பயனர் பேச்சு:கி.மூர்த்தி/தொகுப்பு 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுற்றுக்காவல்[தொகு]

வணக்கம், மூர்த்தி. தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:19, 5 அக்டோபர் 2016 (UTC

இரவி சார் வணக்கம். பதிப்புரிமை தொடர்பான நடவடிக்கைகளில் எனக்கு உரிய பயிற்சியேதுமில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் நான் என்றும் மறுப்பேதும் சொல்வதில்லை. தேவையான தகுதி எனக்கு இருப்பதாக நீங்கள் கருதினால் அணுக்கத்தைச் செயற்படுத்துங்கள். நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 08:03, 5 அக்டோபர் 2016 (UTC).
உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். தவறு செய்து விடுவோமோ என்ற கவலை வேண்டாம். இதனையே கூட பதிப்புரிமை பற்றியும் பிற விக்கிப்பீடியா வழமைகள் பற்றியும் மேலும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் பயிற்சியாகவும் கருதல்லாம். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 12:53, 13 அக்டோபர் 2016 (UTC)

பக்கத்தைப் பரணில் ஏற்ற வேண்டல்[தொகு]

வணக்கம், கி.மூர்த்தி/தொகுப்பு 3! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 12:55, 13 அக்டோபர் 2016 (UTC)

புதுப்பயனர் வரவேற்பு[தொகு]

வணக்கம் மூர்த்தி, புதுப்பயனர் வரவேற்பு பயனர் பக்கங்களில் தரக்கூடாது. பயனர்களின் உரையாடல் பக்கங்களிலேயே வரவேற்க வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 11:12, 16 அக்டோபர் 2016 (UTC)

கடந்த பல மாதங்களாக, புதுப்பயனர் வரவேற்பு தானியக்கமாக இடப்படுகிறது. தற்போது, வரவேற்புக் குழுவில் உங்கள் பெயரையும் இணைத்துள்ளேன். தானாகவே, ஒரு சில பயனர் பேச்சுப் பக்கங்களில் உங்கள் பெயரில் வரவேற்பு தோன்றும்.--இரவி (பேச்சு) 15:56, 16 அக்டோபர் 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Real life Barnstar Hires.png மெய்வாழ்வுப் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 08:51, 17 அக்டோபர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

-நந்தகுமார், வணக்கம். ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி--கி.மூர்த்தி (பேச்சு) 08:57, 17 அக்டோபர் 2016 (UTC)-

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:15, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்வாழ்த்துக்கள் மூர்த்தி ஐயா:) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:21, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:41, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 17:47, 17 அக்டோபர் 2016 (UTC)

உதவிக் குறிப்பு...[தொகு]

வணக்கம்! ஒருவரின் பேச்சுப் பக்கத்தில் ஏதேனும் உதவி கேட்பது (அல்லது) ஐயம் எழுப்புவது (அல்லது) கருத்து கேட்பது என்பன செய்யும்போது, புதிதான தலைப்பின்கீழ் கேளுங்கள். பக்கத்தின் மேலே, இரண்டாவது வரியில்... தலைப்பைச் சேர் எனும் பட்டை இருக்கிறது பாருங்கள்; அதனை சொடுக்குங்கள். அதன்பிறகு தலைப்பை எழுதி, நீங்கள் எழுத விரும்புவதை தொடர்ந்து எழுதலாம். என்னுடைய விளக்கம் போதுமானதாக இல்லையென்றால் தெரிவிக்கவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:52, 26 அக்டோபர் 2016 (UTC)

வேண்டுகோள்[தொகு]

தாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:46, 5 நவம்பர் 2016 (UTC)

<2000 கட்டுரைக்கும் அப்பால் ...[தொகு]

Iraayiravar.jpg ஈராயிரவர் பதக்கம்
மூர்த்தி, தமிழ் விக்கிப்பீடியாவில் 2000 கட்டுரைகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதுகின்றமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் பெருமளவு வேதியியல் சார்ந்த விரிவான கட்டுரைகள் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. உங்களைப் போன்ற துறைசார் அறிஞரின் பங்களிப்புகள், விக்கியின் வரலாற்றில் மிகவும் போற்றதக்கது. நீங்கள் எனக்கு வழியுறுத்தியபடி, வரும் தைத்திங்கள் முதல் திறநிலை தொழினுட்பக் கட்டுரைகளை நிகழ்பட பாடங்களாகவும், கட்டுரைகளை எழுதுவேன். அப்பொழுது உங்களது வழிகாட்டல் மேலும் தேவைப்படும். வணக்கம்.

வாழ்த்துகள்[தொகு]

 1. உழவன் (உரை) 02:26, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--AntanO 02:33, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 05:16, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--Arulghsr (பேச்சு) 05:29, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம். தங்களின் கடின உழைப்பிற்கு நன்றிகள்; இன்னும் பல ஆயிரங்கள் கட்டுரைகளை எழுதி, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பெருமை சேர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:52, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 07:43, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:40, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களது சீரிய பணி தொடரட்டும் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:54, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் தங்களுக்கு இச்சிறியேனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:35, 3 திசம்பர் 2016 (UTC)
இத்தனை கைத்தட்டல்களும் என்னை மூவாயிரவர் பதக்கத்தை நோக்கி விரைவாக அழைத்துச் செல்ல உதவும். நன்றி நண்பர்களே!--கி.மூர்த்தி (பேச்சு) 17:38, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்பாராட்டுகள்.--Semmal50 (பேச்சு) 07:02, 4 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:07, 6 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் தமிழில் அறிவியல் வளர்த்தமைக்கு மற்றொரு பாராட்டு.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:36, 7 திசம்பர் 2016 (UTC)
நீங்கள் ஈராயிரம் கட்டுரைகள் எழுதியது வியப்பில்லை. இன்னும் பல ஆயிரங்கள் எழுதுவீர்கள். ஆனால், தேர்ந்த ஒழுங்குடனும் ஈடுபாட்டுடனும் துறை சார்ந்த நாள் தவறாமல் எழுதும் முனைப்பைக் கண்டு வியக்கிறேன். தொடர்க உங்கள் சிறப்பான பங்களிப்புகள். --இரவி (பேச்சு) 10:36, 8 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம், வாழ்த்துக்கள். தொடர்ந்தும் பல ஆயிரம் கட்டுரைகளை எழுதித் தமிழ் விக்கிப்பீடியா சிறப்புற உதவுங்கள். --மயூரநாதன் (பேச்சு) 01:42, 22 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம், வாழ்த்துகள்! மிக அருமையாக வேதியியல் சார்ந்த கட்டுரைகளை இடைவிடாது எழுதி பெரிய ஆக்கம் நல்கியிருக்கின்றீர்கள்! உங்களின் உழைப்பு பல்லோருக்கும் பெரும் ஊக்கம் தருவதுறுதி.--செல்வா (பேச்சு) 00:52, 7 சூன் 2018 (UTC)

Address Collection[தொகு]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (பேச்சு) 07:58, 3 திசம்பர் 2016 (UTC)

கட்டுரைகள் உருவாக்க வேண்டுகோள்[தொகு]

கீழ்கண்டவை உடல்நலத்துடன் மிகவும் தொடர்புடையவை என்பதால் வேண்டுகோள்களை, அவ்வப்போது இவ்விடத்தில் சேர்க்கிறேன்.

