பட்ட காரண்ங்களுக்காக இன்னும் இரு மாதங்களுக்கு விக்கிபீடியாவுக்கு பங்களிக்க முடியாதுள்ளேன். (ஆயினும் அண்மைய மாற்றங்களையாவது பார்வையிட உத்தேசம்.) மீண்டும் வருவேன்.

தோழமையுடன் கோபி 16:39, 26 மார்ச் 2006 (UTC)

கோபி, உங்களின் ஆர்வம், உழைப்பு, திறன் பலமானது, மேலும் வளர வாழ்த்துக்கள். உங்களின் பொருளாதர சிக்கலை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது, ஏனென்றால் நாமும் அப்படிப்பட்ட பின்புலத்தை கொண்டவர்களே. பொருளாதாரமே அடிப்படை, தமிழ் போன்ற பிற ஈடுபாடுகள் முக்கியத்தில் பல மடங்கு கீழேயே.
உங்கள் பங்களிப்புக்களுக்கு மிக்க நன்றி. ஒரு புது வேகத்தை தந்தீர்கள். பல பயனர்களை உள்வாங்க பல முனைகளில் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. 10 000 கட்டுரைகளுக்கான ஒரு திகதி இல்லை. கட்டுரைகளுடைய எண்ணிக்கையை விட கட்டுரைகளின் தரம், நம்பிகை, மற்றும் த.வி. செயல்ப்பாட்டு கட்டமைப்பு முக்கியமாக எனக்கு தற்சமயம் படுகின்றது. எனினும் உங்கள் இலக்குக்களை வரவேற்கின்றேன்.
உங்களுடைய பிற ஈடுபாடுகளை பற்றி நான் அறியேன், எனினும் தமிழ், இலக்கியம், ஈழம் என்று குறிக்கிவிடாதீர்கள். பரந்த பார்வையில் உலகை அணுகுங்கள். விக்கிபீடியா உங்களுக்கு அதற்கு எதோ ஒருவகையில் உதவியிருக்கும் என்று நம்புகின்றேன்.
உங்கள் தற்காலிக நிறுத்தம் முடிந்தவுடன், புதிய பல தகவல்களுடன், முடியுமானால் சீரிய கட்டுரைகளுடன் மீள்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம். மீண்டும், மிக்க நன்றிகள். --Natkeeran 17:52, 26 மார்ச் 2006 (UTC)
தங்கள் பங்களிப்பிற்கு நன்றி மீண்டும் வருவீர்கள் எனும் நம்பிக்கையுண்டு. தற்போது ஜேர்மானிய விக்கிபிப் பீடியா de:Wikipedia:Unterwegs மாத்திரம் பதிவிற்றக்கம் செய்ய முடிகின்றது. தமிழ் விக்கிப்பீடியா கூட பதிவிற்றக்கம் செய்யக் கூடியதாக இருந்தால் தான் அனைவரையும் கட்டற்ற கலைக்கழஞ்சியம் சென்றடையும் என்றும் நம்புகின்றேன்.--உமாபதி 18:31, 26 மார்ச் 2006 (UTC)
கோபி, உங்கள் ஆர்வத்துக்கு நன்றி. இணையத்தில் நீண்ட நேரம் வேலைசெய்வதில் சம்பந்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமை தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்குப் பெரியதொரு முட்டுக்கட்டைதான். இதனால்தான், தமிழ்மொழி வளர்ச்சிக்கான செயற்பாட்டு மையங்களாக இருக்கக்கூடிய இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வசிப்பவர்களிடமிருந்து தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்குப் போதிய பங்களிப்புக் கிடைப்பதில்லை. இணையத்துக்கு வெளியில் wordpad போன்றவற்றில் கட்டுரைகளை எழுதி வெட்டி ஒட்ட முடியும். இதனால் இணையத்தில் இணைப்பில் இருக்கும் நேரத்தைக் குறைக்கலாம். கட்டுரை எண்ணிக்கை தொடர்பான நற்கீரனுடைய கருத்தை நான் ஆதரிக்கிறேன். எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. விக்கிபீடியாவின் தரமும் மிக முக்கியமாகக் கருத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டும். பங்களிப்பவர்களுடைய எண்ணிக்கை அதிகரிப்பதுதான் தமிழ்விக்கிபீடியா வேகமாக வளர ஒரேவழி. சில இந்திய மொழி விக்கிபீடியாக்கள் உட்பட வேறும் பல விக்கிபீடியாக்கள் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் வேகமாக வளர்ந்து வருவது உண்மைதான். ஆனாலும் அவற்றில் பெரும்பாலாவை தரமான விக்கிபீடியாவாக வளர்ச்சி பெறுவதாகச் சொல்ல முடியாது. கட்டுரை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஏதோவெல்லாம் உள்ளீடு செய்கிறார்கள். கலைக்களஞ்சியமொன்றுக்கு இருக்கவேண்டிய அமைப்பு உள்ளடக்கம் அதன் நோக்கம் என்பவற்றிலிருந்து நமது எழுத்துக்கள் திசைமாறக்கூடாது. அதைத் தொடர்ந்து வளர்த்துச் சென்று முழுமையான கட்டுரையொன்றாக மாற்றக்கூடிய அமைப்பிலும் பொருளடக்கத்திலும் இருக்கும்வரை குறுங்கட்டுரைகள் எழுதுவதில் எவ்வித பிழையும் கிடையாது. ஒப்பீட்டளவில் தமிழ் விக்கிபீடியா சரியான திசையில் வளர்ந்து வருகிறதென்றே நான் நினைக்கிறேன். ஆரம்பகாலத்தில் இருந்ததைவிடத் தரமான நீளம் கூடிய கட்டுரைகள் இப்பொழுது உருவாகின்றன. பங்களிப்பவர்களுடைய எண்ணிக்கை வளர்ச்சியும் உற்சாகம் தருவதாகவே உள்ளது. உங்களுடைய 10,000 கட்டுரைகளுக்கான இலக்கு அடையக் கூடிய ஒன்றாகவே இருக்கக்கூடும். ஆனாலும் அவசரம் கிடையாது, நிதானமாகவே செல்லலாம். கோபி நீங்கள் கட்டாயம் திரும்பிவரவேண்டும் என்பதே எனது விருப்பம். வரும்போது பலவிதத்திலும் அதிகரித்த வலுவோடு வர எனது வாழ்த்துக்கள். Mayooranathan 19:31, 26 மார்ச் 2006 (UTC)
கோபி உங்களின் பிரச்சனை எனக்கு விளங்குகின்றது. நானும் உங்களைப்போன்ற பின்புலமுடையவன் தான். தற்போது பல்கலைக்கழகத்தில் இணையத்தை இலவசமாகப் பயன்படுத்த முடிவதால் விக்கிப்பீடியாவுக்கு வருவது சாத்தியமாகின்றது. நீங்கள் வேட் போன்ற மென்பொருளில் எழுதிப்பின்னர் இங்கு வந்து ஒட்டிவிடலாமே!. குறுங்கட்டுரை விடயத்தில் மயூரனாதனின் கருத்தை நான் ஆமோத்திக்கின்றேன். மீண்டும் உங்கள் வருகையை அன்போடு எதிர்பார்க்கின்றேன்.--ஜெ.மயூரேசன் 03:16, 27 மார்ச் 2006 (UTC)

