உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Winstoncruz/தீகிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொஸ்தெனே, அப்பொல்லோ, கேபா, தீகிக்கு, எப்பாப்பிரோதீத்து, சீசர் மற்றும் ஒனேசிபோரஸ்

தீகிக்கு (Tychicus) (கிரேக்கம் τύχικοδης) ஆசியக் கிறித்தவர். துரோப்பீமுடன் பவுல் அப்போஸ்தலர் மக்கெதோனியாவிலிருந்து எருசலேமுக்கு வந்த பயணத்தில் அவருடன் இருந்தவர். அவர் உரோமிலும் பவுலுடன் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. அங்கிருந்து பவுல் அப்போஸ்தலர் அவரை எபேசுவுக்கு அனுப்பினார். அங்குள்ள திருச்சபையை வளர்ப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் பவுல் அவரை அனுப்பியிருக்கலாம்.[1] புதிய ஏற்பாட்டில் தீகிக்குவின் பெயர் ஐந்து முறை குறிப்பிடப்பட்டுள்ளது (அப்போஸ்தலர் நடபடிகள் 20:4; கொலோசெயர் 4:7,2; தீமோத்தேயு 4:12; தீத்து 3:12).[2]

வேதாகமத்தில் காணப்படும் குறிப்புகள்

[தொகு]

(1) தீகிக்கு ஆசியாவின் உரோம மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று அப்போஸ்தலர் நடபடிகள் 20:4 கூறுகிறது. வெஸ்டர்ன் டெக்ஸ்ட் அவர் எபேசு பட்டணத்தைச் சேர்ந்த எபேசியர் என்பதாகக் குறிப்பிடுகிறது.

பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தை முடித்து, அதைத் தீகிக்குவிடம் ஒப்படைக்கிறார். குஸ்டாவ் டோரே செதுக்கிய மரச் சிற்பம்

(2) எபேசியர் 6:21-இல், அதன் ஆசிரியர் (பவுல் என மரபுவழியாக அறிப்படுகிறார்) தீகிக்குவை "நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு" என்று குறிப்பிடுகிறார் (BSI)

(3) கொலோசெயர் 4:7-இல் அவர் "பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாயிருக்கிறவர்" என்று கூறுகிறார்.

எபேசியர், கொலோசெயர் ஆகிய இரு நிருபங்களிலுமே, ஆசிரியர் தீகிக்குவைத் தாம் கடிதம் அனுப்புகிற கிறிஸ்தவர்களை ஊக்குவிப்பதற்காக அனுப்புவதாகக் குறிப்பிடுகிறார்.[2]

(4) தீத்துவுக்கும் (தீத்து 3:12) தீமோத்தேயுவுக்கும் எழுதிய நிருபங்களின் பகுதிகளில் பேரரசரிடம் பவுல் முறையிட்டதன் விளைவாக அவர் விடுதலையாக்கப்பட்ட பின்னர் தீகிக்கு மீண்டும் பவுலுடன் இருந்ததை அறியலாம். தீத்துவுக்கு எழுதிய நிருபத்தின் பகுதிகள் பவுலின் முதலாவது, இரண்டாவது உரோமானிய சிறைவாசங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தையும், அவர் மீண்டும் மிஷனரிப் பயணங்களில் ஈடுபட்டிருந்த காலத்தையும் குறிப்பிடுகிறது. கிரேத்தாவில் வசித்துவந்து அங்கிருந்த திருச்சபைகளின் பொறுப்பாளராக இருந்துவந்த தீத்துவுக்கு பவுல் அப்போஸ்தலர் எழுதும்போது, அவர் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது அவரிடம் அனுப்ப விரும்புவதாகக் கூறுகிறார். அவர்கள் அந்தத் தீவின் பணிகளைக் கவனித்துக்கொள்ளும்போது தீத்து பவுலிடம் நிக்கொப்போலிக்கு வர முடியும் என்பது அதன் பொருள்.[1]