 • gallic acid, chebulagic acid, & chebulinic acid

திரிபலா என்ற கட்டுரையை இன்று உருவாக்கிய போது, மேற்கூறிய மூன்று வேதிப்பொருட்கள் மனிதனுக்கு நன்மை பயப்பதாகத் தெரிகிறது. அதுபற்றிய கட்டுரைகள் தமிழில் இல்லை. அவை பற்றி அறிய ஆவல். நீங்கள் உருவாக்க வேண்டுகிறேன். ஆவலுடன்.. --உழவன் (உரை) 15:59, 4 திசம்பர் 2016 (UTC)

 • Sodium bicarbonate, Tannic acid, Activated carbon
 • மனஉளச்சலைத் தடுக்க எடுத்துக் கொள்ளப்படும் மருத்துகள் பல, (Propantheline bromide, Glycopyrronium bromide, Glycopyrronium bromide, Oxybutynin, Methantheline, Benzatropine) சில பக்கவிளைவு உண்டாக்க வல்லன. இவற்றைப் பற்றியும் நீங்கள் கட்டுரைகளை, உருவாக்க வேண்டுகிறேன். மறவாமல் நேரம் இருக்கும் போது செய்யுங்கள்--உழவன் (உரை) 15:57, 5 சனவரி 2017 (UTC)

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு[தொகு]

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். இக்கருத்தெடுப்பில் கலந்து கொள்ள நீங்கள் குறிப்பிட்ட பயிற்சியில் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக, நேரடியாக பங்கு கொள்ளாதவர்களுக்கும் இதன் பயன் புலப்படுகிறதா என்று அறிவதும் இக்கருத்தெடுப்பின் நோக்கமாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:21, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1[தொகு]

2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்[தொகு]

2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.


விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி[தொகு]

LED digit 1.pngLED digit 1.pngLED colon.pngLED digit 1.pngLED digit 9.pngLED pm.png
இன்று நவம்பர் 28, 2020
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:49, 31 திசம்பர் 2016 (UTC)

வாழ்த்துக்கள்[தொகு]

 1. விக்கிக்கோப்பை-2017 இல் 1,000 புள்ளிகளைத் தாண்டியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 03:15, 13 சனவரி 2017 (UTC)
 2. 👍 விருப்பம்--உழவன் (உரை) 03:32, 13 சனவரி 2017 (UTC)
 3. 👍 விருப்பம். அனைத்தும் வழமை போன்று முழுமையான கட்டுரைகள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 06:06, 13 சனவரி 2017 (UTC)
 4. நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:03, 13 சனவரி 2017 (UTC)
 5. 👍 விருப்பம்
 6. 👍 விருப்பம் அசைக்கமுடியாத புள்ளி. அபரிமிதமான முயற்சி. வாழ்த்துக்கள்.--ச.ஹோபிநாத் (பேச்சு) 16:23, 16 சனவரி 2017 (UTC)
 7. 👍 விருப்பம் தங்கள் விடா முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 16:49, 16 சனவரி 2017 (UTC)
 8. 👍 விருப்பம் அன்புமுனுசாமி 02:37, 04 மார்ச் 2017 (UTC)

வேதியல் சூத்திரத்தை எழுதபுதிய முறை[தொகு]

Tech_News:_2017-03 என்பதைப் பார்க்கவும். குறிப்பாக, You will be able to use <chem> to write chemical formulas. Before you could use <ce>. <ce> should be replaced by <chem>. [158]--உழவன் (உரை) 09:26, 18 சனவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று[தொகு]

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளீகளூம் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:05, 25 சனவரி 2017 (UTC)

உப்பீனி உப்புகள்[தொகு]

பகுப்பு:உப்பீனி உப்புகள் - ஆங்கிலத்தில் எவ்வாறு எழுதப்படுகிறது?--Kanags \உரையாடுக 11:21, 26 சனவரி 2017 (UTC)

Halogens Or salts of Halogens --கி.மூர்த்தி (பேச்சு) 11:30, 26 சனவரி 2017 (UTC)
அவ்வாறென்றால், பகுப்பு:ஆலசன்கள், பகுப்பு:உப்பீனி உப்புகள் இரண்டும் ஒன்றுதானா? இரண்டையும் இணைக்கலாமா? இணைக்கலாம் என்றால் எதனை நீக்கலாம்?--Kanags \உரையாடுக 11:37, 26 சனவரி 2017 (UTC)
விக்கி முழுவதும் ஆலசன் என்ற சொல் பயன்பாடு மிகுதியாக உள்ளது. ஆலசன், ஆலைடு போன்ற பொது சொற்கள் வழக்கத்திற்கு வந்துவிட்டது போல் உணர்கிறேன். தனித்தமிழாக உள்ள உப்பீனி உப்புகள் என்ற பகுப்பை நீக்குவது தொடர்பாக உறுதியாக முடிவெடுக்கவும் தயக்கமாகவும் உள்ளது. அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 12:07, 26 சனவரி 2017 (UTC)

ரோசிதுகள்[தொகு]

rosids என்ற இணைப்பு பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் இணைக்கப்ப்டுள்ளது. இவற்றை மாற்றுவதற்கு தானியங்கி அணுக்கம் உள்ள ஒருவரிடம் கையளியுங்கள். அல்லது உங்கள் Bot கணக்கை இந்தத் தேவைக்காக மட்டும் தற்காலிகமாக தானியங்கி இணக்கத்திற்கு விண்ணப்பியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 10:42, 5 பெப்ரவரி 2017 (UTC)

முதல் முறையாக முயற்சித்து Bot பயன்படுத்தக் கற்றுக் கொண்டுள்ளேன். தொடர என்ன செய்ய வேண்டும்? அணுக்கம் பெறாமல் பயன்படுத்தக்கூடாதா? --கி.மூர்த்தி (பேச்சு) 10:46, 5 பெப்ரவரி 2017 (UTC)

ஒரு சில (20-25) கட்டுரைகள் என்றால் பரவாயில்லை. ஆனால், இது பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் இந்தத் தேவைக்காக மட்டும் அணுக்கம் பெறுங்கள்.--Kanags \உரையாடுக 10:49, 5 பெப்ரவரி 2017 (UTC)
அணுக்கம் இல்லாமல் பயன்படுத்தக்கூடாது என எனக்குத் தெரியாது. இனி பயன்படுத்த வேண்டாம் என கூறியிருக்கலாம், முடக்கப்பட்டார் என்ற சொல் அவமானமாக உள்ளது. இனி எந்த கருவிகளையும் நான் பயன்படுத்தப் போவதில்லை. நன்றி.--கி.மூர்த்தி (பேச்சு) 10:52, 5 பெப்ரவரி 2017 (UTC)
குறை நினைக்க வேண்டாம். முடக்கப்பட்டது என்ற சொல்லை நான் பாவிக்கவில்லை. அதுவும் தானியங்கியாகவே தரப்பட்டது. பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் இருப்பதாலேயே நீங்கள் மேலும் தொடராதிருக்க குறைந்தபட்ச 2 மணிநேர தற்காலிகமான தடையை ஏற்படுத்தினேன். உங்கள் தானியங்கிக் கணக்கை வேறு குறைந்தளவு கட்டுரைகளில் தேவைப்படும் மாற்றங்களை நீங்கள் செயல்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 10:59, 5 பெப்ரவரி 2017 (UTC)
பயனர்:Info-farmer, சோதனைப் பதிவு என்று எந்தப் பதிவிலும் அவர் குறிப்பிடவில்லை. நூற்றுக்கும் மேல் ஒரே திருத்தங்களை செய்துள்ளார். இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.கது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், பயிற்சி கொடுக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் மாற்றங்கள் செய்யாமலிருக்கவே தடையை ஏற்படுத்தினேன். இது வழக்கமான பராமரிப்புப் பணியே. முன்னரும் அனுபவம் வாய்ந்த பயனர்களுக்கு செய்துள்ளோம். நிருவாக அணுக்கம் உள்ளோர் முறையாகத் தமது அணுக்கங்களைப் பயன்படுத்துவதில்லை. கட்டுரைகளை நீக்குவது மட்டும் தான் நிருவாகப் பணி என்று சிலர் நினைக்கிறார்கள். எனினும், நானே தடையை நீக்க இருந்தேன்.--Kanags \உரையாடுக 11:22, 5 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags:! நீங்கள் அவசரப் படுகிறீர்கள்.
 1. ஒரு நிமிடத்திற்கு இரண்டு பதிப்புகளே செய்துள்ளார்.
 2. சோதனை ஓட்டம் நடைபெறும் போதே, அறிவிப்பு இன்றி தடைசெய்தல் தவறு.
 3. //பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் இருப்பதாலேயே // என்பது தவறானது.

