பயனர்:Vaish nave/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam) (பிறப்பு: 25 பிப்ரவரி 1957) சிங்கப்பூர் அரசியல்வாதி ஆவார். ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) உறுப்பினராக இருக்கும் இவர், 2011-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகச் சேவையாற்றி வருகிறார். தர்மன் 2001-ஆம் ஆண்டு முதல் ஜூரோங் குழுத்தொகுக்கான நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.

கல்வி தர்மன் ஆங்கிலோ சீனப் பள்ளி மாணவர் ஆவார். இவர், முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஸ்டீவன் சொங்கோடும் அவருக்குப் பின்னர் அப்பதவியை வகித்த V.K. ரஜாவோடும் படித்தவர். இவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் படித்து பொருளியலில் பட்டம் பெற்றார். பிறகு லண்டன் பொருளாதாரப் பள்ளி 2011-ஆம் ஆண்டில் அவரைக் கெளரவித்தது. அதன் பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்பாகத் தேர்ச்சிபெற்றதால் இவர் அப்பல்கலைக்கழகத்தின் லுசியல் என் லிட்டார் (Lucius N. Littauer) விருதைப் பெற்றார். தொழில் 1998-ஆம் ஆண்டில் தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் (MAS) தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இன்றுவரை அவர் தொடர்ந்து இப்பதவியை வகித்து வருகிறார்.

அரசியல் வாழ்க்கை 2001-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தர்மன், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அதன் பின்னர், இவர் வர்த்தக, தொழில் அமைச்சில் மூத்த அமைச்சராக நியமனம் பெற்றார். 2003-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இவர் கல்வி அமைச்சராகப் பணிபுரிந்தார். அதோடு, மே 2006-ஆம் ஆண்டிலிருந்து இவர் நிதி அமைச்சுக்கான இரண்டாம் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். பிறகு, தர்மன் 2007-ஆம் ஆண்டிலிருந்து 2015-ஆம் ஆண்டுவரை சிங்கப்பூரின் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். 2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தர்மன் அவர்களின் மக்கள் செயல் கட்டிசியைச் (PAP) சேர்ந்த ஜூரோங் குழுத்தொகுதியில் (Jurong GRC) 66.96 விழுக்காட்டு வாக்குகளோடு எதிர்க்கட்சியான தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியைத் தோற்கடித்தது. 2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்பு, தர்மன் அவர்கள் சிங்கப்பூரின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2011-ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை இவர் மனிதவள அமைச்சராகவும் பணியாற்றினார். 2015-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தர்மன் தலைமையிலான ஜூரோங் குழுத்தொகுதி அணி, 79.28 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. இது, இந்தப் பொதுத் தேர்தலில் ஆக அதிகமான விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையையும் தர்மனுககுப் பெற்றுத் தந்தது. தேர்தலுக்குப் பின்பு, தர்மன் துணைப் பிரதமராகவும் சமூக, பொருளாதார செயல் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற அமைச்சர் கூட்டத்தில் ஹெங் சுவி கியட்டுக்குப் பக்கவாதம் ஏற்பட்ட பின் அவர் சில மாதங்கள் ஓய்வில் இருந்தபோது, தர்மன் நிதி அமைச்சில் ஹெங்கின் பணிகளைக் கவனித்துக்கொள்ள உதவினார்.