கோபி நீங்கள் கட்டாயம் திரும்பிவரவேண்டும் என்பதே எனது விருப்பம். வரும்போது பலவிதத்திலும் அதிகரித்த வலுவோடு வர எனது வாழ்த்துக்கள் அத்துடன் நூலகம் திட்டம் சிறப்பாக வளரவும் வாழ்த்துக்கள் kalanithe

நற்கீரன், உமாபதி, மயூரநாதன், மயூரேசன் மற்றும் கலாநிதிக்கு நன்றிகள். எதிர்பாராத விதமாக நான் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே விக்கிப்பீடியாவில் குறுங்கட்டுரைகளை இணைத்துள்ளேன். அதிகம் பங்களிக்காவிடினும் என்னாலியன்ற அளவு தொடர்வேன். கடந்த ஒரு மாதத்தில் நாளொன்றுக்கு ஏறத்தாழ எட்டுப் புதிய கட்டுரைகள் இணைக்கப்படுகின்றன. இந்த வேகத்தில் தொடர்ந்தால் இவ்வாண்டு இறுதியில் 4500 கட்டுரைகள் என்ற இலக்கை அடையலாம். இதே வேகத்தில் 2008 தையில் 7500 கட்டுரைகளே சாத்தியம். ஆயினும் விக்கிப்பீடியர்களின் எண்ணிக்கை/பங்களிப்பு அதிகரித்தால் 10000 சாத்தியமாகலாம். அதனை விட கட்டுரைகளின் தரமே முக்கியமானது. - கோபி 05:40, 16 ஏப்ரல் 2006 (UTC)

Gopi, since i am not so active in last months i couldnt read all your articles. But i was so glad to see your enthu in creating articles and your overall regard for TWpedia. I understand your problems and involvement in noolagam project. Its true that some wikipedias are growing in an unbelievable rate. Sure, TWpedia can progress at a better rate. Once internet penetrates better in India, TN and usage of internet becomes cheaper it may become possible. Also, we need not and should not fix deadlines for reaching 10000 article mark. They are just milestones. If we focus on quantity then we will lose focus on quality. But a good stub article is always welcome. Your involvement was a good boost while previously active contributors like me are absconding :). I hope to see you back soon.. all the best in your efforts--ரவி 16:51, 16 ஏப்ரல் 2006 (UTC)

ஆலோசனைகள்

naming books

gopi, please see my reply at பேச்சு:ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள். However the (நூல்)or (புத்தகம்) suffix is needed for book titles which are misleading. For example if there is a book titled India and we write an article about it, then we add this suffix. For non misleading titles like திருக்குறள் no suffix is needed. we will add some instructions in Wikipedia:நடைக் கையேடு soon.--ரவி 14:32, 21 ஏப்ரல் 2006 (UTC)

Gopi, please leave one space after the title end and then start the (நூல்)or (புத்தகம்) suffix . This makes it easy to read the article name--ரவி 14:34, 21 ஏப்ரல் 2006 (UTC)

indicate minor changes

gopi, whenever u make minor changes in articles, please tick the ""இது ஒரு சிறு தொகுப்பு"" box. this will help other editors to overlook this edit in the recent changes. also, try to give a good summary of the nature of edit in the edit summary box..these are good habits of wikipedians :)--ரவி 18:26, 22 ஏப்ரல் 2006 (UTC)

பெயர் வழிமாற்று

நன்றி கோபி! தாங்கள் சொன்ன பெயர் வழிமாற்றுக்களை ஏற்படுத்தியுள்ளேன். --சிவகுமார் 16:46, 13 ஜூன் 2006 (UTC)

நன்றி சிவகுமார். இப்போது நிறைய விக்கிப்பீடியர்கள் பங்களிக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது, இல்லையா? தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் பரவலாக உணரப்படுகிறது. --கோபி 16:49, 13 ஜூன் 2006 (UTC)
ஆம் கோபி, கடந்த ஒரு மாதமாக தமிழ் விக்கிபீடியா புதிய எழுச்சியுடன் செயல்படுகிறது :-) --சிவகுமார் 16:53, 13 ஜூன் 2006 (UTC)

நூல் வார்ப்புரு

தமிழ் இலக்கணம் (நூல்) நூல் வார்ப்புருவை பார்க்க, உதவகூடும் நூல் வார்ப்புருவை பார்க்க, உதவகூடும். --Natkeeran 16:02, 14 ஜூன் 2006 (UTC)

ஆலோசனை

கோபி, விக்கிபீடியா பெயரிடல் மரபுக்கேற்ற, எளிமையான பெயர் மாற்றங்களை நீங்களே தயங்காமல் பேச்சுப்பக்கங்களில் அறிவிக்கும் அவசியமின்றி செயற்படுத்தலாம். விக்கிபீடியா நிர்வாகிகள் அடிக்கடி தளத்தை கண்காணிப்பதால், ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அவர்களே தெரிவிப்பார்கள்--ரவி 09:23, 15 ஜூன் 2006 (UTC)

கோபி, எழுத்தாளர்கள் கட்டுரைகளை எழுதும் போது ஆங்கில விக்கிக்கு இணைப்புக் கொடுத்தால் பின்னர் விரிவாக்குவதற்கு எளிதாக இருக்கும். --சிவகுமார் 15:46, 26 ஜூன் 2006 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சிவகுமார். முடிந்தவரை அவ்வாறே செய்கிறேன். --கோபி 15:49, 26 ஜூன் 2006 (UTC)

அகசியின் புகைப்படம் பதிப்புரிமை விலக்கு பெற்றதா? இல்லாவிடில் பதிவேற்றம் செய்யாதீர்கள். விக்கிபீடியாவிற்கு ஏற்புடைய பதிப்புரிமைகளின்கீழ் இருந்தால் அனைத்து விக்கிபீடியாக்களிலும் பயன்படும் வகையில் காமன்ஸில் பதிவேற்றுங்கள். மேலும் தவறாமல் பார்க்க: en:WP:IUP. -- Sundar \பேச்சு 11:39, 8 ஜூலை 2006 (UTC)

downloaded that agassi.jpg from en.wiki. I am not sure about copyrights of that. கோபி 11:43, 8 ஜூலை 2006 (UTC)

This one that you downloaded is under en:template:cc-by-sa-2.5, which is acceptable. In this case, anyone can download it and upload it to commons: so that other wikipedias too can use it without uploading to each and every wiki. Thanks for the image. -- Sundar \பேச்சு 11:48, 8 ஜூலை 2006 (UTC)

நூல்

கோபி, நூல் என்ற சொல் சுருக்கமாகவும், பொருத்தமாகவும் தெரிகின்றது. நன் நூல், நூலக திட்டம் என்பது போல. நேரம் கிடைக்கும் பொழுது பெயர் மாற்றிவிடுகின்றேன். ஆட்சோபனை என்றால் தெரிவிக்கவும். --Natkeeran 03:54, 23 ஏப்ரல் 2006 (UTC)