இனி விக்கிப்பக்கமே வரமாட்டேன் என்று வருத்தப்பட்டுள்ளார். அவருக்கு மூன்று மணிநேரமாக நிரலாக்கம் பற்றி அறிமுகப்படுத்தியது உங்களுக்குத் தெரியுமா? புதிய நுட்பங்களை கற்க சில நாட்கள் ஆகும். தடைசெய்யாவிட்டால் என்ன இழப்பு வந்து விடும்? எனவே, இனி அவசரப் படாதீர்கள். அறிவிப்பு இன்றி செயற்படுவது நமது திட்டத்திற்கு உகந்தது அல்ல.அவரிடம் பேசியதில் மிகவும் வருத்தப்படுகிறார். அவரிடம் உரையாடி விட்டு, தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே செயற்பட்டால் எப்படி? --உழவன் (உரை) 11:26, 5 பெப்ரவரி 2017 (UTC)

அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது பணியையே நான் செய்தேன். ஒரு நிமிடத்திற்கு ஒன்று செய்தாரோ, அல்லது நூறு செய்தாரோ, அது பிரச்சினை இல்லை. ஆனால், நூற்றிற்கு மேல் ஒரே தொகுப்பை செய்துள்ளார். அவர் நிறுத்துவதாகத் தெரியவில்லை. (விக்கி நடைமுறையை நீங்கள் அவருக்கு சரியாகக் கற்பிக்கவில்லை). அதனாலேயே தடை செய்யும்படி ஆனது. முறைப்படி தற்காலிகத் தானியங்கி அணுக்கத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை சொல்லிக் கொடுங்கள். அத்துடன், இன்னும் ஒன்று: அருள்கூர்ந்து செயரத்தினாவின் கருவியை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து மூர்த்திக்கு விளக்கப்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:40, 5 பெப்ரவரி 2017 (UTC)
சரிங்க! திரும்பவும் அவரிடம் பேசினேன். ஏனெனில், பல இடங்களில் கூறி உள்ளேன். விக்கி எனது குடும்பம் என்று. அவர் தமிழகத்தின் ஒரு மாவட்டம் முழுமைக்கும் பணியாற்றும், அரசு அலுவலர் அனைவருக்கும் ஊதியம் போடும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அதிகாரி. எனது நிலையோ வேறு. எனது எல்லைக்குள் அவர் இல்லை. எனக்கு அவரின் மனநிலை பேசியதில் தெளிவாகத் தெரிகிறது. அவரிடம் பேசியதில்,ஒரு மூத்த பங்களிப்பாளர் என்ற முறையில் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் முடக்கப்பட்டார் என்ற சொல்லை பயன்படுத்துவது மிகவும் வருந்ததக்கது. விக்கியின் மீது எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது. இனி என்னை அழைத்து பேசாதீர்கள்.' என்று கூறியது, எனக்கும் வருத்தமாக இருக்கிறது. கற்கவும், கற்பிக்கவும் அனைவராலும் உடனே முடியாது. பொறுமை வேண்டும். அதனால், மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். தவறு ஏற்படா சூழ்நிலையில் அவசரப்படாதீர்கள். அப்படியே நிகழ்ந்தாலும், அதனை சீரமைத்துக் கொள்ளலாம் என்ற வேண்டுகோளை முன்வைத்து, இப்பக்கத்தில் இருந்து விடைபெறுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 11:59, 5 பெப்ரவரி 2017 (UTC)
மூர்த்தி அவர்களுக்கு வணக்கம். நடந்தது குறித்து எனக்கு முழு விவரம் தெரியவில்லை. எனினும் தாங்கள் இது குறித்து வருந்த வேண்டாம். முடக்கப்பட்டது எனும் சொல், தானியங்கி தந்தது; கனக்ஸ் பயன்படுத்தவில்லை. வெவ்வேறு இடங்களிலிருந்து, வெவ்வேறு நேர வலயங்களில் நாம் பங்களிக்கும்போது வார்ப்புரு இடுதல் / தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் ஆகியன தவிர்க்க இயலாதது. அதனையே அவர் செய்திருப்பார் என உறுதியாக நம்புகிறேன். மேலும் கனக்ஸ் கடினமாக நடந்துகொள்பவர் அல்லர். தயைகூர்ந்து நடந்ததை மறந்து, எப்போதும் போல தமிழ் விக்கியில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். விக்கியில் அதிகளவு பங்களிப்பினை நாள்தோறும் வழங்கத் துடிக்கும் அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைதான் இது. உங்களுக்கு ஆறுதல் தரும் நானும் சிலமுறை வேறு வழிகளில் வேதனையடைந்துள்ளேன். எனினும் வெளியேற மனமில்லாமல் இன்னமும் பங்களிக்கிறேன். தகவலுழவன் அடிக்கடி கூறுவது சரியே - விக்கி எனது குடும்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:04, 6 பெப்ரவரி 2017 (UTC)
மூர்த்தி, இது குறித்து வருத்தப்பட வேண்டாம். உங்கள் முதன்மைக் கணக்கை நான் தடை செய்யவில்லை. உங்கள் Bot கணக்கை மட்டுமே 2 மணி நேரம் (அதை விடக் குறைந்த அளவாகத் தெரிவில் இல்லை). தடை செய்தேன். முன்னர் அனுபவம் மிக்க பயனர் கணக்கையே தடை செய்துள்ளோம். விக்கிப்பீடியா தடையின்றி நகர்வதற்கு இந்நடவடிக்கை சில வேளைகளில் தேவையாக உள்ளது. உங்கள் வழமையான பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 06:27, 6 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Trophy.png விக்கிக்கோப்பை வாகையாளர்
தமிழ் விக்கிப்பீடியாவில் 2017 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட விக்கிக்கோப்பைப் போட்டியில் முதலிடம் பெற்று அசத்திய தங்களுக்கு இப்பதக்கம் உரித்தாகட்டும்! இது போல் மேலும் தமிழ் விக்கியில் தங்கள் பணி தொடரட்டும்!... --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:30, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

 1. 👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:08, 3 மார்ச் 2017 (UTC)
 2. வாழ்த்துகள் மூர்த்தி. எனது அண்மைக்கால நிருவாகப் பணிகளினால் தங்களுக்கு ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்பைத் தொடர வேண்டுமென அனைவரும் விரும்புகிறோம்.--Kanags \உரையாடுக 01:13, 3 மார்ச் 2017 (UTC)
 3. ːமூர்த்தி அவர்களுக்கு வணக்கம். நடந்தது குறித்து எனக்கு விவரம் தெரியவில்லை. நம் விக்கியில் உங்கள் பங்களிப்பைத் தொடர வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 01:25, 3 மார்ச் 2017 (UTC)
 4. ஒவ்வொரு நாளும் உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறேன். நம்முள் பல விக்கிக்குறித்த அமைவுகளை விளக்கிய கனகின் பங்களிப்புகளை நாம் மறக்கவே கூடாது. யானைக்கும் அடி சறுக்கும் என்ற முதுமொழியை நினைவு கூறுக. எது தவறு எது சரி என்று எண்ண வேண்டாம் என இருகரம் கூப்பி, வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன். மற்றரை விட நானே உங்களிடம் அதிக நாட்கள் பழக உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தால். பழகியுள்ளேன். அதன்படியே தாவரவியல், நுட்ப கட்டுரைகளில் கவனம் செலுத்தி வருகிறேன். எங்களுடன் நீங்கள் என்றும் இருக்க வேண்டும் என்பதே என் துடிப்பாக உள்ளது. நாளை உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். (பயணவழி)வணக்கம்--உழவன் (உரை) 01:53, 3 மார்ச் 2017 (UTC)
 5. வாழ்த்துக்கள் மூர்த்தி ஒவ்வோரு நாளும் புதிய பக்கங்களையோ அல்லது அண்மைய மாற்றங்களையோ பார்க்கும்போது மூர்த்தியின் பங்களிப்பு உள்ளதா என ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன் தங்கள் நடந்த நிகழ்வை மறந்து தொடர்ந்து தமிழ் விக்கியில் பங்களிக்க வேண்டுகிறேன் ஆர்வத்துடன் தங்கள் வருகையை எதிர்நோக்கும் --Arulghsr (பேச்சு) 03:44, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:51, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 6.45, 3 மார்ச் 2017 (UTC)

ஸ்ரீஹீரன், தீக்குறும்பு செய்து தண்டனை பெற்ற ஒரு முடக்கப்பட்ட பயனருக்கு விக்கிக் கோப்பையை பரிசளிக்க விக்கி நடைமுறை அனுமதிக்கிறதா?

