பயனர்:Wpugal

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கார்த்திக் புகழேந்தி
தொழில் எழுத்தாளர்,
பத்திரிகையாளர்
நாடு இந்தியர்
கல்வி கல்வி உயர்நிலை,
கல்வி நிலையம் கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி,
திருநெல்வேலி
எழுதிய காலம் 2011 முதல்
துணைவர்(கள்) சுபா தேவநாதன்
பிள்ளைகள் அகரமுதல்வன்
http://writterpugal.blogspot.in/

அறிமுகம்[தொகு]

'‘கார்த்திக் புகழேந்தி’' (English: Karthick Pugazhendhi) தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நகரில், 1989 ஆம் ஆண்டு, திரு.முருகன்- திருமதி.பூங்கோதை தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பாளையங்கோட்டையில் உயர்கல்வி வரை பயின்ற இவர், பள்ளி காலத்தில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றிருக்கிறார். [1]

நாட்டுப்புறவியல், கதைகள் சேகரிப்பு, பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், கலைகள், நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். பதிப்பாளராகவும், பத்திரிகையாளராகவும் பணிபுரியும் இவர், தற்போது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மறைமலைநகரில் தன் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.

இலக்கியத் துறையில்[தொகு]

கடந்த 2011 முதல் ஆறு ஆண்டுகளாக தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள், பத்திகள் எழுதிவரும் இவரது முதல் சிறுகதை ‘தாமிரபரணிக் கரையினிலே’ அந்திமழை இதழில் 2015ம் ஆண்டில் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் நேர்காணல் ஆகியவை மலைகள், அகநாழிகை, கதைசொல்லி, ஜன்னல், தி இந்து தமிழ், நூலகம் பேசுகிறது, தினமணி, தினமலர், ஜன்னல், கணையாழி, காக்கைச் சிறகினிலே, தென்றல், சிலம்பு, தட்ஸ் தமிழ், ஹெரிடேஜர் ஆகிய அச்சு மற்றும் இணைய ஊடகங்களில் வெளியாகின. [2]

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் “இளம் தலைமுறை சிறுகதையின் புதியமுகம்” என இவரது படைப்புகளைப் பாராட்டியுள்ளார். [3] எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தொகுத்து, ஒன்பது இந்திய மொழிகளில் நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட, ‘நவலோகன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்-2016’ நூலில் இவரது ‘வெட்டும்பெருமாள்’ சிறுகதை தேர்வுசெய்யப்பட்டுள்ளது. [4] திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழ் துறையில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் இவரது கட்டுரை இடம்பெற்றுள்ளது. புதிய தலைமுறை ஆண்டிதழில் 2017ம் ஆண்டின் இளம் படைப்பாளி எனப் பாராட்டை நல்கியுள்ளது. 2018ம் ஆண்டு மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற சாகித்திய அகாதமி அகில இந்திய அளவில் நடைபெற்ற இளம் எழுத்தாளர்கள் கருத்தரங்கில் தமிழகம் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இக்கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே இளம் எழுத்தாளர் இவர். [5]

பதிப்புகளும் வெளியீடுகளும்[தொகு]

கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆசிரியராக வெளியிடும், கதைசொல்லி நாட்டுப்புற சிற்றிதழின் உதவி ஆசிரியராக முதன்முதலில் பத்திரிகைப் பணியில் ஈடுபட்ட இவர், ‘ஜீவா படைப்பகம்’ எனும் பதிப்பகத்தைத் தொடங்கி, 2015ம் ஆண்டுமுதல் சிறந்த நூல்களை வெளியிடுகிறார். அதன் வழியாக, நெல்லை கண்ணன், எழுத்தாளர்கள் ஜோ டி குரூஸ், கழனியூரன் [6] எஸ்.அர்ஷியா, சரவணன் சந்திரன் உள்ளிட்ட பலரது படைப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • வற்றாநதி (சிறுகதை தொகுப்பு, 2014 அகநாழிகை வெளியீடு, சென்னை)
  • ஆரஞ்சு முட்டாய் (சிறுகதை தொகுப்பு, 2015 ஜீவா படைப்பகம் வெளியீடு, சென்னை)
  • ஊருக்குச் செல்லும் வழி (கட்டுரைத் தொகுப்பு, 2016 ஜீவா படைப்பகம் வெளியீடு, சென்னை)
  • விளிம்புக்கு அப்பால் (14 ஆசிரியர்களின் சிறுகதைத் தொகுப்பு, அகநாழிகை வெளியீடு, சென்னை)
  • அவளும் நானும் அலையும் கடலும் (சிறுகதை தொகுப்பு, 2017 ஜீவா படைப்பகம் வெளியீடு, சென்னை)
  • அங்காளம் (ஆய்வுக் கட்டுரைகள், 2018 யாவரும் பதிப்பக வெளியீடு, சென்னை)
  • நற்திருநாடே (கட்டுரைகள், 2020 யாவரும் பதிப்பக வெளியீடு, சென்னை)

விருது மற்றும் அங்கீகாரம்[தொகு]

  • சென்னை வெள்ளப் பேரிடரில் ஆற்றிய சமூகப் பணிகளுக்காக ‘லோக சம்ரக்‌ஷக்-2015’ விருது பெற்றவர்.


  • [சாகித்ய அகதமி] ஒருங்கிணைக்க, மணிப்பூர் மாநிலம் இம்பால் கலாசார அரங்கில் நடைபெற்ற ‘இந்திய இளம் எழுத்தாளர்கள் கருத்தரங்கம் -2018’ல் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டு 'நான் ஏன் எழுதுகிறேன்' எனும் தலைப்பில் உரையாற்றினார்.
  • இலங்கை யாழ்பாணம் நல்லூரில் 2018ம் ஆண்டில் 'சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் அறக்கட்டளை' துவக்க விலாவில் கலந்துகொண்டு அவரது நினைவு நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Wpugal&oldid=3126282" இருந்து மீள்விக்கப்பட்டது