//நன் நூல், நூலக திட்டம் என்பது போல// எனக்கு நீங்கள் கூறுவது சரியாக விளங்கவில்லை. புத்தகம் என்பது பொருத்தமானது என்றே நினைதேன். ஆயினும் சுருக்கம் கருதி நுஉல் என்றே பயன்படுத்தலாம். --கோபி 07:43, 23 ஏப்ரல் 2006 (UTC)

நூல், நூலகம் நற்றாக இருப்பதாக தோன்றியது அவ்வளவுதான். புத்தகம் சம்ஸ்கிரதமா?--Natkeeran 07:46, 23 ஏப்ரல் 2006 (UTC)

எனக்கு நீங்கள் கூறுவது சரியாக விளங்கவில்லை. புத்தகம் என்பது பொருத்தமானது என்றே நினைதேன். ஆயினும் சுருக்கம் கருதி நுஉல் என்றே பயன்படுத்தலாம்.தெரியவில்லை. ஆனால் புத்தகம் என்பதைத் தவிர்த்து பொத்தகம் என்று பாவிக்கும்படியான கோரிக்கைகள் உள்ளன. என்பதால் புத்தகம் சமஸ்கிருதமாக இருக்கலாம்.--கோபி 07:48, 23 ஏப்ரல் 2006 (UTC)

நன்னூல் போன்று பழந்தமிழிலும் நூல் என்றே குறிப்பிடப்படுகின்றது. அதைத்தான் குறிக்க முயன்றேன். --Natkeeran 07:51, 23 ஏப்ரல் 2006 (UTC)

உண்மைதான். நுஉல் என்றே பயன்படுத்துவோம்.--கோபி 07:53, 23 ஏப்ரல் 2006 (UTC)

நிர்வாக வசதிகள்

ஆமாம் கோபி, கனகு அவர்களுக்கு நிர்வாக வசதிகள் பயன்படும். நீங்களே அவரிடம் அனுமதி கேட்டு இங்கு Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பரிந்துரைக்கலாம். செல்வா அவர்கள் இணைந்து மூன்று மாத காலம் செல்லவில்லை என்று நினைக்கின்றேன். அவரும் நல்ல பயனரே. நீங்களும் விக்கி பற்றி அறிந்து நன்றாக செயல்பட்டு வருகின்றீர்கள், உங்களையும் பரிந்துரைக்க விரும்புகின்றேன், அவ்வசதிகள் உதவியாக இருக்கும். --Natkeeran 14:18, 11 ஜூலை 2006 (UTC)

நற்கீரன் தங்களின் ஆலோசனையில் எனக்கும் உடன்பாடே, கோபி நல்ல பயனர் விக்கிப்பீடியா நிர்வாகியாகுவதை விரும்புகின்றேன். --Umapathy 15:43, 11 ஜூலை 2006 (UTC)

பதிற்குறிக்கு நன்றி நற்கீரன், கனகுவிடம் இப்பொழுதே கேட்கிறேன். செல்வா இணைந்து சிலகாலம்தான். அவருக்கு இன்னும் சிலகாலத்துக்குப் பின்னர் வழங்க நினைப்பது சரிதான். தொடர்ச்சியாக பங்களிக்கத் தேவையான இணைய இணைப்பு, நேரம் மற்றும் மிக முக்கியமாகப் பொறுமை என்பன என்னிடமில்லை என உணர்கிறேன். மேலும் விக்கிபீடியாவிலும் நான் சரியாகத் தேர்ச்சி பெறவில்லை. இக்காரணங்களால் இப்போதைக்கு நிர்வாக வசதிகளின்றி இருக்கவே விரும்புகிறேன். உரிய காலம் வந்ததாக உணரும்போது நானாகவே என்னை நியமித்துக்கொள்ள முன்வருவேன். நற்கீரன், உமாபதிக்கு நன்றிகள் கோபி 16:00, 11 ஜூலை 2006 (UTC)

நற்கீரன், கோபி, நான் மே 24 ஆம் நாள் தான் சேர்ந்தேன். மேலும் எனக்கு த.வியைப் பற்றி இன்னும் மிகப்பல நுணுக்கங்கள் விளங்கவில்லை. எனவே இப்பொழுது நிர்வாக வசதிகளும் பொறுப்புகளும் பயனற்றதாகவும் செயல் படுத்த முடியாததாகவும் இருக்கும். சுமார் 100 குறுங்கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும், இன்னும் ஆக்க வேண்டியன, நான் ஏற்கனவே ஆக்கியவற்றைத் திருத்தவும் வளர்க்கவும் என்று ஆயிரக்கணக்கில் உள்ளன. இருக்கும் நேரத்தை இப்படி ஆக்கப் பணிகளுக்குச் செல்விடுவது இப்போதைக்கு நல்லது. பரிவுரைகளுக்கு நன்றி. --C.R.Selvakumar 21:17, 11 ஜூலை 2006 (UTC)செல்வா

கோபி, மற்ற அனைவரையும் விட தள நிர்வாகத்தில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறீர்கள். உங்களுக்கு நிர்வாக வசதிகள் மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக பக்கங்களை நீக்கும் வசதி. உங்களை நிர்வாகி பொறுப்பிற்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். தயங்காமல் உடனே ஏற்றுக்கொள்ளவும். உங்கள் நிர்வாகப் பொறுப்பை, வசதியை தங்களுக்கு இயன்ற போது பயன்படுத்தினால் போதும். அடிக்கடி பங்களிக்க வேண்டிய கட்டாயமில்லை--ரவி 20:29, 21 ஜூலை 2006 (UTC)

ரவி, நிச்சயமாக எனக்கு நிர்வாகியாக செய்வதற்கான சில பணிகள் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் எனக்குள்ள நேரப் பற்றாக்குறை காரணமாக அதனை சில காலத்துக்குத் தள்ளிப் போட விரும்புகிறேன். எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் என்னைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுதே ஏற்றுக் கொள்ளாமைக்கு மன்னியுங்கள். கோபி 15:55, 22 ஜூலை 2006 (UTC)

பக்கங்களை நீக்குவது குறித்த கோரிக்கைகளை நீங்கள் சில சமயம் முன்வைப்பதை கவனித்தேன். உங்களுக்கு நிர்வாக அனுமதி இருந்தால் நீங்களே இதை செய்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். எனவே தான் பரிந்துரைத்தேன். எனினும் உங்கள் மறுமொழியை ஏற்றுக்கொள்கிறேன். --ரவி 21:02, 22 ஜூலை 2006 (UTC)

விக்கி நூல்கள், விக்கிமூலம், நூலகம் திட்டம்

தமிழ் விக்கிநூல்கள் தளத்தில் பொன்னியின் செல்வன் நாவல் வெளிவருகிறது. நூலகம் திட்டத்திற்கு பயன்படுமா பாருங்கள்.(இல்லை, ஈழத்து நூல்களை மட்டும் தான் சேகரிக்கிறீர்களா? ) நன்றி.--ரவி 21:20, 21 ஜூலை 2006 (UTC)