அனுமதிக்குமெனில்…..

வழிதவறி விக்கிப்பீடியாவிற்குள் வந்த என்னை, ”நன்றாக எழுதுகிறீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்” என்று இன்மொழியால் ஊக்குவித்த செல்வா அவர்களுக்கும், எனது நலனில் அக்கறை கொண்டு, என்னை ஒரு நல்ல மாணவனாக உருவாக்கியும் அவ்வப்போது தலையில்குட்டி வழிநடத்தியவருமான பெருமதிப்பிற்குரிய எனது ஆசான். Kanags அவர்களுக்கும் இக்கோப்பையை சமர்ப்பிக்கின்றேன்.. இருவருடைய இன்மொழிகளுமே என்னை இத்தனை கட்டுரைகளை எழுதவைத்தன என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேவையான வழிகாட்டுதல்களை உரிய நேரத்தில் அளித்து உதவிய, நந்தகுமார், Antan , உழவன், மா. செல்வசிவகுருநாதன், இரவி, ஸ்ரீஹீரன், தமிழ்க்குரிசில், Booradleyp1 மற்றும் எனது பேச்சுப்பக்கத்திற்கு வருகை தந்து தூண்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Kanags என்ற தனிப்பட்ட மனிதர்மீது எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. அவருடைய மாணவன் தவறிழைக்கும் போதெல்லாம் அவனை தண்டிக்கின்ற முழுஉரிமை உலகம் உள்ளவரை அவருக்கு உண்டு.

விக்கிப்பீடியா தடையின்றி நகர்வதற்கு அனுபவம் மிக்க பயனர் கணக்கையே தடை செய்துள்ளோம். என்று பெருமிதப்படும் தமிழ் விக்கிப்பீடியா நடைமுறையிடம் மட்டும் ஒரே ஒரு கேள்வியை முன்வைக்கின்றென்.

“விக்கிப்பீடியா தடையின்றி மேலும் விரைவாக நகர்வதற்கு,, முற்றிலும் நிரலாக்க அனுபவமே இல்லாத எத்தனை பயனர்களுக்கு அடிப்படைப் பயிற்சியளித்து தொடர்பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஸ்ரீஹீரன்,

அவமானப்பட்டவன் புலம்பத்தான் செய்வான். கி.மூர்த்தி என்ற ஒருவன் விலகிநிற்பதால் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு எந்த இழப்பும் இல்லை. அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று விக்கிப்பீடியா நடைமுறை உங்களுக்கு வழிகாட்டுமென்றால், கவலையை மறந்து துடிப்புடன் செயல்படுங்கள் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

மாறாக, மேலே கேட்கப்பட்ட இவனுடைய கேள்வியில் ஒரு சதவீதம் அளவாவது நியாயம் இருக்கிறது என்று தமிழ் விக்கிப்பீடியா நடைமுறை கருதுமென்றால்…….

நடந்து முடிந்த, நடக்க இருக்கின்ற தமிழ் விக்கிப்பீடியா போட்டிகள் குறித்த கி.மூர்த்தி என்ற தனிப்பட்ட ஒரு பயனரின் பார்வையை பதிவு செய்ய முன்வருவேன்.

அன்புடன் கி.மூர்த்தி.

அன்புள்ள மூர்த்தி, நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள். நான் எப்போது உங்கள் கணக்கைத் தடை செய்தேன்? நீங்கள் அனுபவம் மிக்க பயனர். உங்கள் கணக்கைத் தரம் உயர்த்தியதே நான் தான் தான். அப்படியிருக்க நான் தடை செய்வேனா? நீங்கள் வேறொரு கணக்கை ஆரம்பித்து ஆயிரக்கணக்கான (பிழையான) திருத்தங்களை) செய்ய முற்பட்டீர்கள். அதனால், உங்கள் பணியை உடனடியாகத் தடுக்கும் நோக்கில் உங்கள் அந்த இரண்டாம் கணக்கை ஒரு சில மணி நேரம் தற்காலிகமாகத் தடை செய்ய நேர்ந்தது. இது வழக்கமான நிருவாகப் பணியே. இதுவும் செய்ய ஒரு நிருவாகியால் முடியவில்லை என்றால் நிருவாகியாக இருப்பதில் என்ன பயன்? விக்கி எல்லோரும் எப்போதும் எழுதுவதற்கு தொகுப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது, ஆனாலும் ஒரு கண்காணிப்பு அவசியம் என நீங்கள் கருதவில்லையா? இதற்கு மேலும் உங்களுக்கு விளங்கப்படுத்த வேண்டிய என்னால் முடியாது.--Kanags \உரையாடுக 22:32, 3 மார்ச் 2017 (UTC)
தற்காலிக அணுக்கத்திற்கு விண்னப்பியுங்கள் என்று நீங்கள் எடுத்துக் கூறியதற்குப் பின்னர் நான் எந்த திருத்தத்தையும் மேற்கொள்ள வில்லை. உங்கள் வார்த்தையை மீறி நான் என்றுமே நடந்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியும். பிழையேற்பட வாய்ப்பு இருக்கிறது என்று நீங்கள் எடுத்துச் சொன்னாலேயே நான் கேட்டுக் கொண்டிருப்பேனே? விண்ணப்பியுங்கள் என்று கூறிய அடுத்த வினாடியே முடக்கப்பட்டார் என்று அவமானப்படுத்த வேண்டுமா? தானாக முன்வந்து கற்றுக் கொள்ள முயலும் ஒரு முன்னணி பயனரையும் தமிழ்விக்கிப்பீடியா நிர்வாகம் தீக்குறும்பு செய்பவராகத்தான் கருதுமா? --கி.மூர்த்தி (பேச்சு) 22:51, 3 மார்ச் 2017 (UTC)
அனுபவம் வாய்ந்த ஒரு பயனர் என்பதற்காக உங்களுக்கு எந்த விதிவிலக்கும் அனுமதிக்க முடியாது. ஓரிரு மணிநேரம் உங்கள் இரண்டாம் கணக்கைத் தடை செய்ததில் உங்களுக்கு என்ன மானப் பிரச்சினை வந்தது? ஏற்கனவே இவ்வாறு அனுபவம் வாய்ந்த பயனர்களின் முதன்மைக் கணக்குகளே தற்காலிகமாக ஓரிரு மணிநேரம் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் இப்போதும் விக்கிப் பயனர்களாக பங்களிப்பு செய்கின்றனர். தீக்குறும்பு செய்பவர்களின் முதன்மைக் கணக்கையே நிரந்தரமாகவே தடை செய்கிறோம். நீங்கள் செய்தது தீக்குறும்பு அல்ல. நீங்கள் விக்கி நடைமுறையை அறியாமல் செய்தது. இனி உங்கள் விருப்பம். நன்றி. --Kanags \உரையாடுக 23:03, 3 மார்ச் 2017 (UTC)
வணக்கம், கி.மூர்த்தி. நீங்கள் முதலிடம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:24, 4 மார்ச் 2017 (UTC)