அனைத்துலகப் பதவிகள் ஜூன் 2008-ஆம் ஆண்டில் தர்மன், ‘முப்பது நிபுணர்கள்’ (Group of Thirty) அதாவது அனைத்துலக பொருளாதார, நாணய விவகாரங்களுக்கான அலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இவ்வாலோசனைக் குழுவில் முப்பது தலைசிறந்த நிதியாளர்களும் கல்வியாளர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். 2008-ஆம் ஆண்டிலிருந்து பால் வொல்கர் இக்குழுவின் அறங்காவல் மன்றத்திற்குத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தர்மன் இந்த ஆலோசனைக் குழுவிற்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம், தர்மன் அனைத்துலக நிதி நிறுவனத்தின் (IMF) கொள்கை வழிநடத்தும் குழுவான அனைத்துலக நாணய மற்றும் நிதிக் குழுவின் செயல் திட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இக்குழுவின் முதல் ஆசிய தலைவர் என்ற பெருமையைப் பெறுகிறார். இவருக்கு முன்பாக, எகிப்து நாட்டின் முன்னாள் நிதி அமச்சர், யுசோஃப் புட்ரொஸ் காலி, இத்தாலி நாட்டின் முன்னாள் பொருளாதார மற்றும் நிதி அமைச்சருமான தொமசொ படொஅ-சியொப்பியா, இங்கிலாந்து நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் கொர்டன் ப்ரெளன் ஆகியோர் இக்குழுவிற்குத் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். கொர்டன் பரொன் 2007-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டுவரை இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். தர்மனின் நியமனத்தை அறிவித்தபோது "தர்மனின் மிகுதியான அனுபவமும், பொருளாதாரத்தையும் நிதியையும் சார்ந்த அறிவும், உலக செயல் திட்டத்தை வகுப்போருடன் கொண்டிருக்கும் ஈடுபாடும், அனைத்துலக நாணய மற்றும் நிதிக் குழுவிற்கு அதிகப் பயனளிக்கும்" என்று அனைத்துலக நிதி நிறுவனம் தெரிவித்தது. தர்மன் அவர்கள், ஒங் டெங் சியோங் தொழிலாளர் ஆய்வு நிறுவனத்திற்கும் சிங்கப்பூர் இந்திய வளர்ச்சி சங்கத்தின் (SINDA) அறங்காவலர் மன்றத்திற்கும் தலைவராகத் திகழ்கிறார். சட்டமும் குற்றச்சாட்டமும் 1993-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நாணய வாரியத்தில் (MAS) பொருளாதார இயக்குநராக தர்மன் அவர்கள் பணிபுரிந்தபோது, அவர் மீது அரசாங்க இரகசியச் சட்டத்தின் (Official Secrets Act) கீழ் குற்றம் சாட்டப்பட்டது. 1992-ஆம் ஆண்டில், சிங்கப்பூரின் இரண்டாம் காலாண்டுத் திட்டங்களை, ஆராய்ச்சியாளர் ரேமண்ட் ஃபூவிடமும் பொருளாதார வல்லுநர் மனு பாஸ்கரிடமும், பத்திரிகையாளர்களான கெனெட் ஜேம்ஸ் மற்றும் பெட்ரிக் டேனியல் ஆகியோரிடமும் வெளியிட்டதற்காகத் தர்மன் அவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கு ஒரு வருடத்திற்கு மேல் நீடித்தது. தர்மன் அதிகமாகப் போராடிய பிறகே குறைந்த தண்டனையைப் பெற்றார். இச்சிறிய தண்டனையையும் ஏற்றுக்கொள்ள மறுத்து மீண்டும் போராடினார். ஆயினும், 1992-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் இரண்டாம் காலாண்டுத் திட்டங்களைப் பற்றிச் சில தகவல்களை வெளியிட்டதனால் அவருக்கு $1500 அபராதம் விதிக்கப்பட்டது. வழக்கில் ஈடுபட்ட மற்றவர்களுக்கும் $2000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இவர் வேண்டுமென்றே தகவல்களை வெளியிடவில்லை என்பதனால், அவரது நாணய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நியமனத்திற்கு அந்நீதிமன்ற வழக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. குடும்ப வாழ்க்கை தர்மன் இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூரர். இவரது தந்தை பேராசிரியர் திரு க. சண்முகரத்தினம். இவர் உடலின் ஆக்கமூலப்பொருள் (டிசு) ஆய்வாளராகப் பணிபுரிந்தார். அதோடு, இவர் ‘சிங்கப்பூரின் நோய்க் குறியியலின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். க. சண்முகரத்தினம் சிங்கப்பூர் புற்றுநோய் மையத்தின் முதல் இயக்குநராக இருந்ததோடு சிங்கப்பூர் மருத்துவச் சங்கம் தொடங்கப்படவும் காரணமாக இருந்தார். தர்மன் சண்முகரத்தினத்தின் மனைவி, திருமதி ஜேன் யுமிக்கோ இட்டோகி ஆவார். இவர் சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். இத்தம்பதியினருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மேற்கோள்கள் 1. "Tharman Shanmugaratnam." Wikipedia. March 23, 2017. Accessed March 25, 2017. https://en.wikipedia.org/wiki/Tharman_Shanmugaratnam. 2. Gsi. "Mr Tharman SHANMUGARATNAM." Prime Minister's Office Singapore. September 11, 2014. Accessed March 25, 2017. http://www.pmo.gov.sg/cabinet/mr-tharman-shanmugaratnam. 3. Yong, Charissa. "Tharman Shanmugaratnam named chairman of G-30, a group of leading global economists." The Straits Times. November 30, 2016. Accessed March 25, 2017. http://www.straitstimes.com/politics/tharman-shanmugaratnam-named-chairman-of-g30-a-group-of-leading-global-economists. 4. Sen, Siow Li. "GE2015: PAP wins Jurong GRC with 79.28%." The Business Times. Accessed March 30, 2017. http://www.businesstimes.com.sg/government-economy/singapore-general-election/ge2015-pap-wins-jurong-grc-with-7928.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vaish_nave/மணல்தொட்டி&oldid=2251631" இலிருந்து மீள்விக்கப்பட்டது