நூலகம் திட்டத்தில் இப்போதைக்கு ஈழத்து நூல்களுக்கே முன்னுரிமையளிக்க உத்தேசம். மேலும் பொன்னியின் செல்வன் வெளிவருவதற்கான இடம் விக்கிநூல்கள் அல்ல; விக்கிமூலம்தான் பொருத்தமானது. இது தொடர்பில் நற்கீரனுக்கு மடலெழுதியதைத் தொடர்ந்து அவரது ஊக்குவிப்பாலேயே விக்கிபீடியாவுக்குப் பங்களிக்கத் தொடங்கினேன். இன்னும் தமிழுக்குப் பிரத்தியேகமாக விக்கிமூலம் தொடங்கப்படாதது வருத்தமாயுள்ளது. ஒரு தொன்மையான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட, இரண்டாயிரம் ஆண்டுப் பழைமையான இலக்கியப் பிரதிகளைக் கொண்ட தமிழ் மொழிக்கு தனியான விக்கிமூலம் தொடங்கப்படாதது தொடர்பில் விக்கிப்பீடியர்களை கவனம் செலுத்த வேண்டுகிறேன். விக்கிமூலம் தொடங்கப்பட்டால் கைலாயமாலை போன்ற நூலகம் திட்டத்தில் வெளியான ஈழத்துப் பழந்தமிழ் நூல்களின் மூலப் பாடல்களையும் அங்கு இணைக்கலாம். நூல்களை முதலில் விக்கிநூல்களில் இணைத்துப் பின்னர் விக்கிமூலத்துக்கு நகர்த்துவதென்பதெல்லாம் நேர விரயம். மேலும் விக்கிநூல்களிலொன்றாக பொன்னியின் செல்வன் இணைக்கப்படுவது சரியல்ல. கோபி 15:56, 22 ஜூலை 2006 (UTC)

தமிழ் விக்கி ஆர்வலர் பலரும் விக்கிபீடியாவிலேயே கவனம் செலுத்துவதால் பிற விக்கி திட்டங்கள் சுணங்கிக் கிடக்கின்றன. தற்பொழுது விக்கி நூல்களில் பங்களிக்கும் பலருக்கும் விக்கி நூல்கள் பற்றிய புரிந்துணர்வு முழுமையாக இல்லை. எனவே தான் இந்த குழப்பங்கள். விரைவில் சீர் செய்வோம்--ரவி 21:02, 22 ஜூலை 2006 (UTC)

ஆக்கப் பெயர்கள்

கோபி, நூல்கள் போன்ற ஆக்கங்களின் பெயர்களை சாய்வெழுத்துக்களில் தாருங்கள். மேலும் அறிய விக்கிபீடியா:நடைக் கையேடு பாருங்கள்--ரவி 22:48, 24 ஜூலை 2006 (UTC)

பக்க வரலாறு நகர்த்தல்

கோபி, கணையாழி கட்டுரை உள்ளடக்கங்களை ஒன்றிணைத்தது நான் தான் என நினைக்கிறேன். பக்க வரலாறை ஒன்றிணைக்க மறந்து விட்டேன். விரைவில் சரி செய்து விடுகிறேன்.சுட்டிக்காட்டியதற்கு நன்றி. இதற்கான தீர்வு இங்கு விளக்கப்பட்டிருக்கிறது. இதை சரி செய்ய நிர்வாகி அணுக்கம் தேவை. இதற்காக தான் உங்களை நிர்வாகியாக சொன்னேன்..நீங்கள் தான் மாட்டேன் என்கிறீர்கள் :)--ரவி 08:43, 31 ஜூலை 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு :)

கோபி,

  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கு சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:08, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

பாராட்டுக்கள்

அண்மைய காலங்களில், தமிழ் விக்கிபீடியாவை ஒழுங்குபடுத்துவது, ஆக்க கருத்துக்கள் தெரிவிப்பது, பல துறைகளிலும் கட்டுரைகள் எழுதுவது என்று உங்கள் ஆர்வமும் வேகமும் என்னை மலைக்க வைக்கிறது. மிக்க மகிழ்ச்சி. என் நன்றியும் பாராட்டுக்களும்--ரவி 16:07, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி ரவி. இனி வரும் நாட்களில் அதிக நேரத்தை விக்கிக்கு ஒதுக்க முடியாத நிலை என்பதால் இப்பொழுது முடிந்தளவு பங்களிக்கிறேன். மேலும் நபர்கள் மற்றும் இலக்கியம் தொடர்பான பங்களிப்பாளன் என்ற முத்திரை குத்தப்படுவதைத் தவிர்க்கவே பிற துறைகளிலும் பங்களிக்கத் தொடங்கியிருக்கிறேன். ;-)) --கோபி 16:11, 3 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆங்கில உள்ளடக்கம்

எல்லா ஆங்கில உள்ளடக்கத்தையும் பேச்சு பகுதிக்கு மாற்றுவது அவ்வளவு பொருத்தமாக அமையுமா? சில இடங்களில் கட்டுரையுடன் இணைந்த ஆங்கில உள்ளடக்கம் உண்டு. என்ன நினைக்கின்றீர்கள்? கொள்கை, வழிகாட்டல் ஆங்கில பக்கங்களை பேச்சு பக்த்துக்கு மாற்றுவதை தவிருங்கள் (அப்படி செய்து இருந்தால், அல்லது அப்படி செய்ய எண்ணியிருந்தால்). --Natkeeran 23:11, 4 ஆகஸ்ட் 2006 (UTC)

எல்லா ஆங்கில உள்ளடக்கத்தையும் பேச்சுப் பக்கத்துக்கு மாற்றும் எண்ணமில்லை. ஆனால் முடிந்தளவு ஆங்கிலத்தைக் குறைக்க எண்ணினேன். மேலும் பல மாதங்களுக்கு முன் ஆங்கில விக்கியிலிருந்து பிரதிசெய்யப்பட்ட ஆக்கங்களை அப்படியே கட்டுரைப் பகுதிகளகாக வைத்திருப்பதில் பயனில்லை. சில சமயங்களில் அவை outdated ஆகவும் உள்ளன. translate வார்ப்புரு பயனுள்ள ஒன்று தான். ஆனால் 185 பக்கங்கள் அப்படியிருப்பது பொருத்தமல்ல. தவறென்றால் சுட்டிக் காடுங்கள். நன்றி. --கோபி 00:52, 5 ஆகஸ்ட் 2006 (UTC)
உங்கள் அணுகுமுறை சரியென்றே படுகிறது. சில அடிப்படை பக்கங்களுக்கும் (எ.கா. கொள்கை, உதவி, கையேடுகள்) முன்னுரிமை கொடுத்து மொழிபெயர்த்து த.வி. சூழலுக்கு கேற்ப மாற்ற வேண்டும். --Natkeeran 00:56, 5 ஆகஸ்ட் 2006 (UTC)

சில திட்டங்கள்

  • 1901 முதல் 2000 வரையான ஆண்டுகளுக்கும் ஜனவரி 1 முதல் ஜூலை 28 வரையான திகதிகளுக்கும் குறுங்கட்டுரைகளை உருவாக்க எண்ணியுள்ளேன். பிற பயனர்கள் பொருத்தமான மாற்றங்களைச் செய்து அவற்றை வளர்த்தெடுக்கக் கோருகிறேன்.
  • ஜூன் 18 முதல் தினம் ஒரு கட்டுரை என்னும் திட்டத்துடன் தினமும் ஆகக் குறைந்தது ஒரு கட்டுரையை உருவாக்கத் தொடங்கி இன்றுடன் ஐம்பது நாட்களாகின்றன. மேலும் சில பயனர்களும் இவ்வாறு பங்களிக்கத் தொடங்கினால் மிகப் பரவலான தலைப்புக்களில் கட்டுரைகளை உருவாக்கக் கூடியதாயிருக்கும்.