வாழ்த்துகள். 👍 விருப்பம் --AntanO 09:26, 4 மார்ச் 2017 (UTC)

கி.மூர்த்தி, விக்கிக்கோப்பை வாகை சூடியதற்கு வாழ்த்துகள். தங்களின் இரண்டாம் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது குறித்து இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூற விரும்புகிறேன்:

 • புதிதாக வண்டியோட்டக் கற்கும் குழந்தை ஒரு சறுக்குப் பாதையில் கட்டுபாடு இன்றி செல்லும் போது அதனைத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். இல்லை என்றால், அக்குழந்தை, வழியில் செல்வோர் இருவரும் பாதிக்கப்படலாம். இங்கு தடுத்து நிறுத்துவது அக்கறையாலே.
 • அமைச்சர்கள், பெரும்புள்ளிகள் வாழும் பகுதிகளில் கூட ஒரு மின்துறை ஊழியர் பராமரிப்புப் பணி காரணமாக மின்சாரத்தை முடக்க வேண்டி வரலாம். அது அவரது பணியின் ஒரு பகுதி. இதில் யாருக்கும் அவமரியாதை இல்லை. சொல்லப்போனால், அவர் தன் பணியைச் செய்யாமல் விட்டால் யாருக்கும் ஆபத்து கூட நேரலாம்.

User:Kanags தன் பணியைத் தான் செய்திருக்கிறார். இதில் தனிப்பட ஒன்றும் இல்லை. இது போல் பல்வேறு பயனர்களின் தொடர் தொகுப்புகளைக் காணும் போது நானே அவ்வாற தற்காலிக நடவடிக்கை எடுக்க நினைத்திருக்கிறேன். நாளை நீங்கள் நிருவாகப் பொறுப்பேற்றால் இதே பணியைச் செய்ய வேண்டி இருக்கும். ஒரு சிலரே பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் போது அவர்களுக்கு நம் ஆதரவை அளிக்க வேண்டியது கடமை. தங்களிடம் சொன்னால் போதாதா என்றால், தானியங்கிக் கணக்கு இயங்கும் நேரத்தில் நீங்கள் அவர் இடும் செய்தியைக் கவனிக்காமல் கூட இருக்கலாம். ஆனால், அந்நேரத்தில் ஆயிரக்கணக்கான பதிவேற்றங்கள் ஏறி இருக்கலாம். எனவே, இது முன்னெச்சரிக்கையாக எடுக்கும் நடவடிக்கையே. முடக்கப்பட்டார் போன்ற சொற் பயன்பாடுகள் நம் பண்பாட்டு நோக்கில் உள்வாங்கப்படும் விதம் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது. இது குறித்து நிரலாக்கச் செய்திகளை மொழிபெயர்ப்பவர்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

//“விக்கிப்பீடியா தடையின்றி மேலும் விரைவாக நகர்வதற்கு,, முற்றிலும் நிரலாக்க அனுபவமே இல்லாத எத்தனை பயனர்களுக்கு அடிப்படைப் பயிற்சியளித்து தொடர்பங்களிப்பாளராக தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.//

என்று வினவி இருந்தீர்கள். 2016ஆம் ஆண்டு சென்னையில் த. இ. க. வில் இரண்டு நாள் விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சி நடைபெற்றது. ஏறக்குறைய 280+ மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவில் உலகிலேயே முதன்முறையாக, விக்கிமீடியா அறக்கட்டளை தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து இப்பயிற்சி அளித்தது. இதன் விளைவுகளை இங்கு காணலாம். தங்களைப் போன்றோருக்கு தானியக்கப் பங்களிப்புகளில் இருக்கும் ஆர்வம், இது போன்று இன்னும் தொடர் பயிற்சிகளை அளிக்க வேண்டிய தேவையை உணர்த்துகிறது. நிச்சயம் முயல்வோம்.

தமிழுக்கான நவீன கலைக்களனஞ்சியத்தை ஆக்குவது ஒரு வரலாற்றுப் பணி. தங்களைப் போன்று முனைப்புடன் கட்டுரைகளை எழுதிக் குவிப்பவர்கள் அதன் முக்கிய பங்களிப்பாளர்கள். மனக்குறைகள், புரிதற் பிழைகளை ஒதுக்கி வைத்து மீண்டும் விக்கிப்பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். போட்டிகள் பற்றிய உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றை ஆய்ந்து தக்க மாற்றங்களை மேற்கொள்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 15:27, 5 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு[தொகு]

 • 👌 - இயற்கை கட்டுரையை 1 லட்சம் பைட்டுக்கும் மேல் விரிவாக்கி அசத்தியபடி விக்கிக்கு மீள்வருகை அளித்தமை அற்புதம். இவ்வாறே தொடர்ந்து உங்கள் பங்களுப்பினைப் போட்டியின் மூலம் அளித்து வெற்றி பெறுங்கள் வாழ்த்துகள்.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:51, 1 மே 2017 (UTC)

மீண்டும் உங்கள் பங்களிப்புகளைக் காண மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வழமை போல சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 05:24, 2 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி[தொகு]

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)

பகுப்பாய்வு வேதியியல், கட்டுரையை இன்னும் கொஞ்சம் விரிவாக்கினால் நீண்ட கட்டுரையாகிவிடும், தர்போது அதன் மொழி வரியுருக்கள் அளவு 27,XXX அதை 30,000 மாக மாற்றயருள வேண்டுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:37, 7 மே 2017 (UTC)
மூர்த்தி! தொடர்பங்களிப்பாளர் போட்டியில், சிறந்த, மிக விரிவான கட்டுரைகளை ஆக்கி வருகிறீர்கள். பாராட்டுக்கள். --கலை (பேச்சு) 15:13, 11 மே 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:18, 11 மே 2017 (UTC)
தமிழ் விக்கிபப்பீடியா போட்டிகள் அனைத்திலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி நூறுகள் விளாசி கோப்பைகள் வெல்லும் உங்களுக்குப் பாராட்டுகள் :)--இரவி (பேச்சு) 16:11, 11 மே 2017 (UTC)

மணல்தொட்டி[தொகு]

இந்த மாற்றத்தை மீளமைத்து உள்ளேன். அதனை மாதிரி கட்டுரையாக எழுதச் சொன்னேன். நாளை அவர்களுக்கு அதனை வைத்து பயற்சி தர உள்ளேன்.--உழவன் (உரை) 16:16, 8 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:13, 21 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு[தொகு]

 • 👌 - இயற்கையில் ஆரம்பித்து இறப்பு வரைக்கும் சிறப்பாக 30 கட்டுரைகளை விரிவாக்கி, முதல் மூன்று பரிசுகளை வெல்வதற்கான தகுதியினை அடைந்துள்ளீர்கள்.
 • 👍 - ஆனாலும், 30 உடன் நின்றுவிடாது 60, 70, 80, 100 என தொடர்ந்து பல கட்டுரைகளையும் விரிவாக்குங்கள். அது உங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ளவும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தொடர்ந்து அசத்தலாகப் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!...