(5) தீகிக்கு குறிப்பிடப்படும் கடைசிப் பகுதி 2 தீமோத்தேயுவில் இடம்பெறுகிறது. இது பவுலின் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று முன்பு உரோமில் எழுதப்பட்டது. இறுதிவரை பவுல் எப்போதும் போல நற்செய்தியின் வேலையில் மும்முரமாக இருந்தார். அவருடைய நண்பர்கள் அவருடன் இருப்பது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும் என்றாலும், கிறித்துவின் இராச்சியம் குறித்த நலன்கள் அவருக்குப் பெரிதாகத் தோன்றின. எனவே அவர் தன்னுடைய நண்பர்களை இறைப்பணியை முன்னெடுத்துச் செல்ல அனுப்பிவிடுகிறார். கடைசி வரை, தீகிக்கு எப்போதும் போல சேவை செய்யக்கூடியவராகவே இருந்தார்: "தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்" ( 2 தீமோத்தேயு 4:12 ) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீமோத்தேயு எபேசுவில் உள்ள திருச்சபையின் பொறுப்பாளராக இருந்ததால் ( 1 தீமோத்தேயு 1:3 ), தீகிக்குவின் வரும்போது அவர் தன்னுடைய பணிகளில் இருந்து விடுபட்டு பவுல் அப்போஸ்தலர் விரும்பியபடி, உரோமுக்குச் சென்று அவருடன் மீண்டும் சேர்ந்துகொள்ள உடனடியாகப் புறப்பட தீமோத்தேயுவுக்கும் உதவியாக இருக்கும் ( 2 தீமோத்தேயு 4:9, 2 தீமோத்தேயு 4:21 ). [1]

பல்வேறு மரபுகள் தீகிக்குவை சீப்புருவில் உள்ள கொலோபோன், சால்செடன் அல்லது நியாபோலிஸின் பேராயராகக் காட்டுவதாகக் கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.

“சால்செடானின் பேராயர் தீகிக்கு ”, “கொலோபோனியாவின் பேராயர் தீகிக்குன்” என இருவேறு குறிப்புகள் உரோமின் ஹிப்போலிடஸ் எழுதியதாக மரபுவழியாக நம்பப்படும் (உண்மையில் வேறொருவர் எழுதியிருக்கலாம்) எழுபது சீடர்களின் பட்டியல் சொந்தமான எழுபது சீடர்களின் பட்டியலில் உள்ளது. கத்தோலிக்க கலைக்களஞ்சியம் இந்தப் பட்டியலை "பயனற்றது" என்று விவரிக்கிறது. கிழக்கத்திய மரபுவழியில் (Eastern Orthodoxy), ஒருவரைப் பற்றியதேயான இந்த இரு குறிப்புகள் தவறானவையாகக் கருதப்படுகிறது. சொஸ்தேனு, அப்பல்லோ, கேபா, எப்பாப்பிரோதீத்து, சீசர் மற்றும் ஒனேசிபோரஸ் ஆகியோருடைய திருநாளே இவருடையதுமாகும் என்று இதில் குறிப்பிடப்படுகிறது.[3][4]

கத்தோலிக்க திருச்சபையின் உரோமத் தியாகவியல் (Roman Martyrology) என்பதன் சமீபத்திய ஏப்ரல் 29 தேதியின்படியான அதிகாரப்பூர்வ பதிப்பில் தீகிக்கு ஒரு புனிதராகக் குறிப்பிடப்படுகிறார். கொலோசெயர் 4:7-இல் பவுல் அவரைப் பற்றிய அன்புடன் வருணிப்பது இதற்கு மேற்கோளாகக் காட்டப்படுகிறது.[5]

  1. 1.0 1.1 1.2 "www.Bibler.org - Dictionary - Tychicus". 2012-07-25. பிழை காட்டு: Invalid <ref> tag; name "bibler.org" defined multiple times with different content
  2. 2.0 2.1 Walls, A. F. (1962). "Tychicus". The New Bible Dictionary. p. 1302. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Walls" defined multiple times with different content
  3. Souvay, Charles (1909). "Disciple". The Catholic Encyclopedia 5. New York: Robert Appleton Company. அணுகப்பட்டது 25 May 2022. 
  4. "Synaxis of the Seventy Apostles". Orthodox Church in America. Retrieved 25 May 2022.
  5. Martyrologium Romanum, ex decreto sacrosancti oecumenici Concilii Vaticani II instauratum auctoritate Ioannis Pauli Pp. II promulgatum, editio [typica] altera, Typis Vaticanis, A.D. MMIV (2004), p. 290 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-209-7210-7

[[பகுப்பு:பவுலின் திருமுகங்களில் வரும் நபர்கள்]] [[பகுப்பு:திருத்தூதர் பணிகள் நூலில் வரும் நபர்கள்]] [[பகுப்பு:எழுபது சீடர்கள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Winstoncruz/தீகிக்கு&oldid=4367469" இலிருந்து மீள்விக்கப்பட்டது