--கோபி 10:33, 6 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, மயூரநாதனை போல் நீங்களும் திட்டமிட்டு முனைப்புடன் கட்டுரைகளை உருவாக்குவதில் மகிழ்ச்சி. என்னால் இயன்ற அளவு, குறைந்தது விக்கியாக்கம் செய்தாவது, உதவுகிறேன். பிற விக்கி திட்டங்களிலும் ஈடுபட்டிருப்பதால் விரும்பிய அளவு த.வி. யில் பங்களிக்க இயலாமல் இருப்பதில் எனக்கும் வருத்தம் தான்--ரவி 13:18, 6 ஆகஸ்ட் 2006 (UTC)

நாட்காட்டி வார்ப்புருக்கள்

ஏப்ரல் வரை வார்ப்புருக்களை உருவாக்கியுள்ளேன். நீங்களும் கூட ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து படியெடுத்து மற்ற மாதங்களுக்கு உருவாக்கலாம். w:en:Template:FebruaryCalendar w:en:Template:FebruaryCalendar2006 w:en:Template:FebruaryCalendar2006Source இதுபோல மற்ற மாதங்களின் உள்ளடக்கத்தை வெட்டி ஒட்டி விட்டு தமிழாக்கம் செய்ய வேண்டியது தான். --சிவகுமார் 07:56, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபிக்கு

கோபி, சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் பழமொழியைக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்று தமிழகத்தில், மிகப்பலரும் ழகரத்தைச் சரியாக பலுக்குவதில்லை (எழுத்தொலியை திருத்தமாக ஒலிப்பதில்லை). லகர, ளகர வேறுபாடும் மிகக்குறைபாடுடையதாகவே உள்ளது. தமில் வால்க என்று ஒலிக்கிறார்கள். அது திருந்தாத கொச்சை ஒலிப்புதான். ஒருவர் லகர, ளகர, ழகர ஒலிப்புகளைச் சரியாக சொல்லவில்லை என்றால், அதனை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். கொச்சை என்பதும், மழலை என்பதும் திருந்தாச் சொல்லிப்புகளைக் குறிக்கும் சொற்கள். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். திருந்திய சொல்லொலிப்பு செந்தமிழ் ஒலிப்பு. செந்தமிழ் நாப்பழக்கம். இரவு, கரவு, உரிமை, அரிசி என்னும் சொற்களை itavu, katavu, utimai, atisi என்று நீங்கள் ஒலிப்பதாக இருந்தால், அது செந்தமிழ் ஒலிப்பில்லை என்பது என் துணிவு. பேச்சு வழக்கில் அவ்வாறு ஒலித்தாலும், திருத்தமாய் சொல்ல வேண்டிய இடங்களிலே iravu, karavu, urimai, arisi என்றுதான் சொல்லவேண்டும். பேச்சு வழக்கில், எம் மவனே எனலாம், ஆனால் என் மகனே என்பதுதான் திருந்திய மொழி. மொழி எனப்பட்டதே திருந்தியதுதான். என் மஹன் என்று சொல்வதும் கொச்சை ஒலிப்பு தான். உங்கள் நண்பர்களிடமும், இதுபற்றி நடு நிலையோடு உரையாடி, பொதுநலம் எதுவென ஆய்ந்து பாருங்கள். எது நலம் பெருக்கும் என பாருங்கள். --C.R.Selvakumar 14:02, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

செல்வா கூறுவது முற்றிலும் உண்மை. மதுரை வட்டாரத்தில் வளர்ந்துள்ள எனக்கு லகர, ளகர, ழகர வேறுபாட்டை சரியாக ஒலிப்பில் கொணர முடிவதில்லை. மதுரைக்குள் இருந்தவரை எனக்கு இது ஒரு குறைபாடாகத் தோன்றவில்லை. பின்னர் பெங்களூரில் நண்பர்களின் நகையாடல் மற்றும் அறிவுறுத்துதலின் விளைவாக மாற்றி வருகிறேன்.
பல நாட்கள் யாழ் தமிழுக்கும் பிறரின் தமிழுக்கும் உள்ள வேறுபாடு வெறும் வேறுமொழி சொற்களின் பயன்பாட்டில் என்று மட்டும் எண்ணியிருந்தேன். பின்னர் ஒருநாள் தமிழ் சொற்களிலும் சில எழுத்துக்களின் ஒலிப்பில் மாற்றம் இருப்பதை அறிந்தேன். அப்போதே எது தொல்காப்பியப் பரிந்துரையை ஒத்த ஒலிப்புமுறை என்று கேட்டிருந்தேன். ஒருவேளை யாழ் தமிழே சரியான பயன்பாடு என்று அறிந்திருந்தால் தற்போதைய பெரும்பாண்மை வழக்கை மாற்றக்கூட (விக்கிக்கு வெளியே) முயலலாம் என்று நினைத்திருந்தேன்.
ஒருவகையில் மொழி என்பது "பரிந்துரை இலக்கணத்தைப்" பின்பற்ற வேண்டுமா அல்லது மொழியின் இலக்கணம் பயன்படு மொழியின் ஒரு விவரிப்பா என்பது ஒரு ஆழமான கேள்வி. இருப்பினும், மொழி சிதைந்து புதுமொழிகளாகப் பிளவுபடாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஒருவர் எண்ணினால் நாம் இதுபோன்ற வட்டார வழக்குகளை செந்தமிழுக்குள் கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும். -- Sundar \பேச்சு 14:37, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

இங்கே நடைபெறுகின்ற கருத்துப் பரிமாற்றங்களை ஒழுங்காக வாசித்து வந்தேன். போதிய நேரமின்மை காரணமாகப் பங்கு பற்ற முடியவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். நாங்கள் சிலர் மட்டும் பேசி ஒரு முடிவுக்கு வர இயலாது. ஆனாலும், இங்கே பரிமாறப்பட்ட கருத்துக்களிலிருந்து, இவ்விவாதம் சிலரைத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறதோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது. முக்கியமாக யாழ்ப்பாணத் தமிழின் உச்சரிப்புத் தூய்மை பற்றிய அளவுக்கு அதிகமான சந்தேகங்கள் எழுந்திருப்பதுபோல் தெரிகின்றது. இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டுச் சினிமாக்கள், சஞ்சிகைகள் மூலமாக தமிழ்நாட்டில் புழங்கும் பலவகைத் தமிழ் உச்சரிப்பு வேறுபாடுகளையும் போதிய அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இலங்கைத் தமிழ் பற்றி அறியும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இலங்கையிலும் புவியியல்ரீதியாகப் பல்வேறு உச்சரிப்பு வழக்குகளும் மொழிவழக்குகளும் உள்ளன. யாழ்ப்பாணத்துக்கு உள்ளே கூட இடம்சார்ந்த வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். பிரதேச வேறுபாடு தவிர தலைமுறை வேறுபாடு, நகர,கிராம வேறுபாடுகள் என்பவற்றின் அடிப்படையிலும் மொழி உச்சரிப்பும், மொழிவழக்கும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இது எல்லா மொழிகளுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்த அடிப்படையில்தான் இந்த விடயத்தை அணுக வேண்டும்.