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:50, 21 மே 2017 (UTC)

பாராட்டுகள். போட்டியை சிறப்பாக நடத்தும் சிறீகீரனுக்கும் எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:53, 21 மே 2017 (UTC)
நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:51, 21 மே 2017 (UTC)
தொடர்ந்து கட்டுரை விரிவாக்கப் போட்டியில் தரமான கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் கி.மூர்த்தி. வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:37, 21 மே 2017 (UTC)

உதவி...[தொகு]

வணக்கம். பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள்#வேதியியல் என்பதனைக் கவனித்து, தங்களால் இயன்ற பங்களிப்பினை தர வேண்டுகிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:09, 28 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:01, 31 மே 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15 தொடர் போட்டியில் நிறைய கட்டுரைகளை எழுதி அசத்துவதற்காக . தோடருட்டும் உங்கள் சாதனை பணி. --குறும்பன் (பேச்சு) 17:16, 3 சூன் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:41, 3 சூன் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Editors Barnstar Hires.png விக்கிப்புயல் பதக்கம்
விக்கிப்பீடியா 15 போட்டியில் அசத்துவதற்காக. --குறும்பன் (பேச்சு) 17:18, 3 சூன் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 17:41, 3 சூன் 2017 (UTC)

👍 விருப்பம்--கலை (பேச்சு) 22:03, 3 சூன் 2017 (UTC) 👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:10, 4 சூன் 2017 (UTC)

👍 விருப்பம். வாழ்த்துகளும் பாராட்டுகளும் --Booradleyp1 (பேச்சு) 02:37, 4 சூன் 2017 (UTC)

உதவி[தொகு]

தனி உறுப்பு சேர்த்தல் என்ற கட்டுரையைத் திருத்தி, முழுமையாக்க முடியுமா? தலைப்பு சரியானதா எனவும் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:07, 5 சூன் 2017 (UTC)

துப்புரவுப் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:15, 20 சூன் 2017 (UTC)

ஒரு கட்டுரையில் துப்பரவுப் பணி முடிவடைந்தால், அக்கட்டுரையில் இருந்து பராமரிப்புப் பகுப்பை நீக்கி விடலாம்.--Kanags \உரையாடுக 00:14, 24 சூன் 2017 (UTC)

சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம்.

குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.

தங்களின் கவனத்திற்கு...[தொகு]

வணக்கம்.

 1. ஆர். எம். பாபு முருகவேல் கட்டுரையில் முதல் மேற்கோள் வேலை செய்யவில்லை. கவனிக்கவும்.
 2. பகுப்பு:துப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பினை இடும்போது பகுப்பு:வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பினை நீக்கி விடலாம்.
 3. நீங்கள் துப்புரவு செய்ததை இன்னொருவரும் பார்த்து உறுதி செய்ய வேண்டும் என நீங்கள் கருதினால், பகுப்பு:துப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பினை இடுங்கள்.

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:20, 16 சூலை 2017 (UTC)

தங்களின் கவனத்திற்கு...[தொகு]

14 ஆவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இணைப்பு இங்குள்ளது. எதாவது கட்டுரையில் மேற்கோள் இணைப்பு வேலை செய்யவில்லை என்றால், இந்த இணைப்பினை பயன்படுத்தவும். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:37, 16 சூலை 2017 (UTC)

தவறாக நினைக்க வேண்டாம். இந்தப் பக்கத்தில் உதவிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அதன்படி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:03, 16 சூலை 2017 (UTC)

ஆசிரியப் பயனர்களால் உருவாக்கப்படும் கட்டுரைகள் அனைத்தும் தகுந்த துறை-சார் பகுப்புகளுக்குள் சேர்க்கப்பட வேண்டும். வாழும் நபர்கள் மட்டும் போதாது. தகுந்த பகுப்புகள் இல்லாவிட்டால் புதிதாக உருவாக்குங்கள். அல்லது சுற்றுக்காவலை நீக்காதீர்கள். வேறு பயனர்கள அதனைக் கவனிப்பார்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:22, 16 சூலை 2017 (UTC)
நிறைவுற்ற சேர்மங்கள் என்ற கட்டுரையில் அதிக தகவல்கள் இல்லை. இதனைத் திருத்த முடியுமா எனப் பாருங்கள். அல்லது நீக்கல் வார்ப்புருவைச் சேருங்கள்.--Kanags \உரையாடுக 03:28, 22 சூலை 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:இறுதிக் கட்டப் பரபரப்பு[தொகு]

தொடர்பங்களிப்பாளர் போட்டி பரபரப்பாக நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ளது. இந்த நேரத்தில் தாங்கள் தான் முதலாவதாகவும் உள்ளீர்கள். ஆனால் முதல் இடம்பெறுவது கேள்விக்குறியே. காரணம், இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளவர்கள் நினைத்தால் உங்களை முந்திவிடலாம். இவ்வளவு நாளும் சிறப்பாக பங்குபற்றி நீங்கள் எதிர்பார்த்த கனவை நனவாக மாற்றுவதற்கு தொடர்ந்தும் போட்டியுடன் போராட வேண்டியுள்ளது. சற்றும் பின்வாங்கமல் தொடர்ந்து பல கட்டுரைகளை வேகமாக, சிறப்பாக விரிவாக்கி தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள். நன்றி!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:46, 18 அக்டோபர் 2017 (UTC)

போட்டிக்கு அனுப்பப்படும் முழுக் கட்டுரைகளையும் முழுமையாக, தீர்க்கமாக வாசிப்பதில்லை. உங்களுடைய கட்டுரைகளை ஓரளவு மேலோட்டமாகப் பார்ப்பதே வழக்கம். ஆனால் டியேகோ வெலாஸ்க்குவெஸ் கட்டுரையை முழுமையாக வாசித்தபோது, பல இடங்களில் சொற்றொடரைப் புரிந்து கொள்வதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. சில இடங்களில் சொற்றொடர்கள் சரியாக அமையாதது போன்ற தோற்றத்தைத் தருகிறது. பல சொற்றொடர்களில் நிறுத்தற்புள்ளிக்குப் பதில் காற்புள்ளி இட்டு, தகவலை நிறைவு செய்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். எ.கா.
 1. இவர் வரைந்த மியூசோ டெல் பிரொடோ உருவப்படம் சான் பெலிப்பிவின் நடவடிக்கைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது, அவரால் உற்சாகத்துடன் பெற்றுக் கொள்ளப்பட்டது. தற்போது அவ்வுருவப்படம் இழக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் கிடைக்கபெற்ற வெலாசுக்வெசு வரைந்த அரசரின் 1070, 1071 என்ற எண்ணிட்ட இரண்டு ஓவியங்களில் செவில் காலத்தின் குறிப்பு காணாமல் போனது மற்றும் திண்மையும் மிகவும் மென்மையாக உள்ளது. என்ற சொற்றொடரமைப்பு வாசிப்பதற்குக் கடினமாக இருப்பதுடன், புரிந்து கொள்வதிலும் சிரமம் உள்ளது. எது அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, எது மற்றும் திண்மையும், மிகவும் மென்மையகவும் உள்ளது என்பதுபோன்ற கேள்விகள் எழுகின்றன.
 2. கட்டுரை முடிவில் எசுப்பானியாவின் பெண்மயமாக்கல் நம்பிக்கையுடன் அமைதியாக அமர்ந்துள்ளது. என்ற சொற்றொடர் எந்தத் தகவலுடன் தொடர்புபடுத்தப்பட்டுச் சொல்லப்பட்டுள்ளது என்பது புரியவில்லை.
தயவுசெய்து சரிபாருங்கள். நன்றி.--கலை (பேச்சு) 09:49, 28 அக்டோபர் 2017 (UTC)
பிழைகளை திருத்தி விட்டேன் கலை--கி.மூர்த்தி (பேச்சு) 10:45, 28 அக்டோபர் 2017 (UTC)

கி.மூர்த்தி! கட்டுரைப்போட்டி இன்றுடன் முடிவடைகின்றது. பார்த்தினன் கட்டுரையை விரிவாக்கியிருந்தீர்கள். சமர்ப்பிக்கவில்லையா?--கலை (பேச்சு) 19:01, 31 அக்டோபர் 2017 (UTC)

ஆசிய மாதம், 2017[தொகு]

WAM 2017 Banner-ta.png

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
 • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
 • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
 • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
 • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
 • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:24, 14 நவம்பர் 2017 (UTC)