ரவி என்பதை tavi என்றுதான் யாழ்ப்பாணத்தில் எல்லோரும் உச்சரிக்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல. இவ்வாறு உச்சரிப்பதை நான் கேட்டிருக்கிறேன் என்றாலும், ஒரு சிறு தொகையினர்தான் இவ்வாறு உச்சரிக்கிறார்கள். அவர்களும் எல்லா வையும் ta வாக உச்சரிப்பதில்லை. மிகப் பெரும்பாலானவர்களுக்கு = ra தான். (மரம் = maram, வாரம் = vaaram). தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி, புழங்குகின்ற எந்தவொரு குறிப்பிட்ட தமிழையும், தூய்மையானதென்றோ, சரியானதென்றோ, original என்றோ எவரும் கூறமுடியாது. இருந்தபோதும், கர உச்சரிப்புத் தவிர, கர கர வேறுபாடுகளையும், கர, கர வேறுபாடுகளையும், கர கர வேறுபாடுகளையும் சரியாக உச்சரிப்பதில் யாழ்ப்பாண, திருகோணமலை, மட்டக்களப்புத் தமிழ்மக்கள் முன்னணியில் உள்ளார்கள் என்பதை என்னால் கூறமுடியும். பிபிசி தமிழ் சேவையில் பல இலங்கைத் தமிழ் அறிவிப்பாளர்கள் உள்ளார்கள். அவர்கள் பேசும் தமிழைக் கேளுங்கள். அங்கே அவ்வப்போது சாதாரண இலங்கைத் தமிழ் மக்கள் பேசுவதையும் ஒலிபரப்புவதுண்டு கேட்டுப் பாருங்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை குமுதம் இதழில் வரும் அரசு பதில் பகுதியில் ஒருவர் யாழ்ப்பாணத்தவர் பேசும் தமிழைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு வழமைபோலவே இடக்கு முடக்கான ஒரு பதில் வந்தது. காலையில் எழுந்ததும், முகம் கழுவிக்கொள்ளாமல் கண்ணாடியில் எங்கள் முகத்தைப் பார்க்கும்போது ஒரு வெட்கம் வருவதை அனுபவித்திருக்கிறீர்களா? என்றவாறு அரசு பதில் கொடுத்திருந்தார். இப்பதிலைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டு விமரிசனங்களையும் கண்டனங்களையும் தெரிவிக்கவே, சில வாரங்களுக்குப் பின்னர் இதற்கு விளக்கமான பதிலொன்றை அரசு அளித்தார். விளக்கத்தின் இறுதியில் தெற்கே செல்லத் தமிழ் இனிக்கும் என்று முடித்திருந்தார். (இது விவாதிக்கும் விடயத்துக்கு நேரடித் தொடர்பில்லாததாயினும் ஒரு சுவைக்காகச் சொன்னேன்.)

வைச் சிலர் ta ena உச்சரிப்பதற்கும், ரொராண்டோ என்று எழுதுவதற்கும் அதிகம் தொடர்பு கிடையாது. இங்கே முக்கியமாக உணர்ந்து கொள்ள வேண்டியது, தமிழில் ta ஒலியை சொல்லின் முதலில் வர எழுதமுடியாது என்பதுதான். அதற்குத் தமிழில் எழுத்துக் கிடையாது. to வை ரொ என்று எழுதுவது எவ்வளவு பிழையானதோ, அதேயளவுக்கு, டொ என்று எழுதுவதும் பிழைதான். யாழ்ப்பாணத்தவர் Rorando என்று எழுத தமிழ் நாட்டவர் Dorando என்று எழுதுகிறார்கள். இவற்றில் எது உசத்தி என்று எவ்வாறு முடிவு செய்வது? கூடிய தொகையினர் செய்யும் பிழையையே எல்லோரும் செய்யலாம் என்று முடிவு செய்யலாம், அல்லது இருக்கின்ற ஆயிரக்கணக்கான வேறுபாடுகளைப் போலவே இதையும் ஏற்றுக்கொண்டு இரண்டையுமே எல்லாத் தமிழரும் புரிந்துகொள்ள முயலலாம். பிறந்தநாள் என்றாலும் பேர்த்டே என்றாலும் எல்லாத் தமிழருமே புரிந்துகொள்கிறார்கள் அல்லவா?.

ரவி, நீங்கள் ஓரிடத்தில்

ற ra என உச்சிரக்கப்படும் எனில் கற்றோர் என்பது katrOr என்றல்லவா இருக்க வேண்டும்? அது எப்படி kattOr ஆனது? மீற்றர் என்பது mItrar என்று தானே இருக்க வேண்டும் அது எப்படி meter ஆனது?

என்று கேட்டிருக்கிறீர்கள். உண்மையில் பழைய காலத்தில் என்பது ra எனவும் ற்ற என இரட்டித்து வரும்போது tt எனவுமே உச்சரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் இந்த வழக்கம் இன்னும் தொடர்ந்துவரத் தமிழ்நாட்டில் கைவிடப்பட்டு tra என உச்சரிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக முனைவர் செ.வை சண்முகம் (இந்தியத் தமிழர்) எழுதிய மொழி ஆய்வு என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட பகுதியைப் பாருங்கள்.

தமிழகத்தில் பேச்சு மொழியில் -ற்ற்- ஒலி கிடையாது. எழுத்து மொழியில் tt (ற்ற்) tr ஆக (நுனி நா அண்ணக்குரலிலா வல்லொலியும் தட்டொலியும் சேர்ந்தது) உச்சரிக்கப்படுகிறது. ஆனால் அது சங்க காலத்தில் நுனி அண்ணக்குரலிலா இரட்டை வல்லொலியாக உச்சரிக்கப்பட்டது. அது ஆங்கில tt ஒலியோடு ஒத்தது. tt என்ற ஆங்கில எழுத்து, தமிழக மக்களால் நாமடி ஒலியாக -ட்ட்- உச்சரிக்கப்படுவதால் தமிழகத்தில் ட்ட் என்று ஒலிபெயர்ப்புச் செய்யப்படுகின்றது. ஆனால் இலங்கையில் நுனி அண்ணக்குரலிலா இரட்டை வல்லொலியாக உச்சரிக்கப்படுவதால் -ற்ற்- என்று ஒலிபெயர்க்கப்படுகிறது.

சுந்தர், நீங்கள்

ஒருநாள் தமிழ் சொற்களிலும் சில எழுத்துக்களின் ஒலிப்பில் மாற்றம் இருப்பதை அறிந்தேன். அப்போதே எது தொல்காப்பியப் பரிந்துரையை ஒத்த ஒலிப்புமுறை என்று கேட்டிருந்தேன். ஒருவேளை யாழ் தமிழே சரியான பயன்பாடு என்று அறிந்திருந்தால் தற்போதைய பெரும்பாண்மை வழக்கை மாற்றக்கூட (விக்கிக்கு வெளியே) முயலலாம் என்று நினைத்திருந்தேன்.

எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலேயுள்ள எடுத்துக்காட்டு ற்ற் தொடர்பான உச்சரிப்பில் பழந்தமிழ் மரபுபற்றி உங்களுக்கு ஓரளவு விளக்கத்தைத் தந்திருக்கும் என எண்ணுகிறேன்.

செல்வாவின் குறிப்புக்கள் சிலவற்றில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. முதலாவதாக கருப்பு என்பதுதான் சரி என்றும் கறுப்பு பிழை என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழர் கருப்பு என்பதைக் கறுப்பு என்று பிழையாக எழுதுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இலங்கையில் கறுப்பைத்தான் கறுப்பு என்று எழுதுகிறார்கள். கருப்பு என்ற சொல் கரும்பைத் தான் குறிக்கும் (எகா: மன்மதனின் கருப்புவில்). இது குறித்து மதராஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட Tamil Lexicon இல் தேடினேன். கிடைத்த பக்கங்களுக்கான இணைப்புகளைக் கீழே பார்க்கவும்.

தவிரவும், மகன் என்பதை magan என்று உச்சரிக்கவேண்டும் என்பதும் சரியாகத் தெரியவில்லை. பொதுவாக ங் போன்ற எழுத்துக்களைத் தொடர்ந்து வரும்போது தான் Ga ஆக ஒலிக்கும் (எகா: சங்கம், மங்கை, தூங்கு). மகன் என்பதை mahan என்றுதான் உச்சரிக்க வேண்டும்.

இந்த முக்கியமான கலந்துரையாடலில், எனக்குச் சரியென்று பட்டதையும், பல நூல்களையும் வாசித்ததன்மூலம் அறிந்துகொண்டவற்றையும் எடுத்துக்கூறுவதுதான் எனது நோக்கமே அன்றி எவரையும் எதிர்த்து வாதம் புரிவதல்ல. நான் முன்வைத்த கருத்துக்கள் பிழையானவை என்று யாராவது ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினால் என்னுடைய கருத்துக்களை நான் மாற்றிக்கொள்ளுவேன். Mayooranathan 19:49, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