வணக்கம் தோழர். கடந்த நான்கு மாதங்களாகவும் இனியும் என்னுடைய அலுவலகப் பணி தொடர் பயணமாகவே அமைந்துவிட்டது, அமையும். போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு எனக்கு நேரம் கிடைக்காது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய பங்களிப்புகள் இருக்கும். அழைப்புக்கு நன்றி. அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 14:29, 15 நவம்பர் 2017 (UTC)

தாவர வேதிப்பொருட்களைக் குறித்த வேண்டுகோள்[தொகு]

 • w:List of phytochemicals in food என்பதில் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் உள்ளன. அவை குறித்த விழிப்புணர்வு, செயற்கையான மாத்திரைகளை நாடுவதைத் தவிர்க்கும் என நம்புகிறேன். எடுத்துக்காட்டக, உணவு மண்டலத்தில் இருக்கும் நன்மை செய்யும் நுண்ணுயிர்களை திராட்சைமது(wine) வளர்க்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதே வேதிப்பொருள் நமது நாட்டு கத்தரிக்காயிலும் இருக்கிறது. சுருங்கச்சொன்னால், நமது உணவு கலாச்சாரத்தில் மறைமுக பல நுட்பங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொணர்வதற்கு இதுபோன்ற கட்டுரைகள் உதவும் என எண்ணுகிறேன். எனவே, உங்கள் இலக்குகளுக்குள் இக்கட்டுரைகளையும் இணைக்கக் கோருகிறேன்.
 • நீங்கள் கூறியபடி, திறநிலை / கட்டற்ற மென்பொருட்களைக் குறித்து எழுதத் தொடங்கியுள்ளேன். பல்வேறு பணிசூழல் காரணமாகவும், இணைய இணைப்பின் காரணமாகவும் விரிவாக எழுத இயலவில்லை. விக்கிமூலத்திற்கான தானியக்கச்சோதனைக்காக படிப்பதற்கே நேரமும், இணைய வசதியும் போதவில்லை. நேரம் இருக்கும் போது அழையுங்கள். வணக்கம்.--உழவன் (உரை) 06:53, 3 பெப்ரவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:44, 18 பெப்ரவரி 2018 (UTC)

உறுதுணை வேண்டல்[தொகு]

எனது நண்பர் சுகந்தா, மெக்னசைட்டு என்னும் கட்டுரையை உருவாக்கியுள்ளார், இப்பக்கம் குறித்து தங்களின் பின்னூட்டம் தேவை.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:19, 8 மார்ச் 2018 (UTC)

வணக்கம் சுகந்தா, கட்டுரை நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நீல இணைப்புகள் வருமாறு சில திருத்தங்கள் செய்துள்ளேன். கவனிக்கவும். கட்டுரையில் அதிகமான நீல இணைப்புகள் இருப்பது கட்டுரைக்குச் சிறப்பு. அன்புடன் --கி.மூர்த்தி (பேச்சு) 16:48, 8 மார்ச் 2018 (UTC)

முனைவர் அவர்களுக்கு[தொகு]

வணக்கம் ஐயா தங்களின் கனிவான வாழ்த்துக்கும் வழிகாட்டுதலுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.--Sugayaazh (பேச்சு) 06:24, 9 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு[தொகு]

அன்புள்ள மூர்த்தி,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது தான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படு்ம் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாக்கச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேச்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில் நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன் மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியில் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழ வாய்ப்பாகவும் அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமைய போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:43, 10 மார்ச் 2018 (UTC)

அன்புள்ள இரவி,

போட்டிக் காலம் முழுவதும் நான் அலுவலக ஆய்வுப் பணிக்காக வெளியூர்களில் இருக்க வேண்டியுள்ளது. என்னால் சனி ஞாயிறுகளில் மட்டுமே பங்களிக்க இயலும் என்பதால் மும்முரமாகப் போட்டியிட இயலாது. இருப்பினும் விடுமுறை தினங்களில் என்னுடைய பங்களிப்பை சில கட்டுரைகளாகக் கண்டிப்பாக தருகிறேன். அழைப்புக்கு நன்றி. அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 12:21, 11 மார்ச் 2018 (UTC)

உங்கள் அலுவலகச் சூழ்நிலை குறித்து எடுத்துரைத்தமைக்கு நன்றி. ஒரு நாள் பங்களித்தாலும் மற்ற பங்களிப்பாளர்களை முந்தக் கூடிய வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை வரலாறு சொல்லும் :)
கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:15, 13 மார்ச் 2018 (UTC)

மூவாயிரம் கட்டுரைகள்[தொகு]

வாழ்த்துகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் 3,000 கட்டுரைகள் எழுதியமைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை வேதியியல் சார்ந்த முழுமையான கட்டுரைகள் என்பது மற்ற பயனர்களுக்கு உந்துதலாக அமையும் சிறப்பு வாய்ந்தவை. உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:02, 27 மார்ச் 2018 (UTC)

 1. --தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்--உழவன் (உரை) 15:10, 27 மார்ச் 2018 (UTC)
 2. மூவாயிரர் பதக்கம் பெறுவதற்கான உழைப்பு சாமானியமானதல்ல. தமிழ் விக்கிப்பீடியாவில் வேதியியலில் தேடுபவர்களுக்கான விடையாக உங்களின் கட்டுரைகள் அமைந்துள்ளன. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள். மகாலிங்கம் (பேச்சு) 15:18, 27 மார்ச் 2018 (UTC)
 3. விடாமுயற்சியாளார். இந்தியாவிலிருந்து மூவாயிரம் எட்டியுள்ள முதல் நபரும் தாங்களே. வாழ்த்துக்கள் -நீச்சல்காரன் (பேச்சு)
 4. உங்கள் அடைவு கண்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் மூர்த்தி.சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:38, 27 மார்ச் 2018 (UTC)
 5. அறிவியல் கட்டுரைகளை எழுதுவதில் தங்களிடம் கற்றுக்கொண்டவை பல. உளமார்ந்த வாழ்த்துக்கள். --அஞ்சனன்.வி (பேச்சு) 19:09, 27 மார்ச் 2018 (UTC)
 6. இணையத்தமிழ் முனைவர் --Sengai Podhuvan (பேச்சு) 22:07, 27 மார்ச் 2018 (UTC)
 7. உளமார்ந்த வாழ்த்துக்கள்.--நந்தகுமார் (பேச்சு) 02:25, 28 மார்ச் 2018 (UTC)
 8. வாழ்த்துகள்.--Kanags (பேச்சு) 09:45, 28 மார்ச் 2018 (UTC)
 9. குறுகிய காலத்தில் 3000 கட்டுரைகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளீர்கள். வாழ்த்துகள் மூர்த்தி! --சிவகோசரன் (பேச்சு) 14:58, 28 மார்ச் 2018 (UTC)
 10. 3000 கட்டுரைகளை எழுதி விக்கிப் பணியைத் தொடர்வதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 15:11, 28 மார்ச் 2018 (UTC)
 11. உளமார்ந்த வாழ்த்துக்கள்.-- (ஹிபாயத்துல்லா) 14:40, 29 மார்ச் 2018 (UTC)
 12. வாழ்த்துக்கள். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:51, 30 மார்ச் 2018 (UTC)
 13. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.--அருளரசன் (பேச்சு) 09:04, 30 மார்ச் 2018 (UTC)
 14. வாழ்த்துக்கள், ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ளீர்கள்.--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 18:32, 30 மார்ச் 2018 (UTC)
 15. உளமார்ந்த வாழ்த்துக்கள்.-- (கிருஷ்ணமூர்த்தி) 11.36, 11 ஏப்ரல் 2018 (UTC)

அனைவருக்கும் எனது நன்றிகள்.--கி.மூர்த்தி (பேச்சு) 12:49, 14 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - கட்டுரைப் போட்டியில் முன்னிலை[தொகு]