  • மயூரநாதன், நான் கருப்பு-கறுப்பு பற்றி நீங்கள் கூறுவ்து போல எங்கும் சொல்லவில்லை. ரகர ஒலிப்பை எப்படி பிற சொற்களில் பயிலுவீர்கள் என்று கேட்பதற்கு பிற சொற்களை எடுத்துக் காட்டினேன்.
  • மகன் என்பதை magan என்றுதான் சொல்லுதல் வேண்டும். வல்லொற்று வராவிடில் மெலிந்தே ஒலிக்க வேண்டும். ங், ன் ஆகிய மெல்லின எழுத்துக்கள் இருந்தால் சற்று மூக்கொலி மிகலாம் ஆனால் அதெல்லாம் நுட்ப் வேறுபாடுகள் - இப்படிப்பட்ட நுண் ஒலி வேறுபாடுகள் மிகப்பலவாம். வல்லின எழுத்துக்கு குற்றியலுகரம், முதலிய தவிர்த்த ஒலிகளில் இரண்டே இரண்டு ஒலிப்புகள்தான் உள்ளன. எ-கா. k-g, p-b, t-d. மூன்று ஒலிகள் ககரத்திற்கு உள்ளதென்று எங்கே கூறப்பட்டுளது? அறிவித்தால் நலம். எடுத்துக்காட்டாக பங்கு, நான்கு, பகு, நகு ஆகிய எல்லா சொற்களிலும், ககரம் மெலிந்தே ஒலிக்கும். pahu, nahu என்று கூறுவது திருந்தா கொச்சை ஒலிப்பு. சிறிதளவு காற்றொலி வருதலும், அதே போல மெல்லின எழுத்துக்குப் பின் சிறிதளவு மூக்கொலி வருதலும் இயல்பு, ஆனால் அவற்றை மிகைப்படுத்தலாகாது. எந்த ஒரு எழுத்தும், இடத்திற்கு ஏற்றவாறு மிகப்பலவாறு திரிபுறும் (வெறும் இரண்டு மூன்று வகை மட்டுமில்லை). அவை எல்லாம் நுட்பத்திரிபுகள்.
  • Tornonto என்பது டொரான்ட்டோ என்று எழுதினால், முதல் எழுத்து வல்லின எழுத்தாகையால் வலைத்து To என்று ஒலித்தல் வேஎண்டும். தமிழில் டகரமும், ரகரமும், றகரமும் ஒரு சொல்லின் முதல் ஒலியாக வரலாகாது. ஆனால், இங்கே உள்ளது வேற்றுமொழி. மேலும் ரகரம் நுனிநா வருடுவதால் எழுவது, எனவே To என்பதற்கு பயன்படுத்துவது தவறு. இதனை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் தவறு என்பது, தொல்காப்பிய அடிப்படையிலும், பெருவாரியான தமிழர்கள் புரிந்துகொண்டதின் அடிப்படையிலுமே சொல்லுகிறேன்.
  • செ.வை.சண்முகம் அவர்கள் கருத்தை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அது சரியானதாக எனக்கு படவில்லை. அவர் கூறவந்ததை, இந்த சிறிய மேற்கோள்வழி நான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.--C.R.Selvakumar 20:48, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா
இந்த உரையாடலை மீண்டும் வாசித்த போது எனக்குப் படுவதைச் சொல்கிறேன். இதனை ஆரம்பத்திலேயே விளங்கிக் கொள்ளாமைக்கு வருந்துகிறேன்.
இந்த ரகர, றகர குழப்பத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள நற்கீரன், கனக சிறீதரன் ஆகியோரது பெயர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் natkeeran, kanaga sreetharan என்றே எழுதுகிறார்கள். அதாவது தமிழ்ப் பெயர்களை ஆங்கிலத்துக்குப் பெயர்த்தெழுதும்போது ர என்பதற்கு ra என்றே பயன்படுத்துகிறார்கள். (ta என ஒலிபெயர்த்து எழுதுவதாக ஆதாரங்கள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.) இன்னும் குறிப்பாகச் சொல்வதானால ர என்பது ta என்பதற்கும் என்பதற்கும் இடையில் உச்சரிக்கப்படுவதாகத் தெரிகிறது. (சிறீன், மயூன், மயூநாதன், நற்கீன் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தால் இது உண்மையா என்பதை உறுதி செய்யலாம்) ravi என்பதை ரவி என எழுதி றவி என உச்சரிப்பதாக நற்கீரன் கூறியதைச் சுட்டிக் காட்டுகிறேன்.
இந்த உரையாடல் நேர்ப்பேச்சில் நடந்திருந்தால் இவ்வளவு நீண்டிருக்காது. காரணம் எமது ர உச்சரிப்புக் கொச்சையாகத் தெரிந்திருக்காது. ஆனால் எமது ர உச்சரிப்புக் காரணமாக ta என்பதை ஒலிபெயர்க்கும்போது ர என்கிறோம். அதனை ட என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. உண்மையில் கனகு சொன்னதே சரி. உண்மையான சிக்கல் ஆங்கிலச் சொற்களை தமிழில் எழுதுவது தொடர்பானதே. தமிழ் உச்சரிப்பில் அல்ல. உரையாடல் திசை மாறியமைக்கு நானும் காரணம்; வருந்துகிறேன்.
மேலும் t ற்கு d என்பதைவிட ற் என்றே பயன்படுத்தி வருகிறோம் என்பதற்கும் ஆதாரங்கள் தந்துளேன். அதுவே சரியாகவும் எனக்குப் படுகிறது. (natkeeran = நற்கீரன்)
நாட்கள் பற்றிய கட்டுரைகள் ஆகஸ்டு என்று பயன்படுத்த பக்க இறுதியில் இப்பக்கம் கடைசியாகத் திருத்தியது ஆகஸ்ட் என வருகிறது. பொதுவான ஒன்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். ஆகஸ்ற் இன்னும் சிறப்பானது.
மயூரநாதன், செல்வா, நற்கீரன், சுந்தர் மற்றும் ரவி, விளக்கங்களுக்கு நன்றி.
கோபி 01:49, 9 ஆகஸ்ட் 2006 (UTC)
தெற்கில் செல்லச் செல்ல மொழி இனிக்கும் என்ற எண்ணம் எனக்கும் உண்டு; ஏனெனில் நான் வாழ்ந்தது வளர்ந்தது அனைத்தும் தென் மாவட்டங்களில் தான். ;) மேலும் இலங்கைத் தமிழ் பழந்தமிழின் சேர வழக்கிலிருந்து தோன்றியது என்பர். எனக்கு சேர வழக்கிலும், தென் மலையாளத்த்தின் மீதும் தீராக் காதல் உண்டு. இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் அமீதின் குரலையும், ஒலிப்பையும் நான் பல ஆண்டுகளாக விரும்பிக் கேட்டுள்ளேன். இதனாலும் பொதுவாக வடமொழி இலங்கைத் தமிழில் குறைவு என்று நான் கருதியதாலும் பிற காரணங்களினாலும், பலமுறை என் நண்பர்களிடம் இலங்கையில்தான் தமிழை வளர்க்கின்றனர் என்று கூறுவதுண்டு. இருந்தும் சில இடங்களில் இலங்கை வழக்கில் வடமொழி பயன்படுத்தப்படுவதையும், ஒலிப்பில் "பிழை" இருப்பதுபோல் தோன்றுவதையும் கண்டிருக்கிறேன். எந்தெந்த இடங்களில் இலங்கைத் தமிழில் சரியான பயன்பாடு உள்ளதோ அங்கங்கே அதை மற்றவர்களும் பின்பற்றலாம், அதேபோல் எங்கெங்கு தமிழ்நாட்டுத் தமிழ் மரபுவழி உள்ளதோ அங்கங்கு அதைப் பின்பற்றலாம் என்பதே என் எண்ணம்.
நேற்றிரவே உறங்கும் முன், , ஒலிப்புமுறையைப் பற்றி எனக்கும் சில ஐயங்கள் ஏற்பட்டது. ஒருவேளை யாழ் வழக்கே மரபுவழியானது, மற்றையது அண்மையதாக இருக்கலாமோ எனத் தோன்றியது. ஏனெனில் பதற்றம் என்ற சொல்லுக்கு மாற்று எழுத்துக்கூட்டலாக பதட்டம் என்று நாங்கள் பயன்படுத்துவதுண்டு. இது ஒருவேளை மரபின் எச்சமாக இருக்கலாம், அல்லது அண்மைய தாக்கமாக இருக்கலாம். மொழியியல் ஆய்வர்கள்தான் கூற வேண்டும். அதேபோல் அவன், இவன், போன்ற சுட்டுச் சொற்கள் வரிசையில் இலங்கையில் உவன் என்று ஒன்று இருப்பதை அறிந்தபோது, அதுவும் மரபிலிருந்து நாங்கள் தொலைத்து விட்ட சொல்லோ எனத் தோன்றுகிறது. மாறாக நீங்கள் வளர்த்தெடுத்ததாகவும் இருக்கலாம். அதே வேளையில், தமிழ்நாட்டில் எங்கள் (கேட்பவரைச் சேர்க்காமல்) மற்றும் நமது (கேட்பவரையும் சேர்த்து) என இருவேறு சொற்களைப் பயன்படுத்துகிறோம். இலங்கையில் பலர் எங்கள் என்பதையே பொதுவாகப் பயன்படுத்துகிறீர்கள். இதுவும் வியப்பூட்டும் வேறுபாடாக உள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது இது ஒரு பலக்கிய விடயம் என்று தோன்றுகிறது. இந்த ஒலிகளை இலங்கையவர்களும் பிறரும் எவ்வாறு ஒலிக்கின்றனர் என்பதை ஒலிக்கோப்பில் பதிவேற்றி கேட்டால்தான் என்னால் வேறுபாடுகளை உணர முடியும் போல் தோன்றுகிறது. மரபுவழி ஒலிப்புமுறை (மாறக் கூடாது என்பதில்லை) எது என அறிய தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றை எவரேனும் சுட்ட வேண்டும். -- Sundar \பேச்சு 06:10, 9 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி

பாராட்டுக்கு நன்றி கோபி. எனது குறை பாடுகளையும் தெரிவித்தால் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும். மறுபடியும் நன்றி--டெரன்ஸ் 01:09, 9 ஆகஸ்ட் 2006 (UTC)


குறிப்பு

கோபி, கையெழுத்து இடாமல், கையெழுத்துக் குறியை மட்டும் எப்படி இடுவது என்று நிரோஜனின் பேச்சுப் பக்கத்தில் கேட்டிருந்தீர்கள். அதை nowiki என்ற கட்டளையை பயன்படுத்தி செய்யலாம். எடுத்துக்காட்டுக்கு, --~~~~ (தொகுத்தல் பக்க பார்வையில் இந்தப் பதிவைப் பார்த்தால் புரியும்.) தொகுத்தல் பக்க கருவிப்பெட்டியில் வலப்பக்கம் இருந்து மூன்றாம் தத்தல் w என்று போட்டு வட்டமிட்டு அடித்திருக்கும் தத்தல் இந்த வேலையை செய்யும்--ரவி 18:22, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி ரவி --கோபி 18:24, 11 ஆகஸ்ட் 2006 (UTC)

உருவாக்க வேண்டிய கட்டுரைகள்

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி கோபி. ஓரிரு நாட்களில் செய்து விடுவோம். தங்கள் பேச்சுப் பக்கம் வளர்ந்து விட்டது. இவற்றை தொகுப்புப் பக்கத்திற்கு நகர்த்தி விடலாமே. --சிவகுமார் 17:43, 22 ஆகஸ்ட் 2006 (UTC)

எப்படி நகர்த்துவது என்பதை நான் சரிவர விளங்கிக் கொள்ளவில்லை. முடியும்போது செய்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. --கோபி 17:45, 22 ஆகஸ்ட் 2006 (UTC)