வணக்கம். நடைபெற்று வரும் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் தற்போதைய நிலவரப்படி நான்காம் இடத்தில் உள்ளீர்கள். தங்களைப் போன்ற பலரும் போட்டிக்குப் பங்களித்த கட்டுரைகளால் இந்த மாதம் மட்டும் இதுவரை 11,899 கூடுதல் பக்கப் பார்வைகளைப் பெற்றிருக்கிறோம் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து முனைப்புடன் பங்களித்து போட்டியில் முன்னேறி தங்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பரிசு வெல்லவும் இன்னும் நிறைய வாசகர்களுக்குக் கட்டற்ற அறிவைத் தமிழில் கொண்டு சேர்க்கவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:20, 27 மார்ச் 2018 (UTC)

 1. இவ்வார இறுதியில் தங்களைத் தொடர்பு கொள்கிறேன். மேலும், தங்கள்பணி சிறக்க என்னால் தொழினுட்ப உதவிகளைப் பெற்று தர இயலும். தங்கள் அரசுப்பணி உயர்வு கண்டு மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு முழுவதும் தணிக்கைப் பணி செய்தாலும், உங்களின் விக்கிவேகம் என்னுள் மலைப்பையும், எனக்குள் உழைப்பையும் தூண்டுகிறது. தற்போது எனது பழைய எண் வேலை செய்யும். ஏறத்தாழ50 தொழினுட்ப கட்டுரைகளை எழுதினேன். உயிரியல் கட்டுரைகளுக்காக தொழினுட்பங்களைக் கற்பதால் தொடர்ந்து எழுத இயலவில்லை. எனக்குள் இருந்து ஊக்கமளிக்கின்றமைக்கு மிக்க நன்றி.--உழவன் (உரை) 15:22, 27 மார்ச் 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey[தொகு]

WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey[தொகு]

WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - மார்ச்சு மாதப் போட்டியில் பரிசு![தொகு]

வணக்கம், மூர்த்தி. வேங்கைத் திட்டத்தின் கீழ் மார்ச்சு மாதப் போட்டியில் 22 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து மகாலிங்கத்துடன் இணைந்து மூன்றாம் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல், மே மாதமும் தொடர்ந்து மாதாந்த பங்களிப்புகள் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும். பரிசுகளை எப்படிப் பெற்றுக் கொள்வது என்ற விவரத்தைத் தனிமடலில் தெரிவிக்கிறேன். தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்துக்கு 10 இலட்சம் இந்திய உரூபாய் மதிப்பில் 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. இன்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம். இது தொடர்ந்து உங்களுக்கு ஆர்வமுடைய தலைப்புகளில் பங்களிக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி. --இரவி (பேச்சு) 20:31, 15 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey[தொகு]

WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்[தொகு]

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)


Thank you for keeping Wikipedia thriving in India[தொகு]

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)

வேங்கைத் திட்டம்[தொகு]

தொடர்ந்து பல சிறப்பான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதற்கு சகபோட்டியாளராக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.நன்றி.Dsesringp (பேச்சு) 08:27, 8 மே 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - ஏப்ரல் மாதப் போட்டியில் பரிசு![தொகு]

வணக்கம், மூர்த்தி. வேங்கைத் திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதப் போட்டியில் மட்டும் புதிதாக 46 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து இரண்டாம் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்குத் தெரியாத போட்டி இல்லை. மே மாதமும் தொடர்ந்து சிறப்பாகப் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியா வெற்றி வாகை சூட உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:56, 9 மே 2018 (UTC)


ஐயாவிற்கு வணக்கம் , சிறப்பான 100 கட்டுரைகளை உருவாக்கி எங்களுக்கு வழிகாட்டியாய் உள்ளீர்கள். வாழ்க வளமுடன். நன்றிDsesringp (பேச்சு) 02:18, 13 மே 2018 (UTC)

வேண்டுகோள்[தொகு]

நேரம் இருக்கும் போது அழைக்கவும். --உழவன் (உரை) 03:29, 20 மே 2018 (UTC)

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்![தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது[தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!![தொகு]

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை![தொகு]

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

வேங்கைத் திட்டம் - மே மாதப் போட்டியில் பரிசு![தொகு]

வணக்கம், மூர்த்தி. வேங்கைத் திட்டத்தின் கீழ் மே மாதப் போட்டியில் மட்டும் புதிதாக 86 கட்டுரைகளுக்குத் திறம்படப் பங்களித்து இரண்டாம் பரிசைப் பெறுகிறீர்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்புக்கு உறுதுணையாக இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு நல்ல ஓய்வுக்குப் பிறகு மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 17:23, 1 சூன் 2018 (UTC)

மூவாயிரவர் பதக்கம்[தொகு]

Three thousand certificate.jpg மூவாயிரவர் பதக்கம்
மூர்த்தி, கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்புகள் நல்கி வரும் நீங்கள் 3,000 கட்டுரைகளுக்கும் மேலாக உருவாக்கியுள்ளதைக் கண்டு மகிழ்ந்து என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து சிறப்பான பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன். நன்றி.--Kanags (பேச்சு) 09:03, 3 சூன் 2018 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள் மூர்த்தி.--கலை (பேச்சு) 05:35, 4 சூன் 2018 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள் !! --மணியன் (பேச்சு) 13:18, 5 சூன் 2018 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள் !! --அருளரசன் (பேச்சு) 14:02, 5 சூன் 2018 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:39, 6 சூன் 2018 (UTC)
👍 விருப்பம், வாழ்த்துகள்! மிக அருமையாக வேதியியல் சார்ந்த கட்டுரைகளை இடைவிடாது எழுதி பெரிய ஆக்கம் நல்கியிருக்கின்றீர்கள்! இப்பொழுது 3000 கட்டுரைகளைத் தாண்டியிருக்கின்றீர்கள். உங்களின் உழைப்பு பல்லோருக்கும் பெரும் ஊக்கம் தருவதுறுதி.--செல்வா (பேச்சு) 00:52, 7 சூன் 2018 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள் --சுந்தர்.வசு.மணிவண்ணன் (பேச்சு) 01:15, 7 சூன் 2018 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள்! உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:58, 15 சூன் 2018 (UTC)

மூர்த்தி தாங்கள் இராஞ்சி செல்ல என்று எந்த விமானத்தட குழுமத்தில் பதிவு செய்ய உள்ளீர்கள். தகவல் உழவனையும் கலந்துகொள்ளவும். நாம் மூவரும் விக்கிச் சிற்ப்புப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ரவி அறிவித்துள்ளார்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:58, 15 சூன் 2018 (UTC)

Project tiger contest[தொகு]

Hi, greetings from Gopala. You won the prize in Project tiger contest. We (CIS-A2K) would like to send the prize to you. Please send an email with your bank details to gopala﹫cis-india.org. --Gopala Krishna A (CIS-A2K) (பேச்சு) 08:51, 8 ஆகத்து 2018 (UTC)

மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.--கி.மூர்த்தி (பேச்சு) 10:03, 8 ஆகத்து 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிநூல்[தொகு]

https://ta.wikibooks.org/s/35x

தங்களுக்கு வந்த வேங்கைப் பயிற்சிப் பட்டறைக்கான மின்னஞ்லைப் படிவத்துடன் எனக்கும் Forwaard செய்க!உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 03:19, 8 நவம்பர் 2018 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:36, 2 நவம்பர் 2018 (UTC)

வான் டெர் வால்சு விசை[தொகு]

வான் டெர் வால்சு விசை, வாண்டெர்வால்சு ஆரம் ஆகிய இரண்டும் ஒன்றைக் குறிக்குமா? அல்ல்து வெவ்வேறானவையா? ஈலியம் முப்படி கட்டுரையில் என் இணைப்பை குறித்து கேட்டேன். சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:20, 14 திசம்பர் 2018 (UTC)

வணக்கம் சஞ்சீவி. இரண்டும் வெவ்வேறானவை--கி.மூர்த்தி (பேச்சு) 09:36, 14 திசம்பர் 2018 (UTC)